Saturday, October 26, 2019

மெய்சிலிர்த்து பாராட்டிய இரத்த வங்கி அலுவலர்

"இஸ்லாமிய பெண்மணி இரத்த தானம் வழங்கியதை மெய்சிலிர்த்து பாராட்டிய இரத்த வங்கி அலுவலர்"

பிறர்நலம் நாடுதலே இஸ்லாம் என்ற நபிகளார் போதனையின் அடிப்படையில் மனிதநேய பணிகளை குமரி மாவட்டத்தின் மருத்துவ அணி தொடர்ச்சியாக செய்துவரும் நிலையில்...

(24/10/2019) அன்று நெய்யூர் CSI மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த சிலுவைமுத்து என்ற நோயாளிக்கு O+ positive ஒரு யுனிட் இரத்தம் தேவைபட்டது.

TNTJ குமரி மாவட்ட மருத்துவ அணியை தொடர்பு கொண்டதன் பெயரில் திங்கள் நகர் கிளையின் சார்பில் "கதீஜா என்ற பெண்மணி" இரத்த தானம் செய்ய முன்வந்தார்கள்.

இரத்த வங்கியில் பணிபுரியும் ஜெயக்குமார் என்று அலுவலரும், மற்ற பெண் ஊளியர்களும் பர்தா அணிந்த நிலையில் இரத்த தானம் செய்யவந்த கதீஜா அவர்களை மிக வரவேற்றனர்.

ஜெயக்குமார் அலுவலர் கூறுகையில்,

கடந்த இரண்டு வருடத்தில் இரண்டே இரண்டு பெண்கள் தான் இரத்த தானம் செய்துள்ளனர். இந்த பெண்மணியை பாராட்டி இது போன்ற மனித நேய பணிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் செய்வதை வெளியுலகத்திற்கு கொண்டு செல்லும் விதமாக போட்டோ பிடித்து இன்ஸ்டோகிராம், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாக தவறான தகவல்கள் பகிரபடுவதை தடுக்கும் விதமாக நான் செயல்படுவேன் என உணர்ச்சி மிகுந்து கூறினார்.

ஆக, மனித இரத்ததை ஓட்டுபவர் முஸ்லிம் இல்லை, மனித இரத்ததை கொடுத்து காப்பாற்றுபவர் முஸ்லிம் என்கிற கருத்தை அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறும் விதமாக ஜெயக்குமார் என்ற இரத்தவங்கி அலுவலரின் வார்த்தை அமைந்தது நமக்கு சந்தோஷம் அடைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குமரி மாவட்டம்
திங்கள்நகர் கிளை



5 comments:

  1. 17 ஆண்டுகளாக படகோட்டி, மலையேறிச் சென்று பழங்குடிகளுக்கு பாடம் கற்பிக்கும் கேரள ஆசிரியருக்குத் தமிழ்நாட்டில் சிறப்பு விருது அண்மையில் வழங்கப்பட்டது.

    கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஆம்பூரி என்ற பகுதியில் இருக்கும் மலைப்பகுதி குன்னத்து மலை. அங்கு வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு 17 ஆண்டுகளாகப் பாடம் சொல்லித் தருகிறார் ஆசிரியை உஷா குமாரி.

    அவருக்கு, திருநெல்வேலி அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை சார்பில் 'சிறந்த சமூக செயல்பாட்டிற்கான அறம்' விருது அண்மையில் வழங்கப்பட்டது. இந்த விருதை திருநெல்வேலி சட்டம் & ஒழுங்கு, காவல் துணை ஆணையர் ச. சரவணன் வழங்கினார்.

    இதுகுறித்து 'இந்து தமிழ் 'இணையதளத்திடம் ஆசிரியை உஷா குமாரி பேசும்போது, ''1999-ல் குன்னத்து மலையில் இப்பள்ளி தொடங்கப்பட்டது. நான் 2002-ம் ஆண்டில் இங்கு பணிக்குச் சேர்ந்தேன். ஒவ்வோர் ஆண்டும் 10-க்கும் அதிகமான பழங்குடியினக் குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர்.

    1 முதல் 4-ம் வகுப்பு வரை இங்கு உள்ளது. 5-ம் வகுப்புக்கு அவர்கள் விடுதி வசதி உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். தினந்தோறும் ஆறு, மலை ஆகியவற்றைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்லமுடியும். இதனால் இங்கு வர ஆசிரியர்கள் தயக்கம் காட்டினர்.

    எனக்கு இயற்கை மிகவும் பிடிக்கும் என்பதால் 17 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் பணிபுரிகிறேன். படகை ஓட்டுவதோ, மலையேறி பள்ளிக்கு வருவதாக சிரமமாகத் தெரியவில்லை. பிடித்தால் எதுவும் நமக்கு சிரமமாகத் தெரியாது.

    ஊடகங்களில் இதுகுறித்து வெளியான செய்தியைப் பார்த்து எனக்கு தமிழகத்திலும் விருது வழங்கப்பட்டுள்ளது'' என்று சிரிக்கிறார் ஆசிரியை உஷா குமாரி.

    - க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

    ReplyDelete
  2. கீதையின் ஆறாவது கட்டளை!

    ச.நாகராஜன் ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதைஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

    ஏழு கட்டளைகளுள் ஆறாவது கட்டளை
    இது : Thou Shalt Seek the Lowest Place

    நீ உனக்கென ஒரு தாழ்ந்த இடத்தை நாடு

    இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:அதிகாரத்தையும் விளம்பரத்தையும்
    தேடும் இந்த உலகின் இன்றைய நாளில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? விந்தை தான்!

    அக்பரை கடவுள் என்று துதி பாடும்
    கூட்டம் பீர்பலிடம் வந்து, ‘அக்பர் கடவுள் தானே, அதை நீ ஒத்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டனர். பீர்பல் திட்டவட்டமாக அதை மறுத்து விட்டார்.

    இது தான் சமயம் பீர்பலை ஒழித்துக் கட்ட என்று எண்ணிய அவர்கள் அக்பரிடம் சென்று, “நீங்கள் தாம் எம் கடவுள். ஆனால் பீர்பல் இதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்” என்று கோள் மூட்டினர்.அக்பர் உடனடியாக பீர்பலை அழைத்தார்.“பீர்பல், இவர்கள் என்னைக் கடவுள்
    என்று எண்ணுகிறார்கள். நீர் அதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியது உண்மையா?” என்று கேட்டார்.பீர்பல் ஆம் என்று தான் கூறியதை
    ஒத்துக் கொண்டார்.அக்பர் கோபத்துடன், “ பீர்பல்,
    நான் என் குடிமக்களுக்கு கடவுள். உமக்கு எம் மீது கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா?” என்று கேட்டார்.பீர்பல் அக்பரை நோக்கிக் கூறினர்
    :”அரசே! தாங்கள்கடவுள் இல்லை என்று நான் கூறியது உண்மை தான்! ஏன் அப்படிக் கூறினேன்? தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே! அதனால் தான் நீங்கள் கடவுள் இல்லை என்று கூறினேன்” பீர்பலைத் தண்டிக்க நினைத்தவர்கள்
    இந்தப் பதிலைக் கேட்டு திடுக்கிட்டனர். அக்பருக்கு ஒரே மகிழ்ச்சி. வியப்பு
    தாளவில்லை. “சற்று விளக்கிக் கூறும்” என்று பீர்பலை நோக்கிக் கூறினார்.

    பீர்பல் கூறினார்: “அரசே! கடவுளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் எவ்வளவோ பேர் என்னென்ன தவறுகள் உண்டோ அவ்வளவையும் செய்கிறோம்.
    ஆனால் அவரது சாம்ராஜ்யமான இந்தப் பூவுலகிலிருந்து ஒரு போதும் அவர் யாரையும் விரட்டி விடுவதில்லை. ஆனால் தாங்களோ, எவனேனும் ஒருவன்
    தவறிழைத்து விட்டதாகத் தோன்றினால் அவனை உடனடியாகத் தண்டித்து விடுகிறீர்கள்; நாடு கடத்தி விடுகிறீர்கள்! தங்களின் அதிகாரம் எப்படிப்பட்டது, பாருங்கள்! தாங்கள் கடவுளுக்கும்
    ஒரு படி மேலே தானே இருக்கிறீர்கள்?!”

    அக்பர் பெரும் புத்திசாலி. பீர்பல் கூற வந்ததை நன்கு புரிந்து
    கொண்டார்.

    அகம்பாவம் ஒருவனை எந்த அளவுக்குக்
    கொண்டு போய் விடும் என்பதை, தான் கடவுள் என்று கூறியதை ஒத்துக் கொண்டதாலேயே தெரிய வருகிறது
    என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

    பீர்பலை அவர் போற்றித் தன் நிலையை உணர வைத்ததைப் பாராட்டினார்.

