Followers

Wednesday, October 31, 2018

சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை கட்டமைத்தாரா?

சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை கட்டமைத்தாரா?
...........
இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே..

ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
வரலாற்றை அறிவோம்…
.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.
.
இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.
.
இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
.
ஒருக்கால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்.
.
இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை.
.
நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன.
.
முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும்,
.
அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும்,
.
இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,
.
இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும்,
.
இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும்,
.
இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும்,
.
இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.
.
அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை.
.
அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.
.
எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை.
.
ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது. அது விழித்தெழும் போது வீரிட்டு எழும்.
.
எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும்.
.
இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று.
.
இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.
.
இந்தியாவை பாதுகாத்தல்: ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.
.
ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட,
.
குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரிய போது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.
.
இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும்.
.
இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.
.
மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை.
.
அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான்.
.
இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.
.
ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான்.
.
வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
.
இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.
.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான்.
.
மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.
.
அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர்
.
இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும்.
.
அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும் .....
(வாட்ஸ்அப் செய்தி)

'ஸ்டேட்டுக்கே ஓபி யூனிட்டி'

'ஸ்டேட்டுக்கே ஓபி யூனிட்டி'



வேண்டுமென்றே தமிழ் மொழியின் மேல் உள்ள ஆரிய வெறுப்பு இந்த மொழி மாற்றத்தில் தெரிகிறது. இதற்கு எமது வன்மையான கண்டனங்கள்.
எடப்பாடியை ஒதுக்கி விட்டு ஓபி. பன்னீர் செல்வத்தை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் ஓர வஞ்சனையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்ப்படுத்திய அந்த தமிழறிஞரை அழைத்து 'முனைவர்' பட்டம் கொடுக்கலாம். 

ஒரு பள்ளியை இடித்தவர் 90 பள்ளியை கட்டியுள்ளார்.

ஒரு பள்ளியை இடித்தவர் 90 பள்ளியை கட்டியுள்ளார்.
1992ல் பாபரி பள்ளியை உடைப்பதில் மும்முரமாக நின்றவர் பல்பீர் சிங். இவரது நண்பரான ரன்வீரும் இவரோடு சேர்ந்து பள்ளியை இடித்தார். செய்த தவறுக்கு மனம் வருந்திய இருவரும் அடுத்த வருடமே இஸலாத்தை ஏற்றுக் கொண்டனர். பல்பீர் தனது பெயரை முஹம்மது அமீர் என்று மாற்றிக் கொண்டார். இவரது தம்பி மற்றும் இவரது குடும்பமே இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்பீர் தனது பேட்டியில் கூறுகிறார் 'எந்த ஒரு தவறை செய்பவருக்கும் அதன் குற்றவுணர்ச்சி அவர் மனதில் இருந்து கொண்டிருக்கும். அது போல்தான் எனது மனத்தையும் அந்த பாவச் செயல் அரித்துக கொண்டிருந்தது. சில நேரம் பைத்தியம் பிடித்தவனைப் போல் மாறிக் கொண்டிருந்தேன். குற்றவுணர்ச்சியிலிருந்து மீள்வதற்காக இடித்த பள்ளியைப் போல பல கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று வரை 90 பள்ளிவாசல்களுக்கு மேல் கட்டியுள்ளேன். இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். என்னோடு பாபரி பள்ளியை இடித்த ரன்வீரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எனது குடும்பம் முழுமையும் இன்று இஸ்லாத்தில் உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்கிறார்.
பள்ளியை இடித்த பல்பீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். பள்ளி இடிக்க காரணமான அத்வானியின் மனதிலும் இறைவன் மாற்றத்தை ஏற்படுத்துவானாக!


Tuesday, October 30, 2018

இந்த விளையாட்டு வீரர்களிடம் நமக்கும் பாடம் உண்டு.

கடமையான தொழுகைகளை பெரும் இடர்பாடுகள் தவிர்த்து எந்நிலையிலும் விட இஸ்லாத்தில் இடமில்லை. தொழுகை நேரம் வந்தவுடன் உடன் தொழுகைக்கு தயாராகி விடும் இந்த விளையாட்டு வீரர்களிடம் நமக்கும் பாடம் உண்டு.


பிரிட்டனில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மார்க்கம்!

பிரிட்டனில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மார்க்கம்!
கடந்த இருபது வருடத்தில் இங்கிலாந்தின் இஸ்லாமியரின் எண்ணிக்கையானது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இஸ்லாத்தை ஏற்பவர்களில் அதிகம் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களே என்ற செய்தி ஆச்சரியப்படுத்துகிறது. மேற்கத்திய கலாசாரம் அந்த மக்களுக்கு அமைதியான வாழ்வை தரவில்லை. எனவே தான் இளைஞர்கள் அதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர். பல மாதா கோவில்களில் கூட்டம் மிக சொற்பமாக உள்ளது. அதே சமயம் பள்ளி வாசல்களில் கூட்டம் அலை மோதிகிறது. லண்டன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் ஒரு இஸ்லாமியரே!
இஸ்லாம் சம்பந்தமான செய்திகளை வெளியிடும் எஃப்எம் ஸ்டேஷனும் இங்கு பிரபலம். ரமலானில் எஃப்எம் நிகழ்ச்சிகள் பலதரப்பட்ட மக்களாலும் கேட்கப்படுகிறது. தீவிரவாதம், குண்டு வெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் என்று எதிரிகளால் பல அவதூறுகளை இஸ்லாம் சுமந்தாலும் அதன் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!


Monday, October 29, 2018

அப்ஸல் பாத்திமா B.comBL(Hons)

அண்ணன் ரபியுத்தீன் ரபீக் மகள் அப்ஸல் பாத்திமா B.comBL(Hons) அவர்கள் TNPSC நடத்திய CIVIL JUDGE தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்ச்சி பெற்ற 230 நீதிபதிகளில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....
பி.எம். இப்ராகிம் அவர்களின் பதிவிலிருந்து....
வாழ்த்துக்கள் சகோதரி....
பெண்கள் கல்வியில் இன்னும் அதிகம் முன்னேற வேண்டும். எவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும் இஸ்லாமிய வாழ்வு முறையை கல்லூரிகளிலும் பணி புரியும் இடங்களிலும் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.
--------------------------------------------------
முஹம்மது (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
“நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு செடி, கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால்நடைகளுக்கும்) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயனளித்து (அதாவது) தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரைக்கு உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூடத் திருப்பாமல் அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பவனுக்கு உதாரணமாகும்.”
(அபூ மூஸா (ரலி), புகாரி - 79, முஸ்லிம் 2282)
ஒருவன் கல்வியை அறிவாகப் பெற்று சமூக நலனுக்காக அதனை பயன்படுத்தும் போதுதான் அவனிடமிருந்து புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவுகள் தோன்றுகின்றன. இப்படிக் கல்வி பயில்பவன் தான் விஞ்ஞானியாகவோ, கண்டு பிடிப்பாளனாகவோ, சமூக ஆர்வலனாகவோ உயர இயலும்.


மோடியை கலாய்க்கும் வட இந்திய பெண்மணி!

மோடியை கலாய்க்கும் வட இந்திய பெண்மணி!

மோடி பொதுக் கூட்ட மேடையில்.....

'நான் பிரதமரானவுடன் பெட்ரோல் விலை தற்போது குறைந்துள்ளதா இல்லையா?'

'நான் பிரதமரானவுடன் உங்கள் பாக்கெட்டுகளில் பணம் மிச்சமாகிறதா இல்லையா?'


Sunday, October 28, 2018

இவர்களுக்கு நீதிபதி என்ன பதிலை வைத்துள்ளார்?

இவர்களுக்கு நீதிபதி என்ன பதிலை வைத்துள்ளார்?
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த மஞ்சுளா, மணிகண்டன் இருவரும் திருமணமானவர்கள். இரண்டு குழந்தைகளும் உண்டு.மனைவி மஞ்சுளாவுக்கு ஜோதி என்பவனோடு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வெளியூரில் கள்ள காதலனோடு சுற்றுவதைப் பார்த்த மணிகண்டன் இதனை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுளா 'உச்ச நீதி மன்றமே கள்ள காதல் தவறல்ல என்று தீர்ப்பளித்துள்ளது. இதை பெரிது படுத்த வேண்டாம்' என்று சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் மணிகண்டன் உருட்டுக் கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். தாக்குதலில் மஞ்சுளா  நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் மணி கண்டன் சிறையில். குழந்தைகள் இருவரும் அனாதைகளாய்....
பாலிமர் செய்திகள்
29-10-2018
கள்ள தொடர்பு கூடும் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்.


குர்ஆன் பயிற்சி வகுப்பு



குர்ஆன் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை (கிளை 3) சார்பாக..... 28.10.2018. அன்று மாணவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


நிலவேம்பு கசாயம்

நாகை தெற்கு நாகூர் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது . 29-10-2018
எல்லா புகழும் இறைவனுக்கே!


அடடே... சிவகுமார் இஸ்லாத்தை அல்லவா பேசுகிறார்!

அடடே... சிவகுமார் இஸ்லாத்தை அல்லவா பேசுகிறார்!
ஒரு திருத்தம். கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறார் சிவகுமார்.. அவர் கருத்தில் மாறுபடுகிறேன். கடவுளுக்கு உருவம் உண்டு. அதனை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கு இல்லை. மறுமை நாளில் அனைவருக்கும் இறைவன் காட்சித் தருவான் என்கிறது இஸ்லாம்.
இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். இறைவனைப் பார்க்கும் சக்தி மனிதர்களாகிய நமது கண்களுக்கு கொடுக்கப்பட வில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
--------------------------------------
இறைவனின் உருவம் பற்றி தாயுமானவர்
அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.
பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்பு நிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்கு நிலையில் உருவமாகவும் காணப்படும். இறைவன் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேனுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?
636:10
அருவம்: உருவமற்றது, காண முடியாத ஒன்று
அருவுருவம்: வடிவம் உண்டென்றும், வடிவம் இல்லை என்றும் சொல்ல முடியாத நடு நிலைமை
'உலகில் பொருட்கள் எல்லாம் ஆரம்ப நிலையில் கண்ணால் காண முடியாத ஒன்றாக இருந்து அது வடிவமைக்கும் போது உருவத்துக்கும் அருவத்துக்கும் இடைப்பட்ட நிலையான அருவுருவத்துக்கு வரும். அதன் பிறகு அந்த பொருள் முழுமையடைந்தவுடன் முழு உருவத்தையும் நமது கண்ணால் பார்க்க முடிகிறது.
நம்மை படைத்த இறைவனானவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன். தானாக நிற்கும் அந்த பரம் பொருளான இறைவனை அவனது திருவருளால் இந்த எளியோன் காண்பது எந்நாளோ?' என்கிறார் தாயுமானவர்.



ஆணும் பெண்ணும் என்னதான் சமம் என்று சொன்னாலும்....

ஆணும் பெண்ணும் என்னதான் சமம் என்று சொன்னாலும் நடைமுறையில் சாத்தியமில்லை... 
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
-குர்ஆன் 4:32
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.
-குர்ஆன் (4:7)
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124


*சென்னை தி.நகரில் இருந்து நேரடி ஒளிபரப்பு*

*சென்னை தி.நகரில் இருந்து நேரடி ஒளிபரப்பு*

*மாபெரும் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி*

--------------------------------------------------

ஹள்ரத் ஸஃத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்”

(நூல்: அஹ்மது நஸயீ-3666)

--------------------------------------------------

மனிதனை அழகுபடுத்தும் மென்மை

"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும்,அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்5056


Saturday, October 27, 2018

செத்த மிருகங்களோட எலும்புகள்.... இதெல்லாம் பொடியாக்கி

பட்டு மாமி:
ஏண்ணா... கலி காலத்துல எதெல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு. நாம பயன்படுத்தற வெள்ளை சர்க்கரை சுடு காட்டுல பொறுக்கிய எலும்புகள். செத்த மிருகங்களோட எலும்புகள். இதெல்லாம் பொடியாக்கி கரும்பு சாறோடு ஒன்றாக்கி வருவதுதான் என்று இந்த பிள்ளையாண்டான் சொல்றானே... உவ்வே.... அப்போ நாமெல்லாம் வெஜிடேரியன் இல்லையா?
கிட்டு மாமா:
அடி போடி அசடு. நாம தினமும் கோமாதா மடியிலிருந்து பால் கறக்குறோமே. அது ரத்தத்துக்கும் சாணத்துக்கும் இடையில் உண்டாகுறதுதானேடி. தாவரங்களிலேயே எத்தனையோ மாமிசம் உண்பவை உண்டு. அது போல சர்க்கரையிலும் எலும்பு துண்டுகளை அவா சேர்த்தாதான் வெள்ளை சர்க்கரை நமக்கு கிடைக்கும். இதெல்லாம் எனக்கு முன்பே தெரியும்டி.
பட்டு மாமி:
ஐயய்யே.... என்னண்ணா இப்படி சொல்றேள். அப்போ சூத்ராள், முஸ்லிம்கள் எல்லாம் மாமிசம் சாப்பிடச்சே அது தப்புண்டு நம்மவா எல்லாம் வாய் கிழிய பேசறது சரியோ!
கிட்டு மாமா:
அது அரசியலுக்காக நம்மவா செய்றதுடி. இந்துக்களையும் முஸ்லிம்களையும் இப்படில்லாம் பகவான் பேரைச் சொல்லி பிரிச்சு வச்சாதான் நாம இந்த நாட்டுல காலம் தள்ள முடியும். இது பத்தி எல்லாம் நீ ரொம்ப யோசிக்காதே.... அதை நாங்க பார்த்துக்கறோம்.





என்ன ஒரு கேவலமான பிழைப்பு!

அமைச்சர் பொன்னார் கலந்து கொண்ட அரசு விழாவில் கூட்டம் இல்லை. இதனால் கோபமடைந்த பொன்ராதா அரசு வாகனத்தை ஆள் பிடிக்க அனுப்புகிறார். 
என்ன ஒரு கேவலமான பிழைப்பு!


பெண்ணிடம் செருப்பால் அடி வாங்கிய பிஜேபி தலைவர்!

பெண்ணிடம் செருப்பால் அடி வாங்கிய பிஜேபி தலைவர்!
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அஸ்வின் அரூரா! இவர் ஒரு அரசு அதிகாரியின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணும் அவரது ஆதரவாளர்களும் அஸ்வின் அரூராவை நைய புடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனது செருப்பை கழட்டி அடிக்கிறார். எத்தனை அடி வாங்கினாலும் காவி துண்டை தோளில் போட்டுக் கொண்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று வெளியே வரும் இந்த மானங்கெட்ட பிறவிகள்.


பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்
===================
பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு அப்படி ஒரு உணர்வு. நான் கண்ட காட்சிகள், என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகள், நாங்கள் தினமும் சென்று திரும்பும் அதே தூத்துக்குடி சாலை, எங்கள் கல்லூரியின் எதிரே உள்ள அதே சட்டக்கல்லூரி என்று என் வாழ்க்கையின் அந்த நாட்களை மீட்டெடுத்தது .
பயணித்த அதே சாலை என்பதால் இன்னமும் நெருக்கமானது இந்த கதை.
மனோகர் From பாளையங்கோட்டை - ஷோபனா From வி எம் சத்திரம் - சரவணன் From ஆழவார் திருநகரி -ரமேஷ் From கொக்கிரகுளம்- எம் ஆனந்த From சமாதானபுரம்
என்று ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சி என்னுடைய முதல் நாளையும் ஞாபகப்படுத்தியது.
"ஞானி From மேலப்பாளையம்" முதல் நாள் கல்லூரியில், நானும் பரியனை போல, பிஏபிஎல் மேல ஒரு கோடு என்பதைப் போல சொல்லிக்கொண்டிருந்தேன்
"ஞானியா...? பெரிய ஞானின்னு நினைப்பா..? தொப்பிய கழட்டு முதல்ல"
என்று இக்பால் சார் திட்டுதலில்தான் ஆரம்பித்தது என்னுடைய கல்லூரி வாழ்க்கையும்.
படத்தில் ஒரே ஒரு விநாடிகளில் வரும் ஒவ்வொரு சீனிலும் நிறைய கதைகள் இருக்கின்றது.
பேருந்தில் இருந்து படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவன் , தவறி விழ வைக்கப்பட்டு கீழே விழுந்து இறந்து விட ,அதே பேருந்தில் கடைசி சீட்டில் ஒரு பெண் கதறி அழுது கொண்டிருப்பாள். அந்தக் காட்சியும் சரி.
ஒரு பாடல் காட்சியில் தாமிரபரணி ஆற்றில் ஒருவனை போலிஸ் லத்தியால் அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும் சரி, இதுபோல விநாடியில் மறையும் காட்சிகள் மறையாத வலிகள் நிறைந்தவை.
அது 1 விநாடியில் வருவதனால் நாம் கவனிக்கத் தவறியிருப்போம். ஆனால் அதற்குப் பின்னால் பெரும் வலி ஒன்று இருக்கின்றது.
1999ல் ஜூலை 23ல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் நடந்த மாஞ்சோலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தின் ஒரு விநாடி காட்சிதான் அது.
அந்த ஒரு விநாடி காட்சியின் நீட்சியில் தாமிரபரணியில் மூழ்கி சாகடிக்கப்பட்டவர்களின் நிறைய கதைகள் இருக்கின்றது. "மறக்கவே நினைக்கிறேன்" பகுதியில் மாரி செல்வராஜ் இப்படி குறிப்பிட்டிருப்பார்.
"எதையும் யோசிக்காமல் இறங்கி அக்கரைக்கும் இக்கரைக்கும் அடித்தேன் நீச்சல். எனக்குத் தெரியும்
உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் அது என்னுடைய நீச்சல் அல்ல; அஞ்சு வயசில் ஆற்றுக்குள் இறங்கி அம்மாவால் நீச்சல் பழக்கப்பட்டவனை... ஆற்றுக்குள் விழுந்து செத் தான் என்று சொல்லி ஓர் அரசாங்கம் கொன்ற 'குமார்' என்கிற இளைஞனின் பழிவாங்கும் எதிர்நீச்சல் அது!'
சதக்கத்துல்லா கல்லூரியில் என்னுடைய கல்லூரி தோழர்தான் இந்த குமார். இப்படி குமாரைப் போல செத்துப் போனவனின் கதைகளும் கடைக்குச் சென்று விட்டு இன்று வரை திரும்பாதவர்களின் கதைகளும் ஏராளமாய் இருக்கின்றன.
இது கதையல்ல நிஜம்.
எவ்வளவு நுட்பமாக திருநெல்வேலி பேச்சுக்கள் , சூழல்கள், மண் வாசனைகள் செதுக்கப்பட்டிருக்கின்றது என்று இந்தப் படம் பார்க்கும் திருநெல்வேலிகாரர்களுக்கு இன்னமும் நெருக்கமாக இந்தக் கதை ஒட்டிக்கொள்ளும்.
மேலப்பாளையத்தில் பள்ளியில் படித்துவிட்டு வெளியில் சென்று ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்பொழுதுதான், நாம் இதுவரை ஆங்கிலமே படிக்கவில்லை என்பதை உணர ஆரம்பித்தோம் அந்த பரியனைப் போலவே.
ஆங்கிலத்தை அறிவோடு இணைத்தே பழக்கப்படுத்திவிட்டதால் , ஆங்கிலம் தெரியாமல் இருப்பதை அறிவு இல்லாமல் இருப்பதைப் போலவே தோன்றச் செய்த , அந்த தன்னம்பிக்கையில்லா உணர்வு , பரியனோடு சேர்ந்து நானும் உணர்ந்தேன். யாரைத் திட்ட கல்விமுறையையா அரசாங்கத்தையா ?
பரியன் பாதங்களில் வைத்து பிட் அடிப்பது , பரிட்சை நேரத்தில் பேப்பர் மாற்றுவது, நிறைய பிட்டுக்கள் எடுத்துக்கொண்டு போய் எந்தக் கேள்விக்கு எந்த பிட் என்று தெரியாமல் குழம்பிப் போவது எல்லாம் மாரி செல்வராஜ்க்கு நிகழ்ந்தவையாக இருக்கலாம். 
இதுபோலத்தான் எனது கல்லூரி நண்பன் ஒருவன் , பரிட்சை அறையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து , அந்தக் கேள்வி எந்தப் பக்கத்தில் இருக்கின்றது என்று கேட்டுக் கொண்டிருந்தான். இதுபோல நிறைய பிட் அடித்த பிட்டுக் கதைகள் இருக்கின்றன. 
அதையெல்லாம் இப்பொழுது கிண்டினால் #metoo வைப் போல #youtoo ஆரம்பித்து விடும். 
என்ன மாப்ள? Fazul Jeep 
கல்லூரியில் செய்த தவறுக்காக, அப்பாவை போல ஒருவரை அழைத்து வந்து நடிக்கச் சொல்லும் காட்சிகள் எல்லாம் அப்பொழுது எங்கள் கல்லூரியில் நடந்து கொண்டிருந்தன.
சட்டக்கல்லூரி எதிரே இருக்கின்ற ரஹ்மத் நகர் கேண்டீனுக்கு, சாப்பிட வந்தவர்களையெல்லாம் அழைத்து வந்த கதை இருக்கிறது. 
கல்லூரியில் படிக்கும் மாணவியின் வீட்டின் திருமணத்திற்கு பரியன் சென்றதால், அவர்களால் அடைத்து வைக்கப்பட்டு , அடித்து அவமானப்படுத்தப்பட்டு அனுப்பும் காட்சியும் சரி , அவனது தந்தை யார்? அவரை ஏன் கல்லூரிக்கு அழைத்து வர அவன் வெட்கப்பட்டான்? அவரை அழைத்து வந்ததால் என்ன நடந்தது ?
இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கின்றார்களா..இவ்வளவு பயங்கரமானவர்களா நம்மைச்சுற்றிலும் நம்முடனே சகஜமாய் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பதற வைக்கிறது.
நாம் திரையில் கண்டதால் பதறுகின்றோம். ஆனால் இன்று வரையிலும் சிறுபான்மையினர்கள் அடித்துக் கொல்லப்படும் நிகழ்வுகள், கொசுக்களை கொல்வதைப் போல எந்தவொரு மனச் சங்கடமில்லாமலும், அதனை குற்றமென்றே உணராமலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது இந்தியாவில்.
மாணவப் பருவத்தில் சாதி பார்க்காமல் பழகுவோம் என்று பேச்சுக்கு சொல்லப்பட்டாலும், அவைகள் பெரும்பாலும் பாசாங்குகள்தான். தேவையென்று வரும்பொழுது சாதி உணர்வுகள் முளைக்க ஆரம்பிக்கும்.
"இப்பலாம் யாரு சார் சாதி பார்க்குறா ?"என்று கேட்பவர்கள் பெரும்பாலும் உயர்சாதிக்காரர்களாகவே இருப்பார்கள். மாணவப்பருவத்திலிருந்தே அவைகள் ஆரம்பித்து விடுகின்றன.
இந்த திரைப்படத்தில் வரும் பத்திரிக்கைச் செய்திகள் , கொலைகள் எல்லாம் இப்பொழுதும் நடந்து கொண்டிருப்பவைகள்தான். அந்த பத்திரிக்கைச் செய்தி காட்சிகள் எல்லாம் அத்துனையும் நிஜம். ஆணவப் படுகொலையின் அத்தனை விதைகளும் இந்த மாணவப்பருவத்தில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்.
கல்லூரி தேர்தலில் கூட சாதி வேற்றுமையில் நிறைய வன்முறைகள் நடைபெறும். என்னுடன் முந்தைய நாள் வரை டியுசன் வந்து கொண்டிருந்தவன் மறுநாளிலிருந்து காணவில்லை. "மாணவர்களுக்குள் மோதல் நடுரோட்டில் மாணவரின் கை துண்டிப்பு " என்கிற பத்திரிக்கை செய்தியில் வரும் அவனது புகைப்படம் பார்த்தபிறகுதான் மிரட்சியடைய ஆரம்பித்தோம்.
பரியன் கல்லூரிக்கு அப்பாவை அழைத்து வர தயங்குவதன் பின்புலத்தில் உள்ள காரணம் உணரும்பொழுது கண்ணீர்.
இது பரியனுக்கு மட்டுமல்ல நிறைய பேர் இப்படித்தான் இருக்கின்றார்கள். அப்பாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதையே கவுரவக் குறைச்சலாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
"ம் ஆளயும் சைசையும் பாரேன்...அவனுங்க வந்தா பயந்துரணுமோ பேசாம இரம்ல.."
"அவனுங்க வந்தா என்னல..இப்ப ஏன் பயப்படுற ..பயந்தாங்கொள்ளி பயல.."
"நீ ஏம் மாப்ள வீறு வீறுன்னு கத்துற..உக்காரு மாப்ள"
என்று ஆரம்ப காட்சியில் பரியன் நண்பர்கள் பேசிக் கொள்ளும் காட்சி ஒன்றே போதும் திருநெல்வேலியின் மண் மணம் மாறாமல் எவ்வளவு யதார்த்தமாய் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி யென்று. திருநெல்வேலியைப் பற்றி திருநெல்வேலிக்காரனால் மட்டுமே இவ்வளவு யதார்த்தமாய் எடுக்க முடியும்.
இதுபோல ஒரு காதல் ப்ரபோஸலை தமிழ் சினிமா நிச்சயம் கண்டிருக்காது. நானும் பயந்து கொண்டே இருந்தேன் , எங்கே ஜோதி லெட்சுமி, பரியனிடம், " ஐ லவ் யு" சொல்லிவிடுவாளோ என்று? உண்மையாய் நேசிப்பவர்கள் "ஐ லவ் யு" சொல்வதில்லை. 
காதலைத் தெரிவிக்கும் பொழுது, சாக்லேட் கொடுக்கும் பழக்கம் ஜோதி லெட்சுமியைப் போலவே நிறைய பெண்களுக்கு இருக்கிறது. அந்த சாக்லேட் நினைவுகள் , சிலருக்கு நினைவுகளாக மட்டுமே இருக்கின்றது. Jumaana Syed Ali
பரியன் கல்லூரியில் நடைபெறும் ஒரு தகராறில், தள்ளுமுள்ளு நிகழ்ந்து முடிந்த பிறகு ,
அவள் , தகராறில் கழன்று விழுந்த கடிகாரத்தை எடுத்து வந்து , அவனிடம் கொடுக்கும் காட்சி எத்தனை பேர்களுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. அவ்வளவு ஆழமானது. அவளது கண்கள் அவன் மீதே இருந்திருக்கின்றன.
நாம் செய்து கொண்டிருப்பது தவறு என்று படம் பிடித்து காட்டினால் மட்டுமே, அதனை தவறாகவே உணருகின்ற நிலையில் உள்ள ஆதிக்க ,அதிகார , துஷ்பிரயோகம் செய்கின்ற மனிதர்கள் நம்மைச் சுற்றியும் இருக்கின்றார்கள்.
சினிமா நடக்க முடியாதவற்றை காட்டுவதை நிறுத்திவிட்டு , நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதை காட்டினாலே போதும் .
வாழ்த்துகள் Mari Selvaraj இன்னமும் நிறைய வலிகள் இருக்கிறது உன்னிடம் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகின்றது. காத்திருக்கின்றோம்.
செத்துப் போன பிறகு 3 நாட்களுக்கு மேல நம்ம பாடியை நம்ம வீட்டுலயே வைக்க மாட்டாங்க..அது அழுகி, உடல் உறுப்புகள் எல்லாம் கெட்டுப்போய், ஊதி, நாற்றம் வர ஆரம்பித்துவிடும் .
இந்த நாறிப்போகப்போகிற பாடியை சுமந்து திரிபவர்களுக்கு, ஏன் இத்தனை சாதி வெறி? ஆணவம்? திமிர்? உயர்ந்தவன் என்கிற அகம்பாவம்..? திருந்தி தொலைங்கல ...
-gnaniyar Zubair


