Wednesday, September 30, 2020

உபி பல்ராம்பூரில் மற்றொரு தலித் பெண் கற்பழித்து கொலை!

 உபி பல்ராம்பூரில் மற்றொரு தலித் பெண் கற்பழித்து கொலை!

கல்லூரிக்கு சென்ற 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்டுள்ளார். அவரது கைகளும் கால்களும் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று அவர் இறந்து விட்டதாக செய்தி வருகிறது.
கல்லூரிக்கு சென்று படித்து தங்களை காப்பாற்றுவாள் என்ற கனவுகளோடு வாழ்ந்த அவரது பெற்றோரை இங்கு நினைத்து பார்க்கிறேன். நேற்றுதான் ஹத்ராஸில் ஒரு தலித் பெண் கற்பழித்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டாள். அந்த ரணம் ஆறுவதற்குள் மற்றொரு கற்பழிப்பு கொலை.
மனிதர்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக உபி மாறிக் கொண்டுள்ளது. இதற்கு என்னதான் முடிவு?
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
01-10-2020




2 comments:

  1. உயிரிழந்த சகோதரியின் வலியை உணா்கின்றேன். வேதனைப்படுகின்றேன். மனிதர்கள் ஏன் மிருகங்கள் ஆகின்றார்கள் ?
    முறையான சமய கல்வி அளிக்கவில்லையெனில் மக்கள் காட்டுமிராண்டிகள் ஆவார்கள். அதுதான் அடிப்படை உண்மை. சினிமாக்களில் ஆபாச படங்கள் நடனங்கள் அரை குறை உடைகள் போன்றவை மக்களின் பண்பாட்டு உணா்வுகளை பாழாக்கி வருகின்றது. பெண்கள் உடை அணிவதில் சில இலக்கணங்ககை சடடமாக்க வேண்டும்.

    சினிமாவில்பெண்களை அரை குறை உடையில் கவா்ச்சி காட்டி நடித்து பணம் சம்பாதிக்கும் போது பார்ப்பவர்களின் மனதில் பார்க்கும் பெண்கள் அனைவரையும் உடையின்றிஇருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை ஒடுகின்றது உண்மை.SANE SEX ORDER BY PITRIM A SOROKIN
    எனற புத்தகம் இப்பிரச்சனையை விரிவாக விளக்குகிறது.அனைவரும் படிக்க வேண்டும்.

    பிரம்மச்சரியம் என்ற வார்த்தையை சமய சார்பற்ற தன்மை மறக்கடித்து விட்டது. ஸ்ரீராமன் மறந்து போய் விட்டாா். துச்சாதனன் மக்கள் மனதில் கோலோச்சுகிறான்.
    உத்திரபிரதேசத்தில 6 கோடி பேர்களுக்கு மேல் வாழ்கின்றார்கள். ஏதோ சில தருதலைகள் இப்படிப்பட்ட ஈனத்தனத்தில் ஈடுவடுவது வேதனைக்குகரியது. காம களியாட்டங்களை முன்வைக்கும் சினிமாத்துறையை முறைப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்கள். 1.சாகித் 2.சாகில் இரண்டு பேரும் அரேபியமத அடிமைகள்.

    இந்து காபீர் பெண்களின் மேல் உரிமை இருக்கின்றது என்று நம்பி இச் செயலை இவர்கள் செய்திருக்கலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)