Followers

Monday, March 28, 2022

சிறுவன் பின்னி எடுக்கிறான்....

 சிறுவன் பின்னி எடுக்கிறான்....


'ராமர் கோவில் வேண்டுமா? கல்விச் சாலை வேண்டுமா?'


'எங்களுக்கு கல்விச் சாலைதான் முக்கியம்? படித்து பட்டம் பெற்றால்தான் சிறந்த வேலையில் அமர முடியும்'


'ஆனால் பெரும்பாலான மக்கள் ராமர் கோவில் வேண்டும் என்கின்றரே'


'அவர்களுக்கு உண்மை புரியவில்லை. ராமன் எங்களுக்கு எதையும் தரவில்லை. பாபா சாஹேப் அம்பேத்காரும், எங்களது தாய் தந்தையரும் எங்களின் அறிவுக் கண்ணை திறந்துள்ளனர். அது போதும் எங்களுக்கு? 


'படித்து என்ன பண்ணப் போகிறாய்?'


'ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவேன். மக்களுக்கு தொண்டாற்றுவேன்'


'இந்த சிறுவயதில் இவ்வளவு அறிவாக பேசுகிறாயே? இதனை எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?'


'கல்விச் சாலையில்தான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்'


இந்த காணொளியை  மோடியும் அமித்ஷாவும் பார்க்கட்டும். அப்போதாவது திருந்துகிறார்களா பார்போம்.









Sunday, March 27, 2022

பிராமண பொண்ணு எப்படி மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க ? | BEEF அரசியல் |

 பிராமண பொண்ணு எப்படி மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க ? | BEEF அரசியல் |




தாஜூல் பள்ளிவாசல் - போபால்


 


தாஜூல் பள்ளிவாசல் - போபால்


உலகின் மிகப் பெரிய பள்ளிகளில் இதுவும் ஒன்று. முதல் தளத்தில் தொழுகை நடைபெறுகிறது. கீழ் தளத்தில் 1000 க்கும் மேற்பட்ட கடைகள் பள்ளி நிர்வாகத்தால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இங்குள்ள கடைகளில் 90 சதவீதம் இந்துக்களும், ஜெயின்களும் கடைகள் வைத்துள்ளனர். இது நான்கைந்து தலைமுறைகளாக தொடர்கிறது. இங்கு கடை வைத்துள்ள பல இந்துக்களும் காலையில் கடையை திறந்தவுடன் தங்கள் மத நம்பிக்கைபடி பூஜைகள் செய்து விடடே வியாபாரத்தை தொடங்குகின்றனர். எந்த நேரமும் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெறுகிறது. 


இரண்டு நாட்களுக்கு முன்பு  கர்நாடகாவில் கோவில் விழா ஒன்றில் தற்காலிக கடைகளை வைத்த முஸ்லிம்களை கடையை காலி பண்ணச் சொல்லி மிரட்டும் ஒரு இந்துத்வா கும்பலை கண்டோம். போபாலில் நடந்தும் வரும் மத நல்லிணக்கத்தை கர்நாடகாவில் ஏன் காண முடியவில்லை? முஸ்லிம்களிடம் உள்ள பரந்த மனப்பான்மை ஏன் இந்து வெறியர்களுக்கு இல்லை? பெரும்பான்மை இந்துக்கள் யாரும் இதனை கண்டிக்காமல் மவுனமாக இருந்தால் நாளை அவர்களையும் இந்த கும்பல் மாமூல் கேட்டு துன்புறுத்தும். அதை நோக்கித்தான் நமது நாடு சென்று கொண்டுள்ளது.


Saturday, March 26, 2022

கோவை ரஹ்மதுல்லா

 



கோவை ரஹ்மதுல்லா கைது பற்றி ஒரு சிலர் 30 வருடங்களுக்கு முன்பு இந்து மதத்தவரிடையே சகோதரத்துவத்துடன் பழகி வந்ததாகவும் தவ்ஹீத் ஜமாத் வந்துதான் அதனை கெடுத்து விட்டதாகவும் ஒரு பொய்யுரை சில இஸ்லாமியர்கள் பரப்பி வருகின்றனர்.

