Followers

Tuesday, January 29, 2013

குவைத்தில் கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை!


குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா இளைஞர் மன்னிப்பின் பேரில் விடுதலை!

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் கேரளா மாநில இளைஞர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார்.

சவூதி அரேபியாவில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி கேரளா இளைஞருக்கு குவைத் சட்டம் மன்னிப்பு வழங்கியுள்ளது.

குவைத்தில் மரணதருவாயிலிருந்த 32 வயதான சசி என்பவரே இவ்வாறு மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சசி, தன்னோடு பணிபுரிந்த சுரேஷ் என்பவரை கத்தியால் குத்திவிட அவர் மரணமாகியுள்ளார். இந்நிலையில், கொலைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சசிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

கிரிக்கெட் போட்டியொன்று தொடர்பான சர்ச்சையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த மரணத்தை ஏற்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சசிக்கு 26 வயதாகும்.

கிரிக்கெட்டில் தனது அறிவை பறி கொடுத்துக கொண்டிருக்கும் இந்த அறிவிலிகள் விளையாட்டை ஏன் இந்த அளவு சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்நிலையில், சசிக்கு மரண தண்டனை விதித்த குவைத் நீதிமன்றம், மரணமானவரின் மனைவி மன்னிப்பு வழங்கினால் மட்டுமே சசியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து கேரளாவின் எதிர்க்கட்சியிலிருந்த உம்மன் சாண்டி, சசியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

குவைத்திலிருந்த தனது நண்பர்களைத் தொடர்புகொண்ட உம்மன் சாண்டி, அவர்கள் மூலம் 10 இலட்சம் ரூபா நிதியைத் திரட்டினார். அத்துடன், ஆந்திர மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியும் 5 இலட்சம் ரூபாவினை வழங்கினார்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதி, சம்பவத்தின் போது உயிரிழந்த சுரேஷின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சசிக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சசி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கான சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.

அந்த சிறைத்தண்டனை முடிந்த நிலையில் அவர் இம்மாதம் விடுதலையானார். நாடு திரும்பிய அவர் ஆலப்புளாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டார்.

அத்துடன், தனது விடுதலைக்காகப் போராடிய கேரளாவின் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரும் தற்போதைய கேரள முதலமைச்சருமான உம்மன் சாண்டியையும் அவர் கடந்த புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நன்றி கூறுவதற்காக சசி, தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் முதலமைச்சர் , தனது கூட்டத்தையும் விரைவில் முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அவமுதலமைச்சரைக் கண்டதும் ஓடிப்போய் அவரை ஆரத்தழுவிக்கொண்ட சசி கண்ணீர் விட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ‘உங்களது முயற்சியினால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன்’ என்றும் கூறி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சசி.

ஒரு சிறந்த முதலமைச்சருக்குரிய எளிமையும் பண்பும் அடக்கமும் ஒன்றாக அமைந்தவராக உம்மண் சாண்டி நமக்கு காட்சியளிக்கிறார். ம்...ம்...நாம் பெரு மூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான் :-)

தகவல் உதவி: நல்ல நண்பன்

http://www.indiansinkuwait.com/ShowArticle.aspx?ID=21849&SECTION=0

முன்பு ரிசானா இஸ்லாமியராக இருந்தும் பாதிககப்பட்ட குடும்பத்தினர் மன்னிக்காததால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டார். சசி இஸ்லாமிய மதத்தை சேராதவராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இறந்தவரின் மனைவி மன்னித்ததால் இன்று மரண தண்டனையிலிருந்து விடுதலையாகி உள்ளதை பார்க்கிறோம். எந்த ஒரு சம்பவத்திலுமே நஷ்டமடைந்தவரின் குடும்பத்தவரின் மன்னிப்பைத்தான் இஸ்லாம் முக்கியமாக பார்க்கிறது. ஏனெனில் அவர்களுக்குத்தான் அந்த இழப்பின் உண்மையான வலி தெரியும். நமது நாட்டில் ஐந்து வருடம் ரப்பர் ஸ்டாம்பாக தனது கடமையை கழிக்கும் ஜனாதிபதிக்கு மரண தண்டனையை நீக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது சரிதானா என்பதை இங்கு சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

-----------------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட அந்த மருத்துவக் கல்லுரி மாணவியின் தந்தை இன்று பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைப் பார்ப்போம்.

டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தூக்கு தண்டனைக்கு குறைந்து, அவனுக்கு, வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அதை எதிர்ப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறதோ, அதே தண்டனையைத் தான், இவனுக்கும் கொடுக்க வேண்டும்.சிறார் நீதி வாரிய உத்தரவை எதிர்த்து, விரைவில், மேல் முறையீடு செய்யவுள்ளோம். இதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிறார் வயது வரம்பை குறைக்க, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த தேதியின் அடிப்படையில், அவனை, மைனராக, சிறார் கோர்ட் அறிவித்துள்ளது. பள்ளிச் சான்றிதழில், மோசடி செய்ய, வாய்ப்புள்ளது அல்லவா?இவ்வாறு அவர் கூறினார்.

18 வயதானவன்தான் மேஜரானவன் என்று முடிவு செய்தது யார்? மகளை இழந்த இந்த தந்தையின் கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?

இஸ்லாமிய சட்டத்தின்படி குழந்தை பெறும் பக்குவத்தை ஒரு ஆணோ பெண்ணோ அடைந்து விட்டால் அவர்கள் மேஜருக்கான தகுதி வந்து விடுவதாக இஸ்லாம் கூறுகிறது. எனவே தான் 10 வயது தாண்டி விட்டால் உங்கள் குழந்தைகளின் படுக்கையை உங்களிடமிருந்து அப்புறப் படுத்துங்கள் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் நமது நாடோ 18 வயதானவன்தான் மேஜரானவன் என்ற சட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு இந்த தந்தையின் கேள்விக்கு பதில் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. மனிதர்கள் இயற்றிய சட்டங்களில் எங்கெல்லாம் குளறுபடிகள் வருகின்றது என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சிறந்த உதாரணம்.

----------------------------------------------------------கமலின் சமீபத்திய பேட்டி....


Sunday, January 27, 2013

பிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்பு!

பிரேசிலில் இரவு விடுதி தீயில் கருகி 233 பேர் இறப்பு!

இந்த விபத்தில் இறந்த அதிகமானோர் பல்கலைக் கழக மாணவர்களாம். படித்து தனது குடும்பத்தை காக்க வேண்டிய வயதில் இரவு விடுதி கேளிக்கைகளில் ஈடுபட்டு இன்று தங்களின் உயிரையும் இழந்து நிற்கிறார்கள்.

நாட்டின் அதிபர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். கிளப்பின் கதவுகள் அனைத்தும் மூடப்படடிருந்ததால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் பிள்ளைகளை தேடி ஒவ்வொரு பெற்றோரும் கதறியபடி அலைந்தது பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.உறவினர்களை இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


-------------------------------------------------------------

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

இஸ்லாத்தை தழுவிய BAE Officer.............!!


BAE SYSTEMS என்ற இங்கிலாந்து நாட்டை தலைமையாக வைத்து செயல்படும் உலகளாவிய நிறுவனமான British Aerospace நிறுவனத்தின் Training Officer உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்,சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

Saturday, January 26, 2013

அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்! கமல் கவனிப்பாரா?

அமெரிக்க துப்பாக்கி கலாசாரம்! கமல் கவனிப்பாரா?நேற்று வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கிகளின் உரிமங்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். தினமும் துப்பாக்கிகளால் பள்ளி சிறுவர்கள் துளைக்கப்படுவது அந்த நாட்டையே அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. மித மிஞ்சிய சுதந்திரம் சமூகத்தை அமைதியாக வைக்காது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள்.

உலகின் பல நாடுகளில் தீவிரவாதம் பரவ முதல் காரணியாக செயல்படுவது அமெரிக்காதான். பல நாடுகளின் தங்களின் படைத் தளங்களை நிறுவி அந்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிட்டு அந்த மக்களின் ரத்தத்தை உறிஞ்சி தனது மக்களை குஷி படுதத நினைத்தால் விளங்குமா? தவறான வழியில் வந்த பணம் அந்த மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுக்காது பலரை மன நோயாளிகளாக மாற்றியிருக்கிறது. தாய் தந்தையர் சிறு வயதிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதால் ஆதரவின்றி நிர்க்கதியாக நிற்கும் அந்த இளைஞன் சமூகத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் உள்ள கோபத்தை உயிரிகளை எடுப்பதன் மூலம் தீர்த்துக் கொள்கிறான்.

உலகில் தீவிரவாதத்தை அப்பட்டமாக தைரியத்தோடு செயல்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா! ஆப்கன், ஈராக், லிபியா, ஏமன், ஆப்ரிக்க நாடுகள் என்று எங்கு பார்த்தாலும் தற்போது நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா என்றால் மிகையாகாது. ஒழுங்காக ஆட்சி செய்து வந்த தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்து அங்கு ஒரு பொம்மை அரசை நிறுவ வேண்டிய அவசியம் எங்கோ இருக்கும் அமெரிக்காவுக்கு ஏன்? சதாமை பொய் குற்றம் சுமத்தி கீழிறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எனவே கோபப்பட்டு அவன் ஆயுதத்தை தூக்குகிறான். அந்நிய படைகள் மீது குண்டுகளை வீசுகிறான். நம் நாட்டில் அந்நியர் ஆண்டபோது இதனை செய்தவர்களை நாம் தியாகி என்று போற்றவில்லையா?

தாலிபான்கள் செய்யும் அனைத்து செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதே நேரம் அவர்கள் பெயரால் வெளி வரும் செய்திகள் யாவும் வெளியிடுவது அமெரிக்க படைகளே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் சமீப காலம் வரை நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று பலரும் நம்பி வந்தோம். தற்போதுதான் இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இந்துத்வாவினர் உள்ளது தெரிய வந்தது. இவ்வளவு சுதந்திரமாக செயல்படும் நமது நாட்டிலேயே எந்த அளவு உண்மைகள் மறைக்கப்பட்டன என்பது நமக்கு தெரியும். ஆப்கானின் முழு கட்டுப்பாடும் அமெரிக்கா வசம் இருக்கும் போது தாலிபான்களைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். முல்லா உமரும் அமெரிக்கா சொல்லும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம். எல்லாம் அமெரிக்கர்களின் கட்டுக் கதை என்ற பெருநாள் செய்தியையும் நாம் முன்பு பார்த்தோம். ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று பொய் கூறி சதாமை வேட்டையாடி அந்த நாட்டை சின்னா பின்னப் படுத்தியதும் அமெரிக்காதான். இனி டாலரில் பெட்ரோல் வியாபாரம் இல்லை. யூரோவுக்கு மாறப் போகிறேன் என்று சொன்ன காரணம் தானே இத்தனை பிரச்னைகளையும் கொண்டு வந்து விட்டது.

எனவே முஸ்லிம் ஆயுதம் தூக்குகிறான் என்று சொன்னால் எதற்காக அவன் தூக்க வேண்டும்? அதன் சூத்திதாரி யார்? என்று தேடி அந்த நாட்டின் உண்மை முகத்தையல்லவா கமல் தோலுரிக்க வேண்டும். மாற்றாக தனது படத்தில் அமெரிக்கர்களை நலன் விரும்பிகள் போலவும் ஆப்கானிய முஸ்லிம்கள் குர்ஆனோடு ஜிஹாதுக்கு கிளம்புவதாகவும் காட்டுவது நேர் எதிர் கருத்துக்கள அல்லவா? மனுஷ்ய புத்திரன் ஒரு பேட்டியில் அமெரிக்கா தனது ஆளுமைகளை நியாயப்படுத்த பல தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்வதாக சொல்லியிருந்தார். தனது ஹாலிவுட் படங்களுக்கு பணத்தை திரட்ட இது போன்ற யுக்திகளை கையாண்டால் பணம் கொட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!

நாங்கள் முன்பு விரும்பிய கமலாக திரும்ப வர வேண்டும். இந்த தீவிரவாதங்களுக்கெல்லாம் மூல காரணியான அமெரிக்க தீவிரவாதத்தையும் அதன் உண்மையான காரணங்களையும் விசுவரூபம் பார்ட் 2 வில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே இழந்த தனது பெயரை கமல் திரும்ப சம்பாதிக்க முடியும். மனித நேயத்தை கமல் உண்மையாகவே விரும்புபவராக இருந்தால் இதனை செய்து முடிக்கட்டும்.

மற்றபடி நாளை படத்தை பார்த்து நீதிபதிகள் திரையிட அனுமதி வழங்கி விட்டால் இதற்கு மேலும் இந்த பிரச்னையை வளர்க்காமல் அதன் போக்கில் விட்டு விடுவதே நல்லது. தியேட்டரில் சென்று பிரச்னை பண்ணுவது சில விஷமிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள சாதகமாக்கி விடும். பெண்கள் குழந்தைகளோடு தியேட்டருக்கு படம் பார்க்க பலரும் வருவர். நாம் நமது எதிர்ப்பை காட்டி விட்டோம். பலரும் உண்மையை புரிந்து கொண்டனர். எனவே தீர்ப்பு கமலுக்கு சாதகமாக வந்தால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சட்டத்துக்கு கட்டுப்படுவதே நமது கடமை. அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் சகோதர பாசத்தோடு பழகி வரும் பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் நம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் பாழ்பட்டு விடக் கூடாது. முஸ்லிம்கள் தங்களின பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக!

Friday, January 25, 2013

விஸ்வரூபத்தால் ஆஸ்கார் வராது! ஆஸ்துமாதான் வரும்!

// அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை? மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு "Da Vinci code" நூல் வரமுடியுமா? அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள்? மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.//

இது நண்பர் கணேசனின் பின்னூட்டம். "முஸ்லிம்கள் விமர்சனத்தையே எதிர்க்கிற சுபாவம் உடையவர்கள்" என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். இன்று உலகம் முழுவதும் மேலும் இணைய தளம் முழுவதுமே இஸ்லாத்துக்கு எதிரான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஊடகங்கள் ஒரு சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்தால் அதன் பலன் எது வரை கொண்டு விடும் என்பதற்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சில சம்பவங்களை அனுபவித்திருப்போம். முன்பு இவர்களால் ஊடகம் கைகளில் இருந்தால் இஸ்லாமியர்களைப் பற்றிய அவதூறுகளை சபை ஏற்ற முடிந்தது. எதிர்த்து பதில் கொடுக்க முஸ்லிம்களிடம் எந்த ஒரு ஊடகமும் இல்லை. இன்று வரை அதுதான் நிலை.

ஆனால பத்திரிக்கை, டிவி, சினிமா போன்ற ஊடகங்கள் முஸ்லிம்களிடம் தற்போதும் இல்லை என்றாலும் இணையம் என்ற மகத்தான தகவல் தொடர்பு சாதனம் ஒரு நொடியில் பல லட்சக்கணக்கான மக்களிடம் செய்திகளை சேர்ப்பித்து விடுகின்றது. இத்தனை காலம் இவர்கள் முஸ்லிம்களைப் பற்றி பரப்பி வந்த அவதூறுகள் வரிசையாக சரிந்து வருவதை பார்தது மனம் நொந்து போய் உள்ளார்கள். அந்த ஆற்றாமையால் வரக் கூடிய வார்த்தைகளே விமரிசனத்தை எதிர்க்கிறோம் என்பது.

நாம் என்று விமரிசனத்தை எதிர்த்தோம். தமிழகத்தில் எந்த ஒரு மதமாவது முஸ்லிம்கள் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியைப் போன்று எங்காவது நடத்தியதுண்டா? தமிழகத்தின் அனைத்து மாவடடங்களின குக் கிராமங்களை கூட விட்டு விடாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்துக்களும் கிறித்தவர்களும் நாத்திகர்களும் எவ்வளவு கோபம் வரக் கூடிய கேள்விகளைக் கேட்டாலும் புன் சிரிப்பு மாறாது முஸ்லிம்கள் தரப்பு பதிலளித்துக் கொண்டிருக்கிறது. கேள்வி கேட்பவரிடம் என்ன கேள்வி என்று முன்பே கேட்டு வாங்கிக் கொள்வதும் இல்லை. இந்த அளவு அனுமதி கொடுக்கப்பட்டு தமிழகத்தில் எங்காவது வேறுமதங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியது உண்டா? 'இந்து ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'கிறித்தவம் ஓர் இனிய மார்க்கம்' அல்லது 'நாத்திகம் ஓர் இனிய மார்க்கம்' என்று நிகழ்ச்சிகளை நீங்கள் எங்காவது நடத்தியது உண்டா? உங்களால் இவ்வளவு சுதந்திரமாக மாற்று மதத்தவர்களை கேள்வி கேட்க வைக்க முடியுமா? அவர்கள் வைக்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லத்தான் முடியுமா? அத்தனை இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் மறுஒலிபரப்பும் செய்யப்பட்டு உலக மெங்கும் நிகழச்சிகள் போய் சேருகின்றன. தீவிரவாதம், குழந்தை திருமணம், ஜிஹாத், பலதார மணம், முகமது நபி பல திருமணங்கள் செய்தது, தற்போது உலகில் நடக்கும் குண்டு வெடிப்புகள், இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகள் என்று ஒன்று விடாமல் ஹிந்துக்களையே கேள்விகள் கேட்க வைத்து நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோமே எங்களைப் பார்த்தா சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் என்கிறீர்கள்?

//எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள். //

அடுத்து இது சார்வாகனின் பிதற்றல். லத்தீப், சமது காலங்களில் முஸ்லிம்களிடம் கல்வியறிவு இல்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. வீட்டுக்கு ஒரு பட்டதாரி வருடந்தோறும் வந்து கொண்டிருக்கிறார். சொத்தை விற்றாவது குழந்தைகளை படிக்க வைக்கும் மனப்பாங்கு முஸ்லிம்களிடம் தற்போது உள்ளது. இனியும் திராவிடம் பேசியோ, நோன்பு கஞ்சி குடிததோ, மணி மண்டபம் கட்டியோ, மீலாது மேடைகளில் வீர வசனம் பேசியோ இஸ்லாமியர்களின் ஓட்டை வாங்க முடியாது.

மேலும் எண்ணெய் வளம் இருக்கும் வரைதான் இந்த வஹாபிய எழுச்சிகளெல்லாம். எண்ணெய் தீர்ந்து விட்டால் வஹாபியமும் படுத்து விடுமாம். சார்வாகனுக்கு வரலாறு தெரியவில்லை என்பதால் நாம் அவர் மேல் கோபம் கொள்ள முடியாது. இஸ்லாமிய வரலாறு மிக எழுச்சியாக இருந்த காலமெல்லாம் முஸ்லிம்கள் வறுமையில் இருந்த காலங்களே! இரண்டு பேரிச்சை மழங்களை தின்றும், காய்ந்த இலைகளை கசக்கி தண்ணீரில் நனைத்து குடித்தும் வாழ்ந்த காலங்களில் இஸ்லாம் எழுச்சியோடு இருந்தது. என்று அரபு நாடுகளில் பெட்ரோல் வந்து பணம் புழங்க ஆரம்பித்ததோ அன்று இஸ்லாம் தனது எழுச்சியை சிறிது இழக்க ஆரம்பித்தது. சார்வாகன் சொல்வது போல் அரபு நாடுகளில் பெட்ரோல் தீர்ந்தால் தவ்ஹீது (வஹாபி) இயக்கம் முன்னை விட மிக வீரியமாக தனது செயல்பாடுகளை உலகமெங்கும் கொண்டு வரும்.

யாருக்குமே கையில் பணம் இருந்தால் வம்பு தும்புக்கு போகாமல் தனது சொத்துக்களை காக்கவே முயற்சிப்பர். அதுதான் இன்று உலக ரௌடி அமெரிக்காவுக்கு கேட்பதை கொடுக்கும கட்டாயத்துக்கு சில நாடுகள் தள்ளப்படுகின்றன.

அடுத்து இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதுதான் நமது குறிக்கோள் என்று பொய்யான பரப்புரையை பலர் பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய ஆட்சி அமைப்பது என்பது ஒரு முஸ்லிமுக்கு இடப்பட்ட கட்டளை அல்ல. ஐந்து முக்கிய கடமைகளில் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதும் வராது. இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று பிரித்துக் கொண்டு போன பாகிஸ்தானின் இன்றைய நிலையை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். குர்ஆனோ, ஹதீதுதுகளோ இவ்வாறு ஆட்சி அமைக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு கட்டளையும் இட வில்லை. யதார்த்தத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள நாடுகளை விட சிறுபான்மையாக உள்ள நாடுகளில்தான் முஸ்லிம்கள் தங்களின் கடமைகளை சரிவர செய்து வருவதைப் பார்க்கிறோம். எனவே இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்ற பீதி தேவையில்லாத ஒன்று.

//மிதவாதிகள் எப்போதுமே இவ்வாறான கடும்போக்கு கட்சிகளிடம் இருந்து விலகி நிற்பதே சாலச் சிறந்தது. இல்லை என்றால் மூளைச் சலவை செய்தும், போலி வாக்குறுதிகளைக் கொடுத்தும் பயன்களை அனுபவித்து விட்டு இயலாக் கட்டத்தில் நட்டாற்றில் அதோகதியாக விட்டுவிட்டு மறைந்துவிடுவார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்குத் தேவை தொலைநோக்கு சிந்தனையும், சமத்துவம், ஜனநாயகம் மீது நம்பிக்கைக் கொண்ட காயிதே மில்லத் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் தான். //

'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்'. அது போல் முஸ்லிம்களின் அரசியல் எதிர் காலத்துக்கு இக்பால் செல்வன் ஆலோசனை வழங்குகிறார். அதிலும் தவ்ஹீத் ஜமாத், தமுமுக போன்ற கட்சிகளில் சில ஆயிரம் பேர்தான் ஆதரவாளர்கள் என்று கூறுவதை இவரது சகாக்களான ராஜ நடராஜனோ, சார்வாகனோ கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு சிறிய போராட்டத்துக்குக் கூட எந்த ஆரவாரமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விடுவதை நமது நாட்டு உளவுத் துறை நன்கு அறியும். கனடாவில் உட்கார்ந்து கொண்டு பொஃபேக்களில் தனது பைங்கிளிக்காக காத்துக் கொண்டிருக்கும் இக்பால் செல்வனுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா! :-)

முஸலிம்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள், சிறந்த அரசியல் தலைமைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறி வருகிறார்கள், சமீப காலமாக இந்து முஸ்லிம் ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இன விடுதலை அடைய பெரியாரின் வழி காட்டுதலான இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். ஆதிக்க சாதிகளக்கு பொருக்குமா? இந்துத்வாவுக்கு பொருக்குமா!

எனவே சார்வாகன் என்ற பெயரிலும், இக்பால் செல்வன் என்ற பெயரிலும், நச்சுப் பாம்புகள் படமெடுத்து வருகிறது. விஷப் பல்லை எந்த ரீதியில் பிடுங்கி சமூகத்தில் அமைதியை கொண்டு வருவது என்பது முஸ்லிம்களுக்கும் இந்து நடுநிலையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும். நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் அதை கச்சிதமாக செய்தும் முடிப்பர்.

விஸ்வரூபம் போராட்டத்துக்கு பிறகாவது நமது சென்சார் துறை சற்று விழித்துக் கொண்டு இது போன்ற பிரச்னைக்குரிய படங்களை வெளியிடுவதை தடை செய்ய முன்வர வேண்டும். இஸ்லாமியரகளை எதை சொன்னாலும் பொருத்துக் கொண்டு செல்வார்கள் என்ற காலம் மலையேறி விட்டது. இடைக்காலத் தடை இந்த படத்துக்கு வந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டு தனது படத்தை கமல் வெளியிட்டுக் கொள்ளட்டும். அமெரிக்காவை புகழ்ந்தும் முஸ்லிம்களை இகழ்ந்தும் பட்ம் எடுத்தால் ஆஸ்கார் உடனே கிடைத்து விடும் என்று இந்த உலக நாயகனுக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போல. அதான் இந்த அம்பி அவசப்பட்டுடுத்து.

'முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்' என்று முன்பு பெரியார் சொன்னது தற்போது ஞாபகத்தில் வருகிறது.

அவதூறுகளை படமாக எடுத்தால் ஆஸ்கார் வராது அம்பி! படம் நஷ்டமாயிடுத்தே என்று ஆஸ்துமாதான் வரும்! :-) இனி பார்த்து சூதனமா நடந்துக்கோ...வர்ட்டா...

டிஸ்கி: சில வேலைகள் காரணமாக இரண்டு நாள் இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. உடன் போனிலும், மெயிலும் பல நாடுகளிலிருந்து 'என்ன ஆச்சு பாய்! உடம்பு சரியில்லையா' என்று அன்போடு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி! நலமுடன் உள்ளேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Tuesday, January 22, 2013

உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

உலக நாயகன் ஆவதற்கு தகுதி இவைகள்தானா?

'ஆஸ்கார் வாங்கி இந்தியாவை தலைநிமிர வைக்கப் போகிறார் என்று முன்பு ஒரே அமர்க்களப்படுத்தினார்கள். ஆனால் வெளியில் சொல்லாமல் அமைதியாக சென்று ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ரஹ்மான் கொண்டு வந்து விட்டார். தற்போது 'உலகநாயனே' என்று பலராலும் போற்றப்பட்டு 'ஐநாவும் உன்னை அழைக்கும்' என்றெல்லாம் ஏகத்துக்கும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். திறமை இருந்து அந்த அங்கீகாரங்களெல்லாம் கிடைத்தால் இந்தியன் என்ற முறையில் எல்லோரும் பெருமைப்படலாம்.

ஆனால் இவரது தொடர்ச்சியான பல படங்கள் ஆன்மீகத்தை குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. இவர் சார்ந்த இந்து மதத்தில் உள்ள குறைகளை படங்களில் சொல்வது அவருக்கு ஓரளவு உரிமை இருப்பதாக சொல்லலாம். ஆனால் இஸ்லாத்தை தனது படங்களில் நுழைக்கும் பொது உண்மை நிகழ்வுகளை கதைக் கருவாக கொண்டால் யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து இஸ்லாமிய அமைப்பினருமே ஒட்டு மொத்த குரலில் 'இந்தியாவில் இதுவரை இந்த அளவு முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு படம் வந்ததில்லை' என்று சொல்லும் போது அந்த படத்தின் தரத்தைப் பற்றி நாம் ஓரளவு கணித்து விடலாம்.

இவருடைய அப்பா சுதந்திர போராட்டக் காலத்தில் வெள்ளையர்களால் சிறையில் அடைக்கப்பட்டபோது அதே செல்லில் ஹாஸன் என்ற ஒரு முஸ்லிம் பழக்கமாகி இருக்கிறார். சிறைக்கு வெளியேயும் அந்த நட்பு தொடர்கிறது. அவரது அன்பின் ஞாபகார்த்தமாக தனது மூன்று குழந்தைகளுக்கும் சந்திர ஹாஸன், சாரு ஹாஸன், கமல ஹாஸன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் இவரின் தந்தை. தந்தை இவ்வாறு இருக்க பிள்ளையோ இஸ்லாத்தை எந்த வழியிலாவது கொச்சைப் படுத்த வேண்டும்: அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தனது படத்தில் முஸ்லிம்களை மிகக் கேவலமாக சித்தரிக்க முயல்கிறது. தனது குழந்தைகளுக்கு ஒரு இஸ்லாமியரின் பெயரை வைக்கும் அளவுக்கு அந்த முஸ்லிம் கமலின் தந்தையோடு அன்போடு பழகியிருந்துள்ளார். அதேபோன்று தமிழக கிராமங்களை சென்று கொஞ்சம் பாருங்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் உறவு முறை யோடு அன்போடு நட்பாக பழகி வருகின்றனர். அது பொருக்கவில்லையா தங்களுக்கு. இவ்வாறு சமூகங்களுக்கிடையே பிணக்கை உண்டு பண்ணித்தான் கலை சேவை செய்ய வேண்டுமா கமலஹாஸா! சிந்திக்க மாட்டீரா!

பிஜேபியின் ஊது குழலாக இருந்த இவரது துணைவி கவுதமியின் பேச்சை கேட்டு இப்படி கதையை வைத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். இந்த கூத்தாடிகள் பணம் பண்ணுவதற்காக எதையாவது சிக்கலான பிரச்னையை கையிலெடுத்து காசு பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். இது போன்ற படங்களை நமது சென்சார் எவ்வாறு அனுமதிக்கிறது? ஒரு சமூகத்தை குற்றவாளிகளாக சிததரித்தால் அதனால் சமூகங்களில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்கு தெரியாதா?

இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் முஸ்லிம்களை கைது செய்வது காவல் துறையின் வேலையாக இருந்தது. 10 வருடங்கள் 20 வருடங்கள் விசாரணைக் கைதிகளாகவே இருந்து பின்னர் விடுவிக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போது உண்மை குற்றவாளிகள் அனைவருமே இந்து பாசிச அமைப்புகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று புலனாய்வு சொல்கிறது. வரிசையாக உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று கூட நமது உள்துறை அமைச்சர் இந்திய நாட்டின் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கு பின்னாலும் ஆர்எஸஎஸ, பிஜேபி உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு ஆதாரங்களும் உள்ளதாக சொல்லியிருப்பது பலரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு குற்றம் எவனோ செய்திருக்க அதன் பலனை முஸ்லிம்கள் இதுவரை அனுபவித்தது பத்தாதா? இன்னுமா முஸ்லிம்களின் ரத்தம் வேண்டும்?

தனது படத்தில் இந்துத்வாவாதிகள் மாலேகானிலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸிலும், மக்கா மஸ்ஜிதிலும் எவ்வாறு குண்டு வைத்தாரகள். எவ்வாறு அதை காரணமாக வைத்து முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டனர் என்ற கதையை எடுக்க தைரியம் உள்ளதா? அப்படி எடுத்தால் படத்தை முதலில் சென்சார் போர்டுதான் அனுமதிக்குமா?

சமூகத்தை சீர்திருத்த வருபவன் தனது சொந்த வாழ்வில் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். இந்த யோக்கிய சிகாமணி தனது சொந்த வாழ்விலாவது தூய்மையை கடைபிடித்தது உண்டா? வாணி கணபதி போய், சரிஹா போய் தற்போது உள்ளது கவுதமி. கவுதமியையும் இவர் இதுவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. 'உங்களுக்கு ஆண்மை இல்லையாமே?' என்று ஒரு நிருபர் குதர்க்கமாக கேட்க 'என்னோடு கூட நடித்த நடிகைகளிடம் கேட்டுப் பாருங்கள்' என்று அருள் வாக்கு சொன்னவர்தான் இந்த ஒலக நாயகன். இந்த சூழலில் வளர்ந்த இவர் மகள் இன்று எந்த அளவு உடையை களைய வேண்டுமோ அந்த அளவு களைந்து கலைச் சேவை செய்து வருகிறார். மகளின் திறமையைக் கண்டு தகப்பனுக்கு அவ்வளவு பூரிப்பு. இப்படி தனது சொந்நத வாழ்விலேயே அநேக அசிங்கங்களை சுமந்து கொண்டிருக்கும் இவர் சமூகத்தை எந்த முகத்தோடு திருத்த வருகிறார்? திருத்துவதாக இருந்தாலும் உண்மை நிகழ்வுகளை அல்லவா கதைக் கருவாக அமைக்க வேண்டும்? ஏற்கெனவே இங்குள்ள பத்திரிக்கைகள் முழுவதும் காவி மயமாகி முஸ்லிம்களை தூற்றியே எழுதி வருகின்றன. தற்போதுதான் தகுந்த பதிலடி கொடுக்க ஆரம்பித்தவுடன் தினமலரும், தினமணியும் தங்கள் வாலை சுருட்டிக் கொண்டு நிதானமாக செய்திகளை தருகின்றன. இந்த நிலையில் இந்த உலக நாயகன் திரும்பவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தனது அரிப்பை தீர்த்து கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

முஸ்லிம்கள் வன்முறைக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காமல் சட்டத்தின் துணை கொண்டு இந்த படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க முயற்சிக்க வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால் இதனை கமலால் செய்து விட முடியும். முடியவில்லை என்றால் இன்னும் ஒரு வாரம் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யலாம். ஒரு கலை வியாபாரியான கமல் தனது படத்தின் சில காட்சிகளை மாற்றியே தீர வேண்டும் என்று உரிமையோடு கோரிக்கை வைக்கிறோம்.

--------------------------------------------------------

அடுத்து இவர் உலக நாயனாம். ஹாலிவுட் படங்களையும் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக கேள்விப்பட்டேன். ஆனால் இவரின் அதிகமான தமிழ் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுட்டவையாகவே உள்ளன. ஒரு கால் ஹாலிவுட் படங்களை இயக்க ஆரம்பித்தால் நம் தமிழ்நாட்டின் பழங் கதைகளையெல்லாம் சுட்டு மோல்டு பண்ணி ஆஸ்கார் வாங்க முயற்சிப்பாரோ...

சமீபத்தில் இணையத்தில் உலா வந்தபோது கமல் எந்தெந்த படங்களிலிருந்தெல்லாம் கதைகளை சுட்டுள்ளார் என்ற விபரத்தைப் பார்த்தேன். மேலதிக தகவலுக்காக அதனைத் தருகிறேன்.


1. பஞ்ச தந்திரம் – Very bad things

2. அன்பே சிவம் – Planes, traines & automobiles

3. அவ்வை சண்முகி – Mrs. doubtfire

4. தெனாலி – What about Bob?

5. மஹாநதி – Hard core

6. இந்திரன் சந்திரன் - Moon over parador

7. மகளிர் மட்டும் – 9 to 5

8. சதிலீலாவதி – She devil

9. சூரசம்ஹாரம் – Witness

10. நள தமயந்தி – Green card

11. நம்மவர் – The Principal

12. ராஜ பார்வை – Butterfiles are free

13. குணா – Tie me up, Tie me down

14. பம்மல் கே சம்பந்தம் – The Bachelor

15. மன்மதன் அம்பு – Romance on the high seas

16. விருமாண்டி – Rashomon, Life of David Gale

17. நாயகன் – God father

18. வாழ்வே மாயம் – Premabhisekham

19. நீல மலர்கள் – Anuraag

20. உன்னைப் போல் ஒருவன் – A Wednesday

21. குருதி புனல் – Drohkaal

22. வசூல் ராஜா எம்பிபிஎஸ் – Munnabhai m.b.b.s

23. எனக்குள் ஒருவன் – Karz (in turn from the reincarnation of Peter proud)

ஹாலிவுட் படங்களையும் மற்ற மொழி படங்களையும் எவ்வாறு திறமையாக காப்பி அடிப்பது என்பதற்கு வேண்டுமானால் ஒரு ஆஸ்கார் விருதை உருவாக்கி அதற்கு நமது கமலை பரிந்துரைக்கலாம். :-)

நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலியையும், ராஜ பார்வையையும், மூன்றாம் பிறையையும் பலமுறை பார்த்துள்ளேன். அந்த அளவு அபிமானத்துக்குரிய நடிகர். தற்போது இணையத்தில் எழுத வந்தவுடன் சினிமா அதிகம் பார்ப்பதும் இல்லை. இன்றும் இவர் மேல் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை பொய்க்காமல் இருக்க ஆட்சேபகரமான சீன்களை நீக்கி விட்டு ஆஸகார் ம்ட்டுமல்ல ஐநாவுக்கே சென்று வரட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை.குற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்!

குற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்!

தற்போது ரிசானாவின் தண்டனையை காரணமாக வைத்து இணையத்திலும் பத்திரிக்கை உலகிலும் பலரும் இஸ்லாமிய சட்டங்கள் பிற்போக்கு தனமானவை என்ற வாத்த்தை வலிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ரிசானாவின் மேல் இவர்களுக்குத்தான் பாசமும் அன்பும் உள்ளது போலவும் முஸ்லிம்கள் மரக்கட்டைகளைப் போன்று உணர்ச்சியற்று போய் விட்டார்கள் என்றும் எழுதாத பதிவர்கள் இல்லை. இதே மூதூரைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்ட சிறுவர்களை, பெண்களை, வயதானவர்களை சகட்டு மேனிக்கு சுட்டும் வெட்டியும் அதுவும் இறைவனைத் தொழக் கூடிய பள்ளியிலேயே நிறைவேற்றினார்களே! அப்போது இந்த கோவிகண்ணன்களும் சார்வாகன்களும் இக்பால் செல்வன்களும் பொங்கி எழவில்லை. பிரபாகரனுக்கு எதிராகவோ பொட்டு அம்மனை கண்டித்தே ஒரு துரும்பைக் கூட இவர்கள் அசைக்கவில்லை. ஏனெனில் போனது முஸ்லிம்களின் உயிர்கள் அல்லவா? அப்பொழுது இதே நியாயத்தோடு கண்டித்து பதிவு எழுதியிருந்தால் ரிசானாவைப் பற்றியும் கேட்க உரிமையிருப்பதாக எண்ணலாம்.

இவர்களுக்கெல்லாம் ரிசானாவின் மீது உள்ள பாசத்தை விட இஸ்லாமிய சட்டங்களை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். விமர்சனங்களை வைப்பதை நாம் குறை காணவில்லை. அது எப்படிப்பட்ட விமரிசனமாக இருக்க வேண்டும்? தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவரும் முரண்பட போவதில்லை. அது இஸ்லாமிய சட்டமாக இருந்தாலும், உலக சட்டங்களாக இருந்தாலும் தண்டனை முறைகளில் மாற்றங்கள் இருக்கலாமே யொழிய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இங்கு ரிசானா விஷயத்தில் தண்டனையை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட வழி முறைகள், மருத்துவ அறிக்கைகள், வழக்காடு மன்றத்தின் செயல்பாடுகள் இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நாம் வாதத்தில் வைக்கலாம். அது நியாயமானதே. ஆனால் கொலைக்கு கொலை, கண்ணணுக்கு கண் என்ற இந்த சட்டமே காட்டு மிராண்டி தனமானது என்ற வாதத்தை வைப்பவர்களுக்கு சில விளக்கங்களை சொல்கிறேன்.

சவுதி அரேபியாவைப் பொருத்த வரை தொழில்கள் அனைத்தும் வெளி நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கடை வேண்டுமானால் சவுதிகளின் பெயர்களில் இருக்கலாம். மாதம் 300 ரியாலோ 500 ரியாலோ சவுதிகளுக்கு கொடுத்து விட்டு முழு தொழில்களையும் கவனிப்பது இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேசத்துக் காரர்கள் தான். குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள்தான் சவுதிகளின் நேரடி பார்வையில் இருக்கும்.

தற்போது நான் அலுவலக வேலையில் இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஃபர்னிசர் ஷோ ரூமில் சேல்ஸ் மேனாக இருந்தேன். தினமும் நடக்கும் அனைத்து வியாபார பணமும் என்னிடமே இருக்கும். ஒரு நாளுக்கு 20000 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் சில நேரம் 50000 ஆயிரம் ரியால்(7 லட்சம் ரூபாய்) கூட எனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும். தொழுகை நேரங்களில் கடை பூட்டப்படும் ஆகையால் பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்று எனது ஓனர் சொல்லியிருப்பதால் பணம் என்னிடமே இருக்கும். பல வருடங்கள் வேலை செய்தும் ஒரு முறை கூட எனக்கு திருடர்களிடமிருந்து எந்த பிரச்னையும் வந்ததில்லை. மறுநாள் இந்த பணத்தை பேங்கில் செலுத்தி விடுவேன். இந்த அளவு பாதுகாப்போடு நான் வேலை செய்ததற்கான காரணமே சவுதி நாட்டின் சட்டங்கள் தான்.

எனக்கு மட்டும் அல்ல இந்த பிரச்னை. சவுதியில் முழுவதும் கடைகளில் நிற்பவர்கள் அதிகம் நம்மவர்களே! கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டம் இருப்பதால் தான் வெளிநாட்டவர்களால் இந்த அளவு நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது. இந்த சட்டத்தை நீக்கினால் அதனால் பாதிக்கப்படுவதும் இந்திய பாகிஸ்தானிய மக்களே. ஏனெனில் ஆப்ரிக்கர்களின் கை வரிசை நிறைந்த நாடு இது. கொஞ்சம் சட்டத்தை தளர்த்தினால் கடைகளில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் வெகு இலகுவாக நடக்கும். இந்த அளவு சட்டம் இருக்கும் போதே அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடந்து வருகிறது. எனவே நமது நாட்டைப் போலவே எல்லா நாட்டு சூழ்நிலைகளும் இருந்து விடும் என்று எண்ணக் கூடாது.

மைனர் பெண்ணுக்கு தண்டனை அளிக்கலாமா? என்றும் கூறுகின்றனர். இஸ்லாம் 18 வயதை நிர்ணயிக்கவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் குழந்தை பெறும் பக்குவத்தை அடைந்து விட்டாலே அவர் மேஜராகி விடுகிறார். மும்பை பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதுக்கு குறைவானவனே! அவனையும் தூக்கில் இட வேண்டும் என்று பலர் இன்றும் கூறி வருவதைப் பார்ககிறோம். ஆனால் ரிசானா விஷயத்தில் மாறுபட்ட கொள்கையை வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ரிசானாவை மன்னரே மன்னித்து அவரது அதிகாரத்தை பிரயோகித்து வெளியாக்கியிருக்கலாமே என்று பலர் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக மன்னர் குடும்பத்திலேயே நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம்.

2002 காலப்பகுதியில் சவுதி அரேபியா ரியாத் பிரதேசத்தில் இளவரசர் நாயிப் பின் சவூத் (15 வயது ) தனது சமவயதுடைய ஒரு நண்பரைக் கொலை செய்தபோது இளவரசருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை வருடங்கள் அரச குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதிவரை அவர்கள் மன்னிக்க முன்வராதபோது இளவரசர் நாயிபுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக உரிய இடத்திற்கு அழைத்துச்சென்று, தண்டனை நிறைவேற்றுவதற்காக தயாரான வேளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அமீர் நாயிப் அல்குர்ஆனை முழுக்க மனனம் செய்வதாக வாக்களித்தால் தாம் அவரை மன்னிப்பதாகக் கூறினர். அதன்படி கடைசி நிமிடத்தில் அவரது தண்டனை நிறுத்தப்பட்டது.

ஒரு சவுதி குடும்பம் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள். இது போன்று பல நிகழ்வுகள் சவுதியில் இடம்பெற்றுள்ளன.

இவை சவுதியின் நீதித்துறையின் சுதந்திரமான நிலையையே எடுத்துக்காட்டுகின்றன.

மன்னரின் குடும்பத்தினருக்கே இந்த நிலை என்றால் நம்மைப் போன்ற வெளி நாட்டு பிரஜைகளின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சட்டத்தை திருத்தினால் என்ன என்ற ஒரு வாதமும் வைக்கப்படுகிறது. இந்த குர்ஆனின் சட்டமானது இறைவனால் அருளப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இதை திருத்துவதற்கு மனிதர்கள் எவருக்கும் உரிமை கிடையாது. உலக முடிவு நாள் வரை இந்த சட்டங்கள் யார் எதிர்த்தாலும் மாற்றப்படாமலேயே இருந்து வரும். ஒரு உயிர் போனாலும் அதனால் பல உயிர்கள் பாதுகாக்கப்டுகிறது என்பதாலேயே இந்த சட்டத்தை மனித குலத்துக்கு அளித்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். எனவே சட்டத்தை அமுல்படுததுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரிகாணுவோம். இறைவனின் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய இடம் தர மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக நபித் தோழர் உசாமா அவர்கள் நபி அவர்களிடம் பரிந்து பேசினார்கள். அப்போது நபி அவர்கள், "உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவே தான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் புதல்வி ஃபாத்திமாவே இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்றார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6787

Sunday, January 20, 2013

இந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம் : ஷிண்டே!இந்தியாவின் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்வா காரணம் : ஷிண்டே!

இந்தியாவின் தேசபக்திக்கு நாங்கள் ஒருவரே ஏக போக உரிமை என்று வாய் கிழிய பேசி வரும் இந்துத்வாவாதிகளே இந்த நாட்டின் பயங்கர வாத செயல்களுக்கு காரணம் என்று நம் நாட்டின் உள்துறை மந்திரியே சொல்லும் அளவுக்கு இவர்களின் தேச பக்தி சந்தி சிரிக்கிறது. சொன்னது சாதாரண காமா சோமா அல்ல. நாட்டின் உள்துறை மந்திரி. தனக்கு கிடைத்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இதனை சொல்வதாக கூறியுள்ளார். இனி பத்திரிக்கை செய்தியை பார்ப்போம்.

Union Home Minister Sushil Kumar Shinde on Sunday accused BJP and RSS of conducting ‘terror training’ camps to spread saffron terrorism in the country.

“Reports have come during investigation that BJP and RSS conduct terror training camps to spread terrorism...Bombs were planted in Samjhauta express, Mecca Masjid and also a blast was carried out in Malegaon.

“We will have to think about it seriously and will have to remain alert,” he said at the AICC meeting in Jaipur.

http://www.thehindu.com/news/national/bjp-rss-promoting-saffron-terrorism-shinde/article4325767.ece?homepage=true

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில், சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மலோகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்து அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.

ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷிண்டேவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு நிறம் ஏதும் கிடையாது. இதனை சோனியா ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார் என கூறினார்.

உண்மையை எத்தனை காலம் சாமர்த்தியமாக மறைத்தாலும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும் என்பதற்கு ஷிண்டேயின் பேச்சு நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவை ஆள வேண்டும். ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். இந்துத்வ கொள்கைகளை சிறுக சிறுக அமுல்படுத்த வேண்டும் என்ற நோக்கததிற்காக நாட்டையே ரண களமாக்க துணிந்த இந்த இந்துத்வாவினரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் நமது நாடு விளங்குமா? இதுதானா உங்களின் தேசபக்தி. உண்மையிலேயே இந்த நாசகார செயல்களை எல்லாம் செய்த நீங்களெல்லாம் ஒரு இந்தியன்தானா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தனது நாட்டை சீரழிக்கும் எண்ணம் கொள்பவன் ஒரு தேசபக்தனா? தேர்தல் நெருங்க ஆரம்பித்து விட்டது. இனி ராமபக்தியும் இந்த இந்துத்வாவினருக்கு பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கும். 'ராமர் கோவிலை கட்டியே தீருவோம்' என்ற கோஷங்களை இனி இவர்கள் எழுப்பும் தமாஷை தினமும் பார்க்கலாம்.

பாகிஸ்தானின் தீவிரவாதம், நக்ஸல்களின் தீவிரவாதம் போன்றவையும் நமது நாட்டை அச்சுறுத்தி வருகின்றன. இந்த இரண்டையும் அனைத்து மக்களும் நன்றாகவே அறிந்து எதிரிகளை இனம் கண்டு ஒதுக்கி விடுகின்றனர்.. ஆனால் இந்த இந்துத்வாவினரோ தேசபக்தி என்ற போர்வையில் மக்களை நெருங்கி தீவிரவாதத்தை வளர்க்கின்றனர். மற்ற இரண்டை காட்டிலும் நமக்கு பெரும் ஆபத்து இந்த தேசபக்தி என்று பகல் வேஷம் போடும் இந்த இந்துத்வாவினர்களால்தான்.

தென் நாட்டு மக்கள் மிக விழிப்புடனேயே இவர்களின் அராஜகத்தை கண்டு இன்று வரை ஒதுக்கியே வந்துள்ளனர். வட மாநிலங்களில் இவர்களை இன்னும் சரியாக புரிந்து கொள்ளாத மக்களே உள்ளனர். படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணம். முலாயம் சிங், நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ், பாஸ்வான் போன்ற தலைவர்கள் இவர்கள் அருகிலேயே செல்ல முயற்சிப்பதில்லை. மோடியை தனக்கு பிரசாரம் பண்ண வர வேணடாம் என்று தடுத்து நிறுத்தி அந்த தேர்தலில் வெற்றியும் பெற்று சாதிதது காட்டினார் நிதிஷ் குமார். மத சார்பற்ற மக்கள் ஓரணியில் நின்று இந்த வன்முறையாளர்களை இந்திய அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும். அன்றுதான் இந்தியா ஒரு வல்லரசாக நிமிரும்.

பாரதியாரையும் கவர்ந்த இஸ்லாம்![20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புதுமனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, “இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை” என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]

இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக் கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக்காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் ‘பாத்திஹா’ (ஜபம்) ஓதி முடிந்துவிட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்.

பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ் ஜோதி
(அல்லா, அல்லா, அல்லா!)

கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்
நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)

எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம் பின்வருமாறு:
பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.

மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரம்மாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தக் கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது. முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்கிரஹாரதலையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக்கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தார் கோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிக கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்: “நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர் தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்) அவர் நம்மைப்போல் தோலுடம்பும் கைகால் முதலில் உறுப்புக்களும் உடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக் காத்து எல்லாவற்றையும் வடிவு மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவும் உடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதே சரியான பூஜை, இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராத மாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி “இஸ்லாம்” என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள். ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்துவாழ முதற்பட்டு வாருங்கள்” என்று முஹம்மது நபியாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து, “மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா, முஹம்மதுர்ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது” என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.

இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தம் குமாஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்து பிறகு அவருக்கே மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்துகொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதினின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே இருந்து, நீ நோய் வேதனை பொறுக்க மாட்டாமல் அழுவதையும், இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்ப வேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றப்படி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புக்களாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே, இங்கிலீஷில், “எந்த மனிதனும் தன் சொந்த ஊரில் தீர்க்கதரிசியாக மாட்டான்” என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.

முஹம்மது நபியை முதல்முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யம் தோன்றும்படி, கதீஜா பீவியும் கடவுளின் முக்கிய பக்தரென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும், பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்த மஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி என்பதும், பக்த குல சிரோமணி என்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.

மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்துவிட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்கிரகாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டிவிட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப்படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டு வழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர்களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்: “ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!” என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸ்ல்லம்) அவர் சொல்லுகிறார்;

“கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்று கூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கு ஒரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்த போதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸ்ர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதனால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.

இந்த ஸமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே, என் மனத்தில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று. ஸாதாரண காலங்களில் தைர்யத்துடன் இருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கி வரும்போது, “கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை” என்று மனத்துடன் சொல்வோன் உண்மையான தெய்வபக்தன். தெய்வ பத்தி ஒன்றைத் தவிர வேறெந்தச் சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறிவரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்தப் பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. “பாம்பென்றால் படையும் நடுங்கும்.” இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கல் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணை கொண்டு முஹம்மது நபி வென்றார். ‘கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கையும்’ அவரிடத்தே இருந்தன. ஆதலால் அவருக்கு,

எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
விடுத்ததாய் மொழிக் கொங்கணும் வெற்றி
வேண்டு முன்னர் அருளினர் அல்லா.

இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின்மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின்மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும் நெடுங்காலத்து பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. அப்போது அங்கு ஞான ஒளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.

அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ
எங்கும் ஏன் ஏன் என்ற தென்னே, பராபரமே

என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.

இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமெலீட்டால், “கடவுளே கடவுளே” என்று கதறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டியிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும், “ஏன், ஏன்” என்று மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகிக தந்திரி. வியாபாரமானாலும் யுத்தமானாலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.

எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினினும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸ்த்யத்திற்கும் அல்லாவிற்கும் முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.

இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதை நோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார்.

அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கும் அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நம் நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்பு இல்லை. கேள்வியால் மஹா பண்டிதரானார்; ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாத பக்தியால் அரசனும், கலீபும் தீர்க்கதரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும் வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூ பக்கரின் குமாரியான ஆயிஷா பீவியைப் பிரதான நாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி. 632-இல் இந்த மண்ணுலகை விட்டு முஹம்மது வானுலகம் புகுந்தார்.

மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸ்ஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவ பண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரனை செய்வது வழக்கம். அதனின்றும் விக்கிரஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய “பழைய ஏற்பாடு” என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்துகொண்டார். கிருஸ்துவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின் அவதாரமாக ஒப்புக் கொள்ளவில்லை. விக்கிரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கும் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும், அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும் அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமே யல்லது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்து பின்வருமாறு:

இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸூக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.

அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம் யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூல ரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை எனினும் ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக்கரணத்துக்கு நன்றாக விளங்கும் வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவிபோலே ஆக்கிக்கொண்டு, புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ண சைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத் திருவுளம் பற்றுவராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்து நாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.

இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு முஸல்மான்களிலே, ஷியா ஸுந்நி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின.

குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.

-------------------------------------------------

இறைவனைக் காண முடியுமா?

இறைவனை நேரில் பார்க்க முடியுமா? என்றால் 'முடியாது' என்று இஸ்லாம் பதிலளிக்கிறது. இந்து மதத்திலும் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.

'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103

இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.

'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

குர்ஆன் 4 :153

இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.

எனவே பாரதியாருக்கு நபிகள் நாயகம் இறைவனை பார்த்ததாக கிடைத்த தகவல் பிழையானது. பல முஸ்லிம்களே முகமது நபி இறைவனை பார்த்துள்ளார்கள் என்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் போது பாரதியார் நம்பியதில் ஆச்சரியம் இல்லை.

Friday, January 18, 2013

மன அமைதி சிலருக்கு ஏன் கிடைப்பதில்லை?


----------------------------------------------------

//என்னவோ தெரியவில்லை வாழ்க்கையே வெறுமையாக தோன்றுகிறது, ஒவ்வொருநாளும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் மனது என்னவோன்னு இருக்கிறது, ஒரு காரணமும் புரியவில்லை. எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன் அங்கு சென்றுதான் யோசிக்கிறேன் ஆமாம் இங்கு எதற்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன். சிலநேரம் மனத வாழ்க்கையை நினைத்து சந்தோசபட்டாலும், பலநேரம் வெறுக்கிறேன். என்ன வாழ்க்கை இது என்று தோன்றுகிறது.

பல நண்பர்களிடம் இதை பகிர்ந்துள்ளேன் என்ன செய்வது என்றும் கேட்டேன். சிலர் சொன்னார்கள் விடாத வேலை, தூக்கம் குறைவு, இதனால் டென்சன் இருக்கலாம் நல்லா தூங்குங்க எல்லாம் சரியாகிடும் என்று சொன்னார்கள். ஒரு சிலர் இந்த வயதில் இப்படி தோன்றுவதனால்தான் எல்லோரும் "மது" அருந்துகிறார்கள், போதையில் எதையும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கலாம், நிறைய பேர் அடிக்கடி "சிகரெட்" அடிக்கிறார்கள் எதனால் தெரியுமா? இப்படி பலவற்றை யோசித்து யோசித்து வரும் டென்சனால்தான் என்றார்.//

இவ்வாறு தனது பதிவில் சகோதரர் ஆகாஷ் தனது சிக்கல்களை சொல்லியிருந்தார். இந்த மன அழுத்தங்கள் ஏன் வருகிறது என்று கேட்டால் பலருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை. ஒரு ஆன்மீகவாதியாக நான் பார்க்கும் போது யாரெல்லாம் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக உள்ளனரோ அவர்களுக்கு மனச்சிதைவு அதிகம் ஏற்படுவதிலலை. அவர்கள் அதிகம் தற்கொலைகளை நாடுவதும் இல்லை என்பேன். ஏனெனில் ஆன்மீக வாதிகள் எத்தகைய சோகம் வந்தாலும் அல்லது எத்தகைய இன்பம் வந்தாலும் அனைத்தையும் இறைவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு தங்களின் வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர். அதாவது விதியின் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

அப்படியே தாங்க முடியாத ஒரு சோகம் ஆட்டி வைத்தால் இறை தியானத்தில் தங்களது மனதை கொண்டு சென்றால் மிக இலகுவாக இந்த மனச்சிதைவிலிருந்து விடுபடலாம். இஸ்லாமியர்களில் ஐந்து வேளையும் பள்ளிக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவதால்தான் அவர்களிடம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளதைப் பார்க்கிறோம். முஸ்லிம்களிலும் ஒரு சிலர் தற்கொலையை நாடினால் அதற்கு அவர்கள் இஸ்லாத்தை விட்டு தூரமாகியதே காரணமாக இருக்கும். அவர்களின் வாழ்வை நாம் ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாத்தை விட்டு தூரமானவர்களாக இருப்பர்.

மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.
அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.


பரீட்சையில் தோல்வி, கடன் பிரச்சனைக்காக 6.5 சதவீதமும், குடும்பப் பிரச்னைக்காக 60சதவீதம் பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம்ஆகியவற்றால் 28 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2009ஆம் ஆண்டில் இதே போன்ற காரணங்களுக்காக 701 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்.சிவானந்தம், “தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது" என்றார்.

யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, தில்லியில் அதிகபட்சமாக ஆயிரத்து 716 பேரும், புதுச்சேரியில் 557 பேரும் உயிரிழந்துள்ளனர். 7 யூனியன் பிரதேசத்தின் மொத்த தற்கொலை, நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 1.7 சதவிகிதம்.

//காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேலு. இவரது மகன் பாலாஜி. இவர் பிளஸ் 1 படித்து வந்தார் . இன்று மாலை பாலாஜி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் . இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.//

இது நேற்று வந்த பத்திரிக்கை செய்தி. உயிரின் மதிப்பை உணராத மாணவன்.

உளவியல் வல்லுனர் சிகமன் ஃப்ராய்ட் மனிதன் தற்கொலையின் பக்கம் உந்தப்படுவதற்கான நியாயத்தை உளவியல் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார்:

“பொதுப்படையாக மனித உள்ளத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையும், சாக வேண்டும் என்ற ஆசையும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தேங்கியுள்ளன. இவை மனிதனை எதிரெதிர்த் திசைகளில் இழுத்துக்கொண்டும், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டும் உள்ளன. ஏதேனுமொரு காரணத்திற்காக சாக வேண்டும் என்ற எண்ணம் வாழ வேண்டும் என்ற விருப்பத்தை மிகைத்து வெற்றி கொள்ளுமாயின் வாழ வேண்டும் என்ற அதீத விருப்பு குறைந்து பின்தள்ளப்பட்டு பயனற்றுப் போகும். எனவே சாவது தான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு மனிதன் வருகிறான்.”

சமூகவியல் ஆய்வாளர் எமைல் துர்ஹம் என்பவர் தற்கொலை செய்வதற்கு சமூகச் சூழ்நிலைகளும் உணர்வுகளும் கூட காரணமாகின்றன என்கிறார். தற்கொலைகளை இவர் 3 வகைப்படுத்துகிறார்:

1. தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide): காதல் தோல்வி, திருமண உறவில் பிரச்சனை, கடன் தொல்லை, மன அழுத்தம் போன்ற தனிநபர் தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.

2. நியம மறு தற்கொலை (Anomic Suicide): இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்வு, அகதி வாழ்வு, போர், கலவரம், இனப்படுகொலை போன்ற சமூகத்தில் ஏற்படும் எதிர்பாரா இடர்களால் வாழ்க்கை சீர்குலைவதைக் கண்டு கலங்கி செய்துகொள்ளும் தற்கொலைகள் இதில் அடங்கும்.

3. உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide): இனம், தேசம், கலாச்சாரத்திற்காகச் செய்யப்படும் தற்கொலைகள். ஆனால் இவை அரிதாகவே நிகழ்கின்றன.

----------------------------------------------

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு

கடன்சுமை தாளாமல் விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.

வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

Thursday, January 17, 2013

தமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்!

'தமிழகத்தின் தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்:

தூய வழி காட்டச் சொல்லி கேடடு வருவோம்'

என்று இஸ்லாத்தை சரியாக விளங்காத ஒரு பாடகரின் பாட்டு தமிழகமெங்கும் முன்பு பிரபலமாக இருந்தது. ஆனால் இந்த தர்ஹாக்களைப் பற்றி முகமது நபி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்.

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

நீங்கள் எனது அடக்கத் தலத்தை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

உயரமான எந்த அடக்கத் தலத்தையும், இடித்து சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மது.


இஸ்லாம் எந்த அளவு தர்ஹாக்கள் கட்டுவதை எதிர்க்கிறது என்று பார்த்தோம். ஆனால் அதே இஸ்லாத்தின் பெயரால் நமது தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களின் பெயர்களைப் பார்ப்போம்.தமிழகத்தின் தர்ஹாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள் பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால்பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

இந்த பெயர்களை எல்லாம் பார்த்தாலே தெரியும் இது எந்த அளவு மோசடியான ஒரு வணக்கம் என்று. இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமிய எதிரிகளால் உண்டாக்கப்பட்டதே இந்த சமாதி வணக்கம். இதற்கு அறிந்தோ அறியாமலோ நமது சகோதர சகோதரிகள் அதிக அளவில் பலியாகிக் கொண்டுள்ளனர். இதில் அதிகமாக பெண்களே ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த 20 வருடங்களாக தவ்ஹீத் (வஹாபிகள்) வாதிகளின் அயராத முயற்சியால் இன்று ஓரளவு தமிழகத்தில் சமாதி வழிபாடு குறைந்துள்ளது. முற்றிலுமாக இந்த வணக்கத்தை இஸ்லாமியர்கள் விட்டொழிக்க வேண்டும்.

யாரை எல்லாம் நாம் இறை நேச செல்வர்களாக மதிதது வருகிறோம் என்பதற்குரிய விளக்கத்தையும் பார்ப்போம்.


1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை, நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீது கொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

எவ்வளவு அழகிய வாழ்வு முறையை குர்ஆன் மூலம் இஸ்லாம் நமக்குத் தந்திருக்க இந்த தர்ஹாக்களை ஊருக்கு ஊர் கட்டி அதற்கு வணக்கத்தையும் செலுத்தி வரும் மக்கள் திருந்தும் நாள் எப்போது? ஏக இறைவனை மட்டுமே வணங்கப் பணிக்கப்பட்ட நமக்கு இந்த நூற்றுக் கணக்கான தர்ஹாக்கள் எதற்கு? சிந்திக்க வேண்டாமா தோழர்களே! தோழிகளே!

--------------------------------------------------


புதிய எழுத்தாளர்கள் பலர் இணைந்து தொகுத்திருக்கும் 'எதிர்க் குரல்' என்ற புத்தகம் வெளி வந்து விட்டது. பல அரிய தகவல்களைத் தாங்கி இந்த புத்தகம் வருகிறது. நீங்களும் படியுங்கள். மற்றவர்களுக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.


Wednesday, January 16, 2013

ஜாக்ஸன் குடும்பம் முழுவதும் சத்திய பாதையில்....


ஜாக்ஸன் குடும்பம் முழுவதும் சத்திய பாதையில்....

பிரபல பாடகி ஜெனட் ஜாக்ஸன் புத்துணர்ச்சியோடு இந்த வருடப் பிறப்பைக் கொண்டாடினார். கத்தாரின் பில்லினரான விஸாம் அல் மேனை திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.இவர் முன்னால் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன், ஜெராமைன் ஜாக்ஸன் இருவரின் தங்கையாவார். இவருக்கு வயது 46 ஆகிறது. விசாமுககு 37 வயதாகிறது. 'அபூர்வ ராகங்கள்' கதை ஞாபகம் வருகிறதோ. விருப்பம் வந்து விட்டால் வயதெல்லாம் ஒரு தடையா என்ன?
(ஜெராமைன் ஜாக்ஸன் (அப்துல் அஜீஸ்) தனது அனுபவங்களை சொல்கிறார்.)

இவர்கள் இருவரும் இந்த வருடம் தங்களின் திருமணத்தை தடபுடலாக நடத்த தீர்மானித்துள்ளனர். 20 மில்லியன் டாலர் செலவில் இவர்களின் திருமணம் நடைபெறப் போகிறதாம். ஆனால் இது போன்ற ஆடம்பர செலவுகளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. புதிதாக இஸ்லாத்தை தழுவிய இவர் இதை உணராதது ஆச்சரியமாக இருக்கிறது.


(புர்ஹா போட்டாலே ஒரு கண்ணியம் அந்த பெண்மைக்கு வந்து விடுகிறதல்லவா)

முன்பு ஹாருன் யஹ்யா இணைய தளத்தில் இவரது அண்ணன் ஜெராமைன் ஜாக்ஸனோடு ஒரு பேட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாத்தை தழுவியே இறந்ததாகவும் அவரது இறுதி சடங்குகள் இஸ்லாமிய முறைப்படியே நடந்ததாகவும் ஒரு செய்தி முன்பு கசிந்தது. எனவேதான் மைக்ககேல் ஜாக்ஸனின் இறுதி சடங்கை காண எவருக்கும் அனுமதி தரவில்லை. நெருங்கிய உறவினர்கள் மாத்திரமே இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

ஹாருன் யஹ்யா: 'எனது புத்தகம் ஒன்றை ஜெனட் ஜாக்ஸனுக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளேன். இவரது சகோதரர்களைப் போலவே இவரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார். ஏற்கெனவே இவர் இஸ்லாத்தை தழுவி விட்டார. இத்தனை நாளும் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார்.சகொதரிக்கு வாழ்த்துக்கள்'

திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களுக்கும் 10000 டாலர் பெறுமானமுள்ள ரோலக்ஸ் கடிகாரம் அன்பளிப்பாக கிடைக்குமாம். திருமணத்தில் கலந்து கொள்ள ஆர்வம் யாருக்குத்தான் வராது? :-) வறிய நாடுகளில் எத்தனையோ ஏழைகள் பசிக் கொடுமையில் தவிக்கும் போது இது போன்ற ஆடம்பரத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது. ஹாருன் யஹ்யாவாவது இவர்களுக்கு விளங்க வைத்து திருமணத்தை எளிமையாக நடத்த ஆலோசனை வழங்க வேண்டும்.

எப்படியோ ஜாக்ஸன் குடும்பம் முழுவதும் இஸ்லாத்தில் ஐக்கியமாகி உள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!(ஜாக்ஸன் தொழும் அழகைப் பாருங்கள்)

வாளால் பரவியது இஸ்லாம் என்று பலரும் குற்றம் சாற்றுகின்றனர். இங்கு எந்த வாள் இவரது உடலை முழுவதுமாக மறைத்து கண்ணியமாக வெளிவர வைத்தது? சிந்திக்க மாட்டீர்களா தோழர்களே!

Tuesday, January 15, 2013

சார்வாகன் ஆசையையும் நாம் ஏன் கெடுப்பானேன்?

எந்த கேள்விகளை வைத்தாலும் அனைத்திற்கும் இந்த முஸ்லிம்கள் தக்க பதிலை வைத்திருக்கிறார்களே என்ற வேகத்தில் சார்வாகனுக்கு பித்தம் தலைக்கேறி விட்டது. உடனே இஸ்ரேல் வாழ்க! மோடி வாழ்க! மோடி ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று தன்னை அறியாமல் உண்மையை ஒத்துக் கொண்டு விட்டார்.

//மூமின்களின் ஷ்ரியா ஒழிக்க இஸ்ரேலை,மோடியை ஆதரிப்போம்.நமக்கு வேறு வாய்ப்பு இல்லை!!

இஸ்ரேல் வாழ்க!!!!!!!!!

மோடி ஆட்சி அமைப்போம்!!

நன்றி!!// -சார்வாகன்

மேல் சாதியாக சார்வாகன் இருந்து விட்டால் மோடி ஆட்சி வருவதில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதி திராவிட வகுப்பில் வருவாரேயானால் மிகுந்த சிரமத்தை மோடி ஆட்சியில் அனுபவிக்க வேண்டி வரும். கடந்த 2000 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு தமிழகம் இருண்டு கிடந்ததோ அந்த நிலைக்கு தமிழகம் செல்லும். பெண்கள் பொட்டுகட்டி விடப்பட்டு தேவரடியார்களாக மாற்றப்படுவர். கணவன் இறந்தால் அந்த சிதையிலேயே மனைவியும் வீழ்ந்து இறக்க வேண்டும். பெண்கள் மேலாடை அணிவதற்கும் வரி கட்ட வேண்டும். சேரிகளும் அக்ரஹாரங்களும் புதிது புதிதாக முளைக்கும். தேவர் ஜெயந்தி, இமானுவேல் ஜெயந்தி போன்ற விழாக்களெல்லாம் களை கட்டும். இதை எல்லாம் தடுக்க ஒளரங்கசீப்போ, ராஜாராம் மோகன்ராயோ தற்போது நம்மிடம இல்லை. ராஜராஜ சோழனின் மனு தர்ம ஆட்சி தமிழகத்தில் திரும்பவும் வரும். சாதி வேற்றுமை இன்னும் தலை தூக்கும். அவ்வாறு இந்துத்வா ஆட்சி வந்தால் புனித நீராடல் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க ஆவல் கொண்டேன். அலஹாபாத்தில் தற்போது நடந்து வரும் கும்பமேளாவைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் பார்த்தேன்.

சாமியார்கள் பிறந்த மேனியோடு அந்த புனித நதியில் நடனமாடியதையும் பார்த்தேன். அங்கு சிறு வயது பெண் பிள்ளைகள் கூட இந்த காட்சிகளை எல்லாம் வேடிக்கை பார்ப்பதை பார்த்தேன். அவவாறு மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி வந்தால் சார்வாகன் கூட புனித நீராடலாம். ஆனால் பாவம் முஸ்லிம்களுக்கு மட்டும் இதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை.:-)


இனி முஸ்லிம்களின் பிரச்னைக்கு வருவோம்.

மோடி போன்றவர்கள் தமிழகத்துக்கு ஆட்சிக்கு வ்நதால் அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பதும் முஸ்லிம்களுக்கு தெரியும். ஒருகால் இந்துத்வம் மிகுதியாகி என்னை எல்லாம் இந்து வாக மாறி விடச் சொல்லி அப்போது சார்வாகன் மிரட்டலாம். அது போன்ற சூழலில் நான் இந்துவாக மாறினால் என்னை எந்த சாதியில் சார்வாகன் சேர்த்துக் கொள்வார்? நான் எந்த கடவுளை கும்பிட வேண்டும்? எனக்கு இந்து மதத்தில் என்ன தகுதி கிடைக்கும் என்பதையும் சற்று சொன்னால் நல்லது. இப்போது குர்ஆனை பின் பற்றுகிறேன். இந்துவாக மாறினால் நான் எந்த வேத புத்தகத்தை வழி முறையாக கொள்வது? மனு ஸ்மிருதிகளை நான் பின் பற்றலாமா? இது போன்று பல கேள்விகளை உங்கள் தலைவர் மோடி அண்ணனிடம் கேட்டு சொன்னீர்கள் என்றால் எனக்கு வசதியாக இருக்கும்.

எப்படி வசதி?

Monday, January 14, 2013

நரை பிரச்னையில் உங்கள் இறப்பும் உள்ளது.


'உனக்குதான் வாரம் ஒரு தடவை தலைக்கு டை அடிக்கணும்னு கவலை. ஆனா இந்த மாமாவுக்கு எந்த பிரச்னையும் இல்லே. ஹாய்யா விட்டுடுவார். இல்லப்பா!'

-----------------------------------------------------

வயதான பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவருக்கும் இன்று, ‘தலை’யாய பிரச்சனையாக இருப்பது முடி நரைத்தல். இள நரை பலரை பாடாய்ப் படுத்துகிறது. இதற்காக அந்த நரை முடியை கருப்பாக்கிக் காட்டுவதற்காக தினமும் பலர் சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதற்காக நிறைய பொருளாதாரத்தையும் செலவு செய்ய நாம் தயங்குவதில்ல. அந்த பிராண்ட் நீண்ட நாள் நிலைத்திருக்கும். இந்த பிராண்ட் ஒரிஜினல் கலரைக் கொடுக்கும் என்று தேர்ந்தெடுத்து கலரை உபயோகப்படுத்துகிறோம்.


இது குறித்து ‘அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்’ டாக்டர்கள் கூறுவதாவது:

‘டை பயன்படுத்துவதால்…அலர்ஜியில் ஆரம்பித்து ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்’ என்ற அதிர்ச்சி தகவலை கூறுகின்றனர். டை- ஐ தொடர்ந்து உபயோகிப்பதால், நம் தலைமுடிக்கு மட்டும் வினை புரிவதில்லை, உடலிலும் சென்று ரத்தத்திலும் அது கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பது தான் பிரச்சனையே!’

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப் பொருட்கள், நம் ஹார்மோன்களை சரியாக செயல்படவிடாமல் தடுக்கின்றன. அலர்ஜி, எதிர்ப்பு சக்தி குறைதல்,கேன்சர், சிறுநீர்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு அடிக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் மீசைக்கு கீழ் இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும்.

செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.

பிரபல புகைப்படக் கரைஞர் சித்ரா சுவாமிநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போனார். அவருடைய இறப்புக்கு முக்கிய காரணமாக அவருடைய குடும்பத்தினர் சொல்வது … ஹேர் டை!

‘அப்பாவுக்கு 25 வருஷமா டை அடிக்கிற பழக்கம் இருந்தது. கொஞ்ச நாளுக்கு முன் அவருடைய உடல் நிலை மோசமானபோது, பரிசோதித்த டாக்டர்கள்… ‘நுரையீரல் பாதிப்படைஞ்சிருக்கு. இதற்கு இத்தனை நாளா இவர் பயன் படுத்திய டை தான் ஒரு முக்கிய காரணம்’, என்று சொன்னார்கள்!’ என்று சோகம் பொங்க சொல்கிறார் சித்ரா சுவாமிநாதனின் மகன் ஜான்சன்.

டை (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால், ‘கலரிங்’ (colouring) என்ற சொல்லுக்கு தற்போது உலகம் மாறிவிட்டது. இயற்கை முறையில் தயாரிக்கும் ‘ஹென்னா’ என்று சொல்லப்படும் செம்பருத்தி, மருதாணி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டை-யைத் தவிர்த்து வேறு எதைப் பயன்படுத்தினாலும் அது நம் முடிக்கு மட்டுமல்ல, உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டு, நரையை அதன் அழகுடன் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்வோம்.

---------------------------------------------------

'நான் இந்த தலையை ரொம்பவும் விரும்புறேன். ஏன்னா இந்த காடு ஒரு நாள் பச்சை கலரா மாறுது. மறுநாள் சிகப்பு கலரா மாறுது. தினம் ஒரு கலராக இந்த ஆள் மாத்திக்கிட்டு இருக்கான். நீ எங்கிருந்து வந்தே'

'இவன் மனைவிக்கிட்டேயிருந்து இன்னைக்குதான் இந்த காட்டுக்கு வந்தேன். அந்த பொம்பளை ஏதேதோ ரசாயனம் கலந்த கருப்பு டை அடிக்கிறா. எனக்கு மயக்கமே வருதுப்பா... அதான் ஓடியாந்துட்டேன்.'

------------------------------------------------

நபித் தோழர் ஜாபிர் அவர்கள் கூறினார்கள்:

'மக்கா வெற்றி நாளில் நபித் தோழர் அபூபக்கர் அவர்களின் தந்தை அபூ குஹாஃபா அவர்கள் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் பொல வெள்ளை வெளேர் என்று இருந்தது.

அப்போது நபியவர்கள் 'இந்த வெள்ளை நிறத்தை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.' என்று கூறினார்கள்.

ஆதார நூல் முஸ்லிம்: 4270


இன்றைய நவீன உலகம் தற்போது ரசாயனம் கலக்கப்பட்ட கருப்பு டைகளை உபயோகப்படுத்துவதை தவிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக மருதாணியையும், செம்பருத்தியையும் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் நம்மவர்களில் பலர் இந்த ரசாயன கலவையில் உள்ள ஆபத்தை உணராது கருப்பு கலரை விரும்பி அடிக்கின்றனர். இதன் கேட்டை முகமது நபி உணர்ந்ததாலோ என்னவோ கருப்பு டை அடிக்க தடை விதித்துள்ளார்கள். ஆண்களானாலும் பெண்களானாலும் ரசாயனம் கலந்த கருப்பு டைகளை தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் மருதாணியையும், செம்பருத்தியையும் கொண்டு வெள்ளை முடிகளை சற்று அழகாக்கிக் கொள்வோம்.

இதன் மூலம் ரசாயன டை(dye) அடித்து டை(die) ஆவதை தவிர்ப்போம். :-)

Sunday, January 13, 2013

சவுதி சூரா கவுன்சிலில் 30 பெண்கள்!

சவுதி சூரா கவுன்சிலில் 30 பெண்கள்!


(டாக்டர் ஹயாத் சிந்தி)

சவுதி அரேபிய சூரா கவுன்சிலில் 30 பெண்களை நியமித்து அவர்களையும் சட்டம் இயற்றும் இடத்துக்கு மன்னர் அப்துல்லாஹ் கொண்டு வந்துள்ளார். நம் நாட்டு பாராளுமனறத்துக்கு எந்த அளவு அதிகாரம் உள்ளதோ அதைப் போன்றதுதான் சூரா கவுன்சிலும். இங்கு இயற்றப்படும் சட்டங்கள் மன்னரின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். நம் நாட்டில் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இன்றும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த விளம்பரமும் இல்லாமல் 30 பெண்களை சூரா கவுன்சிலின் உள்ளே கொண்டு வந்து சத்தமில்லாத புரட்சியை உண்டு பண்ணியுள்ளார் மன்னர் அப்துல்லாஹ்.

நாட்டின் முன்னேற்றததில் இனி பெண்களின் பங்களிப்பும் அபரிமிதமாக இருக்கும். ஆண்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் பெண்கள் இன்று சகல துறைகளிலும் அதிவேகமாக முன்னேறி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பெண்களின் சம்பாத்தியத்தில் கணவர்கள் வீட்டில் இருந்து சாப்பிடும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :-) எந்த அளவு பெண்கள் முன்னுக்கு வந்தாலும் இஸ்லாமிய சட்டங்களை மீறாத வகையில் அவர்களின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதில் சவுதி அரசு கவனமாக இருக்கிறது.

ஆண் மெம்பர்களுக்கு எந்த அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 20 சதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முக்கியமானவரான ஹயாத் சிந்தி ஒரு பயோ டெக்னாலஜிஸ்ட் ஆவார். 'சூரா கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதலாவதாக என்னை தேர்ந்தெடுத்தது உண்மையிலேயே மிகுந்த மகிழ்வைத் தருகிறது. அனைவருடனும் சரிசமமாக இருந்து எங்களது பணிகளை திறம்பட நாட்டுக்காக செயலாற்றுவோம்' என்கிறார் சிந்தி.

துரையா அல் அர்ராய்த் (கவிஞர், பத்திக்கையாளர்):

'இந்த வாய்ப்பினால் நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். பெண்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். அவர்களின் முன்னேற்றம் முழு சமூகத்தையும் முன்னேற்றுவதாக அமையும்''

சுஹைலா ஜெய்னுல்லாபுதீன் (சமூக சேவகி):

'இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட்டு 50 சதமான பெண்கள் சூரா கவுன்சிலில் இடம் பெற்றால் நல்லது. அந்த அளவு எண்ணிக்கையிலும் நாங்கள் இருக்கிறோம். பல திறமைமிகுந்த பெண்கள் தங்களின் உழைப்பைக் கொடுக்க தயாராகவே உள்ளனர். 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஆரம்பமே...இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்'

நைலா அத்தார் (தொழிலிபர், சமூக சேவகி:

பெண்கள் முனிசிபல் தேர்தலில் சிறந்த பங்காற்றியது வரவேற்கத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பெண்கள் பல திறமைமிக்க பின்னணியிலிருந்து வந்தவர்கள். எனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை திறம்பட செய்து முடிப்பர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்மணிகளின் பட்டியல்:

1. Dr. Ilham Mahjoub Ahmad Hassanain
2. Dr. Amal Salamah Sulaiman Al-Shaman
3. Dr. Thuraya Ahmad Obeid
4. Dr. Thuraya Ibrahim Hussein Al-Arrayed
5. Dr. Al-Jawharah Ibrahim Muhammad Bubshait
6. Dr. Hamdah Khalaf Muqbil Al-Enizi
7. Dr. Hanan Abdulraheem Mutlaq Al-Ahmadi
8. Dr. Hayat Sulaiman Hassan Sindi
9. Dr. Khowlah Sami Saleem Al-Krai’
10. Dr. Dalal Mukhlid Jahaz Al-Harbi
11. Dr. Zainab Muthanna Abdoh Abu Talib
12. Princess Sarah Bint Faisal Bin Abdul Aziz
13. Dr. Salwa Abdullah Fahd Al-Hazza’
14. Dr. Fatimah Muhammad Al-Qarni
15. Dr. Fadwa Salamah Owdah Abu Mraifah
16. Dr. Firdous Saud Muhammad Al-Saleh
17. Dr. Lubna Abdulrahman Al-Tayib Al-Ansari
18. Dr. Latifa Othman Ibrahim Al-Sha’lan
19. Dr. Mastourah Obeid Al-Shammari
20. Dr. Muna Abdullah Saeed Al Mushait
21. Dr. Muna Muhammad Saleh Al-Dowsari
22. Princess Moudhi Khaled Bin Abdul Aziz Al Saud
23. Dr. Moudhi Muhammad Abdulaziz Al-Deghaithir
24. Dr. Nihad Muhammad Saeed Ahmad Al-Hibshi
25. Dr. Noorah Abdulaziz Abdulrahman Al-Mubarak
26. Dr. Noorah Abdullah Ibrahim Al-Asqah
27. Dr. Noorah Abdullah Abdulrahman Al-Adwan
28. Huda Abdulrahman Saleh Al-Hilaisi
29. Dr. Haya Abdulaziz Nasser Al-Manee’
30. Dr. Wafa Mahmood Abdullah Taibah

இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி அமைந்தால் பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். பெண் கல்வி மறுக்கப்படும். பெண்கள் தங்களின் முன்னேற்றத்தை இழந்து விட வேண்டியதுதான் என்ற வாதம் பலராலும் வைக்கப்படுகிறது. அந்த செய்திகள் யாவும் உண்மையில்லை என்பதை இந்த தேர்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

பெண்களின் முன்னேற்றம் என்பது இந்த வகையில் இருக்க வேண்டும். பெண்களின் வன் புணர்வுக்கு கடுமையான சட்டம். பெண்களின் கவர்ச்சி பகுதிகளை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொள்வது. கூடிய வரை ஆண்களும் பெண்களும் வேலை நேரங்களில் தேவையில்லாமல் சந்தித்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்வது. பெண்களின் உடற்கூறுக்கு ஏற்ப அவர்களுக்கு வேலை வழங்குவது. ஆண்களையும் பெண்களையும் அலுவலகங்களில் தனித்தனியாக ஆக்குவது. இரவு நேரங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தாமை. இது போன்ற சட்டங்களில் சவுதி அரசு மிக கண்டிப்புடன் உள்ளது. இதே போன்ற சட்ட திட்டங்களை நமது இந்தியாவிலும் அமுல் படுத்தி பாருங்கள். தானாக பெண் கொடுமை, வன் புணர்வு போன்றவை குறைய ஆரம்பிக்கும்.

தகவல் உதவி: சவுதி கெஜட்

Saturday, January 12, 2013

பணம் வந்ததால் பிணமான உரூஜ்கான்!


