Followers

Saturday, March 28, 2009

உலகை ஆளும் மனுநீதி!ஆப்ரிக்காவில் உள்ள மிகப் பெரிய நாடு சூடான். இந்த நாட்டில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், உள்நாட்டு நம்பிக்கைக் கொண்டோர் என பல நம்பிக்கைக் கொண்டோர் வாழ்ந்தாலும் முஸ்லிம்கள்தான் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.

1956 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற சூடானில் அதிக தடவை ராணுவ ஆட்சிதான் நடைபெற்றது. சில தடவை குடியரசு ஆட்சி இருந்தாலும் 18 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த சூடானில் 1986 ல் தேர்தல் மூலம் அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசும் பின்னர் கவிழ்க்கப்பட்டது. அதற்குப் பிறகு 1988 ல் சூடானில் ஏற்பட்ட பஞ்சத்தில் 3 லட்சம் பேர் மாண்டனர்.

வறுமையும் பஞ்சமும் இருக்கும் நாட்டில் தீவிரவாதத்திற்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது. இந்த இலக்கணத்தின்படி சூடான் அரசுப் படைகளுக்கும் போராளி இயக்கங்களுக்கும் இடையில் எப்போது பார்த்தாலும் உள்நாட்டுப் போர்தான்.

கடைசியாக 2004 ஆம் ஆண்டு சூடான் அரசுக்கும் போராளி இயக்கங்களுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக சூடானின் மேற்குப் பகுதியான டார்ஃபர் பகுதியிலிருந்து அரபுப் போராளிகளால் 12 மில்லியன் கருப்பு சூடானியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வெளியேற்றிய விவகாரம்தான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காகி தற்போது சூடான் அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் பஷீர் 'சர்வதேச நீதி மன்றத்தின் உத்தரவு தங்கள் நாட்டைக் கட்டுப்படுத்தாது' என்கிறார்.

சூடானில் நடந்தது உள்நாட்டு கலகம். இந்த கலகத்திற்க்காக பஷீருக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் இராக், ஆப்கான் உள்ளிட்ட அன்னிய நாடுகள் மீது படை எடுத்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு கைது வாரண்ட் போடாதது ஏன் என்று உலக மக்கள் ஒருமித்து கேட்கின்றனர்.

மனித உரிமை மீறலுக்காக சூடான் அதிபர் தண்டிக்கப்பட வேண்டியவர் எனில் அவருக்கு முன்பாக முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்லவா?

வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு இன்னொரு சட்டம் என்ற நம் நாட்டின் மனு நீதி சட்டம்தான் சர்வதேச சட்டமாக இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

-நன்றி உணர்வு

Wednesday, March 25, 2009

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? -2


"அவனே இறைவன். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்." - திருக்குர்ஆன்: 59:24.

________________________________________

ஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !

இதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான்.

அதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான்.

இன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.

பாலைவன மக்களுடைய வெளிஉலகப் பயணத்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?

அதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது ?

இதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள். அதற்கென்று நமது ஊர் நெடுஞ்சாலைகளில் ஆலமர, அரச மரத்தடியில் லாடம் அடிப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள் லாடம் தேய்ந்து மாடுப் படுத்துவிட்டால் மீண்டும் லாடம் அடித்தப்பின்னரே சுமைகளை சுமந்து செல்லும்.

ஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் ( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் ஒட்டகம் வழியில் எங்காவது மக்கார் பண்ணி விட்டால் அவர்களுடைய நிலை அந்தோப் பரிதாபமே !

இதனால் தான் ஒவ்வொருவரும் தனது இல்லத்தை விட்டு வெளி ஊர் கிளம்புவதற்கு முன் இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் விதமாக இரண்டு அமர்வுகள் பயணத் தொழுகை தொழுது விட்டு வாகனத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் பயண துஆவை ஓதிக் கொண்டு செல்வார்கள்,

அதேப்போன்று பயணத்திலிருந்து திரும்பியதும் இறைவனுக்கு நன்றிக் கூறி துஆ ஓதி இரண்டு அமர்வுகள் தொழவும் செய்வார்கள்.

இதை எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.
ஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.

குட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது.

மனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம்.

பாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. சுப்ஹானல்லாஹ் அவனே சிறந்த படைப்பாளன். …அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். 23:14

அதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.

மற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).

மிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ ?
மேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.

இன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும்.

உதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது.

கள்ளும், முள்ளும் காலுக்கு மெத்தை என்றுப் பாடியதைக் கேட்டிருக்கிறோம் அது யாருக்குப் பொறுந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக ஒட்டகத்திறகுப் பொருந்தும்.

அந்தளவுக்கு 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14

சுட்டெரிக்கும் வெயில்
ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார். அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும்.

அதற்கு காரணம்.

• மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.

• அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது.

• அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

• அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass)

• கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை.

• அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.

• பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

• ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.

Mjhu E}y;fs;:

The Deserts – A. Starker Leopold – Page 98 – 99
Desert – Susan Arritt Page – 125
The Desert Realm, National Geography Society – Page – 289
Deserts a Miracle of Life - Jim Flegg, Page 62
The Guiness Encyclopedia, Page 159
The World Book Encyclopedia Ref: Camel
Encyclopedia Americana , Vol -5 Page 262
Chambers Encyclopedia, Vol 2 Page 795
Camel – Caroline Amold, Page 30 / 34
Mammals of the southern Gulf – Christangross – Page 11
Amazing Animals – The life Book, Page 22
Life Sense – John Downer – BBC- Page 100 – 103

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.
இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.இனவெறி, மொழி வெறி கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.

'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.

'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,

நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்' என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். –நபிமொழி

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

நன்றி அதிரை ஃபாரூக்!

Friday, March 20, 2009

சவூதி அரேபியா ஓர் முன்மாதிரி!புனித மக்கா நகர கவர்னர் இளவரசர் காலித் அல் பைசல் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வந்திருந்தார். மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'ஆடம்பர வாழ்க்கை, வறிய வாழ்க்கை இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை முறையை சவூதிகளான நம்மில் பெரும்பாலோர் கடைபிடிக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சிக்கு இந்த அரசோ இஸ்லாமோ என்றுமே தடையாக இருந்ததில்லை. அதே சமயம் நவீனத்துவம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டு வருவதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக மக்களோடு போட்டி போடும் அதே சமயம் இஸ்லாத்தின் கொள்கைகளையும் நாம் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். இதை விடுத்து முன்னேற்றம் ஒன்றையே தங்களின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட பல நாடுகளின் தற்போதய நிலையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.'

'ஒரு தனி மனிதனின் வளர்ச்சியை விட அந்த மனிதனின் சமூகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். அதில் நாம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பெற்றுள்ளோம். இந்த வளர்ச்சி கூட நமக்கு கிடைத்தது நம்மிடம் உள்ள எண்ணெய் வளத்தால் அல்ல. அதை எல்லாம் தாண்டி நமது வாழ்க்கை முறை இஸ்லாமாகவே இருப்பதால்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.......'

மேற்கண்டவாறு இளவரசர் காலித் அல் பெய்சலின் பேச்சு சென்று கொண்டிருந்தது.

சில நேரங்களில் சவூதிகளின் வாழ்க்கை முறையை நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு. எங்கள் வாடிக்கையாளர்களில் பல சவுதிகளை நேரில் பார்க்கும் போது மிக எளிமையாக இருப்பதும் அதே சமயம் அவர்கள் பல லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பதும் அதிசயிக்க வைக்கும்.

ஒரு முறை எனக்கும் ஒரு சவூதி பிரஜைக்கும் வார்த்தை முற்றியதால் அந்த சவூதி போலீஸ் வரை சென்று விட்டார். வாழ்க்கையில் முதல் முறையாக காவல் நிலையத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டது. உயர் அதிகாரி விபரங்களைக் கேட்டார். என் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து என் சார்பாக பேசினார். உடன் சம்பந்தப் பட்ட சவூதி 'நான் ஒரு சவூதி. என் சார்பாக பேசாமல் இந்தியனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே' என்று கோபப் பட்டார். உடன் அதிகாரி 'இங்கு சட்டம்தான் பேசும். நாடு எனக்கு முக்கியமல்ல.' என்று கூறி சம்பந்தப்பட்ட சவூதியின் வாயை அடைத்தார். இஸ்லாம் எந்த அளவு அந்த அதிகாரியை பக்குவப்படுத்தியுள்ளது என்று நினைத்து மகிழ்ந்தேன்.

போன மாதம் சவூதி அரேபியா ரியாத் நகரில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காரில் தன்னுடைய சகோதரனுடைய மகளுடன் செக் போஸ்ட்டுக்கு அருகில் வரும் போது அங்கு பணியில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கி, போலீஸ் காரில் பூட்டி வைத்து விட்டு அப்பெண்ணை கொடூரமாகக் கற்பழித்துள்ளனர். பின்னர் அவர்களை மிரட்டி அனுப்பி வைத்து விட்டனர்.

பின்னர் அவர் சவூதி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் விளைவாக கற்பழித்த அந்த இரு அதிகாரிகளும் உடன் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவ்விருவர் மேலுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவ்விரு போலீஸ் அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் கடந்த வெள்ளி அன்று அவர்கள் இருவரின் தலையையும் வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நம் இந்திய திருநாட்டில் இதே போன்ற குற்றம் நடந்திருந்தால் அதிக பட்சம் அந்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பண்ட் மட்டுமே செய்யப் பட்டிருப்பார்கள். அந்த இருவரின் தலை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டப்பட்டதால் இனி எந்த அதிகாரிக்காவது இது போன்ற தீய எண்ணம் வருமா? இது தான் இஸ்லாமிய சட்டம்.

அதே போல் என் நண்பன் ஹூசைன் கார் விபத்தில் இறந்த போது உடலை அடக்கம் செய்ய அனைவரும் சென்றிருந்தோம். அங்கு வேறொரு பிரேதத்தை அடக்க வந்த சில சவூதிகள் உடன் மண் வெட்டியை வாங்கி அவர்களே அனைத்து வேலைகளையும் செய்ததை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

இது போல் பல சம்பவங்களைக் கூற முடியும். இதைச் சொல்வதால் எல்லா சவுதிகளும் மிகவும் நேர்மையானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேர்மையற்றவர்களும் இருக்கவே செய்கின்றனர். நாம் இங்கு பெரும்பான்மையைப் பற்றியே பேசுகிறோம். மேலும் சில சம்பவங்களை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்வோம்.

Tuesday, March 17, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு மனம் திறந்த மடல்!ஏ.ஆர். ரஹ்மானுக்கு அவர்களுக்கு!

குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் பல சிறப்புகள் பெற்று நமது நாட்டுக்கு மேலும் பல சிறப்புகளைப் பெற்றுத் தர வேண்டும். இவ்வளவு புகழ் அடைந்தும் 'எலலாப் புகழும் இறைவனுக்கே!' என்று கூறும் உங்களின் தன்னடக்கத்தை எண்ணி வியக்கிறேன்.

ஒரு முறை ஹஜ் பயணத்துக்காக மக்கா வந்தபோது அந்த வருடம் நானும் ஹஜ் கடமைக்காக மக்கா வந்திருந்தேன். நீங்கள் மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதை பார்த்ததாக என் நண்பர் சொன்னார். வறியவர் பலருக்கும் உங்கள் செல்வத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஈந்து வருவது கண்டு மகிழ்ச்சி. தொழுகைக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக ரெகார்டிங்கை இரவு நேரங்களில் வைத்துக் கொள்கிறீர்கள். சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தவரிடமும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கிறீர்கள். இதை எல்லாம் பார்த்து உங்கள் ரசிகன் என்ற முறையில் சந்தோஷப் படுகிறேன்: பெருமைப் படுகிறேன்.

அதே சமயம் நேற்று அஜ்மீர் தர்ஹாவில் வழிபாடு நடத்தும் காட்சியை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று கூறிவிட்டு அஜ்மீரில் இறந்து போய் அடக்கம் பண்ணப் பட்டிருக்கும் நம்மைப் போன்ற ஒரு மனிதரின் அடக்கஸ்தலத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவது முரணாகத் தெரியவில்லையா? நீங்கள் மதினா வந்திருந்த போது முகமது நபியின் அடக்கஸ்தலத்தையும் பார்த்தீர்கள் தானே! அங்கு யாராவது முகமது நபியிடம் பிரார்த்திப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! பழக்க தோஷத்தில் நம்மவர்கள் முகமது நபியிடம் பிரார்த்திக்க முற்படும் போது அங்கு நிற்கும் காவலர்கள் அவர்களை தடுத்து 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறுவதை நீங்கள் பார்க்கவில்லையா? 'என்னுடைய அடக்கஸ்தலத்தை வணங்கும் இடமாக மாற்றி விடாதீர்கள்' என்று இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு முகமது நபி தன் தோழர்களிடம் சொன்னதை மறந்து விட்டீர்களா?

'தன் காலில் யாரும் விழக் கூடாது. தனக்காக மரியாதை நிமித்தம் யாரும் எழுந்திருக்கக் கூடாது' என்றும் தன் தோழர்களிடம் முகமது நபி கூறியதை மறந்து விட்டீர்களா? மேலும் இது சம்பந்தமாக குர்ஆன் கூறுவதையும் கேளுங்கள்.

'இறைவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.' -குர்ஆன் 7:197

'மனிதர்களே உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதை செவி தாழ்த்திக் கேளுங்கள். இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக்கூட படைக்க இயலாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலகீனமாக இருக்கிறார்கள்.' -குர்ஆன் 22:73

'நீங்கள் இறந்தவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க்க மாட்டார்கள்' குர்ஆன் 35:14


மேற்கண்ட குர்ஆனின் வசனங்கள் தர்ஹாக்களுக்கு செல்வதை கண்டிப்பதைப் பார்க்கிறோம்.

இணையத்தில் உங்கள் சம்பந்தமாக வரும் அனைத்து கட்டுரைகளையும் பார்வையிடுவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டு அதன் மூலம் உங்கள் பிரார்த்தனை முறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ....

உங்கள் நலன் விரும்பி!

Sunday, March 15, 2009

ஒட்டகத்தைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?

"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?- 88:17."

ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ? நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது .
ஒட்டகம் என்ன ?
மனிதனுடைய நிலையே அது தான் !

மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.

இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ? ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்

அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ?
அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும்.

எல்லாம் அறிந்த இறைவன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது.
வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் . வேகஸ் நரம்பு - தமிழ் விக்கிபீடியா

இது சாத்தியப்படுமா ?

வாய் வழியாக அருந்தி நாக்கு அதனுடைய சுவையை உணர்ந்து இறப்பைக்கு அனுப்பினால் தான் பசியும், தாகமும் அடங்கியதாக உணர்வுகள் ஏற்படும் என்ற ஞாயமான சிந்தனை எழலாம்.

சூழ்நிலைக்கொப்ப மாற்றங்கள் செய்தே ஆகவேண்டும் உதாரணத்திற்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஒருவருக்கு வாய் திறந்து உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் வாய் திறந்து அவரால் உணவு உண்ண முடியாது என்பதற்காக அவரை அப்படியே வைத்து சிகிச்சை அளிப்பதில்லை அவர் பூரண குணம் அடையும் வரை டியூப் மூலம் மூக்கின் வழியாக திறவ உணவுகள் நேரடியாக இறப்பைக்கு அனுப்பப்படுகிறது அவ்வாறு அனுப்பப் பட்டால் தான் அவரால் முழு சிகச்சைப் பெற முடியும் மருத்துவர் அளிக்கின்ற ஹெவிடோஸ் களுக்கு வயிறு காலியாக இருந்தால் சிகிச்சைக்காக அளிக்கப்படுகின்ற மருந்துகளே நோயாளிகளுக்கு மரணமாக மாறிவிடும்.

டியூப் மூலம் மூக்கின் வழியாக உணவேற்ற முடியும் என்று மனிதனே சிந்தித்தால் ?
மனிதனைப் படைத்த இறைவன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும்> நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான்.

இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.

இன்று மனிதன் கண்டுப் பிடிக்கும் எலக்ட்ராணிக் உபகரணங்களில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஒயர்களைப் பொருத்த வேண்டும், அவைகளை சீராக இயக்குவதற்கான ஸ்விட்சை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பனவற்றை துல்லியமாக கண்டுப் பிடித்து அமைக்கிறான்.

மனிதனே இப்படி என்றால் ?
அவனைப் படைத்த படைப்பாளன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

உயிரிணங்களின் உடலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வாறான உறுப்புக்களைப் பொருத்தி அந்தந்த உறுப்புகள் இயங்குவதற்கான நரம்புகளை அமைத்து எந்தெந்த நரம்புகளுக்கு எந்தெந்த உறுப்புக்கள் என்பனவற்றை இயக்குவதற்கு மூளை என்ற ஒரே ஸ்விட்சை இறைவன் அமைத்தான் சுப்ஹானல்லாஹ்.

மனித மூளை என்பது மனிதரின் மையநரம்புத் தொகுதியினுடைய மையமும், சுற்றயல் நரம்புத்தொகுதியினுடைய அடிப்படை கட்டுப்பாட்டு நிலையமுமாகும். மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும் , மனிதரின் இச்சை இன்றிய செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளை சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனித மூளை - தமிழ் விக்கிபீடியா (Tamil ...

கோவேறு கழுதைகள், மாடுகள் போன்ற பாரம் சுமந்துப் பயணிக்கும் வனவிலங்குகளில் மற்ற விலங்குகளிலிருந்து மலைக்கும் முகடுக்கும் உள்ள அளவு ஒட்டகம் வித்தியாசப்படுகிறது.

வித்தியாசப்படுவதால் தான் இறைவன் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யக் கூறுகிறான்.

எங்கெல்லாம் வித்தியாசம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனின் அத்தாட்சிகள் இருப்பதைக காணலாம் என்று இறைவனேக் கூறுகிறான். 3:190. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

உதாரணத்திற்கு ஒட்டகமும் , ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றுப்போல் காட்சி அளித்தாலும் அதனுடைய உட்புற உறுப்புக்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி அதனுடைய செயல்பாடுகளில் பாரிய மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தினான். பாரப்பதற்கு ஒன்றுப் போல் இருப்பவைகள் குணநலன்களில், நடைமுறைகளில் மாறுபடும்பொழுது தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பது ஊர்ஜிதமாகும். இல்லை என்றால் எல்லாம் தாமாகத் தோன்றியவைகளே, ஒன்ற மற்றொன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் என்ற டார்வினிஸக் கொள்கையை பெரும்பாலான மக்கள் ஏற்றிருப்பார்கள்.

இன்னும் உதாரணத்திற்கு மற்றொறு சான்று கடல் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் , அதனுடைய நீரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆனால் அதில் உப்பு நீர் தனியாவும், சுவையான நீர் தனியாகவும் இருக்கிறது அது இரண்டும் ஒன்று சேராதவாறு இறைவன் தடுப்பை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறவே வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் திண்ணைப் பள்ளியில் சென்று பாலர் பாடம் கூடப் படிக்காத முஹம்மது நபிக்கு 1400 வருடங்களுக்கு முன் இறைவன் கூறினான்.

