Followers

Sunday, July 31, 2016

இதுதான் இந்தியா - ‎அம்பேத்கர்‬

"நான் படித்தவனாக இருந்தாலும் என்னுடைய ‪#‎கல்வி‬ இந்தச் சமுதாயத்திலே என்னை உயர்ந்த சாதிக்காரனாக ஆக்கவில்லை. நான் இன்னமும் சமுதாயத்திலே ஒரு தீண்டப்படாதவன் ஆகவே இருக்கிறேன்."

- தோழர் ‪#‎அம்பேத்கர்‬
[பக்கம்:178, தொகுதி:5]

மலேயா நாட்டு சுற்றுப்பயணம் - பெரியார்எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நன்மைகள்

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்தமற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டு பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரஸ்தாபங்க ளைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும் ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறைபட்டு தனது கொள்கைகளுக்கும் தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும் ஊக்கமும் ஏற்பட்டுவிட்டதென்றும் யோக்கியமான எவ்வித அரசியல்காரர்களும் மத இயல்புக்காரர்களும் அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்றும் சுயமரியாதையும் சமத்துவமும் அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சியமென்றும் ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடாதென்று தான் உறுதியாய் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.

குறிப்பு : 20-12-1929ஆம் நாள் ஐக்கிய இந்திய சங்கத்தாரின் வரவேற்புப் பத்திரத்திற்கும் பினாங்கு தமிழ்மக்கள் கழகத்தாரின் வரவேற்புப் பத்திரத்திற்கும் மறுமொழியாக நன்றி கூறி பேசியதன் சுருக்கம்.

நாங்கள் இங்கு எந்த கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ ஆதரவையோ உண்டாக்க வரவில்லை யென்றும் மற்றவர்களைப் போல் பணம் வசூல் செய்து மூட்டைக் கட்டிப் போக வரவில்லையென்றும் உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோமென்றும் அதற்கு தக்க உதாரணங் கள் காட்டி பேசினார்.

குறிப்பு : 20-12-1929 ஜனாப் முகமது ராவுத்தர் அவர்களின் மாளிகையில் விருந்துக்குப் பின் மலாய் நாட்டிற்கு வந்ததின் பேச்சு சுருக்கம்.

கடவுளைப் பற்றியோ, சமயங்களைப் பற்றியோ பிரசாரம் செய்வது தனது வேலை அல்லவென்றும் தான் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களுக்கு அதன் எதிரிகள் தக்க சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாமல் பயங்காளித்தனமாயும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியும் கடவுள்கள், மதங்கள், வேதங்கள், புராணங்கள் என்பவைகளைக் கொண்டு வந்து முட்டுக் கட்டையாய்ப் போடுவதால் அவைகளை எடுத்து எறிந்து விட்டு முன் செல்ல வேண்டிய நிர்பந்தம் தனக்கு ஏற்படுகின்றதென்றும் ஆனாலும் கடவுளும், உண்மையான மதமும் உண்மையான வேதமும் கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டிய தில்லை என்றும் சொன்னார்.

குறிப்பு : 20-12-1929 கப்பல் பிரயாணிகளின் குறை நிவாரணச் சங்கத் தலைவர் திரு. ஏ. சிங்காரம் பிள்ளை, காரியதரிசி எம். துரைராஜு, கப்பல் பிரயாண இன்ஸ் பெக்டர் எம்.எம்.எஸ். முதலியார் ஆகியோரின் ஆலோசனைக்கு மறுமொழியாக பேசியதன் சுருக்கம்.

குறிப்பு : 20, 21 . 12. 1929 பினாங்கு சொற்பொழிவு.

கடவுள் உண்டா?

இடையில் ஒரு மலையாளி தங்கள் நாட்டைப்பற்றி இங்கு பேசக் கூடாது என்று அக்கிராசனரைக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னவுடன் ஆவேசத்துடன் மலையாளச் சங்கதிகள் ஒன்று விடாமல் சொல்லி இது பொய்யா? இது பொய்யா? என்று கேட்டு, இது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? மற்றும் பல விஷயங்களையும் விளக்கி இதற்காகத் தான் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்றும் சொல்லி அமர்ந்தார்.

குறிப்பு : 21-12-1929 ஈபோ இந்தியர்களால் கொடுக்கப்பட்ட வரவேற்பில் பேசிய சொற்பொழிவின் இடையில் பேசியது.

தோழர் பெரியார்,
குடி அரசு - சொற்பொழிவு - 02.02.1930

Saturday, July 30, 2016

புனிதப்பசு எனும் கட்டுக்கதை - டி. என். ஜாபண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” புத்தகத்தின் ஆசிரியருமான டி. என். ஜா உடனான நேர்காணல்

புகழ் பெற்ற பண்டைய இந்திய வரலாற்று நிபுணர் த்விஜேந்திர நாராயண் ஜா தனது 25 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி வாழ்க்கையில் இந்துத்துவாவின் பல கட்டுக் கதைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். பண்டைய இந்திய இலக்கியங்களையும் தொல்லியல் ஆதாரங்களையும் பயன்படுத்தி, இந்துத்துவா பிரச்சாரங்கள் பெரும்பாலும் பொய்யான அடிப்படைகளில் உருவாக்கப்பட்டவை என்று அவர் நிரூபிக்கிறார். “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” என்ற அவரது புத்தகம் மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவு பழக்கங்களின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை காட்டுகிறது. அவர் பண்டைய இந்தியாவின் பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் பற்றி விரிவான ஆய்வுகளை செய்திருக்கிறார்.

பசுக் கொலை பற்றிய சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை செயல்படுத்துவதாக மத்திய பிரதேச அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த சட்டம் கொடுமையானது என்று பல பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இந்திய பாரம்பரியத்தில் ‘புனித’ பசு எனும் கட்டுக்கதையைப் பற்றியும் சங்க பரிவார் அதனைப் பயன்படுத்தி நாட்டை மத ரீதியில் பிளவு படுத்துவதைப் பற்றியும் ஜா விளக்குகிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

கேள்வி :

‘இந்திய துணைக்கண்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கத்தை முஸ்லீம்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள்’ என்ற கருத்தாக்கத்தை உங்கள் புத்தகம் “புனிதப்பசு எனும் கட்டுக்கதை” உடைக்கிறது. இந்த முடிவுக்கு வருவதற்கு நீங்கள் பயன்படுத்திய முக்கிய ஆதாரங்கள் என்ன?

பதில்:

கடந்து நூறு ஆண்டுகளாக பசுவின் புனிதம் என்பது இந்தியாவில் ஆய்வுக்கான விவாதமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மதவாதிகளும் அடிப்படைவாத நிறுவனங்களும் ‘பசுவைக் கொல்வதும் அதன் இறைச்சியை சாப்பிடுவதும் இஸ்லாமை பின்பற்றுபவர்களால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் முஸ்லீம்களை மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இந்திய சமய இலக்கியங்களிலிருந்து உணவுப் பழக்கங்கள் குறித்த தரவுகளை திரட்டி தருவதுதான் இந்த கட்டுக்கதையை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழி. அதன்படி, நான் பார்ப்பன, புத்த மத மற்றும் ஜைன மத நூல்களிலிருந்து பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ‘இஸ்லாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள்’ என்பதை நிரூபித்திருக்கிறேன்.

கேள்வி :

பண்டைய இந்தியாவில் பசுக்கள் உணவுக்காகவும் பலியாகவும் பயன்பட்டதற்கான சில உதாரணங்களை கொடுக்க முடியுமா?

பதில்:

வேத காலத்தில் விலங்குகளை பலி கொடுப்பது பொதுவான பழக்கமாக இருந்தது. ‘எந்த பொது யாகத்துக்கும் முன்பு நடத்தப்படும் அக்னதேயா என்ற சடங்கில் ஒரு பசு கொல்லப்பட வேண்டும்’ என்பது விதிமுறையாக இருந்தது. மிக முக்கியமான பொது யாகமான அஸ்வமேதாவில் 600க்கும் மேற்பட்ட விலங்குகளும் பறவைகளும் கொல்லப்பட்டன. அதன் நிறைவு 21 பசுக்களின் பலியால் குறிக்கப்பட்டது. ராஜசூயா, வாஜ்பேயா போன்ற யாகங்களின் முக்கிய பகுதியான கொசாவாவில் மாருதுகளுக்கு ஒரு பசு பலி கொடுக்கப்பட்டது. கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளை கொல்வது இன்னும் பல யாகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது.

வேத நூல்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களில் உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு பிற்கால வேத நூல் “பசு நிச்சயமாக ஒரு உணவுதான்” என்று எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் சொல்கிறது. இன்னொரு வேத நூலில் யாக்ஞவல்க்யர் பிடிவாதமாக பசுவின் மென்மையான இறைச்சியை சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகால மற்றும் வேத காலத்துக்கு பிந்தைய நெறிமுறை நூல்களின் படி, விருந்தாளிக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பசுவை கொல்வது அவசியமானதாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வல சடங்குகளின் ஒரு பகுதியாக பார்ப்பனர்கள் உண்பதற்கு பசுவின் இறைச்சி வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைக்கும் ஆதாரங்களில் சிலவற்றை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பண்டைய இந்திய நூல்கள், பசுவை பலிக்காகவும், உணவுக்காகவும் கொல்வது பற்றி ஏராளமான குறிப்புகளை தருகின்றன.

கேள்வி:

நீங்கள் இந்தக் கருத்தை விளக்குவதற்கு பழங்கால இந்திய ஆதாரங்கள் பலவற்றை பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால், இடைக்கால அல்லது நவீன இந்தியாவில் பசுவை உணவுப்பொருளாக பயன்படுத்துவது குறித்த மற்ற “இந்து ஆதாரங்கள்” இருக்கின்றனவா?

பதில்:

வேதத்துக்கு பிந்தைய காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பாரம்பரியம் தொடர்ந்தது குறித்து கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன. தர்மசாஸ்திர நூல்களில் மிகவும் செல்வாக்கு படைத்த மனுஸ்மிரிதி (200 கிமு-கி.பி. 200), பட்டினியிலிருந்து தப்பிக்க மாட்டிறைச்சியையும் நாய் இறைச்சியையும் சாப்பிட்ட மிகவும் ஒழுக்கமான பார்ப்பனர்கள் பற்றிய உதாரணங்களை தருகிறது. யக்ஞவல்க்யரின் ஸ்மிரிதி (கி.பி. 100-300) கற்றறிந்த பார்ப்பனர்களை (ஷ்ரோத்ரயா) பெரிய மாடு அல்லது ஆடு அடித்து வரவேற்க வேண்டும் என்று விதித்துள்ளது. மகாபாரத பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்பதை நினைவு கூரலாம். தினமும் 2,000 பசுக்கள் வெட்டப்பட்டு அவற்றின் இறைச்சி தானியங்களுடன் பார்ப்பனர்களுக்கு வினியோகிக்கப்பட்டதை அது குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லைதான்.

‘பரத்வாஜ முனிவர் ஒரு கொழுத்த கன்றுக்குட்டியை கொன்று ராமனை வரவேற்றார்’ என்று சொல்லப்படுகிறது. மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் காணப்படும் இந்த குறிப்புகள் மதசார்பற்ற இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசுகின்றன. பல இலக்கிய படைப்புகளிள் (காளிதாசர், பாவபுத்தி, ராஜஷேகரா, ஸ்ரீஹர்ஷா போன்ற பெயர்களை குறிப்பிட வேண்டும்) மாட்டிறைச்சி சாப்பிடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேள்வி:

பசுவின் புனிதம் என்ற தொன்மம் இந்துக்களின் மனத்தில் எப்படி தோன்றியது? உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு எதிராக பசுவின் புனிதம் பற்றிய கருத்துக்கள் நிலவிய நிகழ்வுகளும் கால கட்டங்களும் இந்திய வரலாற்றில் இருக்கின்றனவா? பழங்கால இந்தியாவில் பசுவை மத ரீதியாகவும் இந்து மதத்தின் புனித சின்னமாகவும் பார்க்கும் பாரம்பரியங்கள் இருந்தனவா?

பதில்:வேத காலத்தில் பசு புனிதமானதாக இருந்தது என்று பல அறிஞர்கள் நம்புகிறார்கள். அத்தகைய வலியுறுத்தல்கள் அதர்வ வேதத்தில் வரும் அக்ன்யா (கொல்லப்படக் கூடாது என்று பொருள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டவை. வேதப்பசு தொடப்படக்கூடாது என்று இருந்தால் அது யாகத்துக்கான கட்டணமாக (தக்ஷிணை) பார்ப்பனர் பெற்ற பசுவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புத்தமும் சமணமும் விலங்கு பலியையும் கால்நடைகளை கொல்வதையும் எதிர்த்தன. ஆனால் அவர்களின் அதிகார பூர்வ இலக்கியங்கள் கூட பசுவை ஒரு புனித விலங்காக குறிப்பிடவில்லை.

புனிதப்பசு என்ற கருத்தாக்கம் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் இந்திய சமூகம் படிப்படியாக நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாறும் போது சட்டம் இயற்றுபவர்கள் மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடை செய்ய ஆரம்பித்தார்கள். அது மிகப்பெரிய சமூக கலாச்சார மாற்றத்துக்கு வழி வகுத்தது. இதிகாசங்களிலும், புராணங்களிலும் கலியுகம் என்று விவரிக்கப்படும் மாற்றத்தின் இந்தக் கட்டம் சமூக மரபுகளிலும் பழக்கங்களிலும் பல மாற்றங்களையும் மாறுதல்களையும் கண்டது. முந்தைய பல பழக்கங்கள் கலியுகத்தில் தடை செய்யப்பட்டவையாக பார்ப்பன மத நூல்கள் பேச ஆரம்பித்தன. இந்த பழக்கங்கள் கலிவர்ஜ்யாக்கள் என்று அழைக்கப்பட்டன. இது தொடர்பான நூல்கள் கலியுகத்தில் பசுக்கொலை தடை செய்யப்பட்டது என்று குறிப்பிடுகின்றன.

பசு கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் ‘தீண்டத்தகாத’ சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. ஆனால், சில தர்மசாஸ்திர நூல்கள் இந்த செயல்களை மாறுபட்ட நடத்தைகள் என்ற அளவிலேயே பார்க்கின்றன என்பது கவனத்துக்குரியதாகும். தர்மசாஸ்திரங்கள் என்ன சொல்லியிருந்தாலும், மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்ததை ஒதுக்கி விட முடியாது. 19ம் நூற்றாண்டில் கூட சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத” ஆச்சார இந்துக்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி பேசியிருக்கிறார். இன்று கூட, கேரளாவில் 72 சமூகங்கள் செலவு அதிகமாகும் ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்லப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்துத்துவா சக்திகள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளும்படி அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்றன.

இவ்வளவு இருந்தும், உபனிஷத சிந்தனைகளில் வளர்ந்த அகிம்சை தத்துவம், புத்த ஜைன உலகப் பார்வைகளில் அதன் முனைப்பான தாக்கம், வைணவ மதத்தில் அதற்கு இருந்த மையப் பங்கு ஆகியவை கொல்லாமை பற்றிய கருத்துக்களை வளர்த்தன. விவசாய சமூகத்தில் அதற்கு இருந்த பொருளாதார மதிப்பின் காரணத்தால் பசு சிறப்பான முக்கியத்துவம் பெற்றது. பசுக்களை பார்ப்பனர்கள் தக்ஷிணையாக பெறுவதால் அவை கொல்லப்படுவதை விரும்பவில்லை.

கேள்வி:

பசுக்கொலை இந்தியாவில் எப்போதிருந்து அரசியல் பிரச்சனையாக மாறியது? இந்த விஷயம் தொடர்பாக ஏதாவது வரலாற்று இயக்கம் இருந்திருக்கிறதா? பசுவின் “உற்பத்தி செய்யப்பட்ட புனிதம்” அரசியல் ஆள் சேர்ப்புக்காக பயன்படுத்தப்பட்டதற்கான உதாரணங்களை நீங்கள் சொல்ல முடியுமா?

பதில்:

காலப்போக்கில் பசு ஆட்சியாளர்களின் கையில் ஒரு அரசியல் கருவியாக மாறியது. முகலாய பேரரசர்கள் (எடுத்துக்காட்டாக, பாபர், அக்பர், ஜஹாங்கிர் மற்றும் அவுரங்கசீப்) ஜைன அல்லது பார்ப்பனர்களின் பசுவின் மீதான மரியாதை, வழிபாடு போன்ற உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பசுக் கொலையின் மீது அளவான தடையை விதித்தனர். ‘பசுவையும் பார்ப்பனரையும் பாதுகாப்பதற்காக மண்ணில் அவதரித்த கடவுளாக’ கருதப்படும் ஷிவாஜி, “நாங்கள் இந்துக்கள், இந்த நாட்டின் முறையான உரிமையாளர்கள். பசுக் கொலையையும் பார்ப்பனர்கள் அடக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுக்கு ஏற்பில்லாத ஒன்று” என்று அறிவித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், 18ம் நூற்றாண்டின் இறுதியில் பசு அரசியல் ஆள் திரட்டும் கருவியாக பயன்பட ஆரம்பித்தது. முறையான பசு பாதுகாப்பு இயக்கம், பஞ்சாபில் சுமார் 1870ல் சீக்கிய குக்கா (அல்லது நாம்தாரி) பிரிவினரால் தொடங்கப்பட்டு, 1882ல் தயானந்த சரஸ்வதி முதல் கோரக்ஷினி (பசு பாதுகாப்பு) சபையை ஆரம்பித்த போது வலுவாக்கப்பட்டது. பலதரப்பட்ட மக்களை முஸ்லீம்களின் பசுக் கொலை பழக்கத்தை எதிர்த்து ஒன்று திரட்டுவதற்கு பசு ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டது.

இது 1880களிலும் 1890களிலும் பல மதக் கலவரங்களுக்கு வழி வகுத்தது. அதற்கு முன்பே பசுக் கொலை பற்றிய கருத்துக்கள் வலுவாகி வந்திருந்தாலும், 1888ல் வடமேற்கு மாநிலங்களுக்கான உயர் நீதி மன்றம் ‘பசு ஒரு புனிதமான விலங்கு இல்லை’ என்று தீர்ப்பு சொன்ன பிறகு பசு பாதுகாப்பு இயக்கம் தீவிரமடைந்தது. பசுக் கொலை பல இந்து-முஸ்லீம் கலவரங்களுக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக அசம்கர்க் மாவட்டத்தில் 1893ல் நடந்த கலவரங்கள். இந்த கலவரங்களில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், 1912-1913ல் அயோத்தியை வன்முறை உலுக்கியது. சில ஆண்டுகள் கழித்து 1917ல் ஷாஹாபாத் பேரழிவு ஏற்படுத்திய மத பெருந்தீயை எதிர் கொண்டது.

சுதந்திர இந்தியாவில் கூட பசுக் கொலை மீண்டும் மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயமாக அரசியல் வானில் உருவெடுத்தது. 1966 இல், சுதந்திரம் அடைந்து சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா இந்திய மதவாத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேசிய அளவில் பசுக் கொலையை தடை செய்யும் படி லட்சக்கணக்கான மக்களை திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அது இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு வன்முறையில் முடிந்தது, குறைந்தது எட்டு பேரின் இறப்புக்கும் இன்னும் பல பேர் காயமடையவும் வழி வகுத்தது. ஏப்ரல் 1979 இல், மகாத்மா காந்தியின் ஆன்மீக சீடர் என்று கருதப்படும் ஆச்சார்ய வினோபா பாவே பசுக் கொலையை தடை செய்ய மத்திய அரசை கோரி உண்ணா விரதம் இருந்தார்.

குழப்பவாத மற்றும் அடிப்படைவாத சக்திகள் பசுவை இந்துக்களின் மத அடையாளமாக மாற்றியிருக்கின்றனர். வேத காலத்திலும் சரி, அதைத் தொடர்ந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத மரபுகளின் அடிப்படையிலும் சரி “புனித” பசு எல்லா காலங்களிலும் புனிதமாக இருக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஆரம்ப கால இந்தியாவில் அதன் இறைச்சியும் மற்ற இறைச்சி வகைகளும் வழக்கமான உயர்தர உணவின் ஒரு பகுதியாக இருந்தன.

கேள்வி:

மாட்டிறைச்சி சாப்பிடுவது வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழக்கமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? அத்தகைய அங்கீகரிப்புகளும் எதிர்ப்புகளும் வரலாற்று ரீதியாகவே வளர்ந்திருக்க வேண்டும்.

பதில்:

தென் இந்தியாவில் சில பகுதிகளில் மாட்டிறைச்சி-உண்ணுவது வழக்கமாக இருக்கிறது, ஆனால் அதை பொதுமைப்படுத்த முடியாது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பழங்குடியினரும் தலித்துகளும் முஸ்லீம்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். வட கிழக்கு இந்தியாவின் மலை சமூகங்களும் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள். ஆனால் இதையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது. முன்னாள் தெற்கு பீகாரின் பெரும்பான்மை பழங்குடியினர் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை.

கேள்வி:

நாம் பழங்குடி மக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்துவர்களை விட்டு விட்டால் கூட ஒரு கணக்கீட்டின் படி இந்துக்களில் 40 சதவீதம் பேர் இன்று மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இந்தியா முழுவதும் வசிக்கும் தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். இது மிகவும் செலவு குறைவாக கிடைக்கும் இறைச்சி. மத்திய பிரதேச அரசு சமீபத்தில் பசுக் கொலையை மட்டுமின்றி மாட்டிறைச்சி சாப்பிடுவதையும் தடை செய்துள்ளது. அந்த தடை கொடுமையானது என்று பலர் கருதுகிறார்கள் அந்த சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

எந்த புத்திசாலி இந்தியனும் தனது கால்நடையை கொல்ல மாட்டான் என்பதே எனது கருத்து. அப்படி அவன் கொன்றால் அந்த சட்டத்தின் கீழ் அவன் தண்டிக்கப்படலாம். விலங்கு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பசுவுக்கு மட்டும் ஏன் சிறப்பு நிலைமை? சங்க பரிவார் உண்மையிலேயே பசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் உறுதியாக இருந்தால், பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க என்ன செய்திருக்கிறது? பெருநகரங்களில் பசுக்கள் பணக்காரர்களின் ஆடம்பர கார்களுக்கும் ஏழைகளின் தள்ளு வண்டிகளுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துகின்றன. தூக்கி எறியப்பட்ட சாப்பிட தகுதியற்ற உணவுப் பொருட்களையும், நாற்றமெடுக்கும் பிணங்களையும் கொண்ட குப்பை குவியல்களில் அவை மேய்கின்றன.

வயதான, பலவீனமான, பட்டினி கிடக்கும் பசுக்களை கொல்வதையும், ஏழைகளின் புரதமான அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதையும் தடை செய்வது இயற்கைக்கு எதிரானது. உணவு தேர்வுகளை நெறிப்படுத்தும் சட்டம் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானதும் கொடுமையானதும் ஆகும். ஜன சங்க (இப்போதைய பிஜேபி) தத்துவார்த்த தலைவர் கே ஆர் மல்கானி இயற்கையாக இறந்த மாட்டின் இறைச்சியை சாப்பிடுவதை எந்த தயக்கமும் இல்லாமல் ஆதரித்தார் என்பதை சங்க பரிவாரத்துக்கு நினைவு படுத்த வேண்டும்.

கேள்வி:

இந்தியாவில் பசுக் கொலை எதிர்ப்பு பற்றிய கருத்தாக்கத்தின் புத்துயிர்ப்பு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? பெரும்பாலான பிஜேபி ஆட்சி புரியும் மாநிலங்களில் இந்த பிரச்சனை அரசியல் அணி திரட்டலுக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்துக்கு வந்தவுடனேயே பசுக் கொலை தடைச் சட்டத்தை கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக அந்த அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன.

பதில்:

சங் பரிவார் நாட்டின் அரசியலை மத ரீதியிலானதாக்கியிருக்கிறது. பசுக் கொலை எதிர்ப்பு இயக்கத்தின் புத்துயிர்ப்பு இந்த நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றதாகும்.

________________________________________________________

– நன்றி: – அஜய் ஆஷிர்வாத் மஹாபிரஷாஸ்தா (பிரண்ட்லைன்)

தமிழாக்கம்: அப்துல்

தகவல் எடுத்தது வினவு தளம்.


போபாலில் ஒரு காட்சி. குப்பை குவியல்களை கிளறி உணவைத் தேடும் இது போன்ற பசுக்களை பராமரிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.-----------------------------------------------

அரியானாவில் மாட்டை உரித்த ‘குற்றத்துக்காக’ ஐந்து தலித்துகளை எரித்துக் கொன்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

Thursday, July 28, 2016

குஜராத்தில் மோடியின் கனவுகளுக்கு சாவு மணி அடிக்கப்படுகிறது!