 

உண்மையில் 30 வருடங்களுக்கு முன்பு ராம கோபாலனால் மிக திட்டமிட்டு விஷ விதை தமிழக இந்துக்களிடையே விதைக்கப்பட்டது. பல இந்துக்கள் அதனை உண்மை என்றும் நம்பினர். அந்த நேரத்தில்தான் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தப்பட்டு ராம கோபாலனின் ஒவ்வொரு கேள்விக்கும் அறிவு பூர்வமாகபதில் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரத்ததானத்தில் முதலிடம் வகிப்பது தவ்ஹீத் ஜமாத். அதே போல் ஊருக்கு ஊர் ஆம்புலன்ஸ் சேவைகளை மத பாகுபாடின்றி வழங்கி அந்த மக்களின் அன்பை பெற்றது.

 

அது மட்டுமல்லாமல் புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் தங்களின் உயிரை பணயம் வைத்து பல இந்து குடும்பங்களை காப்பாற்றியது தவ்ஹீத் ஜமாத். பள்ளிவாசல்களை இந்துக்களுக்கு தங்க இடம் கொடுத்து நெகிழ்வை ஏற்படுத்தியது. கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் அழுத்தம் கொடுத்து இஸ்லாமியருக்கென்று தனியாக இட ஒதுக்கீடு பெற்று தந்தது. முஸ்லிம்களை கல்விச் சாலையின் பக்கம் ஆர்வத்தை கொண்டு வர பல முயற்சிகளையும் எடுத்தது தவ்ஹீத் ஜமாத்.

 

தட்டு, தாயத்து, முரீது, முன்றாம் நாள் ஃபாத்திஹா, ஏழாம் நாள் ஃபாத்திஹா, சந்தனக் கூடு, தர்ஹா வழிபாடு என்று சீரழிந்துக் கொண்டிருந்த சமூகத்தை குர்ஆனின் மகிமையை விளக்கி ஐந்து வேளை தொழக் கூடிய சமூகமாக மாற்றிய பெருமை தவ்ஹீத் ஜமாத்துக்கு உண்டு.

 

இது போன்ற ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு வட மாநில முஸ்லிம்களிடம் இல்லாததால்தான் உபி பீஹாரில் சங்கிகளின் பொய் பிரசாரம் எடுப்பட்டு இஸ்லாமிய வெறுப்பு வளர்க்கப்பட்டுள்ளது. இதனை நாம் கண் கூடாக பார்த்துக் கொண்டே ஒரு சிலரால் தவ்ஹீத் ஜமாத் மீது வன்மத்தை கக்குவது ஏன் என்று புரியவில்லை.

 

இதனால் கோவை ரஹ்மதுல்லா பேசிய பேச்சை ஆதரிக்கவில்லை. உணர்ச்சிவசப்பட்டு பேசிய பேச்சில் எனக்கு உடன்பாடில்லை என்பதை முன்பே விளக்கியுள்ளேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thursday, March 24, 2022

ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா?


 


நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா?

அந்த காலத்தில்!!
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.
1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.
1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.
1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.
1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.
1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.
இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே
நாடார் பணைமரம் வளர்த்தால் வரி, பணை மரம் ஏற காலில் போட்டு ஏறும் கயிற்றுக்கு வரி, மாடு வளர்த்தாள் வரி,மண்வெட்டி இருந்தால் வரி,தலைப்பாகை கட்டினால் வரி,வெள்ளி,தங்க நகைகள் போடவே கூடாது.மெத்தை வீடு கட்டக்கூடாது.மீசை வைத்தால் வரி. பெண் மார்பகத்துக்கு வரி, வரி கேட்டதால் தன் மார்பகத்தையே அறுத்து கொடுத்த நாடார் வீர பெண்மணியும் வாழ்ந்தார்கள்.
இதுபோன்று இன்னும் நிறைய வரலாற்று நிகழ்வுகள் நாடார்களை பற்றி உண்டு ஆகவேதான் வழக்கமாக நாடார் இனத்தில் பார்ப்பனர்களை அழைப்பது இல்லை என்று வழக்கமாக இருந்து வந்தது...
கிறிஸ்தவ மிஷனெரிகளும், பெருந்தலைவர் காமராஜரும் கொடுத்த கல்வி அறிவுமே நாடார் இனத்தின் முன்னேற்றத்துக்கு மிகமுக்கிய காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து!
இந்த கடந்தகால கொடுமைகளை மறந்து இன்று பா ஜ க வை தங்களின் சுயலாபத்துக்காக ஆதரிக்கும் நாடார் அமைப்புகளின் தலைவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!
~ Whatsapp message as received

மங்கோலியர் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?