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (25:53)

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப்பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றான்.

இரண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலைஇ உப்பின்தன்மை,அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது. ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளார்.

http://islamworld.net/docs/it-is-truth/SeasAndOceans.html

நன்றி - அதிரை ஃபாரூக்

Friday, March 13, 2009

துல்கர்னைன் என்ற மாவீரரரைப் பற்றிய சில செய்திகள்!
'முஹம்மதே!' துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'
-குர்ஆன் 18:83-86


தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றை நாம் இந்த பதிவில் பார்ப்போமா!

முகமது நபியின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முகமது நபியிடம் அந்த அரபிகள் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அரபிகளின் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

துல்கர்னைன் என்பது இந்த அரசருக்குரிய பட்ட பெயராகும். இச்சொல்லுக்கு 'இரு கொம்புகளின் உடைமையாளர்' என்பது பொருளாகும். இது தவிர இவரது நாடு மொழி மக்கள் பற்றிய வேறு விபரங்கள் காணக்கிடைக்கவில்லை. சிலர் இவரே 'மாவீரர் அலெக்சாண்டர்' என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் பல மாதிரியாக சொல்கின்றனர். இனி விஷயத்துக்கு வருவோம்.

இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு துல்கர்னைன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் ஒரு கட்டத்தில் குர்ஆன் கூறுவது போல் 'சூரியன் மறையும் இடத்தை அடைந்தார்'. இந்த வார்த்தை பிரயோகத்தில் அழகிய அறிவியல் உண்மை புதைந்துள்ளது. இந்த வார்த்தை பிரயோகத்திலிருந்து துல்கர்னைன் தனது பயணத்தை மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்று அறிய வருகிறோம்.

அடுத்து 'சூரியன் நீர் நிலையில் மறைவதைக் கண்டார்' என்பதிலிருந்து அவரது பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது என்று தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் நமக்கு தெரிந்ததே!

அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அம்மக்களிடம் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சில உத்தரவுகளை இட்டதாகவும் நாம் குர்ஆனில் பார்க்க கிடைக்கிறது. துல்கர்னைன் இந்த நீண்ட பயணத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந்தார் என்பதிலிருந்து அதுவரை அவர் செய்த பயணம் தரை வழிப் பயணமே என்றும் அறிய முடிகிறது.

மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!

தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் திசை மாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும்.

'பின்னர் ஒரு வழியில் சென்றார்' -குர்ஆன் 18:89

இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

'முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை'
-குர்ஆன் 18:90

என்ன வியப்பு! மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.

தகவல் உதவி

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.

Tuesday, March 10, 2009

தெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல்


தெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் : உடல்சிதறி 15 பேர் பலி! : மிலாது நபி ஊர்வலத்தில் சோகம்
மார்ச் 11,2009,00:00 IST

கொழும்பு : இலங்கையில் மிலாது நபி ஊர்வலம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் பேர் உடல் சிதறி பலியாயினர்; அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, தெற்கு மாகாண முன்னாள் முதல்வர் ஸ்ரீசேனா உள்ளிட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர். "விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை, முல்லைத் தீவில் 45 சதுர கி.மீ., பரப்பளவுக்கு உட்பட்ட பகுதிக்குள் விடுதலைப் புலிகளை முடக்கி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் நடந்த சண்டையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராணுவத்தை பழி வாங்கும் வகையில், போர் நடக்கும் முல்லைத் தீவு பகுதியைத் தவிர, நாட்டின் வேறு பகுதிகளிலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நிரூபிப்பதற்காக விடுதலைப் புலிகள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இலங்கையின் தென் கோடியில் உள்ள மாத்தறை மாவட் டத்தில் அக்குரச கொடப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மிலாது நபி விழா கொண்டாடப்பட் டது. இதையொட்டி, அந்த பகுதியில் ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டது. இதில், இலங்கையின் முக்கிய அமைச் சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அமைச் சர்கள் ஆறு பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ஊர்வலத்துக்குள் புகுந்த மர்ம நபர், தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த பகுதி முழுவதும் ஒரே பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது. குண்டு வெடிப்பில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. அந்த பகுதி முழுவதும் ரத்தம் படிந்திருந்தது.

இந்த தாக்குதலில் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, தெற்கு மாகாண முன்னாள் முதல்வர் ஸ்ரீசேனா உள்ளிட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமைச்சர் விஜேசேகரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். கொழும்பில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் விமானம் மூலம் மாத்தறைக்கு விரைந்தனர். இந்த தற்கொலைப் படை தாக்குதல் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பதட்டமான சூழ்நிலை காணப் படுகிறது. போலீஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா கூறுகையில், "இந்த தாக்குதலில் பத்தில் இருந்து 15 பேர் பலியாகி இருக்கலாம். சரியான எண் ணிக்கை இன்னும் தெரியவில்லை' என்றார்.