குஜராத் மாநிலமெங்கும் இந்துத்வாவுக்கு எதிராக தலித்கள் பேரணி! மோடியின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இனி கட்டிடம் பொல பொல வென உதிர்வதை நாம் காணத்தான் போகிறோம்!


இந்து மதம் அழியப் போவது காவிகளின் வன்முறை நடவடிக்கைகளால்!இந்து மதம் அழியப் போவது காவிகளின் வன்முறை நடவடிக்கைகளால். இஸ்லாமியர்கள் வாழ்வது மறுமைக்காக... அவர்களின் பொறுமையை சோதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல..."

பல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்!

பல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்!

'முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்' என்ற பொய்யை பல காலமாக நாம் படித்து வருகிறோம். ஆனால் விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் உடைத்தெறிகிறது.

1.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் முகமது அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.

2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

3. தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகம் ஆற்காடு நவாபு அவர்களின் சொந்த வீடாகும். அதனையும் தானமாக தந்துள்ளார்.

4. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளம் ஆற்காடு நவாபால் தானமாக அளிக்கப்பட்டது. வருடா வருடம் இந்த கோவிலில் அவரை அழைத்து முதல் மரியாதை இன்று வரை கொடுத்து வருகின்றனர்.

5. தற்போதுள்ள மெட்ராஸ் யுனிவர்சிடியும் ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

தங்களின் சொந்த வீட்டையும் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்களின் சொத்துக்களையும் இந்து கோவில்களுக்கும் அரசு கட்டிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தானமாக கொடுத்தது முஸ்லிம்கள். ஆனால் நமது வரலாறு பாடத் திட்டங்களில் சொல்லிக் கொடுப்பதே நேரெதிராக. விஜய் டிவியின் டிடி தற்போது ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்களே இது.

ராம கோபாலன்களும், ஹெச் ராஜாக்களும் இந்த உண்மைகளை எல்லாம் படித்து தெளிவு பெறுவார்களாக! தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் என்பதனையும் இந்துத்வாவாதிகளுக்கு இதன் மூலம் சொல்லிக் கொள்கிறோம்.

கோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....


கோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....

எனது பாஸூக்கு பாகிஸ்தானிகளிடம் நல்ல அபிப்ராயம் இல்லை. இந்தியர்களை உயர்வாக நடத்துவார். பாகிஸ்தானிகளை எந்த வகையிலாவது மட்டம் தட்டுவார். சவுதி முழுக்க பொதுவாக இதுவே நிலை. எனக்கு கீழும் முன்பு மூன்று பாகிஸ்தானிகள் வேலை செய்துள்ளனர். அவர்களின் வலியையும் அப்போது உணர்ந்திருக்கிறேன். இந்தியாவையும் இந்தியர்களையும் உயர்வாகவே மதிப்பர். நாம் நினைப்பது போல் இந்தியாவை அழிக்க எந்த நேரமும் அதே சிந்தனையிலேயே உள்ளவர்கள் பாகிஸ்தானிகள் என்ற எண்ணம் தவறு. அந்த நாட்டில் உள்ள நிச்சயமற்ற அரசியல் நிலவரங்களை சமாளிக்கவே அவர்களுக்கு 24 மணி நேரம் பத்தாது. ஆனால் ஒரு சில பாகிஸ்தானிகளுக்கு இந்தியா என்றாலே எரிச்சல் வரும். இவ்வாறு அவர்கள் நாடு பிரச்னையில் சிக்கித் தவிப்பதற்கு இந்தியாவே காரணம் என்று இன்றும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் பல பாகிஸ்தானியரை பார்த்துள்ளேன். அது மாதிரி எண்ணம் கொண்ட ஒரு பாகிஸ்தானி என்னிடம் அகப்பட்டான். அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு முறை பிரதமராக மன்மோகன் சிங் ரியாத் வந்த போது நான் ஒரு வாடகை வண்டியில் ஒரு வேலையாக சென்றேன். அந்த வண்டியின் டிரைவர் நீண்ட தாடியுடன் தாலிபான்கள் தோற்றத்தில் இருந்தார். அப்போது மேம்பாலங்களில் இந்திய கொடியும், சவுதி கொடியும் ஒன்றாக பல இடங்களில் பறந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் 'ஒரு காஃபிர் தலைவருக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கிறார்கள் பார்தாயா! பாகிஸ்தானிய தலைவர்கள் வந்தால் இந்த அளவு மரியாதை செய்வதில்லை இவர்கள்' என்று கோபப்பட்டார்.

'உங்கள் தலைவருக்கு மரியாதை செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை ஆராயாமல் எனது நாட்டு தலைவருக்கு மரியாதை செய்வதை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்?

'நீங்கள் முஸ்லிமா?'

'ஆம். நான் முஸ்லிம்தான்'

'பிறகு ஒரு காஃபிருக்கு சப்போர்ட் பண்ணுகிறாயா? இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்கள் தினமும் கொல்வது உங்களுக்கு தெரியாதா?'

'எனது தாய் நாட்டில் அவ்வப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்னை வருவது எனக்கும் தெரியும். இணையத்தை தினமும் பார்வையிடுகிறேன். இதை விட அதிகமாக பாகிஸ்தானில் நடக்கிறதே. தொழும் பள்ளியில் கூட குண்டு வைக்கிறீர்களே! அதற்காக நீங்கள் உங்களின் நாடான பாகிஸ்தானை வெறுக்கவில்லையே'

'இந்துக்களை பற்றி உனக்கு தெரியாது. பட்டால்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்'

'தீவிரவாத இந்துக்களை எப்படி சமாளிப்பது என்பது இந்திய முஸ்லிம்களுக்கும் தெரியும். அது பற்றிய கவலை உனக்கு வேண்டாம்'

அதற்குள் எனது இடம் வரவே இறங்கிக் கொண்டேன். என்னை மனதுக்குள் திட்டிக் கொண்டே அந்த பாகிஸ்தானி வண்டியை வேகமாக எடுக்க ஆரம்பித்தான். நானும் சிரித்துக் கொண்டே எனது இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன். நமது நாட்டில் பல குழப்பங்கள் இருக்கலாம். அதனை ஒரு எதிரி நாட்டைச்சேர்ந்த வெறுப்பை உமிழும் ஒருவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது இல்லயா....

ஒவ்வொரு நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டு எனது வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

அரவிந்த் கெஜ்ரிவால் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் விடுக்கும் செய்தி!

அரவிந்த் கெஜ்ரிவால் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் விடுக்கும் செய்தி!

"பாரத தேசமெங்கும் நிலைமை எவ்வாறு செல்கிறது என்பதைப் பற்றி மோடிஜிக்கும் நாட்டு மக்களுக்கும் சில வார்த்தைகள் இந்த காணொளி மூலம் சொல்லக் கடமை பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து நிரூபணம் இல்லாமல் விடுவிக்கப்படுகிறார்கள். எங்கள் மேல் மோடி மிகவும் கோபத்தில் இருக்கிறார். டெல்லியில் நாங்கள் சிறந்த முறையில் ஆட்சி செய்கிறோம். மேலும் ஹரியானா, பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. இதை எல்லாம் பார்த்த மோடி அவர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இதன் காரணமாகவே என்ன செய்வதென்றே தெரியாமல் தாறுமாறாக சட்டத்தை உபயோகப்படுத்துகிறார். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு செயல்படுவது அந்த நாட்டுக்கு மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என்பதை ஏனோ மோடி உணரவில்லை.

நமது அண்டை நாடான நேபாள் முன்பு நமக்கு நண்பனாக இருந்தது. மோடியின் கைங்கரியத்தால் இன்று நமக்கு எதிராக திரும்பியுள்ளது.

பாகிஸ்தானோடு கூடி குலாவுகிறீர்கள்: சில நாள் கழித்து அங்கும் பிரச்னை ஏற்பட்டு முறுகல் நிலையை அடைகிறீர்கள். இந்த இரட்டை நிலை யாரை திருப்திபடுத்த?

இந்திய நாடு முழுவதும் மோடியின் கட்டுப் பாட்டில் வர வேண்டும் அல்லது பிஜேபியின் கைகளில் செல்ல வேண்டும் என்று மோடி நினைக்கிறார். இது எல்லோரும் நினைப்பதுதான். அவ்வாறு நாடு முழுக்க அவர் கையில் வர வேண்டுமானால் நாங்கள் டெல்லியில் செயல்படுவது போல் அது மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு முழு அதிகாரத்தையும் கொடுப்பார்கள். மோடி அவரது மந்திரிகள் அவரது கட்சியான பிஜேபி அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இன்று வரை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. எந்த துறையை எடுத்தாலும் முன்னேற்றம் என்பதே இல்லை. வியாபாரிகள், விவசாயிகள், தலித்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் மோடியின் ஆட்சியில் வெறுப்பில் உள்ளனர். இனி இவர்களால் என்ன முயன்றாலும் மக்களுக்கு நன்மை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே மற்றொரு வழியான எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியை அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மோடி முயற்சிக்கிறார். காங்கிரஸிலிருந்து அனைத்து கட்சிகளின் வாயையும் மோடி அடைத்து விட்டார். அனைத்தையும் ஒரு வழி பண்ணியாகி விட்டது. மீதி இருப்பது ஆம் ஆத்மி பார்ட்டி. எனவே எங்களையும் அவருக்கு பணிய வைக்க எதை எல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து பார்க்கிறார்.

எனவே ஆம் ஆத்மி பார்ட்டி எம்எல்ஏக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உஙவினர்களிடமும் சொல்லி விடுங்கள். வருங்காலம் மிகக் கொடூரமான நாட்களாக இருக்கும். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மோடியும் அமீத்ஷாவும் எந்த அளவும் கீழிறங்க தயங்க மாட்டார்கள். என்னையும் எனது கட்சிக் காரர்களையும் கொல்வதற்கும் தயங்க மாட்டார்கள். அந்த அளவு வெறி கொண்டு அலைகிறார்கள்.எனவே சிறைக்கு செல்வதோடு அல்லாமல் அங்கு உங்களுக்கு எதுவும் நடக்கலாம். உங்கள் உயிரும் பறிக்கப்படலாம். எனவே அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பவர்கள் என்னோடு இருங்கள். பயந்த சுபாவம் உடையவர்கள் தாராளமாக வெளியில் சென்று விடலாம். இதுதான் எனது கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது.

ஜெய் ஹிந்த்'

Wednesday, July 27, 2016

மாட்டுக் கறி வைத்திருந்ததாக இஸ்லாமிய பெண்கள் தாக்குதல்!மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக இரண்டு முஸ்லிம் பெண்களை இந்துத்வா வெறியர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் வைத்திருந்ததோ எருமையின் இறைச்சி. பாராளுமன்றத்தில் மாயாவதியும் இதனை பெரும்' பிரச்னையாக்கியுள்ளார்.

இந்துத்வா வெறியர்கள் தாக்கப்படும் போது காவல் துறையும் அங்கு இருந்துள்ளது. பொது மக்கள் பலரும் தாக்குதலை தடுக்காமல் சம்பவத்தை பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி அரசு இன்னும் மூன்று ஆண்டுகளில் நமது நாட்டை சோமாலியா ரேஞ்சுக்கு மாற்றி விட்டுத்தான் ஓய்வார்கள் போலிருக்கிறது.

காஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா?

காஞ்சி சங்கரராமனைக் கொன்றது மாமிசம் சாப்பிட்டவரா?

ஹானஸ்ட் மேன்!

//Islamic State Fighters சிரியன் army யை சேர்ந்த 85 பேரை கொன்று அதில் 50 பேரின் தலைகளை கொய்து Raqa city யில் காட்சிக்கு வைத்தனாராம்! எப்படி இவர்கள் இவ்வளவு ஈவு இரக்கம் இல்லாமல் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. தினமும் ஆடு வெட்டி வெட்டி இரத்தத்தை பார்த்து பார்த்து இரக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதோ?//
இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. உண்மை பின்னரே தெரிய வரும்.

மற்றபடி ஆட்டை அறுத்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம் கொலைகளை செய்வார்கள் என்று இல்லை. மாமிசமே சாப்பிடாத பவுத்த மதத்தை சார்ந்தவர்கள்தான் இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றனர். மாமிசம் சாப்பிடாத இந்துக்கள்தான் குஜராத்தில் கர்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை வெளியில் இழுத்து தீயில் இட்டனர். அதனை கேமராவுக்கு முன்னால் சந்தோஷமாக சொல்லியும் காட்டினர். காஞ்சியில் சங்கரராமனைக் கொன்றவர்கள் சைவப்பிரியர்களே!

