Followers

Wednesday, September 30, 2020

சரியான வார்த்தை. எனது கருத்தும் இது தான்.

 


உபி பல்ராம்பூரில் மற்றொரு தலித் பெண் கற்பழித்து கொலை!

 உபி பல்ராம்பூரில் மற்றொரு தலித் பெண் கற்பழித்து கொலை!

கல்லூரிக்கு சென்ற 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்டுள்ளார். அவரது கைகளும் கால்களும் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று அவர் இறந்து விட்டதாக செய்தி வருகிறது.
கல்லூரிக்கு சென்று படித்து தங்களை காப்பாற்றுவாள் என்ற கனவுகளோடு வாழ்ந்த அவரது பெற்றோரை இங்கு நினைத்து பார்க்கிறேன். நேற்றுதான் ஹத்ராஸில் ஒரு தலித் பெண் கற்பழித்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டாள். அந்த ரணம் ஆறுவதற்குள் மற்றொரு கற்பழிப்பு கொலை.
மனிதர்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக உபி மாறிக் கொண்டுள்ளது. இதற்கு என்னதான் முடிவு?
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
01-10-2020




'சார்... சார்... இங்கு என்ன எரிக்கப்படுகிறது?'

 'சார்... சார்... இங்கு என்ன எரிக்கப்படுகிறது?'

'எனக்கு தெரியாது'
'கற்பழித்து இறப்பெய்த மனிஷாவின் உடல் என்கிறார்களே?'
காவல் துறை அதிகாரியிடம் பதில் இல்லை.
இரவு 12.30 மணிக்கு உடலை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். அந்த சிறுமியின் தந்தையும் தாயும் இரு சகோதரர்களும் முகத்தை கடைசி முறை பார்த்து விடுகிறோம் என்று கெஞ்சுகிறார்கள். ஆனால் காவல் துறை அவர்களை தள்ளி விட்டு உடலை எடுத்துச் சென்று நள்ளிரவில் எரித்துள்ளது.
இறைவா! இந்த அக்கிரமக்கார ஆட்சியாளர்களை அழித்து விடுவாயாக!







Tuesday, September 29, 2020

பகதூர் ஷா ஜஃபர்.

 பகதூர் ஷா ஜஃபர்.


நம் நாட்டின் கடைசி முகலாயப் பேரரசர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர். ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கேயே இறந்தார்.

இறுதி நாள்களில் அவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகளில் சொல்வார்:

கித்னா பத் நஸீப் ஹே ஜஃபர் தஃபன் கே லியே
தோ கஜ் ஜமீன் பி நஹீ மிலி கோஹ் ஏ யார் மே.

பகதூர் ஷா ஜஃபர் எத்துணை துரதிருஷ்டசாலி
அடக்கம் செய்யப்படுவதற்கு இரண்டு அடி நிலம் கூட
அன்புக்குரிய நிலத்தில் கிடைக்காமல் போயிற்றே...!

முஹம்மத் அலீ ஜவ்ஹர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராக மகத்தான மக்கள் எழுச்சிப் போராட்டத்தை நடத்தியவர். கிலாஃபத் இயக்க நாயகர். வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற இந்தியப் போராளி.

பிரிட்டிஷாரால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டவர். சிறைவாசம்தான் அவருடைய உடல்நலத்தைக் குலைத்தது.

வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றவர், ‘I would prefer to die in a foreign country so long as it is a free country, and if you do not give us freedom in India, you will have to give me a grave here’ ‘அடிமையல்லாத சுதந்திர நாட்டில் மரணிக்கவே நான் விரும்புவேன். இந்தியாவுக்கு முழு விடுதலையைக் கொடு. அல்லது எனக்கு இரண்டு கஜம் கல்லறையைக் கொடு’ என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூறினார்.

இறுதியில் லண்டனிலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய விருப்பத்தின் படி அன்று சுதந்திரமாக இருந்த பாலஸ்தீனில் ஜெருசலேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவருடைய கல்லறையில் எழுதப்பட்ட வாசகம், ‘Here lies al-Sayyid Muhammad Ali al-Hindi - அல்-ஸய்யித் (தலைவர்) முஹம்மத் அலீஅல்ஹிந்தி இங்கு அடங்கியிருக்கின்றார்’.

மக்பூல் ஃபிதா ஹுஸைன்

நம் நாட்டின் மீது தீராக் காதல் கொண்ட கலைஞன். அடர்த்தியான, அழகான, வண்ணமயமான சித்திரங்களுக்குப் பேர் பெற்றவர்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற நம் நாட்டின் உயர்ந்த விருதுகளை வாங்கிக் குவித்தவர். கேரளத்தின் ராஜா ரவிவர்மா விருதையும் பெற்றவர். நாடே கொண்டாடிய தன்னிகரற்ற ஓவியர்.

இந்துத்துவ வெறியர்களின் அராஜகத்தால் கத்தார் நாட்டில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவர். கடைசியில் கத்தார் நாட்டு குடிமகனாக ஆகிவிட்டவர். லண்டனில் இறந்து போனார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றார் சைய்யிதா அன்வாரா தைமூர். நம் நாட்டில் ஒரு மாநிலத்துக்கு முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, ஒரே முஸ்லிம் பெண்மணி என்கிற சிறப்புக்குச் சொந்தக்காரர். அரசியலில் விழுமங்களைப் பேணி நடந்த, ஊழல் கறை படாத அரசியல் தலைவர்.

என்.ஆர்.சி என்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இவருடைய குடும்பமே இல்லாமல் போனதுதான் துயரம்.

தாய்மண்ணுக்குத் திரும்புவேன். உரிமையை மீட்டெடுக்க சட்டரீதியாகப் போராடுவேன் என்று 2018 -இல் அறிவித்திருந்தார்.

ஆனால் நம் நாட்டில் நிலவியுள்ள முஸ்லிம் விரோத அரசியல் சூழலும் சிஏஏ சட்டமும் அவருடைய எண்ணத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டன.
இந்த நிலையில் தாய் மண்ணை விட்டு வெகுதொலைவில் ஏழு கடல் தாண்டி ஏழாயிரம் கிமீ தொலைவில் ஆஸ்திரேலியாவில் மகனுடைய வீட்டில் நேற்று இறந்து விட்டார் இந்த நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்.

அவ்வளவுதான்.

கடைசியில் பாசிசிவாதியான மோடியையும் தனது கல்லறைக்கு வரவழைத்து விட்டார் பகதூர் ஷா.






சங்கிஸ் எல்லாம் எதிர்த்தா அது நல்ல திட்டம். :-)

 


பீஹாரிகளான ஹெச்.ராஜாக்கள் உணர வாய்ப்பில்லை!

 இதுதான் தமிழ்நாடு. தொப்புள் கொடி உறவுகளான இந்த பந்தத்தை பீஹாரிகளான ஹெச்.ராஜாக்கள் உணர வாய்ப்பில்லை!




தலித்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

 தலித்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தில் தலித்களுக்கு முடி வெட்டியதால் கோபமடைந்த மேல் சாதியினர் அந்த நாவிதரையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.
இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா என்று கேட்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ராம ராஜ்ஜியத்தின் முன்னோடியாகவே இதனை பார்க்க வேண்டும்.
எங்கள் சொந்த ஊரில் முஸ்லிம்கள் நடத்தும் சலூன்களில் பட்டியல் இனத்து மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் அமர்ந்து முடி திருத்தி செல்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் அனுமதிக்கும் போது ஒரே மதம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்தை சேர்ந்த தலித்களை மனிதனாக கூட மதிப்பதில்லையே ஏன்? அவர்கள் செய்த பாவம் என்ன? ஊர் விலக்கம் செய்யும் அளவுக்கு தலித்களுக்கு முடி திருத்துவது மாபாதக செயலா?
சாதி பேதமற்று பழகி வந்த தமிழர்களை வர்ணாசிரமக் கோட்பாடு இந்த அளவு சீரழித்துள்ளது.



வடக்கன்கள் செம கடுப்பில் இருப்பது போல் தெரிகிறது.

 வட மாநில இளைஞர்களை எண்ணி நாடே பெருமை கொள்வதாக முன்பு மோடி கூறியிருந்தார். அவர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது....

வடக்கன்கள் செம கடுப்பில் இருப்பது போல் தெரிகிறது.



Monday, September 28, 2020

உனக்கு இந்த நிலை என்று சந்தோஷப்படமுடிவில்லை.

 "குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கண்டவுடன் சுட வேண்டும்" எனக் கூறிய மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி யின் இறுதி நிகழ்வு.

உனக்கு இந்த நிலை என்று சந்தோஷப்படமுடிவில்லை. ஒரு மனிதனாய் பரிதாபப்படுகிறேன்..!



தலித் வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் பார்பனியத்தால் கொல்லப்பட்டார்!

 தலித் வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் பார்பனியத்தால் கொல்லப்பட்டார்!


தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வக்கீல் தேவ்ஜி மஹேஸ்வர் சமூக ஆர்வலர். இணையத்தில் பல புரட்சிகரமான கருத்துக்களை எழுதி வருபவர். இந்து மதம் சம்பந்தமாகவும் பார்பனிய சமூகத்தின் அத்து மீறல்களையும் முகநூலில் அவ்வப்போது பதிந்து வந்துள்ளார். மும்பை மலட் என்ற பகுதியை சேர்ந்த பாரத் நவோல் என்பவரோடு முக நூலில் கருத்து மோதல் நடந்துள்ளது. பாரத் நவோல் பார்பனிய சமூகத்தை சேர்ந்த ஒரு இந்துத்வாவாதி.

கருத்தால் பதிலளிக்க முடியாத போது சங்கிகள் உடன் எடுப்பது ஆயுதத்தை. அந்த வகையில் பாரத் நவோல், தனது கூட்டாளிகளான ஜெயசுக் லுஹார், கீம்ஜி லுஹார், விஜயசிங் சோதா, மயூர்சிங் சோதா, பிரவினிஷ் சோதா, ஆர்ஜானிஷ் சோதா, போன்றோடு சேர்ந்து கூட்டாக தேவ்ஜி மஹேஸ்வரை அவரது அலுவலகத்துக்கு சென்று கொன்று போட்டுள்ளனர். சிசிடிவி கேமரா உதவியோடு குற்றவாளிகளை அடையாளம் கண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பார்களா? அல்லது இறந்தது தலித் என்பதால் விடுவிக்கப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
28-09-2020



Sunday, September 27, 2020

11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை!

 11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை!


சென்ற மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 11 பாகிஸ்தானிய இந்துக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் இருந்து புலம் பெயர்ந்து ராஜஸ்தானில் குடியேறியவர்கள். விவசாயிகளான இவர்கள் வறுமையின் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை கூறுகிறது.

2012 ஆம் ஆண்டு வந்தவர்களுக்கே சரியான வாழ்வாதாரத்தை தராமல் அவர்களை தற்கொலை வரை கொண்டு சென்றுள்ளது மோடி அரசு. இந்துக்களின் காவலன் என்று கூறி வரும் மோடி இவர்களை காத்திருக்க வேண்டாமா? இவர்களையே காக்காத மோடி இனி புதிதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானத்திருந்து வருபவர்களை எப்படி காக்கப் போகிறார்? அதற்கான திட்டம் என்ன அவரிடம் இருக்கிறது? ஏற்கெனவே வேலையிழந்து கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் அல்லலுறும் போது வெளி நாட்டவருக்கு மோடி எங்கிருந்து வேலை கொடுப்பார்?

தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் பாகிஸ்தான் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. நமது நாட்டை நம்பி வந்த அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டாமா மோடி அரசு?

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா



Saturday, September 26, 2020

நான் உயிரோடு தான் இருக்கிறேன்

 நான் உயிரோடு தான் இருக்கிறேன் வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.ஆர் பாலசுப்பிரமணி அறிக்கை.

🙂
--------------------------
நமக்கு வாய்த்த அமைச்சர்களை எண்ணி உண்மையிலேயே பெருமை படுவோம்.

இவர்களையும் வைத்து 10 வருடம் ஆட்சி செய்த அந்த அம்மாதான் பரிதாபத்திற்குரியவர்.





வீடுகளை இடிக்க புல்டோஷர்கள் தயாராக நிற்கின்றன.

 UP அலஹாபாத்தில் (prayagraaj) இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்க புல்டோஷர்கள் தயாராக நிற்கின்றன. ஏழை மக்கள் தங்களின் ஆவணங்களை கைகளில் பிடித்தவாறு போராடுகின்றனர். யோகி ஆதித்யநாத்தின் அரசு கண்டிப்பாக இவர்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை.


பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டரில் இதனை கொண்டு வந்துள்ளார். அவரே இந்த வழக்கை எடுத்து நடத்தினால் அந்த ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படும்.

ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி பிஜேபி ஆட்சி கட்டிலில் அமர அனுமதித்ததற்காக நிறையவே சோதனைகளை அந்த மக்கள் எதிர் கொள்கிறார்கள். இதிலிருந்து நாமும் பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.

इलाहाबाद में मुसलमानों के घरों को तोड़ने के लिए खड़े हैं बुलडोजर लेकर।

उत्तर प्रदेश सरकार का जुलाई 2020 में पास किया हुआ कानून जिसके अनुसार अगर कोई घर अवैध बना है तो उसे भी मौका दिया जाना चाहिए, परंतु इसके बावजूद कोई भी आईडिया का अधिकारी सुनने और बोलने के लिए तैयार नही है।



Friday, September 25, 2020

மோடி பிஜேபியினரை கேட்டுக் கொண்டதற்கிணங்க....

 மோடி பிஜேபியினரை கேட்டுக் கொண்டதற்கிணங்க....

'விவசாயிகளின் மசோதாவை எதிர்க் கட்சிகள் மக்களிடம் தவறாக கொண்டு செல்கின்றன. பிஜேபி கட்சியினர் உரிய முறையில் விவசாயிகளுக்கு மசோதாவின் நன்மைகளை விளக்க வேண்டும்' - மோடி அறிவுரை.
மோடியின் அறிவுறையை ஏற்று அவரின் பக்தர்கள் விவசாயிகளுக்கு உரிய முறையில் விளக்கியபோது....



சவுதி அரேபியா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்!

 சவுதி அரேபியா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்!

சவுதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் பத்ஹா எனும் இடத்தை அறியாத வெளி நாட்டவர் யாரும் இருக்க முடியாது. வெளி நாட்டவர்கள் அதிகம் சந்தித்துக் கொள்ளும் இடமும் இதுவே. இங்குள்ள ஜூம்ஆ பள்ளியில் அரபி ஆங்கிலத்துக்கு அடுத்ததாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறிவிப்புப் பலகையை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. செல் போனில் அதனை க்ளிக் செய்து கொண்டேன்.
அமித்ஷா மறைமுகமாக திணிக்கத் துணிக்கும் ஹிந்தி மொழிக்கு அங்கு அங்கீகாரம் இல்லை. தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த பதிவு.



Thursday, September 24, 2020

நல்லா இருக்குய்யா உங்களின் சமூக நீதி!

 தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆயுதங்களோடு வளர வேண்டும். உங்கள் குழந்தைகள் மட்டும் பட்ட படிப்பு படித்து அந்தஸ்தோடு வாழ வேண்டும்.


நல்லா இருக்குய்யா உங்களின் சமூக நீதி!







மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!

 ''உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

------------------------------------
மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, ”உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் செல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (950)

மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது? என்று எண்ணவில்லை நபிகள் நாயகம் அவர்கள். மனைவியின் ஆசைகளையும் தீர்த்து வைக்கின்றனர்.

----------------------------------
பெண் வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே குண வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள். அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ ஒரேயடியாக நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2913)



ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் உண்டான வேறுபாடு!

 


Wednesday, September 23, 2020

100 சக்தி மிக்க மனிதர்களில் ஒருவராக பல்கீஸ்பானு தேர்வு!

 100 சக்தி மிக்க மனிதர்களில் ஒருவராக பல்கீஸ்பானு தேர்வு!


ஒரு கையில் தஸ்பீஹ் மணி மறு கையில் இந்திய தேசியக் கொடி. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாக்கில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் பல்கீஸ் பானு. இந்த வயதிலும் என்ன ஒரு துணிச்சல். பாசிச அரசின் கொடும் அடக்குமுறையை கண்டும் எந்த சலனமும் இல்லாமல் ஒரே உறுதியோடு அமர்ந்திருந்தார் பல்கீஸ் பானு. அவரைச் சுற்றி மற்ற போராட்டக்கள பெண்களும் அமர்ந்திருந்தனர். 


பத்திரிக்கையாளர் ரானா அய்யூபிடம் அவர் சொல்லும்போது ' எனது நரம்புகளிலிருந்து இரத்தம் செல்வது நின்று போனாலும் எனது மக்களின் உரிமைக்காக இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன். எந்த ஒரு அடக்கு முறையையும் சந்திக்க தயாராகவே வந்துள்ளேன். நீதியும் சம உரிமையும் கிடைக்கும் வரை ஓய மாட்டேன்.' என்று சூளுரைத்தார். 


