முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுதல்: காஃபிர்: ஜிஸ்யா வரி:
இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.
இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.
இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம். இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம் இது.
இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.
இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.
அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?
போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.
நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.
இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?
திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.
முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?
சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.
நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.
இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)
தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)
முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.
மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள். ”உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன்” என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள். ”இவளைக் கொன்று விடட்டுமா?” என நபித்தோழர்கள் கேட்டதற்கு ”கூடாது” என நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
----------------------------
...
இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.
முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்
முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.
காபிர் என்பதற்கு கிறுக்கன், பைத்தியக்காரன், முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும். அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.
காபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர், ஏற்காதவர் என்பது தான். இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்) என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காபிர்கள்) எனக் கூறுகிறது. ஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது. ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும். இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.
இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள். இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காபிர் என்பது.
சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறது. முஷ்ரீக் என்றால் ”பல கடவுள்களை நம்புபவர்கள்” என்பது பொருள். பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. பல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமா? பல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்! இது எப்படி ஏச்சாக ஆகும்!
இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.
-------------------------
ஜிஸ்யா வரி
பெரும்பாலான முஸ்லிம்களாலும், முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ”ஜிஸ்யா வரி” என்பதும் ஒன்றாகும்.
”இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர்.” என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும், அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையே. அதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. பாரபட்சமாகவும், அநியாயமாகவும் தோன்றலாம். உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.
ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளது. தனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது. பொருளாதாரமின்றி, இந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாது. மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.
ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகள், அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், அவர்கள் விளைவிக்கும் தானியங்கள், மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் விரும்பினால் செய்யலாம், விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத். மாறாக, இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.
மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.
முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.
முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.
ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.
தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.
இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.
இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும். இஸ்லாம், தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.
முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது. அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.
ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.
முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது. வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
”ஜகாத்” என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே ”ஜிஸ்யா” எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர். பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.
பேரரசுகள், சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும், தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்தது. இந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளது. பெண்கள், சிறுவர்கள், உழைக்க முடியாத முதிய வயதினர், பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. திடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்தது. இவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.
சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்தது. இதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பல மடங்கு குறைவானதாகும்.
சொத்துவரி, விற்பனைவரி, வருமானவரி, சாலைவரி, தண்ணீர் வரி, நுழைவு வரி, வீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்) இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான். இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.
செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும், செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்தது. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டன. அவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது. இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள். அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்தது. முஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லை. எந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்? என்ற என்பதே அந்த ஐயம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.
நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.
முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும். ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.
அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள். முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார். ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்” என்று குர்ஆன் கூறுகிறது. எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை. நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.
மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள், பெண்கள், பைத்தியங்கள், சிறுவர்கள், முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.
ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்) சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.
அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.
இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்? இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.
-பி.ஜெய்னுல்லாபுதீன்
25 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
அவசியமான கட்டுரை.
//அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! //
மதச்சார்பற்ற அல்லது வேறு மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் இருந்தால் அவனை இஸ்லாமியனாக மாற்றுங்கள் முடியவில்லையேல் அவனை கொல்லுங்கள் அது தானே...
இந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவுரங்கசீப் விதித்தான் என்பார்கள்.
இசுலாமியர்களுக்கும் வரி விதித்தான் என்கிறது வரலாற்றின் வரிகள்.
கடவுளின் சொந்த பூமி என்கிறார்களே, அந்தக் கேரளத்தில் தமிழர்களுக்கு 108 வரிகளைப் போட்டார்களே!
பெண்களின் முலைக்கும் வரி, தலைக்கு வரி, மீசை வைத்தால் வரி, திருமணத்திற்கு வரி, இறந்தால் வரி, எந்தவிதச் சடங்கு செய்தாலும் வரி என்று விதித்தார்கள்.
பனை மரம் ஏறினால் வரி, கள் விற்றால் வரி, வலை வீசினால் வரி, மீன் பிடித்தால் வரி என்று பிழைக்கும் வழிகளுக்கெல்லாம் வரி.