    மாமன்னர் அலெக்ஸாண்டர் மரணப்படுக்கையில்
    இருந்தார். அவரது அன்னைக்குத் துக்கம் தாளவில்லை. ஓவென்று அழுதார்.

    அலெக்ஸாண்டர் அவரை அருகில் அழைத்தார்.
    “தாயே! கவலைப்பட வேண்டாம். நான் இறந்த பிறகு என்னைப் புதைத்த பிறகு, வரும் பௌர்ணமியன்று
    என் கல்லறைக்கு வந்து அலெக்ஸாண்டர் என்று என்னைக் கூப்பிடுங்கள். நான் உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.

    அலெக்ஸாண்டர் மரணமடைந்த பின்னர்
    அவர் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

    முழுநிலா ஒளி வீசிப் பிரகாசிக்கும்
    பௌர்ணமியும் வந்தது.

    கல்லறைக்கு ஓடோடி வந்த அலெக்ஸாண்டரின்
    தாயார், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து, “ஓ!அலெக்ஸாண்டர்” என்று கத்திக் கூப்பிட்டார்.

    உடனடியாக நாலா புறங்களிலிருந்தும்
    ஏராளமான குரல்கள் எழும்பின:

    “இங்கு நூற்றுக் கணக்கான அலெக்ஸாண்டர்கள்
    புதையுண்டு கிடக்கிறோம். எந்த அலெக்ஸாண்டரை நீங்கள் கூப்பிடுகிறீர்கள்? உங்களுக்கு
    யார் வேண்டும்?”

    இது தான் உலகம்.

    ReplyDelete
  3. அக்பர் ஒரு நாள் பீர்பலுடன்
    விருந்துண்டார்.

    “ஆஹா! பீர்பல்! கத்தரிக்காய்
    போல ஒரு கறிகாயை நான் கண்டதே இல்லை. என்ன ருசி? நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்.

    “மன்னா! அது தான் உண்மை! எப்படிப்பட்ட
    கறிகாய் கத்தரிக்காய்! அதனால் தான் அதற்கு கிரீடம் போல ஒன்றை வைத்திருக்கிறான் கடவுள்”

    பீர்பலின் இந்த பதிலால் அக்பருக்கு
    ஏக குஷி.

    ஆனால் அன்று அவருக்கு ஜீரணம்
    ஆகவில்லை. பெரிதும் கஷ்டப்பட்டார்.

    மறுநாள் பீர்பலிடம் அவர், “பீர்பல்!
    கத்தரிக்காய் போல ஒரு மோசமான கறிகாயை நான் பார்த்ததே இல்லை! நீர் என்ன சொல்கிறீர்” என்றார்.

    “மன்னா! அது தான் பெரிய உண்மை!
    அதனால் தான் அதன் தலையில் ஆணி போன்ற ஒன்றை அடித்து சுற்றி வர முள்களை கடவுள் கொடுத்திருக்கிறார்” என்றா பீர்பல்.

    அக்பருக்குக் கோபம் வந்து விட்டது.
    “பீர்பல்! நேற்று நீர் தான் கடவுள் அதற்குக் கிரீடம் கொடுத்திருக்கிறார். அது தான்
    பிரமாதமான காய் என்றீர். இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறீரே” என்றார் அக்பர்.

    பீர்பல் மன்னனை நோக்கிக் கூறினார்:
    “ மன்னரே! எனக்கு நீங்கள் தான் எஜமானர். கத்தரிக்காய் இல்லை. நீங்கள் சொன்னதை மறுத்து
    இந்த எளியேன் பேசக் கூடாது. ஆனால் கத்தரிக்காயைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
    அது எனக்கு எஜமானன் இல்லை” என்றார்.

    அக்பருக்கு பீர்பலின் எளிமை
    புரிந்து விட்டது.

    எப்போதும் தன்னைத் தாழ்ந்த நிலையில்
    வைத்துக் கொள்ளும் பண்பு அவருக்குப் புரிந்து அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்க
    ஆரம்பித்து விட்டது.

    எளிமை என்றும் வெற்றி பெறும்!

    ReplyDelete
  4. ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை
    ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

    ஏழு கட்டளைகளுள் ஆறாவது கட்டளை
    இது :

    Thou
    Shalt Seek the Lowest Place

    நீ உனக்கென ஒரு தாழ்ந்த இடத்தை நாடு
    ------------------------------------------------------------
    எனக்கு இந்த கருத்தில உடன்பாடு இல்லை.
    பகவத் கீதையில் இந்த கருத்து யில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)