//கேட்கிறவன் முட்டாளாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். பேசாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விஞ்ஞான பாடங்களை எடுத்துவிட்டு இந்த குரானை பாடமாக வைத்து விடலாம் போல இருக்கிறதே!//

குர்ஆன் பல விஷயங்களை பேசுகிறது. வரலாறு, அறிவியல் என்று பல துறைகளை தொடுகிறது. இதில் ஏதாவது ஒரு வசனம் இன்றைய அறிவியலுக்கு முரண்படுகிறது என்று உங்களால் காட்ட முடியுமா? குர்ஆனே சவால் விடுகிறது.

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
4 : 82 - குர்ஆன்

இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

மேலும் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், திரு மந்திரத்தை அருளியவர்கள், ரிக்,யஜீர், சாம,அதர்வண வேதத்தை அருளியவர்கள் அனைவரையும் நானும் மதிக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று முன்பு இறைச் செய்தியாகக் கூட வந்திருக்கலாம். இது போன்ற வேதங்களில் புராணங்களில் மனிதக் கருத்துகளும் புகுந்து விட்டதால் இதற்கு முன் அருளிய வேதங்களையெல்லாம் உள்ளடக்கி உலக முடிவு நாள் வரைக்கும் வரக் கூடிய மக்களுக்கு குர்ஆனை இறைவன் வழங்கினான். எனவே தான் மற்ற வேதங்களை நான் மதிப்பதோடு பின் பற்றத் தக்கதாக குரஆனைப் பார்க்கிறேன்.

//அது சரி, மேற்கத்திய கல்வி கூடாது என்று கூறும் போகோ ஹராம் என்ற அமைப்பின் ஒரிஜினல் தலைவர் முஹம்மத் யூசுப் என்பவன் தனது followers க்கு “”"பூமி தட்டையானது”"” என்று போதித்தானாம். இது எப்படி இருக்கு?//

யாரும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் குர்ஆன் பூமியை தட்டை என்று எங்கும் சொல்லவில்லை. இது பற்றி நான் முன்பு விளக்கியும் இருக்கிறேன்.

//Secularism என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்கள் இந்துக்கள்தான். அதனால்தான் கோவா மாநிலத்தில் இன்றைக்கு டெபுடி முதல்வராக இருப்பவர் Francis D ‘souza என்ற கிறிஸ்தவர் ஆவார்.//

அதனால்தான் 'இந்தியாவை சேர்ந்த அனைவரும் இந்துக்களே' என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். இப்படி சொல்பவர்களைத்தானே பதவியிலும் அமர்த்துவீர்கள்.

//அது மட்டுமா? முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் வந்தேறிகளும் (=immigrants ) தொழுவதற்காக ஒரு இந்து அரசனால் கேரளாவில் கட்டப்பட்டதுதான் “சேரமான் மசூதி” இது மெக்காவிற்கு அடுத்த 2 வது மிகப் பழமையான மசூதி ஆகும்.//

இந்தியாவின் வந்தேறிகள் யார் என்பது 90 சதமான இந்தியர்களுக்குத் தெரியும். கி.வீரமணியிடம் கேட்டால் ஆதாரங்களோடு பட்டியலிடுவார். அடுத்து கேரளாவில் இருக்கும் சேரமான் பள்ளி என்பது முகமது நபி காலத்திலேயே அவரை சென்று சந்தித்து தனது பெயரை தாஜூதீன் என்று மாற்றிக் கொண்ட சேரமான் பெருமாளின் வாரிசுகள் கட்டிய பள்ளி அது. இது பற்றியும் முன்பு நான் விளக்கியுள்ளேன்.

Tuesday, July 26, 2016

'எனக்கு சாதியில்லை! ஆனால்....'எனக்கு சாதியில்லை! ஆனால்

உங்களுக்கு சாதி உண்டு!'

தாத்தாவிடம் பேத்தி சொல்கிறதோ!

பசுமை புரட்சியா அல்லது பசு புரட்சியா!

மதம் மாற்றிய குற்றத்திற்காக இரு இளைஞர்கள் சிறையிலடைப்பு!மதம் மாற்றிய குற்றத்திற்காக இரு இளைஞர்கள் சிறையிலடைப்பு!

மும்பை கல்யாண் பகுதியில் ரிஸ்வான் கான், அர்ஷித் குரைஷி என்ற இரு இளைஞர்களை காவல் துறை கைது செய்துள்ளது. இவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர்கள் இருவரும் 800 இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றியது என்பதுதான். இந்த இருவரும் ஜாகிர் நாயக்கின் ஐஆர்எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் மதம் மாற்றியது உண்மையா பொய்யா என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒருவன் மதத்தை மாற்றிக் கொள்வதென்பது இந்திய அரசியல் சட்டம் அனுமதித்த ஒன்று. மேலும் குர்ஆனை ஆராய்ந்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தை ஏற்க முன் வந்தால் அவனை இரு கரம் நீட்டி வரவேற்பதுதான் சரியான வழியாகும்.

இன்று குஜராத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 4 தலித்களை இந்துத்வ வெறியர்கள் அடித்த காணொளியை நாமெல்லாம் பாரத்தோம். ஒரு தலித் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். அதனை புகாராக கொடுத்து கற்பழித்த மேல் சாதியினர் சிறைக்கு செல்கின்றனர். அவர்களின் தண்டனை காலம் முடிந்து ஊருக்கு திரும்பி அதே சிறுமியை கல்லூரியில் வைத்து கற்பழித்துள்ளனர் அதே நாய்கள். புகார் சொன்னதற்காக கொபப்பட்டு அந்த தலித் சிறுமியை கற்பழித்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் உலகில் வேறெங்காவது நடந்திருக்குமா?

மோடி பிரதமராக பதவியேற்றதற்கு பின்தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அரசு இந்த கொடுமைகளை தட்டிக் கேட்பதுமில்லை. பிறகு அந்த தலித் என்னதான் செய்வான்? எங்கு சமத்துவம் கிடைக்கிறதோ அதை நோக்கித்தானே ஓடுவான்?

எங்கு பிரச்னையோ அதனை இதுவரை களையாமல் இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை கைது பண்ணுவதால் மத மாற்றத்தை தடுத்து விட முடியுமா? சிறைக்கு சென்ற அந்த இளைஞர்கள் சிறையிலும் தங்கள் அழைப்புப் பணியை தொடர்ந்தால் அங்குள்ள சிறைக் கைதிகளும் இஸ்லாத்தை ஏற்பார்களே? இதற்கு மோடியும் அமீத்ஷாவும் என்ன செய்யப் போகிறார்கள்.

மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னால் தான் மத மாற்றங்கள் அதிகம் நடக்கின்றன. காரணம் இந்துத்வாக்களின் எழுச்சி.

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று நினைக்கும் மோடியையும் அமீத்ஷாவையும் பார்த்தால் எனக்கு ஜோக்கர்களாக தெரிகிறது. :-) உங்களுக்கு எப்படி தெரிகிறது?

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். தன்னை மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
அல்குர்ஆன் : 9:32.


தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
26-07-2016


20 கொலைகள் செய்ய காரணம் சினிமாவே - அவினேஷ்20 கொலைகள் செய்ய காரணம் சினிமாவே - அவினேஷ்

பீகாரில் 20 கொலைகள் செய்து பிடிபட்டுள்ள அவினேஷ் ஒரு சைக்கோ. இவ்வாறு சைக்கோவாக மாறி 20 கொலைகள் செய்யக் காரணம் நான் பார்த்த சினிமாக்களே என்கிறான் இந்த கிறுக்கன். பல கொணங்களில் கொலை செய்து அவார்டு வாங்கும் சினிமா இயக்குனர்கள் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள்.

Monday, July 25, 2016

தலித்களுக்கு அதரவான டிஎன்டிஜே யின் ஆர்ப்பாட்டம்!

பாசிச பாஜக ஆட்சி பதவியேற்றது முதல் தலித்கள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். இந்துத்வா அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. திரும்பும் பக்கம் எல்லாம் மக்களின் எழுச்சி மிகு கோஷங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

சுவாமிகள் கடவுளின் தரிசனம் கண்டு மெய் மறந்து பக்தியில் திளைத்திருந்த போது....


ஆனந்த யாழை மீட்டுகிறாய் - யுவன்ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி

இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?

இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?

ஆனந்த் சாகர்!

//ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன.//

முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை.

//மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.//
நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்குஇருக்கலாம். வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே! சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.

நான் கேட்ட கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதாவது ஒருவர் முன்பு ஒரு நாயை கொடுமைபடுத்தியிருந்தால் மறு பிறவியில் அந்த நாய் மனிதனாக பிறந்து போன பிறவியில் நாயை கொடுமை படுத்தியவன் நாயாக மறு பிறவி எடுப்பான் என்பது உங்களின் கொள்கை. பாதிப்படைந்த அந்த நாய் இந்த மனிதனை இந்த பிறவியில் கொடுமைப்படுத்துவான் என்பது மறுபிறவியின் தத்துவம். அந்த தத்துவத்தின் படி இன்ன குற்றத்திற்காக இவன் இவ்வாறாக படைக்கப்பட்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? இத்தனை கோடி ஆண்டு ஆகியும் ஒருவருக்கும் தான் முற்பிறவியில் என்னவாக இருந்தோம். நமது ஏழு பிறவியில் இது எத்தனையாவது பிறவி என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே தெரியாமல் அவனை மறுபிறவியில் இழிவானவாக பிறக்க வைப்பதில் என்ன நன்மை கிடைக்க முடியும்?

தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்ற காரணமே தெரியாமல் ஒருவன் துன்பத்தை அனுபவிப்பது அவனை எந்த வகையில் நேர்வழியில் கொண்டு வரும்? இதைக் கொண்டு மற்றவர்கள் எப்படி பாடம் படிக்க முடியும்?

மேலும் உயிரைப் பற்றி இன்றைய அறிவியல் உலகம் ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர இயலவில்லை. அது ஒரு பெரும் புதிராக இருப்பதாக அறிவியல் அறிஞர்களே ஒத்துக் கொள்கின்றனர். உயிருக்கே சரியான விளக்கம் கிடைக்காத போது ஒரு உயிர் மற்றொரு உயிரில் ஏறிக் கொள்வதாகவும், மற்ற கோள்களில் இருந்து சில உயிர்கள் நமது பூமியில் மனிதனின் உடலில் புகுந்து கொள்வதாகவும் சொல்வதை எங்கிருந்து படித்தீர்கள்? இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? சங்கரிடம் இதைப் பற்றி சொன்னால் எந்திரன் போல ஒரு சினிமா எடுக்க வேண்டுமானால் இந்த கதை உதவும் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத ஒன்று.

Sunday, July 24, 2016

இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலி கிராமத்தில் உள்ள உலவிக் குளம் பிள்ளையார் கோவிலில் தேர் இழுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. தலித்கள் ஒரு பக்கமாகவும் மேல் சாதி இந்துக்கள் ஒரு பக்கமாகவும் நின்று கொண்டு சாதி பெருமைகளை பேசிக் கொண்டு தேர் இழுக்காமல் நின்றனர். முடிவில் ராணுவம் தலையிட்டு தேரை இழுத்து பிரச்னையை சுமுகமாக முடித்து வைத்துள்ளது.

ராணுவத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை சாதி பெருமை பேசித் திரிபவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை?

இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக் கதை உலாவியது:

"இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!".

இந்திய ராணுவத்தின் அத்து மீறிய செயல்!இந்திய ராணுவத்தின் அத்து மீறிய செயல்!
-------------------------------------------------------------
காஷ்மீரில் தாயும் மகளும் கடைவீதிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள கழிவறைக்கு மகள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ராணுவத்தினர் பின்னால் சென்று இந்த பெண்ணை பலவந்தமாக இழுத்துள்ளனர். ஆனால் பொது மக்கள் அந்த இடத்திற்கு வந்து ராணுவத்திடமிருந்து அந்த பெண்ணை காத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணே இதனை சொல்கிறார். மக்களை காக்க வேண்டிய ராணுவம் இப்படி செய்யலாமா? இந்த நாசகாரர்களை இறைவா எங்கள் முன்னால் தண்டிப்பாயாக!

