Followers

Tuesday, May 31, 2016

ஆட்டுக் கறி மாட்டுக் கறியாக தற்போது மாறிய விநோதம்!ஆட்டுக் கறி மாட்டுக் கறியாக தற்போது மாறிய விநோதம்!

உபியில் தாதிரியில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக புரளி கிளப்பி விட்டு முஹம்மது அஹ்லாக் என்ற முதியவரை அடித்தே கொன்றது ஒரு காட்டுமிராண்டி கூட்டம். தாத்ரியில் உள்ள மிருக டாக்டர் அந்த கறியை பரிசோதனை செய்து விட்டு அது மாட்டுக் கறி அல்ல ஆட்டுக் கறி என்ற உண்மையை அறிவித்தார்.

தற்போது அந்த கறியை மதுராவில் உள்ள அரசு பரிசோதனைக் கூடத்துக்கு ஆளும் வர்க்கம் அனுப்பி வைத்தது. அங்கிருந்து வந்த பரிசோதனை முடிவு அதனை மாட்டுக் கறி என்கிறது. ஆட்டுக் கறி மாட்டுக் கறியாக எப்படி மாறியது? ஏனெனில் இன்னும் சில மாதங்களில் உபியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் இதனை பரப்புரை செய்து வாக்குகளை அள்ள இந்துத்வா கையாண்ட தந்திரம் இது.

அப்படியே அவர் மாட்டுக் கறி வைத்திருந்தால் என்ன தவறு? எவனது வீட்டிலிருந்தும் திருடி கொண்டு வரவில்லையே! அந்த நாய்களுக்கு ஒரு மனித உயிரை மிருகத்துக்காக கொல்ல அதிகாரம் கொடுத்தது யார்?

வெட்கங் கெட்ட மானங்கெட்டவர்கள் அதிகாரத்தில் இருந்தால் இது போன்ற கூத்துக்களை இன்னும் காணலாம்!

தகவல் உதவி
என்டிடிவி
31-05-2016Monday, May 30, 2016

ஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்!ஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்!

கர்நாடகாவில் உள்ள ஸஹீன் கல்லூரியில் படித்து வருபவர் வசனஸ்ரீ பாடீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் CET சிஇடி மருத்துவ துறையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற வெற்றியை தங்களின் வெற்றியாக எண்ணி குதூகலிக்கும் இஸ்லாமிய பெண்களை பாருங்கள். சாதி, மதம், இனம் கடந்த கள்ளம் கபடமற்ற உளப் பூர்வமான மகிழ்ச்சி. இவ்வாறு அண்ணன் தம்பிகளாவும் அக்கா தங்கைகளாகவும் பழகி வரும் சமூக சூழலில் ஆட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக சமூகத்தில் பேதங்களை வளர்த்து வரும் இந்துத்வாவையும் பார்க்கிறோம்.

அன்பையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் இரண்டு மதங்களிலும் பெரும்பான்மையோராக உள்ளனர். இந்த பெரும்பான்மை இருக்கும் காலமெல்லாம் எனது நாடு பாசிச சக்திகளுக்கு இடம் கொடுக்காது. பாசிச சக்திகளின் வர்ணாசிரம எண்ணமும் நிறைவேறப் போவதில்லை.

ஜெய் ஹிந்த்!
இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!

ISLAMIC DEVELOPMENT BANK IDB ஐடிபி இன்னும் சில தினங்களில் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாத்தில் தனது கிளையை துவங்க உள்ளது. இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கியானது வட்டியை பிரதானமாக கைக் கொள்ளாது. வைப்பு நிதிகளுக்கு வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும். இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.

ஜெத்தாவை தலைமையிடமாக் கொண்டு இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது. இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.

2010 ஆம் ஆண்டு கேரளாவில் இதே போன்ற வங்கியை தொடங்க முயற்சித்தனர். நம்ம சகுனி சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்து அதனை தடுத்தார். தற்போது ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன் இஸ்லாமிக் பேங்குக்கு அனுமதி அளித்துள்ளது சுப்ரமணியம் சுவாமிக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. எனவே தான் அவரை மாற்ற வேண்டும் என்று பிரச்னை பண்ணிக் கொண்டுள்ளார். வட்டி தொழிலையே பிரதானமாக செய்து வரும் யூதர்களின் கைக் கூலி சுப்ரமணியம் சுவாமிக்கு வட்டி இல்லா வங்கி வந்தால் சும்மா இருப்பாரா?

குஜராத்தில் இஸ்லாமியரின் ரத்தத்தை ஓட்டியது ஒரு காலம்: இன்று அதே இஸ்லாமியரின் மூலதனத்தைக் கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகிறது. ஐம்பத்தைந்து மில்லியன் டாலர்களை ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர இந்த வங்கி உதவியாக தர முன் வந்துள்ளது. இதில் 350 மருத்துவத்துக்கு பயன்படும் வாகனங்கள் வாங்க பயன்படுத்தப்படும். அதில் 30 வேன்கள் இந்த வருடம் குஜராத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட உள்ளது. வைப்பு நிதி பெரும்பாலும் இஸ்லாமியர்களுடையதாக இருந்தாலும் வங்கியின் உதவியானது அனைத்து மத மக்களுக்குமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தனை கொடுமைகள் இஸ்லாமியருக்கு மோடி அரசு கொடுத்தும் உதவ முன் வந்துள்ளனர் முஸ்லிம்கள். இதுதான் இஸ்லாம்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

http://www.thenational.ae/world/south-asia/islamic-banking-set-to-launch-in-india-amid-controversy

ரானா அய்யூபின் புத்தகத்துக்கு சங் பரிவார் எதிர்ப்பு!ரானா அய்யூபின் புத்தகத்துக்கு சங் பரிவார் எதிர்ப்பு!

"GUJARAT FILES:ANATOMY OF A COVER UP" என்ற புத்தகத்தை ரானா அய்யூப் எழுதியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை பின்னணியாகப் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகம். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாக சென்று பேட்டியெடுத்துள்ளார். அரசு அதிகாரிகளையும் இவர் விடவில்லை. நரேந்திர மோடி தனது அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் பண்ணினார் என்பதும் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது. பல புதிய உண்மைகள் ஆதாரங்களோடு தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.

இந்த புத்தகத்தை ஆன்லைனில் அமேஜான்.காம் வெளியிட்டுள்ளது. உண்மைகள் வெளி வருவதை இந்துத்வாவாதிகள் விரும்புவார்களா? எனவே அந்த தளத்திற்கு சென்று இந்த புத்தகத்துக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகின்றனர்.

“Anti national book,” “toilet paper,” “Do not waste your money,” “fictional story by a so-called journalist,” and “lousy book, lousy author.”

'தேச துரோக புத்தகம்' ' கழிவறை பேப்பர்' 'உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம்' என்று இந்த புத்தகத்துக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக அவர்களுக்கு ராணா அய்யூப் ட்விட்டரில் 'நன்றி நண்பர்களே! செலவு இல்லாமல் இந்த புத்தகத்துக்கு அதிக விளம்பரத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளீர்கள். எதிர்பார்த்ததை விட அதிக புத்தகங்கள் விற்றுத் தீர்க்கும்' என்று கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், பெண்களாக இருந்தால் கற்பழித்து கொன்று விடுவோம் என்று மிரட்டுவதும் மோடிக்கு எதிராக எழுதினால் அது தேச துரோகம் என்பதும் இந்துத்வாவின் வழமையான காமெடிகள். எனவே உண்மை மக்களுக்கு சென்றடைய வேண்டும். அந்த புத்தகம் இந்தியா மற்றும் உலகம் முழுக்க சென்றடைய வேண்டும். மோடியின் உண்மை முகம் உலகுக்கு தெரிய வேண்டும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் அந்த புத்தகத்தை வாங்குவோம். வசதியுள்ளவர்கள் இந்து நண்பர்களுக்கு இலவசமாக வாங்கிக் கொடுப்போம். இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வோம்.

தகவல் உதவி
வாஷிங்டன் போஸ்ட்
26-05-2016

https://www.washingtonpost.com/news/worldviews/wp/2016/05/26/the-new-battleground-for-indias-trolls-amazon-reviews/Sunday, May 29, 2016

தற்கொலை விகிதாச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் குறைவதேன்?தற்கொலை விகிதாச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் குறைவதேன்?

உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார கழகம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் வரை படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆச்சரியமாக இந்த வரை படத்தில் இஸ்லாமிய நாடுகள் தற்கொலை விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த பட்டியலில் முற்றிலுமாக வரவில்லை.

கிறித்தவர்கள், நாத்திகர்கள், இந்துக்கள், யூதர்கள், சீனர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எவரையுமே இந்த தற்கொலையானது விட்டு வைக்கவில்லை. அந்த அளவு மக்களின் வாழ்வு முறை நிம்மதியற்று போய்க் கொண்டுள்ளது. மன அமைதி இழந்த மனிதன் உடன் தற்கொலையை நாடுகிறான்.

மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மனிதனின் இந்த மன அழுத்தத்தைப் போக்க யோகா போன்ற எண்ணற்ற வழி முறைகளை மக்கள் கடை பிடித்தாலும் அது முழு பலனைத் தரவில்லை. இறை பக்தியோடு கூடிய தியான முறைதான் மனிதனின் மன அழுத்தத்தை முற்றாக குறைக்கிறது. எது நடந்தாலும் அது இறைவனின் சித்தப்படியே நடக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்பி விடுவதாலும், ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவனை நினைத்து தொழுவதாலும் மன அழுத்தம் முஸ்லிம்களை அண்டுவதில்லை. இதன் காரணமாகவே இஸ்லாமிய நாடுகளில் தற்கொலை விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.

நமது இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களை மத ரீதியாக கணக்கெடுத்துப் பாருங்கள். அதில் இந்துக்களும், கிருத்தவர்களும், நாத்திகர்களும் அதிகம் இருப்பர். முஸ்லிம்கள் மிக மிக சொற்பமாகவே தென் படுவர். இதற்கு காரணம் தொழுகை என்றால் மிகையாகாது.

'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28

-----------------------------------------------------

அல்லாஹ் கூறுகின்றான்:

“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

theguardian
04-09-2014

'வஹாபிகள் நல்லவர்கள்தான்: ஆனாலும் நல்லவர்கள் இல்லை' :-)'வஹாபிகள் நல்லவர்கள்தான்: ஆனாலும் நல்லவர்கள் இல்லை' :-)

"Wahhabis do everything with a lot of expectations. They will do good, but in the long run, their motivation is to convert, they hate other religions,, even sects within Islam. That's the problem. All the evidence will show they did good, but no, they are not good for humanity"


'வஹாபிகள் நல்ல காரியங்கள் நிறைய செய்கிறார்கள். ஆனால் மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களால் மனித குலத்துக்கு ஆபத்து'


முதலில் வஹாபிகள் பல நல்ல காரியங்கள் செய்வதாக ஒத்துக் கொண்டதற்கு நன்றி. :-)

மத மாற்றம் என்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடக் கூடியதல்ல. முதலில் அவனது மனம் மாற வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்கள் இத்தனை கொடுமைகளை அடைந்தும் ஒருவராவது இந்து மதம் திரும்பினரா? மோடிக்கள் அமீத்ஷாக்கள் சங் பரிவாரங்கள் என்று திட்டமிட்டு கொலைகள் நடத்தியும் எதனையும் சாதிக்க முடியவில்லை. 'கர் வாபஸி' க்கு ஐந்து லட்சம் பணம் தருவதாக சொல்லியும் எவரும் இஸ்லாத்தை விட வில்லை. இந்து மதம் மாறவில்லை.

ஆனால் எந்த பண முடிப்பும் கொடுக்காமல் இந்திய அரசின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒருவன் இஸ்லாத்தை ஏற்கிறான் என்றால் அதற்கான காரணத்தை ஆய்வு செய்யுங்கள். வர்ணாசிரமக் கொடுமை அவனை அந்த அளவு பாடாய் படுத்துகிறது.

எல்லோரும் படித்து விட்டால் சாதி ஒழிந்து விடும் என்றீர்கள். ஆனால் படிக்காத பாமரனனை விட படித்தவர்களிடம் தான் சாதி பார்ப்பது அதிகரித்துள்ளது.

கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழிந்து விடும் என்றீர்கள். ஆனால் சங்கர், கோகுல் ராஜ், என்று வரிசையாக காதலித்த இளைஞர்கள் கொலை வெறிக்கு ஆளாகி தண்டவாளத்தில் வீசப்பட்டார்கள்.

ஒரு மனிதனுக்கு பட்டம், பதவி, செல்வம், அந்தஸ்து என்பதை எல்லாம் விட சுய மரியாதை முக்கியம். அது ஒரு சமூகத்தில் தரப்படவில்லையானால் மற்ற சுகங்களால் எந்த பலனும் இல்லை. சுய மரியாதை தேடி அலையும் போது அவனது அருகில் உள்ள இஸ்லாமியர்களை பார்க்கிறான். அன்பு, பண்பு, சகோதரத்துவம் அனைத்தும் அவர்களிடத்தில் மிளிர்வதைக் காண்கிறான். இங்கு சென்றால் நிம்மதி கிடைக்கும் என்று வருகிறான்.

அவன் எதிர்பார்த்ததை விட மரியாதை இஸ்லாமிய மார்க்கத்தில் அவனுக்கு கொடுக்கப்படுகிறது. தான் மட்டுமல்லாமல் தனது மனைவி, தனது குழந்தைகளோடு 'இஸ்லாத்தை சொல்லிக் கொடுங்கள்' என்று பள்ளி வாசலில் காத்து நிற்கிறான். நிம்மதி தேடி வருபவனை நாங்களும் அரவணைத்துக் கொள்கிறோம்.

பூர்வீக மதத்தவராகிய நீங்கள் கொடுக்காத நிம்மதியை இஸ்லாமியராகிய நாங்கள் கொடுக்கிறோம். 'எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்க' என்று பெருந்தன்மையுடன் நீங்கள் மதம் மாறியவர்களை வாழ்த்த வேண்டும். ஆனால் அதனை செய்வதில்லை. பெண்ணுக்காக மாறினான், காசுக்காக மாறினான் என்று அவனை கேவலப்படுத்துகிறீர்கள். அத்தனை ஏசல்களையும் தாங்கிக் கொண்டு இன்று கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இது அவர்களாக எடுத்த முடிவு. உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத வரை இந்த மத மாற்றம் நிற்கப் போவதில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறோம்.

