Followers

Sunday, February 28, 2021

அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி ..?

 அன்பான பாஜகவினர்க்கு, ஒரு இந்துவின் கேள்வி ..?


நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் உண்மையான இந்துவே இல்லை, என நேரிலும், சமூக வலைதளங்களிலும், மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!!


நாங்கள் இந்து இல்லை என்பதை, எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள் ?


பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா ?

                       அல்லது

RSS-காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா ?

                       அல்லது


பெரியார் சொன்னதற்காக கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டோமா.. !

இல்லையே..?


எப்போதும் மிகச் சரியானதையே, தேர்தெடுப்பவர்கள் நாங்கள்.!!


ஒட்டுமொத்த இந்துக்களையும் உங்களுக்கு "பத்திரம்" போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா ?


நீங்கள் வருவதற்கு முன், நாங்கள் என்ன நிர்கதியாகவா இருந்தோம் ?


பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமே..!!

முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!!


மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள் அதை விட்டுவிட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரேகாரணத்திற்காக..


என் இந்து மக்களை, சூடு சொரனை இருக்கிறதா ?

சோற்றில் உப்பு போட்டு தின்கிறீர்களா" .? என விமர்சிப்பதும் சந்தேகிப்பதும் மிகவும் கீழ்தரமானது.


நாங்கள் உப்புபோட்டு உண்பதை, நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..!


நடுநிலை நக்கிகள் என்கிறீர்களே ?

உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம்,

முகத்திற்கு நேராக இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா ?


இதுதான் உங்கள் அரசியலா ?

இவ்வளவுதான் உங்கள் நாகரீகமா ?


பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பின் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் கீழ்கண்ட உயர்பதவிகளை நியமனம் செய்தார்.. 


1. மதுரை பல்கலைக்கழகம் - எம் கிருஷ்ணன்..

2. அண்ணா பல்கலைக்கழகம் - சூரப்பா

3. தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகம் - சுதா சேஷய்யன்

4. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் - பிரமிளா குருமூர்த்தி

5. தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் - C பாலச்சந்திரன்


இவற்றில் 80 சதவிகிதம் பிராமணர்கள்.. அதாவது தமிழ்நாட்டில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பவர்கள்.. மீதம் 98 சதவிகிதம் இருக்கும் முதலியார், பிள்ளை, நாடார், செட்டியார் கவுண்டர், வன்னியர், பறையர், நாயுடு, யாதவர் போன்ற சமூகங்களிலிருந்து யாருமே இல்லையே ? நாங்கள் இந்துக்கள் இல்லையா 


அப்படி என்றால் இந்துக்கள் என்றால் பிஜேபி ஆர்எஸ்எஸ் பார்வையில் வெறும் பிராமணர் மட்டும்தானா ? 


தேர்தல் வேலை செய்வது , வாக்களிப்பது, கலவரங்கள் செய்து கோர்ட்டுகளில் கேஸ்களுக்கு அலைவது நாங்கள்...!! அதன் மூலம் கிடைக்கும் பதவி அதிகாரத்திற்கு பிராமணர்கள்..!! 


அந்த பிராமணர்கள் யாரும் தேர்தல்களிள் வாக்களிப்பது கூட கிடையாது. 


இதுதான் RSS பிஜேபியின் இலக்கணமா ?


அப்படியெனில்...!

"எங்கள் வாக்கு"

உங்களுக்கு நிச்சயமாக இல்லை..!

நீங்கள் எப்போதும்போலவே,

நோட்டாவுக்கு கீழேதான்..!


இப்படிக்கு...

(சோற்றில் உப்பு போட்டு உண்ணும்  மானமுள்ள தமிழன்).


(பகிரி வழி)

தனது கண்கள் முன்னே மோடியின் ஆட்கள் கொல்வதை பார்த்த அப்துல் மஜீத்.

 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இதே நாளில் தான் படுகொலை நடந்தது!


நரோடா பாடியாவில் தனது குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை தனது கண்கள் முன்னே மோடியின் ஆட்கள் கொல்வதை பார்த்த அப்துல் மஜீத்.


'7 வயது 9 வயது 13 வயது சிறுமிகளை அந்த மிருகங்கள் வன் புணர்வு செய்து வெட்டி வீசுகின்றனர்.ஆனந்தத்தில் நடனமாடுகின்றனர். 7 மணிக்கு பிரசவம் பார்த்து குழந்தையை எடுக்க வேண்டிய அதே நேரத்தில் அந்த பெண்ணை நிறை மாத கர்பிணியை வன் புணர்வு செய்து அவரின் வயிற்றை கீறி குழந்தையை வெட்டி எறிகின்றனர். இதனை செய்வது 15 வயது 20 வயது, 25 வயது இளைஞர்கள். எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது. எனக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இறைவனின் கிருபையால் ஏதோ வயிற்றை கழுவ ஏதாவது உழைத்து வருகிறேன். அனைத்தையும் எங்களை படைத்த இறைவனிடம் ஒப்படைத்து விட்டோம். அவன் பார்த்துக் கொள்வான்'


இறைவா! குஜராத்தில் ரத்த வெறி ஆட்டம் ஆடிய மிருகங்களை நாங்கள் காணும் வகையில் தண்டிப்பாயாக! இந்த வெறி ஆட்டம் ஆடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த ஆட்சியாளர்களை சிறுமை படுத்தி அழிப்பாயாக!




