Followers

Monday, July 25, 2016

இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?

இறந்த ஒரு ஆன்மா இன்னொரு உடலில் ஏறிக் கொள்ளுமா?

ஆனந்த் சாகர்!

//ஒவ்வொரு பௌதீக பிரபஞ்சத்திலும்(physical universe) கோடி கோடியான நட்சத்திரங்களும்(சூரியன்கள்) அவற்றை மையமாக வைத்து சுற்றிவருகின்ற பல கோடி கோடி கோடி கோடியான பூமி போன்ற கிரகங்களும் இருக்கின்றன. அவைகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அங்கிருந்தும் சில ஆன்மாக்கள் இந்த நமது பூமியில் பிறப்பெடுக்கின்றன. அப்படியே இங்கிருந்தும் சில ஆன்மாக்கள் அந்த கிரகங்களில் பிறப்பெடுக்கின்றன.//

முதல் பாதி சரி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மறு பாதியான அங்கிருந்து உயிர்கள் இங்கு வருவதும் இங்கிருந்து உயிர்கள் அங்கு போவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஏனெனில் பூமியன் தட்ப வெப்பத்தை தாங்கும் அளவிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். சந்திரனுக்கு நாம் செல்ல இங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கிறோம். அங்கு சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. மற்ற பல கொள்களை நீங்கள் நெருங்கவே முடியாது. அந்த அளவு வெப்பம். இன்னும் சில கோள்களில் தாங்க முடியாத குளிர். உறைந்து விடுவீர்கள். எனவே மற்ற கோள்களில் உள்ள உயிர்கள் பூமிக்கு வருவதென்பது நடைமுறை சாத்தியமில்லாதது. அறிவியல் அறிஞர்களால் இதனை நிரூபிக்கவும் முடியவில்லை.

//மேலும் ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருக்க முடியும். அதாவது ஒரே ஆன்மா ஒரே நேரத்தில் பல உடல்களில் தங்கி இருந்து உடல் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது குவாண்டம் இயற்பியல் (quantum physics) மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணதிற்கு ஒரே ஆன்மாவானது ஒரே நேரத்தில் இருவேறு நபர்களாக இருவேறு உடல்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும். இந்த இரு நபர்களும் இருவேறு நபர்களாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உண்மையிலேயே ஒரே நபர்தான். எனவே உயிர்களின்(உடல்களின்) எண்ணிக்கை கூடுவது என்பது புதிரான விஷயம் அல்ல.//
நீங்கள் அதிகம் விட்டலாச்சாரியா படங்களை விரும்பி பார்ப்பவர் என்று நினைக்கிறேன். அல்லது ரஜினியின் சந்திரமுகி படத்தை பார்த்த பாதிப்பாகவும் ஒரு உடலில் இன்னொரு உயிரின் ஆன்மா நுழைவது என்பது படத்துக்குஇருக்கலாம். வேண்டுமானால் சாத்தியமாகலாம். நிஜ வாழ்க்கையில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை நண்பரே! சவுதி அரேபியாவில் பேய் என்றோ, அல்லது பேயை விரட்டுகிறேன் என்றோ யாராவது மந்திரிக்க ஆரம்பித்தால் அவரை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி விடுவார்கள். ஏனெனில் குர்ஆனின் கட்டளைப் படி பேய் பிசாசு என்பது இல்லாத ஒன்று. அறிவியலும் பேய் பிசாசுகளை ஒத்துக் கொள்வதில்லை.

நான் கேட்ட கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதாவது ஒருவர் முன்பு ஒரு நாயை கொடுமைபடுத்தியிருந்தால் மறு பிறவியில் அந்த நாய் மனிதனாக பிறந்து போன பிறவியில் நாயை கொடுமை படுத்தியவன் நாயாக மறு பிறவி எடுப்பான் என்பது உங்களின் கொள்கை. பாதிப்படைந்த அந்த நாய் இந்த மனிதனை இந்த பிறவியில் கொடுமைப்படுத்துவான் என்பது மறுபிறவியின் தத்துவம். அந்த தத்துவத்தின் படி இன்ன குற்றத்திற்காக இவன் இவ்வாறாக படைக்கப்பட்டான் என்று அவனுக்கு தெரிய வேண்டும் அல்லவா? இத்தனை கோடி ஆண்டு ஆகியும் ஒருவருக்கும் தான் முற்பிறவியில் என்னவாக இருந்தோம். நமது ஏழு பிறவியில் இது எத்தனையாவது பிறவி என்ற உண்மை தெரிந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே தெரியாமல் அவனை மறுபிறவியில் இழிவானவாக பிறக்க வைப்பதில் என்ன நன்மை கிடைக்க முடியும்?

தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்ற காரணமே தெரியாமல் ஒருவன் துன்பத்தை அனுபவிப்பது அவனை எந்த வகையில் நேர்வழியில் கொண்டு வரும்? இதைக் கொண்டு மற்றவர்கள் எப்படி பாடம் படிக்க முடியும்?

மேலும் உயிரைப் பற்றி இன்றைய அறிவியல் உலகம் ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர இயலவில்லை. அது ஒரு பெரும் புதிராக இருப்பதாக அறிவியல் அறிஞர்களே ஒத்துக் கொள்கின்றனர். உயிருக்கே சரியான விளக்கம் கிடைக்காத போது ஒரு உயிர் மற்றொரு உயிரில் ஏறிக் கொள்வதாகவும், மற்ற கோள்களில் இருந்து சில உயிர்கள் நமது பூமியில் மனிதனின் உடலில் புகுந்து கொள்வதாகவும் சொல்வதை எங்கிருந்து படித்தீர்கள்? இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையா? சங்கரிடம் இதைப் பற்றி சொன்னால் எந்திரன் போல ஒரு சினிமா எடுக்க வேண்டுமானால் இந்த கதை உதவும் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத ஒன்று.

5 comments:

Dr.Anburaj said...


பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமானே -பிறவா வரம் வேண்டும்- பிறவிப் பெருங்கடல் நீந்துவாா் என்று இந்தியாவில் மட்டும் அல்ல
மறு பிறவிக் கொள்கை கிரேககத்தில் நம்பப்பட்டது.
பித்தகோரஸ் மறு பிறவி கொள்கையில் நம்பிக்கை உள்ளவா்.
சாக்ரடீஸ் பிளேட்டோ போன்றவா்களுக்கும் மறுபிறவிக் கொள்கை ஏற்புடையதாக இருந்தது.
அரேபிய வல்லாதிக்க மதம் உமா் என்ற மன்னனால் எகிப்து நாட்டின் மீது ராணுவ பலத்தால், வாள் முனையில் திணிக்கப்பட்டது.அதற்கு முன் அம்மக்கள் மறுபிறவிக் கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ளாா்கள்.

நியாயத்தீா்ப்பு நாள் கொள்கை முற்றிலும் முட்டாள்தனமானது.
இது குறித்த பல விமா்சனங்களை நான் பதிவு செய்துள்ளேன். தாங்க்ள அதற்கு மறுப்பு தொிவிக்கவில்லை.தொிவிக்கவும் இயலாது. நியாயத் தீா்ப்பு நாள் குறித்த ஒரு விவாதத்தை நான் துவக்க விரும்புகின்றேன்.ஏற்கனவே எழுதியுள்ள பதிவுகளுக்கு தாங்கள் மறுமொழி அளியுங்களேன் பாா்ககலாம். அஹல் பைத என்ற வலைதளத்தில் நியாயத்தீாப்பு நாளுக்கு எதிரான எனது பதிவுகளுக்கு பதில் அளிக்வில்லை. தங்கள் கேள்விகள் அனைத்தையும் இசுலாமிய ஜமாத் திற்கு அனுப்பியிருக்கின்றேன். அவர்க்ள பதில் தந்தால் பெற்றுக் கொள்ளுங்கள் என்று முடித்துக் கொண்டாா் .

Dr.Anburaj said...


மறுபிறவி தத்துவம் குறித்த பல கட்டுக்கதைகளை சினிமா கதா ஆசிரியா்கள் எடுத்து விவகாரத்தை மிகவும் குழப்பி வைத்துள்ளாா்கள்.அந்த விசயங்களுக்கெல்லாம் யாரும் பதிலளிக்க இயலாது. பிறக்கும் போதே ஏற்பட்டுள்ள உடல் அழகு பலம் அறிவாற்றல் சிந்தனை திறம் ஒழுக்க உணா்வு மிருக குணம் கொண்ட மனிதன் போன்ற குண பேதங்களுக்கு என்ன விளக்கத்தை அளிக்க முடியும். குணபேதமாக இறைவனே மனிதனை படைத்து விட்டு அவன் ஒரு ஒழுக்க நெறியில் வாழ வில்லை என்று நியாயத்தீா்ப்பு நாளில் தண்டனை அளிப்பது எந்த வகையில் நியாயம்.காட்டுமிராண்டியாக படைக்கப்பட்ட மனிதன் பாிணாமம் அடைந்து வருகின்றான். இநிநலையில் எந்த ஒழுக்கம் படி நியாயத்தீா்ப்பு நாள் நடைபெறும்.
அந்தமான தீவில் இன்றம் நிா்வாணமாக வாழும் மனிதனுக்கு அல்லா துரோகம் இளைத்து விட்ாரே ஏன் ? அவன் ஒழுக்கமாக வாழ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்?

Dr.Anburaj said...



ஆதாம் ஏவாளை
அம்மணமாகப் படைத்த
அல்லாவுக்கு
நியாயத் தீா்ப்பு நாளில்
என்ன தண்டனை ?
கருத்துக்களை பதிவு செய்யுங்கள் முஸ்லீம் வாசகர்களே!

Dr.Anburaj said...


இந்த கேனயனின்ன கேள்விகளுக்கு பதில் அளிப்பாா் யாரும் இல்லையா ?

திரு.இதிகாஸ் தங்கள் பைக் பஞ்சா் ஆகி விட்டதா ?

திரு.ஆதிரை அஹமது அவரகளே

தங்களின் ஒலி வாங்கி பழுதடைந்து விட்டதா ?

Dr.Anburaj said...


இது குறித்து மேலும் தகவல்களை அறிய விரும்புபவா்கள் complete works Swami Abethananda என்று இணையத்தில் தேடினால் நிறைய விசயங்கள் உள்ளன.