மோடியின் இரண்டாண்டு கால சாதனை - அவமானப்பட்ட பிஜேபியினர்.மோடியின் இரண்டாண்டு கால சாதனை - அவமானப்பட்ட பிஜேபியினர்.

மோடியின் இரண்டாண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்க பிஜேயினர் 'கவுரவ் விகாஸ் யாத்ரா' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குஜராத்தின் கரஞ்ச் சட்டமன்ற தொகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், பிஜேபி தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஊர்வலமாக வந்தபோது மக்கள் முட்டையை இவர்கள் மேல் வீசி தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அங்குள்ள பெண்கள் சாப்பாட்டு தட்டோடும் கட்டைகளோடும் வீதிக்கு வந்து சப்தம் எழுப்பி அவர்களின் ஊர்வலத்துக்கு எதிர்ப்பைக் காட்டினர்.

மோடியின் வாழ்வு குஜராத்தில் ஆரம்பமானது: அதே குஜராத்தில் மோடியின் அரசியல் வாழ்வு அஸ்தமனதம் ஆவதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

பண முதலைகளுக்காக உழைக்க ஏற்படுத்தப் பட்டவர்தான் மோடி என்பதை அந்த மக்கள் உணர்ந்ததால் இந்த எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு நாடு முழுக்க பரவட்டும். மோடியின் காட்டு தர்பார் முடிவுக்கு வரட்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
26-05-2016

http://indianexpress.com/article/india/india-news-india/eggs-thrown-at-bjps-yatra-in-surat-patel-women-hold-protest-2819489/


மோடியால் இந்து மதத்தை விட்டும் இந்தியாவை விட்டும் வெளியேறுகிறேன்!குஜராத் மாநிலத்தில் வசித்து பின்னர் கனடா நாட்டில் குடியேறிய ரோஷன் ஷா என்பவர் இந்த நாட்டை ரவுடிகளின் நாடு எனவும் மோடி அரசின் கீழ் நீதித்துறை ஊழல் கரை படிந்ததாகிவிட்டது எனவும் மேலும் தான் இங்கு காண்பது தான் இந்து மதம் என்றால் அதை விட்டு தான் வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி, குஜராத் காவல்துறை நிர்வாக இயக்குனர், மற்றும் குஜராத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கனடா நாட்டில் வசித்து வந்த ரோஷன் ஷா மோடியின் குஜராத் மாடலில் 2000 ஆம் ஆண்டு முதலீடு செய்ததாகவும் ஆனால் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்களால் தானும் தனது குடும்பமும் தங்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் இது குறித்து நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மீத வழக்கு தொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.

16 வருடங்கள் தான் நீதிக்காக காத்திருந்ததாகவும் தனது தரப்பிலான ஆதாரங்கள் வலுவாக இருந்தும் அதனை சற்றும் கருத்தில் கொள்ளாத நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். நபர்கள் என்பதால் அவர்களை விடுவித்துவிட்டார் என்று கூறியுள்ளார். இது இந்திய நீதித் துரையின் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை அடியோடு சாய்த்துவிட்டது என்றும் இனியாவது நீதிமன்ற விசாரணைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் நீதித்துறையில் மோடியின் ஆதிக்கம் அதிகாமாக இருக்கின்றது என்றும் இவரின் கொள்கைகளை தான் இந்து மதம் போதிகின்றது என்றால் தான் இன்றே இந்து மதத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டது போல மற்றவர்கள் ஏமாந்துவிடவேண்டாம் என்று கூறும் அவர் தனது குழந்தைகளை இந்தியா திரும்ப தான் விரும்பவில்லை என்றும் இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் நன்று யோசித்து முடிவு எடுக்குமாறும் இங்கே அரசியல் ஆதிக்கம் அதிகாமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி - புதிய விடியல் மற்றும் Wafiq Sha
http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E

Saturday, May 28, 2016

அடித்தே கொல்வோம் - ஆர்எஸ்எஸ் தலைவர்!நடந்து முடிந்த தேர்தலில் நாங்கள் வெறும் 3 இடங்களை மட்டுமே ஜெயித்திருந்தாலும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமாக சவால்களை தங்களால் கொடுக்க முடியும்.

தேவைபட்டால் திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொல்ல மேற்கு வாங்க பா.ஜ.க வினரால் முடியும், திரினாமுல் காங்கிரஸ் கட்யினர் தங்களால் முடிந்ததை பார்துகொள்ளட்டும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் எந்த எல்லை வரையும் செல்ல முடியும்,ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் வெறும் கைகளாலேயே திரினாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கழுத்தை உடைக்கும் வல்லமை பெற்றவர்கள்.

உங்களுக்டைய மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து உங்கள் வீடுகளில் வைத்தே உங்களை அடித்து கொன்றுவிடுவோம் -- இதை சொன்னவர் மேற்கு வாங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் ...

நன்றி -- http://www.india.com/…/rss-training-made-us-capable-of-bre…/
http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E…/

Claiming that Rashtriya Swayamsewak Sangh is capable to go extent, he said that RSS workers can even break the necks of TMC leaders and supporter with just bare hands. He said, “We have won 3 seats and its enough to give you (TMC) a challenge. We will cut off their electricity connection, water supply & lynch them (TMC) inside their home, we will see what they can do? We have RSS training and are capable of breaking necks with our bare hands.”

தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே!தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே!

இந்த கிறுக்கனின் கிறுக்குத் தனமாக செய்கையை பார்த்து விட்டு ஆச்சரியத்தில் இவன் மண்டையை போட்டவுடன் இவனுக்கும் தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே! ஏன் சொல்றேன்னா....துண்டு பீடி குடிச்சு அனாதையாக இறந்து போனவனை எல்லாம் 'பீடி மஸ்தான் வலியுல்லா' என்ற பெயரில் தர்ஹா கட்டி அங்கும் காசு பார்க்கிறது ஒரு கூட்டம். எனவே நாம் முதலிலேயே எச்சரித்து விடுவது நல்லது

சாவர்க்கர் உண்மையில் விடுதலை போராட்ட வீரரா?வீர சவார்க்கர் என்று அழைக்கப் படும் ஒருவர் இருந்தார். அவரது எழுத்துக்களைப் படித்தாலே அவரது சுயரூபம் வெளிப்படும். வன்மமும் துவேஷமும் கொண்டவர். ஆர் எஸ் எஸ் அமைப்பின் அங்கமாகத் திகழ்ந்தவர். இந்து மகா சபையை நிறுவியவர். இந்த வீர சவர்க்காருடைய உண்மைப் பெயர் விநாயக் தாமோதர் சவார்க்கர் என்பதாகும் . இவருடைய பெயருக்கு முன் “வீர “ என்கிற அடைமொழி அல்லது பட்டம் ஏன் வந்தது என்று வரலாற்றை உற்று நோக்கும் பலருக்கு புரியாத விந்தை. மாவீரன் நெப்போலியன் என்றும் மாவீரன் அலெக்சாண்டர் என்றும் வரலாறு பல உண்மை வீரகளுக்கு பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கூட ஒரு முக்கிய அரசியல் தலைவரின் அடிதடி மகனுக்கு அஞ்சா நெஞ்சன் என்றும் , மாவீரன் என்றும் பட்டம் வழங்கி அழைத்து வருகிறார்கள். பொன்னியின் செல்வியும் இந்தப் பட்டியலில் அடங்கும். இவைபோல காரணம் இல்லாமல் பட்டங்கள் வழங்குவது ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது. இப்படி ஒரு வகை நகைச் சுவைதான் சவர்க்காருடைய பெயருக்கு முன் “வீர” என்கிற பட்டத்தை வைத்து அழைப்பதும். அவருடைய வரலாற்றைப் படித்தால் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.

இந்திய சுதந்திர வேள்வியில் தியாகத்தில் புடம் போடப்பட்ட பல முஸ்லிம்களின் பெயர்கள் மறைக்கப் பட்டு அகா சுகா பேர்வழிகளின் பெயர்கள் முன்னிறுத்தப் பட்டது ஏன்? ஒரு பிளாஷ் பேக்குக்குப் போகலாம். சுதந்திரப் போராட்ட வீரர் என்று அந்தமான் சிறையில் அடைக்கப் பட்ட ஒருவர் நவம்பர் 1913ல் பிரிட்டிஷ் அரசுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் ; அல்லது கருணை மனு போடுகிறார்; அல்லது காலில் விழுகிறார். அந்தக் கருணை மனுவின் சாராம்சங்கள் இவையாகும்.

பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.

பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.

மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்."

இப்படி இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வாசகங்கள் கொண்ட கடிதத்தை அந்நியருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்தவர்தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான வரும் இந்து மகா சபையின் தலைவரும் ஆன வி .டி. சவர்க்கார். (ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சவார்க்கர் எழுதிய கடிதத்திலிருந்து பிரண்ட்லைன் ஏப்ரல் 07,1995 இதழ்). இந்து மகா சபைதான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தாத்தா. இதன் தத்துவங்கள்தான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றவே முடியாதவை என்று குறிப்பிடப்படும் ஐந்து அம்சங்கள்.

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.

அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், "ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்" என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் 'அந்தமானில் எனது ஆண்டுகள்' என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.

சவர்க்கார் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார். இப்படிப்பட்டவர்கள்தான் நாட்டுப் பற்று பற்றி நாக்குக் கிழியப் பேசுகிறார்கள்.

இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஈஸ்வர் - அல்லா!இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஈஸ்வர் - அல்லா!

சென்ற வெள்ளிக் கிழமை பதவியேற்ற மேற்கு வங்கத்தின் முதல்வரும் மற்றும் அமைச்சர் பெருமக்களும் தங்களின் பதவியேற்பு விழாவில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினர்.

'இன் தி நேம் ஆஃப் ஈஸ்வர்' என்பதற்கு பதில் 'இன்த நேம் ஆஃப் ஈஸ்வர் அல்லா' என்று முதல்வர் முதற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்திய நாடு என்பது ஒரு மதத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு மட்டுமோ உரியதன்று. அனைத்து மக்களுக்குமானது என்பதை இந்நிகழ்வு நிரூபித்துள்ளது. இந்திய பிரதமராக இருக்க தகுதியானவர் மம்தா பானர்ஜி என்றால் மிகையாகாது.

நரேந்திர மோடி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை மம்மா பானர்ஜியிடம் கற்றுக் கொள்ளட்டும். மம்தா வின் இந்த செய்கை அமீத்ஷாவுக்கும் மோடிக்கும், ஆர்எஸ்எஸ் தீவிரவாத கும்பலுக்கும் எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். அவர்கள் எரிச்சல் அடையும் போது இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்கள் சந்தோஷமடைகின்றனர்.

மம்தாவை பின்பற்றி மற்ற மாநிலங்களும் அனைத்து மதத்தவருக்கும் சம உரிமை கொடுப்பார்களாக!

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
28-05-2016

Taking charge as West Bengal Chief Minister for the second consecutive term on Friday, Mamata Banerjee tweaked the standard oath administered to chief ministers and cabinet members by the Governor, changing “in the name of Ishwar” to “in the name of Ishwar and Allah”. After she made the change, her 41-member cabinet followed suit.

- See more at: http://indianexpress.com/article/india/india-news-india/team-mamata-takes-oath-in-name-of-ishwar-and-allah-2822719/#sthash.PnDBgevK.dpuf

Friday, May 27, 2016

முன்னாள் ராணுவ அதிகாரி மதன் மோகன் கைது!முன்னாள் ராணுவ அதிகாரி மதன் மோகன் கைது!

பாரக்பூர்: வெளிநாட்டு உளவுப் பிரிவுக்கு வேவு பார்த்ததாக இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி மதன் மோகன் பால் (53) என்பவரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க போலீஸ் துணை ஆணையர் தேபசிஷ் பைஜி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்து 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மதன் மோகன் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளுக்கு வேவு பார்ப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கண்காணித்து வந்தோம்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அருகே உள்ள பாரக்பூரில் புதன்கிழமை அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 13 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகள் பதிவாகியுள்ளன. ராணுவத்தின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ கேன்டின்களுக்குச் சென்று தகவல் சேகரித்து அவர் வேவு பார்த்துள்ளார். விசாரணையில் அவர் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வுக்கு பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

http://www.rediff.com/news/report/barrackpore-retired-army-subedar-arrested-for-spying/20131219.htm

செய்தி போன வருடத்தியதாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்படுபவர்கள் அதிகமாக மாற்று சமுதாய மக்களாக உள்ளனர். பாகிஸ்தான் காரனும் தனது உளவாளியாக முஸ்லிமை நியமிக்க தயங்குவான். ஏனெனில் முஸ்லிமை நியமித்தால் எளிதில் சந்தேகப்படுவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

நேருவை புகழ்ந்ததால் கலெக்டருக்கு இந்துத்வா கல்தா!

அஜய் சிங் கங்க்வார் மத்திய பிரதேச மாநிலத்தின் சீனியர் ஐஏஎஸ் ஆபிஸர். அவர் தனது ஃபேஸ் புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பற்றி புகழ்ந்து எழுதினார். வந்தது வினை. பிஜேபி அரசு அவரை தற்போது ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளது.

அப்படி அவர் என்னதான் எழுதி விட்டார்?

"1947 ல் இந்த நாடு தாலிபான்களையொத்த ஹிந்து ராஷ்ட்ராவாக மாறுவதை தடுத்தது நேரு செய்த தவறா?

ஐஐடி, இஸ்ரோ, பெல், ஐஐஎம் போன்ற நிறுவனங்களை தொடங்கி இந்திய முன்னேற்றத்துக்கு வித்திட்டாரே அது நேரு செய்த தவறா?

சாரா பாய் ஹோமி ஜஹாங்கீர் போன்றர்களை கௌரவித்தார். அது நேரு செய்த தவறா?

நேரு ஆசாராம், பாபா ராம்தேவ் போன்ற சன்னியாசிகளை ஊக்குவிக்கவிக்காதது நேரு செய்த தவறா?"

இதுதான் அவர் எழுதியது. உண்மையைத்தானே எழுதினார்? நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் இதனைத்தானே விரும்புவர்?

இந்துத்வாவுக்கு எதிர் குரல் கொடுப்பவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அவர் கொல்லப்படுவார் அல்லது பழி வாங்கப்படுவார்.