பாடுபடாமல் வாழ்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு வரி கிடையாது. ---
- வ.அரசு.
SOURCE:>> http://viduthalai.com/ 2007 05 12
-----00000-----
CLICK >>>>>
அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி. <<<<< TO READ
நல்லதொரு விளக்கம் ..குர் ஆனில் ..
கூறப்பட்ட வசனம் முழுமையாக படிக்காமலும்
வசனம் இறக்கப்பட்ட சூழ்நிலையை விளக்காமலும்
வசனத்தின் நடுபகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு
வாதாடும் வீணர்களுக்கு சரியான விளக்கம் ..
Kavya says:
June 22, 2012 at 4:49 pm
வழிமொழியலாம். ஆனால் அஃதொரு புரியப்படாத வழிமொழியலே. என் நோக்கம் வேறு; மணியின் நோக்கம் வேறு. பாகிஸ்தானை இந்து நாடாக மாற்றம் செய்வதற்கு மணி சொல்லும் காரணம் அப்போதுதான் அஃதொரு மதச்சாரா நாடாகும் என்பதே. நான் அமெரிக்கர்களை இந்துக்களாக மாற்றம் செய்யச்சொல்லும் காரணம் அஃதொரு மதச்சார்பற்ற நாடாக வேண்டுமென்பதற்கன்று. அங்கு மதச்சார்பற்ற நிலை ஏற்கனவே உண்டு. மாற்றம் செய்யக்காரணம் இந்துமதம் அங்கு பரவவேண்டும். அனைத்து அமெரிக்கர்களும் கிருத்துவமதத்தை விட்டு நம் மதத்திற்கு வரவேண்டுமென்பதும். அப்படி அமெரிக்கா மாறிவிட்டால் பாகிஸ்தான் தன் நிலை தடுமாறி சிந்தனை செய்ய ஆரம்பிக்கும். ஏனெனில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நட்பு வேண்டும்.
இப்படியிருக்க எப்படி வழிமொழிந்தேன் என்கிறீர்கள் என்பது வியப்பு. மணிக்கு இன்னொரு கேள்வியும் உண்டு: இந்து மதப்பிரச்சாரம் என்கிறீர்களே அஃது எப்படியிருக்க வேண்டும்? தாலிபானிகளிடம் பண்ண முடியுமா?
இன்னொன்றும் மணிக்கு: பாகிஸ்தானில் போய் இந்து மதப்பிரச்சாரம் என்பது, உள்ளூரில் விலைபோகாத மாட்டை வெளியூரில் விற்பதாகும். ஒரு வேளை வெற்றியடையலாம். ஆனால் உள்ளூரி ஏன் விலை போகவில்லை என்பதையும் ஆராய வேண்டும். கிருத்துவ மிசுனோர்கள் ஏமாற்றுகிறார்கள் நம் மக்களை. ரொம்ப சரி. ஆனால் இசுலாமியர்கள்? கிருத்துவ மதத்தைவிட இசுலாம் வேகமாகப்பரவுகிறது இங்கே. இன்னூம் ஒரு சில நூற்றாண்டுகளில் தமிழர்கள் அனைவர்களும் இசுலாமியர்கள் ஆவது நடக்கும் என்கிறார்கள். பார்ப்ப்னர்கள் மட்டுமே இந்துமதத்தில் இருக்கலாம். ஆனால் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலார் என்பதல்லவா தமிழர் பண்பாடு. அதன்படி அவர்களும் மாறலாம்.
இஃதொரு சிந்தனைக்குரிய பிரச்சினை. சிந்தியுங்கள். பல கசப்பான உண்மைகளை எதிர்நோக்க வரும்.
ராம் நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு கேள்வியை வைத்திருக்கிறேன். அதற்கு பதில் சொன்னால் போதும். உணர்ச்சிகளுக்கு இங்கிடமில்லை. உணர்ச்சிவசப்படாமல் பின்னூட்டங்களை வைத்தால் நன்றி.
வஅலைக்கும் சலாம் சகோ அஜாதீர்!
