#துஆ செய்யுங்கள்..
இஸ்லாத்தை ஏற்றபிறகு முதல்முதலாக 26 வயதில் இறந்த ஒரு பெண்மணியின் உடல் பார்த்தேன்..வீட்டின் நடுவில் வைத்திருந்தார்கள்.ஐஸ்பெட்டி இல்லாமல் துணியால் மூடியிருந்தார்கள்.பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி பார்க்க வருபவர்களுக்காக முகம் திறந்து காட்டுகிறார்..
பெண்கள் இறந்த உடலின் நெற்றியில் மோந்து கொள்கிறார்கள்...இறந்த உடலைத் தீட்டாக இங்கு பார்க்கவில்லை..யாரும் கத்திக்கதறி ஒப்பாரி வைக்கவில்லை..கொட்டுச்சத்தம் எதுவும் இல்லை...வாழைமரம் பாதியில் கட்டப்படவில்லை...சடங்குகள் எதையும் நான் பார்க்கவில்லை...
எல்லோருமே அவளது மறுமைக்காக துஆ செய்கிறார்கள்...இறந்த உடல் முழுதும் பூசப்பட்ட அத்தர்மணம் அந்த அறை முழுதும் ..இதுவரை இறந்தஉடலை பயத்தோடு மட்டுமே பார்த்த நான் முதல்முதலாக கண்ணியத்துடன் மரணத்தைப் பார்க்கிறேன்...
இஸ்லாம் எத்தனை உயர்வாக மரணத்தையும் அணுகவைத்திருக்கிறது என்று யோசிக்கும் போது இனம் புரியாத அமைதி மனதிற்குள்...அமைதியாக அந்த பெண்மணியின் மறுமைக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்கிறார்கள் யாவரும்...உறங்குவது போலவே இருந்தாள் அவள்..சிறு குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்...
கணவர் வெளிநாட்டிலிருந்தும் தந்தை உம்ராவில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறார்களாம்...நான் அவளது முகம் பார்த்தேன் முதலும் கடைசியுமாய்...பிரகாசமாய் உறங்குவது போலவே இருந்தாள்...
நாற்காலியில் 2நிமிடங்கள் அமர்ந்தபடி துஆ கேட்டேன்..என்னை அறியாமல் தொண்டை அடைத்தது..கண்கள் நனைந்தது..இதயம் இளகிஇறுகியது...
யா அல்லாஹ் இவளது கப்ரை வெளிச்சமாக்குவாயாக..இவளது பாவங்களை மன்னிப்பாயாக..சுவனத்தில் இடம் தருவாயாக...அவள் விட்டுச் சென்ற குழந்தை சிறந்த ஈமான்தாரியாய் வளர நீயே பொறுப்பேற்பாயாக..அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தருவாயாக....ஆமீன்...அவள் இடத்தில் ஜனாசாவாக நானும் ஒரு நாள் ஆவேன்..அதற்குள்ளாக மறுமையின் வெற்றிக்கு தேவையானவற்றை இங்கு விதைக்க நீயே அருள் செய்வாயாக...ஆமீன்...
-FathimaSabarimala

அழுது. . .கண்ணீா் விடுவது நல்ல பழக்கம். மனம் இலேசாகிவிடும். மன அழுத்தம் இதயத்தை கெடுக்கும். முஸ்லீமகள் மத்தியில் சில சடங்குகள். .அடக்கத்திற்கு பின் சில வைபவங்கள் நடக்கத்தான் செய்கின்றன். கணவன் இறந்தால் மனைவி 3 - மாதவிலக்கு காலம் இத்தா இருக்க வேண்டும் என்பது உழைத்து வாழும் பெண்மணிக்கு பொருத்தமானது அல்ல. இதுவும் மூடநம்பிக்கைதான். ஹிந்து பெண்மணிக்கு அப்படி ஒரு கட்டாயம் இல்லை. அவளது ஒழுக்கததை குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை.
ReplyDeleteசடங்குகளின் கனம் இந்துக்கள் மத்தியில் சற்று அதிகம்.ஸ்ரீநாராயணகுரு ஐயா வைகுண்டா் போன்றவர்கள் கோவில் வழிபாடு திருமணம், இறப்பு சடங்குகளை நவீனப்படுததி எளிமைப்படுத்தியிருக்கின்றனா். பெரியாா் மண் என்று பேசும் முட்டாள்கள் ஹிந்துக்கள் தங்கள் சமயத்தை நவீன படுத்தியவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளாமல் கவனமாக பார்த்துக் கொள்கின்றனா்.என்ன செய்வது.வேதனைகள் தொடா்கின்றன.