தற்போது  2020 ஆம் ஆண்டின் சக்தி மிக்க 100 மனிதர்களில் சகோதரி பல்கீஸ் பானுவையும் தேர்ந்தெடுத்துள்ளது TIME இதழ். உலக நாடுகள் அனைத்தும் பல்கீஸ் பானுவின் போராட்டத்தைப் பற்றி படிக்கும். கோழைகளான மோடி அமித்ஷாவின் பாசிச எண்ணங்களையும் உலகம் தெரிந்து கொள்ளும்.








புற்றுநோயிற்கான மருந்து

 இரத்தப் புற்றுநோய் 


மூளைப் புற்றுநோய்


மார்பகப் புற்றுநோய்


பெருங்குடல் புற்றுநோய்


கல்லீரல் புற்றுநோய்


நுரையீரல் புற்றுநோய்


புரோஸ்டேட் புற்றுநோய்


கருப்பை புற்றுநோய்



அன்பிற்குறிய நண்பர்களே! மேற்கூறிய பல புற்றுநோயிற்கான மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 


கர் கூமினோயிட்ஸ்" என்னும் மருந்து பலவித புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தாகும். இது பெங்களூரில் உள்ள புற்றுநோய் மூலிகை மருத்துவமனையில் நியாயமான விலையில் கிடைக்கும். அனைவருக்கும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். இதனால் இச்செய்தி யாருக்காவது உதவலாம். 



கேன்சர் ஹெர்பலிஸ்ட்

பெங்களுர்


முகவரி - 6, டி வி ஜி சாலை காந்தி பஜார்

பசவன குடி

பெங்களுர் - 560004


லேன்ட் மார்க் - வித்யார்தா பவன் ஹோட்டல் அருகில்


தொலைபேசி - 080 - 412 18877


080 - 266011 27


8884588835


Cancer herbalist@mail.com

உலகில் இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்......

 


Tuesday, September 22, 2020

கொரோனா பலரது வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது....

 கொரோனா பலரது வாழ்வையும் புரட்டிப் போட்டுள்ளது....

'நான் என் பெயரை சொல்ல மாட்டேன். ஏனென்றால் எனது பெயரை வைத்து எனது மதம் சாதியை சிலர் தேடுவார்கள். நான் ஒரு கூலி தொழிலாளி. கொரோனா முடக்கத்தால் எனக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. நான் பல நாட்கள் பசியோடு இருந்து விடுவேன். எனது மனைவியும் குழந்தைகளும் பசியோடு இருப்பதை என்னால் காண சகிக்காது. என் மனைவி பிள்ளைகளுக்கு ஏதாவது கொண்டு செல்வேன். இன்று ஒரு ரொட்டி துண்டு தவறி கீழே விழுந்தது. இதனை எடுத்து எனது மனைவி பிள்ளைகளுக்கு உணவாக கொடுத்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். எனது தற்கொலையால் எனது பிள்ளைகளின் பசி போய் விடாது என்பதால் அந்த எண்ணத்தையும் விட்டு விட்டேன். என்றாவது ஒருநாள் விடியும் என்ற ஏக்கத்துடனே தினமும் காத்திருக்கிறேன்.
என்னைப் போல உங்கள் அருகிலும் எத்தனையோ ஏழைகள் வறுமையை வெளிக் காட்டிக் கொள்ளாமல் வாழந்து வருகிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.'



மலேசியாவை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் - ஜாகிர் நாயக்


 



மலேசியாவை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் - ஜாகிர் நாயக்

 

 

 

இந்தியாவில் தம் மீதான வழக்கு, விசாரணைகள் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியதும், மலேசியாவுக்குப் பயணமானார் மதபோதகர் ஜாகிர் நாயக்.

 

 

தனக்கு நிரந்தர குடியுரிமை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க பல நாடுகள் முன்வந்ததாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ள அவர், ஏன் மலேசியாவில் தங்கியிருக்க தீர்மானித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அதற்கு அவரே விளக்கமாகப் பதிலளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு வேளையில் இணையம் வழியிலான ஒரு கலந்துரையாடலில் மலேசியா குறித்து பாராட்டி இருப்பதுடன், தாம் அந்நாட்டில் தங்கியிருப்பதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார் ஜாகிர் நாயக்.

