இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....

"நாங்க யாரை எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துறாங்க...." - இத்தனை காலம் கழிந்தாவது உண்மையை உணர்ந்தார்களே.....


Thursday, November 29, 2018

உணவு விநியோகம் - திருத்துறைப்பூண்டி

உணவு விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி, அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1000 பேர்களுக்கு வெஜ்டெபில் பிரியாணி,முட்டை,ஊருகாய்,தண்ணீர் பாக்கெட் ஆகியவை இன்று 29:11:18 நேரிடையாகச் சென்று வழங்கப்பட்டது.










தி.நகர் கிளை சார்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இரத்ததான முகாம்

இரத்ததான முகாம் நேரலை...
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் (GH)
14 ஆண்டுகளாக பணியாற்றும் சகோதரர் சரவணன் அவர்கள்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மனிதநேய பணிகளை பற்றி...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
தென் சென்னை மாவட்டம்
தி.நகர் கிளை சார்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இரத்ததான முகாம்


பிஜேபி பல தேர்தல்களில் வெற்றி பெற்ற வழி முறை....

பிஜேபி பல தேர்தல்களில் வெற்றி பெற்ற வழி முறை....
தனியாக தாமரை சின்னத்தில் பதியப்பட்ட பல வாக்கு எந்திரங்கள் பிடிபட்டுள்ளன. போபாலில் உள்ள ஹோட்டல் ராஜ்மஹால் - சுஜால்பூரில் கையும் களவுமாக பிடி பட்டுள்ளனர். நமக்கு தெரிந்தது இது ஒன்றுதான். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்வாவாதிகள் இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்களோ....
Please forward to all the groups see what's going how can other than bjp can win in such situations.... 
Journalist did a sting operation at Hotel Raj Mahal in Shujalpur


2,400 நபர்களுக்கு உணவு ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது..


2,400 நபர்களுக்கு உணவு ஏற்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது..
மனிதநேயப்பணியில்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருச்சி மாவட்டம்.




பாதையில் கிடக்கும் கிளை ஒன்றை பழக்கப்படுத்திய நாய் ஒன்று அப்புறப்படுத்துகிறது.

பாதையில் கிடக்கும் கிளை ஒன்றை பழக்கப்படுத்திய நாய் ஒன்று அப்புறப்படுத்துகிறது . ஆனால் பகுத்தறிவுடைய மனிதன் வழியில் இடைஞ்சலாக ஏதும் கிடந்தால் கூட அதனை கடந்து செல்வதை பார்க்கிறோம்.
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்
"ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து எறிந்து விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு அவர் செய்த பாவங்களிலிருந்து மன்னிப்பு வழங்கினான்".
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2472


Wednesday, November 28, 2018

சவூதி அரேபியா ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித்...

சவூதி அரேபியா ஜீஸானில் இறந்த தூத்துக்குடி வாலிபர் ரஞ்சித் ராமநாத் உடல் SDPI உதவியால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது!

தூத்துக்குடி முத்தையா புரத்தை சேர்ந்த வாலிபர் ரஞ்சித் ராமநாத்(வயது 27) சவூதி அரேபியா ஜீஸான் என்னும் ஊரில் தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 18 மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11.08.2018 அன்று பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்புதல் படிவத்தை இந்திய தூதரகம் வழங்கிய போதும் இறந்தவரின் உடல் ஊர் வருவது தாமதமாகியது.

இது குறித்து இறந்தவரின் உறவினர்கள் தமிழ்நாட்டில் SDPI கட்சியிடம் முறையிட்டு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர்; இதனடிப்படையில் SDPI கட்சியின் மாநில பொதுசெயலாளர் செங்கோட்டை நிஜாம் முகைதீன் சவூதி அரேபியாவில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இதுவிசயமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மாநில தலைமையின் உத்தரவுக்கு இணங்க இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் நிர்வாகிகளான சகோதரர்கள் பைசல் மற்றும் அஃப்சர் ஹுசைன் ஆகியோர் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகி ஜின்னாவை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை விரைவாக ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

உடனடியாக களமிறங்கிய ஜின்னா அவர்கள் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசின் சட்டத்துறை,மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உடலை இந்தியா அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

SDPI கட்சியின் துரிதமான களப்பணியை அடுத்து இறந்தவரின் உடல் புதன்கிழமை(21.11.2018)அன்று இரவு சவூதி அரேபியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு வியாழன்கிழமை(22.11.2018)காலை சென்னை வந்தடைந்தது.கட்சியின் சென்னை நிர்வாகி ஜாஹிர் ஹுஸைன்(மஞ்சள் கலர் டி ஷர்ட்), உடலை பெற்றுக் கொண்டு இறந்தவரின் தம்பி சுஜீத்திடம் ஒப்படைத்தார்.