Saturday, February 27, 2021

ரியாதிலுள்ள அல்-ராஜிஹ் பள்ளி

 ரியாதிலுள்ள அல்-ராஜிஹ் பள்ளியின் இமாம் ஷேஹ் ஸாலிஹ் அல்-ஹப்தான் தொழுகையில் இமாமத் செய்துகொண்டு இருக்கும்போது நோய்வாய்ப்படுகிறார்.

உடனே இமாம் அவர்கள் பின்னால் வர, முஅஸ்ஸின் இமாமாக தொழுகையை தொடர வைக்கும் ஒரு அரிய காட்சி.
இது தொழுகையில் இஸ்திஹ்லாஃப் என்று அழைக்கப்படுகிறது.



சென்னை சாலி கிராமம் பள்ளிவாசலில்....

 

சென்னை சாலி கிராமம் பள்ளிவாசலில்.....

 

 

சென்னை சாலி கிராமம் பள்ளிவாசலில் இமாம் (தொழுகையை நடத்துபவர்) நிற்க வேண்டிய இடத்தில் திருமா உரிமையோடு நிற்கிறார். தீட்டு பட்டு விட்டதாக எந்த இஸ்லாமியரும் குதிக்கவில்லை. அவர் நின்ற இடத்தை தண்ணீர் விட்டு கழுக வில்லை.

 

 

இதே போன்று இந்து மதம் கோவிலில் அர்ச்சகர் சாமி சிலைகளுக்கு மந்திரம் ஓதும் கருவறை பக்கம் இந்து மதத்தைச் சேர்ந்த இதே திருமாவை அனுமதிக்குமா? அதற்கு இந்து மத சாஸ்திரங்கள்தான் அனுமதி வழங்குமா?

 

--------------------------------------------------------

 

 

நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரையில் சில

 

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

 

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

 

 

--------------------------------------

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் ஆதரியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

குர்ஆன்: 4:1




 