 

மங்கோலியர் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?

ஹிஜாப் தடை செய்யப்பட்ட தீர்ப்பை அடுத்து முஸ்லிம் சமூகத்தில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.

இனி இந்தியாவில் நாம் ஏதேனும் உரிமையை நிலைநாட்ட முடியுமா.? என்ற சந்தேகம் ஆழமாக பதிந்து வருகிறது.
இந்த வல்லாதிக்க சக்தியை வெற்றி பெற முடியாது என்ற குறுகிய மனப்பான்மை சமூகத்தில் உளவியல் ரீதியாக ஏற்பட்டுள்ளது.
நாம் எப்படி இவர்களை எதிர் கொள்ள போகிறோம், நமது எதிர் காலம் எப்படி ஆக போகிறதோ என்ற அச்சமும் சமூகத்தை பீடித்துள்ளது.
இப்படிப்பட்ட குமுறல் பதிவுகள் தான் அதிகமாக இணையத்தில் உலா வருகிறது.
இன்னும் சிலர் தனியாக முஸ்லிம் பெண்களுக்கு பள்ளிக்கூடம் கட்டி ஹிஜாப் அணிய வேண்டுமென பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால் தற்போது நாம் என்னதான் செய்வது என்ற கேள்வி எல்லோர் மத்தியில் எழும்புகிறது.
நம் இஸ்லாமிய சமூகம் இது போன்ற பிரச்சனைகளை முதல் முறையாக சந்திக்கவில்லை. இதை விட கொடுமைகளை பார்த்தும், இதை விட வல்லாதிக்க சக்திகளை வீழ்த்திய வரலாறு தான் இஸ்லாமிற்கு உண்டு. நாம் வரலாற்றில் இருந்து தீர்வு பெற வேண்டும்.
13ஆம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசின் செங்கிஸ்கான் பேரன் மோங்கே கான் ஆட்சியில் ஹுலாகு கான் கண்ணில் பட்ட தேசத்தை முழுவதும் தன் வசப்படுத்தினான்.
அனைத்து மன்னர்களும் அவர்களை பகைத்தால் அழிவு தான் மிஞ்சும் என தாமாக சரணடைந்தனர்.
எதிர்த்தவர்களை தடமே இல்லாமல் ஈவு இரக்கமில்லாமல் மங்கோலியர்கள் கொன்றொழித்தார்கள்.
இதில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
கடைசியில் 500 ஆண்டு பழமையான முஸ்லிம்களின் அப்பாசிய ஆட்சியின் மீது மங்கோலியர்களின் பார்வை விழுந்தது.
ஹுலாகு கான் தலைமையில் மிகப்பெரிய படை அப்பாசிய ஆட்சியின் தலைநகரமான பாக்தாத்தை நோக்கி விரைந்தது. பாக்தாத்தை கைப்பற்றி சொல்லால் வர்ணிக்க முடியாத அளவிற்கு மங்கோலியர்கள் அநியாயம் செய்தார்கள். இரத்த ஆறுகள் அங்கு ஓடியது.
லட்சக்கணக்கில் பாக்தாத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு முஸ்லிம்களின் சாம்ராஜ்ஜியமான அய்யூபி சாம்ராஜ்யத்தையும் மங்கோலியர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
அதை காலகட்டத்தில் மற்றொரு பக்கம் பைசாந்திய பேரரசும் இஸ்லாமியர்களுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தது. இது இரண்டுக்கும் நடுவில் சிக்கி கொண்டு முஸ்லிம்கள் விழித்து கொண்டு இருந்தனர்.
ஒரு முஸ்லிம் கிராமத்தில் ஒரே ஒரு மங்கோலியன் நுழைவானாம் ஒருவனை அடித்து இங்கேயே இரு கத்தியை மறந்து விட்டேன் எடுத்து வரும் வரை இங்கேயே இருக்க வேண்டும் என சொல்லுவானாம் மங்கோலியன் திரும்பி வரும் வரை அவனிடம் சாவதற்காக அங்கேயே அவன் இருப்பானாம். இன்னொரு இடத்தில் குதிரைகள் கணைத்தால் ஏன் கனைக்கிறாய் (தாதாரியாக்கள்)மங்கோலியர்களை பார்த்து விட்டாயா என்று அளருகின்ற அளவிற்கு முஸ்லிம் சமூகம் அழிவின் விளிம்பில் அச்சத்தில் இருந்தது.
தனக்கான இஸ்லாமிய கிலாபத் ஆட்சி போய்விட்டது. கலீபாவை கொன்று விட்டனர். மங்கோலியர்களை பகைக்கும் ஒருவன் இந்த உலகத்தில் இல்லை என்ற அளவிற்கு அவர்களுக்குள் அச்சம் தலைவிரித்தாடியது.
இவர்களுக்கு பயந்து சிலர் பெயரை மாற்றிக்கொண்டு மங்கோலிய படையில் இணைந்து கொண்டனர். பலர் நாடோடிகளாக சொந்த நாடுகளை விட்டு வேறு இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.
தோல்வியை காணாத மங்கோலிய படை அப்பாசிய ஆட்சியின் தலைநகரமான பாக்தாத்தை கைப்பற்றியவுடன், அடுத்து அவர்களின் பார்வை ஜெருசலேம் நோக்கி விழுந்தது. அங்கே இருந்து அப்பிராந்தியங்களை கைப்பற்ற முன்னேறி சென்றனர். இப்போது அப்பகுதியை ஆண்ட மம்லூக் வம்சத்தினர் மந்திரிகளை அழைத்து ஆலோசனை செய்கின்றனர்.
பெரும்பாலான மந்திரிகள் சரணடைந்தால் உயிர் பிச்சையாவது கிடைக்கும் என ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் மம்லூக் மன்னன் யுத்தம் செய்ய முடிவெடுக்கிறான். மங்கோலிய தூதுவர் தலை வெட்டப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.
இதை சற்றும் எதிர் பார்க்காத ஹுலாகு கான் மீண்டும் ஒரு படையெடுப்பை செய்கிறான். மம்லுக் மன்னன் குதுஸ் ஐன் ஜாலூத்தில் மங்கோலிய படைய எதிர் கொள்கின்றனர். மங்கோலிய படையோடு ஒப்பிடும்போது சொற்ப எண்ணிக்கையில் மம்லுக் படை இருந்தது.
ஆனாலும் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி அடைந்தது. முதல் முறையாக யுத்த களத்தில் மங்கோலிய படை தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து மங்கோலிய படையின் அடுத்தடுத்த தோல்விகள் தொடர்ச்சியாக ஏற்பட ஆரம்பித்தன.
வரலாற்றில் மங்கோலியர்கள் ஆரம்பித்த வேகத்தில் காணாமல் போனார்கள். வரலாறு அவர்களை காட்டுமிராண்டிகளாக பதிவு செய்தது. மூன்றில் இரண்டு பகுதி நிலம் இருந்தும் சிலநூறு ஆண்டுகளில் மங்கோலிய பேரரசு துடைத்து எரியப்பட்டது.
ஆனால் இன்றும் இஸ்லாம் மேலோங்கி நிற்கிறது. இஸ்லாம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே எண்ணற்ற ராஜ்ஜியங்களையும், அடக்குமுறைகளையும் பார்த்துள்ளது. ஆனால் எதிரிகளோடு சமரசம் இல்லாமல் எதிர்த்து நின்றதால் அல்லாஹ் அப்படைகளுக்கு உதவி செய்தான். பாசிசத்தை எதிர்த்து நிற்பது தான் முதல் வெற்றி. மற்றவைகளை அல்லாஹ் பார்த்து கொள்வான்.
எதிர்த்து நிற்பது என்பது மனதளவில் உறுதியாகவும், களத்தில் சமூகத்திற்கு நம்பிக்கையூட்டியும், சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்று எதிரியை நேர்கோட்டில் சந்திப்பதே. எல்லா காலத்திலும் முஸ்லிம்களிடம் கருத்து வேறுபாடுகளும், பிரிவுகளும் இருந்தன.
ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டி சமூகம் ஒதுங்கி செல்லவில்லை. இருக்கும் பிரிவுகளில் நமக்கானவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களோடு கைகோர்த்து, அவர்களின் கரத்தை வலுப்படுத்தி எதிரியை சந்தித்தால் நிச்சயம் பாசிசம் தோற்று விடும். அல்லாஹ் தோற்கடிப்பான். இஸ்லாத்தை எதிர்த்து தோற்றுப்போன சாம்ராஜ்ஜுய பட்டியலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் வந்து விடும்.
எனவே இயக்கங்களை ஆராயுங்கள், நல்லவை ஒன்றோடு கைகோருங்கள், அவர்களை வலுப்படுத்துங்கள். நிறுவனமாக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்னொரு நிறுவனமாக்கப்பட்ட அமைப்பு இல்லாமல் அவர்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை.
நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்கென ஒரு கூட்டம் உண்டு அவர்கள் பார்த்து கொள்வார்கள், திராவிட அமைப்பு நம்மை பாதுகாக்கும் என இருந்தீர்கள் என்றால்? வட நாட்டில் நடப்பவை வெகு சீக்கிரம் இங்கேயும் அரங்கேறும். அந்த முஸ்லிம்களும் அப்படித்தான் நம்பி இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே பாதுகாக்க முடியாத நிலைக்கு போய் விட்டார்கள்.
எனவே நிறுவனமாக்கப்பட்ட, எதிர்கால திட்டம் கொண்ட, ஒழுங்கு கட்டமைப்பு கொண்ட, எதிரியோடு சமரசம் இல்லாமல் பயணிக்கின்ற ஒரு அமைப்போடு நம்மை இணைத்து கொண்டு நாம் அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை நேரத்தில் தியாகமும், அர்ப்பணிப்பும் செய்யவும், இழப்புகளை தாங்கி கொள்ளும் ஒரு பக்குவப்பட்ட சமூகம் கட்டியெழுப்ப வேண்டும்.
நமது எண்ணம் இந்திய முஸ்லிம்களின் விடுதலை நோக்கி இருக்க வேண்டும்.அவ்வாறு சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு என சுருக்கி பார்க்க கூடாது. இந்திய அளவில் ஒரு தேசிய அமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.
நீங்கள் எதிர்த்து நில்லுங்கள், அல்லாஹ் எதிரியை மண்டியிட செய்வான்.
- இன்ஷாஅல்லாஹ்

காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது. எழுதிய நண்பருக்கு நன்றிகள்.

Tuesday, March 22, 2022

பொறியியல் படிப்பில் 16 தங்க மெடல்களை வென்ற புஷ்ரா மதின்!

 கர்நாடகா

பொறியியல் படிப்பில் 16 தங்க மெடல்களை வென்ற புஷ்ரா மதின்!
ஹிஜாபோடு பரிசுகளை வாங்க வந்ததாலே என்னவோ நமது மீடியாக்கள் இவரை கண்டு கொள்ளவில்லை.



Friday, March 18, 2022

சும்மா தகவலுக்காக..!

 சும்மா தகவலுக்காக..!

பாஜக தலைவர் கிருஷ்ண குமார் தன்னுடைய (ஹிஜாப் அணிந்த) இரண்டு மகள்களுடன்..
இடம்: அபுதாபியில் பெரிய பள்ளிவாசலில்...



Thursday, March 17, 2022

சங்கிகள் இலங்கையிடமிருந்தாவது பாடம் கற்கட்டும்.

 இன வெறி மொழி வெறி மத வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட இலங்கையின் இன்றைய நிலை... விலைவாசி உயர்வுக்காக அரசுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.


இது நமது நாட்டுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணி.... சங்கிகள் இலங்கையிடமிருந்தாவது பாடம் கற்கட்டும்.






Tuesday, March 15, 2022

#விகடன் இணைய தளத்திலிருந்து

 

#விகடன் இணைய தளத்திலிருந்து

 

ஆன்மிக பயணமாய் மெக்கா சென்றுள்ளார் அமீர். ''தான் என்கிற கர்வம் குறைத்து நான் என்கிற பெருமை மறந்து ஒரு வழிப்போக்கனாய்..'' என நெகிழ்ந்து தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர் மெக்கா சென்றதை அறிந்த அவரது நண்பர்கள் பலரும் அவரிடம், 'தங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்' என கூறியிருக்கின்றனர்.

 

இதுபற்றி தனது வாட்ஸ் அப் நிலைத்தகவலில் மெக்காவில் பிரார்த்தனை செய்யும் படத்தை வெளியிட்டு ''நான் ஆன்மீகப் பயணம் செல்கிறேன் என்று சொன்னவுடன், எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று என்னிடம் சொன்னவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்து நண்பர்களே! இந்த உறவையும், அன்பையும் சமய நல்லிணக்கத்தையும் எந்த அரசியலாலும் பிரிக்க முடியாது'' என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.




 

Monday, March 14, 2022

ஆட்சி பொறுப்பேற்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே....

 


ஆட்சி பொறுப்பேற்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே யோகி அதித்தியாநாத்தின் ‘இந்து யுவ வாகினி’ என்ற இளைஞர் அமைப்பு இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு இணை இராணுவத்தை உருவாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்க்கத் தொடங்கியிருந்தது. எங்கெல்லாம் யோகி கூட்டம் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சைப் பேசி முடிக்கிறாரோ அதன் நீட்சியாக அங்கெல்லாம் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் கடைகளை யுவ வாகினி அமைப்பு அடித்து நொறுக்கும்.

 

இதை ஆதித்தியநாத் தொடர்ந்து செய்த போதும் யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த அப்போதிருந்த முலாயம் சிங் யாதவின் காவல்துறை, ஒரே ஒரு முறை மட்டுமே யோகி ஆதித்தியாநாத்தை கைது செய்தது.

2007-ம் ஆண்டு கோரக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் “வருங்காலத்தில் ஒரு இந்து இரத்தம் சிந்தினான் என்றால் அரசாங்கத்தை FIR பதிவு செய்ய வைக்கமாட்டோம். அதற்குப் பதிலாக அவன் 10 உயிர்களைக் கொல்வதை உறுதி செய்வோம்.” என்ற புகழ் மிக்க அந்த வாசகத்தைப் பேசினார். அதன் பின் முஸ்லிம்களின் கடைகள் தரைமட்டமாக்கப்பட்டு, கோடிக்கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. 2 பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுக்க மதக்கலவரம் வெடிக்கும் அபாயத்தில் இருந்ததைத் தடுக்கவே யோகி கைது செய்யப்பட்டார்.

 

அதற்கே 'இந்து மதத்துக்காக வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட, குடும்பத்தைத் துறந்த என்னைக் கைது செய்து சித்ரவதை செய்தார்கள்.' என நாடாளுமன்றத்தில் அழுதார் யோகி.(அப்போது அவர் கோரக்பூரின் எம்பி). உபியின் மேல்சாதி இந்துக்களான தாகூர்களை அக்கண்ணீர் அசைத்துத்தான் பார்த்தது. தாகூர்கள் யோகியின் தீவிர ஆதரவாளர்களாகத் தொடக்கம் முதலே இருந்துவருகிறார்கள்.

இந்த வாக்கு வங்கியை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே யோகியின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக எந்த வித தீவிர நடவடிக்கையும் எடுக்காமலிருந்தார் முலாயம். அதற்கு அடுத்த 10 ஆண்டுகளிலேயே யோகி ஆதித்தியநாத் ஆட்சியைப் பிடித்தார்.

 

யோகி ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உபியில் நடந்த கொடுமைகளை நாமும் செய்திகளில் பார்த்து வந்துள்ளோம். ஆட்சி முழுவதும் இந்துக்கள் மத்தியில், உங்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய சூழ்ச்சியை இந்த முஸ்லிம் சமுதாயம் செய்து வருகிறது என்பது போன்ற தோற்ற மாயையை வலுவாக உருவாக்கிய வண்ணம் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை வன்முறைகளை அடக்குமுறைகளை நியாயப்படுத்திக்கொண்டே இருந்ததுதான் யோகி ஆட்சியின் முக்கிய ‘வெற்றி’.

 

முஸ்லிம்களை இவ்வளவு பாடுபடுத்தியவர் இந்துக்களுக்காவது எதாவது செய்திருக்கிறார் என்றால் அதுவும் கிடையாது. இந்த ஐந்தாண்டுக் கால ஆட்சியில் இந்துக்கள் எந்த பலனையும் அடையவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சியும் அச்சமுதாயம் காணவில்லை. இருந்தும் யோகி எப்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால்? உபி மண்ணை முஸ்லிம்களுக்கு நரகமாக்கியதன் மூலம் மட்டுமே.

 

#UPElections2022

 

Saravana Siddharth பதிவு

 

Sunday, March 13, 2022

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!

 

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்...!

 

 

பிரியாணி... பிரியாணி.. பிரியாணி என முகநூலே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிற உறுதி செய்யப்படாத வதந்தி பற்றியோ,

நம்முடைய நாட்டின் தேசிய உணவாக எழுச்சி பெற்று, ஸ்விக்கி (ஸோமோட்டோ?) நிறுவனத்தில் கடந்த ஓராண்டில் மிக அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட எழுச்சி உணவாக பிரியாணி நிமிர்ந்து நிற்பதைப் பற்றியோ,

ஒரு அண்டா பிரியாணிக்காக ஊரையே சூறையாடி, கடைகளைக் கொள்ளையடித்து, மாநகரத்தையே பீதியிலும் பதற்றத்திலும் உறைய வைத்த கோவை மாநகர காமெடி வில்லன்களைப் பற்றியோ நான் இங்கு சொல்லப் போவதில்லை.

பிரியாணி சாப்பிட்டதால் சத்திய இஸ்லாத்தை ஏற்ற ஒரு பிரிட்டிஷ்காரரைப் பற்றிச் சொல்லத்தான் இந்தப் பதிவு.

அவருடைய பெயர் டேவிட் ஆன்ஸன் (David Ansen). 1920களில் இந்தியத் துணைக் கண்டத்தையே கிலாஃபத் இயக்கம் உலுக்கிக் கொண்டிருந்த நாள்களில் டெய்லி மிரர் என்கிற நாளிதழின் நிருபராக பம்பாயில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.

 

அந்த வேளையில் பம்பாயில் கிலாஃபத் இயக்கம் தொடர்பாக முஸ்லிம் வணிகர்களின் எழுச்சி மாநாடு நடக்கின்றது. மாநாட்டுக்காக வந்திருந்த முக்கியப் பிரமுகர்களுக்காக ஹுஸைன் சோட்டானி என்பவர் சிறப்பு விருந்து அளிக்கின்றார். இந்த விருந்தில் டேவிட்டும் கலந்துக்கொள்கின்றார்.

அந்த விருந்தில் தான் தனது வாழ் நாளில் முதன்முறையாக பிரியாணியைச் சுவைக்கிறார், டேவிட் ஆன்ஸன்.

 

மணிமணியான பாஸ்மதி அரிசி, மிதமான சூட்டில் பதமாக வெந்த இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றுடன் கமகமவென்று மணக்க, மணக்க இருந்த பிரியாணி அந்த ஆங்கிலேயரின் இதயத்தை கொள்ளை கொண்டது.

 

உடனே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறி விட்டார். மாற்றத்துக்கான காரணம் வினவப்பட்ட போது அந்த ஆங்கிலேயர் சொன்னார்: ‘உடலுக்கு சக்தி அளிக்கின்ற உணவே இத்துணை ருசியாக, நேர்த்தியாக, உயர்வானதாக இருக்கிறது எனில் இவர்களின் ஆன்மாவுக்கு ஊட்டம் அளிக்கின்ற மார்க்கம் எந்தளவுக்கு மகத்தானதாக இருக்கும் என எண்ணிப் பார்த்தேன்’.

டேவிட் ஆன்ஸன் தாவூத் ஆன்ஸனாகி விட்டார். டெய்லி மிரர் நாளிதழிலிருந்து விலகி விட்டார். ‘தி முஸ்லிம் அவுட்லுக்’ (The Muslim Outlook) என்கிற நாளிதழின் பொறுப்பை ஏற்றார். 1941-இல் இறக்கின்ற வரை அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார்.

 

அல்லாமா இக்பால் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருக்கின்றார். ஹெச். அப்துர் ரகீப் அவர்கள் எழுதி சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் ஐஎஃப்டி வெளியிட்டிருக்கின்ற ‘அழைப்பியல் சிந்தனைகள்’ என்கிற நூலில் இது பற்றிய விவரங்கள் இருக்கின்றன.

 

டெய்ல் பீஸ் : இன்றும் தமிழகமெங்கும் அண்டா அண்டாவாக பிரியாணி சமைக்கப்படுகின்றது. பிளேட் பிளேட்களாய் பிரியாணி கோடிக்கணக்கான மக்களால் தின்று தீர்க்கப்படுகின்றது. ஆனால் டேவிட் ஆன்ஸனைப் போன்று யோசிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்?

#பிரியாணி

 

-Azeez Luthfullah