Followers

Monday, November 30, 2020

ஆணவத்தின் உச்சகட்டம்.

 விவசாயிகள் தங்களின் உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் போது சந்தோஷத்தில் தாளம் அடித்துக் கொண்டிருப்பது ஆணவத்தின் உச்சகட்டம்.
ராமதாஸின் ஆட்கள் வன்முறையில் இறங்கி விட்டார்கள்.

 வன்னியர்களிடம் இழந்த செல்வாக்கை புதுப்பிக்கவும் வரும் தேர்தலில் குறிப்பிட்ட சதம் சீட்களை பெறவும் இதோ ராமதாஸின் ஆட்கள் வன்முறையில் இறங்கி விட்டார்கள். இது எதில் போய் முடியுமோ!
டீகடை தான வச்சிருந்த..

 டீகடை தான வச்சிருந்த.. பெரிய சயின்டிஸ்ட் மாதிரி நடிக்கிற..?

Sunday, November 29, 2020

BJP ஆட்சிக்கு வந்தால் என்ன கேடெல்லாம் நடக்குமோ...

 ஆட்சிக்கு வராமலேயே சிறுமிகளை பாலியல் தொழிலாளிகளாக இந்த பிஜேபி கும்பலால் மாற்ற முடியும் என்றால்..

ஆட்சிக்கு வந்தால் என்ன கேடெல்லாம் நடக்குமோ...
உத்திரப்பிரதேசங்கள் சாட்சி...
பூர்வகுடி இந்தியர்களே.. சிந்தியுங்கள்.. (படித்ததில் பிடித்தது)


 


பூர்வகுடி இந்தியர்களே.. சிந்தியுங்கள்.. (படித்ததில் பிடித்தது)


இன்னும் எத்தனை ஆண்டுகள் பிராமணர்களை குறை  சொல்லியே வாழப் போகிறோம்?


நாட்டில்  வெறும் மூன்றுசதவீதமே உள்ள பிராமணர்களையும்  ஏன் எதிர்க்க வேண்டும்?


உண்மையில் தவறு யார் மீது?


கேட்டால் பிரித்தாலும் சூழ்ச்சி , மந்திரம், தந்திரம் என்று சொல்லுகிறோம், 


எந்த பிராமணர்கள் கூட்டமாவது 1000 ரூபாய் கிடையாது ஒரு நூறு ரூபாய் டிக்கெட் எடுத்து எந்த சினிமா தியேட்டரிலாவது படம் பார்த்ததுண்டா  ? 


எந்த பிராமண கூட்டமாவது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, அந்த நடிகரின் படங்களுக்கு பாலபிஷேகம், கட்அவுட், சுவர் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற கண்றாவிகளை செய்து தங்கள் சொந்த பணத்தை யாராவது செலவு செய்து பார்த்திருக்கிறோமா ?


எந்த பிராமண கூட்டமாவது அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், தெரு மின்விளகு, இலவச மனைப்பட்டா, இலவச வீடுகள் கேட்டு எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, வட்டாட்சியர் அலுவலகம் முன்போ போராடியதை பார்த்திருக்கிறோமா ?


எந்த பிராமண கூட்டமாவது சொந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒயின் ஷாப்பில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானம் குடித்து குடும்பத்தை நடுத்தெருவுக்கு வந்ததை பார்த்திருக்கிறோமா  ? 


எந்த பிராமண கூட்டமாவது அவர்களுக்கு சம்பந்தம்இல்லாத கட்சியிலாவது கூட்டாக சேர்ந்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம்,  பேரணி , சாலை மறியல், ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை, சிறை போன்றவற்றை சந்தித்ததை பார்த்திருக்கிறோமா  ?


எந்த பிராமண கூட்டமாவது, தேர்தல் நேரங்களில் எந்த கட்சியாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காதா என்று வீட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருக்கும் அவலத்தை பார்த்திருக்கிறோமா ? 


எந்த பிராமண கூட்டமாவது அரசு அலுவலகங்களிளோ , தனியார் நிறுவனங்களிளோ கடை நிலை ஊழியர்களாக பணி செய்வதை பார்த்திருக்கிறோமா? 