ராணுவ செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மன் குல்லுகல்லே கூறுகையில், "இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். கண்டிப்பாக விடுதலைப் புலிகள் தான் இதை நடத்தியுள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேவைப் பட்டால் காயம் அடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலமாக கொழும்பு கொண்டு வருவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.

இலங்கையில் நிதி நெருக்கடி: சமீபத்தில் இலங்கை சென்ற ஐ.நா., மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஜான் ஹோம்ஸ் கூறுகையில், "சண்டை நடக்கும் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் தடையாக உள்ளனர். இதற்கு தேவையான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன' என்றார். அதே சமயம் புலிகள் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் பார்வையிட்டு நிலையை அறிய முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கிடையே, இலங்கையில் நடந்துவரும் சண்டை, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுக்கு வந்து விடும் என்றும், ஆனால், இதன் பாதிப்பு எந்த அள வுக்கு இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது என்றும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "தொடர்ந்து நடந்துவரும் சண்டையால் இலங்கைக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, சர்வதேச நிதியகத்திடம், இலங் கை சார்பில் நிதி உதவி கோரப் பட்டுள்ளது' என்றனர்.

-Dina Malar

Monday, March 09, 2009

மீலாதுந் நபி - நபி பிறந்த தினம்!

மீலாதுந் நபி - நபி பிறந்த தினம்!

அரசு விடுமுறை, மாநாடுகள், ஊர்வலங்கள் என்று அமர்க்களப் படுத்தப்படுகிறது நபி பிறந்த தினம் என்ற பெயரில். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முகமது நபி பிறந்த சவூதி அரேபியாவில் இந்த தினத்தில் விடுமுறையோ வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையோ பார்க்க முடியாது. சவூதி அரேபிய மக்கள் முகமது நபி எப்படி வாழ்ந்தாரோ அதன்படி வாழ்ந்து அவருக்கு பெருமை சேர்க்கிறார்கள். இந்திய முஸ்லிம்களோ முகமது நபிக்கு மாநாடு மட்டும் எடுத்து விட்டு அவரின் சொல் செயல் அங்கீகாரங்களை காற்றில் பறக்க விடுகிறார்கள்.

உண்மையிலேயே நாம் முகமது நபியை மதிக்கிறோம் என்றால் தர்ஹா வணக்கங்களை விட்டொழிக்க வேண்டும். வரதட்கணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை புறக்கணிக்க வேண்டும். தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். பெண் உரிமை, பெண் கல்விக்காக பாடுபட வேண்டும். மற்ற மதத்தவர்களோடு அன்போடும் பண்போடும் பழகுதல். இது போல் இன்னும் என்னென்ன காரியங்களை முஸ்லிம்களுக்கு முகமது நபி கட்டளை இட்டுள்ளாரோ
அதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுதான் உண்மையிலேயே முகமது நபியை கண்ணியப்படுத்தியதாக அமையும்.

அதை விடுத்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு 'இந்த படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா!' என்று மீலாது நபியை கொண்டாடுவதால் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.

இறைவனே மிக அறிந்தவன்.

Remembering the Prophet’s teachings
Dr. Mohammed Abdo Yamani | Arab News


All praise be to Allah the Almighty, Lord of the Universe, Who honored and praised His last Prophet and Messenger Muhammad, saying: “Verily you have the great manners (morals).” (Qur’an, Al-Qalam: 4)

Peace and prayers flow to our beloved Prophet Muhammad (peace be upon him), his honorable family and all his Companions, up to the Day of Judgment, Ameen.

I think that it is of vital importance for all of us and especially for our young people and children to know about the very high rank of our Prophet whose birth and advent was a gift from Allah and a mercy to all mankind. Hence, it is important that, on the occasion of his birthday, we should pause to reflect on his Sirah (biography) and tell miracles that took place during and after his birth.

It is a known fact that in Islam there are only two Eids (feasts). These are, namely, Eid Al-Fitr and Eid Al-Adha. But, other Islamic functions such as the mawlid (birthday) of our Holy Prophet, the Prophetic Hijrah (emigration) from Makkah to Madinah, which marked the beginning of a new history of man, the emergence of a new super force, state and community (Ummah), as well as the Prophet’s Isra’a (night journey) from the Sacred Mosque to the Farthest One, are all occasions of great importance for Muslims all over the world. We need to remember and commemorate all these occasions, which remind us of the greatness and high-ranking of our beloved Prophet. When I talk about commemorating these events, this should not be understood that we call on Muslims to turn them into Eids or festivals that involve wrongful practices, which are common in some places in both Muslim and non-Muslim countries.

But, it is also true that we are living at a time when the enemies of Islam are using every possible means to destroy and conquer the Ummah of the Prophet from within and without, with no sign of mercy or conscience, and that there are very few believers, in fact, who are able to confront them. This may be because we have reached a time of a new jahiliyah (period of darkness and ignorance), among both Muslims and non-Muslims, so much that the truth has become a commodity. It is obvious that those who have power in their hands claim that they have the right to defend the truth, in the form they like it to be, propagate and market it. Thus, the truth itself has become a trademark or a fabricated commodity, and one of their innocent victims.

The blood of Muslims in Palestine, Iraq, Afghanistan, Lebanon, Somalia, Pakistan and elsewhere has become cheap to the extent it is not even worth talking about or caring about. As a result, the dignity, sacred symbols and divine values of Muslims have become the main target and the shortest way to name and fame. The Danish cartoons and movie that were designed to defame our Holy Prophet, the recent show on Israeli Channel 10, which included direct insults on both Prophet Muhammad and Jesus Christ (peace be upon them) are but a few examples of the ongoing vigorous campaign against Islam and Muslims.

Hence, it is our duty to make use of every opportunity to show our deep love and veneration for our Holy Prophet, who stands very high and above all in the hearts of believers and those who love the truth. The enemies of Islam should know that any attack on our Prophet will never be acceptable to Muslims and that they will pay for it a very high price.

It is very important for us now to take every occasion to aggrandize our beloved Prophet, speak out to Muslims and non-Muslims about his merits, teachings and judgments on every aspect of life, and tell about the miraculous signs that accompanied his birth. Furthermore, we should take the opportunity of the mawlid to make it clear to all peoples that the religion of Ibrahim, Noah, Jacob, Moses, Sulayman, Dawood, Jesus and Muhammad (peace be upon them all) is one and the same. That Islam is the universal religion for all mankind and that it stands for peace, love, brotherhood, equality, justice and tolerance. We also need to make it clear that the cause of Islam has nothing to do with violence and terrorism; that it is the identity of all lovers of truth, East and West; and that the truth in Islam never changes for the sake of politics, or to suit the purposes of anyone.

For all these reasons, I think celebrating the mawlid of our Prophet, if observed without any sinful practices, is a good innovation (bida’a hasanah) as long as it comes out of good intention (husn al-maqsad), Allah knows best.

— Dr. Mohammed Abdo Yamani is Saudi Arabia’s former minister of information.

He heads several nongovernmental organizations (NGOs).

Sunday, March 08, 2009

கிரகணத் தொழுகையில் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மைகள்!


இந்தியா உள்பட பல உலக நாடுகளில் சென்ற வாரம் சூரிய கிரகணம் காணப்பட்டது. இந்த நேரத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

சூரிய கிரகணம் கண்டால் அது விலகும் வரை முகமது நபி இறை வணக்கத்தில் ஈடுபடுவார். முகமது நபியின் இந்த செய்கையால் கிரகணம் ஏற்படும்போது உலக முஸ்லிம்களும் தொழுகையில் ஈடுபடுவார்கள்.

இந்த கிரகணத்தைப் பற்றி நமது வள்ளுவர் கூட 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று அறிவியலுக்கு முரணாண கருத்தை சொல்வதையும் பார்க்கிறோம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் வள்ளுவரின் கருத்து தவறு என்பதும் நமக்கு விளங்குகிறது.

உலகம் ஒரு நாள் பல கோள்களும் ஒன்றோடொன்று மோதி கண்டிப்பாக அழியக் கூடியதே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே கருத்தையே இஸ்லாமும் கூறுகிறது. 'இந்த உலகம் ஒரு நாள் அழிக்கப்பட்டு நன்மை தீமைக்கேற்றவாறு மறு உலகில் கூலி வழங்கப்படும்' என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

இனி இந்த சூரிய கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை சற்று பார்ப்போம். சூரியன், சந்திரன், பூமி,ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறைப்பதை சூரிய கிரகணம் என்கிறோம்.

பூமியிலிருந்து ஒரு பொருளை வானத்தை நோக்கி எறிந்தால் அது பூமியை நோக்கி கீழே விழுவது பூமியின் ஈர்ப்பு விசையினால். இதை புவி ஈர்ப்பு விசை என்கிறோம்.

அதே போன்று சந்திரனுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. முழு பவுர்ணமியில் கடல் நீர் மேலேறுவதும் இதனால்தான். சூரியனுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. அதனால்தான் அது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் ஈர்த்து தனது பாதையில் அழைத்துச் செல்வதை 'சூரியக் குடும்பம்' என்கிறோம்.

