Followers

Tuesday, August 29, 2023

ஒரு உபி அன்பரின் உள்ளக் குமுறல்....

நிருபர்: உங்கள் மகன் ஒரு பாகிஸ்தானிய வீரரை வீழ்த்தியுள்ளாரே?

'எனது வீடியோக்களை பார்த்து பலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்

பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களை நோக்கி கூறுகிறார்...

தெலுங்கானா முதல் மந்திரி திரு .K. சந்திர சேகர ராவ்

Monday, August 28, 2023

ஜாம்ஷெட்பூர் - கோல்மூரி

ஸ்வீடனைச் சேர்ந்த சகோதரர் மைக்கேல்

 இன்று 28-08-2023 இஸ்லாத்தை முழுமையாக கற்றுணர்ந்து முஸ்லிமாக மாறியுள்ளார். இவரது வாழ்வு இஸ்லாமிய வாழ்வாக அமைய பிரார்த்திப்போம்.




Friday, August 25, 2023

சங்கிகளுக்கு அழிவு காலம் வெகு விரைவில்

 

உத்தர பிரதேசம்.

 

பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர் இந்து மாணவர்களை நோக்கி அவனை அடியுங்கள் என்கிறார். அந்த மாணவர்களும் வரிசையாக வந்து அறைந்து விட்டு செல்கின்றனர். வலிக்காமல் அடித்த மாணவனை நோக்கி 'இன்னும் வேகமாக அடி' என்கிறார் அந்த பள்ளி ஆசிரியை. அடி வாங்கும் மாணவனோ முஸ்லிம். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக அழுது கொண்டு வலியை தாங்கி நிற்கிறான் அந்த சிறுவன்.

 

உலகில் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை நடக்குமா? பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் இது போன்ற கேடுகெட்ட சங்கிகளுக்கு அழிவு காலம் வெகு விரைவில் இறைவன் புறத்திலிருந்து வரட்டுமாக....




 

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/849534739861257

Thursday, August 24, 2023

போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்....

 

போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்....

 

ரஃபேல் ஓஜைக்

 

போலந்து நாட்டில் பிறக்கிறார். பிரிட்டனில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக செயல்பட்டு வந்தார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.

 

'ஒரு நாள் இரவு எனது அறையில் தனியாக இருந்தேன். ஏதோ காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அறையின் வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன். நேரம் போவதற்கு எதையாவது படிக்கலாம் என்று எண்ணினேன். அப்போது பல்கலைக் கழகத்திலிருந்து கொண்டு வந்த மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் ஒன்று எனது அருகில் இருந்தது. சில அத்தியாயங்களை படிக்கத் துவங்கினேன். அந்த வசனங்கள் என்னை பலமாக சிந்திக்கத் தூண்டியது. திடீரென மொழுகுத் திரி அணைந்தது. அறை எங்கும் ஒரே இருட்டு. எனக்குள் இனம் புரியாத ஒரு பயம் ஏற்பட்டது. இதற்கு முன் இவ்வாறு எனக்குள் ஏற்பட்டதே இல்லை. என் கை கால்கள் சிறிது நேரம் உறைந்து விட்டன. மெழுகுத் திரியை திரும்பவும் ஏற்றினேன். அப்போது குர்ஆனில் குறிப்பிட்ட அந்த பகுதியை திருமப்வும் படித்தேன்.

 

 'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'

-குர்ஆன் 2:164

 

அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு பல்கலைக் கழகம் ஆய்வுக்காக என்னை எகிப்து அனுப்பியது. அங்கு மேலும் பல குர்ஆனின் மகத்துவத்தை உயர்ந்தேன். எனது மனதில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்....

 

எல்லா புகழும் இறைவனுக்கே!

 

மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்






Professor and Researcher / Rafael Ozalk He was born in Poland, lived in Britain, and converted to Islam in Egypt Before his conversion to Islam: He did not know anything about Islam literally And if you like, say: He did not even know the word Islam Then God guided him to Islam. He read the meanings of the Noble Qur’an translated into English to complete his studies with academic motives and not a search for the truth, and one day everything changed. He said in the text: I was in my room alone at the time, and the electricity was cut off from the house, so I lit a candle, and I thought of reading something, and I was lying on my back reading a translated copy of the Qur’an, which I got from the University of Leeds library, and it was with me everywhere I went, and while I was reading on Suddenly the candle fell, and darkness prevailed in the room, and at that time I was terrified, I had never felt this fear before, as my limbs froze for 60 seconds or two minutes, and after I realized what had happened, I lit the candle again, and I looked at the book and saw the liquid wax still flowing on its page, and I read : (Indeed, in the creation of the heavens and the earth, and the alternation of night and day, and the ships that sail on the sea for the benefit of people, and what God has sent down the sky from water, and therewith He revived the earth after its death, and dispersed therein every animal, and directed the winds and the clouds harnessed between the sky and the heavens. A land of signs for people who understand). The message I received from the verse... That God tells us: that everything in the universe in our daily lives, wherever you turn there are signs and signs for those who think with their minds! For me that was a very important point, in that event there was a "message for me" that could not be ignored. Rafael Ozalk After that incident, his university sent him on a mission to "Egypt", and in Egypt he reached the conviction that Islam is the religion of truth, and before he uttered the two testimonies of faith or declared his conversion to Islam, he saw in a dream that he had died!! And he realized that he had just died, so he woke up and went to his friend in the next room and said to him: Get up, O Muhammad. And he said after his conversion to Islam: Islam is a method for life and the Qur’an serves as a map for it. I see it as a guide for me. If you want to infer, you should read the Qur’an. We ask God Almighty to make us and Him steadfast in the truth until we meet Him.


 e said after his conversion to Islam: Islam is a method for life and the Qur’an serves as a map for it. I see it as a guide for me. If you want to infer, you should read the Qur’an.

We ask God Almighty to make us and Him steadfast in the truth until we meet Him.

Tuesday, August 22, 2023

தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் ஃ அவர்களின் சிறப்புக் கட்டுரை.

 


ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதை போல் இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லிம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது.

 

,################₹₹₹₹₹₹₹₹₹₹####₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

காத்தான்குடியில் இருந்து வெளிவரும் எக்சத் வெளியீட்டுக்கு தோழர் ரமேஷ்(முன்னால் தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் அவர்களின் சிறப்புக் கட்டுரை.

 

கடந்தகால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் , காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல,ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு .

 

ஒரு பாலச்சந்திரனுக்காக துடிதுடிப்பவர்கள் , 30 பாலச்சந்திரன்களை பள்ளிவாசலில் சுட்டும் வெட்டியும் புலிகள் கொன்ற போது ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்?

என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று கேட்பவர்கள் ,என்ன பாவம் செய்தார்கள் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இந்த 30 பாலகர்கள் என்று கேட்க ஏன் மறுக்கிறார்கள்?

 

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி

 

வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

 

ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் இனச்சுத்திகரிப்பு எனப் பொருள்பட்டால், சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லீம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது.

ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன? ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது.

 

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது,சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லீம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

 

ஆண்டுகள் பல கடந்த நிலையிலும்கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி

 

வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

 

காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும் என்று கட்டளையிட்டனர் புலிகள்.

 

அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். அப்போது இளம்பருதி என்ற புலி மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். "முஸ்லிம் மக்களே நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள் என்று இளம்பருதி என்ற புலி அறிவித்தது

 

ஜின்னா மைதானமே கதிகலங்கியது. பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினார்கள் . சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள்; வாதாடினார்கள்,இது எங்களுடைய சொந்த இடம் என கூச்சலிட்டு கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

 

புலிகளுக்கு ஏது மனசாட்சி?

 

புலிகள் மனமிரங்கவில்லை. இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தது.

அனைவரும் பயந்து நடுநடுங்கி அழுது வீங்கிய முகங்களுடன்,உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.

 

புலிகள் அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை.

 

சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர்.

 

சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்தவர்களை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்தார்கள் இந்தப் புலிகள்.

மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்ட பலர் மந்தைகளாக புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டார்கள் . கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூட்டைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள், பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தார்கள்,ஒருகாலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத்தெருவின் வர்த்தகர்களான முஸ்லீம் சகோதரர்களை , நிவாரணப் பொருட்களையும் , நிவாரண உணவுகளையும் கையேந்த வைத்தனர் புலிகள்.

 

யாழ் பூமிக்கு அவர்களும் சொந்தக்காரர்கள்தான். இது அவர்களது பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் இருந்தார்கள்,அவர்கள் மதத்தால் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதால் வெளியேற்றப்பட்டார்கள்.

 

ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்று தெரிந்தும் கூட அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த , எந்த ஊடகமும் , எந்த அரசியல்வாதிகளும் முன்வரவுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை.

நடை பெற்ற சம்பவத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பும் கோரவில்லை, அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற ,ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது.ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

 

ஆனாலும் யாழ் பூமியிலிருந்து முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேறும்படி கேட்டபோது ,இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன, புலிகளின் ஆயுதங்களையும் மீறி ஒரு சில தனிநபர்கள் , ஒரு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர், அதில் ஒருவர் எனக்கு படிப்பித்த , நான் பிறந்த இடத்தில் , பிரபல தனியார் ரியூட்டரி நடாத்திய , எனக்கு மிகவும் பிடித்த மனித நேயம் மிக்க ஆசிரியர் உதவ முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் ஒன்று அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த முஸ்லீம்கள் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிகக் கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி, புனிதமான மசூதி அன்று ரத்தகாடாயிற்று, குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.

 

இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் , அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளனார் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது. இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் ஒற்றை படத்தினை பிடித்து இனியும் போராட முடியும்?30 பாலச்சந்திரன்களை புலிகள் அன்றே கொன்றுள்ளார்கள் .

 

உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது, இறுதி யுத்தத்தில் ஈரான் ,பாகிஸ்தான் எல்லாம் ஓடிவந்து சிங்களவனுக்கு உதவ இதுவும் காரணம்.

 

என்னிடம் ஆயுதம் இருக்கின்றது, இது என் நாடு அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது, அதன் பெயர் காட்டுமிராண்டித்தனம் .

 

ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலகநாடுகள் திரண்டபொழுது புலிகள் காணாமல் போனார்கள்,இப்படி எல்லாம் ஆடிய புலித் தலைமைகள் தான் கடைசியில் முள்ளிவாய்காலில் எல்லோராலும் வெறுக்கபட்டு கொல்லபட்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பொதுமக்களைக் கொல்வதில்லை. அவர்களின் உடமைகளைப் பறிப்பதும் இல்லை அப்படி செய்பவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இல்லை, ஆனால் புலிகள் இவை அனைத்தையும் அந்த முஸ்லீம் மக்களுக்குச் செய்தார்கள் ,இப்போது கூறுங்கள் இலங்கை முஸ்லிம்கள் எப்படி புலிகளை ஆதரிப்பார்கள்? உண்மையை கூறுவதானால் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், புலிகள் அவர்களிடம் மிகவும். கடுமையாகவும் , கொடுமையாகவும் நடந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாவகச்சேரியில் செப்டம்பர் 04ஆம் திகதி, புலிகளின் ஆதரவாளர்களான சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மோதலை உருவாக்கியது. இதில் சில தமிழர்கள் பள்ளிவாசலை தாக்க முற்பட்டபோது முஸ்லிம் இளைஞர்கள் அதனைத் தடுத்து, அவர்களை புலிகளின் காவல் படையில் ஒப்படைத்தனர், புலிகள் அவர்களை என்ன செய்தார்கள் தெரியுமா?

 

மோதலில் ஈடு பட்டவர்களை விடுவித்ததும் இல்லாமல் , சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை தமிழர்களோடு மோதக்கூடாது என புலிகள் முஸ்லீம் மக்களுக்கு எச்சரிக்கையும் விட்டார்கள்? எப்பிடியிருக்கு நியாயம் ? சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது .