Followers

Wednesday, February 27, 2019

ரொம்பவும் நன்றி பாய்... உங்களை வச்சுதான் என் பொழப்பே ஓடுது....


சிறை கைதிகள் இஸ்லாத்தை ஏற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில் அதிகமான சிறை கைதிகள் இஸ்லாத்தை ஏற்று வருகிறார்கள். சிறையில் தொழுகிறார்கள், ஜமாத் தொழுகை நடத்துகிறார்கள்: நோன்பு நோற்கிறார்கள், ஜும்மா நடக்கிறது, சிறையில் எல்லா அமல்களும் செய்கிறார்கள். ஏன் இஸ்லாத்தை ஏற்று கொண்டோம் என்பது பற்றி கூறுகிறார்கள் .
அதை பற்றிய ஒரு சிறு காணொளி.
America BC tv


2002 பிப்ரவரி 27, 28, ஆகிய நாட்கள் குஜராத் முழுவதும் மரண ஓலங்கள்

2002 பிப்ரவரி 27, 28, ஆகிய நாட்கள் குஜராத் முழுவதும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்த நாள்..!
3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்..!
பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல், முதியோர் என்றும் பாராமல் மொத்தமாக கருவறுக்கப்பட்ட நாள்..!
கைசர் பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கதற கதற கற்பழித்து வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து அதன் மீது சூலாயுதத்தால் குத்தி குதறி அச்சிசுவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நாள்..!
மூன்று நாட்கள் உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று அதிகார வர்க்கமே ஆணையிட்ட நாள்
இதனை தட்டிக் கேட்ட சஞ்சீவ் பட் என்ற அதிகாரியை மன நோயாளி என்று பொய்யான காரணத்தை கூறி அவரை சிறையில் அடைத்த நாள் ...
3000 முஸ்லிம்களின் எரிந்த உடலின் மீது ஆனந்த கூத்தாடி இன்று ஆட்சி அதிகாரத்தை கயவர்கள் பெற்றிருக்கலாம். இவற்றிருந்தெல்லாம் தண்டனை பெறாமல் தப்பி விட்டோம் என்று அரக்கர்கள் ஆனந்த கூத்தாடலாம். ஆனால் இறைவனின் பிடி மிக கடுமையானது. 'தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழிக்கேற்ப இறைவா! இந்த அரக்கர்களை எங்கள் கண் முன்னால் இழிவு படுத்துவாயாக! தக்க தண்டனைகளை பெறுவதை பார்க்கும் பாக்கியத்தை எங்கள் கண்களுக்கு தந்தருள்வாயாக!Tuesday, February 26, 2019

இஸ்லாத்தை ஏற்ற ஏஞ்சலா..!

இஸ்லாத்தை ஏற்ற ஏஞ்சலா..!
அமெரிக்கா முழுவதும் ஓங்கி ஒலிக்கும் ஒரே மந்திரம் 'லாஇலாஹ இல்லல்லாஹ்'..!!


அஜித் தோவலின் மகன் சூர்யா தோவலின் பார்டனர் ஒரு பாகிஸ்தானி!
அஜித் தோவலின் மகன் சூர்யா தோவலின் பார்டனர் ஒரு பாகிஸ்தானி!
நமது நாட்டின் முக்கிய பதவியான பாதுகாப்பு ஆலோசகரகராக அஜீத் தோவல் இருக்கிறார். இவரது மகன் சூர்யா தோவல் தனது பிஸினஸ் பார்ட்னராக வைத்திருப்பது பாகிஸ்தானியரான சையது அலி அப்பாஸ். பாதுகாப்பு ஆலோசகரின் மகன் ஒரு எதிரி நாட்டின் பிரஜையோடு வியாபாரம் புரியலாமா? இதனால் எத்தனை ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு செல்லும் என்று நீங்கள் கேட்டால் 'தேச துரோகி' என்று அழைக்கப்படுவீர்கள். இதே காரியத்தை மற்றவர்கள் செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.
காங்கிரஸ் கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஷே முஹம்மது தலைவன் மசூத் அசாரை விடுதலை செய்து பத்திரமாக ஆப்கானிஸ்தானில் இறக்கி விட்டதும் பிஜேபி ஆட்சியில்தான். மசூத் அசாரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதும் அஜீத் தோவல்தான். பிஜேபி எப்பொதெல்லாம் மக்கள் செல்வாக்கை இழக்கிறதோ அப்போதெல்லாம் மசூத் அசார் உதவிக்கு ஓடி வருவான். எங்காவது குண்டு வைத்து பிஜேபியின் செல்வாக்கை சரி செய்வான்.
இதே அஜீத் தோவல்தான் நேற்று பாகிஸ்தான் மீது 12 விமானங்களை பறக்க விட்டு ஆளில்லா இடத்தில் குண்டுகளை போட்டு விட்டு 2 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார். 200 பேர் என்றும் 300 பேர் என்றும் ஆளாளுக்கு கணக்கை கூட்டிக் கொண்டுள்ளனர். ஆனால் குண்டு விழுந்ததோ ஆளில்லா பகுதியில். இதற்கான ஆதாரங்களை பன்னாட்டு பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று காண்பிப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. இந்த உண்மைகளை எல்லாம் பேசினால் உங்களை தேச துரோகி என்றும் பாகிஸ்தானுக்கு ஓடு என்றும் சங்கிகள் கூறுவார்கள். 

பல்வேறு போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரானார் ஹதியா!

பல்வேறு போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரானார் ஹதியா!
எத்தனை போராட்டம்: என்ன ஒரு துணிச்சல்: முடிவில் சத்தியம் வென்றது.
இந்துத்வா பின்னணியில் வாழ்ந்து வந்த அசோகன் அவரது மகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை ஜீரணிக்க முடியாமல் வழக்கு தொடர்ந்தார். தனது மகளை 'லவ் ஜிஹாதில்' வென்று விட்டதாகவும் ஐஎஸ்ஐஎஸில் சேர்த்து தீவிரவாதியாக மாற்ற உள்ளதாகவும் பொய்யாக வழக்கு தொடர்ந்தார். ஆனால் இவரது மகளோ நீதிபதி முன்னால் தான் யாராலும் மூளை சலவை செய்யப்படவில்லை என்றும் தானாக ஆய்வு செய்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். வேறு வழியின்றி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு தற்போது மருத்துவராகியுள்ளார். ஹதியாவின் உறுதிக்கு இறைவன் மேலும் வெற்றியை தருவானாக! நம் தாய் நாடான இந்த மண்ணில் ஜாதி மத பேதமின்றி மருத்துவம் பார்க்கும் பக்குவத்தை தந்தருள்வானாக!
இவரது தந்தை அசோகன் சொன்னது போல் இவர் தீவிரவாதியாக மாறவில்லை. மருத்துவராக சேவை செய்ய வந்துள்ளார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!


Monday, February 25, 2019

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேட்டி!

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேட்டி!
மோடியும், அமீத்ஷாவும் இணைந்து இந்த நாட்டை ஐந்து ஆண்டுகளில் மிக அடி மட்டத்துக்கு கொண்டு சென்று விட்டனர். ஹிந்துவை முஸ்லிம்களுக்கு எதிராகவும், ஜாட் சாதியினரை மற்ற சாதியினருக்கு எதிராகவும் திருப்பி விட்டு அதில் வாக்கு சேகரிக்க முயல்கின்றனர்.
பாகிஸ்தான் கடந்த 70 வருடங்களாக இந்தியாவை பிளவுபடுத்தி பலகீனப்படுத்த நினைக்கிறது. ஆனால் அவர்கள் அதில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால் அவர்கள் நினைத்த பிளவை மோடியும் அமீத்ஷாவும் ஐந்து வருடத்தில் நிகழ்த்திக் காட்டி விட்டனர்.
முன்பு மோடி வந்த போது மத சார்பற்ற கட்சிகள் பிளவு பட்டதால் 35 சதவீத வாக்காளர்களின் ஆதரவோடு பிரதமரானார். அந்த தவறு இந்த முறை நடந்து விடக் கூடாது. எனவேதான் வேற்றுமைகளை மறந்து மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்கிறேன்.
2019 தேர்தலிலும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் 2050 வரை இவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற முடியாது. எனவே இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் ஒரு சில ஊழல்வாதிகளோடும் கை கோர்க்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன்.'


கங்கையில் புனித நீராடினால் செய்த பாவங்கள் தொலைந்து போகும்

கங்கையில் புனித நீராடினால் செய்த பாவங்கள் தொலைந்து போகும் என்ற நம்பிக்கைதான் இவரைப் போன்றவர்களை துணிந்து பல தவறுகளை செய்யத் தூண்டுகிறது.


புல்வாமா தாக்குதலின் உண்மையான காரணம்

புல்வாமா தாக்குதலின் உண்மையான காரணம் தெரிய வேண்டுமென்றால் அஜீத் தோவலை பிடித்து விசாரிக்க வேண்டும் - ராஜ் தாக்கரே

மோடியும் அமீத்ஷாவும் விரும்பும் இந்து ராஷ்ட்ரா!

இதோ மோடியும் அமீத்ஷாவும் விரும்பும் இந்து ராஷ்ட்ரா தமிழகத்திலும் வந்து விட்டது.
இறந்த தாயின் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த மணிகண்டன் என்ற அகோரி! உறவினர்கள் அதிர்ச்சி!


Sunday, February 24, 2019

பாகிஸ்தான் 'சுப்ரீம் கோர்ட்' தலைமை நீதிபதி 'பகவான்தாஸ்' மரணம்!

பாகிஸ்தான் 'சுப்ரீம் கோர்ட்' தலைமை நீதிபதி 'பகவான்தாஸ்' மரணம்!
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி 'ரானா பகவான்தாஸ்' நேற்றைய தினம் (23/02/15) மாரடைப்பால் மரணமடைந்தார், அவருக்கு வயது 72.
கராச்சி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பகவான்தாஸ், திங்களன்று மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பகவான்தாஸ், பாகிஸ்தான் சிறுபான்மை 'ஹிந்து' சமூகத்தை சேர்ந்தவர் என்றபோதிலும், அவருக்கு இரண்டு முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2005-2006 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பகவான் தாஸ், பாகிஸ்தானில் நீதித்துறைக்கு நெருக்கடி ஏற்பட்ட 2007-ம் ஆண்டிலும், சில மாதங்களுக்காக மீண்டும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு உரிய அந்தஸ்தை வழங்கி வந்துள்ளதை இதிலிருந்து அறியலாம்


இரட்டையர்களான இரு குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தளத்தினர்!

இரட்டையர்களான இரு குழந்தைகளை கொன்ற பஜ்ரங்தளத்தினர்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சித்ராகோட் பகுதியை சேர்ந்த தொழிலதிபரின் மகன்கள் பிரியான்ஸ், தேவான்ஸ். இருவரும் சென்ற பிப்ரவரி 12 ந்தேதி பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளிக்கு சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. கடத்தல் கும்பல் ஒன்று குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டு 20 லட்ச ரூபாய் பிணைத் தொகையாகக் கேட்டுள்ளனர். குழந்தைகளின் தந்தை பணத்தை தர தயாராக இருந்துள்ளார். ஆனால் கடத்தல்காரர்கள் ஒரு கோடி பிணைத் தொகையாக கேட்டுள்ளனர். இவ்வளவு பணம் தந்தையால் தர முடியவில்லை.
இதனால் கோபமடைந்த கடத்தல் கும்பல் குழந்தைகளை கால் கைகளை கட்டி யமுனை நதியில் வீசியுள்ளனர். இறந்த நிலையில் குழந்தைகளை மீட்டது காவல்துறை.
குழந்தைகளை கடத்திய காரையும் கடத்தியவர்களையும் தீவிர விசாரணைக்குப் பின் காவல் துறை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள்ளைச் செர்ந்தவர்கள். பஜ்ரங் தள்ளின் ராஜூ திரிவேதி, லக்கி தாமர், ரோஹித் திரிவேதி, ராகேஷ் யாதவ், பிந்து யாதவ், பத்மா சுக்லா என்ற இந்த 6 மனித மிருகங்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
பால் வடியும் அந்த முகங்களை பார்த்த பின்பும் எப்படி கொல்ல மனம் வந்ததோ அந்த அரக்கர்களுக்கு. யமுனை ஆற்றில் கோவிலுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பணம்தான் குறிக்கோள் என்றால் கொல்ல வேண்டியதில்லை. இது நரபலியாகக் கூட இருக்கலாம். விசாரணையில் தெரிய வரும். தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் விசாரணையில் உண்மைகள் வெளி வரலாம்.
ஆர்எஸ்எஸ் ஆகட்டும், பிஜேபியாகட்டும், பஜ்ரங்தள் ஆகட்டும் எந்த பெயரில் இவர்கள் வலம் வந்தாலும் இவர்களால் இந்துக்களுக்கோ இந்து மதத்துக்கோ எந்த பலனும் இல்லை. தாங்கள் நலமாக வாழ்வதற்காக இந்து குடும்பங்களையே பலியிட தயங்காத மிருகங்கள் இந்த இந்துத்வாக்கள் என்பது இதிலிருந்து விளங்கும்.
தகவல் உதவி
ஜனதாகா ரிப்போர்ட்
24-02-2019


அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார் சீமான்!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலை பற்றிய உளவுத் துறை அறிக்கை வந்தும் அதனை கண்டு கொள்ளாமல் விட்டதா பாஜக? வாக்குகளை அள்ள திட்டமிட்டு எச்சரிக்கையை புறக்கணித்ததா பாஜக? அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார் சீமான்!


