Followers

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, September 11, 2017

நீரை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்...!!!

சவுதி அரபியாவில் வெப்பம் கடுமையாக இருப்பதால் சாலைகளில் செல்பவர்களுக்கு குளிர்ந்த நீரை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்...!!!

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் உண்மையான இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்துகொண்டு உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுதும் காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி (6011)




Saturday, November 14, 2015

சமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்?



ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கிடைக்காவிட்டால் சென்னையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவின் காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். பெரியாறு, பவானி, சிறுவாணி இந்த ஆறுகளின் குரல்வளை எல்லாம் கேரளாவின் கையில் இருக்கிறது. கேரளா அந்தக் குரல்வளையைக் கொஞ்சம் நசுக்கினால் போதும், நமது கொங்கு மண்டலமும் காலி; தென் மாவட்டங்களும் காலி. இப்படி ஒரு மாநிலத்தின் பெரும் பகுதியே தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை. குழாயடிச் சண்டைப் போடாத குறையாகத்தான் அங்கெல்லாம் தண்ணீரைப் பெற்று வருகிறோம். இதில் நமது கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் இருக்கிறதே... சினிமா நடிகர்களே தோற்றுவிடுவார்கள். சரி, இப்படி தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்கும் அண்டை மாநிலங்களின் மழை அளவைவிட நம் தமிழகத்தின் மழை அளவு அதிகம் என்கிற உண்மை தெரியுமா?

ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ. இப்போது தமிழகத்தின் ஆண்டு சராசரியைப் பார்ப்போம். ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீ. ஆந்திர மாநிலத்தைவிட தமிழகத்தில் 17 மி.மீ மழையளவு அதிகம். கர்நாடகத்தைவிட 193 மி.மீ அதிகம்.

அதேசமயம் கர்நாடகம் கடந்த 1991-ம் ஆண்டில் 11.20 லட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப் பரப்பை இன்று 21.71 லட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகமோ 1971-ம் ஆண்டில் 28 லட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப் பரப்பை 2014-ல் 21 லட்சம் ஏக்கராக அழித்துக்கொண்டது. அதிகம் மழை பெறும் நமது மாநிலம் 7 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை இழந்துள்ளது. குறைந்த மழை பெறும் கர்நாடகம் 10.51 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தைப் போல 2 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய நீர் கட்டமைப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், அவை எல்லாம் பிற்காலத்தில் விழித்துக்கொண்டன. சிறப்பாக நீர் மேலாண்மை செய்கின்றன. (ஆந்திராவும் கர்நாடகாவும் செய்துவரும் சிறப்பான நீர் மேலாண்மை மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)

இன்னொரு உதாரணம்: கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப் பெரிய நதிகள் கொண்ட ஆந்திராவில் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறார்கள். பெரியாறு உட்பட 44 ஆறுகள் கரை புரண்டோடும் கேரளாவிலும் அப்படியே. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே ஓடும் பாலாறு, தென்பெண்ணை, வைகை இவை எல்லாம் வானம் பார்த்த சிறிய ஆறுகள்தான். ஆனால், இங்கெல்லாம் அரசாங்கமே ராட்சத இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளுவதை என்னவென்று சொல்ல? நம் தாய் வயிற்றைக் குத்திக் கிழித்து ரத்தம் குடிக்கிறோம் நாம். கர்நாடகாவும் ஆந்திரமும் முன்னோக்கிச் செல்கின்றன. நாம் மட்டும் அதள பாதாளத்துக்குச் செல்கிறோம். இந்தக் கொடுமையை எங்கேச் சொல்லி முட்டிக்கொள்வது?

எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இயற்கையை மதிக்கவில்லை. நம்மைத் தவிர வேறு எதையுமே ஓர் உயிராக நாம் பாவிப்பதே இல்லை. மண்ணின் மீது பேராசை; வனத்தின் மீது பேராசை; வன உயிர்களின் மீது பேராசை; மலையின் மீது பேராசை; நீர் நிலைகளின் மீது பேராசை… எல்லாவற்றையும் அசுர வெறிக் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். இது இயற்கையின் மீதான அழிவு மட்டுமல்ல; நம் தலையின் மீது நாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இதன் பெயர் சமூகத் தற்கொலை.

தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர, 3,000 கோயில் குளங்கள், 5,000 ஊருணிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டம்! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம். ஏன், காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் 249.60 டி.எம்.சியை விடவும் அதிகம். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் அருமை!

ஏரிகளை மட்டுமே ஒழுங்காகப் பராமரித்திருந்தாலே நாம் விவசாயத்துக்காக ஆறுகளையும் அணைகளையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

சுழலியலாளர்கள் ஏரியைப் ‘பூமியின் கண்’ என்று குறிப்பிடுகிறார்கள். நாம் அந்தக் கண்ணில் கழிவுகளைக் கொட்டி குருடாக்கி வருகிறோம். மொத்தம் உள்ள 39,202 ஏரிகளில் இன்று சுமார் 5,000 முதல் 6,000 ஏரிகளை காணவில்லை. கோவையிலும் மதுரையிலும் கடல் போல் விரிந்த ஏரிகள் எல்லாம் சாக்கடையாகத் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக துர்நாற்றம் அடிக்கின்றன. மறைந்த கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதி, எஸ்.எஸ்.ஆர் நடித்த ‘ஏரிக்கரை மீது போறவளே பொன்மயிலே...’ பாடல் காட்சி சேலம் பனமரத்துப் பட்டி ஏரியில் படமாக்கப்பட்டபோது, அந்த ஏரி 2,700 ஏக்கர் பரப்பில் விரிந்து கடல்போலத் தண்ணீர் தளும்பியதாம். இப்போது ஒரு வாரமாக சேலத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், பனமரத்துப்பட்டி ஏரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை. ஏரி முழுவதும் கருவேல முட்செடிகள் நிறைந்து நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51- ‘ஏ’ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாக 10 ஷரத்துக்களை வகுத்துள்ளது. அதில் 7-வது ஷரத்து என்ன சொல்கிறது தெரியுமா?

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
15-11-2015

Monday, September 14, 2015

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:

Monday, August 10, 2015

சவுதி ஏர்லைன்ஸில் கிடைத்த மன மகிழ்ச்சிகள்!





நான்கு மாத தாய் தமிழக விடுப்புக்குப் பின் சவுதி வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்தேன். இளைய மகனிடம் விமான நிலையத்தில் விடைபெற்றுக் கொண்டு சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் சென்று அமர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் ஒரு சகோதரர் வந்து அமர்ந்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். என்னைப் பற்றி நான் சொல்லும் போது இணையத்தில் 'சுவனப்பிரியன்' என்ற புனைப் பெயரிலும் அவ்வப்போது எழுதி வருகிறேன் என்று சொன்னவுடன் 'அடடே.... நீங்கள் தான் சுவனப்பிரியனா? உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று பல நாட்களாக முயற்சி செய்து வருகிறேன். இறைவன் இன்று உங்களை எனக்கு பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டான்' என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தார். நாகூரை சொந்த ஊராகக் கொண்ட சகோதரர் இத்ரீஸ் அவர்கள் என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். பல முறை இணையத்தின் மூலம் பேசிக் கொண்டாலும் இன்று தான் முதன் முதலாக அவரை நேரில் சந்தித்தேன்.

தனது ஊரான நாகூரில் தற்போது ஏகத்துவ சிந்தனை எந்த அளவு வந்துள்ளது என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார். தனது மகனின் எதிர்கால படிப்புக்காக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க எந்த அளவு சிரமப்பட்டார் என்பதையும் ஆர்வமுடன் சொல்லிக் கொண்டு வந்தார். ஒட்டு மொத்த தமிழக இஸ்லாமிய சமூகத்தில் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை சகோதரர் இத்ரீஸ் அவர்களின் பேச்சு எனக்கு உணர்த்தியது.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே பகல் நேரத் தொழுகையான லுஹரின் நேரம் வரவே இருவரும் தொழுகைக்கு தயாரானோம். பிரயாணத்தில் பகல் நேர மற்றும் மாலை நேர தொழுகைகளை சேர்த்து தொழுது கொள்ள அனுமதி இருப்பதால் இரண்டு தொழுகைகளையும் சேர்த்து தொழுது கொண்டோம்.

ஏர் லங்கா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் அருகில் அமர்ந்திருப்பவர்களிடமிருந்து மதுவின் நெடி குடலை பிரட்டும். பலமுறை இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டு விமானத்தில் பயணிக்கவே ஆசை அதிகம். ஆனால் மதுவின் பிரச்னையால் நமது நாட்டு விமானங்களை கூடிய வரை தவிர்த்து விடுவேன்.

சவுதி ஏர்லைன்ஸில் ஒரு சிறப்பம்சம் பிராயண பிரார்த்தனையோடு 'அல்லாஹூ அக்பர்... இறைவன் பெரியவன்' என்ற முழக்கத்தோடு விமானத்தை எடுப்பர். அடுத்து நாம் தொழுது கொள்வதற்கு என்றே பிரத்யேகமாக இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். அங்கு விமானத்தின் உள் சகோதரர் ஒருவர் தொழுவதைத்தான் பார்க்கிறோம். இதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ள சவுதி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தை பாராட்டுவோம். சவுதி ஏர் லைன்ஸை பின் பற்றி மற்ற விமான சேவை நிறுவனங்களும் தங்கள் விமானத்திலும் மதுவை முற்றாக தவிர்ப்பார்களாக! தொழுவதற்காக பிரத்யேக இடங்களையும் ஏற்படுத்தித் தருவார்களாக!

Monday, July 20, 2015

இறந்த உடலை அடக்கம் செய்ய மறுத்த பள்ளி நிர்வாகம்!





பண்டாரவாடை TNTJ கிளை துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவி நர்கீஸ் பானு அவர்கள் 19/07/15 காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள். பல காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்கள். இறைவனின் அழைப்பு வரவே அவனிடத்திலேயே சேர்ந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

வழக்கம் போல் இறந்த உடலை அடக்கம் செய்ய பண்டாரவாடை பெரிய பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதே பண்டாரவாடை மர்கஸில் சில ஆண்டுகளுக்கு முன்பு 'முதியோர் இல்லம்' நடத்தி வந்தோம். அதில் தங்கியிருந்த மூதாட்டி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அதற்கும் இந்த பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. வெளியூர்காரர்களுக்கு அனுமதி தர மாட்டார்களாம். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட அந்த மூதாட்டியை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள சுன்னத் ஜமாத்பள்ளிக்கு சென்று அடக்கி விட்டு வந்தோம். அந்த ஊர் பள்ளி நிர்வாகி 'அடக்க மறுத்தார்களா? நான் அந்த பாவத்தை சுமக்க மாட்டேன். உடன் அடக்கம் செய்யுங்கள்' என்று அனுமதி கொடுத்தார். தமிழகத்தில் எந்த கிராமங்களிலும் இது போன்று இறந்த உடலை அடக்கம் செய்ய தவ்ஹீத் ஜமாத்தை காரணம் காட்டி மறுக்கும் ஊர்கள் கிடையாது. ஆனால் விசேஷமாக ராஜகிரி, பண்டாரவாடை பள்ளி நிர்வாகிகள் அனுமதி மறுப்பதையே வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள். இறைவன் இவர்களுக்கு நேர் வழி காட்டுவானாக!