ஐஎஸ்iஎஸ் கழுத்தறுப்பு வீடியோக்களை பார்க்க வேண்டுமா? :-)ஐஎஸ்ஐஎஸ் என்ற யூத அமைப்பு 'அல்லாஹூ அக்பர்' என்று கத்திக் கொண்டே கழுத்தறுப்பதை சில வீடியோக்களில் பார்த்திருக்கலாம். அவை எல்லாம் எவ்வாறு செட்அப் செய்து வீடியோக்களாக பதிவேற்றப்படுகிறது என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ;-)

மோடி அரசு தனது ஐந்து ஆண்டுகளை பூர்த்தியாக்குமா?மும்பையில் அம்பேத்கார் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பிரம்மாண்ட பேரணி! ஜேன்யூ தலைவர் கன்ஹயா குமாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இங்கு கூடிய கூட்டத்தினால் இந்துத்வாவாதிகள் மிரண்டு போயுள்ளனர். நாடு முழுக்க இந்துத்வாவுக்கு எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது. பிஜேபி தனது ஐந்து ஆண்டுகளை முழுமையாக்குமா என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இஸ்லாமியருக்கு ஆதரவாக களமிறங்கிய சீக்கியர்கள்!பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் இஸ்லாமியரின் பள்ளி வாசலுக்கு முன்னால் கோஷமிட்டுக் கொண்டு வழிபாடு நடத்த விடாமல் சிவசேனா குண்டர்கள் பிரச்னை பண்ணிக் கொண்டு இருந்தனர். சிவசேனாவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிஜேபி குண்டர்களும் சேர்ந்து கொண்டனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த சீக்கிய சகோதரர்கள் உருவிய வாளுடன் 'இஸ்லாமியர் மீது கை வைத்தால் கைகளை எடுத்து விடுவோம்' என்று மிரட்டினர். சீக்கியர்களின் ஆதரவு இஸ்லாமியருக்கு கிடைப்பதை எண்ணிய இந்துத்வா கோழைகள் வாலை சுருட்டிக் கொண்டு வந்த வழியே சென்று விட்டனர்.

இதுதான் இந்தியா! இனி இந்துத்வா எங்கு பிரச்னை பண்ணினாலும் அந்த கோழைகளை திருப்பி அடிக்க வேண்டும். பயத்தில் இந்துத்வா கோழைகள் இடத்தை காலி பண்ணி விடுவார்கள்.

Saturday, July 23, 2016

பியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்!சேலம் முள்ளுவாடி பகுதியில், பொது மக்களுக்கு முறைப்படி அறிவிப்பு செய்து – இழப்பீடோ மாற்று இடமோ வழங்காமல், தொடர்வண்டிப் பாதையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் முயற்சியில் இறங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்துப் போராடிய, சேலம் மக்கள் மன்ற அமைப்பாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான பியூஸ் மனுஷ் மற்றும் தோழர்கள் கார்த்திக், முத்து ஆகியோர் கடந்த 08.07.2016 அன்று, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இத்தோழர்கள் தொடர்ந்து சேலம் பகுதியில் நீர் நிலைகள் மீட்பு உள்ளிட்ட சூழலியல் சார்ந்த பணிகளையும் விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருபவர்கள் ஆவர்.

சேலத்திலுள்ள மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி ஆகிய ஏரிகளையும், அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி ஆகிய இரண்டு தெப்பக்குளங்களையும் தன்னார்வ முயற்சியில் இறங்கி, அவற்றை அழிவில் இருந்து மீட்டெடுத்து அரும்பணியாற்றியத் தோழர்கள் இவர்களே! மேலும், தர்மபுரியில் வற்றிப்போன எட்டிமரத்துப்பட்டி ஓடையை மேம்படுத்தி, இன்று அதை வற்றாத நீரோடையாக மாற்றி சாதித்துக் காட்டியும், சேலத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான மேட்டூர் அணையில் கேம்பிளாஸ்ட் நிறுவனம் கொட்டும் வேதியியல் கழிவுகளில் சயனைடு இருப்பதை அறிந்து, தொடர் போராட்டத்தால் அதைத் தடுத்து நிறுத்தியதும் இவர்களே!

இப்படி தன்னார்வத்தோடு பணியாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, தற்போது பொய் புகாரின் பேரில், பிணையில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து, இத்தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

முகநூலில் தன்னைத் தவறாகச் சித்தரித்து படம் வெளியிட்டதன் காரணமாக, சேலம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட சிக்கலில், மெத்தனமாகச் செயல்பட்ட சேலம் மாவட்டக் காவல்துறையினர் மீது இதே தோழர்கள் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். அந்தக் காழ்ப்புணர்வின் காரணமாகவே, காவல்துறையினர் இத்தோழர்களைக் கைது செய்திருக்கக் கூடும் என்ற வலுவான ஐயம் எமக்கு எழுகின்றது.

கடந்த 14.07.2016 அன்று, தோழர்கள் கார்த்திக் மற்றும் முத்து ஆகியோர் பிணை வழங்கப்பட்டு விடுதலையாகிவிட்ட நிலையில், பியூஷிற்கு பிணை வழங்க தமிழ்நாடு காவல்துறையினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து பிணை கிடைக்காமல் செய்துள்ளனர்.

இதைவிடக் கொடுமையாக, நேற்று (15.07.2016) பியூஷை அவரது மனைவி மோனிகா, சூழலியல் செயற்பாட்டாளர் ஈஸ்வரன், தருமபுரி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலா ஆகியோர் சிறைக்கு சென்று சந்தித்து போது, சிறைக் காவலர்கள் தம்மைக் கடுமையாகத் தாக்கி உள்ளதாக பியூஷ் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தோழர் பியூஷ் மனுஷ் ஊழல் செய்தோ – கையூட்டு பெற்றோ சிறை சென்றவர் அல்ல. மக்களுக்காகச் சிறை சென்றவர். நீதிமன்ற சிறைக் காவலில் உள்ள அவரையே, சட்டத்தின் மீதோ அரசின் மீதோ அச்சம் கொள்ளாமல் சிறைக்காவலர்கள் தாக்கியிருக்கின்றனர் என்றால், தமிழ்நாடு காவல்துறையினரின் திட்டமிட்டே அவரைத் தாக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

எனவே, மக்களுக்காகச் சிறை சென்றுள்ள தோழர் பியூஷை, இனியும் கால தாமதம் செய்யாமல் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறையில் அவரைத் தாக்கிய சிறைக் காவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

இஸ்லாத்தில் இணைந்த நாகப்பட்டினம் சகோதரர்கள்!நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம், பழங்கள்ளி மேடு என்ற கிராமத்தில், இன்று 23-07-2016 இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந் நிகழ்ச்சியின் முடிவில் உண்மை மார்க்கத்தை அறிந்து கொண்ட ஆறு இளைஞர்கள் தங்களை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

எல்லாப் புகழும் இழைறவனுக்கே!

இஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்தது வாளால் அல்ல!இஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்தது வாளால் அல்ல. சகோதரத்துவத்தால்: சமத்துவத்தால்: என்பதை இன்றும் விவரித்துக் கொண்டிருக்கும் காணொளி!

ரஜினி என்ற கூத்தாடிக்கு சரியான பதிலளிக்கும் காணொளி!ரஜினி என்ற கூத்தாடிக்கு பின்னால் சென்று தங்கள் பொருளையும் நேரத்தையும் இழந்து கொண்டிருக்கும் ஏமாந்த இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!

Friday, July 22, 2016

இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

திரு ஜனவி புத்திரன்!

//ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்..//

இங்கு இறைவனை குற்றம் சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் இந்த உலகத்துக்கு. அதன் பின் நமது காலம் வரை இந்த உலகத்துக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறைத் தூதர்கள் மனிதர்களை நேர் வழிப் படுத்த வந்துள்ளார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தூதரை அனுப்பியுள்ளதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். ஆனால் மனிதனோ தனக்கு அருளப்பட்ட வேதத்தை சில காலத்துக்குப் பிறகு தனது வசதிக்காக மாற்றி விடுகின்றான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இறைத் தூதரான ஏசு நாதரை இன்று கிறித்தவர்கள் கடவுளாக மாற்றியதை பார்க்கிறோம். அவரும் நபிகள் நாயகத்தைப் போல ஒரு இறைத் தூதரே! அதே போல் இந்து மத வேதங்களும் ஏக தெய்வக் கொள்கையையே பறை சாற்றுகின்றன. ஆனால் அந்த வேதத்தை மொழி பெயர்க்காமல் தெருவுக்கு ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதூனே நமது தமிழர்களின் பண்பாடு. அதனைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது?

ஒரு இந்துவுக்கு மகனாக பிறந்ததனால் நீங்கள் இந்துவுவாக உள்ளீர்கள். ஆனால் உங்கள் மூதாதையரில் யார் ஏக தெய்வ கொள்கையில் இருந்து பல தெய்வ கொள்கைக்கு மாறினாரோ அவரையே இறைவன் குற்றம் பிடிப்பான். ஆனால் உண்மை விளங்கிய பின்னும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தால் அவர்களை இறைவன் தண்டிப்பதாக கூறுகிறான். இந்த காலத்தில் உங்களுக்கு அனைத்து வேதங்களையும் பார்வையிட வசதியுள்ளது. இணையம் மிக அழகிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலக மதங்கள் அனைத்தையும் நமது உள்ளங் கையில் அடக்கி விடலாம். அந்த அளவு வசதிகள் வந்து விட்டது. இவ்வளவு வசதிகள் வந்த பின்னும் இத்தனை ஆதாரங்கள் இருந்த பின்னும் நான் எனது தாய் தந்தையர் வழியையே பின் பற்றுவேன் என்று அடம் பிடிப்பது யாருடைய குற்றம்? இதற்கு இறைவன் எப்படி பொறுப்பாவான்.

இனி இறைவன் பேசுகிறான் அதனைக் கேளுங்கள்:

இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் மாதிரி ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (குர்ஆன் 3:105)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)

ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நல்லோருக்கு நன்மாராயங் கூறுவோராகவும் தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும் அத்தாட்சிகளும், வந்த பின்னரும் தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2 : 213)

“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைத் தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்” (6 : 159)

“அவர்களுக்கு (மார்க்க) விஷயத்தில் தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்”. (45 : 17)

“நிச்சயமாக உங்கள் சமுதாயம் – வேற்றுமை ஏதுமில்லா ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் ரப்பு: ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.

ஆனால் பிந்தைய சந்ததியர் தங்கள் மார்க்கக் காரியத்தில் பிளவுண்டு (பல பிளவுகளாகப்) போயினர், (ஆனால் இறுதியில்) இவர்கள் யாவரும் நம்மிடையே மீள்பவர்களாக இருக்கிறார்கள்”. (21 : 92, 93)

“நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான்” (6 : 153)

Thursday, July 21, 2016

இஸ்லாமிய மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை!
இந்த வருடம் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதி பாஸாகிய அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் மவுலானா அபுல் கலாம் ஆசாத் ட்ரஸ்டிலிருந்து 12000 ரூபாய் கிடைக்கும். இதற்கு அப்ளிகேஷன் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 30 ஆகஸ்ட் 2016 ஆகும். ஏழை மாணவிகள் கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை பூர்த்தி செய்து உதவித் தொகையை பெற்றுக் கொள்வார்களாக.

http://www.maef.nic.in/

பூணூல் பார்டிகள்தான் இனி செத்த மாட்டை தூக்க வேண்டும்!குஜராத்தின் சுரேந்தர் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்து லாரிகளில் இறந்த பசுக்களின் உடல்களை கொண்டு வந்து கொட்டியுள்ளனர் தலித்கள். இது போல் குஜராத்தின் பல இடங்களில் அரசு அலுவல்களை விட்டு நாற்றம் தாங்காமல் ஓடியுள்ளனர் கோமாதா பிரியர்கள். மாட்டின் மேல் அவ்வளவு பாசம் இருந்தால் பூணூல் பார்டிகள் இறந்த மாடுகளை அப்புறப்படுத்த வேண்டியதுதானே.... பசு பிரியம் என்பதெல்லாம் வெளி வேஷம்.

சரியான பதிலடி கொடுத்துள்ளனர் தலித்கள். பசு பாதுகாவலர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்போம்.

தீவிரவாதியான இந்த நாயை என்ன செய்யலாம்?'நாதுராம் கோட்ஸே எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர். மஹாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டதும் அவர்தான். அதே போல் அரவிந்த் கெஜ்ரிவாலையும் துப்பாக்கியால் சுடுவோம்'

பகிரங்கமாக அறிவிக்கும்இ ந்த நாயை எந்த சட்டமும் ஒன்றும் செய்யாது: மாறாக பாதுகாப்பு கொடுக்கும். இதுதான் இன்றைய இந்தியா.

ஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட அமைப்பு - ஒரு இந்து சகோதரர்!

Wednesday, July 20, 2016

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 25

bill of lading - கப்பல் ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு

- a detailed list of a shipment of goods in the form of a receipt given by the carrier to the person consigning the goods.

بوليصة الشحن - bolisha as sahan - போலீஸ அஸ் ஸஹன் - கப்பல் ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு

---------------------------------------

agent - முகவர்

a person or thing that takes an active role or produces a specified effect.

travel agent, estate agent, real estate agent, forwarding agent, secret agent, insurance agent, shipping agent, purchasing agent, user agent, free agent

وكيل - wakheel - வக்கீல் - ஏஜண்ட்

----------------------------------------

issue

an important topic or problem for debate or discussion.

Issue, date of issue, issue date, current issue, hot issue, at issue, first issue, special issue, main issue, controversial issue, security issue

القضية - al kadiyatune - அல் கதியதுன் - பிரச்சினை

--------------------------------------

date of issue - ஒப்பந்தப்படி சேர்ப்பிக்கும் தேதி

تاريخ المسألة - tareek al masala - தாரிக் அல் மஸ்அல

---------------------------------------

current issue - தற்போதுள்ள பிரச்னைகள்

المسألة الحالية - al masalatul haliya - அல் மஸ்அலதுல் ஹாலிய - தற்போதுள்ள பிரச்னைகள்

'மாயாவதி விபசாரிகளை விட கேவலமானவர்' - தயா சங்கர் சிங்'மாயாவதி விபசாரிகளை விட கேவலமானவர்' - உபி மாநில பிஜேபி உப தலைவர் தயா சங்கர் சிங் பேட்டி

ஒரு மாநிலத்தின் முக்கிய கட்சியின் தலைவர் பேசும் பேச்சா இது. கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் வளர்த்தெடுக்கப்பட்ட இந்துத்வா என்ற இந்த கும்பல் நம் நாட்டை பீடித்த விஷச் செடி என்றால் மிகையாகாது. இவர்கள் வளர்வது இந்து மதத்துக்கு மிகக் கேடாக முடியும் என்பதை போகப் போக அறிந்து கொள்வர் இந்து மக்கள்.

திருமா வளவன் உதவியாளர் தமிழேந்தி இஸ்லாத்தை ஏற்கிறார்!திருமா வளவன் உதவியாளர் தமிழேந்தி இஸ்லாத்தை ஏற்கிறார்!

வெளச்சேரி விசிக தலைமை நிலைய பொறுப்பாளர் தமிழேந்தி தனது பெயரை தமீம் அன்சாரி என்று மாற்றிக் கொண்டுள்ளார். திருமாவளவனோடு சேர்ந்து ஒவ்வொரு ரமலானிலும் நோன்பிருந்தார். இன்னும் சில நாட்களில் முறைப்படி கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைகிறார். சகோதரரை இரு கரம் நீட்டி வரவேற்போம்.

எல்லா பகழும் இறைவனுக்கே!

இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!

நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இத்தாலியையும் இஸ்லாம் ஈர்க்காமல் விடவில்லை. இத்தாலியில் நடந்த பிரம்மாண்டமான ஈத் பெருநாள் தொழுகை.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, July 19, 2016

பெண்கள் விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.பெண்கள் விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.

திருச்சி அய்மான் பெண்கள் கல்லூரியில் ஆகஸ்ட் 5ம், தேதி மாபெரும் அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.

தமிழகத்திலே முதல் முறையாக முஸ்லிம் பெண்களுக்கென்றே அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவசப்பயிற்சி.
ஆட்சிப்பணியிலும் அரசுப்பணியிலும் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் வகையில்,வெற்றிகரமான மதுரை துவக்க விழாவை தொடர்ந்து, உடன் பதிவு செய்வீர்.

Online registrations: http://aimstn.com/registration.php

Phone/ WhatsApp: 0431-2459493, 96297 14333, 999 434 7007, 86789 38805

E-mail: info@aimstn.com aimstn2016@gmail.com

அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஆகஸ்ட் 6ம், தேதி மாபெரும் அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.

ஆட்சிப்பணியிலும் அரசுப்பணியிலும் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் வகையில்,வெற்றிகரமான மதுரை துவக்க விழாவை தொடர்ந்து, உடன் பதிவு செய்வீர்.

Online registrations: http://aimstn.com/registration.php

Phone/ WhatsApp: 97901 12105, 999 434 7007, 86789 38805

E-mail: info@aimstn.com aimstn2016@gmail.com

குஜராத்தில் கேட்பாரற்று இறந்து கிடக்கும் பசுக்கள்!குஜராத்தில் கேட்பாரற்று இறந்து கிடக்கும் பசுக்கள்!

சில நாட்கள் முன்பு மாட்டுத் தோலை உரித்தார்கள் என்று சில இந்துத்வாவாதிகள் 4 தலித்களை அடித்தது ஞாபகம் இருக்கலாம். இதன் எதிரொலியாக இறந்த மாடுகளை தூக்க மாட்டோம் என்று தலித்கள் சில இடங்களில் மறுத்து விருகின்றனர். இதனால் குஜராத்தின் சுரேந்த்ரா நகர் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி இறந்து கிடக்கும் மாடுகள். கேட்பாரற்று அழுகும் நிலையில் உள்ளது.

இப்போது பசு பாதுகாவலர்கள் எங்கு ஓடினார்கள். தாயை இவ்வாறு ரோட்டில் நாய் நரி தின்க விடலாமா? இவர்களின் பசு பாசம் என்பது போலித்தனமானது என்பது விளங்கவில்லையா?

குஜராத் உண்மையில் ஒளிர்கிறதா? அல்லது தேய்கிறதா?குஜராத் உண்மையில் ஒளிர்கிறதா? அல்லது தேய்கிறதா?

குஜராத்தின் மஹ்சேனா மாவட்டத்தில் உள்ளது கரோத் கிராமம். ரீட்டா சென்மா என்ற 17 வயது தலித் மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது கிராமத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இவர் படிக்கும் பள்ளி. இங்கிருந்து பள்ளிக்கு செல்ல கைக்கிளி ரிக்ஷாக்களோ மற்ற வாகன வசதிகளோ இல்லை. தற்போது உயர் சாதியனரான பட்டேல்களின் போராட்டம் நடந்து வருவதால் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு இவர் செல்லவில்லை. இவரது கிராமமே படேல்களினால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளனர். குஜராத்தின் தற்போதய முதல்வரின் தொகுதியில் இந்த கிராமம்' வருகிறது. முதல்வர் தொகுதிக்கே இந்த நிலை என்றால் ஒட்டு மொத்த குஜராத்தின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குஜராத் ஒளிர்கிறது என்று மோடி சொன்னதெல்லாம் மோடி மஸ்தான் வேலை என்று இப்போது தெரிகிறது. :-)

நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!

'நோயாளிகளின் நண்பர்கள் குழு' என்ற அமைப்பு மருத்துவ மனைக்கு விஜயம் புரிந்தது. துப்புறவு தொழிலாளர்கள் பலர் வாகன விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து 20 மேற்பட்ட விலையுயர்ந்த மொபைல் போன்களையும் வேறு சில பொருட்களையும் அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தனர் இந்த அமைப்பினர்..

இந்த வேலை செய்பவர்களை நம் நாட்டில் 'தோட்டிகள்' என்று இழிவாக பார்த்து அவர்களை கீழ் சாதியாக ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் இந்த அரபுகள் உழைப்பதில் எந்த இழிவும் இல்லை என்பதை உணர்ந்து அந்த மக்களை பெருநாள் தினத்தன்று மருத்துவ மனைக்கே சென்று நலம் விசாரித்த பண்பு பாராட்டத் தக்கது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
18-07-2015

பெருநாள் தினத்தன்று மாலை நேரங்களில் பெரும்பாலான சவுதிகள் குடும்பம் சகிதமாக நோய் வாய் பட்டவர்களை நலம் விசாரிக்க சென்று விடுவர். இதனை நான் நேரிலேயெ பார்த்துள்ளேன். இந்த பழக்கத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.

நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில்

”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

நூல் ஆதாரம்:(ஸஹீஹ் முஸ்லிம்)

Monday, July 18, 2016

சித்து மோடியை கண்டித்து எம்பி பதவி ராஜினாமா!மோடி அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. அம் ஆத்மியில் இணையப் போவதாக தகவல். பஞ்சாபில் பிஜேபி மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.

பிரிட்டனின் புதிய பிரதமர் தெரஸாவின் அழகிய பேச்சு'இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நாம் நன்கு அறிவோம். இதற்கு மாறாக நடக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளைப் பற்றி நமக்கு கவலையில்லை'

இஸ்லாத்தின் பெயரால் பல தீவிரவாத நடவடிக்கைகளை ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. சிரியா, ஈராக்கில் பல பகுதிகளை அந்த குழு பிடித்து வைத்துள்ளது. பல அப்பாவிகளை கொன்று குவிக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் முஸ்லிம்களும் உலகின் பெரும்பாலான முஸ்லிம்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்க்கவே செய்கின்றனர்.

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 49:13

என்று குர்ஆன் கூறுகிறது. இது போன்ற அழகிய செய்திகளை நாம் உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

-பிரிட்டனின் புதிய பிரதமர் தெரஸாவின் அழகிய பேச்சு

பாஜக டேஷ் பக்தர்கள்.... பார்த்துக்கோங்கோ :-)அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் சீனிவாசன் கொலை வழக்கில் 5 பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான திமுகவை சேர்ந்த சீனிவாசனை (45) கடந்த வியாழக்கிழமை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக பாஜக மாவட்ட ஆதிதிராவிட அணி தலைவர் திருமுகாட்டை சேர்ந்த பெருமாள் (45), அச்சரப்பாக்கம் பாஜக நகர தலைவர் பாலாஜி (50) மற்றும் பாரதீய ஜனதாவை சேர்ந்த படாளம் கார்த்திகேயன் (31), மணப்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்ற குணா (21), நாகராஜ் (25) ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மறைமலைநகரை சேர்ந்த முரளி, பல கொலை வழக்கில் தொடர்புடைய தாம்பரத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலத்தில் கூறுகையில், “அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசன் இருந்தால் எங்களது கட்சியான பா.ஜனதா அந்த பகுதியில் வளரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அச்சரப்பாக்கம் மலை மீது உள்ள கோவிலில் பூசாரியாக இருந்த பாலாஜியை நீக்கி விட்டு வேறு ஒருவரை பூசாரியாக நியமனம் செய்தார். எங்கள் கட்சியை வளர விடாமல் தடுத்து வந்த அவர் எங்களது தொழிலிலும் குறுக்கிட்டு வந்ததாலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவரே வெற்றி பெறும் நிலையில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதாலும் அவரை திட்டமிட்டு கொலை செய்தோம்.” என்றனர். கைதான 5 பேரையும் காவல்துறையினர் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முடிச்சவுக்கி: மொள்ளமாரி: கொலை காரன்: திருடன்: ஊழல் செய்பவன்: இவர்கள் அனைவரின் புகலிடமும் பிஜேபி என்பது நிரூபணமாகிறது. இந்த பாசிச வாதிகள் நாடு முழுக்க வளர்ந்தால் இந்நாடு உருப்படுமா?

தகவல் உதவி
வெப் துனியா
17-07-2016

http://tamil.webdunia.com/regional-tamil-news/dmk-personality%E2%80%99s-murder-5-bjp-members-arrested-116071700009_1.html
Sunday, July 17, 2016

நெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்....


நெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்....

இந்து முண்ணனி ராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளாராம். அதாவது 'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' என்ற கட்டளையே அது. இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். திராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும் பல கேள்விகளுக்கு இராம கோபாலனிடம் எந்த பதிலும் இன்று வரை இல்லை. எனவே ராம கோபாலன் இட்ட இந்த கட்டளையை நிறைவேற்ற பல இந்து முன்னணி இளைஞர்கள் இஸ்லாமிய பெண்களை படிக்கும் இடங்களில் சீண்டுவது ஆங்காங்கே அரசல் புரசலாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான். ஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார். அந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..

தனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், இஸ்லாமிய நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.

பெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.

'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'

பெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா! எல்லா புகழும் இறைவனுக்கே! நாளை என் மகளை அழைத்து வந்து விடு! பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.

'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.

மறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். வேறு யாரையும் அந்த இறைவனைத் தவிர வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முகமது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொல்ல வைக்கப்பட்டான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நிக்காஹ்வும் நடத்தப்பட்டது.

அந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

Saturday, July 16, 2016

துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு!துருக்கி அதிபர் வெளிநாடு சென்ற சமயம் பார்த்து இஸ்ரேலிய அமெரிக்க கூட்டு சதியால் துருக்கியில் ராணுவம் ஆட்சியை பிடித்தது. ஆனால் ஒரே இரவில் தனது மக்களுக்கு துருக்கி அதிபர் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்ற மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ராணுவத்தை ஓட ஓட விரட்டி அதிபரிடம் ஆட்சியை மீண்டும் கொடுத்தனர்.

இந்த நிகழ்வானது சனிக்கிழமையான இன்று நடந்துள்ளது. இந்த போராட்டத்தில் 90 பேர் இறந்துள்ளனர். 1154 பேர் காயமடைந்துள்ளனர். 1563 ராணுவத்தினர் தேச துரோக குற்றத்தக்காக சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் சக்திக்கு முன்னால் வல்லரசுகளே நிலை குலையும் என்பதற்கு இது ஒரு சான்று. உலக மீடியாக்கள் ராணுவத்தின் தோல்வியை அதிகம் ஒளிபரப்பாமல் மவுனம் காப்பதையும் பாருங்கள். யூதர்கள் எங்கும் பரந்து விரிந்திருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் பற்றி கர்ம வீரர் காமராஜ்!

Thursday, July 14, 2016

அன்வர் ராஜா திருமணத்துக்கு பொங்கும் வேலையற்றவர்கள்!

அன்வர் ராஜா மூன்றாம் திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இந்து மக்கள் கட்சியினர்.

ஆனால் இவர்கள் வழிபடும் தெய்வங்களுக்கு எத்தனை மனைவிகள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ராமனின் தந்தை தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. வட நாடுகளில் நாய்களுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காகவெல்லாம் பொங்காத இந்து மக்கள் கட்சி அன்வர் ராஜாவுக்கு பொங்குவதேன்? ஏனெனில் அவர் ஒரு முஸ்லிம்.

Wednesday, July 13, 2016

அன்வர் ராஜா அவர்களின் மகனின் மனம் திறந்த மடல்!வணக்கம்

எனது தந்தையின் ‪#‎திருமணம்‬ சம்பந்தமான எனது விளக்கம் - ‪#‎அன்வர்ராஜா‬ (69) ‪#‎சமீரா‬ (50).

இதில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்படுவதற்கு ஒன்றும் இல்லை .
என் தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நான் மற்றும் என் அண்ணன் தம்பி தங்கை மற்றும் எங்கள் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவரை ‪#‎கட்டாயப்படுத்தி‬ திருமதி சமிரா (50) அவர்களின் முழு சம்மதத்துடன் கடந்த 10/07/2016 அன்று எழிய முறையில் எங்கள் ‪#‎குடும்பத்தினர்‬ முன்பு இத் திருமணத்தை ‪#‎நடத்திவைதோம்‬ ...

ஆனால் 71 வயதுள்ள அன்வர்ராஜா ‪#‎எம்பி‬ ‪#‎35வயதுள்ள‬ பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்றும் குடும்பதார்களிடையே கருது வேறுபாடுகள் உள்ளது என்றும் சிலர் ‪#‎பத்திரிக்கை‬ மற்றும் ‪#‎இணையதளத்தின்‬ மூலமாகவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர் , ‪#‎வதந்திகளை‬ நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ..

‪#‎குறிப்பு‬ :

‪#‎பொதுவாழ்க்கையில்‬ என் தந்தையை பற்றி அனைவருக்கும் தெரிந்ததே ,, அனால் அவரின் தனிப்பட்ட வாழ்கையில் என் ‪#‎அம்மாவின்‬ மீது அவர் காட்டிய ‪#‎அன்பு‬ இருக்கிறதே அப்பப்பா இதை வார்த்தைகளில் மூலம் சொல்லிவிட முடியாது ,கடந்த ‪#‎10வருடமாக‬ என் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள் அவருக்கு எல்லா விதமான ‪#‎பணிவிடைகளையும்‬ என் தந்தைதான் செய்வார் எங்களை கூட அம்மாவின் பக்கத்தில் விடமாட்டார், அம்மாவின் ‪#‎மறைவுக்குப்‬ பின் நாங்கள் எவ்வளவுதான் கூட இருந்தாலும் அவர் ‪#‎தனிமையில்‬ தான் இருக்கிறார் என்று எங்களால் உணர முடிந்தது, தன் மனைவியை பறிகொடுத்துவிட்டு தினமும் எங்களுக்காக சிரித்துக்கொண்டு வாழ்வதை நான் நன்கு அறிவேன் .

அவரால் தான் நாங்கள்! என்ற உரிமையில் அவரை இந்த கல்யாணத்திற்கு கட்டாயப்படுதினோம் சம்மதிக்கவும் வைத்தோம்,

என் தந்தையை நான் ‪#‎சந்தோசமாக‬ வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் என்ன ‪#‎தவறு‬ இருகிறது ?

அப்படியே தவறாக இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு ‪#‎கவலை‬ இல்லை . அவரின் சந்தோசத்தை விட வேற எதுவும் ‪#‎பெரிதாகவும்‬ தெரியவில்லை. .

I am always ‪#‎Proud_of_my_FATHER‬
Nazar

காஷ்மீர்: ஆபத்திலும் மனித நேயம் காக்கும் முஸ்லிம்கள்!ஸ்ரீநகர்: கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தங்களது உயிரை பணயம் வைத்து விபத்தில் சிக்கித்தவித்த அமர்நாத் யாத்திரை பக்தர்களை பத்திரமாக மீட்டுள்ளனர் அங்குள்ள இஸ்லாமியர்கள்.

கஷ்மீர் மாநிலத்தில் ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச்சேர்ந்த தீவிரவாதி வாணி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அங்கு காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டடு. இந்த மோதல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையில் இச்சம்பவத்தில் 30ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த மினி பேருந்து பிஜிபெஹரா என்னும் பகுதியில் விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் பேருந்தின் டிரைவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 20 ற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட பிஜிபெஹரா மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் தங்களது உயிர்களை துச்சமென மதித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தங்களது ஊரில் பெரிய அளவில் பிரச்சனை நடந்து கொண்டிருந்த போதும், மனித நேயத்தை மறந்துவிடாமல் பாதிக்பட்டவர்களை ஓடி வந்து பாதுகாத்தனர். இது கஷ்மீர் மக்களுக்கே உரித்தான சிறந்த பண்பாகும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து மனித நேயத்திற்காக போராட வேண்டும் என இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

தகவல் உதவி
நியூ இந்தியா
13-07-2016

http://www.newindia.tv/news/india/item/766-muslims-rescue-amarnath-pilgrims-in-an-accident-in-kashmir#sthash.FhYOM2pR.dpuf

Tuesday, July 12, 2016

தலைமை தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனையாம்!

மத சார்பற்ற ஒரு நாட்டில் இவ்வாறு புனித நீர் என்று அநியாயத்துக்கு புளுகி மக்களை ஏமாற்றலாமா? என்று கேட்டால் நீங்கள் மோடி குண்டர் படையால் பாகிஸ்தான் நாடு கடத்தப்படுவீர்கள்.

பிணங்களின் அழுகலில் துர் நாற்றமெடுக்கும் இந்த நீர் 200 மில்லி 25 ரூபாயாம். 500 மில்லி பாட்டில் 35 ரூபாயாம். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.

குஜராத்தில் மூன்று தலித்கள் அடிபடும் காட்சி!குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ போலீஸார் தலித்துகளை தாக்கிய 6 பேரில் 3 பேரை கைது செய்தனர். மீதி 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித்துகள் ஏற்கெனவே இறந்த பசுமாடு என்று கூறுகையில் தாக்கியவர்களோ அது கொல்லப்பட்டது என்று சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தாக்கியவர்கள் ரமேஷ் கிரி, பல்வந்த் சிமர், ரமேஷ் பக்வான், ராகேஷ் ஜோஷி, ரசிக்பாய் மற்றும் நாக்ஜி பாய் வானியா ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இவர்கள் காரில் வந்துள்ளனர். வரும்போதே பசுத்தோலை உரித்துக் கொண்டிருந்த தலித்துகள் மீது சாதிவெறி வசைகளைப் பொழிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்கள் காரில் வைத்திருந்த இரும்பு ராடு மற்றும் தடிகளால் அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

புகார் அளித்துள்ள வஸ்ரம்பாய் சர்வையா, 3 செல்போன்களையும் தாக்கியவர்கள் திருடிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். 6 குற்றவாளிகளில் ரமேஷ், ராகேஷ், நாக்ஜிபாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த பசுவின் தோலை வயிற்று பசிக்காக உரித்த தலித்களை மிருகத்தை விடக் கெவலமாக நடத்தும் இந்த இந்துத்வா நாய்களை என்ன செய்யலாம். இந்து மதம் போதிப்பது இதைத்தானா? இந்துக்களே இந்த நாய்களை கண்ட இடத்தில் அடிக்க ஆரம்பித்தால்தான் தான் பசு பைத்தியம் இவர்களை விட்டு நீங்கும். மோடி பிரதமராக இருக்கும் காலமெல்லாம் இது பொன்ற கொடுமைகள் குறையப் பொவதில்லை.

வளை குடா முதல் உலகம் முழுக்க மாடு ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்து மத உயர் சாதி யினருடையது. பசுவின் மீது உண்மையான பக்தி இருந்தால் 'அல் கபீர்' போன்ற அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களை இவ்வாறு அடிப்பார்களா?

காஷ்மீரில் சத்தமில்லாமல் நடந்து வரும் மனித நேயப் பணி!
காஷ்மீரில் மிக உக்கிரமாக ராணுவத்துக்கும் பொது மக்களுக்கும் சண்டை நடந்து வருகிறது. கண்ட இடத்திலும் ஆர்ப்பாட்டக் காரர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதனால் ஜீலம் நதிக்கு அப்பால் உள்ள பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே உணவின்றி தவித்து வருகின்றன.

அவ்வாறு சிரமப்படும் ஒரு குடும்பம்தான் திவான் சந்த் என்ற பண்டிட் குடும்பம். இவர் தனது பாட்டியோடும் மனைவியோடும் ஜீலம் நதிக்கு அப்பால் ஜவஹர் நகரில் வசித்து வருகிறார். பல நாள் நடந்த சண்டையில் இவர்கள் இருப்பிடத்துக்கு உணவு வழங்கப்படவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திவான் சந்த் என்ற இந்த பிராமணர் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியிலிருக்கிறார். வசதியான குடும்பமாக இருந்தாலும் உணவு வந்து சேரவில்லை என்றால் என்ன செய்வார்கள்?

கடைகள் கடந்த நான்கு நாட்களாக ஊரடங்கு உத்தரவால் திறக்கப்படவில்லை. திவான் சந்த் தனது குடும்ப நண்பரான ஜூபைதாவுக்கு தொலை பேசி மூலம் உணவு தேவை பற்றி சொல்லியுள்ளார். ஜூபைதாவும் அவரது கணவரும் வயதான பாட்டியோடு சிரமப்படும் திவான் சந்துக்கு உதவ உணவு பொருட்களோடு ஸ்ரீநகரிலிருந்து கிளம்புகின்றனர்.

'பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. சரியான சாலை வசதியும் இல்லை. எங்கள் உயிருக்கும் ஆபத்துதான். இருந்தாலும் சிரமப்படும் திவான் சந்த் குடும்பத்துக்கு இந்த உணவு பொருட்களை எப்படியும் சேர்த்து விடுவோம்' என்கிறார் ஜூபைதா.

ஒரு புறம் மோடிக்களும், அமீத்ஷாக்களும், தெகோடியாக்களும் இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ணி மனித ரத்தம் குடிக்கின்றனர்.

மறுபுறம் இந்துக்களும் முஸ்லிம்களும் உடன் பிறவா சகோதர சகோதரிகளாக தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த அன்பும் பாசமும் இருக்கும் காலமெல்லாம் இந்துத்வா தனது தோல்வியை தொடர்ந்து தழுவிக் கொண்டுதான் இருக்கும்.

Monday, July 11, 2016

ஜாகிர் நாயக்குக்கு க்ளீன் ஷீட் கொடுக்கிறார்களாம்!ஜாகிர் நாயக்குக்கு க்ளீன் ஷீட் கொடுக்கிறார்களாம்!

வெளி நாட்டிலிருந்து மும்பை வரவிருக்கும் சகோதரர் ஜாகிர் நாயக்குக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படாது: கைது செய்யப்படவும் மாட்டார் என்று மஹாராஷ்ட்ர அரசு அறிவித்துள்ளது.

