Wednesday, May 06, 2020

அஜ்மீர் தர்காவின் மனிதநேயம்!

அஜ்மீர் தர்காவின் மனிதநேயம்!
வங்காளத்திலிருந்து வந்து அஜ்மீரில் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரயிலை அஜ்மீர் தர்கா நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கின்றது.
1200 பேர் இதன் மூலம் வங்காளம் திரும்புகின்றார்கள். இவர்களுக்கு பிரியாணி, பழரசம், தண்ணீர் பாக்கெட்களை முகல் சராய் ரயில் நிலையத்தில் வழங்கப்படுவதற்கும் தர்கா நிர்வாகம் பணம் செலுத்தியிருக்கின்றது.
இந்த சேவை பரவட்டும்! இலவச ரயில் சேவை தொடரட்டும்!
ஒரு தனியார் நிர்வாகம் ரயில் வசதி செய்து கொடுக்கும் போது மத்திய அரசால் இதனைச் செய்ய முடியாதா? கோடிக்கணக்கான புலம் பெயர்ந்த மக்கள் தினம் தினம் பட்டினியால் கிடந்து வதை படுவது மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா?


2 comments:

  1. மாநில அரசுதான் செய்ய வேண்டும். மத்திய அரசு போதிய ஏற்பாட்டை செய்து தரும்.

    இரயில் தாருங்கள் என்று கேட்டால் கொடுத்திருக்கும்.

    அஜ்மீா் நிா்வாகம் இரயில் வேண்டும் என்று கேட்ட உடனே கொடுத்து உதவியது

    மத்திய அரசுதானே ?

    பிற மாநில மக்கள்-தொழிலாளா்கள் - அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

    என்பது (கசப்பான வேதனையான ) உண்மைதான்.

    ReplyDelete
  2. அஜ்மீா் தர்கா நிா்வாகம் ஒரு தனியாா் நிா்வாகமாக இருந்தததால் இப்படியெல்லாம் செயல்பட முடிந்தது. அரசு நிா்வாகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை யால் கோவில்கதவுகளை திறக்காமல் வைத்திருப்பதில்தான் கவனம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)