காஷ்மீர் புல்வாமா தாக்குதல் குறித்து நாஞ்சில் சம்பத்!


ஒரு மாவட்டத்தையே மாற்றிக் காட்டியுள்ள அதார் அமீர் கான்!ஒரு மாவட்டத்தையே மாற்றிக் காட்டியுள்ள அதார் அமீர் கான்!
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் 2016 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பரீட்சையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அதே வருடம் முதலிடம் பிடித்த தினா தபி கான் என்ற பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.
கணவன் மனைவி இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் பணி கிடைத்தது. மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மிகவும் மோசமாக இருந்தன. குழந்தைகள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். எழுதுவதற்கும் எந்த உபகரணங்களும் இல்லை.
'அரசு பள்ளிகளின் நிலையைக் கண்டேன். மாணவர்களுக்கு எழுதும் வசதி கூட இல்லை என்றால் எவ்வாறு படிப்பில் ஆர்வம் வரும் என்று எண்ணி சுற்று வட்டார மக்களிடம் இதற்கான அவசியத்தை உணர்த்தினேன். அவர்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து கொடுத்தனர். பத்னார் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டெஸ்க் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனை எனது இணைய தளத்திலும் பதிவேற்றி மக்களின் ஆர்வத்தை தூண்டினேன். அருகிலுள்ள கிராம மக்களை அழைத்து வந்து ஒரு வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலை அவர்களுக்கு உணர்த்தினேன். இதனால் பலன் கிடைத்தது. 15 நாட்களில் 4500 அரசு பள்ளிகள் அனைத்து வசதிகளையும் பெற்றன. அரசு உதவி இல்லாமல் மக்களின் ஆர்வத்தினால் இது சாத்தியப்பட்டது' என்கிறார் அதார் அமீர் கான்.
இவ்வாறு சேவை உணர்வோடு பணியாற்ற அனைத்து ஜ.ஏ.எஸ் ஆபீஸர்களும் முன் வந்தால் இந்தியா வெகு சீக்கிரம் வறுமைக் கோட்டைத் தாண்டி விடும். ஆனால் அரசியல்வாதிகள் இதற்கு சம்மதிக்க வேண்டுமே!
தகவல் உதவி
ஜனதாகா ரிப்போர்ட்
24-02-2019


Saturday, February 23, 2019

கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற கம்போடியா பெளத்த கிராமம்...!

கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற கம்போடியா பெளத்த கிராமம்...!
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு ஆசியா நாடு தான் கம்போடியா. இங்கு பெரும்பன்மை பெளத்த மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள் இங்கு 15 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் அதில் 2.3 சதவீதமானவார்கள் மட்டுமே இஸ்லாமிய மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள்.
கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள க்வான் கிராம கெமர் புத்த பாரம்பரியத்தை சார்ந்த 52 பெளத்த குடும்பங்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 
கம்போடியாவிலுள்ள கம்போடியா முஸ்லீம் மீடியா சென்டர் (CAMM) என்ற அமைப்பு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வின் முடிவே இந்த வெற்றி.
மேலும் கம்போடியாவில் 884 மசூதிகளும் 314 இஸ்லாமிய பள்ளிக்கூடங்களும் இருப்
தாக அந்த நாட்டு அரச குறிப்பேடுகள் கூறிகிறது.
இன்னும் கம்போடியாவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்
கிறார்கள் நம் சகோதர , சகோதரிகள். இன்ஷா அல்லாஹ் விரைவில் சத்தியத்தை
ஒட்டுமொத்த கம்போடியாவும் தெரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இதுவும் இந்தியாவில் தான்...

இதுவும் இந்தியாவில் தான்...
இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்னும் வார்த்தை பயன்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்தில் 46 ஏழை இந்துக் குடும்பத்தினரின் மணவாழ்க்கை கனவை சத்தமில்லாமல் நனவாக்கியுள்ளனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்..
எஸ் ஒய் எஸ் சார்பில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துற மர்க்கஸ் வளாகத்தில் 21.2.19 ல் நடைபெற்ற சமூக விவாகம் மெகா நிகழ்ச்சியில் நகர வாடையை நுகராமல் தேயிலை தோட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த பல்வேறு சமூகத்தின் 400 தம்பதிகளின் திருமணம் இமாம்கள் முன்னிலையில் நடந்தது..
சுமார் 350 முஸ்லிம் குடும்பங்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்த இமாம்கள் சகோதர சமூகத்தை சேர்ந்த ஐம்பது குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.. 

பாடந்துற மர்க்கஸ் வளாகத்தில் காந்தபுறம் அபுபக்கர் முஸ்லியார், சையத் இப்ராகிமுல் புகாரி தங்கள், நீலகிரி எம் பி அர்ஜுனன், தமிழக முன்னாள் அமைச்சர் மில்லர் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானவர்கள் முன்னிலையில் முஸ்லிம் இளைஞர்களின் நிக்காஹ் நடைபெற்ற வேளையில், அருகில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் வைத்து 46 இந்துக்கள் மற்றும் தேவர்ஷோலா சி எஸ். ஐ ஆலயத்தில் வைத்து கிறிஸ்தவர்கள் தம்பதியர் ஆனார்கள்...
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தம்பதிகளின் மணவாழ்க்கை சிறப்பாக துவங்கிட 25000 ரூபாயும், ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் ஐந்து பவுன் தங்க நகைகள் வழங்கப்பட்டது..
சகோதர சமூகத்தை சேர்ந்த தம்பதிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆலிம் பெருமக்கள் மகிழ்ச்சியுடன் உணவு பரிமாறி மணவாழ்க்கை சிறக்க துஆ செய்து வழியனுப்பி வைத்தனர்...

Friday, February 22, 2019

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!

சவூதி மன்னரின் உயர்ந்த உள்ளம்!
மன்னர் அப்துல்லா என் தாய் நாட்டுக்கு அரசு முறைப் பயணத்தை முடித்து விட்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் என் எண்ணங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் வி.ஆர்.சோன்டி. இந்து மதத்தைச் சேர்ந்தவன்.. தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.
முதலாவதாக 1955 ஆம் வருடம் மதிப்பிற்குரிய மன்னர் அப்துல் அஜீஸ் இந்தியா விஜயம் செய்திருந்தார். மும்பை நகரத்தில் திறந்த காரில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிறைய தங்க காசுகளை இலவசமாக அளித்தார். ஏழை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க காசுகளை வாங்கிச் சென்றார்கள. அது போல் தங்க நாணயம் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களோடு மக்களாக அனைவரையும் ஒன்றாக நினைத்து அன்பு செலுத்தியது என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகிறது.
இரண்டாவது நிகழ்வு 1976 ஆம் ஆண்டு நடந்தது. உலக வங்கி துங்கபத்ரா அணையின் பாக்கி உள்ள கட்டுமான பணிகளை முடிப்பதற்கு 120 மில்லியன் டாலரை இந்திய அரசிடம் கேட்டது. இதை கேள்விப் பட்ட மன்னர் காலித் அப்போதய இந்திய தூதரை அழைத்து அதற்கான ஒரு மாபெரும் தொகைக்கான காசோலையை தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். இந்த தொகை சவூதி மக்கள் இந்திய மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு என்று மன்னர் காலித் அப்போது கூறினார். அவருக்கு இந்திய மக்களின் பால் உள்ள அன்பை எண்ணி அப்போது வியந்தேன்.
அந்த அணை உள்ள நிலப் பரப்புக்கு பக்கத்தில் தான் என் கிராமம் உள்ளது. அந்த அணையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மன்னர் குடும்பத்தின் அந்த அன்பளிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்த அணையினால் எத்தனையோ ஆயிரம் பேர் தற்போது பயனடைகிறோம்.
சமீபத்தில் இறந்த மன்னர் பஹதுக்காக சொர்க்கம் கிடைப்பதற்காக இறைவனைப் பரார்த்திக்கிறேன். தற்போதய மன்னர் அப்துல்லாவின் ஆட்சியும் சிறப்புற பிரார்த்தித்து, தீராத தலைவலியாய் இருக்கும் இந்தியா காஷ்மீர் பாகிஸ்தான் பிரச்னையும் ஒரு முடிவுக்கு வர பிரார்த்தித்தவனாக இம் மடலை முடிக்கிறேன்.
வி.ஆர்.சோண்டி, இந்தியானா
வாசகர் கடிதம், அரப் நியூஸ், 1-2-2006
இது போன்ற நல்ல உள்ளங்களைப் பெற்றதால்தான் இந்தியா இன்றும் உலகில் தலை சிறந்த நாடாக மிளிர்கிறது.

Thursday, February 21, 2019

இம்ரான் கான் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

இம்ரான் கான் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
'நியூக்ளியர் பாம் வைத்துள்ள இரண்டு நாடுகள் போரைப் பற்றி நினைப்பது தற்கொலைக்கு சமமானது. எந்த பிரச்னையையுமே பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். நான் இந்திய பிரமரிடம் முன்பே சொல்லியுள்ளேன். நீங்கள் நட்புக் கரத்தை நீட்ட ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் இரண்டடி முன் வைக்கிறோம் என்று. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவிடமிருந்து அதற்கான முன்னேற்பாடுகள் இல்லை. இதற்கான காரணமாக வரும் இந்திய பாராளுமன்ற தேர்தலாக இருக்குமோ என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் வெறுப்பை காரணமாக்கி அதன் மூலம் பிஜேபி வாக்குகளை அள்ள திட்டமிடுவதாக நினைக்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக காஷ்மீரில் நடப்பது பற்றி அறிந்திருப்பீர்கள். 10 வயது சிறுவர்களிலிருந்து பலரை ராணுவத்தை கொண்டு மிரட்டுகின்றனர். பல பெண்களின் கண் பார்வை போயுள்ளது. வருடத்தில் 500க்கு மேற்பட்ட காஷ்மீரிகளை கொன்றுள்ளது இந்திய ராணுவம். காஷ்மீர் பிரச்னையை ராணுவத்தை வைத்து மிரட்டுவதால் தீர்த்து விட முடியாது. பேச்சு வார்த்தையின் மூலமே நிரந்தர தீர்வு காண முடியும்,'


Wednesday, February 20, 2019

இறந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உதவும் இனாயத் கான் ஐஏஎஸ்!இறந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உதவும் இனாயத் கான் ஐஏஎஸ்!
பீஹார் மாநிலத்தை சேர்ந்த இனாயத் கான் ஐஏஎஸ் ஆபீஸராக 2012ல் பணி புரிந்துள்ளார். அதன் பிறகு தற்போது மாவட்ட அதிகாரியாக பீஹார் மாநிலத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் பணியில் உள்ளார்.
புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 44 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தது நாம் அறிந்தது. இந்த வீரர்களில் ரத்தன் குமார்(பாகல்பூர்) சஞ்சய் குனார் சின்ஹா(பாட்னா) என்ற இரு சிஆர்பிஎஃப் வீரர்களும் அடங்குவர். இந்த இருவரின் இரு குழந்தைகளை இனாயத்கான் தனது பொருப்பில் எடுத்துள்ளார். இவர்களின் படிப்பு செலவு முதற்கொண்டு வாழ்நாள் முழுக்க இவர்களின் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
31 வயதான இனாயத்கான் கூறும்போது 'நாட்டுக்காக தனது இன்னுயிரை ஈந்த இந்த வீரர்களின் குடும்பத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதன் விளைவாக எழுந்ததே இந்த அறிவிப்பு. இது அல்லாமல் இவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக ஒரு ஓபன் அக்கவுண்ட் திறந்துள்ளோம். மக்கள் கொடுக்கும் நன்கொடைகளை வரும் மார்ச் 10ந்தேதி வசூலாகும் மொத்த தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ளோம்' என்கிறார்.
தேசப் பற்று என்பது இதுதான். இஸ்லாம் கூறும் வழிமுறையும் இதுதான்.
வாழ்த்துக்கள் சகோதரி. நம் மீடியாக்கள் இது போன்ற பாஸிடிவ்வான செய்திகளை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லாது. அதனால் என்ன... நாம் கொண்டு செல்வோம் மக்களிடத்தில்....
தகவல் உதவி
முஸலிம் மிர்ரர்
20-02-2019


Tuesday, February 19, 2019

உள்ளத்தில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துள்ளார்.

இந்த ராணுவ வீரர் தனது உள்ளத்தில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துள்ளார். தங்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளை சாடுகிறார். இறைவன் அனைத்து துரோகிகளையும் நாட்டு மக்களின் முன் கொண்டு வருவானாக!