எந்த பிராமண கூட்டமாவது,  உடலழைப்பு செய்தோ, விவசாயம் செய்தோ, சாக்கடை அள்ளும் வேலையிலோ, துப்புரவு பணிகளிளோ, இயற்க்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளிளோ ஈடுபட்டதை பார்த்திருக்கிறோமா? 


எந்த பிராமண கூட்டமாவது சொந்த பணத்தை போட்டு கோயில் கட்டி, கூழ் ஊத்தி, முதுகில் அலுக்கு குத்தி தேர் இழுத்தோ, காவடி எடுத்தோ, வேலை தாடையில் மற்றும் உடல் முழுவதும் குத்திக்கொண்டோ, காலில் ஆணி செருப்பு போட்டுக்கொண்டோ, சாமி வந்து மிரண்டோ பார்த்திருக்கிறோமா, ?


இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், 


மேற்கண்ட எதுவுமே செய்யாத 3 சதவீத பிராமண மக்களுக்கு எல்லாம் எப்படி கிடைக்கிறது?


நாட்டில் 97 சதவீதம் BC மக்களான SC /ST,  MBC/OBC Religious minorities, போன்ற சாதியமுறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் இன்னும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், இலவச மனை பட்டா, தெருவிளக்கு, சாலைவசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலைந்து, திரிந்து காத்துக்கிடக்கிறோம், , 


உண்மையில் 3 சதவீத பிராமணர்கள் 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான SC /ST,  MBC/OBC மக்களை ஏமாற்றி அதிகாரத்தில் இருக்கிறார்களா? 


இல்ல 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான நாம் வெறும் 3 சதவீத பிராமணர்களிடம் ஏமாந்து போகிறோமா? 


உண்மையில் பிராமணர்கள் நம்மை ஏமாற்றவில்லை, நாம்தான் கடந்த  மூவாயிரம் ஆண்டுகளாக பிராமணர்களிடம் ஏமாந்து நிற்கிறோம், 


காலணாவுக்கு பொறாத பூணூல் கும்பலுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் நாம் தான் அவர்களுக்கு கொடுக்கிறோம்..


கல்யாணம் தொடங்கி கருமாதி , நினைவு நாள் போன்ற வீட்டில் நடக்கும் அத்தனை சுக துக்க நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை வரவழைத்து வேட்டி, துண்டு உட்பட, பச்சரிசி, பழம், தேங்காய், நெய் போன்ற பொருட்களை கொடுத்து தட்சணையாக 2000, 3000 கொடுத்து போய்ட்டு வாங்க சாமி என்று அனுப்புவதும் நாம்தான், 


அரசியல் அதிகாரம்,நிர்வாக அதிகாரம், சினிமா, விளையாட்டு, பத்திரிக்கைகள், ஊடகங்கள் இவைகளில் கோலோச்சுவது பிராமணர்களே, ஆனால் இவை அனைத்திற்கும் பணத்தை மட்டுமே விரயம் செய்துகொண்டிருக்கும் கூட்டம் வேறு யாருமல்ல நாம்தான், 


சினிமா, ஊடகம், பத்திரிக்கைகள், விளையாட்டை நாம் புறக்கணித்து விட்டாலே 1, 1/2சதவீத பிராமண கூட்டம் துண்டை தலையில் போட்டுக்கொள்வார்கள், 


BC-(SC /ST, MBC/ OBC மத சிறுபான்மையினர்) மக்கள் தங்கள் புத்தியை தீட்டி அரசியல் ஆட்சி அதிகாரத்தை நாமே கைப்பற்ற வேண்டும்..


இதற்கு தடையாக இருக்கும் சாதிய, மத, இன, மொழி வாத பிரிவினைகளான பார்ப்பனிய  சனாதனத்தை (Brahminism) தூக்கி எறிந்துவிட்டு,


 சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஜனநாயக( Democracy) ஒற்றை முழக்கத்தோடு ஓரணியில் திரண்டு  விட்டால்..


மீதி 1,1/2 சதவீத பிராமண கூட்டம்  கைபர் போலன் கணவாய் வழியாக  இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் சாதிய ஏற்றத்தாழ்வு அடிமை முறைக்கு முடிவுகட்டமுடியும்..

     

இதையெல்லாம் விட்டுவிட்டு ..

 சுய சாதி பெருமை, மதவாத பிரச்சினைகள், நான் பெரியவன், நீ பெரியவன் என பார்ப்பனிய சாதிய அடிமை சிந்தனையோடு நமக்குள்ளே அரைவேட்காட்டுதனமாக சண்டை போட்டுக்கொண்டு , ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு செத்து போவோமானால்,  


அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தற்போது 3 சதவீதமாக உள்ள பிராமணர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள், 


ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றும் கும்பல் இருந்து கொண்டே இருக்கும்..


 மாறுவது நாம்தானே தவிர, பிராமணர்கள் அல்ல, 


முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்,  "நம்முடைய அனைத்து துன்ப பூட்டுகளுக்கும் "ஆட்சி அதிகாரமே திற வு கோல்", 


ஆட்சியை மாற்றுவது நமது இலக்கல்ல..


ஆட்சியாளராக மாறுவதே நம்முடைய இலக்கு..

                                        எதிர்த்து அழித்து ஒழிக்க வேண்டியது பார்ப்பனர்களை( Brahmins) அல்ல..


பார்ப்பனியத்தை (Brahminism).  


பார்ப்பனிய கொள்கைகளான சாதி மதத்தை தாங்கி வாழும் பார்ப்பனிஸ்ட்களாகிய ( Brahminists) நம்மால் ஒரு போதும் அதைச்செய்ய முடியாது. 


நாம் பார்ப்பனிஸ்டில் இருந்து  ( brahminists) விடுபட வேண்டும்.


அப்போது தான் இந்தியாவும்..

இந்தியர்களும்..

உயர்வடைவார்கள்..👍💐

"காலில் விழு" என்று இரு முறை சைகை செய்வதை பாருங்கள்.

 காலில் விழு என்று இரு முறை சைகை செய்வதை பாருங்கள். ஒரு விஞ்ஞானியை இவ்வாறு காலில் விழச் சொல்கிறோமே என்று இவரது மனது உறுத்தாதா? ஒரு மனநோயாளி நமக்கு பிரதமராக வாய்த்துள்ளது இந்தியாவின் சாபக்கேடு.
Saturday, November 28, 2020

பாங்கு சொல்வதை அழகிய முறையில் குழந்தைகளுக்கும் இவ்வாறு கற்றுக் கொடுப்போம்!

 


நல்ல மனைவி என்பவள்...

 நல்ல மனைவி என்பவள்...

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

விசுவாசத்தையும் பாசத்தையும் கற்பித்த ஒரு நல்ல மனைவியின் உண்மைச் சம்பவம்)


மரணத்தருவாயில் இருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூத்த மகனை அழைத்து : "மகனே! நான் வேறொரு திருமணமும் முடித்துள்ளேன். அந்த மனைவி பிலிபைன்ஸ் நாட்டில் வசிக்கின்றாள். இது தான் அவளது முகவரி. அவள் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ்விடம் என் பொறுப்பு நீங்க வேண்டும்." என்று தன் மனதிலுள்ளதைத் தெரிவித்துவிட்டு இறையடிசேர்ந்தார்.


சில நாட்களின் பின்னர் சொத்துப்பங்கீடு செய்யவேண்டியிருந்தது. 

ஆனால் அதற்கு முன்னர் தந்தையின் பிலிபைன்ஸ் மனைவியை அழைத்து வரவேண்டிய தேவையுமிருந்தது.


மூத்த மகன் பிலிபைன்ஸ் பிரயாணத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கு பயணமானார். மிகக் கஷ்டத்தின் மத்தியில் அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார். அந்த வீடு சாதாரண வீட்டையும் விட மோசமாக இருந்தது. மார்க்க அடையாளங்களுடன் பெண்ணொருவர் வந்து கதவைத் திறந்தார். இருவரும் அறிமுகமாகிக் கொண்டதன் பின் தான் வந்திருக்கும் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினார் மகன்.


அந்தப் பெண் சவுதி வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இருவரும் ரியாதை வந்தடைந்தனர். 