//அஸ்ஸலாமு அலைக்கும்
அவசியமான கட்டுரை. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ அதிரை சித்திக்!
//நல்லதொரு விளக்கம் ..குர் ஆனில் ..
கூறப்பட்ட வசனம் முழுமையாக படிக்காமலும்
வசனம் இறக்கப்பட்ட சூழ்நிலையை விளக்காமலும்
வசனத்தின் நடுபகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு
வாதாடும் வீணர்களுக்கு சரியான விளக்கம் ..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இஸ்லாத்தை அழிக்க வந்திருக்கும் எங்கள் சிந்தனை சிற்பி
பிரச்சார பீரங்கி...
கோவி கண்ணனை இன்னும் காணவில்லை
antha bracket allam remove panni parunga war mean anna oru chinna koottam pakathu oorla erukura ampalangala pottu thallidu pomapala kolanthangala .............. Panni adima akkurathu athana unga dictinaoryla meaning
ஜிசியாவை பற்றிய நல்ல விளக்கம் தந்தீர்கள் சகோ.
இஸ்லாமியர் அல்லாதோருக்கு இஸ்லாத்தை நல்ல முறையில் விளங்கவைக்கும் நல்ல கட்டுரை....
புதிய வரவுகள்:
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
Why you guys didnt answer to "........com". Comeon muslims go and read ......blog.com site. on
அனானி!
//antha bracket allam remove panni parunga war mean anna oru chinna koottam pakathu oorla erukura ampalangala pottu thallidu pomapala kolanthangala .............. Panni adima akkurathu athana unga dictinaoryla meaning//
அடைப்புக்குறிக்குள் போடுவது எங்களின் சொந்த விருப்பத்தில் அல்ல. அந்த வசனத்தின் முந்தய வசனத்தின் தொடர்ச்சியாக படிப்பவர்களுக்கு குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே! எந்த மொழியிலும் எந்த சொற்றொடரும் முழு பக்கத்தையும் படித்தால்தான் உண்மையான விளக்கத்தை பெற முடியும். அப்படி முழு பக்கங்களையும் படிக்காதவர்கள் விளங்கிக் கொள்வதற்காகவே சில வார்த்தைகள் அடைப்புக் குறிக்குள் போடப்படுகிறது.
//Why you guys didnt answer to "........com". Comeon muslims go and read ......blog.com site. on//
முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு எழுதும் அந்த இந்துத்வ வாதி வைக்கும் விமரிசனங்கள் அனைத்திற்கும் தெளிவான விளக்கம் முன்பே கொடுத்தாகி விட்டது. எதில் உங்களுக்கு குழப்பம் என்பதை விபரமாக தந்தால் பதில் தருகிறேன்.
சலாம் திருவாளப்புத்தூர் முஸ்லிம்!
//இஸ்லாமியர் அல்லாதோருக்கு இஸ்லாத்தை நல்ல முறையில் விளங்கவைக்கும் நல்ல கட்டுரை....
புதிய வரவுகள்:
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
உண்மையான அற்புதம் காலத்தைக் கடந்து மனதைத் தாண்டி நிலவுதல் மட்டுமேதான். அத்தகைய நிலை பெற்றவர்கள், பொதுவழக்கில் ‘அற்புதங்கள்’ என்று கருதப்படுகின்றவற்றை மதிப்பதில்லை.
அவர்களைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான சின்னச் சின்ன விஷயங்களிலேயே அற்புதம் பொதிந்துள்ளது. சாதாரண வாழ்வினைப் புத்துணர்வுடன் சந்திக்க கூடிய நுட்ப உணர்வோ உக்கிரமோ அற்றவர்கள்தான், அற்புதங்களைக் கௌரவிப்பார்கள்.
சத்தியசாயி பாபா என்பவர் அற்புதங்களின் மூலம் மட்டுமே பிரசித்திபெற்றவர். இவரைப் பத்திரிகை ஆசிரியர்கள், விஞ்ஞானப் பேராசிரியர்கள், இலங்கையின் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.
இவர்களின் விமர்சனத்தின்படி சத்திய சாயிபாபா வெறும் கண்கட்டு வித்தைக்காரர். அற்புதங்கள் என்று எதுவுமே கிடையாது என்ற அளவுக்குப் போனவர்கள் கோவூரும் அவரைப் போலச் சிந்திப்போரும்.
இஸ்ரேலின் யூரிகெல்லர், தம்மைத் தெய்வீகச் சக்தி பெற்ற அற்புதமனிதராக விளம்பரம் செய்தவர். நூலில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு சாவியை, உற்றுப் பார்ப்பதன் மூலம் மட்டுமே வளைப்பது அவரது அற்புதம். இது வெறும் கண்கட்டு வித்தை என்று நிரூபித்தவர் உலகத்தின் மிகப் பெரிய மாஜிக் நிபுணரான பிரதீப் சந்திர சர்க்கார். இவர் ஒரு வங்காளி.
டெலிவிஷன் காமிராக்களுக்கும் விஞ்ஞானப் பிரமுகர்களுக்கும் முன்னிலையில் யூரிகெல்லர் சாவியை ‘உற்றுப் பார்த்து’ ஒரு புறம் வளைத்தபோது அதே சாவியை அதேபோல் ‘உற்றுப் பார்த்து’ எதிர்ப்புறமாக வளைத்தார் பி.சி.சர்க்கார்.
அவரது தீர்ப்பு; ‘தெய்வீக சக்தி மூலமாக இதைத்தாம் செய்ததாக கூறுகிறார் யூரிகெல்லர். நான் இதையே வெறும் மாஜிக் மூலம் செய்துள்ளேன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு விஷயமறிந்த வட்டாரங்கள், யூரிகெல்லரைப் பற்றிப் பேசுவதே இல்லை.
பி.சி.சர்க்காரின் மூலம்தான், சத்திய சாயிபாபாவின் அற்புதங்களுக்கு கூட அதிர்ச்சித் தாக்குதல் கிடைத்தது. இந்நிகழ்ச்சியை சர்க்கார் விவரித்துள்ளார். ‘சாயிபாபாவும் நானும் ஒன்றாகவே மாஜிக் படித்தவர்கள். நான் அவரிடம் இன்டர்வியூ கேட்டபோது மறுத்துவிட்டார். ஆகவே நான் வேறுபெயரில் மீண்டும் கேட்டு அவரைச் சந்திக்க ரூமுக்குள் காத்திருந்தேன்.
அங்கே மேஜையில் நிறைய ஸ்வீட் வகைகள் இருந்தன. உள்ளே வந்த சாயிபாபா, வெற்று வெளியிலிருந்து எடுப்பது போல ஒரு ஸ்வீட் வரவழைத்து, என்னிடம் கொடுத்தார். ‘நான் எனக்கு அந்த ஸ்வீட் பிடிக்காது. இதுதான் பிடிக்கும்’ என்று வேறு ஒரு வகை ஸ்வீட்டை வரவழைத்துக் காட்டினேன். அவரும் நானும் செய்தது ஒரே மாஜிக்கைத்தான். இருவருமே அதற்காக அதே ரூமிலிருந்த ஸ்வீட்டுகளைத்தான் உபயோகித்தோம்.
உடனே என்னை அடையாளம் கண்டுகொண்டு உணர்ந்த சாயிபாபா ‘ஓ’ என்று கத்தினார். மறுவிநாடி, ரூமுக்குள் குண்டர்கள் புகுந்து என்னை வளைத்து, ‘இங்கிருந்து உயிரோடு வெளியே தப்பிப் போக முடியாது’ என்றனர். ‘என்னால் முடியும்’ என்று பதில் கூறிய நான் அதைச் செய்து காட்டினேன்.
யூரிகெல்லரும் சாயிபாபாவும் மாஜிக்காரர்கள் என்று கூறுகிற பி.சி.சர்க்கார் கருணையின் சிகரத்தில் நிலவியபடி உண்மையான அற்புதங்களை செய்வோரை தாம் சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார். அத்தகையவர்களைத் தேடிப் போவது அவரது ஆர்வங்களுள் ஒன்று.
- இந்த கட்டுரை எழுதியவர் மறைந்த கவிஞர் 'பிரமிள்'. 1987ல் எழுதியது.
நூலின் பெயர்; பாதையில்லாப் பயணம்-பிரமிள். வம்சி பதிப்பகம்
நண்பர் சு.பி.
அதிகநாடகள் உங்களுக்கு பின்னூட்டம் போடவில்லை என்று ஒரே வருத்தம்.
அண்ணன் பி.ஜே. விளக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
ஜிஸ்யா வரி பற்றி அறிஞரல்லாத இந்த பாமரனின் பார்வை என்னவென்றால்...
@ஒரு அரசாங்கம் ஒரு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்றால் வரி விதித்துதான் செய்ய வேண்டும். அது எல்லோருக்கும் பொது.
@இந்த அரசாங்கத்தின் வரியை தவிர்த்து இஸ்லாமியர்கள் தங்களின் மத நம்பிக்கைபடி ஜகாத்தை அளிக்கின்றார்கள்.இந்த ஜகாத் வரியை அரசாங்கம்(இஸ்லாமிய) மட்டும்தான் வசூலித்து செலவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாராம் இருந்தால் தாருங்கள்.
@ஜகாத் மத சம்பந்தபட்ட ஒரு வரி.
(பெருமைக்குரிய)காபிர்கள் அரசாங்கத்தின் பொதுவான வரியையும் தந்து மாற்று மதத்தின் ஜிஸ்யா வரியையும் செலுத்த வேண்டும் என்பது எப்படி நியாயமாகும்.
@ஜகாத் ஜிஸ்யா வரி மட்டும்தான் விதிக்க வேண்டும் மற்ற வரிகள் கூடாது என்பதற்கு ஆதாராங்கள் இருக்கின்றனவா? அந்த வரிகளை மட்டும் வைத்து இன்றைய தினத்தில் ஒரு தேசத்தை ஆட்சி செய்ய முடியுமா? சவுதியில் அப்படியா ஆட்சி செய்கிறார்கள். ஜகாத்தை வைத்து காபிர்களை மதமாற்றம் செய்ய மட்டுமே அனுமதி உண்டு என நினைக்கிறேன் அவர்களுக்கு நன்மை செய்ய ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை என நினைக்கிறேன்.
@ ஜகாத் ஜிஸ்யாவைவிட பல மடங்கு அதிகம் என்கிறீர்கள். அதனால் நாம் சிறிதளவு வரி செலுத்திவிட்டு அதிகளவு அரசாங்கத்தின் பலன்களை அனுபவிக்கிறோம் என்று தாழ்வு மனப்பான்மை வந்து விடாதா? மூமின்கள் காபிர்களை பாத்து பிச்சைகாரர்கள் என்று ஏச மாட்டார்களா சண்டை போட மாட்டார்களா?
@ஜிஸ்யாவை ஒரு டினார் என்று 1400 வருடத்திற்கு முன் உள்ள மதிப்பை கூறிவிட்டு, ஜகாத்திற்கு மட்டும் இப்போதுள்ள மதிப்பை குறிப்பிடலாமா?
@ஜகாத் என்ற மத காணிக்கை தானே? எப்படி அதை ஜிஸ்யாவோட ஒப்பிடலாம்? மாற்று மதத்தினரும் எங்கள் மதத்தில் இது கடமை என்று ஒரு காணிக்கை செலுத்தினால், ஜிஸ்யா double taxation ஆகிவிடாது?
காபிர்கள் மீது இஸ்லாத்தின் திணிப்பு ஆகாதா?
@இந்திய அரசாங்கம் விதிக்கும் வரிகளை இஸ்லாமியர்கள் செலுத்த வேண்டுமா வேண்டாமா.
=======
2:191 வசனத்தை படித்தபின் தொப்பி தாடியுடன் ஒருத்தர் வந்தால் பின்னாங்கால் பிடரிபட ஓடி ஒளிந்த phobiaவை இந்த பதிவின் மூலம் தெளித்தமைக்கு நன்றி.
ஒளரங்கசீப் ரொம்ப நல்லவர் என்ற விளக்களித்தமைக்கு நன்றி.
