Followers

Sunday, April 30, 2017

ரூபாய் நோட்டிலும் மோடியின் திருகுதாள வேலை!


ரூபாய் நோட்டிலும் மோடியின் திருகுதாள வேலை!

மொரேனா: ம.பி.,யில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுத்தவருக்கு, காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமல் 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ம.பி., மாநிலம் மொரெனா மாவட்டத்திலுள்ள கணேஷ்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., ஒன்றில் கோவர்தன் சர்மா என்பவர் பணம் எடுத்தார். எ.டி.எம்.,மில் எடுத்த பணத்தை கண்டவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பணத்தில் நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமலேயே வந்துள்ளது. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு கோவர்தன் புகார் அளித்தார்.



இதுகுறித்து விளக்கமளித்த வங்கி அதிகாரிகள், அச்சுப்பிழை காரணமாக ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர்.

தின மலர்
05-01-2017

ரூபாய் நோட்டு அச்சடித்து வெளி வரும் முன் பல பேரின் சரி பார்ப்புக்கு பின்பே புழக்கத்துக்கு கொண்டு வருவார்கள். குறிப்பாக காந்தி படம் விடுபட்டுள்ளது. ஆர்எஸ்எஸீக்கும் காந்திக்கும் ஏழாம் பொருத்தம்.  காந்தியை நீக்கி விட்டு வல்லபாய் படேலை போட மறைமுக முயற்சி நடக்கிறது. அதன் முன்னோட்டமே இது போன்ற செயல்பாடுகள்.

மோடியும் அமீத்ஷாவும் மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துகின்றனர். பொது மக்கள் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.





Saturday, April 29, 2017

அமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்

அமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்
-------------------------------------------------




இந்தியாவில் கோடை காலத்தில் வெயில் கொடுமை தாளாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக மக்களைக் கொல்லும் விபத்துகளைத் தடுப்பது குறித்தே நமது அரசுகள் கவலையற்று இருக்கின்றன. இதில், உதிரிச் சாவுகளைப் பற்றி மட்டும் எப்படி கவலைப்பட போகின்றன?

அமீரகத்தில் இந்தியாவை விட வெயில் அதிகம். கோடை காலத்தில் உச்சபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் (123 டிகிரி பாரன்ஹீட்) வரை எல்லாம் வெப்பநிலை பதிவாகும். ஆனால், வெயில் கொடுமை காரணமாக யாரும் இறப்பதில்லை. காரணம், வெயிலில் வேலை பார்ப்பவர்கள் குறித்து அமீரக அரசாங்கம் செலுத்தும் அக்கறை. கோடை காலத்தில் (ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை) மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும். இவற்றைக் கண்காணிக்க ரோந்துப் படை சுற்றிக் கொண்டிருக்கும்.

ஏதாவது ஒரு நிறுவனம் விதியை மீறி, வெயிலில் வேலை செய்ய வைக்கிறது என்றால், அவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். ஆறு தொழிலாளர்கள் என்றால், ஒரு தொழிலாளருக்கு 5000 திராம்ஸ் வீதம் மொத்தம் 30,000 திராம்ஸ் ( ரூ.5,40,000 அபராதம்) விதிக்கப்படும்.

இத்தனைக்கும் அமீரகத்தில் வெயிலில் பார்ப்பவர்கள் யாரும் அந்நாட்டு குடிமக்கள் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளிலிருந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள்தான். அவர்களை மதிய வெயிலில் வேலை பார்க்க வைக்காமல் அந்நாட்டு அரசாங்கம் பாதுகாக்கிறது.

துபாய் வெயிலில் வேலை செய்வது லேசுப்பட்ட விஷயமல்ல, மிகக் கொடுமையானது. வியர்த்து ஒழுகும், எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நா வறட்சி நிற்காது. கோடை காலம் முழுக்கவே எந்தக் குழாயைத் திறந்தாலும் சுடுதண்ணீராகத்தான் வரும். அதனால், வசதியான‌ துபாய் அரபிகள் தங்கள் வீட்டு சுற்றுச்சுவரில் Chilled water Machine-களைப் பொருத்தியிருப்பார்கள். எப்படியும் தெருவிற்கு ஒன்றிரண்டு மெஷின்கள் இருக்கும். அவற்றில்தான் நமது தொழிலாளர்கள் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள்.

நானும் பல முறை அப்படி தண்ணீர் பிடித்ததுண்டு. காரில் வைத்திருக்கும் தண்ணீர் வெயிலில் சுடுதண்ணீராக மாறி, குடிக்க முடியாதபடி இருக்கும். அதைக் கொட்டிவிட்டு, இந்த chilled water machine-களில் பிடித்துக் கொள்வேன். நெருப்பைப் போல் சுடும் வெயிலில் அலைந்து வந்து, அந்தக் குளிர்நீரைப் பிடித்து முகம் கழுவும்போது ஒரு சுகம் கிடைக்கும் அல்லவா, அதற்கு இணையாக‌ எதைச் சொல்வது?

மதிய வெயிலில் வேலை வாங்கக் கூடாது என்பது அமீரக அரசு உத்திரவு என்பதால் அதை மீற முடியாது. அதற்காக, தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு மனம் வருமா? சில நிறுவனங்களில் காலை 5 மணிக்கே வேலையைத் தொடங்கி, மதியம் 12.30 மணிக்குத் தொழிலாளர்களை கேம்ப்பிற்கு அனுப்பி விடுவார்கள். சில நிறுவனங்களில் வழக்கமாக மாலை 5 மணிக்கு வேலையை முடிப்பதற்குப் பதிலாக இரவு 7 மணி வரைக்கும் வேலை வாங்குவார்கள்.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் காலையில் 5 மணிக்கு வேலையைத் தொடங்கும் முறை இருந்தது. இதற்குக் காரணம், மதிய நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்விடம் வழங்குவதற்காக ஆகும் செலவைத் தவிர்ப்பதுதான். ஆனால், அதற்கு தொழிலாளர்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்திருக்க வேண்டும். அப்போதுதான் 4 அல்லது 4.15 மணிக்கு பேருந்தில் ஏறி, 5 மணிக்கு கட்டுமான இடத்திற்கு வர முடியும்.

துபாயில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் அவர்கள் தொலைத்த தூக்கமும் சேர்ந்தேதான் இருக்கிறது.

நமது ஊரில் வெயில் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், மதியம் மற்றும் மாலை வேளைகளில்தான் குழாயில் தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக வரும். இரவிலும், காலையிலும் தண்ணீர் குளிர்ந்திருக்கும். துபாயில் அப்படியல்ல. காலையில் குளிக்கப் போனாலும், தண்ணீர் சூடாகத்தான் வரும்.

நான் என்ன செய்வேன் என்றால், இரவே ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துவிடுவேன். அது காலையில் குளிர்ந்திருக்கும். அதுபோல், காலையில் அதைக் குளித்தபின்பு, மீண்டும் தண்ணீர் பிடித்து வைத்துவிடுவேன். அது மாலையில் வரும்போது குளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், லேபர் கேம்ப்பில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு இந்த வசதி இருக்காது. அவர்கள் சூடான தண்ணீரில்தான் குளித்தாக வேண்டும்.

இன்னொரு சிக்கலும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் முதல்நாள் இரவு சமைத்த உணவைத்தான் மறுநாள் காலையிலும், மதியமும் சாப்பிட வேண்டியிருக்கும். வெயில் காரணமாக மதியம் சாப்பிடுவதற்குள் அந்த உணவு கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு. அதனால் பெரும்பாலானோர் காலையில் சாப்பிட்டவுடன், மதிய உணவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். ஏனெனில், கெட்டுப் போய்விட்டால், வெளியே வாங்கி சாப்பிடுமளவிற்கு பக்கத்தில் உணவு விடுதிகள் ஏதும் இருக்காது. தூரத்தில் இருக்கும் உணவு விடுதிக்கு நடந்துபோக முடியாத அளவு தீக்கங்குகளை வெயில் பரப்பி வைத்திருக்கும்.

அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தும் மே மாதத்தில்கூட இங்கு மாலை வேளையில் கடற்கரை காற்று வீசி, நம்மை ஆசுவாசப்படுத்தும் அல்லவா? அப்படியான ஆசுவாசம் துபாய் கோடை காலத்தில் கிடையாது. 24 மணி நேரமும் வெப்பநிலை தகிக்கும். இரவில் சில டிகிரிகள் குறைவாக இருக்குமேயொழிய வெக்கை குறையாது. கடற்கரையிலும் குளிர்ந்த காற்று வீசாது.

நமது ஊர் வெப்பநிலையை காற்றாடியைக் கொண்டு சமாளிப்பதுபோல், அரபு நாடுகளில் முடியாது. எல்லா இடங்களிலும் ஏ.சி. வேண்டும். இந்தக் கடும் வெப்பநிலை காரணமாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, ஹோட்டல் அறைகள் குறைவான விலைக்குக் கிடைக்கும். விமான பயணச்சீட்டு விலையும் பெருமளவு குறைந்து காணப்படும். நமது ஆட்களும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஊர் வந்து, 'துபாய் ஷேக்' வேஷம் போடுவார்கள்.

துபாயில் வெயில் அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மலையாளியும் துபாய் வெயிலில் வேலை பார்ப்பதில்லை. ஏனெனில், அவர்கள் ஒரு பட்டப்படிப்புடன் துபாய் வருகிறார்கள், ஒயிட் காலர் வேலைதான் பார்க்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்திய மாநிலங்களில் இருந்து போகும் கட்டுமானத் தொழிலாளர்களும், இதர உடலுழைப்புத் தொழிலாளர்களும்தான் வெயில் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.

நீங்கள் படித்திருக்கிறீர்கள், அலுவலக வேலை பார்க்கப் போகிறீர்கள் என்றால் தாராளமாக குடும்பத்துடன் துபாய் போகலாம். தங்குமிடம், கார், பேருந்து, மெட்ரோ ரெயில் அனைத்தும் குளிரூட்டப்பட்டிருக்கும். பேருந்து நிழற்கூடமும் ஏ.சி. வசதியுடன் இருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் குளுரூட்டப்பட்டிருக்கும். சிறுசிறு மளிகைக் கடைகள், சலூன் கடைகள், அலுவலகம், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் அனைத்தும் ஏ.சி. வசதியுடன் இருக்கும். வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்திலும், ரம்ஜான் மாதத்திலும் அனுபவிக்கும் சிரமங்களை சகித்துக் கொண்டால், துபாய் இந்தியாவை விட பாதுகாப்பான, இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் கிடைக்கின்ற, சொல்லப்போனால் இந்தியாவில் கிடைக்காதது எல்லாம் கிடைக்கின்ற, அதுவும் முதல் தரத்தில் கிடைக்கின்ற ஊர்.

அய்ரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் சமூக வாழ்க்கை முடங்கும், துபாயில் அது கோடை காலத்தில் முடங்கும். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி, துபாய் பாலைவனத்தில் ஒரு சொர்க்கம்.

கீற்று நந்தன்
 24 ஏப்ரல் 2017




Friday, April 28, 2017

என் மாட்டுக்கறியை நான்தான் தீர்மானிப்பேன்.

கவிஞர் சுகிர்தா ராணி கவிதை தொகுப்பு மாட்டுக்கறி
****************

மாட்டுக்கறியே என் வாழ்க்கை
மாட்டுக்கறியே என் கொண்டாட்டம்
மாட்டுக்கறியே என் திருவிழா
மாட்டுக்கறியே என் வாழ்வு
மாட்டுக்கறியே என் உணவு

நான் பிறந்து கண்விழித்தபோது
உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே
எனக்கு முதல் சுவாசம்.

கைகால்களை உதைத்து உதைத்து 
நான் வீறிட்டு அழுதபோது
என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில்
செருகியிருந்த எலும்புத் துண்டுகளே
எனக்குக் கிலுகிலுப்பை.

பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது
இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட
மாட்டிறைச்சிச் சாறே
எனக்குத் தாய்ப்பால்.

கறியின்மீது கவிழ்ந்திருக்கும்
மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை
உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து
பனியென உருகும் ஊன்நெய்யில்
சுட்டு எடுப்பதே என் பலகாரம்.

மாட்டுக்கறித் துண்டுகளை
நீளவாக்கில் அரிந்தெடுத்து
வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட
முட்செடியின் நெருங்கிய கிளைகளில்
பரப்பிவைத்து உலர்த்துகையில்
கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே 
எனக்குப் பொழுதுபோக்கு.

களிமண்ணால் தேய்த்துக் குளித்து
ஆடையணிந்து வெளிச்செல்கையில்
என்மீது வீசும் புலால் நாற்றமே
எனக்கு நறுமணத் தைலம்.

.
வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு
இடுப்பு இறக்கத்தில் தொங்கும்
மாட்டுத்தோலின் பறையொலியே
எனக்கு ஆதிதாளம்.

சடங்குகளுக்கும் சாவுக்கும்
ஆணும் பெண்ணுமாய்
அடவுகட்டி ஆடும் குத்தாட்டமே
எனக்கு நாட்டியம்.

நல்ல மாட்டை அறுத்து
பசிய தென்னங்கீற்றின்மேல்
பத்தும் இருபதுமாய் பங்குபோட்டு
சாணம் மெழுகிய மூங்கில்கூடையில்
செஞ்சிவப்பு மாட்டுக்கறியை அள்ளிச் செல்லும்
வாரத்தின் வெள்ளி,சனி நாட்களே
எனக்குத் திருவிழா.

இதுவே என் வாழ்க்கை
இதுவே என் கொண்டாட்டம்
இதுவே என் திருவிழா
இதுவே என் வாழ்வு
இதுவே என் உணவு.

இது என் ஆளுகைப் பிரதேசம்
பிரவேசிக்க நீ யார்?
எங்கிருந்து வந்தவன்?
எங்கிருந்து கிடைத்தது 
உனக்கிந்த காவியாடை?

எனக்கான உணவை நாந்தான் விழுங்க வேண்டும்
எனக்கான எச்சிலை நாந்தான் உமிழ வேண்டும்

என் கருத்த தோலின்மீது 
உன் காவிச்சாயத்தைப் பூசாதே
விரித்துப் போட்ட என் கூந்தலை
உச்சிக் குடுமியாய் மாற்றாதே

புனிதம் புனிதம் என்கிறாய்
எது புனிதம்? யார் புனிதம்?

புனிதம் என்னும் சொல்லே
ஓர் ஒடுக்குமுறைச் சொல்தான்..
உன் காவி- இந்தி அகராதியிலிருந்து
புனிதத்தை நீக்கு
மனிதத்தை நோக்கு

மாட்டுக்கறிவாசனை வீசும் நான்
புனிதமற்றவள்தான்..
என்னை புனிதமானவளாக்குவதற்கு
பசுமூத்திரத்தை என்மீது தெளிக்காதே
எரித்த சாணத்தை என்நெற்றியில் பூசாதே.

கோமாதா உனக்குத் தெய்வமா?
அந்தத் தெய்வத்தின் தோலையா
செருப்பாக அணிந்து கொள்கிறாய்?

கோமாதா உனக்குக் கடவுளா?
அந்தக் கடவுளின் இரத்தத்தையா
நீ பாலாகக் குடிக்கிறாய்?
மாட்டுக்கறியை நான் தின்கிறேன் என்று
கூப்பாடு போடும் நீ
என்னைச் செருப்பணிய விட்டாயா?

பசுவை வீட்டுக்குள் வரவழைக்கும் நீ 
என்னைச் சேரியிலிருந்து ஊருக்குள் வரவிட்டாயா?

கோவிலுக்குள் மணியாட்டி கற்பூரம் காட்டும் நீ
கைத்தொழ கருவறைக்குள் என்னை விட்டாயா?

மதத்திற்கும் மாட்டுக்கும் முடிச்சுபோடும் நீ 
மதத்திற்கும் மதச்சார்பற்ற நாட்டிற்கும்
முடிச்சுப்போட்டுப் பார்த்தாயா?

இது மதச்சார்பற்ற நாடு...
மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு உரிமையுண்டு
மாட்டுக்கறியைத் தேர்ந்தெடுக்கவும் உரிமையுண்டு

.
என்ன உரிமை இருக்கிறது உனக்கு
என்னை ஆள?

மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக
தாத்ரியில் அடித்துப் படுகொலை செய்தாயே..
ஏற்றுமதி செய்வதற்காக 
மாடுகளையே வெட்டிக் கொல்லும்
உன்னை என்ன செய்வது?

நீ மாட்டிறைச்சிக்கு தடைபோட்டால் 
மாட்டிறைச்சித் திருவிழா நடத்துவோம்
மாட்டிறைச்சித் திருவிழாவுக்கே தடைபோட்டால்
இனி தெருவுக்கொரு மாடறுப்போம்

மாட்டிறைச்சி என் வாழ்வு
மாட்டிறைச்சி என் பயணம்
மாட்டிறைச்சி என் வாழ்க்கை
மாட்டிறைச்சி என் உரிமை

வேண்டுமானால்
உன் மலத்தை நீ தீர்மானித்துக்கொள்
என் உணவை, என் மாட்டுக்கறியை
நான்தான் தீர்மானிப்பேன்.


இஸ்லாம் பெண்ணுக்கு கொடுத்துள்ள உரிமைகள்!

நிக்காஹ் (திருமணம்) முடிந்த 3மணி நேரத்திலேயே #குலா (பெண்ணின் 'தலாக்') கொடுத்துவிட்டு...
அதே நாளே...
மற்றொருவருடன் நிக்காஹ்..!
இது நடந்தது... 
ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில்.
தனது விருப்பப்படி வரதட்சணையாக வாங்கப்பட்ட ஹீரோ பேஸ்ஸன் ப்ரோ பைக்கை... திருமணம் நடந்தவுடன் திடீரென மனம்மாறி, 'இதுக்குப்பதிலாக... பஜாஜ் பல்ஸர் பைக்தான் வாங்கித்தரவேண்டும், இல்லன்னா புதுப்பெண்ணை நீங்களே வச்சிக்கிங்க...' என்று மாமனாரை மிரட்டிய மணமகன் அன்சாரியை...
திருமணமான அன்றே விவாகரத்து செய்து #அதிரடி #பதிலடி தந்தார், மணமகள் ருபானா பர்வீன்.
அதுமட்டுமின்றி, இப்படி அழிச்சாட்டியம் செய்த மணமகன் கழுத்தில் வரதட்ஷனைக்கு எதிரான வாசக அட்டையை தொங்கவிட்டு, அரைமொட்டை அடித்து, செருப்பு மாலை போட்டு, மணமகன் வீட்டார் வாங்கிய ஏனைய பிற வரதட்சணை பணத்தையும் திரும்பத்தரும்படி ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கிவிட்டு...
அதே இரவிலேயே...
முஹம்மத் இலியாஸ் என்ற வேறொரு மணமகனுடன் அடுத்த திருமணமும் செய்துகொண்டார்... அந்த #இஸ்லாமியமணமகள்..!
அனுதினமும் இஸ்லாமிய பெண்கள் பற்றி மிகவும் கவலைப்பட்டு உண்ணாமல் உறங்காமல் நொந்து நூலாய் இளைத்துப்போகும் மோடிக்கு இந்த செய்தி பார்சல்.
நிறைய படங்களுடன் அதிக விபரங்கள் பெற:
http://www.dailymail.co.uk/…/Bride-divorces-greedy-husband-…





Thanks To Mohamed Ashik

Wednesday, April 26, 2017

நம்நாட்டு பிராமணர்களுக்கும் எகிப்தியருக்கும்

நம்நாட்டு பிராமணர்களுக்கும் எகிப்தியருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

1. தோற்றத்தில் இருவரும் ஒன்றாகவே இருப்பர்.

2. நன்றாக படித்து அலுவலக வேலைகளை பிடித்து விடுவர்.

3. அரபு மொழி பேசுபவர்களில் தாங்கள் தான் சிறந்த அறிவாளிகள் என்ற நினைப்பு எகிப்தியருக்கு இருக்கும். இதனால் சவுதி நாட்டவருக்கு எகிப்தியர்களை பிடிக்காது.

அதே போல் நம் ஊர் பிராமணர்கள் மற்றவர்களை விட தாங்களே அறிவில் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருப்பர். சக இந்து மக்களை கீழானவர்களாக நினைத்து அவர்களுக்கு உரிய மரியாதையை செய்ய மாட்டார்கள்.

4. இன்றுள்ள எகிப்தியர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் யூதர்களாக இருந்தவர்கள். நம் ஊர் பிராமணர்களின் பூர்வீகமும் யூதமே. இஸ்ரேலோடு இன்றும் இணக்கமாக இருப்பதை வைத்தே யூகிக்கலாம்.


-தமிழ் இந்துவில் நான் எழுதிய பின்னூட்டம்.