'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும்.'
-குர்ஆன் 31:29

ஈர்ப்பு விசை கொண்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது தனது ஈர்ப்பு விசையில் சிறிய மாற்றம் ஏற்படுமானால் கோள்கள் ஒன்றோடொன்று மோதி உலகம் அழிந்து விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உலகம் அழிவதற்கு சாத்தியமான நேரம் இது என்பதை பல விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

எனவே உலகம் அழிவதற்கு சாத்தியமான இந்த நேரத்தில் இறைவனை பயந்து அவனை துதித்து பிரார்த்தனையில் ஈடுபடுவதை முகமது நபி வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட உலக முஸ்லிம்களும் கிரகணம் ஏற்பட்டதிலிருந்து அது விலகும் வரை பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.

தகவல் உதவி : உணர்வு

Wednesday, March 04, 2009

'நான் கடவுள்' - என் பார்வையில்நேற்றுதான் நண்பர் கொடுத்த குறுந் தகட்டின் மூலம் 'நான் கடவுள்' திரைப்படம் பார்த்தேன். பாலா தனது முத்திரையை இப்படத்திலும் பதித்துள்ளார். சமூகத்தின் அவலங்களையும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையையும் இவரை விட சிறப்பாக திரைக்கு வேறு யாரும் கொண்டு வர முடியாது என்பது என் கருத்து. மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களையே மையக் கருத்தாக ஒவ்வொரு படத்திலும் எடுத்துக் கொள்வதற்கு ஏதேனும் விஷேஷ காரணம் பாலாவுக்கு இருக்கலாம்.

எங்கள் ஊரில் நான் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது சாமியார் மடம் தாண்டித்தான் செல்ல வேண்டும். அப்போது அங்கிருந்து வரும் மணியோசை: அங்கிருந்து சாமியார்கள் கையில் திருவோட்டுடன் கும்பல் கும்பலாக கிளம்புவது என்பதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. திருமண பந்தத்தையும் உதறி விட்டு, சொந்தபந்தங்களையும் தூரமாக்கிவிட்டு இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள் என்று நினைத்ததுண்டு.

இதே போல் இஸ்லாத்தின் பெயரால் 'ஃபக்கீர்கள்' என்ற ஒரு குரூப்பும் உண்டு. இவர்களும் சாமியார்களை ஒத்த பழக்க வழக்கங்களையே கொண்டிருப்பர். சொந்த பந்தங்களையும் தூரமாக்கிவிட்டு இவர்களும் நாடோடிகளாகவே திரிவர். இவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளெல்லாம் தேவ வாக்கு என்று நம்பி இவர்கள் பின்னால் செல்லும் பலரையும் பார்த்திருக்கிறேன். இந்த ஃபக்கீர்களிடமும் சிலரிடம் கஞ்சா அடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு வித போதையில் தர்காக்களில் உருண்டு கிடக்கும் பல பக்கீர்களைப் பார்த்திருக்கிறேன். அரை மயக்கத்தில்தான் இவர்கள் இறைவனை தரிசிப்பார்களோ என்னவோ! தொழுகை கிடையாது. உடல் சுத்தம், உடை சுத்தம் எதையும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தற்போது பக்கீர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சமீப காலங்களில் பலரும் விளங்கிக் கொண்டனர். தற்போது இவர்களின் மதிப்பும் இஸ்லாமியர்களிடத்தில் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

இனி திரைப்படத்துக்கு வருவோம்....

இளையராஜாவின் இசையும் பாடல்களும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே', 'சொந்தமில்லை பந்தமில்லை', 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' போன்ற பழைய பாடல்களையே இன்னும் கொஞ்ச நேரம் ஓட விட்டிருக்கலாம்.

அழகாக கதையை நகர்த்திக் கொண்டு வந்த ஜெயமோகன் திடீரென்று அகோரிகளுக்கு தவறு செய்பவர்களை கண்டு பிடித்து விடும் திறமை உண்டு என்ற ரீதியில் புருடா விடும் போதுதான் படத்தில் தொய்வு ஏற்படுகிறது. இது பொன்ற சக்திகளெல்லாம் பெற துறவறம் மேற்கொள்ள வேண்டும்: கஞ்சா அடிக்க வேண்டும்: நர மாமிசம் சாப்பிட வேண்டும்: யாருக்கும் புரியாத பாசையில் எதையாவது உளர வேண்டும்: என்றெல்லாம் ஜெமோ ரீல் விடுவதுதான் உச்ச கட்ட அபத்தம். இதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்படுகிறது.

குருடியாக நடித்திருக்கும் அந்த பெண்ணின் நடிப்பு மனதைத் தொடுகிறது. மும்பையில் தினமும் பத்து குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விபரம் சொல்கிறது. அவர்களெல்லாம் இன்னும் எந்த எந்த மாநிலங்களில் கைகள் முடமாக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப் படுகிறார்களோ என்று நினைக்கும் போது பகீரென்கிறது மனது. நமது நாட்டு பணக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்து எடுக்க முன் வந்தால் அடுத்த வருடமே இந்தியாவை வல்லரசாக்கி விடலாம். மனம் வர வேண்டுமே!