Friday, October 26, 2018

தலைவெட்டப்பட்டது - ஆத்தூர் ,தளவாய்ப் பட்டி ராஜலட்சுமி ,வயது 13.

தலைவெட்டப்பட்டது - ஆத்தூர் ,தளவாய்ப்
பட்டி ராஜலட்சுமி ,வயது 13.
கொலைகாரன் தினேஷ் குமார், வயது 27 - சாராயம் குடித்தால் அவர் பைத்தியமாகி விடுவாராம்.
கேலி செய்த ஆத்திரத்தில் ஒருத்தன் கோபமடைந்து வெட்டுவதாக இருந்தால் அவளை நேரடியாக தலையை வெட்டியிருக்கலாம்,
ஆனால் கையில் கொண்டுவந்த சிறிய கத்தியை வைத்து அவளது ஜெனிடல் பார்ட்ஸில் குதறியிருக்க கூடாது.
இது குடிவெறியில் செய்யப்பட்டதல்ல... சாதிவெறியில் நிதானமாக செய்யப்பட்டது.
இதில் குற்றவாளி யார்?
*சிநேகமாக கேலி கிண்டல் செய்த சிறுமியா?
*குடித்துவிட்டு வீடு புகுந்து அவள் தலையை வெட்டிய தினேஷ் குமாரனா?
* சாராயத்தை கண்ட இடத்திலெல்லாம் வைத்து விற்பனை செய்து மனிதர்களை மிருகமாக்கும் தமிழக அரசா?
* இல்லை, கடந்தவாரம் சென்னையில் வீடு புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கணவனின் முன்னிலையில் மனைவியை கற்பழித்த செய்தியோடு இந்த சிறுமியின் கொடூர கொலையையும் சேர்த்து மண்ணுக்குள் புதைக்கும் ஊடகமா?
ரஜினி பேரனும், விஜய் கொஞ்சிய குழந்தையும் தான் உங்களுக்கு முக்கிய செய்தியா..? தலையை வெட்டி ரோட்டில் வீசிய கொடூரம் என்ன விளையாட்டா?
நன்றி: Nasrath S Rosy

எட்டு வயதுடைய மதரஸா மாணவன் முஹம்மது அஜீம்

எட்டு வயதுடைய மதரஸா மாணவன் முஹம்மது அஜீம் கயவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். 25-10-2018 அன்று டெல்லியில் உள்ள மாலவியா நகருக்கு அடுத்த பேகம்பூர் என்ற இடத்தில் இந்நிகழ்வு நடந்துள்ளது. காவல்துறை இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.
இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக! இதற்கு காரணமான கலவர வெறி பிடித்த நாய்களை நாசமாக்குவானாக! சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியை தந்தருள்வானாக!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திருமபிச் செல்லக் கூடியவர்கள் நாம்)
NEW DELHI — An 8-year-old madrasa student, identified as Mohammad Azeem, was beaten to death by some people in the Begumpur locality of Malviya Nagar area in Delhi on Thursday. Police have sent the body for post-mortem. None of the accused have been arrested yet.
தகவல் உதவி
கேரவன் தினசரி
25-10-2018


எனது பெயர் அமீர் சர்மா. நான் ஒரு ஹிந்து குடும்பத்தில் பிறந்தவன்.

"அஸ்ஸலாமு அலைக்கும்!
எனது பெயர் அமீர் சர்மா. நான் ஒரு ஹிந்து குடும்பத்தில் பிறந்தவன். எனது மூதாதையர்கள் ஹிந்து மத புரோகிதர்களாக இருந்தனர். இறை பக்தியுடை எனது தாயோரோடு முன்பு காலையிலேயே கோவிலுக்கு செல்லும் பழக்கம் உடையவன்.சிறு வயதிலிருந்தே எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாது வளர்ந்து வந்தவன்.
ஃப்ரான்ஸில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபுக்கு தடை வந்துள்ளதாக முன்பு பரவலாக ஊடகங்கள் மூலமாக படித்தேன். மதங்களை ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் மாஜித் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு அறிமுகமானார். எனது முழு வாழ்வும் அந்த நண்பரின் சந்திப்பால் முற்றிலுமாக மாறிப் போனது. எனக்குள் எழுந்த அனைத்து சந்தேகங்களையும் மிகத் தெளிவாக விளக்கம் அளித்தார். இஸ்லாத்தின் அடிப்படை, இறைவனுக்குரிய இலக்கணங்கள், இறைவன் மனிதனிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் எனற் பல கேளிவிகளுக்கான விளக்கம் கிடைத்தது.
24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்; நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்."
சகோதரர் அமீரின் அழகிய சொற்பொழிவை கேளுங்கள்.


Wednesday, October 24, 2018

முஹம்மது ஃபஹீம் - சாதனையாளன்

முஹம்மது ஃபஹீம் - சாதனையாளன்
ஐயாயிரம் ஆண்டுகள் முன்பு உள்ள தேதியை சொன்னாலும் உடன் அதன் கிழமைகளை தயக்கமின்றி இந்த 13 வயது மாணவன் சொல்கிறான். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் செர்ந்த முஹம்மது ஃபஹீம் என்ற இந்த மாணவன் இந்திய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளான்.
இந்த மாணவனின் திறமையை ஆக்கபூர்வமாக பயன்படுதிக் கொள்ளும் சூழலை இறைவன் ஏற்படுத்துவானாக!


உண்மையான தேச பக்தர்கள் இந்த இளைஞர்கள்தான்.

உண்மையான தேச பக்தர்கள் இந்த இளைஞர்கள்தான்.
அற்ப பதவி சுகத்துக்காக அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேரை குஜராத்தில் கொன்று குவிக்க காரணமாயிருந்த மோடி தேச பக்தனல்ல.
அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்து இஸ்லாமிய மக்களை பிளந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஹெச். ராஜா போன்றவர்கள் தேச பக்தர்கள் அல்ல.
மாலேகானில் குண்டு வைத்து இறந்த அப்பாவி இஸ்லாமியர்களை நினைத்து சந்தோஷப்பட்ட பிரக்யாசிங் தேச பக்தை அல்ல.
குஜராத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் குடியிருப்புக்குள் இந்துத்வ அடியாட்களை அழைத்துச் சென்று இஸ்லாமியர்களை தேடித் தேடி கொன்று குவித்த மாயா கோட்னானி ஒரு தேச பக்தை அல்ல.
பிறகு யார்தான் தேச பக்தர்கள் !!!
எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் சாலையோரத்திலும், அரசு மருத்துவமனைகளிலும், பூங்காக்களிலும், கேட்பாறற்று கிடக்கும் ஏழை எளியவர்களின் பிணங்களை சுமந்து சென்று அந்த மக்களின் மத சடங்குகளையும் செய்வித்து அடக்கம் செய்து வரும் இந்த இஸ்லாமிய இளைஞர்களே உண்மையான தேச பக்தர்கள்.


நாம் திருந்தவில்லை என்றால் நமக்கு மோடியும் பழனிச்சாமியுமே கதி.

இட ஒதுக்கீடு உன்னுடைய பார்வை இன்னும் தெளிவடையவில்லை என்று தோன்றுகிறது.
இட ஒதுக்கீடு பற்றி விமர்ச்சிப்பவர்கள் வரலாற்று பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த நாட்டு அரசர்களை யாகங்கள் செய்துவளைத்துப்போட்டு, அரசனைமட்டும் சத்திரியன் என்று புகழ்ந்து அவனையும் தனக்கு கீழே வைத்துக்கொண்டு, மான்ய நிலங்களையும் பசுக்களையும் தானமாக வாங்கிக்கொண்டு, கல்வியை அவர்களுக்கு 100% ஒதுக்கீடாக வைத்துக்கொண்டு, அவர்களுக்கென்று ஒரு தெரு வைத்துக்கொண்டு அங்கே செருப்பு போட்டு நடக்க கூடாது என்றெல்லாம் ஆணவம் காட்டிக்கொண்டிருக்கும் அந்த சிறுபான்மைதான் இட ஒதுக்கீடு வரக்காரணம்.
அவர்கள் நிறைவேற்ற எண்ணி இருப்பது மனுதர்மம். அவர்களுக்கு அரசர்கள் இருந்தவரை அது சுலபமாக இருந்தது. 100% அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு. அவர்களுக்கும் மட்டுமே கல்வி. அரசன் போரிடுவான். விவசாயி மகன் விவசாயிதான். நெசவாளி மகன் நெசவாளிதான். செருப்பு தைத்தவர்கள் செருப்புதான் தைக்க வேண்டும். முடிவெட்டுபவர்கள் முடித்தான் வெட்டவேண்டும். கல்வி வேறு யாருக்கும் இல்லை.
இதை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள்தான். அவன் ஆட்சியில் அனைவருக்கும் ஒரு நீதிதான். அதனால்தான் அவனுடைய ஆட்சியில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்று போராடினார்கள். அப்போதுதான் இந்த சிறுபான்மை மறுபடியும் தங்கள் தர்மத்தை கொண்டுவரமுடியும்.
இந்தியா என்று ஒரு நாடு உருவாக்கப்பட்டு நமது சொந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது சட்டங்களை இயற்றிய நமது சான்றோர்கள் 2000 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட சமூக நீதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு.
ஒருவன் வீதியில் நடந்தாலே தீட்டு என்ற நிலைமாறி இப்போது எல்லோரும் அவர்கள் விரும்பியதை செய்யலாம் என்பதே இந்த ஜனநாயகத்தில் வெற்றிதானே.
மனித குலத்தில் பிறந்த அனைவரும் சமம் என்பதுதானே இயற்கையின் நியதியாக இருக்க முடியும்?.
ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தன. அவன் தலையில் பிறந்தான் என்கிறான். தலையில் எப்படி பிறக்க முடியும். மார்பில் எப்படி பிறக்க முடியும்?, தொடையில் எப்படி பிறக்க முடியம் ?, காலில் எப்படி பிறக்க முடியும் ?. இப்போதும் அப்படி பிறக்கிறார்களா ?. அப்படிப்பிறந்தால் நான் அவர்கள் சொல்லும் ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொள்கிறேன். நீயும் நானும் சென்று சரிபார்க்க முடியாத காலத்தில் பிரம்மாவிடம் நடந்ததாக கூறுவதை நமது பகுத்தறிவு ஏற்கிறதா ?
பெரியார் தலைவர் மட்டும்வராது போயிருந்தால், அவர் சிந்தனைகளை நடைமுறை படுத்திய காமராஜர் போன்ற தலைவர்கள் இல்லை என்றால் இன்று நாமெல்லாம் நமது குலத்தொழில்களைத்தான் செய்துகொண்டிருந்திருப்போம். பள்ளிக்கூடம் எங்கேபோவது. அவர்களுக்கு நிகராக எப்படி அலுவலகங்களில் வேலைசெய்வது. இப்போதும் அவர்களுடைய அரசியல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மறுக்க முடியுமா.
உயர்சாதி என்று அவர்கள் ஒருபுறம் தங்களை சொல்லிக்கொள்ள, ஒடுக்க பட்டவர்களுக்கு உயர் சாதியினருக்கும் இடையில் இருக்கும் அவர்கள் செய்யும் கொடுமைகள் வேறு.
சமூக நீதி நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிடத்தான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு சிலருக்கு வாய்ப்புகளை பறிக்கலாம். அதுதானே ஒடுக்கப்பட்டவர்களுக்கும்?. வாய்ப்புகள் நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டவர்கள்தானே ஒடுக்க பட்டவர்களும். மனசாட்சியும் சிந்தித்தால் நாம் இந்த இடத்துக்குத்தான் வருவோம்.
மேலும், நான் நாம் செய்யும் எதுவும் professionதான். ஜோதிடம் பார்ப்பதும், மந்திரம் ஓதுவதும் profession தான் டாக்டர் , என்ஜினீயர் மட்டும் profession அல்ல. நான் டாக்டர் ஆவதற்கு முயற்சி செய்யவில்லை. நான் வணிகவியலில்தான் சேர்ந்தேன்.
இது உனக்கும் எனக்கும் ஆனது மட்டும் அல்ல. பொதுவெளியில் இருக்கும் நாம் நம்மை சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நம்மை சுற்றி சூழ்ந்திருக்கும் இருள் பற்றி நாம் முணு முணுத்து கொண்டிருப்பதைவிட ஒரு விளக்கேற்றி வைப்பது மேல் அல்லவா?
பகுத்தறிவு என்ற விளக்கை அனைவரும் ஏந்தவேண்டும். இவன் வந்தால் நன்றாக இருக்கும் அவன்வந்தால் நன்றாக இருக்கும் என்று மாறி மாறி வோட்டுப்போடுவதை விட , நம்முடைய இன்றைய நிலைக்கு நாம்தான் காரணம் என்று உணர்ந்து கொண்டாலே நம்மை ஆள்பவன் திருந்துவான். நாம் திருந்தவில்லை என்றால் நமக்கு மோடியும் பழனிச்சாமியுமே கதி.

