Followers

Tuesday, July 17, 2018

காவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா?

காவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா?

தூத்துக்குடி, மெரீனா போராட்டம் என்று ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்து சில நேரம் காவலர்களையும் தாக்கியுள்ளனர். காவலர்களை தாக்குபவர்கள் தேச விரோதிகள் என்று நம்ம ஊர் பொன் ராதா கிருஷ்ணன் முதற்கொண்டு ரஜினி வரை கூப்பாடு போடுகின்றனர்.

இங்கு வெஸ்ட் பெங்கால் மிட்னாபூரில் காவலர்களை பிஜேபியினர் எவ்வாறு வெறி கொண்டு தாக்குகின்றனர் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது.  நரேந்திர மோடியின் கூட்டத்துக்கு பிஜேபியினர் திரளாக வந்துள்ளனர். வாகன நெரிசல் அதிகமாகி போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே காவலர்கள் பிஜேபியினரை 'இதற்கு மேல் வாகனங்களோடு செல்ல வேண்டாம். நெரிசல் அதிகமாக உள்ளது. வாகனங்களை ஓரம் கட்டி விட்டு நடந்து செல்லுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளனர். எவர் சொல்வதையும் கேட்காதவர்கள் அல்லவா பிஜேபியினர். எனவே காவலர்களை துவம்சம் செய்ய தொடங்கினர். இந்நிகழ்வு நடந்தது 16-07-2018 அன்று.

இவர்கள் தேச விரோதிகளா? அல்லது தேச பக்தர்களா?


Monday, July 16, 2018

உலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்?

உலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்?
ஃப்ரன்ஸ் அணியில் 15 பேர் ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 7 முஸ்லிம்கள் இந்த அணியில் உள்ளனர். மொழி வெறி, இன வெறி, நிற வெறி போன்றவற்றை தூரமாக்கியதால் ஃப்ரான்ஸூக்கு இந்த வெற்றி சாத்தியமானது.
ஆனால் நமது நாட்டின் நிலை? டெஸ்ட் ட்யூப் குழந்தைகளை பெறுவதில் கூட 'ஆரிய விந்து வேண்டும்' என்று விளம்பரம் கொடுக்கக் கூடிய துர்பாக்கிய நிலையில்தான் நாம் உள்ளோம். அந்த அளவு இன வெறி தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். முன்னேற்றம் எங்கிருந்து வரும்?


உபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித்து கொலை!

உபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித்து கொலை!
யோகி ஆதித்யநாத் முதல்வராக வீற்றிருக்கும் உபியில் உள்ளது சம்பல் மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள குன்னாவூர் என்ற ஊரில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஐந்து பேர் கொண்ட மனித மிருகங்கள் வன் புணர்வு செய்து அருகில் உள்ள கொட்டகைக்கு இழுத்துச் சென்று அந்த பெண்ணின் மீது தீ வைத்து எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.
இது பற்றி குன்னாவூர் நகரத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அகில் அஹமது கூறுகிறார்:
'சென்ற வெள்ளிக்கிழமை 13ந்தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஆராம்சிங், மஹாவீர், சரண்சிங், குல்லூ, போனா என்ற ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்கிறது' என்கிறார்.
நாம் மனிதர்களுக்கு மத்தியில்தான் வாழ்கிறோமா? அல்லது மனித மிருகங்களுக்கு மத்தியிலா?
தகவல் உதவி
என்டிடிவி, இந்தியா டுடே
16-07-2018


Sunday, July 15, 2018

குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர் அடித்துக்கொலை

பள்ளி அருகே காரை நிறுத்தி சாக்லேட் கொடுத்ததால் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:
ஐதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் முகமது அஸம். 32 வயதாகும் இவர் ஐதராபாத் கச்சி பாவ்லியில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகன் இருக்கிறான். ஐதராபாத் எர்ரகுந்தா என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது நண்பர்கள் கத்தார் நாட்டைச் சேர்ந்த முகமது சலாம் மற்றும் நூர்முகமது, சல்மான் ஆகியோர் ஐதராபாத் வந்தனர்.
இவர்கள் 3 பேருடன் முகமது அஸம் கர்நாடக மாநிலம் பிதர்நகரில் நடைபெறும் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார்.
வழியில் கமால்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பள்ளி அருகே சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினார்.
அப்போது கத்தார் நண்பரான சலாம் தான் கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளை எடுத்து பள்ளி குழந்தைகளுக்கு கொடுத்தார். குழந்தைகளிடம் அவர்கள் அன்பாக பேசிக் கொண்டு இருந்தனர்.
இதைப்பார்த்த கிராம மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். குழந்தை கடத்தல் கும்பல் என்று சந்தேகப்பட்டு விசாரித்தனர். அவர்கள் சொன்னதை நம்பாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பயந்து போன முகமது அஸம் மற்றும் நண்பர்கள் காரில் அங்கிருந்து தப்பினர்.
இதனால் கிராம மக்களின் சந்தேகம் வலுத்தது. கார் சென்ற வழியில் உள்ள பக்கத்து கிராமத்துக்கு அவர்கள் போன் செய்து குழந்தை கடத்தல் கும்பல் காரில் வருகிறது மடக்குங்கள் என்று தெரிவித்தனர்.
உடனே பக்கத்து கிராம மக்கள் உஷார் ஆகி கார் வந்ததும் மடக்கி அதில் இருந்தவர்களை என்னவென்று கூட விசாரிக்காமல் சரமாரியாக தாக்கினார்கள். இதில் முகமது அஸம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். மற்ற 3 பேரும் காயத்துடன் அவர்களிடம் இருந்து தப்பி காரில் சென்றுவிட்டனர். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.
நடந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்திலும் ஐதராபாத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான முகமது ஆஸம் குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்துள்ளனர். அப்பாவியை கொன்று விட்டார்கள். அவரை தாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எங்களுக்கு நீதி வேண்டும் என்று கதறினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பிதர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் கிராம மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
மாலை மலர்
15-07-2018


வாழ்த்துகிறோம்.... வரவேற்கிறோம்.....