==========
அந்த அனானி பின்னூட்டத்தில் தளத்தின் பெயரை நீங்கள் வெட்டினீர்களா அல்லது அன்னானியே அரைகுறையாக பின்னூட்டம் போட்டாரா?
நண்பர் சு.பி.
அதிகநாடகள் உங்களுக்கு பின்னூட்டம் போடவில்லை என்று ஒரே வருத்தம்.
அண்ணன் பி.ஜே. விளக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
ஜிஸ்யா வரி பற்றி அறிஞரல்லாத இந்த பாமரனின் பார்வை என்னவென்றால்...
@ஒரு அரசாங்கம் ஒரு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்றால் வரி விதித்துதான் செய்ய வேண்டும். அது எல்லோருக்கும் பொது.
@இந்த அரசாங்கத்தின் வரியை தவிர்த்து இஸ்லாமியர்கள் தங்களின் மத நம்பிக்கைபடி ஜகாத்தை அளிக்கின்றார்கள்.இந்த ஜகாத் வரியை அரசாங்கம்(இஸ்லாமிய) மட்டும்தான் வசூலித்து செலவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாராம் இருந்தால் தாருங்கள்.
@ஜகாத் மத சம்பந்தபட்ட ஒரு வரி.
(பெருமைக்குரிய)காபிர்கள் அரசாங்கத்தின் பொதுவான வரியையும் தந்து மாற்று மதத்தின் ஜிஸ்யா வரியையும் செலுத்த வேண்டும் என்பது எப்படி நியாயமாகும்.
@ஜகாத் ஜிஸ்யா வரி மட்டும்தான் விதிக்க வேண்டும் மற்ற வரிகள் கூடாது என்பதற்கு ஆதாராங்கள் இருக்கின்றனவா? அந்த வரிகளை மட்டும் வைத்து இன்றைய தினத்தில் ஒரு தேசத்தை ஆட்சி செய்ய முடியுமா? சவுதியில் அப்படியா ஆட்சி செய்கிறார்கள். ஜகாத்தை வைத்து காபிர்களை மதமாற்றம் செய்ய மட்டுமே அனுமதி உண்டு என நினைக்கிறேன் அவர்களுக்கு நன்மை செய்ய ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை என நினைக்கிறேன்.
@ ஜகாத் ஜிஸ்யாவைவிட பல மடங்கு அதிகம் என்கிறீர்கள். அதனால் நாம் சிறிதளவு வரி செலுத்திவிட்டு அதிகளவு அரசாங்கத்தின் பலன்களை அனுபவிக்கிறோம் என்று தாழ்வு மனப்பான்மை வந்து விடாதா? மூமின்கள் காபிர்களை பாத்து பிச்சைகாரர்கள் என்று ஏச மாட்டார்களா சண்டை போட மாட்டார்களா?
@ஜிஸ்யாவை ஒரு டினார் என்று 1400 வருடத்திற்கு முன் உள்ள மதிப்பை கூறிவிட்டு, ஜகாத்திற்கு மட்டும் இப்போதுள்ள மதிப்பை குறிப்பிடலாமா?
@ஜகாத் என்ற மத காணிக்கை தானே? எப்படி அதை ஜிஸ்யாவோட ஒப்பிடலாம்? மாற்று மதத்தினரும் எங்கள் மதத்தில் இது கடமை என்று ஒரு காணிக்கை செலுத்தினால், ஜிஸ்யா double taxation ஆகிவிடாது?
காபிர்கள் மீது இஸ்லாத்தின் திணிப்பு ஆகாதா?
@இந்திய அரசாங்கம் விதிக்கும் வரிகளை இஸ்லாமியர்கள் செலுத்த வேண்டுமா வேண்டாமா.
=======
2:191 வசனத்தை படித்தபின் தொப்பி தாடியுடன் ஒருத்தர் வந்தால் பின்னாங்கால் பிடரிபட ஓடி ஒளிந்த phobiaவை இந்த பதிவின் மூலம் தெளித்தமைக்கு நன்றி.
ஒளரங்கசீப் ரொம்ப நல்லவர் என்ற விளக்களித்தமைக்கு நன்றி.
==========
அந்த அனானி பின்னூட்டத்தில் தளத்தின் பெயரை நீங்கள் வெட்டினீர்களா அல்லது அன்னானியே அரைகுறையாக பின்னூட்டம் போட்டாரா?
சகோ நரேன்!
ஜகாத் என்ற வரியானது அரசு வசூலித்து அதை தனது செலவினங்களுக்கும் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது. தற்போதும் எனது கம்பெனி வருடா வருடம் அரசுக்கு ஜகாத் பணம் என்று ஒரு பெரும் தொகையை அரசுக்கு அளிப்பதை அறிவேன். இதன் உரிமையாளர் முஸ்லிம் என்பதால் இதை ஒரு மத கடமையாக நினைத்து அரசுக்கு அளித்து வருகிறார். அவருக்கு உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கணக்கிட்டு அதில் 2.5 சதவீதம் ஒவ்வொரு வருடமும் கொடுத்து வருகிறார்.
இந்த கட்டளையை ஒரு ஹிந்து செல்வந்தரிடம் அரசு சட்டத்தை பிரயோகிக்க முடியாதல்லவா! எனவே அரசு செலவினங்களுக்கு ஒரு ஹிந்துவும் தனது கடமையை செய்ய வேண்டும் என்ற நோக்கில் போடப்படுவதுதான் ஜிஸ்யா வரி. ஜகாத் தொகையை விட சதவீதத்தில் இது குறைவாகவே வரும்.
இந்த ஜகாத் பணத்தை அரசும் வசூலிக்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் அவரவர்க்கு விருப்பப்பட்டவர்களுக்கு இந்த தொகையையும் கொடுக்கலாம். இரண்டக்கும் குர்ஆனில் ஆதாரம் உண்டு.
ஜகாத் பெற தகுதியுடையோர்:
'யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டோருக்கும், இறைவனின் பாதையிலும், நாடோடிகளுக்கும், இந்த தர்மங்கள் உரியனவாகும். இது இறைவனின் கடமை. இறைவன் அறிந்தவன். ஞானமிக்கவன்.'
-குர்ஆன் 9:60
இதை எங்களை போன்ற காபிர்களிடம் சொல்லிவிட்டீர்கள். முஸ்லிம்களிடம் யார் சொல்லுவது?
http://www.youtube.com/watch?v=qD-Nny3EP98&feature=player_embedded#!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
"உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.
அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது"
இப்படி அருமையாக விளக்கி பதிவு இட்டிருந்தும் இதை சகோ யுவராஜ் முழுமையாக படித்தாரா? அல்லது அவரது சிந்தனை போல் அரைகுறையாக படித்து பின்னூட்டம் இட்டாரா? என்பது தெரியவில்லை.ஆனால் நீங்கள் குறிப்பிட்ட சில........... இவருக்கும் பொருந்தும் என்பது மட்டும் தெரிகிறது
kalam
சகோ மருதன்!
//இதை எங்களை போன்ற காபிர்களிடம் சொல்லிவிட்டீர்கள். முஸ்லிம்களிடம் யார் சொல்லுவது?//
கடந்த 25 வருடங்களாக தமிழக முஸ்லிம்களிடம் சொல்லி வருகிறோம். ஆரம்ப காலங்களில் இதை எல்லாம் சொன்னதற்காக பள்ளிக்கு தொழுக வர வேண்டாம் என்று என்னையே சில பெரியவர்கள் தடுத்தனர். ஆனால் இன்று அந்த பெரியவர்கள் அதே ஊர் மக்களால் ஊழல் குற்றச்சாட்டில் பள்ளியிலிருந்து வெளியாக்கிய காட்சியை பார்க்கிறேன். இன்று அதே பள்ளியில் என்னை இன் முகத்தோடு வரவேற்கும் காட்சியையும் பார்க்கிறேன்.