 

 

இவருக்கு மலேசிய அரசு நிரந்திர வசிப்பிட உரிமை அளித்துள்ளது. மலேசியா வந்த பிறகு தமது வாழ்க்கை முறை சற்றே மாறி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மும்பையில் இருந்த போது தம்மிடம் 500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், மலேசியாவில் இருவர் மட்டுமே இருப்பதாகப் புன்னகையுடன் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

 

 

"இத்தகைய மாற்றங்கள் அனைத்தையும் நல்லவிதமாகவே கருதுகிறேன். என் நாட்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திட்டமிட்டார்களோ, அவற்றை எல்லாம் செய்கிறார்கள். நாட்டை விட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதும் அவற்றுள் ஒன்று," என்று ஜாகிர் நாயக் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

மலேசியாவில் தங்கியிருப்பதற்காக அவர் தெரிவித்துள்ள காரணங்களைப் பார்ப்போம்:

 

 

"இந்தப் பிரச்சனை சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. அதாவது, 2016 ஜூலையில் தொடங்கியது.

 

 

எனினும் அடுத்த இரு மாதங்களில் 13 முதல் 15 நாடுகள் எனக்கு அழைப்பு விடுத்தன. நான் அந்நாடுகளில் தங்கிக் கொள்ளலாம் என்றும், எனக்கு தங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாகவும், நல்லபடி கவனித்துக் கொள்வதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

 

நல்ல, சாதகமான மற்றும் சாதகமற்ற அம்சங்களைப் பரிசீலித்து எனக்கு அழைப்பு விடுத்த நாடுகளில் இருந்து மூன்று நாடுகளை தேர்ந்தெடுத்தேன்.

 

 

"அவற்றுள் மலேசியாதான் சிறப்பானது எனத் தோன்றியது. நான் எடுத்த முடிவு குறித்து இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

 

 

"உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பிரச்சனைகள் உள்ளன. எனவே மோசமான நிலையில் உள்ளவற்றில் சிறந்த நாடு (BEST OF THE WORST) மலேசியா என்ற அடிப்படையிலும், ஒரு நபர் வாழ்வதற்கு சிறந்த நாடு என்ற வகையிலும் எனது தேர்வு அமைந்தது.

 

 

"இந்த தேர்வுக்கான முதல் காரணம், மலேசியா போர் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது போர் பகுதியில் உள்ளன. ஏமன், ஈராக், வளைகுடா நாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மலேசியா அப்படி அல்ல.

 

 

"இரண்டாவதாக, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளதால் மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆதிக்கம் மற்றும் கொடுமைகளில் இருந்தும் மலேசியா விலகியுள்ளது.

 

 

"தற்போது உலகளவில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் மலேசிய கடப்பிதழுக்குதான் அதிக மதிப்புள்ளது. மலேசிய கடப்பிதழ் இருப்பின் ஒருவர் 185 நாடுகளுக்கு 'விசா' இன்றி சென்று வர முடியும் என்பது மூன்றாவது காரணம்.

 

 

"நான்காவதாக, அரபு பிராந்தியத்தில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலேயே மலேசியாவில்தான் இஸ்லாம் அதிகம் பின்பற்றப்படுவதாகக் கருதுகிறேன். சராசரி அளவில் பார்க்கும்போது இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தானில் உள்ளவர்களைக் காட்டிலும் மலேசிய இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை பின்பற்றுவது அதிகமாக உள்ளது. இதுவும் மலேசியாவை நான் தேர்வு செய்ய காரணம்.

 

 

 

மலேசியாவில் வாழ்க்கைச் செலவினங்கள் குறைவு. கிட்டத்தட்ட இந்தியாவுக்கு இணையான வாழ்க்கைச் செலவுகள்தான் இங்கும் ஏற்படுகின்றன. இது ஐந்தாவது காரணம்.

 

 

இறுதியாக, மலேசியா மிக அழகான நாடு. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பிட்டுச் சொல்வதானால் இங்குள்ள 'புத்ரா ஜெயா' (மலேசியாவின் நிர்வாகத் தலைநகர்) தான் உலகத்திலேயே மிகச் சிறந்த இஸ்லாமிய நகரம், இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நகரம் என்பேன்.

 

 

இங்கு இரவு வாழ்க்கை, நடன விடுதிகள் (கூடங்கள்) கிடையாது. மதுக்கூடங்களும் இல்லை.

 

 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது எனது சரியானது என்றே நினைக்கிறேன்," என்று ஜாகிர் நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

தகவல் உதவி

பிபிசி தமிழ்

22-09-2020