இறந்தவரின் உடல் தூத்துக்குடி முத்தையாபுரம் எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாட்டினையும் செய்து கொடுத்து தூத்துக்குடி SDPI நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்த சகோதரர் ஜாஹிர் ஹுஸைன் மற்றும் அல்ஹஸ்ஸா நிர்வாகி ஜின்னாவுக்கும் மாநில பொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் பாய்க்கும்,SDPI கட்சிக்கும்,இந்தியன் சோஷியல் ஃபோரத்திற்கும் தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக இறந்தவரின் தம்பி சுஜீத் கூறினார்.

செய்தி தொகுப்பு: கீழை ஜஹாங்கீர் அரூஸி.


நிலவேம்பு கஷாயம் பொது மக்களுக்கு இலவசமாக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சேலம் மாவட்டம்
மேட்டூர் அணை கிளை சார்பாக
நான்காம் நாள் இன்றும் (29-11-2018) நிலவேம்பு கஷாயம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இன்று வரை 300 பேர் பயன் அடைந்தனர்.



கடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் - ஆதித்யநாத் :-)

கடவுள் அனுமன் ஒரு தலித், காட்டில் வாழும் மனிதர் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெற்றுக்கொண்ட 3 நாட்களுக்குள் அவர் அனுமன் குறித்து பேசிய அவதூறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ராஜஸ்தானில் உள்ள வலதுசாரி அமைப்பு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்டம், மாலகேடவாடா நகரில் செவ்வாய்கிழமை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,” அனுமன் காட்டுவாசியாக இருந்தவர், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். பஜ்ரங் பாலி அமைப்பு நாட்டில் உள்ள அனைத்துச் சமூகத்தையும் ஒன்றாக இணைக்கப் பணியாற்றுகிறது.
வடக்கில் இருந்து தெற்காகவும், கிழக்கு முதல் மேற்காகவும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இதுதான் ராமரின் விருப்பம். இதைத்தான் விரும்பினார். இந்த விருப்பம் நிறைவேறும் வரை ஓய்வு இல்லை. மக்கள் ராம பக்தர்களுக்கு வாக்களிக்க வேண்டும், ராவண பக்தர்களுக்கு அல்ல" என்று பேசினார்.
இதையடுத்து, அனுமரைத் தலித் என்று குறிப்பிட்டதற்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ராஜஸ்தான் சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது, “ அரசியல் லாபத்துக்காகக் கடவுளை சாதிப்பாகுபாட்டுள் பாஜக இழுத்துள்ளது. கடவுள் அனுமன் குறித்த முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சு வேதனைக்குள்ளாக்குகிறது. ஏராளமான பக்தர்களின் மனதை ஆதித்யநாத்தின் பேச்சு பாதித்துவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், தங்களின் பலத்தை காட்டவும் இவ்வாறு பேசுகிறார். இன்னும் 3 நாட்களுக்குள் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் இரட்டை வேடம் தெரிந்துவிட்டது என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், "முதல்வர் ஆதித்யநாத், பாஜக ஆகியோரின் பேச்சு சமூகத்தையும், தனிநபரையும் பிரிப்பதுபோல் இருந்து வந்தது. தற்போது, கடவுளைச் சாதிவாரியாக பிரிக்கிறது " என்று கண்டித்துள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-11-2018



ஒரு வேளை சாப்பாட்டுக்காக நீந்தி வந்த சிறுவன்!

ஒரு வேளை சாப்பாட்டுக்காக நீந்தி வந்த சிறுவன்!
இவனைப் போன்று பலர் உணவில்லாமல் அக்கரையில் தவித்து வருகின்றனர். இது போன்று வாகனம் செல்ல முடியாத பல கிராமங்களுக்கு உதவி இன்னும் சென்றடையவில்லை.
உணவுகளை வீணாக்காதீர்: ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு இந்த மக்களுக்கு உங்களின் உதவிக் கரத்தை நீட்டுவீர்......
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)


ஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிறார்!

ஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிறார்!
'தண்ணீர் அதிகம் உள்ள நீரோடைகளில் இருந்தாலும் தேவையில்லாமல் நீரை வீணாக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள் என்ற வாசகம் பொறித்த தண்ணீர் பாட்டிலைத்தான் ஆஸ்திரேலியாவில் விநியோகிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த தண்ணீரை விநியோகிக்கும் நிறுவனம் மக்களுக்கு சேவை செய்வதோடு ஒரு நபி மொழியையும் ஞாபகப்படுத்துகிறது. அதோடு தண்ணீரின் சிக்கனத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
ஆஸ்திரேலியா போன்ற நவ நாகரிக உலகுக்கும் இன்றைய கால கட்டத்தில் அரபு தேசத்தில் பிறந்த நபிகள் நாயகத்தின் அறிவுரைகள் தேவைப்படுகிறது. உலக மக்களின் தலைவர் என்றால் அது நபிகள் நாயகம் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பதை இந்த நிகழ்வும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)


நான் விரும்பும் தலைவர்....

நான் விரும்பும் தலைவர்....

புனித ஹரம் ஷரீஃபில் சிறுவனின் அழகிய தமிழ் உரை...


70 வருடங்களுக்குப் பிறகு தனது தங்கைகளை சந்தித்த பயான்த் சிங்!



70 வருடங்களுக்குப் பிறகு தனது தங்கைகளை சந்தித்த பயான்த் சிங்!
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பல குடும்பங்கள் பிரிந்தன: பலர் காணாமல் போயினர். அல்லா ரக்கி என்ற இஸ்லாமிய பெண்மணி கலவரத்தில் தனது ஒரே மகனை தொலைத்து விட்டார். தனது இரு மகள்களோடு பாகிஸ்தானில் தங்கி விட்டார். தனது உறவினர்கள் மூலமாக தொலைந்த தனது மகன் சீக்கியனாக இந்தியாவில் வளர்வதை உறுதி செய்து கொண்டார். அதன் பிறகு இரு குடும்பங்களும் கடிதங்கள், தொலைபேசிகள் மூலமாக தொடர்பில் இருந்தனர்.
குரு நானக்கின் 549 வது நினைவு தினம் பாகிஸ்தானில் அவர் பிறந்த இடத்தில் வருடா வருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த நிகழ்வில் இரு குடும்பங்களும் சந்திப்பது என்று முடிவானது. நான்கானா சாஹிப் குருத்வாராவில் இரு குடும்பங்களும் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தனர்.
உல்ஃபத் பீவி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தனது சகோதரனை சந்திக்க உதவுமாறு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு பயான்த்சிங்குக்கு பாகிஸ்தான் வருவதற்கு விஷா வழங்கப்பட்டது. இதன்படி கர்தார்பூர் பார்டர் திறக்கப்பட்டு பல சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தான் புறப்பட்டனர். பயான்த் சிங்கும் பயணமானார்.
திட்டமிட்டபடி சென்ற திங்கட் கிழமை பயான்த்சிங் தனது இரு சகோதரிகளையும் எழுபது வருடங்களுக்குப் பிறகு சந்தித்து கண்ணீர் மல்க கட்டித் தழுவினார். பாகிஸ்தான் மீடியாக்களும் இதனை கவர் செய்தன. உடன் பிறந்த தனது இரு சகோதரிகளை 70 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் அண்ணனின் உணர்வுகளை நாம் வார்த்தைகளால் விவரித்து விட முடியுமா? இந்திய பிரிவினையானது இது போன்ற பல ஆயிரம் சோக வரலாறுகளை இன்று வரை சுமந்த வண்ணம் உள்ளது.
தகவல் உதவி
கேரவன் நியூஸ்
27-11-2018


Tuesday, November 27, 2018

முத்துப்பேட்டை பேட்டை காளியம்மன் கோவில் தெரு .....


#கஜா புயல் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை பேட்டை காளியம்மன் கோவில் தெரு ஆதி திராவிடர் தெருவில் வசிக்கும் 92 ஏழை குடும்பங்களுக்கு #TNTJ முத்துப்பேட்டை கிளை3 சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது ..
அல்ஹம்துலில்லாஹ்..








வெற்று கண்டைனரை வைத்து மோடி படம் போட்டு....

தஞ்சை தெற்கு கிழக்கு கடற்கரை சாலையில் மோடியின் பெரிய பேனரோடு ஒரு கண்டைனர் ட்ரக் இங்கு மங்கும் அலைந்து கொண்டிருந்தது. 'கஜா புயல் நிவாரணப் பொருட்கள்' என்றும் அச்சிடப்பட்டிருந்தது. மக்கள் அந்த ட்ரக்கை நிறுத்தி 'பொருட்கள் யாருக்கு?' என்று கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டுநர் 'இப்போதுதான் பொருட்களை இறக்கி விட்டு வருகிறோம்' என்றார். 'எந்த ஊரில்?' என்று கேட்டால் ஓட்டுநருக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எங்கிருந்து எடுத்து வந்துள்ளீர்கள்? இதை அனுப்பியது யார்?' என்ற கேள்விக்கும் ஓட்டுநரிடம் பதில் இல்லை....
ஆக.... வெற்று கண்டைனரை வைத்து மோடி படம் போட்டு மக்களுக்கு உதவுவதாக படம் காட்டியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்களிடம் மத்தியில் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு துரும்பை போட்டிருந்தாலும் கண்டைனர் நிரம்பியிருக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள். எத்தனை கோடி பணமிருந்தாலும் உதவக் கூடிய மனம் வர வேண்டுமல்லவா? அதனை இந்துத்வாவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது.


இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.

புதுக்கோட்டை, நவ.27 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இந்தியாவை ரத்தக் களறி யாக்க விஸ்வ இந்து பரிஷத்தும், சிவசேனாவும் முடி வெடுத்து விட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று அறிவித்து விட்டார்கள். விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் இந்த உபகண்டத்தினுடைய பன்முகத் தன்மையை சிதைத்து ஆர்.எஸ்.எஸ். தேசமாக ஆக்க முயற்சிப்பதால் ரத்தக் கரைப்படிந்த சிவப்பு கோடுகளால் இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி அல்ல, அவர்கள் நிதின் கட்கரியை பிரதமராக்கப்போவதாக செய்திகள் வந்திருக்கிறது. பாஜக அரசு வரக்கூடாது. வராது. மாநில கட்சிகளும் காங்கிரசும் இணைந்த கூட்ட மைப்பு ஆட்சிக்கு வந்தால் இந்தி யாவின் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்படும். அதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினார்.


அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 4

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 4
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-4
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...
Islamic college TNTJ


அழகிய மார்க்கத்தை சிதைக்கும் அறிவீனர்கள்.

அழகிய மார்க்கத்தை சிதைக்கும் அறிவீனர்கள்.

என்ன ஒரு அழகிய மார்க்கம் நமக்கு கிடைத்த இஸ்லாமிய மார்க்கம். இந்த வீடியோவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அனைவரும் ஏமாற்று பேர்வழிகள். தொப்பியும் கைலியும் கட்டிக் கொண்டு ஒரு சில அரபி வார்த்தைகளை சொல்வதால் அது இஸ்லாமிய மார்க்கமாகாது. குர்ஆனும் நபிகள் நாயகமும் காட்டித் தந்ததுதான் இஸ்லாமிய மார்க்கம்.

இது போன்று ஊருக்கு ஊர் சுற்றித் திரியும் மடையர்களை தூரமாக்குவோம். தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.


ராஜகிரி-பண்டாரவாடையைச் சேர்ந்த வணிகர்கள்

தஞ்சை மாவட்டம் ராஜகிரி-பண்டாரவாடையைச் சேர்ந்த வணிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியபோது.....







சங்கிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான இந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது ஒரு பிஜேபி தலைவர் இந்த பல்கலைக் கழகத்தின் விடுதியிலிருந்து இந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், இந்து மாணவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால் அங்கு பயிலும் இந்து மாணவ மாணவிகள் 'இது முற்றிலும் பொய்யான தகவல். எங்களை யாரும் வெளியேற்றவில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று பேட்டியளித்துள்ளனர்.
சங்கிககள் எந்த வகையிலாவது இந்து முஸ்லிம் விரோதத்தை வளர்த்து அதில் அரசியல் ஆதாயம் அடைய துடிக்கின்றனர். இதற்கு நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமையாக இருந்து சங்கிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.


Monday, November 26, 2018

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

ஆக்சிஜன் குறைவு பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
வளி மண்டலத்தின் தோற்றம் உருவாக்கம் அதன் கால நிலை பற்றி 900 வருடங்களுக்கு முன்பு வரை மனிதனுக்கு போதிய அறிவு இல்லாமலேயே இருந்தது. பாஸ்கல் என்ற அறிவியல் அறிஞர்தான் வளிமண்டலத்தின் பல புதிர்களை அவிழ்த்தார். 1648 ஆம் ஆண்டு பாஸ்கல் தனது அறிவியல் ஆய்வுகளை வெளியிட ஆரம்பித்தார். இவரது ஆய்வானது கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தமானது குறைந்து கொண்டே வரும் என்று தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். வளி மண்டல அளவு என்பது எண்ணிக்கையில் வராததும் நம்மால் சென்று விட முடியாத தூரமுமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது சூரிய குடும்பம் மட்டும் அல்லாது இது போன்ற எண்ணற்ற கேலக்சிகள் வளி மண்டலத்தில் பயணித்த வண்ணமே உள்ளன. அவற்றை எல்லாம் சென்று அடைந்து விடக் கூடிய கண்டுபிடிப்புகளை மனிதன் இதுவரை உருவாக்கவில்லை. இனி வருங்காலத்தில் சாத்தியப்படலாம்.
ஒரு விண்வெளி வீரன் கடல் மட்டத்திலிருந்து 15000 அடியிலிருந்து 25000 அடி வரை செல்வதாக வைத்துக் கொள்வோம். அவனது இந்த பயணத்தில் சுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டான். ஏனெனில் அவனுக்கு தேவையான ஆக்சிஜன் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் தாராளமாக கிடைத்து விடுகிறது. ஆனால் அவன் 25000 அடிகளுக்கு மேலே சென்றான் என்றால் வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு குறைபாட்டால் அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் குறைவானாதால் அவனது இதயம் இறுக்கமாக ஆரம்பிக்கிறது. சுவாச அமைப்பு சுத்தமாக சீர்குலைந்து அந்த விண்வெளி வீரனை இறப்பு வரை கொண்டு சென்று விடுகிறது. எனவேதான் விண்வெளி பயணம் மேற் கொள்ளும் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை தங்களுக்கு பின்னால் கட்டிச் செல்கின்றனர்.
இது போன்று வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றியும் அங்கு ஆக்சிஜன் குறைவாவதால் மனிதனின் இதயம் சுருங்கி இறப்பு வரை கொண்டு சென்று விடும் என்ற உண்மையையும் கடந்த 500 வருடங்களாகத்தான் அறிந்து வருகிறோம். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் என்ற இரு வேறு நிலைகள் வளிமண்டலத்தில் உள்ளதே விஞ்ஞானிகளுக்கு இதே கால கட்டத்தில்தான் தெரிய வருகிறது. 30000 அடிகளுக்கு மேல் மனிதன் வளி மண்டலத்தில் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர்களோடு செல்ல வேண்டும். இல்லை என்றால் இறந்து விடுவான் என்பது தற்போது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்.
இன்றும் கூட பலர் விண்வெளி பயணம் என்பது சுத்த கட்டுக் கதை: நமது பூமி தட்டையானது: உருண்டையானது அல்ல: என்று வாதிடுபவர்களை பார்க்கிறோம். மனிதன் விண்வெளி பயணம் மேற் கொள்வான் என்பதை 1400 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று நமக்கு இது அரிச்சுவடி பாடம். இனி குர்ஆனின வசனத்துக்கு வருவோம்.
'ஒருவனுக்கு நேர்வழி காட்ட இறைவன் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனின் உள்ளத்தைப் போல் இறுக்கமாக்கி விடுகின்றான்.'
-குர்ஆன் 6:125
எவ்வளவு அழகிய அறிவியல் முன்னறிவிப்பை மிக அலட்சியமாக சொல்லிச் செல்கிறது இந்த குர்ஆன் வசனம்! அன்றைய மக்களுக்கு இதயம் இறுக்கமாவதையும், மனிதன் விண்வெளியில் பயணிப்பான் என்பதையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அது எப்படிப்பட்ட அனுபவம் என்பதும் அன்றைய மனிதர்களுக்கு தெரியாது. இன்றும் கூட விண்வெளி வீரர்களைத் தவிர மற்றவர்கள் அந்த அனுபவத்தை அறிய முடியாது. குர்ஆனை வாசிக்கும் இன்று நமக்கு அந்த இதயம் எந்த நிலையை அடையும் என்பதை விண்வெளி வீரர்களின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிற்கால அறிவியல் வளர்ச்சி பெற்ற நம்மைப் போன்ற மக்கள் இது இறை வேதம்தான் என்ற நம்பிக்கையை பெறுவதற்காகவே இது போன்ற வசனங்களை ஆங்காங்கே இறைவன் நமக்கு தந்திருக்கிறான். இது இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் நமக்கு சான்று பகன்று கொண்டிருக்கிறது.


புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண முகாம்!

புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால், ஆறாம் கட்டமாக(நிவாரண பொருட்கள்) பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, உணவு & நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இடங்கள்:
முத்துப்பேட்டை
*ஆலங்காடு ஒன்றியம்*
*அய்ராக்கணி*
மாலை 4 மணி முதல்
பயனடைந்தோர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
புயலால் புரண்ட மக்கள் வாழ்க்கை..!
துயர் நீக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத்..!





நாட்டாமைகள் கொடுத்த லிஸ்டின் படி நிவாரணம் வழங்கப்படுகிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புயல் பாதித்த கிராமங்களில் உள்ள நாட்டாமைகள் கொடுத்த லிஸ்டின் படி நிவாரணம் வழங்கப்படுகிறது


எங்களுக்கு தேடி வந்து உணவு கொடுத்தது நீங்க தான் சார்!

எங்களுக்கு தேடி வந்து உணவு கொடுத்தது நீங்க தான் சார்!
- புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த உளமார்ந்த நன்றியும் கருத்தும்.
புயலால் புரண்ட மக்கள் வாழ்க்கை..!
துயர் நீக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத்..!
---------------------------------------------------
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக TNTJ
மனிதநேயப்பணியில் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருச்சி மாவட்டம்.
அல்ஹம்துலில்லாஹ்..!


தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ களப்பணியில்....

தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ களப்பணியில்....

இவ்வாறு 234 தொகுதிகளின் எம்.எல்.ஏ க்களும் களத்தில் இறங்கி பணியாற்றியிருந்தால் அந்த மக்களின் குறைகள் என்றோ களையப்பட்டிருக்கும்.  வாக்கு கேட்க மட்டும் தொகுதிக்குள் நுழையும் சுயநலமிகள் நிறைந்த இந்த நாட்டில் மாற்றங்கள் வருமா?




Sunday, November 25, 2018

வீடு வரை காவலரே வண்டியை ஓட்டி சென்றார்...

குடி போதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராம் : வீடு வரை காவலரே வண்டியை ஓட்டி சென்றார்- பூணூலுக்கு என்றுமே ஒரு மதிப்புதான்

 3500 ரூபாய் அபராதம் விதித்து காரை காவலரே ஓட்டிச் சென்றுள்ளார். இது போன்று மற்ற பெண்களுக்கும் நடந்திருக்குமா?

தவறு செய்து விட்டு போலீசாரிடம் வாக்கு வாதமும் செய்துள்ளார். பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை இந்த ஆட்டங்கள் தொடரும்...

ஆஷிஃப் என்ற இந்த சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்.

ஆஷிஃப் என்ற இந்த சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். அவரது தம்பி தற்போதுதான் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். தற்போது உம்ரா பயணத்துக்காக குடும்பத்தோடு விமான நிலையம் வந்துள்ளார். இங்கு கவனிக்க வேண்டியது அவர்களின் குடும்பத்தை.... மற்ற குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாத்தை ஏற்கா விட்டாலும் சந்தோஷமாகவே உள்ளனர். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில் இஸ்லாம் என்பது பிறப்பால் வருவதில்லை. நடைமுறைகளால் வருவதுதான் இஸ்லாம். அதை நடைமுறைபடுத்திக் காட்டியுள்ள இந்த குடும்பத்தை நாமும் வாழ்த்துவோம்.



தொழும் நேரம் வந்தவுடன் அந்த கடமையையும் .....

நிவாரண பணிகளுக்கிடையே தொழும் நேரம் வந்தவுடன் அந்த கடமையையும் நிறைவேற்றும் சகோதரர்கள்.


கஜா புயல் நிவாரண பொருட்கள் விநியோகம்

கஜா புயல் நிவாரண பொருட்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர கிளையின் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் பனந்தோப்பு(செவலூர்) பகுதியில் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.




கோவிலை சுத்தம் செய்யக் கூட வர மாட்டீர்களா?