தற்கொலை குண்டதாரியாக மாறுவது இஸ்லாத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் மாற்றமான செயல். குர்ஆன் இவ்வாறு போதிக்கவில்லை. இன்று பல இளைஞர்கள் உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் முன்பு போல் முறுகல் நிலை இல்லாததை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். இடையறாத பிரசாரத்தினால் வந்தது இது.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் அங்கு நடக்கும் பல செயல்களுக்கு அமெரிக்காவின் சிஐஏ மற்றும் மொஸாத் போன்ற அமைப்புகள் திட்டம் போட்டு இளைஞர்களுக்கு பணத்தாசை காட்டி வழி கெடுக்கின்றனர். படிப்பறிவில்லாதது ஒரு குறை. அடுத்து உண்மையான இஸ்லாத்தை அவர்களுக்கு எடுத்துக் கூற சிறந்த அறிஞர்கள் இல்லை. இவை எல்லாம் காரணம்.
குர்ஆனை உண்மையாக விளங்கிய ஒருவன் ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டான்.
திரு புனை பெயரில்!
//இஸ்லாம் அரேபிரயர்களது.//
தவறான வாதம். குர்ஆன் கூறுவதை கேளுங்கள்.
'மனிதர்களே! இத்தூதரான முஹம்மத் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்.'
-குர்ஆன் 4:170
இங்கு 'முஸ்லிம்களே' என்று இறைவன் விளிக்கவில்லை. 'மனிதர்களே!' என்று உலக மக்கள் அனைவரையும் விளிக்கிறான். இது தமிழ் நாட்டிலுள்ள சுப்பனுக்கும் குப்பனுக்கும் கூட பொருந்தும்.
மேட்டூர் : இரு மகன்களை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, தலைமறைவான தந்தையைபோலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா குட்டப்பட்டியை அடுத்த மலையப்பட்டியை சேர்ந்தவர் கோபி(30). இவரது மனைவி ரேகா(28). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நிர்மல்(8), நிரஞ்சன்(8) என்ற இரட்டை மகன்கள் உள்ளனர்.
இவர்கள் மலையப்பட்டி அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். கோபி கூலி வேலை செய்து வருகிறார். சரியாக வேலைக்கு போவதில்லை. எந்நேரமும் குடி பழக்கம் உடையவர். இதனால் வீட்டுக்கு கூட சரியாக பணம் தருவதில்லை.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரேகா தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் மற்றும் தனது அம்மா-அப்பாவுடன் வசித்து வந்தார் கோபி. இந்நிலையில் இன்று காலை தனது இரு மகன்களையும் தூக்கில் இட்டு கொன்றுவிட்டு, கோபி தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் நிர்மல் மற்றும் நிரஞ்சன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளி கோபியையும் தேடி வருகின்றனர்.
-Dinamalar
திரு தங்கமணி!
//காவ்யாவும் சுவனப்பிரியனும் மனிதர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. உள்ளேயிருந்து ஏதோ மிருகம் ஆட்டிவைக்கிறது என்று நினைக்கிறேன்.//
மனிதர்களுக்கு மேல் என்று சொல்ல வருகிறீர்களோ! அப்படி எல்லாம் இல்லை. நானும் காவ்யாவும் சாதாரண மனிதர்கள்தான்.
'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'
-குர்ஆன் 2:256
ஒருவரை இஸ்லாத்தில் வலுக்கட்டாயமாக இணைப்பதை குர்ஆன் தடை செய்கிறது. நீங்கள் குறிப்பிடும் ரிங்கிள் குமாரி கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாத்துக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். மேலும் அந்த பெண்ணை திருமணம் முடித்துள்ளார்கள். பெண்ணின் அனுமதி இல்லாமல் திருமணம் என்பது இஸ்லாத்தில் செல்லாது.
எனவே இங்கு இஸ்லாத்தை குறை கூற இயலாது. இஸ்லாத்தை தவறாக விளங்கிய அந்த முஸ்லிம்களைத்தான் குறை காண வேண்டும். இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சகோதரி ரிங்கிள் குமாரிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மத்திய அரசு தலையிட்டு அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
அது போர்க்களத்தில் எதிரியை சந்தின்க்கும் பொது சொல்லப்பட்ட விடயம் ஒரு முறையாவது செவிவழி செய்தி கேட்காமல் குரானை படிக்கவும்.
Post a Comment