இந்து வேதங்களில் ஹிஜாப்

 இந்து வேதங்களில் ஹிஜாப்

கடவுள் பெண்களை படைத்து, அவர்களை கூச்சமுடையவராக ஆக்கியுள்ளார். பெண்கள் எந்த ஆணையும் தலைதூக்கி பார்க்க கூடாது. பார்வையை தாழ்த்திக்கொண்டவராக ,உச்சி முதல் பாதம் வரை ஆடை கொண்டு மூடப்பட்டவராக பெண்கள் இருத்தல் வேண்டும்.
(ஆதாரம் : ரிக் வேதம் - எட்டாம் நூல் 33வது மந்திரம் 19-20 வரை)
பெண்களுடைய உடைகளை ஆண்கள் ஒருபோதும் உடுத்த கூடாது
(ஆதாரம் : ரிக் வேதம் - 10வது நூல் 85வது பாடல் மந்திரம் 30)
பரசுராமர் ,ராமரை சந்திக்க வந்த போது... சீதையை பார்த்து ராமர் கூறுகிறார்... "சீதையே! நீ திரைகளுக்குள் இருந்து கொள், உன் பார்வையை தாழ்த்திக்கொள்" என்று
(ஆதாரம் : மஹாவீர சரித்திரம் - அதிகாரம் 2, 71வது பக்கம்)
பிரம்மா , பெண்ணை படைக்கும் போதே அவளுக்கு கட்டளையிடுகிறார் , "பெண்ணே நீ பார்வையை தாழ்த்திக்கொள், ஆடவர்களை தலைதூக்கி பார்க்காதே, ஆடைகள் கொண்டு மூடப்பட்ட உனது அங்கங்களை யாருக்கும் வெளிப்படுத்தாதே, பெண்மையை பேணிக்கொள்வது உன் மீது கடமையாகிறது" .
(ஆதாரம் : ரிக் வேதம் ,பாகம் 19, மந்திரம் 8 - 33வது வரி)
இந்தியாவில் குப்தர் காலத்திலும் அவர்களுக்கு பிந்தைய கால ஆட்சியாளர்களது காலத்திலும் வெளியிடப்பட்ட உலோக நாணயங்களில் தலை, தோள் முதல் மார்பு வரை ஆடையால் முழுவதும் மூடப்பட்ட பெண்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இந்து மதம் , தன் பெண்களை ஆடைகளை கொண்டு தன் அங்கங்களை மறைக்க கூறுகிறது. தலைக்கு முக்காடு போட்டு பார்வையை தாழ்த்தச்சொல்கிறது. வெளிப்படையாக காட்டவேண்டிய புற உறுப்புகளை தவிர ஏனைய பகுதிகளை முழுவதுமாக மூட சொல்கிறது,முகத்தையும் சேர்த்து. பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்களும், ஆண்கள் அணியும் ஆடையை பெண்களும் அணிய தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமிய விழுமியங்கள் பேசுவதை ஏளனப்படுத்துவோர் இந்து வேத சாஸ்த்திரங்கள் என்ன கூறியுள்ளது என்பதையும் கொஞ்சம் படித்தல் நலம். இன்றளவும் வட இந்திய ராஜதானி,குஜராதி,உபி,பிகார் ,பஞ்சாப், ஹரியாணா, ஜார்கண்ட், வங்காளிகள் , மபி, ஒரிசா வரை பெண்கள் தலையில் கூங்கட் எனும் முக்காடு அணியும் பழக்கம் உள்ளவர்களாகவும்... திருமணம் மற்றும் அந்நிய ஆண்கள் இருக்கும் நேரங்களில் முகத்தை மறைக்கும் ஜுனாரி எனும் முகத்திரை அணியும் பழக்கமுடையவராகவும் காணப்படுகின்றனர். இதனை இந்து மதம் சார்ந்தவர் மாத்திரமல்லாது ஜைனர், பௌத்த, சீக்கிய,மார்வாரி இனப்பெண்களும் கடைபிடிக்கின்றனர்.
இந்து சமஸ்கிருத புராணங்களில் தலை முக்காடு என்பதை "அவகுந்தனா" என்ற சொல்லைக்கொண்டு குறித்துள்ளனர். உத்தரியா என்பது தோள் சீலையையும், அதிகந்தப்பட்டா என்பது உடல் முழுக்க மூடும் ஆடையையும், சிரோவஸ்த்ரா என்பது தலை துணியையும் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால் கிமு 3-4 நூற்றாண்டுகளுள் எழுதப்பட்ட சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும், பிராமணர்கள் இயற்றிய ஆரியங்க மற்றும் உபநிஷத்து தர்மசாஸ்திரத்திலும், வத்சாயன மல்லநாகர் எழுதிய காமசூத்திராவிலும் பெண்கள் உடலை மறைக்க வேண்டுமென எங்கும் கூறப்பட்டவில்லை. ஆனால் ஆடை அணியும் பெண்கள் நாகரீக அமைப்பில் வாழ்பவராகவும், மேலாடை அணியாது தலையை மறைக்காதவர்கள் பரத்தைகளாகவும், ஆதிவாசிகளாகவும் பார்க்கப்பட்டனர் என்கிற தகவல்கள் கௌதமசாஸ்திரம் தெரிவிக்கிறது.
தலைப்பாகை அணிவது இரான் வழியாக, இந்திய இஸ்லாமிய ஆண்களுக்கு பரவியது போல எல்லா மதம் சார்ந்த வடநாட்டு ஆண்களுக்கும் பொதுவானதொரு பழக்கமானது. ஆனால் தலைக்கு முக்காடு அணிவது என்பது இஸ்லாமிய பழக்கம் வரும் முன்னரே இந்திய பெண்களுக்கு ஹிஜாப் அணியும் பழக்கம் ஜைனம் மற்றும் பௌத்த சமய நம்பிக்கைப்படி புரான காலத்தில் இருந்தே பழக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவில்களுக்கும் பொதுத்தளங்களுக்கும் வரும் பெண்கள் மெல்லிய ஆடையை கொண்டு தலை மற்றும் முகத்தை மறைத்துக்கொண்டே ஆக வேண்டும். நாகரீக உலகில் அப்பழக்கங்களை பலர் கடந்து வந்துவிட்டாலும், தங்களது மதம் போதித்தவற்றை வடநாட்டு பழங்குடிகள் யாரும் விட்டுக்கொடுக்கவில்லை.
பெண்கள் தலையை மறைப்பது உலகின் எல்லா கலாச்சாரத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று தான். அவர் மதக்கட்டுப்பாடு என்றில்லாமல் அதனை ஒரு ஆடைக்கலாச்சாரமாகவே எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடலின் எல்லா உறுப்பிற்கும் ஒரு ஆடை என்பது போல தலையை மறைக்கவும் ஒரு ஸ்கார்ஃப் என மிக எளிமையாக புரிந்து வைத்துள்ளனர்.


-Nasrath S Rosy பதிவின் காப்பி பேஸ்ட்