ஜாகிர் நாயக் செய்த குற்றம் என்ன என்று நீங்கள் கேட்கக் கூடாது. க்ளீன் ஷீட் தரும் யோக்கியதை மனித மாமிசம் தின்னும் இந்துத்வா அரசுக்கு இருக்கிறதா என்றும் நீங்கள் கேட்கக் கூடாது.

கொலைகாரர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் போது இது போன்ற காமெடி சீன்கள் அடிக்கடி அரங்கேறும்.

'போலோ பாரத் மாதா கீஜே'

இந்திய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்!இந்திய ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்!

காயம் பட்டு ஆம்புலன்ஸில் அனுமதிக்கப்பட்ட ஒரு காஷ்மீர் இளைஞனை ஐந்து ராணுவத்தினர் ரவுண்டு கட்டி அடிக்கின்றனர். இந்த அளவு தனது நாட்டு மக்களிடம் ஒரு ராணுவம் நடந்து கொண்டால் அந்த நாட்டின் மீது பற்றும் மதிப்பும் எவ்வாறு எற்படும். இந்த தருணத்திற்காகவே காத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானின் வஞ்சக வலையில் இந்த இளைஞர்கள் வீழ்ந்தால் அது மிகப் பெரும் அச்சுறுத்தல் அல்லவா? எல்லைகளை மூடி அந்த மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டாமா? ராணுவத்தை திரும்ப அழைத்து அங்கு அமைதி திரும்பிட ஒரு அரசு முயல வேண்டாமா?

பிஜேபி அரசிடம் இந்த நாட்டை நாம் ஆள ஐந்து வருடம் அனுமதி கொடுத்ததற்கு பலனாக ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பிஜேபிக்கு வாக்களித்த மக்கள் இந்த உண்மையை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

இரவுத் தொழுகைக்கு கூடும் கூட்டததைப் பார்த்தேன்! கண் கலங்கினேன்!

(சென்ற வருடத்திய மீள் பதிவு!)

25 வருடங்களுக்கு முன்பு ரியாத்தில் ரமலான் இருபதுக்கு பிறகு இரவு இரண்டு மணிக்கு 'கியாமுல் லைல்' என்ற இரவுத் தொழுகை நடைபெறும். இந்த தொழுகையை நபிகள் நாயகம் அவர்கள் விரும்பி தொழுது வந்துள்ளார்கள். தனது குடும்பத்து பெண்களையும் தொழச் சொல்லி ஏவுவார்கள். சஹாபாக்களும் இந்த தொழுகையை விரும்பி தொழுது வந்தனர். இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை இறைவன் செவி மடுத்து அதற்கு உடன் பதிலளிக்கிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக பள்ளிக்கு வருவர். இது எனக்கு புதுமையாக இருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நான் தமிழகத்தில் கண்டதில்லை. தமிழகத்துக்கு ஒரு இஸ்லாம்: சவுதிக்கு ஒரு இஸ்லாமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அந்த நேரத்தில்தான் தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் உருவானது. நபி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. குர்ஆனின் மொழி பெயர்ப்பு வீடுகள் தோறும் மக்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தனர். நபிகள் நாயகம் வலியுறுத்திய அந்த இரவுத் தொழுகையை தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் வீடுகளுக்கு தங்கள் குடும்பத்தாரோடு இரவு இரண்டு மணிக்கு தொழுது கொண்டிருந்தனர். ஊருக்கு வரும் சமயம் நானும் வீடுகளில்தான் தொழுது கொள்வேன். ஏனெனில் அப்போது தவ்ஹீத் பள்ளிகள் கட்டப்படாத சமயம். ஊரில் பயங்கர எதிர்ப்பு இருந்த சமயம். ரகசியமாகவும் இந்த இரவுத் தொழுகையை தொழுது வந்தோம்.

காலம் உருண்டோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறைதான் ரமலானில் ஊரில் உள்ளேன். 25 வருடங்களுக்குப் பிறகு இன்று எனது கிராமத்தில் மூன்று தவ்ஹீத் பள்ளிகள் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆண்களும் பெண்களும் சாரை சாரையாக தவ்ஹீத் பள்ளிகளை நோக்கி நடந்தும், சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், ஆட்டோக்களிலும் அணி வகுத்து செல்கின்றனர். அங்கு பள்ளியில் அன்று நான் ரியாத்தில் பார்த்த காட்சிகளைப் பார்க்கிறேன். இரவு 9 மணிக்கு எவ்வளவு பேர் தொழுவார்களோ அந்த எண்ணிக்கை சற்றும் குறைவில்லாமல் மூன்று வரிசைகள், நான்கு வரிசைகளில் ஆண்களும் பெண்களும் நின்று நள்ளிரவு இரண்டு மணிக்கு தங்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும் காட்சியைப் பார்த்தேன். அழுது இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இரண்டு கிலோ மீட்டர் மூன்று கிலோ மீட்டர் தூரத்திலிருந்தெல்லாம் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் ஆட்டோக்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ள காட்சியானது கண் கொள்ளாக் காட்சியாகும். ஆனந்தக் கண்ணீர் என் கண்களில் ததும்பியது.

25 வருட சத்திய தவ்ஹீத் பிரச்சாரத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா? இறைவனின் ஆசியும் கிருபையும் இல்லா விட்டால் இது சாத்தியப்படுமா? எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

இதற்காக உடலாலும் பொருளாதாரத்தாலும் உழைத்த தவ்ஹீத்வாதிகளுக்கு இறைவன் தனது கருணையை பொழிவானாக! அவர்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!
எல்லா புகழும் இறைவனுக்கே!

Sunday, July 10, 2016

ஜாகிர் நாயக்கிடம் மூக்குடைப்பட்ட டைம்ஸ் நவ் நிருபர்!டாக்டர் ஜகிர் நாயக்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேட்டியெடுத்த டைம்ஸ் நவ் பெண் நிருபரின் கேள்விக்கு நச் நச் சென்று பதிலளித்தபோது தமது சாயம் வெளுத்ததைக் கண்டு அந்த நிருபர் இறுதியில் டெக்னிகல் பிரச்சினை காரணமாக நமது உரையாடல் சரியாகப் பதிவாகவில்லை என்று நழுவி அதை வெளியிடாமல் தவிர்க்க முயல,டாக்டர் பரவாயில்லை நான் எனது மொபைலில் அதை தெளிவாகப் பதிவு செய்துள்ளேன் அனுப்பித்தரவா என்று கேட்டு , அவர்களால் வெளியிடப்படாத பேட்டியின் லிங்க் முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாகப் பரவி டைம்ஸ் நவ்வின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது!

பேட்டிவிவரத்தை கொஞ்சம் நமக்குத் தெரிந்த அளவு மொழிபெயர்த்து பார்ப்போமா?(கருத்து மட்டும்)!

வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தங்களது பிரச்சாரத்தால் உந்தப்பட்டு தூண்டப்பட்டு (inspired by)

இதைச்செய்த்தாக கூறப்படுவது பற்றி?

இதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கப்பட வேண்டியுள்ளது.

எனது பிரச்சாரம் பல லட்சம் மக்களை சென்றடைகிறது.அதனால் inspire ஆனவர்கள் இஸ்லாத்தை உணர்ந்து புரிந்து கொள்கிறார்களே தவிர பயங்கரவாத்த்தில் எப்போதும் ஈடுபடுவதில்லை.

எந்த காலத்திலும் நான் பயங்கரவாத்த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.9/11செப்டம்பர் தாக்குதலாகட்டும்
பாரிஸ் தாக்குதலாகட்டும் வங்கதேச தாக்குதலாகட்டும் அத்தனையும்நான்கடுமையாக கண்டித்து அவற்றை எதிர்த்தே பிரச்சாரம் செய்து வருகிறேன்!ஏனெனில் இஸ்லாம் எந்த நிலையிலும் பயங்கர வார்த்தை ஆதரிக்கவில்லை!ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது மனிதகுலத்தையே கொலை செய்வதற்கு சம்ம் என்பது குர்ஆனுடைய வழிகாட்டலாக இருக்க அதை பின்பற்றும் நான் எப்படி பயங்கரவாத்த்தை பரப்பமுடிஉயும்?
சவுதி அரசு எனக்கு கவுரவமிக்க மன்னர் பைசல் விருதை வழங்கியது!ஒருதீவிரவாதிக்கு இவ்வுயரிய விருதை வழங்க அவர்கள் என்ன முட்டாள்களா?

மலேசிய அரசும் எனக்கு அந்நாட்டின் உயரிய விருதினை வழங்கி கவிரவித்தனர் அதுவும் இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதம் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரைக்காக!அவர்களெல்லாம் முட்டாள்களா?

இரண்டாவதாக, நான் தீவிரவாத்த்தில்ஈடுபடுவாக இருந்தால் அதற்கான உரிய சான்றுகளை கொண்டுவரவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா?உலகம் முழுவதும் பரவியிருக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே இதன் நோக்கம்!

அடுத்த கேள்வி.

ஒவ்வொரு இஸ்லாமியனும் terrorist ஆக மாறிவிடவேண்டும் என்றொரு சொற்றொடர் உங்கள் பெயரில் வருவது பற்றி?

அது சம்பந்தமில்லாமல் வார்த்தைகளைப் பிரித்து சொல்லப்படும் குயுக்தி! தீமைகளுக்கும் பயங்கரவாதங்களுக்கும் எதிராக அனைத்து இஸ்லாமியரும் திரளவேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தைகளை அதன் contextக்கு தொடர்பின்றி பரப்பப்படுகிறது!

நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டாமா இந்த நாதாரிகள்!

(மொழி பெயர்த்த நண்பருக்கு நன்றி!)

An audio clip is being forwarded through WhatsApp where Dr. Zakir Naik, who is currently in the Holy Makkah, is being interviewed over phone by a lady reporter representing ‘Times Now’.

Dr. Zakir Naik has very clearly presented his views on how the media and the BJP government had been propagating a very wrong notion, in a perspective of degrading his name & fame and also his religious works.

The question to him was, “Are you inspiring the terrorists involved in the Bangladesh attack?”

Dr. Zakir replied in the following manner..

“”” Your question carries two points.
One, about inspiring people.

Yes, I am an inspiration for millions of muslims and Non-muslims.
I am a popular figure, a public speaker and a renowned celebrity and I am being followed & liked by millions through social media as well.

So, if the question is about. am I an inspiration to everyone? Yes, I am. I am inspired by millions, throughout the world, and also in Bangladesh I am known and loved by millions.

I am an inspiration to everyone, on the fact that I bring people closer to Islam.

Coming to your next question, about inspiring terrorists,
No, If at all you can raise this, you can state only with a valid proof.

Throughout my Dawa career, I have never ever supported any form of terrorism in any way. Be it, the 9/11 attack, Paris attack or the recent Bangladesh attack, my stand remain the same.

Terrorism is not supported by Zakir Naik as it is not at all supported by Islam.

Quran says in Chapter 5 Verse 32, If a person kills an innocent human being, it is as though he killed the whole of humanity..!

So, I never had supported terrorism of any form.

People gets inspired by my lectures and that doesn’t mean everyone of them understand islam 100% perfectly.

People gets inspired by my talks and once they come closer to islam, they may tend to listen to some other deviant speakers who may mislead them.

Furthermore,
I am being honored by the Saudi Government last year with the prestigious King Faisal Award.
If am a supporter of terrorism, do you think the Saudi government is a fool to give me this award?

I had been honored with another prestigious award in the past by the Malaysian government.
Infact, that award was presented to me soon after I had given a lecture there on the topic, ‘terrorism in Islamic perspective”.

Do you think, the Malaysian government officials are fools to honor me if I am a supporter of Terrorism?""

Dr. Zakir was very clear in his views and explanations.

The reporter raises another question about Dr.Zakir Naik once stating that “ All muslims should be terrorists”.

Dr. Zakir replied,

""It is a statement which is brought out of context and was an incomplete information.

My statement was that a muslim cannot be a terrorist, killing innocent human beings.
Rather, he should be a terrorist against anti-social elements.

For example, a robber or a thief gets terrified by a policeman.
Which means, the policeman is a terrorist in the robber’s point of view.
So, it is not wrong in saying we all should be a terrorist to that robber – in this context, of course, the robber is an antisocial element.

It is the Indian media which is selective and biased on quoting irrelevant words and sentences from my speeches and taking them out of context to give a false propaganda.”””

He gave a clear, transparent and a very effective refutation ..!