போலே பாரத் மாதா கீ ஜே :-)


His Facebook post supported Mr Nehru's secularism and appeared to jab at the BJP. "Let me know the mistakes that Nehru should not have committed...Is it his mistake that he prevented all of us from becoming Hindu Talibani Rashtra in 1947? Is it his mistake to open IIT, ISRO, BARC, IISB, IIM, BHEL steel plant, dams, thermal power? Is it his mistake that he honoured Sarabhai, Homi Jehangir in place of intellectuals like Asaram and Ramdev?" the post read.

Sources say senior officials who found out about his Facebook post consulted ministers and an inquiry was ordered. After the post was verified, the sources say, the transfer was announced.

தகவல் உதவி
என்டிடிவி
27-05-2016

http://www.ndtv.com/india-news/officer-who-praised-nehru-in-facebook-post-transferred-in-madhya-pradesh-1412647?fbஆர்எஸ்எஸ் கறை படிந்த வரலாற்றில் ரவீந்திரனும் ....கேரள மாநிலம் கண்ணூர: கோட்டயத்தில் சிபிஎம் சட்டமன்ற தேர்தலில் வென்றதையடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் கம்யுனிஸ்டுகள். இதைக் கண்டு பொறுக்காத ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சி வி ரவீந்திரன் (வயது 55) என்ற சிபிஎம் தொண்டரை வெட்டிக் கொன்றுள்ளனர். பினராய் கிராமத்தை சேர்ந்தவர் இவர்.

ஆர்எஸ்எஸ் என்ற பாசிச அமைப்புக்கு இந்து முஸ்லிம் கிறித்துவர் தலித் என்ற பேதமெல்லாம் கிடையாது. தங்களின் பாசிச கொள்கையை ஒத்துக் கொள்ளாதவர்களை தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருப்பர்.

ஆர்எஸ்எஸ் கறை படிந்த வரலாற்றில் ரவீந்திரனும் சேர்ந்து கொள்கிறார். அவரது குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

CPM condemns 'murderous attacks' by RSS CPM's national leadership denounced the 'murderous attacks ...

Read more at: http://english.manoramaonline.com/news/just-in/cpm-worker-killed-violence-bjp-congress-league-kerala-election-results-kannur.html

தகவல் உதவி
மலையாள மனோரமா
20-05-2016

http://english.manoramaonline.com/news/just-in/cpm-worker-killed-violence-bjp-congress-league-kerala-election-results-kannur.html

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 13RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 13

அப்போது அவர் கூறினார், முதலில் இறந்த மய்யித்தின் தந்தை ஒரு பெயர் தாங்கிய முஸ்லிமாக மட்டும் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தின் கோட்பாடே தெரியாது. அதனால் தான் தனது மகளின் மய்யித் முன் நின்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார்.

இரண்டாவது பார்த்த அந்த நபரோ இஸ்லாத்தின் கோட்பாட்டை நன்றாக தெரிந்தவர். இஸ்லாம் மய்யித்திற்கு முன் நின்று கதறி அழுவதை போதிக்கவில்லை. தனது கவலைகளையெல்லாம் மனதில் மூடி மறைத்துக்கொண்டு தனது மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மிக கண்ணியமாக மகனை அடக்கம் செய்கிறார்.

மகனை எனக்குத் தந்தவனும் இறைவன் தான்; அவனை எடுப்பதும் இறைவன் தான் என்ற நம்பிக்கையும், நாளை நானும் இறந்து விட்டால் மகனை நிச்சயம் அல்லாஹ் நாடினால் மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் தான் அந்த நபரின் உள்ளத்தில் இருந்த இஸ்லாமியக் கோட்பாடாகும்.

இஸ்லாத்தின் இந்த கோட்பாடும் என்னை நன்றாக அதன் பக்கம் ஈர்த்தது.

நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் எனது அப்பாவும் தண்ணி அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் எனது அப்பாவிற்காக என்னுடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கவும், இஸ்லாம் தற்கொலையை போதிக்கவில்லை என்றும் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பேன். இப்போது நான் அதைப்பற்றி மிகவும் வருந்துகிறேன்.

அதே போல் முஸ்லிம்களின் வியாபார விஷயத்திலும் நல்ல ஒரு கோட்பாட்டை கண்டேன்.

ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்தால் அவனுக்கு இலாபம் வந்து விட்டால் அல்லாஹ்வை துதிக்கின்றான். அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு திருப்திபடுகிறான். ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இந்த வியாபாரத்தை தந்ததும் இறைவன் தான் என்று. எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நினைத்து திருப்திப்படவும் செய்கிறான்.

இன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னை போன்று தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த புலயன், குறவன், பறயன், வேலன் இவர்களையெல்லாம் தனது காரியத்தை சாதிப்பதற்காகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

நான் கேட்கிறேன் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பார்த்து: எங்களது முன்னோர்களெல்லாம் எந்த ஒரு ஜாதி வேறுபாடுமில்லாமல், இந்து மதத்தை ஒன்றாக பகிர்ந்து தானே வாழ்ந்து வந்தார்கள்.

அப்படியிருக்க அவர்களது மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி பள்ளன் என்றும், பறையனென்றும் ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்ற பட்டத்தையும் பெற்று தந்ததெல்லாம் நீங்கள் தானே?

அதோ எதிரி என்று நீங்கள் சொல்கின்ற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமா இந்த பாகுபாட்டிற்குச் சொந்தக்காரர்கள்?

இந்து ஒற்றுமை; இந்து ஒற்றுமை; என்று சொல்லிக்கொண்டு எங்களது காதில் பூவை சுற்றுகிறீர்கள்.

இந்த கேடுகெட்ட இயக்கத்தில்தான் நான் பன்னிரண்டு வருடமாக பணியாற்றினேன்.

படிப்பறிவு இல்லாத ஒரே காரணம் தான் இந்த பாவப்பட்ட தலித் இனத்தை மிக மோசமான ஒரு கட்டத்திற்கு அன்றிலிருந்தே கொண்டு சென்றிருக்கிறது.

இவர்கள் வரலாற்றை ஆராய்ந்திருந்தால் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பன சுயநலத்தின் தெளிவான தோற்றம் இவர்களுக்கு அன்றே தெரிந்திருக்கும். அது தெரியாததால் இன்றும் இந்த பார்ப்பன வெறியர்களின் அடியாட்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்து மதம் காப்போம்; இந்து மதம் காப்போம்; என்று சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார்களே?

இவர்கள் எப்போது இந்து நடை முறைப்படி வாழ்ந்தார்கள்?

டாக்டர் அம்பேத்கார், ஸ்ரீநாராயணன் குரு, அய்யங்காளி, ஐயப்பன், எம்.எல்.சி., வள்ளுவர் இவர்களது வாழ்க்கை முறையெல்லாம் (இவர்களுக்கு)தேவையில்லை.

இவர்களெல்லாம் இந்து மதத்தில் இருந்து கொண்டு இப்படியா வாழ்ந்தார்கள்?.

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுத்தார்களா?

இவர்களுக்கெல்லாம் வராத இந்து பற்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது?

சாகாவில் இந்த தியாகிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்கள் போதிப்பதெல்லாம் இந்து வெறிபிடித்த சுயநலம் கொண்ட பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஹெட்கேவர், வீர சாவர்கர், ராணாபிரதாப், அரவிந்தன் இவர்களது வாழ்க்கை முறையைத்தான் போதிப்பார்கள்.

தியாகி அம்பேத்கர் தலித் இனத்தை ஒருங்கிணைப்பதற்காக இந்து மதத்தில் தலித் இனத்தவர்களுக்கும் தனி உரிமை உண்டு என்று போதிப்பதற்காக 1956 ல் இந்து கோர்ட் பில் என்ற ஓர் நியமத்தை(சட்டத்தை) சட்டசபையில் சமர்ப்பித்தார்.

இதை அன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

நாம் இந்துவல்ல. ஒரு தலித் இனத்தவர்கள் ஒரு போதும் இந்துவாக முடியாது. இந்து மதத்திற்கே சொந்தக்காரர் அந்த பார்ப்பன வெறியர்கள்தான் என்று தான் அம்பேத்கர் மொழிந்தார்கள்.

இதையெல்லாம் சாகாவில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அம்பேத்கர் ஒரு மகான் என்று கூறிகிறார்களே இவர்கள். ஏன் அம்பேத்கரின் கூற்றை இவர்கள் மறைக்கின்றார்கள்?

எனது தலித் இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெரியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள். உங்களை படிப்பற்றவர்களாக்கி, பிற மக்களை கொன்று குவிப்பதற்கு உங்களை ஓர் ஆயுதமாகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பயன் படுத்துகிறார்கள்.

இந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடை பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப்போன்று இஸ்லாம் என்ற கண்ணியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றில்தான் உங்களுக்கு மோட்சம்(விடுதலை) இருக்கிறது. குர்ஆனின் நிழலில்தான் உங்களுக்கு விடுதலை உள்ளது.

அன்று இந்து மதத்தை எதிர்த்த டாக்டர் அம்பேத்கருக்கு என்னைப்போன்று இஸ்லாமிய சிந்தனை ஏற்பட்டிருந்தால் முதல் கணமே அந்த தலித் மக்களை, அடிமை இன மக்களை இந்த சத்திய மார்க்கத்திற்கு செல்ல வழி வகுத்து தந்திருப்பார். அவர் அதற்கு வலியுறுத்தியும் இருப்பார்.

இந்த சத்திய மார்க்கத்தின் நிழல் தெரியாததால்தான் அன்று அந்த மக்களை புத்த மதத்திற்கு அனுப்பினார். புத்தனை கடவுளாக ஏற்றுக்கொண்டதைத் தவிர விடுதலை என்ற கோட்பாட்டிற்கு அவர்கள் தள்ளப்படவில்லை.

நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத் தொண்டனாக இருந்த போது, கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்த மாநாட்டின் தலைப்பு: "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்." இந்தத் தலைப்பைக் கண்ட நான் பீறிட்டு எழுந்தேன்.

அடக்கவியலாத ஆத்திரம் என்னுள். நாங்கள் எதிர்ப்பை காட்டினோம்.

"அரசே! இபுறாஹீம் சுலைமான் சேட்டையும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் உடனேயே கைது செய்" என்று சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினோம்.

நான் வேகந்தாழாமல் இந்தச் சுவரொட்டிகளை காவல் நிலையங்களிலேயே ஒட்டினேன்.

அப்போதும் என் வேகம் அடங்கவில்லை. காவல் நிலையங்களுக்கு உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் அறையில் அவருடைய தலைக்கு மேலையே ஒட்டினேன்.

ஆனால் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் எனக்கு நன்றாகப் புரிகின்றது அது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் முன் வைத்த முழக்கம் எத்துனை அர்த்தம் நிறைந்துள்ளது என்பது.

உண்மையில் இஸ்லாம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றிடும் வழி காட்டுதலை வழங்கிடும் மார்க்கம். அதைப் புறக்கணித்தால் அழிவும் அட்டூழியங்களுமே விஞ்சும்.

முற்றும்.......

ஒரு தலித் இளைஞனின் உள் மனதில் இருந்து வெளிப்பட்டவைகளே இந்த தொடரில் நாம் பார்த்த அனைத்தும். ஆர்எஸ்எஸ் ஒரு தேச பக்தி இயக்கம் என்பது பொய். வர்ணாசிரம தர்மத்தையும் பார்ப்னர்களின் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு என்பதை ஒரு இந்து சகோதரன் வாயிலாகவே கேட்டு தெரிந்து கொண்டோம்.

இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும் இந்தியாவிலிருந்து முற்றாக அழிக்க பல இடங்களில் இந்துத்வா தலித்களை அடியாட்களாக பயன்படுத்தவதைப் பார்க்கிறோம். இந்துத்வாவாதிகளின் உண்மை முகம் தெரியாமல் தலித்கள் வஞ்சகமாக கலவரத்தில் ஈடுபடுத்தப்படுவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதனால் சிறைவாசம் அனுபவிப்பதும் தலித்களே! கொலைகளை செய்யத் தூண்டி விடும் மேல் சாதி ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்கள் சுதந்திரமாக வெளியில் உலா வருவர். கோயம்பத்தூர் கலவரத்திலிருந்து இன்று வரை இதைத்தான் நாம் பார்த்து வருகிறோம். இனியாவது தலித்கள் விழித்துக் கொண்டு இஸ்லாமியருக்கு எதிராக இந்துத்வாவாதிகளோடு சேர்ந்து காய் நகர்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.

Wednesday, May 25, 2016

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ’

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். "அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா" என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை.... அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வர் காமராசர் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

"நீங்கதான் மண்ணாங்கட்டியா"... என்கிறார். ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை "வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க" என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே... .உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்" என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக் கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

மரியாதை மனிதனுக்கு இருந்த காலம் அது. மனித நேயமிக்க மகான்கள் உலாவந்த இந்த தமிழகம் இப்பொழுது பதவி வெறி, பண் மோகம் கொண்டோரின் கையில் அகப்பட்டு சின்னா பின்னமாகி வருகின்றத்தே என நினைக்க நினைக்க நெஞ்சம் குமுறுகின்றது.

நல்லாட்சி மலர்ந்திட நாம் தான் சமூக பொறுப்போடு ஏழை எளிய மக்களான பாமரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தனும்.

அறியாமை நீங்கி சமுதாயம் எழுச்சி அடைய நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்போம். இலவசங்கள் வேண்டாம். நம் உரிமையை மீட்போம்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இரட்டையர்கள்!

பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இரட்டையர்கள்!

முஹம்மது சஹ்ல் 500 க்கு 477

சுஹைல் அஹமது 500 க்கு 481

இருவரும் இரட்டைப் பிறவிகள். அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் படிப்பவர்கள்.

இவர்கள் இந்த அளவு மதிப்பெண் எடுக்க காரணமாக சில தகவல்களை தருகிறார் இவர்களின் தந்தை முஹம்மது சலீம்.1. தினசரி காலை தொழுகையை ஜமாத்துடன் நிறைவேற்றி, தொடர்ந்து மக்தப் மதரசா பாடங்களை படித்துவிட்டுதான், பள்ளி செல்ல ஆயத்தமாவார்கள்.

2. என் பிள்ளைகளுக்கு இன்றுவரை மொபைல், வாகனம் வாங்கி கொடுக்கவில்லை. (அவர்களின் சீரழிவிற்கு இதுதான் முழு முதல் காரணம் என்பதை உணர்ந்ததால்)

3. எங்கள் வீடுகளில் டிவி கிடையாது. அதனால் அவர்களுக்கு சினிமா, சீரியல் பற்றி தெரியாது. இதுவும் அவர்களின் ஒழுக்கம் கெடாமல் பாதுகாத்தது.

4. குரான் வாசிப்பதை அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருகின்றனர்.

5. இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.

6. நல்ல நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்து இருந்தார்கள். அதை நாங்களும் கண்காணித்து வந்தோம்.

7. எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியப்பெருமக்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொண்டார்கள்.

Tuesday, May 24, 2016

சவுதியில் கூலி வேலை செய்தவர் இன்று மோடி அமைச்சரவையில்!சவுதியில் கூலி வேலை செய்தவர் இன்று மோடி அமைச்சரவையில்!

(இது ஒரு மீள் பதிவு)

'நான் பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு சென்றேன். அங்கு உதவியாளராக, பிளம்பராக பல்வேறு வேலைகளை செய்தேன். எனது உழைப்புக்கும் மீறி அதிகமான ஊதியம் சவுதியில் தம்மாம் நகரில் கிடைத்தது. அதன் மூலம் எனது குடும்ப சூழலும் தன்னிறைவு பெற்றதாக மாறியது. மேலும் நான் சவுதியில் பணியாற்றியபோது பல பாடங்களைப் பெற்றுக் கொண்டேன். நான் பிளம்பராக வந்தவன்: என்னை ஒரு நாள் எனது முதலாளி கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடன் எதுவும் சொல்லாமல் நான் வேலை செய்த பில்டிங்கின் உரிமையாளர் கையில் உறைகளை மாட்டிக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தார். முழு பில்டிங்கையும் கூட்டி பெருக்குவார். கோடீஸ்வரரான அவருக்கு இந்த வேலைகளெல்லாம் ஒரு இழிவாகவே தெரியவில்லை. இதுவெல்லாம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எந்த வேலையும் இழிவான வேலை அல்ல என்று அன்று நான் முடிவு செய்தேன். இவ்வாறு பல ஆண்டுகள் சவுதியில் உழைத்து எனது குடும்பத்தின் பொருளாதாரம் ஓரளவு நிமிர்ந்தவுடன் இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபட்டேன்.' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மந்திரி விஜய் சாம்ளா கூறியுள்ளர்.

'நான் ஒரு தொழிலாளி: ஒரு விவசாயி: ஒரு பிளம்பர்: இதுதான் எனது நிலை. ஒரு நாள் திடீரென்று நரேந்திர மோடி அவர்களிடமிருந்து போன் வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. தனது அமைச்சரவையில் சேர முடியுமா என்று கேட்டார். உடன் ஒத்துக் கொண்டேன். டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும் போது ஒரு பிளம்பர் மந்திரியாக மாறியதில் என்ன ஆச்சரியம்' என்று கேட்கிறார். 53 வயதாகும் இவர் பஞ்சாபிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவரை வரும் 2017ல் பஞ்சாபில் நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தலித் ஓட்டுக்களை பெறுவதற்காக மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமரிசகர்கள் கூறுகின்றனர்.

சவுதியில் பல ஆண்டு காலம் பாடம் பயின்ற இந்த மந்திரி உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது துறையில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்.

தகவல் உதவி:
சவுதி கெஜட்
29-11-2014
என்டிடிவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
10-11-2014

விஜய் சாம்ளா மட்டுமல்ல.... இவரைப் போன்ற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்து உழைக்கும் மக்களின் வாழ்வை உயர்த்தியது வளைகுடா வாழ்க்கை என்றால் மிகையாகாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் படித்தவர்களுக்கு மட்டுமே சிறந்த வருவாயைக் கொடுக்கும். ஆனால் வளைகுடாக்களில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவனது கை வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணிசமான சம்பளத்தையும் கொடுக்கிறது. இதனால் பல தமிழக கிராமங்கள் பல வசதிகளைப் பெற்றுள்ளன. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படித்தவர்கள் குடும்பத்தோடு தங்குவதால் பொருளாதாரத்தை அங்கேயே செலவழித்து விடுவார்கள். வளைகுடாவில் வேலை செய்யும் உழைக்கும் வர்க்கம் பெரும்பாலும் குடும்பம் இந்தியாவில் இருப்பதால் தனது செலவு போக ஒட்டு மொத்த சம்பளத்தையும் ஊருக்கு அனுப்பி விடும் காட்சியை தினமும் வளைகுடா வங்கிகளில் பார்க்கலாம். இதன் மூலம் நமது நாட்டு பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமாக இருக்க மறைமுகமாக வளைகுடா வாழ் இந்தியர்கள் காரணமாக இருக்கிறார்கள். முன்பு வளைகுடா யுத்தம் ஈராக்கில் நடந்து பல மாதங்கள் பண பட்டுவாடா இல்லாததால் நமது நாட்டின் பொருளாதாரமே சரிந்ததை இங்கு நினைவு கூறலாம்.

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இந்துத்வாவாதிகள் வெறுத்தாலும் மறைமுகமாக அவர்களின் உயர்வுக்கு முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளும் காரணமாகின்றனர் என்பதை இன்றில்லா விட்டாலும் என்றாவது உணர்வர்.

பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து சூப் குடித்த ஒபாமா!

பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து சூப் குடித்த ஒபாமா!

வியட்நாம் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பிளாட்பார கடையில் அமர்ந்து ஹாய்யாக சூப் குடிப்பதை பார்க்கிறோம். நம் நாட்டு அரசியல்வாதிகளை என்று இவ்வாறு பார்க்கப் போகிறோம்?

இரண்டு கால்களை இழந்தும் சாதித்துக் காட்டிய ரோஷன் ஜஹான்!இரண்டு கால்களை இழந்தும் சாதித்துக் காட்டிய ரோஷன் ஜஹான்!

'2008 ஆம் ஆண்டு மும்பையில் அந்தேரியிலிருந்து ஜோகேஸ்வருக்கு ரயிலில் பயணித்தேன். கல்லூரி பரீட்சை எழுதி விட்டு திரும்பும் வழியில் பாலன்ஸ் தவறி ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டேன். எனது கால்களின் மேல் சக்கரம் ஏறுவதை எனது கண்களால் கண்டேன். எனது இரண்டு கால்களும் போனது. ஆர்தோபெடிக் சர்ஜன் டாக்டர் சஞ்சய் காந்தாரியா தனது மகளாக என்னை சுவீகரித்துக் கொண்டு எனக்கு மருத்துவம் பார்த்தார். விபத்துக்குப் பிறகு எனது படிப்பை விடவில்லை. வீட்டிலேயே எனது படிப்பை தொடர்ந்தேன்.

எனது தாயார் என் கால்கள் போனதற்குப் பிறகு சொன்னார் ' இது உனக்கு மறு வாழ்வு. இறைவன் உன் மூலம் சில சாதனைகளை நிறைவேற்ற எண்ணியிருக்கலாம். எனவே தான் இரண்டு கால்கள் போன பின்பும் நீ உயிருடன் உள்ளாய். எனவே மனம் தளர்ந்து விடாமல் உனது படிப்பை தொடர். இறைவன் உனக்கு வெற்றியைக் கொடுப்பான்' என்றார்.

எனது தாயார் மற்றும் உறவினர்களின் ஊக்கத்தால் கடுமையாக உழைத்தேன். மருத்துவத் துறையில் நுழைவு தேர்வு எழுதி தேர்வானேன். கல்லூரியின் மூலமாக ஜேஜே ஹாஸ்பிடலுக்கு அனுப்பப் பட்டேன். அங்கு சில காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு மூத்த வழக்கறிஞர் வி.பி.பாடீல் எனது வழக்கை இலவசமாக நடத்தித் தருவதாக வாக்களித்தார்.

உறவினர்களின் உதவியோடு நீதி மன்றத்துக்கு வந்தேன். எனது நிலையைப் பார்த்த நீதிபதி ஷா அவர்கள் எனக்கு உடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு கல்லூரி மருத்துவ துறையில் என்னை அனுமதித்தது. தற்போது மருத்துவ துறையில் கடைசி வருடத்தையும் பூர்த்தியாக்கியுள்ளேன். எனது சாதனைகளுக்கு முதல் காரணம் இறைவன். அதற்கு அடுத்து எனது தாய். அவர் கொடுத்த உத்வேகமும் ஆறுதலும் என்னை உங்கள் முன் சாதனையாளராக நிறுத்தியுள்ளது'

என்கிறார் 23 வயதான ரோஷன் ஜஹான்.

யாரையும் குறை சொல்லிக் கொண்டு காலத்தைக் கழிக்கவில்லை. இரண்டு கால்களையும் இழந்தாலும் ஒரு வேகத்தோடு சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு முயற்சித்தார். வெற்றி கிட்டடியது. இவரைப் போன்றவர்கள்தான் இந்தியாவின் பாரத மாதாக்கள்!

தகவல் உதவி

http://ummid.com/
03-04-2015

http://ummid.com/news/2016/April/03.04.2016/roshan-jahan-feleicitated-by-people-of-malegaon.html

Monday, May 23, 2016

புனித கஃபாவை சுத்தப்பபடுத்தும் இளம் சிறார்கள்!

புனித கஃபாவை சுத்தப்பபடுத்தும் இளம் சிறார்கள்!

சிறு வயதிலிருந்தே இறை பக்தி ஊட்டப்பட வேண்டும். எந்த வேலையும் இழிவான வேலை அல்ல என்ற எண்ணத்தையும் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இரண்டும் ஒரு சேர இங்கு நடக்கிறது.

Sunday, May 22, 2016

யார் சொன்னது ஷக்கு பாய் அனாதை என்று?

யார் சொன்னது ஷக்கு பாய் அனாதை என்று?

மும்பையிலுள்ள குடிசை பகுதி தார்தோ. இங்கு பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த பகுதிக்கு ஷக்கு பாயும் அவரது கணவரும் 1962ல் வந்தனர். சுற்றியுள்ள முஸ்லிம்களிடம் அன்பாக பழகினர். அவர்கள் தரும் சிறு சிறு வேலைகளை செய்து தங்களின் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தனர். ஷக்கு பாய்க்கு தற்போது வயது 60. சென்ற செவ்வாய்க் கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மும்பை சித்தார்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் ஷக்கு பாய். ஆனால் மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். மருத்துவ மனையிலேயே இறந்து விட்டார். அனாதை பிணத்தை வாங்க ஒருவரும் முன் வரவில்லை.

ஆனால் அவர்களோடு பழகிய இஸ்லாமியர்கள் அவரது பிணத்தை வாங்கினர். ஜாஃபர் ஷா, முஸ்தஃபா கான், யூசுஃப், முஹம்மது யாகூப் மற்றும் சில நல்ல உள்ளங்கள் இணைந்து ஷக்கு பாயின் ஈமக் கிரியைகளை அவரது இந்து மத சடங்குகளோடு செய்தனர். அதன் பிறகு அந்த பிணத்தை சுடுகாட்டுக்கும் சுமந்து சென்றனர்.

'ஷக்கு பாயின் கணவர் 2002 ஆம் ஆண்டு இதே போல் இறந்து விட்டார். அப்போது குஜராத்தில் இந்து முஸ்லிம கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். அந்த நேரத்திலும் நாங்கள் அவரது உடலை அவரது மத சடங்குகளின் படி அடக்கம் செய்தோம்' என்கிறார் குடிசைவாசியான முஹம்மது யாகூப்.

ஷக்கு பாய் இந்து மதமாக இருந்தாலும் அவரும் ஆதமுடைய வழித் தோன்றல்தானே! மனித நேயத்தை செயலில் காட்டிய மும்பை இஸ்லாமியர் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரு பக்கம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைத்து கலவரத்தை தூண்டி வாக்குகளை அறுவடை செய்ய ஒரு கட்சி அல்லும் பகலும் பாடுபடுகிறது. நாங்கள் மதத்தால் பிரிந்திருந்தாலும் மனித நேயத்தால் தேசப் பற்றால் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று தங்களின் செயல்களால் நிரூபித்து வருகிறார்கள் மும்பை இஸ்லாமியர்.

தகவல் உதவி
MID-DAY.COM
21-05-2016

http://www.mid-day.com/articles/mumbai-muslim-neighbours-cremate-kinless-woman-in-hindu-rites/17256170?src=fb

Saturday, May 21, 2016

கோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்!கோடை வெயிலை தணிக்க இலவச நீர் விநியோகம்!

இஸ்லாம் நமக்கு போதிப்பதும் இதைத்தான். சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்கப்படுத்தும் இது போன்ற செயல்கள்.

------------------------------------------

அதே நேரம் இந்துத்வாக்கள் தங்கள் பிள்ளைகளை பழக்கி வரும் சூழலையும் பாருங்கள். இவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் என்னதான் நியாயம் நீங்கள் பேசினாலும் அநியாயத்தின் பக்கமே நிற்பான். ஏனெனில் அந்த அளவு பயிற்சியளிக்கப்படுகிறது சங் பரிவாரத்தினால்.

கைகள் இல்லாமல் ப்ளஸ் டூ தேர்வில் பாஸ்!உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள மணிப்புரியைச் சேர்ந்தவர் அஜீத் குமார். வயது 16. இரண்டு கைகளையும் இழந்த இந்த இளைஞர் வாழ்க்கையில் துவண்டு விட வில்லை. போராடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை தனது கால்களால் எழுதினார். பரீட்சையில் தற்போது வென்றிருக்கிறார். 71 சதவீத மதிப்பெண்களை இந்த தேர்வில் பெற்றுள்ளார்.

'நான் ஒரு பொறியியல் வல்லுனராகப் போகிறேன்' என்று சந்தோஷத்தோடு கூறுகிறார்.

கூத்தாடிகளான அஜீத் கட்அவுட்டுக்கும், விஜய் கட்அவுட்டுக்கும் பாலாபிஷேகம் செய்து வரும் தமிழக இளைஞர்களே இரு கைகளை இழந்த இந்த இளைஞனை பார்த்தாவது திருந்துங்கள்.