Tuesday, October 23, 2018

சபரிமலையில் கொடிய குற்றவாளிகள் இறக்கிவிடப்பட்ட கொடுமை

கண்ணூர், அக்.23 சபரிமலையில் கல வரத்துக்காக ஆர்எஸ்எஸ் தலைமை தேர்வு செய்தவர்களில் பலர் கண் ணூர் உள்ளிட்ட கேரளத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்த கொடிய குற்றவாளிகள் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.
ஆரம்ப நாள்களில் தலச்சேரி, பானூர் பகுதிகளிலிருந்து கொடும் குற்றப் பின்னணி கொண்டவர்களை நியமனம் செய்திருந்தனர். இப்போது மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள் ளவர்களை கோவிலுக்குக் கொண்டு சென்றுள்ளனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இந்தக் கும்பலில் இடம் பெற்றுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைமை ஏற்பாடு செய்த தனி வாகனங்களில் இவர்கள் சபரிமலைக்குச் சென்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட அன்றே தலச்சேரி, பள்ளூர், பானூர் பகுதிகளிலிருந்து இவர்களை சபரி மலைக்கு தனி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ஏற்கெனவே சபரிமலைக்குச் சென்றவர்களையே இதற்காக தேர்வு செய்திருந்தனர். கறுப்பு ஆடை அணிந்து அவர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள். முதல்நாள் ஊடகவியலாளர்களைத் தாக்கியவர்களில் வட கேரளவாசிகளின் மொழியில் பேசியவர்கள் உள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் கூறினார்கள். இதற்கு முன் பாகவே தலச்சேரி பகுதியிலிருந்து சென்ற ஆர்எஸ்எஸ்காரர்கள் எருமேலி சென்றபோது எடுத்த செல்பி, முகநூல் பதிவுகளில் இடம்பெற்றிருந்தது.
கொடிய குற்றவாளிகள் இறக்கிவிடப்பட்ட கொடுமை
எருமேலி பகுதியிலிருந்து சுமார் நாற்பது ஆர்எஸ்எஸ்காரர்கள் பல நாட்களாக சபரிமலையில் உள்ளதாக உளவுத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மாகியிலிருந்து வந் துள்ள ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான யுவமோர்ச்சா நிர்வாகி, போராட்டப் பந்தலுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். நிலக்கல்லில் நடந்த தாக்குதலில் இந்த நபர் பங்கேற்றுள்ளார். மாகி கடற்கரை காவல்நிலையத்தைத் தாக்கியது உள்பட பல்வேறு வழக்கு களில் இவர் குற்றவாளியாவார். புத னன்று இரவு தலச்சேரி இரண்டாம் கேட் தைவத்தார் மடம் பகுதியிலிருந்து பேருந்தில் கயவர்களை ‘சுவாமி' வேடத்தில் சபரிமலைக்குக் கொண்டு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மரபை மீறி யாரும் வரமாட்டார்கள் என நாங்கள் கருதுகிறோம். வந்தால் ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்று மிரட்டும் தொனியில், கல்யாச்சாரி எனும் இடத்தில் இருந்து சென்றுள்ள ஆர்எஸ்எஸ் கும்பல் முகநூலில் பதி விட்டுள்ளது.
தகவல் உதவி
விடுதலை நாளிதழ்
24-10-2018


காவி கரை படிந்த காவல் துறையினருக்கு....

சில மாதங்களுக்கு முன்பு கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிஃபாவுக்கு நீதி கிடைக்க வேண்டி தொடர்ந்து போராடி வருபவர் தாலிப் ஹூசைன். இவர் ஒரு வழக்கறிஞர். ஆனால் இவரை அரசு பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தனது மகளை சிறுது நேரம் கொஞ்சி மகிழக் கூட கை விலங்கை அவிழ்க்க மனது வரவில்லை காவி கரை படிந்த காவல் துறையினருக்கு.
உலகம் முழுவதும் உள்ள சில நாடுகளில் இந்துக்களும் முஸ்லிம்களும் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் கலவரங்கள் கொலைகள் நடக்கின்றனவா? என்பதற்கு சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதனையும் பார்த்து விடுங்கள்.



எதற்கும் இலாயக்கில்லாத மகன்!

எதற்கும் இலாயக்கில்லாத மகன்!
ஒரு மகன் என்னதான் மோசமானவனாக, உருப்படாதவனாக, எதற்கும் இலாயக்கில்லாதவனாக இருந்தாலும் பணமதிப்பழிப்புக்குப் பிறகு தன்னுடைய 90 வயது தாயை ஏடிஎம்முக்கு வெளியே வரிசையில் நிற்கத் துணிய மாட்டான் என்றே நான் நம்புகின்றேன்.
ஆனாலும்-
ஒரு உருப்படாத பையன் தன்னுடைய கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக தன்னுடைய 90 வயது தாயை ஏடிஎம்முக்கு வெளியே வரிசையில் நிற்க வைக்க முற்படுகின்றான் எனில், அதுதான் மார்க்கெட்டிங்.
அந்தத் தாயை நான் பெரிதும் போற்றுகின்றேன். மதிக்கின்றேன். ஆனால் அவளுடைய உருப்படாத பையன் அவளை வைத்துக்கொண்டு மார்க்கெட்டிங் செய்வதைத்தான் கண்டிக்கின்றேன்.
ஒவ்வொரு முறை உங்களுடைய தாயின் காலைத் தொட்டு நீங்கள் வணங்கும்போதும் அதனைப் படம் எடுக்கின்றீர்கள் எனில் அதுதான் மார்க்கெட்டிங். தாயைச் சந்திக்கப் போகின்ற போதெல்லாம் காமிரா மேனுடன் போவது மார்க்கெட்டிங்தான். இதனைக் கண்டிக்கின்றேன்.
-----------
நீங்கள் திருமணமானவர் எனில் ஏன் அதை மறைப்பதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றீர்கள்? திருமணம் செய்வது என்ன பெரும் பாவமா? மணமானவர் என்கிற நிலையை மறைப்பதற்காக ஏன் இத்துணை பிரயத்தனம்?
குடும்பம் இருந்தால்தான் ஊழல் செய்வார்கள். குடும்பமே இல்லை. யாருக்காகத்தான் பொருளீட்டுவார் என்கிற நிலையை மார்க்கெட்டிங் செய்கின்ற உத்திதான் இது. இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமரான போதும் இப்படித்தான் சொன்னார்கள். அவருக்குக் கல்யாணமே ஆகவில்லைங்க. மனைவி இல்லை. குழந்தைகள் இல்லை. யாருக்காக ஊழல் செய்வார்?
ஒன்றைக் கவனியுங்கள். மணமானவர்கள் அனைவருமே திருடர்கள் கிடையாது. குடும்பம் இல்லாதவர்கள் எல்லோருமே யோக்கியர்களும் கிடையாது. கப்பர் சிங் கூட கல்யாணம் செய்யாதவர்தான். சம்பல் பள்ளத்தாக்கில் ஆட்டம் போட்ட கொள்ளையர்கள் அனைவருமே குடும்பம் இல்லாதவர்கள்தாம்.
கன்னையாவின் கர்ஜனை பரவசப்படுத்துகின்றது.
Azeez Luthfullah அவர்களின் பதிவிலிருந்து....