உரிய நடவடிக்கை எடுக்கிறோம். - இம்ரான்கான்

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பதற்கு தகுந்த ஆதாரத்தை கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம். - இம்ரான்கான்


Monday, February 18, 2019

முஜாஃபர் நகரைச் சேர்ந்த சந்தீப் சர்மா காஷ்மீரில் பிடிபட்டான்.

உபி மாநிலத்தின் முஜாஃபர் நகரைச் சேர்ந்த சந்தீப் சர்மா காஷ்மீரில் பிடிபட்டான்.

சந்தீப் சர்மா என்ற தனது பெயரை ஆதில் என்று மாற்றிக் கொண்டு பல ஏடிஎம்களில் திருடி வந்துள்ளான். ராணுவத்துக்கு எதிரான பல செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். இந்துத்வாவை சேர்ந்த சந்தீப் சர்மா போல் இன்னும் எத்தனை நாய்கள் முஸ்லிம் பெயரில் காஷ்மீரில் ஒளிந்துள்ளதோ இறைவனுக்கே வெளிச்சம். இது போன்ற கள்ள நாய்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு பழியை காஷ்மீரிகளின் மேல் போடுவது இவர்களின் வழக்கம். இவ்வாறு செய்தால் தான் இந்திய ராணுவம் நடத்தும் அத்து மீறல்களுக்கு ஒரு நியாயத்தை உலகுக்கு காட்ட முடியும். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.


Sunday, February 17, 2019

ஹபீஸ் சையிதுடன் இந்துத்வாவாதி பிரதாப் வைதிக்!

ஹபீஸ் சையிதுடன் இந்துத்வாவாதி பிரதாப் வைதிக்!
பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாதிகளை அனுப்பி வரும் ஹபீஸ் சையிதை ஆர்எஸ்எஸ் ன் ஆதரவாளரான பிரதாப் வைதிக் பாகிஸ்தானில் சந்தித்து பேசுகிறார். அவர்களுக்குள் என்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதோ சங்கிகளுக்கே வெளிச்சம். இதே காரியத்தை ஒரு காங்கிரஸ்காரன் செய்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து தேச பக்தி பாடம் எடுப்பார்கள்.
ஹபிஸ் சையத் எடுக்கும் அனைத்து காரியங்களாலும் பலனடைவது மோடியும் அவரின் பரிவாரங்களும் என்பதை கவனியுங்கள். தற்போது தமிழிசையிலிருந்து அனைவரும் இந்தியாவைக் காப்பாற்ற மோடி ஒருவரால்தான் முடியும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஹபீஸ் சையத் யாருக்காக வேலை செய்கிறான் என்பது விளங்கும். பாகிஸ்தானில் நமது ஒற்றர்கள் அங்கிருந்து பல வேலைகளை செய்து வருவதாக தற்போதய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பேசிய வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இஸ்லாமிய பெயர்களில் பல இந்துக்கள் பாகிஸ்தானில் குண்டு வெடிப்புகளை நடத்தி வருவதாகவும் அந்த காணொளியிலேயே வருகிறது.
பாகிஸ்தான் அரசு இதில் சம்பந்தப்படவில்லை என்று தெளிவாக கூறியுள்ளது. பாகிஸ்தானின் தற்போதய பிரதமர் இம்ரான் கான் இந்தியாவையும் இந்திய மண்ணையும் நேசிப்பவர். படித்தவர். பண்பாளர். இந்தியாவோடு நேசக் கரம் நீட்டிய போது மோடியும் அவரது பரிவாரங்களும் அதற்கு தடைபோட்டன. ஏனெனில் பாகிஸ்தான் எதிர்ப்பு இல்லை என்றால் மோடியும் அமீத்ஷாவும் செல்லாக் காசுகள். இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
இனி குற்றத்தை ஒப்புக் கொண்டு வீடியோ வெளியிட்ட ஆதில் அஹமதைப் பற்றி பார்போம்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறிக் கொண்டு அங்குள்ள பொது மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக பொது மக்களும் ராணுவத்தினர் காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இப்படி கல்லெறி தாக்குதலில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு தடுக்கிறோம் என்று சொல்லி இச்செயலில் ஈடுபடாதவர்களையும் சித்திரவதை செய்து வருகிறது நமது ராணுவம். அப்படி சித்திரவதை செய்யப்பட்டவர்களில் இந்த ஆதில் அஹமதும் ஒருவன்.
மூன்றாண்டுகளுக்கு முன்பாக தனது நண்பர்களோடு பள்ளிக்கூடம் சென்று திரும்பிய தனது மகனை இந்திய பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்துள்ளதாக அவரது தந்தை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின் இந்திய ராணுவத்தின் மீது தன் மகனுக்கு கோபம் இருந்தது எனக்கூறும் குலாம் ஹஸன், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்காக ஜம்மு சென்ற தனது மகன் அதன் பின் வீடு திரும்பவில்லை என்கிறார். எங்குத் தேடியும் தன் மகன் கிடைக்கவில்லை எனக் கண்ணீர் மல்க கூறும் தந்தை, தன் மகன் தீவிரவாதியானதே, இந்த தாக்குதலுக்கு பின் தான் தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறார்.
காணாமல் போன ஆதிலை மூளை சலவை செய்து இவ்வாறு தயார் செய்திருக்கலாம். அல்லது சித்தரவதை செய்தும் இவ்வாறு பேச வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஹபீஸ் சையிதின் தயாரிப்பாகவும் இருக்கலாம். குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே குண்டு வைத்தது யார் என்று தகவல் தந்தது யார்? ஆர்டிஎக்ஸின் அளவையும் துல்லியமாக தந்தது யார்? ஆதிலின் வீடியோவை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்தது யார்? விமானத்தில் செல்ல விருந்த ராணுவத்தினரை பேரூந்துகளில் அனுப்பச் சொன்னது யார்? இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி சர்வ சாதாரணமாக ஒரு முன்னேறி வர வழி அமைத்துக் கொடுத்தது யார்? இந்த கேள்விக்கெல்லாம் தேச பக்தி என்ற போர்வையில் பதில் மறுக்கப்படும்.
இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பது நிரூபணமானால் ராணுவ நடவடிக்கை எடுத்து அந்நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அது அல்லாமல் இது ஒரு அரசியல் விளையாட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.
ஒரு இந்தியனாக இருந்து கொண்டு இவ்வாறு சிந்திக்கலாமா? என்று கேட்கலாம். எனது தாய் மண்ணை அதிகம் நேசிப்பதால்தான் இது பற்றி அதிகம் கவலை கொள்கிறேன். பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால் முஸ்லிம்களை தவிர்த்து விட்டு குண்டு போட மாட்டான். அவன் போடும் குண்டில் நானும் சாகலாம் எனது குடும்பமும் சாகலாம். எனவே என்னைப் பொருத்தவரை பாகிஸ்தான் நமக்கு ஒரு அந்நிய தேசம். எல்லோரும் நலமாக இருக்க நினைப்போம். நமது நிமமதியை குலைக்க எவனாவது திட்டம் தீட்டினால் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். இதுதான் எனது நிலை.
எனவே தேச பக்தி என்ற பெயரில் நமக்குள் எழும் சந்தேகங்களை மூடி மறைக்க வேண்டாம். இவ்வாறு மூடி மறைப்பதால் குற்றவாளிகள் மேலும் மேலும் குற்றம் செய்து கொண்டுள்ளார்கள். அப்பாவிகள் மேலும் மேலும் சிறை சென்று கொண்டுள்ளார்கள். மாலேகான் குண்டு வெடிப்பில் இறந்தது முஸ்லிம்கள்: கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள். முடிவில் ராணுவத்தில் பணி புரிந்த ஜெனரல் புரோகித் என்ற பார்பனன் ஆர்டிஎக்ஸை ராணுவத்திலிருந்து திருடி குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கிறான். ஹேமந்த் கர்கரே என்ற நீதிவான் இருந்ததால் அந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது. அவரையும் கொன்று விட்டார்கள் பாசிசவாதிகள். அதற்கும் இவர்களுக்கு பாகிஸ்தான் தேவைப்பட்டது. அப்போதுதான் இவர்கள் மேல் சந்தேகம் வராது.
எனவே தேச பக்தி என்ற பெயரில் தயவு செய்து குற்றவாளிகளை தப்பவிட்டு விடாதீர்கள். சந்தேகப்படும் அனைத்து வழிகளிலும் விசாரணையை முடுக்கி விடுங்கள். 44 ராணுவ வீரர்களின் உயிர் இழப்பு வீணாகி விடக் கூடாது. ராணுவத்தையும், சங்கிகளையும் கொண்டு அப்பாவி காஷ்மீரிகளை துன்புறுத்துவதாலும் கொல்வதாலும் பிரச்னை தீர்ந்து விடாது. அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்பதை மோடியும் அவரது சகாக்களும் உணர வேண்டும்.


தேச பக்தாள்ஸ் - மரண கலாய்.... :-)


நம்மூர்ல இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்

நம்மூர்ல இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்
இன்று காலை, திடீரென்று கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, என் எஸ் சி போஸ் சாலை, ரிச்சி தெரு, காசி செட்டித் தெரு போன்ற இடங்களில் தேசியக் கொடிகளை ஏந்தி வந்த மார்வாடி கும்பலொன்று, வந்தேமாதரம் கோஷத்துடன் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியுள்ளது.
பணிந்த ஒரு சிலர் சடசடவென ஷட்டர்களை இறக்கியிருந்திருக்கிறார்கள். நம்மாளுக மட்டும் மறுத்திருக்கிறார்கள். உடனே அவர்கள் உனக்கு தாய்நாட்டுப் பற்றில்லையா, பாரத் மாதா, ஜெய்ஹிந்த், அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் என்றெல்லாம் சீன் போட, ஓரிரு முரடர்கள் ஷட்டர்களை அவர்களாக கீழிழுத்து, தட்டி என்றெல்லாம் அட்டகாசம் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
அங்கே இப்போது ஏராளமான சிசிடிவி கேமராக்கள் இருப்பதாலும், கடைகளை அடைக்க மறுத்தவர்கள் 100 க்கு அழைத்தளித்த புகார்களாலும், உடனடியாக கலவரத் தடுப்பு படைகளை அள்ளி வந்து குவித்தது பூக்கடை காவல் நிலையம்.
ஒவ்வொரு காவல் வீரரின் கைகளிலும் ஐந்தடி நீளத்தில் கனத்த கம்புகள். தேசியக்கொடி ஏந்தி வந்த வடக்கத்தியப் போராளிகள் எங்கு போய் ஒளிந்தார்கள் என்று சந்து சந்தாய்த் தேடிப்பார்த்து விட்டு, திறந்திருந்த கடைகளுக்குப் பாதுகாப்பாய் பத்தடிக்கு ஒருவர் வீதமாய், மேலே நான் குறிப்பிட்ட ஏரியாவைச் சுற்றி பாதுகாப்பளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏன்டா பொழைக்க வந்த இடத்துல குரைக்கறதே தப்பு கடிக்க ட்ரை பண்ணலாமா ? என்று ஒரு படத்தில் வடிவேலு கேப்பார். தெரிய வேணாமாடா ??
தமிழர்க்கு மட்டுமில்லை தமிழக காவலர்க்கென்றும் தனியே ஒரு குணமுண்டு, அதெல்லாம் உங்கப்பன், பாட்டன்களுக்கும் தெரியும், வந்தோமா, குட்கா, அட்டு வித்தோமா, வெஜ் அப்பார்ட்மெண்ட் வாங்கினோமான்னு கமுக்கமா இருக்கோணும். உங்கூர்ல போல, தேசியக்கொடிய பிடிச்சிக்கிட்டா ஏதும் பண்ணமாட்டாய்ங்கன்னு நம்பி ரோட்டுல இறங்கினீங்கன்னா, மவனே தேரே கான்ட் பழுத்து இன்னும் செவந்து பங்க்ச்சர் ஆகிடும், கபர்தார் !
தமிழகக் காவல்துறைக்கு மிக்க நன்றி 🙏
செளகார்பேட்டையிலிருந்து
ராஜா ராஜேந்திரன்,
16/02/2019

நான் ஏன் இஸ்லாமிய மதத்தினை ஏற்றுக்கொண்டேன்.


முரட்டு மீசையுடனும் ஒரு வித அதிகார தோரணையுடனும் ....

நமது நாட்டில் காவலர்கள் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து மாமூல் வசூலிப்பதை பரவலாக பார்த்திருப்போம். ஆனால் சவுதியில் ரமலான் நாட்களில் பயணத்தில் இருப்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு நோன்பு திறக்க உணவுகளையும், பழங்களையும், தண்ணீரையும் தருவதை பார்க்கிறோம். நோன்பு நாட்களில் சவுதியின் பல இடங்களில் இக் காட்சியை பரவலாக பார்கலாம்.
முரட்டு மீசையுடனும் ஒரு வித அதிகார தோரணையுடனும் காவலர்களை பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு சலாம் சொல்லி புன்முறுவலோடு ஓட்டுனர்களுக்கு உணவு பரிமாறும் சவுதி காவல் துறையினர் சற்று வித்தியாசமானவர்கள். இந்த பழக்கம் இஸ்லாம் சொல்லிக் கொடுத்தனால் வந்துள்ளது.
எல்லா புகழும் இறைவனுக்கே!