கோவிலை சுத்தம் செய்யக் கூட வர மாட்டீர்களா?
இந்துத்வாவாதிகளே.... கோவிலையாவது சுத்தம் செய்ய வரக் கூடாதா? அதையும் முஸ்லிம்கள்தான் செய்ய வேண்டுமா? எல்லோரும் எங்கேப்பா போனீங்க... அயோத்தியில் ராமர் கோவில் கட்ட போயிட்டீங்களோ? 
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோவில் மீது விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்ட#SDPI_பேரிடர்_மீட்பு_குழுவினர்.


கடலின் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வு கண்டுள்ள ஹாஸிக் காஜி!

கடலின் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வு கண்டுள்ள ஹாஸிக் காஜி!
உலகம் முழுக்க கடலில் 5 ட்ரில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றிக் கொண்டுள்ளன. நாம் பயன் படுத்தும் உணவு உப்பில் அபாயகரத்தை தாண்டி பிளாஸ்டிக் துகள்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்துள்ளன. நாமும் தினமும் சாப்பிட்டு பல வியாதிகளை பெற்றுக் கொள்கிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை உண்ட பறவைகளும் மீன்களும் ஆங்காங்கே கடலில் செத்து மதிக்கின்றன. பிறகு கரையோரம் செத்து ஒதுங்குகின்றன.
மும்பையின் புனேயில் இந்தூஸ் பன்னாட்டு பள்ளியில் படிக்கும் ஹாஜிக் காஜி(Haaziq Kazi - Age 12) இதற்கொரு தீர்வைக் கண்டு பிடித்துள்ளார். . இந்த சிறுவன் படிக்கும் பள்ளியில் 'பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிப்பது எப்படி?' என்ற தலைப்பில் ஒரு ப்ராஜக்ட் கொடுத்துள்ளனர். ஒரு முறை தனது கைகளை வாஷ் பேஸினில் கழுவும் போது அதன் தண்ணீர் எவ்வாறு செல்கிறது என்று கூர்ந்து நோக்கியுள்ளார். இதனை அடிப்படையாக வைத்து சில 3D பொறியாளர்களின் துணை கொண்டு அருமையான தீர்வை கண்டு பிடித்துள்ளார். ஆசிரியர்களும் மாணவனுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
இந்த கண்டு பிடிப்புக்கு உந்து சக்தியாக இருந்தது இவரது தந்தை சொன்ன ஒரு அறிவுரை. 'உலகில் பிரச்னைகளை உருவாக்குவதற்கென்றே சிலர் உள்ளனர்: அந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கென்றே சிலர் உலகில் உள்ளனர்' - தந்தையின் அறிவுரைக்கேற்ப பிரச்னைகளை தீர்க்கும் சக்தியாக ஹாஸிக் காஜி உருவெடுத்துள்ளார். மேலும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலக மக்களுக்கு நன்மை செய்யட்டும் என்று நாமும் வாழ்த்துவோம்.
தகவல் உதவி
இந்தியா டைம்ஸ்
24-11-2018




'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?

'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?
'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
-குர்ஆன் 55:7-9
'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதையேதான் குர்ஆனும் கூறுகிறது. இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு இட்டுள்ளதால் அதற்கு அடுத்து வரும் 'தராசை நிலை நாட்டினான்' என்ற வசனத்தின் விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.
உதாரணத்திற்கு 600 கிராம் உள்ள இரும்பு துண்டை நாம் வாழும் பூமியில் தராசில் வைத்து நிறுத்தோம் என்றால் 600 கிராமைக் காட்டும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அதே சமயம் அதே தராசில் அதே 600 கிராம் இரும்புத் துண்டை நீங்கள் நிலவில் வைத்து நிறுத்தீர்கள் என்றால் அதன் எடை வெறும் நூறு கிராமைத்தான் காட்டும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும்.
இதிலிருந்து நாம் விளங்குவது பூமியில் ஒரு பொருளை எடை போடும் போது அப் பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையே நாம் எடையாக காண்கிறோம் என்பது தெளிவாகிறது.
அந்த கால அரபிகளுக்கு புவி ஈர்ப்பு விசையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் 'வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது' என்று எளிமையான மொழி நடையில் மிகப் பெரும் அறிவியலை குர்ஆன் மனிதர்களுக்குப் போதிக்கிறது. இந்த வாக்கியத்தை இன்றைய அறிவியல் யுகத்தில் படிக்க வேண்டுமாயின் 'வானத்தை உயர்த்தினான்: புவி ஈர்ப்பு விசையால் நிலை நாட்டினான்' என்று படித்தால் இன்னும் அறிவியலோடு நெருங்கி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.