தகவல் உதவி

NDTV.COM
22-05-2016

http://www.ndtv.com/india-news/he-wrote-his-class-12-exams-with-his-feet-and-scored-71-per-cent-1408671?fb

பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!பசுவதை பற்றி ஒரு அன்பருக்கு விளக்கம்!

திரு அரிசோனன்!

//நீங்களாகவே பசுவதை வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள், ஒவ்வொரு இந்துவும் உங்களை உயர்வாகப் போற்றுவான்.//

எங்கள் வீடுகளில் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. ஆடு, கோழி, மீன் போன்றவைகளே சமைக்கப்படுகின்றன. மாட்டுக் கறியை சமைப்பதை பலரும் தவிர்த்தே வந்துள்ளனர். எங்கள் வீடுகளில் 'மாட்டுக் கறி' என்று சொல்வதற்கு பதில் 'பெரிய ஆட்டுக் கறி' என்று அதனை மறைமுகமாக சொல்வார்கள். இந்துக்கள் மனம் புண்படக் கூடாது என்பதனால்தான் இந்த சொற்பிரயோகம். எங்கள் ஊரில் கறி மார்க்கெட்டில் ஆட்டுக் கறி மட்டுமே கிடைக்கும். மாட்டுக் கறி வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமத்தை யொட்டிய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் மாட்டுக் கறியை அவர்கள் தான் விரும்பி சாப்பிடுகின்றனர். விலையும் மலிவு. மேலும் பசு மாடும், அதன் சாணமும், அதன் மூத்திரமும் பார்பனர்களாகிய உங்களுக்குத்தான் புனிதம். 60 சதவீதத்துக்கு மேல் இருக்கும் இந்து பிறபடுத்தப்பட்ட மக்களுக்கோ, இஸ்லாமிய மற்றும் கிறித்தவர்களுக்கோ அது புனிதம் அல்ல. மற்ற உயிர்களைப் போல அதுவும் ஒரு உயிர். நான் புனிதமாக வணங்குகிறேன். எனவே அதற்கு புனிதத்தை நீயும் கொடு என்று இந்துத்வாவாதிகள் மிரட்டுவது சுத்த தாலிபானித்துவம் இல்லையா? ஹிட்லரிசம் இல்லையா? மோடியிசம் இல்லையா?

உங்கள் பார்வையில் மாடு மட்டும் தான் புனிதமா? ஆடு, மீன், கோழி போன்ற மற்ற ஜீவன்கள் அதிலும் குறிப்பாக நமது சகோதரர்களான தலித் மக்கள் என்று உலகில் பல கோடி ஜீவராசிகள் உண்டு. அவர்களிடம் இதே உங்களின் கருணையை எப்போது காட்டப் போகிறீர்கள். அந்த மக்களை அக்ரஹாரத்துக்குள் எப்போது அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் கோவில்களுக்கும் அந்த மக்களை வழிபடும் உரிமையை எப்போது பெற்றுத் தரப் பொகிறீர்கள்?

அடுத்து மாடு பாலும் தரவில்லை. இனி கன்றும் ஈனாது. கிழடாகி விட்டது. இந்த நேரத்தில் அதனை பராமரிக்கும் ஒரு ஏழை என்ன செய்வான். அது தானாக இறக்கும் வரை அதற்கு தீனி போட ஒரு ஏழை விவசாயியால் முடியுமா? எனவே அதனை கசாப்பு காரனிடம் விற்று விட்டு மேற்கொண்டு பணம் போட்டு புதிய மாட்டை வாங்குகிறான். இதைத் தவிர வேறு வழியும் அவனுக்கு இல்லை இவ்வாறு விற்பதை தடை செய்ய வேண்டு மென்றால் அந்த அடி மாடுகளுக்கான தீர்வை சொல்லுங்கள். மோடி அரசு பசுக்களை வெட்ட தடை போட்டதால் மஹாராஷ்ட்ரா, கர்நாடகாவில் விவசாயிகள் தங்கள் பெண் பிள்ளைகளை வறுமையினால் கோவிலுக்கு பொட்டு கட்டி விடுகிறார்கள். இவ்வாறு விபசாரத்தில் தள்ளுவது பெண் இனத்திற்கே கேவலம் இல்லையா?

//ஏசு கிறிஸ்து, “Give unto Romans what is due unto them!” என்றுதான் சொல்லி இருப்பதாக விவிலிய நூல் கூறுகிறது. மேலும் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியதாக்கவும்தான் நான் படித்திருக்கிறேன்.//

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.
ஆதாரநூல்: அஹ்மத்

இந்த நபி மொழியானது இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், நாட்டின் பெயரால் தான் சார்ந்திருக்கும் நாட்டையும் சமூகத்தையும் நேசிக்கச் சொல்கிறது. அநீதிக்கு துணை போனால் அதுதான் இனவெறி என்பதை விளங்குகிறோம். எனவே எந்த முஸ்லிமாவது தனது தாய் நாட்டுக்கு துரோகம் இழைத்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாகிறான்.

“இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுடைய தலைவருக்கு கட்டுப்படுங்கள்! அவர் அபிஷீனிய அடிமையாக இருப்பினும் சரியே!”
அறிவிப்பவர் இர்பால் (ரலி) அவர்கள். ஆதார நூல்: ஸூனன் அபீதாவூத் – 4490 – ஷஹீஹ் ஸூனன் அபீதாவூத் – 4607).

ஆப்ரிக்க அடிமை உங்களின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரின் கட்டளைக்கு கீழ்படியுங்கள் என்பது முகமது நபியின் அறிவுரை. இதன்படி ஆட்சித் தலைவராக மோடி இருந்தாலும், ஜெயலலிதா இருந்தாலும் அந்த தலைமைக்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. ஒரு ஆட்சியாளன் தனது கடமையிலிருந்து தவறினால்தான் அதனை எதிர்க்க இஸ்லாம் சொல்கிறது. எனவே ஒரு உண்மையான முஸ்லிம் தாய் நாட்டையும், இந்த மக்களையும், ஆட்சியாளர்களையும் மதிக்கவே செய்வான்.

விஜயலட்சுமி என்ற பிராமண பெண் ஃபாத்திமாவாக!ஃபாத்திமா என்ற இந்த சகோதரியின் அனுபவத்தை முன்பு கண்டோம். அதன் இரண்டாம் பாகமாக இஸ்லாத்தில் தான் பெற்ற இன்பங்களை உணர்வுபூர்வமாக விளக்குகிறார். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ளவர்களை விட இவர்களிடம் மிகுந்த ஈடுபாட்டை பார்க்கிறோம். இவர்களைப் பார்த்தாவது தர்ஹாக்களில் இறைவனை தேடி அலைபவர்கள் திருந்துவார்களாக!

இவரது பழைய பெயர் விஜயலட்சுமி. பிராமண குலத்தைச் சார்ந்தவர். சிறந்த வாழ்க்கைத் துணை இந்த சகோதரிக்கு அமைந்து ஈருலக வெற்றியையும் பெற நாமும் பிரார்த்திப்போமாக!

வேதங்களும் கீதையும் இறைவேதங்களாக இருக்க முடியுமா?வேதங்களும் கீதையும் இறைவேதங்களாக இருக்க முடியுமா?

கேள்வி: இந்தியாவில் உள்ள இந்துமத வேதக் கிரந்தங்களை இறைவேதங்கள் என்று அங்கீகரிக்க முடியுமா?


மறுமொழி: வேதம் என்பதன் மொழிக் கருத்து விஞ்ஞானம், அறிவு என்பதாகும். ஆயினும், ஆன்மிக அறிவு என்பதே அதன் பிரதான கருத்தாகும். வேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்றே நம்பப்படுகின்றது. மாறாக, அவை இறைவனால் உருவாக்கப்பட்டன என்று சில மத அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும், வேதங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவை என்பதற்கு எந்த அறிகுறியும் இந்த வேதங்களில் காணப்படவில்லை. இவ்வாறு எந்த இந்துவேதக் கிரந்தங்களும் கூறவுமில்லை.

வரலாற்றில் வாழ்ந்து சென்ற எல்லா மனித சமூகங்களுக்கும் இறைதூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்றும் அவர்கள் இறைதூதை அந்த மக்களிடத்தில் எடுத்துக் கூறினார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. எனவே, ஆரியர்களிடத்திலும் இறைதூதர்கள் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அவர்கள் இறைதூதை அந்த மக்களிடத்தில் சமர்ப்பித்திருப்பார்கள். எனவே, இந்து வேதக் கிரந்தங்களில் உள்ளவை இறைதூதின் செய்திகளாக இருக்கக் கூடும் என்ற சாத்தியப்பாட்டை முற்றாக நிராகரிப்பதோ புறக்கணிப்பதோ நியாயமல்ல. அவற்றின் மூல ஊற்றுக்கள் இறைதூதர்களின் செய்திகளாக இருந்திருக்க முடியும்.

ஆயினும், இன்று கிடைக்கப்பெறும் ரிக், யஜுர், சாமம், அதர்வம் ஆகிய நான்கு இந்து வேதங்களை இறைவேதங்களாகக் கருத முடியாது. இவை மனிதர்களின் இடைச்செருகல்களுக்கு உட்பட்டு இவற்றின் மூல போதனைகள் திரிபடைந்து போயுள்ளன. இதனால் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்ற நிலையை அவை இழந்து விட்டன.

இந்து மதத்தைச் சேர்ந்த இந்து வேதங்களை விசுவாசிக்கின்ற இந்துமத அறிஞர்கள் இந்த விடயத்தை தமது நூற்களில் தெளிவாக்கியுள்ளனர். கலாநிதி ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:

‘‘ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தபோது தமது பூர்வீக பூமியிலிருந்து தாம் மிகவும் பெறுமதிமிக் கவையாகக் கருதிய தெய்வீக கானங்களைத் தம்மோடு எடுத்து வந்தனர். தாம் வந்து சேர்ந்த புதிய தேசத்தின் அதிகமான மக்கள் பல்வேறு தெய்வங்களை வழிப்படுவதை அவர்கள் கண்டனர். எனவே, தமது மதக் கோட்பாடுகளைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற உணர்வினால் இவற்றைச் சேகரித்து வைத்தனர். இக்கருத்தே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதர்வ வேதத்திற்கு நீண்ட காலமாக வேதம் என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை. ரிக் வேதத்திற்கு அடுத்ததாகவே இதன் அந்தஸ்து இருக்கிறது. ரிக் வேதத்தைப் போலவே வெவ்வேறு தனியான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது இருக்கிறது. இந்த வேதம், பின்னர் உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் சிந்தனை மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்றது. புதிய தேசத்தின் புதிய கடவுள்களையும் தேவதைகளையும் உள்ளடக்கி அவற்றோடு சமரசம் செய்து தாம் அடக்கியாள முற்பட்டவர்களின் நம்பிக்கைகளையும் தம்மோடு சேர்த்துக் கொண்டனர்.’’

(பாரதிய தர்ஷணம்: மாத்ரூபூமி பப்ளிசிங் ஹவுஸ், கோழிக்கோடு, பக்கம்: 44-45)

கடவுள் பற்றிய கோட்பாடு வேதங்களில் பலமான மாற்றங்களுக்கு உட்பட்டது என்று கலாநிதி ராதா கிருஷ்ணன் கூறுகிறார்:

‘‘ரிக் வேதத்தில் 10,472 பாடல்களும் 1,017 சூக்தங்களும் 8 அஷ்டங்களும் 10 மண்டிலங்களும் உள்ளன. பத்தாம் மண்டிலம் பிற்காலத்தில் சேர்க்கப் பட்டதாகத் தெரிகிறது. வேதப் பாடல்கள் உருவானபோது அந்தக் காலப் பகுதியில் இருந்த சிந்தனையின் தாக்கம் அதில் பிரதிபலிப்பதைக் காண முடியும். ஆதியில் இருந்த பக்திபூர்வமான இயல்பு மாறி பிற்காலத்தில் ஏற்பட்ட நோய் கலந்த சிந்தனைகள் இவற்றில் ஊடுருவி விட்டன என்று தோன்றுகிறது. படைப்புக்களின் ஆரம்பம் பற்றிய விடயங்களில் இத்தன்மை தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தத்துவ விவாதங்களுடன் அதர்வ வேத காலத்தில் உள்வாங்கப் பட்ட மூட மந்திரங்களும் இதில் சேர்ந்துள்ளன. வேத கால ஆரியர்களின் ஊகங்களின் பாற்பட்டு புனையப் பட்ட பாடல்களில் பிற்காலத்தில் நுழைந்த மூட நம்பிக்கைகள் இந்த பத்தாவது மண்டிலத்தில் சேர்ந்திருப்பது தமது சமகால மக்களின் சமய நம்பிக்கைகளினால் ஆரியர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதையே காட்டுகிறது.’’ (மேற்படி நூல் பக்கம்: 47)

இறைவேதமொன்றிற்குப் பொருத்தமில்லாத சாதி வேறுபாடு என்னும் கோட்பாடு ரிக் வேதத்தில்கூட நுழைந்து விட்டிருப்பதைக் காண முடியும்.

‘‘ப்ராஹ்மனோஷ்ய முஹமாஸீத்

பாஹு ராஜ்ன்யூ க்ரூதஹ்

ஊரு ததஸ்ய்ய யதைவஷ்யஹ்

பத்பியாம் ஸுரூத்ரோ அஜாயத’’ (ரிக் வேதம் 10:90:12)

பொருள்: கடவுளின் முகத்திலிருந்து பிராமணர்களும் அவனின் கரங்களிலிருந்து சத்திரியர்களும் முதுகிலிருந்து வைஷ்யர்களும் பாதங்களிலிருந்து சூத்திரர்களும் பிறந்தனர்.

ரிக் வேதத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிமுகத்தில் என்.வீ. கிருஷ்ணவாரியார் கூறுகிறார்:

‘‘வேதங்களின் பூரணமான பகுதிகள் இன்று கிடைக்கக் கூடியதாக இல்லை. கிடைக்கக்கூடியவற்றில் பல பிற்கால சேர்க்கைகளாக உள்ளன. மேலும் அபத்தமான கருத்துக்களும் சிக்கலான கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளன.’’

கலாநிதி எஸ். ராதா கிருஷ்ணன் தனது Indian Religions என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

‘‘வேதங்கள் தவறுக்குட்படாதவையாகவோ எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவோ இல்லை.’’ (பக்கம்: 22)

ஆச்சார்யர் நரேந்திர பூஷான் எழுதுகிறார்:

‘‘படிப்படியாக பல்வேறுபட்ட நூற்களும் கிளைகளும் உருவாகி பின்னர் அவை ஒன்றாகச் சுருங்கின. சில பிராமணர்களை வேதத்தில் உட்படுத்தின. பிராமணியம் வேத சூத்திரங்களுடன் ஒன்றாகக் கலந்தபோது வியாசர் பின்னர் அவற்றை மீள வரையறுக்க வேண்டி வந்தது. வியாசர் வேதத்தைப் பிரித்தெழுதியதாகக் கூறப்படுவது இக்காரணத்தினாலாகும். வேத சூத்திரங்களுடன் பிராமணியக் கொள்கைகள் கலந்திருப்பதனால் தூய வேத வசனங்களை அடையாளம் காண்பது கடினமான ஒன்றாக மாறிய ஒரு காலம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்கின்றோம்.

(வேத இலக்கிய வரலாறு பக்கம்: 51-53)

ரிக் வேதம் பத்தாம் மண்டிலத்தின் பத்தாவது சூத்திரத்தில் வருகின்ற ஒரு சம்பவம் தெய்வீக வேதம் ஒன்றுக்கு முற்றிலும் பொருத்தமற்றதாகும். இந்த சூத்திரத்தில் ஒரு பெண் தனது சகோதரனைத் தன்னோடு தவறாக நடந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறாள். அவளின் மொழியும் ஆசை வார்த்தைகளும் ஒரு தெய்வீக நூலுக்கு முற்றிலும் ஒவ்வாதவையாக உள்ளன.

இதேபோல் சூரிய, சந்திர கிரகணங்கள் குறித்து ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் வந்துள்ளவை முற்றிலும் பிழையானவையாகவும் அதீத கற்பனைகளாகவும் உள்ளன. எனவேதான் பிரசித்திபெற்ற தலைசிறந்த இந்து மத அறிஞர்கள் பலர் இத்தகைய அபத்தமான விடயங்கள் வேதத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

சுவாமி நித்தியான சத்தன்யா யாதி எழுதுகிறார்:

‘‘குரூரமான படுகொலைகளை வேத மந்திரங்கள் அனுமதிப்பதுடன் அவை மிகவும் விரும்பப்படுபவை என்றும் குறிப்பிடுகின்றன. வேதத்தில் இவை கண்டு கொள்ளப்படாதவை என்று மூடி மறைக்க முடியாது. ஓர் இந்துமத அறிஞரைப் பொறுத்தவரை இத்தகைய அபத்தமான மந்திரங்களும் இந்துக்களின் புனித வேதத்தில் இருக்கின்றன எனச் சொல்வது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாகும். ஆயினும், சிலர் வரலாற்று உண்மைகளைப் புறக்கணித்து இந்து மந்திரங்கள் நியாயமானவை என்று வாதிக்கிறார்கள். உண்மையில் இவை வேதங்களில் இருந்து அகற்றப்பட வேண்டியவையாகும். இவர்களின் இச்செயல் மன்னிக்கப்பட முடியாதது.’’

(குருகுலம் மாசிகை, இந்திய மறுமலர்ச்சியின் வரையறைகள் பக்கம்: 212, மலையாளம்)

சுருங்கச் சொன்னால், இன்று வேதங்களை நம்புகின்ற இந்து பக்தர்கள்கூட இவ்வேத நூற்கள் முற்றிலும் தெய்வீகமானவை என்று வாதிக்கவில்லை. பல விடயங்கள் இவற்றோடு சேர்க்கப்பட்டுள்ளன. பல விடயங்கள் இவற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பல தலையீடுகளுக்கு வேதங்கள் உட்பட்டுள்ளன. இதில் வியப்படைய எதுவுமில்லை. ஏனெனில், இந்து வேதங்களின் வரலாறு யாருக்கும் தெரியாது! அவை எந்தக் காலங்களில் அறிமுகமாகின என்பதில் பலத்த கருத்து வேறுபாடு உண்டு. கி.மு. 6000, கி.மு. 4500, கி.மு. 3000, கி.மு. 1500 என்று பல்வேறு அபிப்பிராயங்கள் உண்டு. ஆயினும், ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பின்னரே அவை நூலுருவாக்கப்பட்டன என்ற கருத்தில் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். வேதங்கள் அருளப்பட்டதற்கும் அவை தொகுக்கப்பட்டதற்கும் இடையே உள்ள இந்த நீண்ட இடைவெளி காரணமாக அவற்றில் பல்வேறு புதிய விடயங்கள் சேர்வதற்கும் அவற்றின் கருத்துக்கள் மாற்றமடைவதற்கும் இடமுண்டாகியது.

கலாநிதி ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:

‘‘ஆசிரியர்கள் தம்மோடு எடுத்து வந்த நம்பிக்கைகளும் கிரியைகளும் இந்திய மண்ணில் வளர்ந்து நிலை நின்றன. இந்தப் பாடல்கள் உருவாகி நூலுருப் பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் எடுத்திருக்க வேண்டும்.’’

(இந்தியத் தத்துவம் பாகம்: 1 பக்கம்: 66)

வேதம் அருளப்பட்ட பண்டைய மொழி இன்று வழக்கில் இல்லை. வேதகால மொழியிலிருந்து இன்றைய சமஸ்கிருதம் வேறுபட்டதாகும். இந்த விடயத்தைப் பல்வேறு அறிஞர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆசாரியர் நரேந்திர பூஷானும் இதில் உடன்படுகிறார்.

உலகில் வேறு எந்தக் கலப்புக்களில் இருந்தும் முற்றிலும் தூய்மையான ஒரு நூல் இருக்குமென்றால் அது புனித அல்குர்ஆன் ஒன்று மாத்திரமே ஆகும். மனிதத் தலையீட்டிலிருந்து அது முற்றிலும் பாதுகாக்கப்பட்டது. அருளப்பட்ட காலம் முதல் இன்றுவரை அதன் வரலாறு தெட்டத் தெளிவானதாகும். இந்தக் காரணத்தால் இன்று கிடைக்கக் கூடிய ஒரே ஒரு தெய்வீக நூல் அல்குர்ஆன் மாத்திரமே ஆகும். அது முன்னைய எல்லா தெய்வீக நூற்களையும் உண்மைப்படுத்துகிறது.கேள்வி: பகவத் கீதையும் தெய்வீக நூலாக இல்லை என்பதுதான் தங்களது அபிப்பிராயமா?பதில்: இன்றுள்ள இந்து வேதங்கள் மனிதத் தலையீட்டுக்கு உட்பட்டுள்ளன என்ற விடயத்தை கலாநிதி ராதா கிருஷ்ணன், என்.வீ. கிருஷ்ணவாரியார், நரேந்திர பூஷான், சத்தியரக்த படேல் போன்ற இந்து மத அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மகாபாரதத்தில் குருஷேத்திர மைதானத்தில் கௌரவர்களுடன் யுத்தம் செய்ய வரும் பாண்டவ வீரன் அர்ஜுணனுக்கு யுத்த களத்தில் தனது சகோதரர்களான உறவினர்களைக் கொல்ல வேண்டி வருகிறதே என்று கடும் துக்கம் தோன்றுகிறது. அப்போது அர்ஜுணனின் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்கு உபதேசித்தவையே கீதை என்றும் நம்பப்படுகிறது. கீதை உட்படவுள்ள மகாபாரத காவியத்தை உருவாக்கியவர் வியாச முனிவர் ஆவார். ஸ்ரீ கிருஷ்ணன் கடவுளின் அவதாரம் என்றும் அதனால் கீதை, பகவத் கீதை என்றும் கூறப்படுகிறது. எனினும், கடவுள் ஒருபோதும் மனித உருவில் அவதாரம் எடுப்பதில்லை என்ற விடயத்தை தலைசிறந்த இந்து மத அறிஞர்களும் மறுசீரமைப்பாளர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

ஸ்ரீ வாக்படா நந்த குரு, கடவுள் அவதாரம் எடுப்பதில்லை என்ற விடயத்தை ஆணித்தரமாகத் தெளிவு படுத்தியிருக்கிறார்.

(வாக்படா நந்தனின் பூரண விளக்கவுரை, பக்கம் 357-359, 751-752 மாத்ருபூமி பிரசுராலயம், கோழிக்கோடு)

கடவுள் அவதாரம் எடுப்பதில்லை என்பதை கீதை கூட எடுத்துக் கூறுகிறது.

‘‘அவஜானந்தி மாம் மூடா

மானுஷம் தனு மா சரிதம்

பரம் பாவமஜானந்தோ

மம பூத்த மகேஷ்வரம்

மோகாஷா மோக கர்மான்னோ

மோகஞானா விசேத்தஸஹ்

ராக்ஸி மாஸுரிசைவ

ப்ரக்ரூதீம் மோகினீம் சிரிதாஹ்’’பொருள்: என்னுடைய மகத்துவத்தையும் எல்லாவற்றினதும் எஜமானத்துவத்தையும் அறியாத மூடர்கள், மனித உருவில் நான் வருவதாகக் கூறி என்னை இழிவுபடுத்துகிறார்கள். ராட்சகர்களினதும் அசுரர்களினதும் தன்மைகளைப் பெற்ற இவர்கள் தங்களது செயல்களையும் அறிவுகளையும் பயனற்றதாக ஆக்கிக் கொள்கின்றனர். (பகவத் கீதை 9: 1112)ஸ்ரீ கிருஷ்ணனை கடவுள் என நம்புவது முற்றிலும் பிழையானதாகும் என்று இச்சூத்திரம் எடுத்துக் கூறுகிறது. கடவுள் மனித உருவில் அவதாரம் எடுப்பதில்லை என்பது இங்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன் சிலவேளை ஓர் இறைத் தூதராக இருந்திருக்க முடியும். ஆயினும் அவர் ஓர் இறைத்தூதர் என்பதற்குரிய தெளிவான சான்றுகள் இதுவரை கிடைக்க வில்லை. கீதையின் தெளிவான, உறுதியான வரலாறு கிடைக்கக் கூடியதாக இல்லை. அது மகாபாரத யுத்த சமயத்தில் எழுதப்பட்டது என்றும் அதற்கு முன்னர் என்றும் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. கி.மு. 5 முதல் கி.பி 4 வரையான காலத்தைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. கலாநிதி ராதா கிருஷ்ணன் இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:‘‘பகவத் கீதையை மகாபாரதத்துடன் அதன் ஒரு பகுதியாக இணைக்கும்போது எந்தக் காலத்தில் அது உருவாகியது என்பதைக் குறித்து எம்மால் உறுதியாகக் கூற முடியாதுள்ளது. பல்வேறுபட்ட காலப்பகுதியின் உருவாக்கங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.’’(இந்தியத் தத்துவம் பாகம்: 1 பக்கம்: 524)தொடர்ந்து எழுதுகிறார்:‘‘கீதையின் ஆசிரியர் அக்காலத்தில் நிலவிய பல்வேறு சிந்தனைகளை சேகரித்துத் தொகுத்திருப்பது தெரிகிறது. இதனை ஒரு தெய்வீக நூலாக அவர் கருதவில்லை. இது தத்துவத்தின் மூலம் மதத்தின் பாடங்களையும் ஒழுக்கத்தின் பாடங்களையும் உள்ளடக்கியுள் ளது. எனவே, இது ஒரு தெய்வீக நூலன்று. ஆயினும், அது பழக்கவழக்கங்களின் தொகுப்பாக உள்ளது.’’ (மேற்படி நூல்: 519)சுருக்கமாகச் சொன்னால், கீதை தெய்வீகத் தூதின் பல சிந்தனைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கக் கூடும். எனினும், அது ஒரு தெய்வீக நூலல்ல. கீதை தன்னை ஒரு தெய்வீக நூலாக எங்கும் குறிப்பிடவுமில்லை.மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரகுன்னு

தமிழில்: ஜே. இஸ்ஹாக்

Friday, May 20, 2016

பிராமண குலத்து மாமியையும் ஈர்த்த குர்ஆன்!'நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண். எனது குடும்பம் இந்து மத சடங்குகளை ஒன்று விடாமல் பின்பற்றும் ஆச்சாரமான குடும்பம். இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும் பல தவறான கருத்துக்கள் சிறு வயதிலிருந்து எனக்கு ஊட்டப்பட்டது. உருது மொழியின் மேல் உள்ள ஆவலினால் இஸ்லாமியர்களோடு நெருங்கி பழக ஆரம்பித்தேன். ஆச்சரியமாக நான் முன்பு கேட்டவைகள் அனைத்துக்கும் மாற்றமாக அவர்களின் நடவடிக்கை இருந்தது. எனது உறவினர் என்னிடம் 'இஸ்லாமியர்களோடு பழகுகிறாயே உனக்கு பயமாக இல்லையா? என்று கேட்டனர்.

இவ்வளவு அன்போடும் அரவணைப்போடும் பழகுபவர்களைப் பற்றி எவ்வளவு தவறாக புரியப்பட்டுள்ளது என்று வியந்தேன். அவர்களுக்கு உண்மையை விளக்கினேன். அதன் பிறகு எனது நண்பர்களும் எனது உறவினர்களும் என்னோடு ஒரு சில விழாக்களுக்கு வந்தனர். அதன் பிறகு அவர்களும் தொடர்ச்சியாக விழாக்களுக்கு வர ஆரம்பித்தனர். குர்ஆனையும் மற்றும் பல நூல்களையும் அவர்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.

குர்ஆன் எனது உள்ளத்தை மிகவும் ஈர்த்துள்ளது. அதன் சட்ட திட்டங்கள் அதன் மனித நேயம் போன்றவை எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முழு உலகையும் நம்மால் மாற்றி விட முடியாது. ஆனால் நமது நண்பர்கள் உறவினர்களிடம் இந்த உண்மைகளை கொண்டு சேர்க்க முடியும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.'Wednesday, May 18, 2016

இலங்கை வெள்ள நிவாரணத்தில் தவ்ஹீத் ஜமாத்!இலங்கை வெள்ள நிவாரணத்தில் தவ்ஹீத் ஜமாத்!

தற்போது இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 150 பேருக்கு மேல் காணவில்லையாம். 30 க்கு மேல் இறந்துள்ளார்கள். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை செய்து வருகிறது.

வாழ்த்துக்கள் சகோதரர்களே! மனித நேயம் வெல்லட்டும்!

பெண் பாவம் பொல்லாதது மோடி அவர்களே!பெண் பாவம் பொல்லாதது மோடி அவர்களே!

சில ஆண்டுகளுக்கு முன் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் வெளி நாட்டில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க விரும்பி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தில் திருமண சான்றிதழ் அல்லது கணவனின் அபிடவிட் என்ற இரண்டும் இணைக்கப்படவில்லை என்று குஜராத் பாஸ்போர்ட் அலுவலகம் அவருக்கு பாஸ்போர்டை வழங்கவில்லை.

யசோதாபென் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 'பிரதமர் நரேந்திர மோடிக்கு இதே அலுவலகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. அவரது திருமண சான்றிதழை இந்த அலுவலகம் சோதித்ததா? எதன் அடிப்படையில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். நியாயமான கேள்வி.

குஜராத் பாஸ்போர்ட் அலுவலக உயரதிகாரி இஜட்.ஏ.கானிடம் இது பற்றி கேட்டபோது 'அவரது கேள்விகளுக்கு 30 நாளில் பதிலளிக்கிறோம்' என்று கூறுகிறார். பல 30 நாட்கள் சென்று விட்டது. பாவம் யசோதாபென்னுக்கு பதிலும் கிடைக்கவில்லை. பாஸ்போர்டும் கிடைக்கவில்லை.

பெண் பாவம் பொல்லாதது மோடி அவர்களே!

http://www.huffingtonpost.in/2016/02/11/modi-jashodaben-passport_n_9206314.html

அரசு வழக்கறிஞரை மாற்று: புரோகிதுக்கு கிளீன் ஷீட் கொடு!

கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தில்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், ஹரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது.

அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மாலேகான் நகரில் 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்பு சம்பவங்களில் மொத்தம் 111 பேர் கொல்லப்பட்டனர். 398 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் முதலில் முஸ்லிம்களே ஈடுபட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் கைது நடவடிக்கைகள் அரங்கேறியது. இதற்கிடையில் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோகித் ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. ஜெனரல் புரோகித் கொடுத்த தகவலின்படி சுதாகர் சதுர்வேதி என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் பெருந்தொகையான ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது. இதனை கைப்பற்றியது மத்திய புலனாய்வு அதிகாரி சேகர் பக்டே. தேச விரோத செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கவனியுங்கள். எந்த சாதி என்பதையும் கவனியுங்கள்.

சங்பரிவாருடன் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்து குண்டு வெடிப்பு நாச வேலையை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் மாலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த தொடர்பை உறுதி படுத்தும் வகையில் இக்குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி ) எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே தலைமையிலான குழு புலன்விசாரணை நடத்தி உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டில் பிரஞ்க்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார்.

இதற்கிடையில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்க்கரே மர்மான முறையில் கொல்லப்பட்டார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டதை உறுதிபடுத்தின.

இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று தில்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.இந்நிலையில் பாஜக மகாராஷ்டிரா மற்றும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த வழக்கை நீர்த்து போக செய்வதற்கான அனைத்து வேலைகளிலும் இறங்கியிருக்கிறது. இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை இந்த மாதம் 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ரோகிணி சலியன் நீதி மன்றத்தில் ஆஜராகி திடுக்கிடும் தகவலை நீதிபதியிடம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் ரோகிணி சலியன் நீதிபதியிடம், “தேசிய புலனாய்வு அமைப்பு உயர் அதிகாரி என்னை தொலைபேசியில் அழைத்து இந்து தீவிரவாதிகள் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இது பற்றி உங்களிடம் பேசவேண்டும். தொலைபேசியில் பேச விரும்பவில்லை, நேரில் வருகிறேன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் நேரில் என்னிடம் வந்து, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு உங்களால் முடியாவிட்டால், வழக்கு விசாரணையில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். வேறு வக்கீல் இந்த வழக்கில் ஆஜராவார் என்று என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பெண் வழக்கறிஞரை தேசிய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரி மிரட்டியதாக அந்த பெண் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அன்று.

இது குறித்து ரோகிணி சலியன் பத்திரிகையாளர்களிடம் கூறியிருப்பதாவது, "அரசிடம் இருந்து வரும் செய்தி மிக தெளிவாக இருக்கிறது. மாலேகான் வழக்கில் நேர்மையான முறையில் குற்றவாளிகளை தண்டிக்கும் விதத்தில் நீதிமன்றத்தில் இருந்து உத்தரவுகள் பெறக்கூடாது. குற்றவாளிகளுக்கு ஆதரவான உத்தரவுகள் பெறலாம் என்பதே. அதாவது இந்த சமூகத்திற்கு எதிராக என்னை செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்" என குற்றஞ்சாட்டினார். இத்தனை ஆதாரங்கள் அடுக்கடுக்காக இருந்தும் அரசு வழக்கறிஞர்களை மாற்றி இன்று குற்றவாளிகளான ஈந்துத்வா தேச விரோதிகள் புரோகித், பிரக்யாசிங்கை விடுவிக்க மோடி அரசு முயல்கிறது. இது நாம் எதிர்பார்த்ததே!

இன்று மோடி அரசால் புரோகித், பிரக்யாசிங் போன்ற இந்துத்வா தேச விரோதிகளுக்கு கிளீன் ஷீட் கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் விடுதலை செய்யப்படலாம். திரும்பவும் ஆர்டிஎக்ஸ் ராணுவத்திலிருந்து கடத்தப்படும். மீண்டும் எல்லா இடங்களிலும் குண்டுகள் வெடிக்கும். மோடி அரசு சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்களை கைது செய்து சிறையிலடைக்கும். முஸ்லிம்களும் விசாரணக் கைதிகளாக பத்து வருடம் பதினைந்து வருடம் என்று சிறையில் வாடுவார்கள். புரோகித்தும் பிரக்யா சிங்கும், அசீமானந்தாவும் 'போலோ பாரத் மாதா கீ ஜே' என்று ஆனந்த கூத்தாடுவார்கள். அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்வாவினரும் அந்த நடனத்தில் கலந்து கொள்வர்.

வாழ்க இந்திய ஜனநாயகம்! போலோ பாரத் மாதா கீ ஜே :-)


Tuesday, May 17, 2016

'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' - மும்பையில் புரட்சி

'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' - மும்பையில் புரட்சி

மும்பை குடிசை பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு கல்வியும் கொடுக்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. பினா ஷேத் லஷ்கரி என்ற இதன் உறுப்பினர் கூறுகிறார் 'மும்பை குடிசை பகுதிகளில் இவ்வாறு சுற்றித் திரியும் சிறுவர்கள் சிறுமிகளை கண்டெடுத்து இலவச கல்வி கொடுக்கிறோம். இந்த குடிசை பகுதியில் வாழ்ந்த ரஹ்முத்தீன் ஷேக் என்ற சிறுவனை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்த்துள்ளோம். அந்த குடிசை பகுதிக்கும் இவனது பெயரையே வைத்துள்ளோம். 'ரஹ்முத்தீன் ஷேக் ரோட்' என்று கம்பீரமாக பெயர் பலகை மிளிர்கிறது. இதனை பார்த்த மற்ற சிறுவர்களும் 'எங்கள் பெயரை எப்போது போடுவீர்கள் என்று கேட்கின்றனர். 'ரஹ்முத்தீனைப் போல படித்தால் உங்கள் பெயரையும் தெருக்களுக்கு வைப்போம் என்று கூறினேன்" என்கிறார்.

21 வயதாகும் ரஹ்முத்தீன் ஷேக் கூறுகிறார் 'நான் எனது பள்ளிப் படிப்பை வறுமையினால் தொடரவில்லை. இந்த ஆசிரியர்கள் என்னை அரவணைத்து படிக்க வைத்தனர். குலாபா பள்ளியில் நேரிடையாக ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன். தொடர்ந்து 10 ம் வகுப்பு வரை அனைத்து பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வானேன். தற்போது சில குழந்தைகளுக்கு விளையாட்டில் கோச்சாக பணி புரிகிறேன். கூடிய விரைவில் எனது கல்லூரி படிப்பையும் முடித்து விடுவேன். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஐபிஎஸ் எழுதப் போகிறேன். நான் வாழ்ந்த இடத்துக்கு எனது பெயரையே வைத்துள்ளது பெருமையாக இருக்கிறது" என்கிறார்.

தேவி சௌஹான் ரோட், அனிதா ரஜோத் ரோட் என்று குடிசைவாசிகளின் பெயர்கள் ஆங்காங்கே அலங்கரிக்கின்றன. இது போன்ற நல்ல உள்ளங்களாக நாமும் மாறக் கூடாதா? எத்தனையோ செல்வந்தர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளனர். சேர்த்து வைத்த சொத்து பல இடங்களில் அவர்களுக்கு பயன்படுவதில்லை. வயதான காலத்தில் மகன் இவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறான். அவர்கள் குறைந்தது ஒரு ஏழை மாணவனை தத்தெடுத்து கல்வி செலவுகளை பகிர்ந்து கொண்டால் அந்த ஏழை மாணவனின் குடும்பம் முன்னுக்கு வரும் அல்லவா? இறந்த பின்னும் நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நன்மையான செயலுக்கு நமது அத்தியாவசிய செலவுகள் போக நாம் நமது செல்வத்தை பயன்படுத்தலாமே!

http://www.ndtv.com/mumbai-news/in-mumbai-streets-named-after-slum-children-1407297?fb

வன் புணர்வு செய்யப்பட்ட நர்ஸ் 42 வருடங்களாக கோமாவில்!வன் புணர்வு செய்யப்பட்ட நர்ஸ் 42 வருடங்களாக கோமாவில்!

(இது ஒரு மீள் பதிவு!)

1973 ஆம் வருடம் அருணா சண்பக் என்ற செவிலியர் சக மருத்தவ ஊழியர்களால் கற்பழிக்கப்பட்டார். அன்றிலிருந்து கோமாவில் தனது வாழ்நாளை கிட்டத் தட்ட 42 வருடங்களாக கழித்து வருகிறார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மருத்துவ மனையிலேயே கழித்து விட்டார் அருணா. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவர்கள் இந்த பெண்ணின் இழந்து போன வாழ்வுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்?

இன்றைய செய்தியில் அவர் இறந்து விட்டதாக செய்தி வந்துள்ளது.

தகவல் உதவி

NDTV NEWS
May, 16, 2015

மனைவியை துன்புறுத்திய கணவனுக்கு 20 கசையடி!மனைவியை துன்புறுத்திய கணவனுக்கு 20 கசையடி!

ரியாத் (15-05-16): சவூதி அரேபியா நாட்டில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடிகளை தண்டனையாக அளித்து சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு சவூதியில் உள்ள அல் கதீப் பகுதியில் வசிக்கும் பெண் கடந்த மாதம் தனது கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.

அதற்கு ஆதாரமாக மருத்துவமனை சான்றிதழையும் அவர் தாக்கல் செய்திருந்தார். இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் போது தனது கணவனுடன் சமரசம் செய்துகொண்டதாகவும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அந்த இளம்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதுபோன்ற விவகாரங்களில் சமரசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துவிட்ட நீதிபதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்நபருக்கு 20 சவுக்கடிகளை கொடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Abu Dhabi, Sept. 15 (ANI): A court in eastern Saudi Arabia has sentenced a husband to 20 lashes for allegedly hitting his wife on her shoulder.

The case was filed one month ago in Al Qateef by the wife, who presented a medical report supporting her claim.

According to Gulf News, the husband, in his 30s, said that he did not mean to hurt his wife and said that he was merely joking with her.

Even though the wife later told the authorities that she was dropping the case after reconciliation with her husband, the prosecution refused to dismiss the public charges.

The judge ruled that the wife had the right to attend the flogging.

http://aninews.in/newsdetail4/story130755/saudi-arabia-gives-20-lashes-punishment-to-man-for-beating-wife.html

http://inneram.com/news/middle-east/9138-wife-husband-punishment.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+inneram+%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29

யூதர்களும் நம் நாட்டு பிராமணர்களும் ஒரே குலத்தை சேர்ந்தவர்களா?எகிப்தியர்கள் ஒரு காலத்தில் இனத்தால் யூதர்கள். தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்யும் எகிப்தியர்களின் தோற்றமானது நம்ம ஊர் பிராமணர்கள் அச்சு அசலாக உரித்து வைத்திருக்கும்.

அரபு மொழி பேசுபவர்களிலேயே எகிப்தியர்களை மற்ற அரபுகளுக்கு பிடிக்காது. காரணம் தாங்கள் பேசும் அரபு மொழிதான் ஒரிஜினல் என்பார்கள்: மற்ற அரபுகளை விட எகிப்தியர்களான நாங்கள் தான் சிறந்தவர்கள் என்பார்கள்: தாங்கள் முன்னுக்கு வர கூட இருக்கும் பலரையும் கீழே தள்ள தயங்க மாட்டார்கள்: அலுவலக வேலைகளையே தேடிப் பிடிப்பர். அறிவில் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்ற மமதை இன்றும் இருக்கும்.

இந்த காரணங்களால் சவுதி, துபாய், குவைத் அரபுகளுக்கு எகிப்திய அரபுகளை சுத்தமாக பிடிக்காது.

முதன் முதலாக வேலைக்காக நான் அலுவலகத்தில் நுழைந்த போது எனக்கு சீனியராக ஒரு எகிப்திய அக்கவுண்டண்ட் இருந்தார். ஆனால் எனது முதலாளிக்கு என்னை மேலே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம். எனவே அலுவலக டெலிபோன்கள் நான் தான் எடுக்க வேண்டும். அலுவலகத்தின் முக்கிய சாவிகள் என்னிடம் தாம் இருக்கும். பணம் சம்பந்தமான அனைத்து வேலைகளுக்கும் கண்டிப்பாக எனது கையெழுத்தும் இருக்க வேண்டும் என்று எனது ஓனரின் கட்டளை. இது காலித் என்ற அந்த எகிப்தியருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. எனக்கு பல டார்ச்சர்களை கொடுக்க ஆரம்பித்தார். ஒரு முறை கைகலப்பே ஏற்படும் நிலை வந்தது.

இதை நான் சொல்லக் காரணம் எகிப்தியரின் தான்தான் அறிவில் சிறந்தவன் என்ற மமதையே இது போன்ற செயல்களுக்கு காரணம். நம் ஊர் பிராமணர்களுக்கும் இது பொருந்தி வரும். ஒரு இந்து மத சகோதரர் எனது வாதங்களை உண்மைப்படுத்துவது போல் பல தகவல்களைப் பகிர்ந்தார். நம் ஊர் பிராமணர்கள் எங்கிருந்து வந்து நம் நாட்டில் குடியேறினர் என்பதை மிக அழகாக விவரிக்கிறார். பதிவு சற்று நீளமாக இருந்தாலும் படித்துப்பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

1) மோசே முனிவன் மலையேறிப்போய் பத்துக் கட்டளையுடன் வருவதற்குள் ஒரு தங்கக் கன்றுக்குட்டியை ’பிரதிஷ்ட்டை’ செய்து அதை உருவ வழிபாடு செய்த ‘விலக்கப்பட்ட’ கோத்திரத்தினைச் சேர்ந்தவர்களும், பின்னர் மோசேவால் துரத்தப்பட்டு கைபர் போலன் வழியாக வந்து வேதகால மதத்தினை உருவாக்கியவர்களின் வழித்தோன்றலல்லவா, ..... விட்டகுறை தொட்டகுறையாக, பாசம் இருக்கும்தானே?

2) அந்த தங்கக் கன்றுக்குட்டிதான், காமதேனுப் பசுவாக வளர்ந்து பரிணமித்தது. கருவரைக்குள் செல்ல ஆரான் கோத்திரத்துக்கு மட்டுமே அனுமதியுண்டு. அப்படி உள்ளே சென்ற ஜக்கரியா, உள்ளே சென்றபின் தான் மயங்கிவிட்டால் இதைப் பிடித்து இழுங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போவான். அவன் மார்பின் “குறுக்கே கட்டப்பட்டிருக்கும்” கயிற்றில்தான் அந்தக் கயறு இணைக்கப்பட்டிருக்கும்! அதாவது, “மார்பின் குறுக்கே கயறு அணிந்தவர்கள் மட்டுமே” கருவரைக்குள் செல்ல முடியும்! அந்த ஜக்கரியா, இயேசுவுக்கே ஞானஸ்தானம் அளித்த யோவான்ஸ்தானகனின் தந்தை. தான் ஆடாவிட்டாலும் அரவிந்தனின் சதையாடுமல்லவா?

3) அடுத்த ஜென்மாவில் ஏன் யூதனாகப் பிறக்க வேண்டும், திரு அரவிந்தன்? நீங்கள் இந்தப் பிறவியிலேயே யூதர்தான்! ரெண்டு பக்கம் தோரா ஓதிவிட்டு, Israel's Law of return ஐப் பயன்படுத்தி, ஜெருசலேம் சென்று Jewish Quarter ல் செட்டிலாகி விடுங்கள்! வருடத்திற்கு மூன்று மாதம் அவர்களே பயிற்சியளித்து, யூஸி சப் மெஷின் கன்களும் கொடுப்பார்கள்! ஆசைதீர பாலஸ்தீனியர்களை நோக்கிச் சுடலாம்!

4) அரவிந்தன், உங்கள் விபூதி எப்படி வந்தது தெரியுமா? ஆதிகால யூதர்கள் கொழுத்த கிடாயினை பலியிட்டு, பலிபீடத்தில் அவைகளைப் பொசுக்கி இறைவனுக்கு அவியளித்தபிறகு, “நெற்றி நிலத்தில்பட விழுந்து வணங்குவார்கள்” சுற்றிலும் தெரித்த சாம்பல், நெற்றியில் படுமல்லவா? பலிபீடம் போய் வந்தவன் எனும் செறுக்கை ஊருக்குள் பறைசாற்றிட, நெத்தியில் திருநீறு அடையாளம் வந்தது! நம்புங்கள் அரவிந்தன், நீங்கள் இப்போதே யூதர்தான்! இஸ்லாமிய எதிர்ப்பு என்பது, ஒரு கூடுதல் தகுதிதானே? smile emoticon

5) அவியிடுதலையும், விலங்குகளை பலியிடுதலையும் வேதகால ஹிந்துக்கள் தங்களுடன் கொண்டுவந்தனர். இது வெகுகாலம் நீடித்தது. வேதங்களே சாட்சி. இதைக் கெடுத்தவர், புத்தர். புத்தரின் அஹிம்சாவாதம் மக்களிடையே பெறும் வரவேற்பினைப் பார்த்த ஹிந்துக்கள், விலங்கு பலியினை தவிர்த்தார்கள். அதோடு சேர்ந்து, “வேள்வியின் நாயகர்களாகிய பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மாமிஸ உறுப்புகளும் காணாமல் போனது. என்ன இருந்தாலும் முன்னோர்களின் “பததியை” விட்டுவிடக்கூடாதல்லவா? அதற்காக...

6) விலங்கு பலிக்கு மாற்றாக, ஒரு குறியீடாக, “ஒரு சாஸ்திரத்திற்காக” தேங்காய் உடைக்கப்பட்டது! **பின்னமான ஆட்டை யூதன் வெட்ட மாட்டான்! குடுமி போன தேங்காயை அர்ச்சகர் உடைக்க மாட்டார்! **ஆட்டை உரித்ததும், (கிருமி நாசினியாக) மஞ்சள் பூசப்படும். தேங்காய் உடைபட்டதும், மஞ்சள் பூசப்படும்! **ஆட்டை பலியிட்டதும் ஒரு கால் உடைக்கப்பட்டு அதன் வாயில் வைக்கப்படும். தலை, பூசாரிக்கு! தேங்காயை உடைத்ததும் அதன் குடுமி உரிக்கப்பட்டு அந்தப் போர்ஷனை (மூடியை) அர்ச்சகர் எடுத்துக்கொள்வார்! **வெட்டுப்பட்ட ஆட்டின் தலையை ஒரு கையிலும், உடைபட்ட தேங்காயின் “இரு கண் ஒரு வாய் மூடியை” மறு கையிலும் வைத்துப் பாருங்கள்? இரு புத்த முகங்கள், உங்களைப் பார்த்துச் சிரிக்கும்! அரவிந்தன், நீங்கள் இந்தப் பிறவியிலேயே யூத வாரிசுதான்

7) உலக இனங்களிலேயே “கோத்திரங்கள் வாயிலாக தம்மைப் பிரித்து அடையாளப்படுத்திய” இரு இனங்கள் எவையெவை? எனக்குத் தெரியவில்லை, நீங்கள் சொல்லுங்கள் அரவிந்தன்? பனிரெண்டு யூதக் கோத்திரங்களில் தம்மில் கரைந்து மறைந்த எட்டுக் கோத்திரங்களை வரலாற்றில்மட்டும் வைத்துக்கொண்டு, இப்போது நான்கு கோத்திரங்களை மட்டும் பேரளவிற்கு வைத்துக்கொண்டிருப்பவர்கள் யூதர்கள். யூதர்களையும், ஹிந்துக்களையும் தவிர (குறிப்பாக பிராமணர்கள்) இந்த பேருலகில், “கோத்திரங்கலை” இன்னமும் வைத்துக்கொண்டிருப்பவர்கள் யார்? அரவிந்தன், நீங்களும், நானும், கோபாலனும் விலக்கப்பட்ட, கரைந்துபோன, வலசை போய்விட்ட (Diaspora) ஒரு கோத்திரத்தின் யூதராக இருக்க வாய்ப்புள்ளது! smile emoticon அய்யோ பாவம்,

8) இந்த மாபெறும் உலகில், ஆண்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி (உடற்கூறுகளால் அல்ல, வயது, சாதகம் பார்த்து) உறவினர்களை அழைத்து, விழாக்கொண்டாடும் இரண்டே இரண்டு இனங்கள் எவை? எனக்குத் தெரிந்து Bar Mitzwa (Please google for details) கொண்டாடும் யூதர்களும், பூணூல் பண்டிகையை (யூத ஜக்கரியா பூசாரியின் குறுக்குக் கயிர்) கொண்டாடும் பிராமணர்களும் மட்டுமே! பார்மிட்ஸ்வா எனும் யூதப் பண்டிகை, ஆண் பிள்ளைகள் 12, 13 வயதானபோது உறவினர்களை அழைத்து “மத ரீதியாகக்” கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பர்த்டே பார்ட்டிபோல நண்பர்களை அழைப்பதில்லை. பூணூல் கல்யாணத்திலும் நண்பர்களுக்கு அழைப்பு ரொம்ப சொச்சம்தான். பார்மிட்ஸ்வா பற்றி, ஹெரால்ட் ராபின்ஸின் (இவர் ஒரு யூதர்) A stone for Danny Fisher ல் அருமையாகச் சொல்லியிருப்பார்,

9) மோஸே ராஜ வம்சம், மரபல்லாத வழியில் பிறந்தவன். கர்ணன், ராஜ வம்சம், மரபல்லாத வழியில் பிறந்தவன். மோஸேவைக் கொல்வதில் ராஜகுமாரிக்கு விருப்பமில்லை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். கர்ணனைக் கொல்வதில் ராஜகுமாரிக்கு விருப்பமில்லை, ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். மோஸே, புறசாதிகளோடு சேர்ந்துகொண்டு துஷ்டனாக ஆனான். கர்ணன், புறசாதிகளோடு சேர்ந்துகொண்டு துஷ்டனாக ஆனான். மோஸே, சேனாதிபதியாக நின்று ”தான் பிறந்த யூத இனத்தை” வழிநடத்தினான். கர்ணன், சேனாதிபதியாக நின்று ”தான் பிறந்த ஷத்திரிய” இனத்தை வழி நடத்தினான். மோஸே போர்க்களத்தில் “பின்னர் லெஜண்டாக பரிணமிக்கப்போகிற” பல அதிசயங்களைச் செய்தான். கர்ணன், போர்க்களத்தில், அதேபோல் அதிசயங்களை நிகழ்த்தினான். கதை ஒன்றே! களம் இரண்டு! என் பாட்டனின் நாடாகிய இஸ்ரேலே! உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (காந்தி, இஸ்ரேல் மேண்டேட்டில் இந்தியாவை எதிர்த்து ஓட்டுப்போடச் சொன்னார். எனவே, ஒரு இந்தியனாக, அரசியல் ரீதியாக நான் காந்தியின் பக்கமே)

10) ”ஈஸா எனும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை துளிர்த்துத் தழைக்கும். அந்நாளின் ஈஸாவின் வேருக்காக சாதிகள் தேடி விசாரிப்பார்கள்” என்று இயேசுவின் வருகையை முன்னறிவித்த ஏசாயா தீர்கதரிசியும், “ராமாவிலே சத்தம், ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாமையால் மன ஆறுதல் இல்லாமலிருக்கிறாள்” என்று முன்னறிவித்த இன்னொரு தீர்கதரிசியாகிய எரேமியாவும், பலப்பல இடங்களில், பழைய ஏற்பாட்டில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். “உங்கள் (விக்கிரஹ ஆராதனை செய்யும் விலக்கப்பட்ட கோத்திரத்தார்) அமாவாஸைகளும், நாள் (குறித்த) திருநாட்களும் எனக்கு அருவருப்பு என்று கர்த்தர் (இயேசு அல்ல! அவர் பிதாவே என்றழைத்த ஜெஹோவா எனும் ஏக இறைவன்) சொல்கிறார்” இவ்விருவர் தவிர பல்வேறு பழைய ஏற்பாட்டின் யூத தீர்கதரிசிகளும் “தூபங்கட்டுதலை” இழிவாகப் பார்க்கிறார்கள். 1) அமாவாசை வழிபாடு 2) குறித்த திருநாட்கள் (அதிகளவில், அநேகமாக வாரந்தோரும்) 3) தூபங்கட்டுதல் (தீபாராதனை) இன்னமும் வைத்துக்கொண்டிருக்கும் மதம் எது?

11) ஜஸ்டிஸ் கட்சி - திக - திமுக - அதிமுக - மதிமுக என்று பிரிந்துகொண்டே செல்வது, மானுட இயல்பு. பெறும்பாலும் கொள்கையை கட்டுடைக்க நினைப்பவர்களும், அதிகாரம், வாய்ப்புக் கிடைக்காதவர்களும் சேர்ந்து வெர்ட்டிகலாக கட்சியை உடைத்து வெளியேறுவதுதான் வரலாறு. **எரேமியாவும், ஏசாயாவும் ஆதிப் பழங்குடி மனப்பான்மைகலைக் கட்டுடைத்தார்கள். தீர்கதரிசனங்கள் (விஷன்ஸ்) முன்மொழியப்பட்டன. **மோஸே பத்துக் கட்டலைகளை இயற்றி மேலும் கட்டுடைத்தார். (எகிப்தைவிட்டு) வெளியேறினார். **விக்கிரஹ ஆராதனை, சில கோத்திரத்தாருக்கு இர்ரெஸிஸ்டிபிளாக, இனிப்பானதாக இருந்தது. பிரிந்து போனார்கள். **வானத்தைப் பார்க்காதே, நாள் நட்சத்திரம் குறிக்காதே என்றார் மோஸஸ். வான சாஸ்திர அறிவியல் மனது, கட்டுக்கடங்காமல், கட்டுடைத்தது! **வான சாஸ்திரமும், விக்கிரஹ ஆராதனையும், பசு வழிபாடும், என்ணிலடங்கா திருவிழாக்களும் வேண்டுமென்று ஆசைப்பட்ட சில குறுங்குழுக்கள், ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு வெளியேறின! எங்கே சென்றன? யாருக்குத் தெரியும்?

------------------------------------------------

அவை வேறு எங்கும் செல்லவில்லை... ஆநிரைகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் வந்து அமர்ந்து கொண்டன. இங்கு அமர்ந்ததோடு அல்லாமல் இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை பாகிஸ்தானுக்கு போ என்று வேறு கூப்பாடு போடுகின்றன. :-)


இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் ஆப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகூப், மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும் மோசேவுக்கும் ஏசுவுக்கும் வழங்கப்பட்டதையும் ஏனைய இறைத் தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்றும் கூறுங்கள்.

குர்ஆன் 2:136

மத நல்லிணக்கத்திற்கு இதை விட சிறந்த ஒரு வேத வசனம் வேண்டுமா? மேலே பதிந்த பல சம்பவங்களை உண்மைப் படுத்துகிறது இந்த குர்ஆனிய வசனம்!