நமது இந்தியாவின் ஹைதரபாத் நகரைச் சேர்ந்த உரூஜ்கான் மிகப் பெரிய செல்வந்தர். சிறு வயதிலேயே அமெரிக்கா சென்று செட்டில் ஆன குடும்பம். தற்போது அவருக்கு 46 வயதாகிறது. திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஒரு பெண் குழந்தையை இறைவன் அவருக்கு கொடுக்கிறான். செல்வம் மேலும் பெருகுகிறது. சில மனத்தாபங்களால் மனைவியை விவாகரத்து செய்கிறார். அடுத்த சில ஆண்டுகளிலேயே வேறொரு பெண்ணை மனைவியாக்கிக் கொள்கிறார். பணம் இருக்கிறது. எனவே திருமணத்தில் எந்த சிக்கலும் இல்லை.

இவரது முக்கிய தொழிலாக சலவை நிலையங்களைச் சொல்லலாம் ஒன்றுக்கு மேற்பட்ட சலவை நிலையங்கள் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அதோடு சேர்த்து ரியல் எஸ்டேட் தொழிலையும் கவனித்து வந்தார். இத்தனை செல்வங்கள் வந்தாலும் மனிதனுக்கு பணத்தின் மீதுள்ள மோகம் குறையுமா? வழக்கம் போல் இவருக்கும் குறையவில்லை.

லாட்டரியிலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று அதிலும் பணத்தை முடக்கியுள்ளார். 'குடுக்குற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு குடுக்கும்' என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. இல்லினாய்ஸ் மாநில லாடடரி குலுக்கலில் 1 மில்லியன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதில் வரி பிடித்தம் போக 425000 டாலரை சன்மானமாக பெற்றார். பரிசு விழுந்த இரண்டு நாள் கழித்து பிணமாக கிடந்துள்ளார் உரூஜ் கான். முதல் நாள் வீட்டில் சாப்பிட்ட குஃப்தா கறியில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக தற்போதய விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதல் மனைவியின் வேலையா அல்லது பணம் பறிக்கும் கும்பலின் வேலையா என்பது இனி போகப் போகததான் தெரியும்.
உரூஜ் கான், அவரது மனைவி சபானா அன்சாரி, சில ஆண்டுகளுக்கு முன் விவாவகரத்து செய்து விட்ட மனைவிக்கு பிறந்த பெண் ஜாஸ்மின் இவர்கள் மூவரும் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம்.இந்த உணவில்தான் விஷம் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. குஃப்தா கறி.கோடீஸ்வரனின் ஆடம்பர பங்களா. இருந்து அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.


உரூஜ்கானுக்கு வாழ்வளித்து வந்த சலவை நிலையம்

ஒரு மனிதனுக்கு தங்கத்தினால் ஆன ஆறு ஒன்று கொடுக்கப்பட்டால் 'இந்த பக்கமும் ஒரு ஆறு ஓடினால் நன்றாக இருக்குமே' எனறு எண்ணுவானாம். முகமது நபி அறிவிக்கும் ஒரு நபி மொழி இவ்வாறு சொல்கிறது. போதுமென்ற மனம் இல்லாத வாழ்வு நிம்மதியாக இருக்காது என்பதற்கு உரூஸகானின் வாழ்வு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

இதிலிருந்து நமக்கும் படிப்பினை இருக்கிறது. பல செல்வந்தர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்க்கத்தான் முயற்சிக்கிறார்களே யொழிய தங்களது உறவினர், தங்கள் ஊரில் உள்ள ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் சென்று விடுவர். ஜகாத் என்ற ஒரு அருமையான திட்டம் நம்மிடம் இருந்தும் அதனை செயல்பாட்டுக்கு ஏனோ கொண்டு வருவதில்லை. அந்த திட்டம் பாழ்பட்டதனால்தான் ரிசானா நபீக் போன்ற சகோதரிகள் தங்கள் உயிரை இந்த பாலைவனத்தில் விடும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வதட்சணை கொடுமையை நீக்கவும், கல்வியை சமூகத்தில் ஆர்வமூட்டவும், ஜகாத்தை விரிவுபடுத்தவும் நம்மால் ஆன முயற்சிகளை முன் எடுப்போம்.

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130111148931

Friday, January 11, 2013

மார்க்ஸ் அரவிந்தனின் சந்தேகங்களுக்கு பதில்!

PLZ WRITE A ARTICLE ABOUT THE END OF THE WORLD....

THINGS AND ALSO THEIR TRADITION MIXED VERY MUCH WITH MODERN SCIENCE, MY FRIENDS SAYING THAT QURAN HAVE CAME B4 ONLY 1400 YEARS, BUT THIS MAYAN'S SAID MANY THINGS ABOUT ASTRONOMY BEFORE 3000 YRS ITSELF AND ALSO THEY SAYING THAT SUMARIAN'S 1LY TEACHED THIS THINGS TO MAYAN'S I DONT KNOW IS THESE ARE ALL MYTH'S OR NOT.....SO PLZ GIVE A BRIEF ARTICLE ABOUT THIS, THE BOTTOM LINE IS "B4 3000YRS A ETHNIC GROUP WOULD TELL ABOUT SPACE AND GALAXY MEANS HOW CAN U SAY THIS QURAN CAME B4 14OO YRS IS MORE BETTER THAN THEM.....SO QURAN IS ALSO A HUMAN'S INVENTION..." MY FRIENDS SAYING.....TRY TO PUT ONE ARTICLE ABOUT THIS.....
ALLAH HAFFIZ....................

-MARX ARVIND.


சகோ மார்க்ஸ் அரவிந்த்!

உலக முடிவு நாள் பற்றி மாயன் காலண்டர் சொன்ன அருள் வாக்கு டுபாக்கூர் என்பது நிரூபணமாகி விட்டது. இல்லை என்றால் நீங்களோ நானோ இந்த கணிணி முன்னால் அமர்ந்து பதில் எழுதிக் கொண்டிருக்க முடியாது. :-)

அடுத்து குர்ஆனை சரியாக விளங்காதவர்களுக்கு உங்களுக்கு வந்த சந்தேகங்கள் போன்று வருவது இயற்கையே! மாயன் இனமும் சுமேரிய இனமும் பல அறிவியல் கண்டு பிடிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதை நாமும் மறுக்க வில்லை. அதே போல் இந்து மத வேதங்களை நீங்கள் ஆராய ஆரம்பித்தால் பல அறிவியல் உண்மைகள் அதிலும் வெளிப்படுவதை நாம் காண்கிறோம். ஆர்யபட்டர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வானியலைப் பற்றி பல உண்மைகளை சொல்லியுள்ளார். கிறித்தவ வேதமான பைபிளிலும் பல அறிவியல் செய்திகள் மறைந்திருப்பதை நானும் மறுக்க வில்லை. இது எவ்வாறு சாத்தியம் என்று சற்று நாம் சிந்திப்போம்.

'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும், தம் இறைவனால் அப்ரஹாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு, மற்றும் அவரது வழித் தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும் ஏசுவுக்கு வழங்கப்பட்டதையும் ஏனைய தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம். அவர்களுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுவீராக!
-குர்ஆன் 2:136


இந்த குர்ஆன் வசனமானது உங்களின் பல கேள்விகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. நபி ஆதமிலிருந்து முகமது நபி வரை இந்த உலகில் பல ஆயிரம் இறைத்தூதர்கள் இறைவனால் அனுப்பப்பட்டனர். எந்த சமுதாயமும் தூதரும் இறை வேதமும் அருளப்படாமல் இருந்ததில்லை. நமது தமிழ் நாட்டுக்கும் இறைத் தூதரும் இறை வேதமும் வந்திருக்கிறது. அது திருக்குறளாகவும் இருக்கலாம்.

இப்படி அனுப்பப்படும் தூதர்கள் இறந்தவுடன் அந்த தூதரையே கடவுளாக்கி அந்த வேதங்களிலும் சில மாறுதல்களை அந்த மக்கள் செய்து விடுகின்றனர். இதற்கு உதாரணமாக சமீப காலத்திய பைபிளுக்கும் ஏசுவுக்கும் நிகழ்ந்த மாறுபாடுகளை நாம் சொல்லலாம். வருடா வருடம் புதிய திருத்தங்களுடன் பைபிள் வந்து கொண்டிருக்கிறது. நமது தமிழ் நாட்டிலேயே பல மாறுபட்ட பைபிள்களை பார்க்கிறோம். இவ்வாறுதான் மாயன்களையும் சுமேரியர்களையும் இந்துக்களையும் பார்க்க வேண்டும். சமீப காலத்திய பைபிளுக்கே இந்த கதி என்றால் 5000 மற்றும் அதற்கும் அதிகமான வருடங்களுக்கு முந்தய வேதங்களின் நம்பகத் தன்மையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மாற்றங்களை செய்பவர்கள் தங்களுக்கு தோதுவானதை மட்டுமே மாற்றுவர். அறிவியல் சம்பந்தமான பல செய்திகளை மாற்றாமலேயே வைத்து விடுவர். ஏனெனில் அதனால் அந்த புரோகிதர்களுக்கு எந்த நட்டமும் இல்லை.

மனிதர்களில் ஏற்றத் தாழ்வு இல்லை: புரோகிதம் இல்லை: ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்: புரோகிதர்களுக்கு படைக்க வேண்டிய அவசியம் இல்லை போன்ற கருத்துகள் எல்லாம் அந்த வேதங்களிலும் இருந்திருக்கிறது. இந்த வசனங்களை தங்கள் வேதங்களில் வைத்திருந்தால் தங்களால் பொருள் ஈட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்த மார்க்க அறிஞர்கள் அறிவியல் கருத்துகளை மாற்றாமல் புரோகிதம் சம்பந்தமாக வரக் கூடிய கருத்துக்களையும், பல தெய்வ வழிபாட்டையும் தஙகள் வேதங்களில் புகுத்தி விட்டனர். அரிஸ்டாட்டில், கோபர்நிகஸ், ஆர்யபட்டர் போன்ற முந்தய அறிஞர்கள் எந்த அறிவியல் உபகரணங்களும் இல்லாமல் வானவியலைப் பற்றி எல்லாம் ஓரளவு சொல்ல முடிந்ததற்கு காரணமே அன்றைய இறை வேதங்களில் மிஞ்சியிருந்த இறைக் கருத்துகளின் உதவியால்தான் என்றால் மிகையாகாது. இதை குர்ஆனும் உறுதிப்படுத்துகிறது.

'அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்'
-குர்ஆன் 2:75

'தம் கைகளால் நூலை எழுதி அதை அற்ப விலைக்கு விற்பதற்காக 'இது இறைவனிடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்கு கேடுதான்.'
-குர்ஆன் 2:79

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'
-குர்ஆன் 4:46

'அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்'
-குர்ஆன் 5:13

மேற்கண்ட இந்த வசனங்கள் அனைத்துமே இறை வேதங்கள் அந்த மனிதர்களால் மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிகிறோம். குர்ஆன் மட்டும் மாறவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். குர்ஆன் இறை வேதம்தான் என்று எவ்வாறு நம்புகிறீர்கள் என்றும் நீங்கள் கேட்கலாம். அதற்கு குர்ஆனே பதிலளிக்கிறது.

அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 4:82

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வர். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.

மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! முரண்பாடு இல்லை! ஆபாசம் இல்லை! மிகையான வர்ணனைகள் இல்லை! கற்பனைக் கலவை இல்லை! நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். அல்குர்ஆன் 7:157

அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.

நபிகள் நாயகம் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்: என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

கடைசியாக சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒரு கருத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன். மேலே எழுதியவற்றில் ஏதும் சந்தேகம் இருந்தால் பின்னூடடத்தில் கேளுங்கள். இறைவன் நாடினால் பதிலளிக்கிறேன்.

ஒரு மதத்திற்கு மத நம்பிக்கைக்கு அறிவியலின் உண்மையின் முன் நிற்கும் சக்தி இல்லையென்றால் அது அழிந்து போவதே நல்லது. எவ்வளவு வேகமாக அது அழிந்து போகிறதோ அவ்வளவுக்கு மானுடத்துக்கு நல்லது. ஏனென்றால் அத்தகைய மதநம்பிக்கை எப்போதுமே அறிவற்ற மூடநம்பிக்கையாகவே இருந்திருக்கிறது. – சுவாமி விவேகானந்தர்