Saturday, February 16, 2019

"என்னமோ பண்றாய்ங்க மாப்ள" - அரத்தம் பொதிந்த வார்த்தைகள்

"என்னமோ பண்றாய்ங்க மாப்ள" - அரத்தம் பொதிந்த வார்த்தைகள்
உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்!
ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.
அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள"
அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை. அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது.
ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!
-ஜான்
(வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)


ஒரு ஓட்டுப் பெட்டிக்காக இத்தனை சவப்பெட்டிகளா?


Friday, February 15, 2019

Commander. நசீர் அகமது CRPF.

Commander. நசீர் அகமது CRPF.
காஷ்மீரை சார்ந்த CRPFயின் 37ஆம் பட்டாலியனின் சேனாதிபதி..!!
“நீங்க தனியான நபர் அல்ல,நான் மட்டுமே உங்கள் பிள்ளை அல்ல.. தேசத்தின் இரணுவமே உங்களுடன் இருக்கின்றது” 
நசீர் அகமது தனது தந்தையிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகளின் முக்கியமானது.
இந்த தாக்குதலில் உயிர் இழந்த ஓரே கமெண்டோ இவர் மட்டும் தான்..!!
பனி விழும் பூமியில் பலிகளை கண்டு வீரியமாய் எழுந்த மாவீரனின் இறுதி சடங்கு..!!
தந்தை மகனின் உடலை சுமக்க, கஷ்மீரத்து மங்கைகளின் கண்ணீருடன் இந்த வாழ்வை தேசத்துக்காக அர்பணித்தவனின் மறு உலக வாழ்கை பயணம் சிறக்க எமது பிராத்தனை..!!
இஸ்லாமிய மார்க்கதில் தாய் நாட்டை நேசிப்பது இறை பக்தியின் மேன்மைகளின் முதன்மை சிறப்பு.. அந்த சிறப்பை சிறப்பாக செய்து முடித்து கொண்டு விடை பெற்ற “Comd.நசீர் அகமது” அவர்களின் மண்ணறை வாழ்வும் மறுமை வாழ்வும் அமைதியாக அமைய இறைவனை வேண்டுகிறேன்..!!
சுவனத்தின் உயர்ந்த இடமான ஜன்னதுல் பிர்தோஸ் என்ற இடத்தை வழங்கி இந்த அடியானை மேன்மைபடுத்த வல்லோனிடம் கையேந்துங்கள்..!!
சாதி மதம் கடந்து நாட்டுக்காக உழைத்த ராணுவ வீரர்களை அநியாயமாய் கொன்ற கயவர்களும், அரசியல் ஆதாயம் அடைய,உளவு துறையின் கடுமையான எச்சரிக்கையை மீறிய துரோகிகளை களை எடுப்போம்.. நாட்டை காத்திடுவோம்..!!
ஜெய் ஹிந்த்.
- Karaiyil Irunthuகாஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?

காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடம் ஒரு போர் நடகுமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெட்குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி திவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ- முகமது பொறுப்பேற்று இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#
தேசிய நெடுஞ்சாலை ஒன்றினுள் புகுந்து வெடிகுண்டு வாகனங்களை வெடிக்கச் செய்து ராணுவ வீரர்களைக் கொல்லும் அளவுக்குத்தான் மோடி அரசின் பாதுகாப்புத்துறை உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியும், இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சித்தாராமனும் முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்கள்.
#
இந்த தாக்குதல் ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.
#
மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?
#
இந்தியாவிலேயே அதி உச்ச பாதுகாப்பு வலயமைப்பு பகுதி காஷ்மீர். அதுவும் தேசிய நெடுஞ்சாலை அதி உச்ச எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புகள் நிறைந்த பகுதி, இந்த பகுதிக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஒருவர் கொண்டு வந்து மோதுகிறார் என்றால் அது இராணுவத்தினர் தரப்பில் இருந்து உதவி இல்லாமல் இப்படி ஒரு தாக்குதலை திவீரவாதிகளால் நடத்த முடியுமா?
#
ரோந்து செல்லும் போது அல்ல, ராணுவ அணிவகுப்பிற்குள் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இது நம்பும் படியாகவா இருக்கிறது. அணிவகுப்பினுள் புகுந்து தாக்கும் அளவுக்கா இந்திய இராணுவம் இருக்கிறது?
#
சுமார் 300 கிலோ வெடிகுண்டுகளுடன் ஒருவர் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து தாக்குகிறார் என்றால் நமது பாதுகாப்புத்துறை எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?
ராணுவ வீரர்கள் பல வாகனங்களில் வரும் போது மிகச்சரியாக உட்புகுந்து தாக்குதல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் அந்த வாகனம் அதுவரை காத்திருந்ததா?
#
காஷ்மீர் மாநில உளவுத்துறை இப்படி ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருபப்தாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும் , ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய உள்துறையும் , உளவுத்துறையும் பொருட்படுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
#
வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் அடில் அகமது என்றும் அவர் புல்வாமா மாவட்டம் காம்க்கிபோரா பகுதியைச்ச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடந்த சில மணி நேரங்கள் செய்திகள் வெளியானது எப்படி?
இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா என்ற அய்யம் மக்களிடம் எழுந்திருக்கிறது!
-பத்திரிக்கையாளர் அருள் எழிலன்-

இவரை யாரும் கட்டாயப்படுத்தினோமா?

மாஷாஅல்லாஹ்,....
நடிகர் T.ராஜேந்தர் அவர்களது மகனும் நடிகர் சிம்புவின் சகோதரருமாகிய T.R.குரலரசன் இன்று (15.02.2019) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்திலும் மறு உலத்திலும் வெற்றியை தருவானாக.. ஆமீன் !
இவரை யாரும் கட்டாயப்படுத்தினோமா? வாள் எடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறாயா? இல்லையா? என்று மிரட்டினோமா? பணத்தை கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள சொன்னோமா? இவர்களிடம் இல்லாத பணமா? சிந்தியுங்கள் சகோதரர்களே....
ஒரு மார்க்கத்தை வன்முறையாலோ, அல்லது பணத்தை கொடுத்தோ பரப்பி விட முடியாது. அதன் கொள்கைதான் அந்த மக்களை ஈர்க்கிறது. இதுதான் உண்மை...


தப்பு எங்கே நடந்து இருக்கிறது ! !

"ப்ரோ நியூஸ் பாத்தீங்களா காஷ்மீர் சம்பவம் ,, நான் பாண்டிச்சேரி வந்துதான் பார்த்தேன் மொபைல் சார்ஜ் இல்ல ,,இந்த முஸ்லீம் எல்லாம் மோசம் ப்ரோ ,,
மனசே கஷ்டமாயிடுச்சு !!"
"விடுங்க ப்ரோ ஒருத்தன் செஞ்ச தவறுக்கு ஒரு சமூகத்தையே சொல்லாதீங்க ப்ரோ !!"
"இருந்தாலும் மோசம்ங்க இவனுகளையெல்லாம் சும்மா விட கூடாது !!"
"சரி அதை விடுங்க வரும் போது ஒரு புல் மட்டும் வாங்கிட்டு வாங்க !"
"ஐயயோ அதெப்படி முடியும் வழியில செக்போஸ்ட் இருக்கு அதெல்லாம் சாத்தியமே இல்ல ப்ரோ ஆள விடுங்க !!"
"ஏன்டா நொன்னை😀 கேவலம் ஒரு புல் பாட்டிலை அதுவும் மாநில போலீஸையே கடந்து கொண்டு வரமுடியாதுனு நல்லா தெரியுது !"
350 கிலோ வெடிமருந்தை ஒரு காரில் ஏற்றி ராணுவ பாதுகாப்பை கடந்து ராணுவம் மீதே தாக்குதல் நடத்த முடியுதுனா !
தப்பு எங்கே நடந்து இருக்கிறது ! !

இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!'

இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!'
காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா கூறும்போது, “ நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஜம்மு-வில் உள்ள சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பில் ( Channi Rama transit camp) இருந்து 78 பேருந்துகளில், சுமார் 2,500 ஜவான்கள், ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்புக்கு ( Bakshi Stadium transit camp) செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த வீரர்களில் பலர் தங்களின் விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணியில் இணைய வந்தவர்கள். மொத்தம் 350 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தை அவர்கள் நேற்று மேற்கொண்டிருந்தனர்.
பக்‌ஷி கேம்புக்கு செல்ல 30 கிலோமீட்டர் இருக்கும் நிலையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற ஒரே ஒரு நபர் மட்டும் விளையாட்டுப் பொருள்களுக்கு மத்தியில் 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை மறைத்துவைத்து, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியுள்ளார். இந்தத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள் வந்த பேருந்து, மிக வேகமாகத் தங்களது இலக்கை அடைந்துகொண்டிருந்தது. வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. சுமார் ஒரு வார காலமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்ட பின்னரே, நேற்று வீரர்கள் பயணத்தைத் தொடங்கினர். அந்த நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்தையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ வெடிப் பொருள்களைக் கொண்டுவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையேல், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’ என இந்தியா டுடே சேனலுக்கு தெரிவித்துள்ளார்.
Thanks to
Vikatan
16-02-2019


Thursday, February 14, 2019

காஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 12 வீரர்கள் பலிகாஷ்மீரில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 12 வீரர்கள் பலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கி 12 ராணுவத்தினர் பலியான சம்பவத்துக்கு நமது வன்மையான கண்டனங்கள். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்கிறது ராணுவ வட்டாரம். உயிர் இழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஒவ்வொரு முறை தாக்குதல் நடக்கும் பொதும் ஜெய்ஷே முஹம்மது, ஹர்கத்துல் முஜாஜிதீன், என்று ஏதாவது ஒரு பெயரை கூறி நாமும் கண்டனம் தெரிவித்து சென்று விடுகிறோம். இந்த சம்பவத்தை பல கோணங்களில் நாம் சிந்திக்க வேண்டும்.
1. இந்த தாக்குதல் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக இருந்தால் அதற்கு தக்க பதிலடியை நாம் கொடுக்க வேண்டும். ரஃபேல் விமானங்களில் கொட்டும் பணத்தை விட நமது எல்லை தாண்டி வரும் பயங்கரவாதத்தை தடுப்பது முக்கியம். எல்லைகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு, ஐந்து அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு அனுமதியின்றி எல்லை தாண்டுபவர்களை அந்த இடத்திலேயே சுட்டு வீழ்த்த வேண்டும்.
2. ராணுவம் மோடி அரசு பதவியேற்ற நாளிலிருந்து அடக்கு முறை என்ற பேரில் அத்து மீறி நடு இரவில் பெண்களை இழுத்துச் சென்று கற்பழித்து பிறகு விடுவதும், இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கொண்டு சென்று கொல்வதும் தொடர்கதையாக உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபடவும் முகாந்திரம் உண்டு.
3. ராணுவத்தை முற்றாக விலக்கி காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டித்து அந்த மக்களின் அன்பை பெறுவதுதான் நிரந்தர அமைதிக்கு தீர்வாகும். ராணுவத்தை கொண்டு மிரட்டினால் அந்த மக்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானின் ஆதரவாளர்களாக மாறவும் வாய்ப்புண்டு. இவ்வாறு சென்றால் அது நமக்கு காலத்துக்கும் தலைவலியை தரும் பிரச்னையாக உருவெடுக்கும்.
நமது நாட்டை கொடிய அரக்கர்களிடமிருந்து காத்து அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


நமது நாட்டின் ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி.....அஜீத் தோவல் ஐபிஎஸ்

நமது நாட்டின் ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் நாச வேலைகளை எப்படி எல்லாம் நிறைவேற்றினார் என்று தேச பக்தி போர்வையில் சொல்வதைப் பாருங்கள்.

சார்.... நீங்கள் வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..


'நீ இந்துவா?' 


'இல்லை... நான் இந்து அல்லஎன்று மறுத்தேன்.


'என்னோடு வா...என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும் 


'நீ இந்துதானேஎன்று கேட்டார். நான் குழம்பிப் போய்


'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.


'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்என்றார்.


'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்என்று சொன்னேன்.


'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'


'ஆம் நான் இந்துதான்'


'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'


'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'


'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?' 


'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'


'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.


'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.என்றார். 


அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லிம்களும் இந்துக்களும் பாதிக்கப்பட்டது உண்மை. ஆனால் அதற்காக வஞ்சம் தீர்க்க அவர்களின் பிள்ளைகளை குண்டு வைத்து கொல்வது என்ன நியாயம்? இதை பெருமையாக ஒரு ராணுவ அதிகாரி சொல்கிறார். படித்த பல இந்துத்வ மக்கள் கை தட்டி தேச பக்தி என்ற பெயரில் ஆர்ப்பரிக்கிறார்கள்.