Followers

Friday, May 20, 2016

பிராமண குலத்து மாமியையும் ஈர்த்த குர்ஆன்!



'நான் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண். எனது குடும்பம் இந்து மத சடங்குகளை ஒன்று விடாமல் பின்பற்றும் ஆச்சாரமான குடும்பம். இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும் பல தவறான கருத்துக்கள் சிறு வயதிலிருந்து எனக்கு ஊட்டப்பட்டது. உருது மொழியின் மேல் உள்ள ஆவலினால் இஸ்லாமியர்களோடு நெருங்கி பழக ஆரம்பித்தேன். ஆச்சரியமாக நான் முன்பு கேட்டவைகள் அனைத்துக்கும் மாற்றமாக அவர்களின் நடவடிக்கை இருந்தது. எனது உறவினர் என்னிடம் 'இஸ்லாமியர்களோடு பழகுகிறாயே உனக்கு பயமாக இல்லையா? என்று கேட்டனர்.

இவ்வளவு அன்போடும் அரவணைப்போடும் பழகுபவர்களைப் பற்றி எவ்வளவு தவறாக புரியப்பட்டுள்ளது என்று வியந்தேன். அவர்களுக்கு உண்மையை விளக்கினேன். அதன் பிறகு எனது நண்பர்களும் எனது உறவினர்களும் என்னோடு ஒரு சில விழாக்களுக்கு வந்தனர். அதன் பிறகு அவர்களும் தொடர்ச்சியாக விழாக்களுக்கு வர ஆரம்பித்தனர். குர்ஆனையும் மற்றும் பல நூல்களையும் அவர்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.

குர்ஆன் எனது உள்ளத்தை மிகவும் ஈர்த்துள்ளது. அதன் சட்ட திட்டங்கள் அதன் மனித நேயம் போன்றவை எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முழு உலகையும் நம்மால் மாற்றி விட முடியாது. ஆனால் நமது நண்பர்கள் உறவினர்களிடம் இந்த உண்மைகளை கொண்டு சேர்க்க முடியும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்.'







No comments: