குடிக்கும் நீரில் மலம் கழித்த கொடூரம்....
ஒரே மதம் என்கிறார்கள்... இஸ்லாமியர்களை தாக்க இதே தலித்துகளை களம் இறக்குகிறார்கள். தங்களின் வேலை முடிந்தவுடன் அதே தலித்கள் காலனிக்குள் சென்று குடி நீர் தொட்டியில் மலம் கழித்து அவர்களை துன்புறுத்துகிறார்கள். உலகில் எந்த நாட்டிலும் இந்த கொடுமை கிடையாது. சனாதனம் அந்த அளவு இந்த மேல் சாதி மக்களின் மனத்தில் விஷத்தை விதைத்துள்ளது.
நம்மிடம் கை கட்டி கூலி வேலை செய்தவன் இன்று படித்து பட்டம் பெற்று நமக்கு சரிசமமாக நடப்பதா? என்ற மேல் சாதி மன வக்கிரங்கள்தான் இது போன்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன. இந்த சனாதன சாக்கடையைத்தான் மீண்டும் புத்துயிர் கொடுக்க இன்று பார்பனியம் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகிறது.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். சனாதனம் தொடர்ந்து வளர்வதால் அதனால் பாதிக்கப்படப் போவது சூத்திரர்கள் என்ற பட்டியலில் வரும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தானோயொழிய ஒரு சதவீதமேனும் இஸ்லாத்துக்கு பாதிப்பு இல்லை.
சனாதனம் வளர்வதைக் கண்டு கோபமடையும் சுய மரியாதையுடைய இந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடி வரும் காலமும் வெகு தொலைவில் இல்லை. இதனை வருங்கால இந்திய வரலாறு மெய்ப்பிக்கும் இறைவன் நாடினால்...
ஆக்கம்
சுவனப்பிரியன்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)