சொத்தும் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் பிரகாரம் பங்கீடு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணுக்குரிய பங்காக சுமார் எட்டு லட்சம் ரியால்கள் கிடைத்தன.( இன்று இலங்கை மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்).


மக்கா சென்று உம்ராவை நிறைவேற்ற வேண்டுமென்று மூத்த மகனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் அந்தப் பெண். மகனும் ரியாதிலிருந்து உம்ராவுக்காக அழைத்துச் சென்றார். அதன்பிறகு ஜித்தாவில் இருந்து பிலிபைன்ஸ் நோக்கிப் புறப்பட்டார் அந்தப் பெண்.


சுமார் நான்கு வருடங்கள் கடந்திருக்கும். தன் தாயின் அந்தஸ்திலுள்ள அப்பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட மூத்த மகன் பிலிபைன்ஸுக்கு மீண்டும் சென்றார். குறித்த வீட்டை அடைந்தவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த வீடு உள்ளேயும் வெளியேயும் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது. சொல்லப் போனால் இருந்ததைவிட மோசமாக மாறியிருந்தது.


"உங்களுக்குக் கிடைத்த பணம் எங்கே? இந்த வீட்டை கொஞ்சமாவது திருத்தியிருக்கலாமே!" என்று

அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த மகன் அப்பெண்ணிடம் கேட்டே விட்டார்.


அதற்கு பதிலேதும் கூறவில்லை. மாறாக மகனை அழைத்துக்கொண்டு ஓர் இடத்துக்குச் சென்றார். அங்கே அல்குர்ஆன் மனனம், மார்க்க வகுப்புகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிய நிலையமொன்று கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

" மேலுள்ள பெயர் பலகையைப் பார்" என்றாள்.

அதில் அவரது தந்தையின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

" உன் தந்தையின் பெயரில் இதனை உருவாக்கி அவருக்காக 'ஸதகா ஜாரியா' வாக நன்கொடை செய்துள்ளேன்." என்றார் அப்பெண்.


வந்த அழுகையை மகனால் அடக்க முடியவில்லை. தன் தந்தை மீதான அப்பெண்ணின் உண்மையான அன்பையும் பாசத்தையும் பார்த்து மெய்சிலிர்த்து நின்றார்...

அப்பெண்ணுக்கு முன்னால் மகன் என்ற வகையில் தான் தோற்றுவிட்டதை உணர்ந்து அழுதார்.


மகனால் கொஞ்ச நேரமும் அங்கிருக்க முடியவில்லை. உடனடியாக நாட்டுக்குத் திரும்பியவர் அன்றிரவே தன் சகோதரர்கள் அனைவரையும் அழைத்து தான் பிலிபைன்ஸில் கண்ட காட்சியை ஒன்று விடாமல் ஒப்புவித்தார்.

சகோதரர்கள் அனைவரும் சுமார் ஐந்து மில்லியன் ரியால்களை தமக்கு மத்தியில் சேர்த்தனர்.

அதன் மூலம் தம் தந்தையின் பெயரில் பல நல்ல விடயங்களை செய்வதற்கு உறுதி பூண்டனர்.


பாசத்தையும் விசுவாசத்தையும் கற்பித்த நல்ல மனைவி...

உலகை விட மறுமையை நேசித்த உண்மையான மனைவி...

✍✍✍

கணவன் மனைவி உறவானது புனிதமானது. அந்த உறவை உண்மை, விசுவாசம், அன்பு போன்றவை அலங்கரிக்க வேண்டும்.

அதை நாம் களங்கம் செய்யக்கூடாது. 

மனைவியின் உரிமைகளை கணவன் வழங்க வேண்டும். கணவனுக்குரிய கடமைகளை மனைவி செய்யவேண்டும்...


இல்லற வாழ்வு இனிக்க இருவரும் சில உணர்வுகளை தியாகம் செய்யவேண்டும். விட்டுக்கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் இல்லறத்தின் சுவடுகள் மரணித்தின் பின்னரும் ஒளிரும்.


பிள்ளைகள் பெற்றோரை மரணித்த பின்னும் மறந்து விடக்கூடாது.

கருவில் சுமந்த தாய்க்கும் கல்பில் சுமந்த தந்தைக்கும் நாம் எதைச் செய்தாலும் ஈடாகாது...

நாட்டு நடப்பை அழகாக சொல்கிறது இந்த காணொளி!

 


மற்றவர்கள் சிரமப்படும் போது உதவுதலே ஜிஹாத்.

 ஜிகாத் என்றால் கத்தியை எடுத்து மற்றவர்களை கொல்வது அல்ல. மற்றவர்கள் சிரமப்படும் போது உதவுதலே ஜிஹாத். 


மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இவ்வாறு பொதுப்பணியில் ஈடுபட வைப்பது குர்ஆனின் தாக்கதினால்தான். 


செய்தி பழையதாக இருந்தாலும் பலருக்கும் ஞாபகமூட்டுவதற்காக!
Thursday, November 26, 2020

நமது நாட்டை சூழப் போகும் பெரும் ஆபத்து!

 நமது நாட்டை சூழப் போகும் பெரும் ஆபத்து!
Tuesday, November 24, 2020

எத்தனை கயிறு கட்டினாலும் சூத்திரன்தான்!

 எத்தனை கயிறு கட்டினாலும் சூத்திரன்தான்!


ஒரு அமைச்சர் சாமி தரிசனத்துக்கு வருகிறார். அங்குள்ள குருக்கள் தெனாவட்டாக அவரை கண்டு கொள்ளாமல் அவ மரியாதை செய்கிறார். 


இதில் விஷேசம் என்னவென்றால் அவமரியாதை செய்த அந்த குருக்களுக்கு  போகும் போது கையெடுத்து கும்பிட்டு விட்டு செல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சர் கையில் எத்தனை கயிறுகளை கலர் கலராக கட்டியிருந்தாலும் குருக்கள் தோளில் தொங்கும் பூணூல் அனைத்தையும் சாப்பிட்டு விடும். மனு தர்மம் இங்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது. :-) 


ஒரு அமைச்சருக்கே இந்த நிலை என்றால் அன்பு ராஜ் போன்ற சாமான்ய இந்துக்களின் நிலை எப்படி இருக்கும்?
Sunday, November 22, 2020

போலோ... பாரத் மாதாகீ ஜே...

 போலோ... பாரத் மாதாகீ ஜே...


பாவம்.... இந்த குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்... :-(
டி.ராஜேந்தரிடம் சென்று யாராவது இஸ்லாமிய சிந்தனைகளை விதைத்தார்களா?

 டி.ராஜேந்தரிடம் சென்று யாராவது இஸ்லாமிய சிந்தனைகளை விதைத்தார்களா? அல்லது அவரது மகனிடம் யாரும் சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்களா? அதே போல் ஏ ஆர் ரஹ்மானின் குடும்பமே இஸ்லாத்தை ஏற்றுள்ளதே... அவர்களை யாரும் சென்று கட்டாயப்படுத்தினார்களா? 


அதே போல் இந்துத்வாக்கள் இந்து மதத்தின் பெருமைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மக்களை அந்த கருத்துக்கள் கவர்ந்தால் இஸ்லாமியரும் கிருத்துவரும் தாமாகவே பிடித்திருந்தால் இந்து மதத்தை ஏற்பார்கள். அதை விடுத்து சூலாயுதத்தையும், வேலாயுதத்தையும் காட்டியும், மக்களின் ரத்தத்தை ஓட்டியும் இந்து மதத்தை வளர்க்க விரும்பினால் அது இந்து மதத்தின் அழிவுக்கே வழி வகுக்கும்.
சிறு குழந்தைகள் மனதில் விஷத்தை விதைக்கும் பாஜக!

 சிறு குழந்தைகள் மனதில் விஷத்தை விதைக்கும் பாஜக!


'லவ் ஜிஹாத்' நடத்தி எமது பெண்களை கவர்பவர்களுக்கு எதிராக களமாட வந்துள்ளேன்' என்று கவிதை பாடுகிறது இந்த குழந்தை. மனதில் தான் இஸ்லாத்துக்கு எதிராக என்ன ஒரு வெறுப்பு! இது போன்ற கோடிக்கணக்கான இந்து குழந்தைகளின் வருங்காலத்தை பாழடிக்கிறது பிஜேபி. இதன் மூலம் ரத்தக் களரியை இந்தியாவில் ஏற்படுத்தலாம். ஆனால் ஒருக்காலும் இஸ்லாத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விட முடியாது. இதனை வருங்கால இந்திய வரலாறு மெய்ப்பிக்கும் இறைவன் நாடினால்.
Monday, November 16, 2020

கேரளத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிமாகிவிட்டால் என்ன நடக்கும்?

 கேரளத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிமாகிவிட்டால் என்ன நடக்கும்?

ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்கிற முறையில் கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றேன். அந்த அனுபவத்தில் சொல்கின்றேன். முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானால் வாழ்வின் எல்லாத் துறைகளும் செழிக்கும். சிறக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரி என்ற வகையில் ஹிந்து, முஸ்லிம், நாயர், ஈழவர், கிருத்தவர் என்று அனைத்து தர மக்களிடமும் பழகியுள்ளோம். பாரம்பரியமிக்க மலையாளிகளை நான் மலப்புரத்தில்தான் பார்க்கிறேன். ஒருவர் மற்றவருக்கு உதவுவதாகட்டும், சட்டத்தை மதிப்பதிலாகட்டும் மலப்புர மக்கள் முன்னணியில் உள்ளனர்.

- கே சேதுராமன் ஐபிஎஸ்

MALAPPURAM: As the debate over the controversial statement regrading the Muslim population in Kerala made by former police chief of the state, T P Senkuamr still continues, a senior IPS officer in state K Sethuraman who served as district police chief of Muslim majority Malappuram district for four years came up with the statement that the increase of Muslim population will make the state better place to live in.
In a note posted on his facebook page on Monday, Sethuraman said that if Muslim population increase in state it will reduce communalism and casteism.
"As police officers, we have travelled throughout the state and know people from every corner of the state. Everywhere I have come across only Hindu, Muslim, Nair, Ezhavan, Christian, Dalit etc. But in Malappuram, one can find paccha Malayali (a genuine Malayali). Any one is ready to help another. People are extremely law abiding, cordial and helpful", he says in FB post.

timesofindia
JULY 10, 2017Wednesday, November 11, 2020

உவைஸியின் அரசியல் நிலைப்பாடு பற்றி!

 

உவைஸியின் அரசியல் நிலைப்பாடு பற்றி!

 

சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து அரசியல் கட்சிகளால் முஸ்லிம்கள் ஏதேனும் பலன் அடைந்துள்ளார்களா? கேரளாவில் சாத்தியப்படுகிறது. காரணம் அங்கு இயற்கையாகவே அமைந்த தொகுதிகள் முஸ்லிம் லீக் தனித்தே நின்று வரக் காரணமாயிருந்துள்ளன. ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகள் அவ்வாறு துரதிஷ்டவசமாக அமையவில்லை. அனைத்து தொகுதிகளிலும் நாம் இந்துக்களை சார்ந்தே உள்ளோம். தமிழகத்தில் அரசியலில் தேர்தலில் நிற்கும் கட்சிகளான முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ ஆல் நாம் பெற்ற பலன் என்ன? ஏதும் இல்லை. நமது குடும்பத்தை நாம்தான் கஷ்டப்பட்டு முன்னேற்றுகிறோம். நாம் தான் கஷ்டப்பட்டு நமது பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். நாம் தான் கஷ்டப்பட்டு அவர்களுக்கு உள்ளூரிலோ அல்லது வளைகுடாவிலோ வேலைகளை வாங்கித் தருகிறோம். இதில் எங்குமே எந்த அரசியல் கட்சிகளும் தலையிடுவதில்லை. 

 

நமது இந்தியாவில் நாம் சிறுபான்மை சமூகமாக உள்ளோம். பெரும்பான்மை மக்களான இந்துக்கள் இந்துத்வாவை ஆதரிக்கவில்லை. மோடியையும் அமித்ஷாவையும் ஆதரிப்பவர்கள் 25 சதம் கூட தேர மாட்டார்கள். ஆனால் ஊடகங்களால் அவர்களுக்கு பெரும் ஆதரவு இருப்பது போல் கட்டமைக்கப்படுகிறது. இந்துத்வா வளர்ந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது அதிகம் இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களே. எனவே இந்துக்கள் மோடியையும் அமித்ஷாவையும் சற்று தூரத்திலேயே வைத்துள்ளார்கள். நமது முதல் வேலை என்பது இந்துத்வா பேசித்திரியும் மூடர்களை இந்துக்களிடமிருந்து அந்நியப்படுத்த வேண்டும். அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்று விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மோடியை வீழ்த்த வியூகம் அமைக்க வேண்டும். மோடியையும் அமித்ஷாவையும் வீழ்த்தி விட்டு அதன் பிறகு உவைஷி தனது கட்சியை பலப்படுத்திக் கொள்ளட்டும்.

 

இப்போது பீகாரில் ஐந்து சீட்டை பெற்றுள்ளார்.  5 சீட் கிடைத்த நப்பாசையில் மேற்கு வங்கம், உபியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பீகாரில் நடந்தது போலவே இரண்டு மூன்று சீட்டுக்களை பெற்று மோடி ஆட்சிக் கட்டிலில் அமர இவரே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பார். 250, 300 எம்எல்ஏக்கள் உள்ள இடத்தில் உவைஷின் இரண்டு மூன்று எம்எல்ஏக்களால் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது. காங்கிரஸ் நமக்கு பல துரோகங்களை செய்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் சிஏஏ, என்ஆர்சி போன்ற திட்டங்களை கொண்டுவரத் துடிக்கும் பிஜேபியை விட குறைந்த ஆபத்தானவர்கள் காங்கிரஸார். உங்களின் வாக்குரிமைக்கும், உங்களின் சொத்துக்களுக்குமே ஆபத்தை கொண்டு வரத் துடிக்கின்றனர் பிஜேபியினர். இந்த நேரத்தில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் முஸ்லிம்கள்.

 

மோடி அமித்ஷாக்கள் முஸ்லிம்களைப் பார்த்து ஏன் இந்த அளவு பயம் கொள்ள வேண்டும். காரணம் வர்ணாசிர கொடுமையிலிருந்து விடுபட இஸ்லாமே தீர்வு என்ற வகையில் இந்தியாவெங்கும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் வரைதான் வர்ணாசிரமம் இம்மண்ணில் இருக்கும். முஸலிம்கள் பெரும்பான்மையாகி விட்டால் பார்பனர்கள் தங்களின் உரிமைகளை இழப்பர். ஆண்டாண்டு காலமாக இந்துக்களை சுரண்டி வாழ்ந்த வாழ்வு காணாமல் போகும். அது நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் தேர்தலில் பல தில்லு முல்லுகளை செய்து இன்று வரை வென்று வருகிறார்கள்.  இஸ்லாமியர்களுக்கு பல இன்னல்களையும் கொடுத்து வருகின்றனர்.

 

நாம் ஒரேயடியாக உவைஸியின் பக்கம் சாய்ந்தால் இந்துக்களில் பெரும்பாலானோர் மோடியின் பக்கம் சாயும் ஆபத்தும் உள்ளது. எனவெ முஸ்லிம்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட வேண்டிய காலமிது. மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பிஜேபியை வீழ்த்துவதுதான் நமது ஒற்றைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். அது அல்லாமல் உவைஸி ஒரு பக்கம், எஸ்டிபிஐ ஒரு பக்கம், முஸ்லிம் லீக் ஒரு பக்கம், தமுமுக ஒரு பக்கம் நின்று வாக்குகளைப் பிரித்தால் நமது சந்ததிகளுக்கு நாம் செய்யும் பெருந் துரோகமாக அமையும். சில நாட்களில் வாக்குரிமையும் போகும், சொத்துக்களும் வாங்க முடியாமல் அமித்ஷா அமைக்கப் போகும் கேம்ப்களில் காலம் தள்ள வேண்டி வரும். அப்படி ஒரு சூழலை இங்கு ஏற்படுத்தாமல் இறைவன் காப்பானாக!