இதற்குள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வெளியூர்களில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர். விஷயத்தை கேள்விப்பட்டவுடன் வெளியூர் சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குழும ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரிகள், சப் கலெக்டர் போன்றோர் அடக்க இடம் கொடுங்கள் என்று எவ்வளவோ அமைதியாக கேட்டுப் பார்த்தனர். எதற்கும் நிர்வாகம் மசியவில்லை. சுன்னத் ஜமாத் முறைப்படித்தான் அடக்கம் செய்வோம். எங்கள் இமாம்தான் தொழ வைப்பார். சுன்னத் ஜமாத் முறைப்படி அடக்கம் செய்கிறேன் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர். சரியான வெயில் வேறு. இறந்த உடல் வைக்கப்பட்டிருக்கும் ஷாகுல் வீட்டருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது தஞ்சையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் என்னிடம் 'பாய்.... 6 நோன்பு வைத்திருக்கிறோம். நோன்பு கஞ்சியும், சாப்பாடும் கொண்டு வந்துள்ளோம். நோன்பு திறக்க ஒரு இடம் தயார் செய்து கொடுக்க முடியுமா?' என்று கேட்டனர்.

நேரமோ மணி 6:30. உடன் நான் “எனது வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. நம் வீட்டிலேயே நோன்பு திறக்கலாம் வாருங்கள்” என்று அழைத்து சென்றேன். விஷயத்தை எனது தாயாரிடம் சொன்னேன். 'நோன்பு வைத்துக் கொண்டு போராட்டத்துக்கு வந்துள்ளார்களா' என்று ஆச்சரியப்பட்டுப் போய் வேக வேகமாக ஜூஸ் கரைக்க ஆரம்பித்தார். கேக் பணியார வகைகள், பேரித்தம் பழம், நோன்பு கஞ்சி, சூடாக்கப்பட்ட பிரியாணி என்று திருப்தியாக நோன்பை நோற்றனர். எனது தாயார் 'பார்த்தால் கல்லூரி மாணவர்கள் போல தெரிகிறது. இந்த வயதில் இவ்வளவு ஈடுபாடா?' என்று ஆச்சரியத்தோடு கேட்டார். மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அந்த தஞ்சை சகோதரர்களோடு பண்டாரவாடை பெரிய பள்ளியை நோக்கி சென்றோம்.

இரவு 10 மணி வரை நிலைமை சரியாகவில்லை. முடிவில் கலெக்டர் 'இவர்கள் ஒத்து வரவில்லை. உங்கள் பள்ளியின் பின் பக்கம் உடலை அடக்கம் செய்து கொள்ளுங்கள். அதற்கான ஆணையை நாளை எழுத்து பூர்வமாக தரச் சொல்கிறேன்' என்று சொன்னார். மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி நபி வழிப்படி தொழுகை தவ்ஹீத் பள்ளியின் வெளியில் வைத்து நடத்தப்பட்டு 5000 க்கும் அதிகமான கொள்கை சகோதரர்களின் பிரார்த்தனையோடு தொழுது முடித்தோம். பிறகு அங்குள்ள இளைஞர்களில் ஐந்து பேர் சென்று குழி வெட்ட ஆரம்பித்தனர். இதற்குள் வெளியுர் சகோதரர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், டீ, காபி என்று சகோதரர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். உடலை அடக்கம் பண்ணி விட்டு நான் வீட்டுக்கு வரும் போது இரவு இரண்டு மணி. பசியும் இல்லை. சாப்பிடாமலேயே படுத்து விட்டேன்.

தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தவ்ஹீத் பள்ளியின் கொல்லையிலேயே அடக்கம் செய்ததை நிர்வாகம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அந்த வீட்டை அன்பளிப்பாக கொடுத்த ஒரு பாகஸ்தரை அணுகி பிரச்னை பண்ணுகிறார்கள். "அங்கு அடக்கிய உடலை தோண்டி எடுப்போம். எடுத்து வேறு இடத்தில் அடக்கம் பண்ணுவோம்' என்கிறார்களாம்.

மக்காவிலிருந்து தொல்லை தாங்காமல் தனது தோழர்களோடு மதினா சென்றனர் நபிகள் நாயகம். ஆனால் எதிரிகள் அங்கும் படை திரட்டிக் கொண்டு பெருமானாரை கொல்ல வந்தனர். ஏனோ இங்கு எனக்கு அந்த சம்பவம் ஞாபகம் வருகிறது.

Sunday, July 12, 2015

'சலீம்' திரைப்படம் மூலம் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்!





முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் எண்ணத்தை சலீம் திரைப்படம் மாற்றியது! இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் !

திருச்சியை சேர்ந்த நண்பர் வீடியோ சிராஜின் மகன் ஜாவித் தஃவாவில் ஆர்வமுள்ள சகோதரர்! அவர் நேற்று போன் செய்து எனது நண்பருக்கு தஃவா செய்து வருகிறேன் ! நீங்கள் கொஞ்சம் அவரோடு பேசினால் நன்றாக இருக்கும் என்றார் !

சரி இப்தாருக்கு அழைத்து வாருங்கள் என்றேன் ! வரமுடியவில்லை கொஞ்சம் லேட்டாகும் என்றார்! பரவாயில்லை இரவுத் தொழுகைக்கு முன் அழைத்து வாருங்கள் என்றேன் ! சுமார் 8.30 மணியளவில் வந்தார்கள்!

வந்தவரிடம் ஊர்.பெயர் . தொழில் எல்லாம் விசாரித்து விட்டு அவருக்கு ஏகத்துவம் , தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் ஐந்து கடமைகளில் கட்டமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்து விட்டு, இணை வைப்பைக் குறித்து எச்சரித்து விட்டு இஸ்லாத்தை பின்பற்றினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினேன் !

விரிவாக விளக்கி விட்டுஇதுதான் இறைவனால் அருளப்பட்ட சரியான வழி என்பதை ஒப்பக் கொள்கிறீர்களா ? என்று கேட்டதும் ஆம் இதுதான் உண்மை என்றார் ! இதை ஏற்றுக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம் எந்த நஷ்டமும் எனும் போது என்ன தயக்கம் ?

மனிதன் மனிதனாக வாழ இதுதான் வழி எனில் இதுதான் நீங்கள் செல்லவிருக்கும் இலக்குக்கான இறுதி வாகனம்! இதைத் தவற விட்டால் உங்களின் இலக்கை அடைய முடியாது ! இந்த வாகனத்தில் என் தந்தை ஏறவில்லையே நான் எப்படி ஏறுவது ? என் தாத்தா இந்த வாகனத்தை பார்த்ததே இல்லையே ? இந்த வாகனத்தில் ஏறி பயணித்தால் என் ஊர் என்ன சொல்லும் ? என்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் என்ன சொல்லும் ? என்று பார்த்துக் கொண்டிருந்தால் வண்டி போய் விடுவது போல் வாழக்கை முடிந்து போய் விடும் ! நிச்சயமில்லாத இந்த உலகில் எதற்காக அதைத் தள்ளிப் போட வேண்டும்?

இல்லை ! நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன் என்று கலிமாவை மொழிந்து சுமார் பத்து மணியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ! அல்ஹம்து லில்லாஹ் !

பின்னர் இஸ்லாத்தின் பக்கம் முதல் ஈர்ப்பு எப்படி வந்தது ? என்று கேட்ட போது சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டிர்களே ? என்றார் !

இல்லை சொல்லுங்கள் என்றதும் சலீம் படம் பார்க்கும் வரைக்கும் பத்திரிகைகள், தொலைகாட்சிகள் சொல்வது போல் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றுதான் எண்ணி இருந்தேன் !

ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பின் என் கருத்தை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலும் ஏற்பட்டது ! அப்போது தான் நண்பர் ஜாவித் முலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன் ! இன்று தங்களால் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டேன் என்றார் ! அல்ஹம்து லில்லாஹ் !

இது அவனுடைய நேர்வழி அதை தான் நாடியோருக்கு வழங்குகிறான் ! இது இறைவனின் ஒளி ! அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றி விட்டான் ! இனி அது பிரகாசிக்கும் ! உங்களின் செயல்கள் இனி ஒளிமயமாகும் ! அந்த ஒளி உங்களை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஈர்க்கும் என்று கூறிய போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அல்ஹம்து லில்லாஹ் !

[குறிப்பு: சினிமா நம் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து அதை தஃவாவுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் கருத்துக்கு இச்சம்பவம் வலுச்சேர்க்கிறது!]

-செங்கிஸ் கான்

Friday, July 03, 2015

சவுதி அரசு தெரு பிச்சைக்காரர்களை கைது செய்து வருகிறது!



சவுதி அரேபியாவில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரிக்கிறதால் அவர்களை அரசு கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்து கண்டித்து அனுப்புகிறது. தெருக்களில், சிக்னல்களில் சிறுவர்களையும் சிறுமிகளையும் ஆப்ரிக்க நாட்டவர் உலாவ விட்டு நிறைய பணம் பண்ணுகிறார்கள். இது போன்று சில்லரையை மாற்றி வைத்துக் கொண்டு வரிசையாக 100 பேருக்கு போடும் பழக்கம் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. எனவேதான் சவுதியின் தலைமை முஃப்தி அப்துல் அஜீஸ் அல் ஷேக் இவ்வாறாக சிக்னலில் நிற்கும் பிச்சைக் காரர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று பொது மக்களுக்கு தடை விதித்துள்ளார்.

இது போன்று 100 பெருக்கு விநியோகிப்பதை விட 5 பேரையோ அல்லது ஒருவரையோ தேர்ந்தெடுத்து அவரை பிச்சைக்கார தொழிலிலிருந்து விடுவிக்க வேண்டும். எனது ஓனர் இவ்வாறு பணம் கேட்டு யாராவது வந்தால் 'என்னிடம் வேலை இருக்கிறது செய்கிறாயா?' என்று கேட்பார். சிலர் ஒத்துக் கொண்டு வேலை செய்வர். சிலர் விருப்பமில்லாமல் பணம் வாங்காமலும் சென்று விடுவர். இது ஒரு சிறந்த நடைமுறை.

தற்போது தமிழகத்தில் எங்கள் கிராமத்திலும் பிச்சைக்காரர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. ஜகாத், ஃபித்ரா என்ற நடைமுறையை முன்பு பெரும்பாலான இஸ்லாமியர்கள் விளங்காமல் இருந்தனர். தற்போது வருமானம் ஈட்டுவதிலிருந்து கணக்கு பண்ணி தரப்படும் பணம் யாரை சென்று அடைய வேண்டும் என்பதை அதிக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர். எனவே அவர்கள் வீடு தேடி சென்று கொடுத்து விடுகின்றனர்.

10000, 20000 ஆயிரம் என்று குறிப்பிட்ட ஒரு ஏழைக்கு கொடுத்து அவருக்கு ஒரு சிறு தொழிலை நாமே அமைத்துக் கொடுக்க வேண்டும். அவரை நமது கண்காணிப்பில் வைத்திருந்தால் பிச்சை எடுக்கும் தொழிலையும் நாட மாட்டார். ஒரு பிச்சைக்காரரை கௌரவமான உழைக்கும் மனிதனாக மாற்றிய பெருமையையும் நாம் பெறுவோம். 'பைத்துல் மால்' என்ற பொது திட்டத்தை அமுல்படுத்தி அனைவரின் ஜகாத்தையும் ஒருமுகப்படுத்தி பல ஏழைகளை பணக்காரர்கள் ஆக்குவோம். எங்கள் கிராமத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

எனவே இந்த ரமலானில் நமது பொருளாதாரம் ஒரு ஏழையையாவது தூக்கி விடக் கூடிய வகையில் அமைய வேண்டும். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதனைத்தான்.

Sunday, June 28, 2015

தஞ்சை மாவட்டம் ஆவூரிலும் ஏகத்துவத்தின் எழுச்சி........




தஞ்சை மாவட்டம் ஆவூருக்கு சில வேலைகள் காரணமாக இரண்டு வாரங்கள் முன்பு சென்றிருந்தேன். வேலைகளுக்கு நடுவே தொழுகைக்கான நேரம் வரவே பள்ளியை தேட ஆரம்பித்தேன். நான் சென்ற இடத்துக்கு அருகிலேயே 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' கண்காணிப்பில் இயங்கும் தவ்ஹீத் பள்ளியை பார்த்தேன். மாலை நேரத் தொழுகையை அங்கு நிறைவேற்றி விட்டு அங்கு வந்த இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தேன்.

தொழ வந்த அனைவருமே இளைஞர்கள். கல்லூரிகளில் படித்து வருபவர்கள். வயதானவர்கள் மிக சொற்பமே. இந்த சிறு வயதிலே ஆங்காங்கே தாடி அந்த இளைஞர்களின் முகத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. சினிமா கூத்தாடிகளுக்கு ஒரு காலத்தில் ரசிகர் மன்றங்கள் அமைத்து வாழ்வை சீரழித்துக் கொண்டிருந்த இளைஞர் கூட்டம் நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொண்டு பய பக்தியோடு ஏக இறைவனை வணங்கிக் கொண்டிருந்தது பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

இந்த பள்ளியின் அருகில் சமாதிகள் ஏதும் கிடையாது. நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு தொழுதார்களோ அந்த முறையில் தொழுகை நடத்தப்படும். தட்டு. தூயத்து, மாந்த்ரீகங்கள் இந்த பள்ளியில் பார்க்கப் படாது. பேய் ஓட்டுகிறேன் என்று இங்குள்ள ஆலிம் எந்த வீட்டுக்கும் வர மாட்டார். இறந்து போனவர்கள் வீட்டில் இனி விருந்துகள் எல்லாம் நடக்காது. அவ்வாறு நடத்தப்படும் விருந்துகளுக்கும் இங்குள்ள மதகுரு செல்ல மாட்டார்.

ஆவூர், கொவிந்த குடி, வலங்கைமான் போன்ற குக்கிராமங்களில் முன்பு இஸ்லாமியர்கள் இந்துக்களோடு ஒன்றர கலந்து வாழ்ந்ததால் அவர்களின் கலாசாரமும் முஸ்லிம்களிடமும் ஆங்காங்கே தென்படும். சமாதி வழிபாடு, தட்டு, தாயத்து, மூடப் பழக்கங்கள் என்று இந்துக்களுக்கு நாங்கள் சற்றும் குறைவில்லை என்று முன்பு வாழ்ந்து வந்தனர்.

கடந்த 25 ஆண்டுகால தொடர் பிரசாரத்தின் காரணமாக இன்று தவ்ஹீதின் எண்ணம் அந்த மக்களிடத்தில் துளிர் விடத் தொடங்கியுள்ளது. அதன் அச்சாரமாக ஊருக்கு மத்தியில் மிகப் பிரமாண்டமாக தவ்ஹீத் பள்ளியை சகோதரர்கள் கட்டி முடித்துள்ளார்கள். வெள்ளிக் கிழமைகளில் மூன்று தளங்களும் நிரம்பி வழிகின்றதாம். பெண்களுக்கென்றே ஒரு தளத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். நான் தொழ சென்ற நேரம் மூன்று வரிசைகளில் மக்கள் நின்று தங்களின் இறை கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். பள்ளியின் உள்ளே சலவைக் கற்களால் மிக கச்சிதமாக அழகுற கட்டப்பட்டுள்ளது. பள்ளியின் வெளி வேலைகள் இன்னும் சற்று பாக்கியிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அந்த பணிகளும் நிறைவேறி விடும்.

ஊரின் எதிர்ப்பு: ஊரை விட்டு விலக்கி வைப்போம் என்ற மிரட்டல்: குழப்பவாதிகள் என்ற அவச் சொல்: தாய் தந்தை மாமன் மச்சான்களிடம் கூட இதனால் குடும்பத்தில் குழப்பம். இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் இன்று இவ்வளவு அழகிய பள்ளியைக் கட்டி பெருந் திரளாக மக்களும் தொழ வருவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னல்களை அனுபவித்த அந்த இளைஞர்களுக்கு இறைவன் மறுமையில் மகத்தான இடங்களை தேர்வு செய்வான். அந்த கூட்டத்தில் நம்மையும் இறைவன் இணைத்துக் கொள்வானாக!

சுன்னத் ஜமாத் பள்ளியிலிருந்து தொழுது கொண்டு வெளி வந்த ஒருவரிடம் இந்த பள்ளியைப் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் கேட்டவுடன் பட படவென பொரிய ஆரம்பித்தார்......

'இந்த நஜாத் காரன்களால பெரிய தொல்லையா இருக்குது பாய். முதல்ல மூணு பேர்தான் இருந்தானுங்க. அப்புறம் 30 ஆனானுங்க.. இப்ப 300 க்கு மேல போய்ட்டானுங்க.... ஏதாவுது கேட்டா குர்ஆனை தூக்கிட்டு வரானுங்க... எங்களால ஒன்னும் பண்ண முடியல பாய்....' என்றார் வருத்தமாக. நான் என்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். :-)

இவ்வாறு இறைவனின் மூலம் வெற்றிகள் நம்மை அடையும் போது நமது நிலை கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

அல் குர்ஆன் : 110:1

Sunday, May 24, 2015

தீண்டாமை மற்றும் அடிமை முறை - அம்பேத்கார் பேசுகிறார்



இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளைவிட தீண்டாமை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது.

இந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முறையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி விரிவாகக் கூறி முறைப்படுத்தியிருக்கிறார்கள். அடிமை முறை, இந்துக்களிடையே ஏதோ ஒரு பண்டைக் காலத்தில் இருந்த அமைப்பு அல்ல. இந்திய வரலாறு நெடுகிலும் 1843 வரை அடிமை முறை செயலில் இருந்து வந்தது. அந்த ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, சட்டத்தின் மூலம் அடிமை முறையை ஒழித்திராவிட்டால் இன்று வரையும் கூட அது நீடித்திருக்கும்.

அடுத்து, அடிமை முறை, தீண்டாமை ஆகியவற்றின் தன்மை பற்றிய எதிர்க்குற்றச் சாட்டுக்குப் பதில் கூருவதற்குத் தீண்டாமையையும், பண்டைக் கால ரோமிலும், நவீன கால அமெரிக்காவிலும் வழக்கத்திலிருந்த அடிமை முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை நடைமுறையில் எப்படி இருந்தது? இதைப்பற்றி நான் அறிந்த மிகச் சிறப்பான வர்ணனை திரு.பாரோ எழுதிய ‘ரோமப் பேரரசில் அடிமைமுறை’ என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. திரு.பாரோ கூறுகிறார். 1

“இதுவரை, வீடுகளில் அடிமைகளை வைத்திருக்கும் முறையின் கொடூரமான அம்சங்கள் விவரிக்கப்பட்டன. மற்றுமொரு அம்சமும் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்ட வீடுகள் சாதாரணமாகக் காணப்படுபவை என்று இலக்கியம் காட்டுகிறது. ஆனால், இது விதிவிலக்கானது தான். பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; இவர்கள் பொதுவாக ரோம் நகரில் காணப்பட்டார்கள். இத்தாலியிலும் மாகாணங்களிலும் பெருமைக்காகக் காட்சி காட்டுவதற்கு அதிகத் தேவை இருக்கவில்லை. மாளிகையின் பணியாளர்களில் பலர், நிலமும் விளைபொருள்களும் தொடர்பான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

மேற்பார்வையாளருக்கும் அடிமைக்கும் இடையிலான பழமையான உறவுமுறை அங்கும் இருந்தது. ஆனால் பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பிளினி, தமது பணியாளர்களிடம் காட்டிய அன்பு பற்றி நாம் நன்றாக அறிவோம். தமது சொந்த நேர்மை உண்ர்ச்சியைக் காட்டுவதற்காகவோ, வருங்காலத் தலை முறையினர் தமது கடிதங்களைப் படிப்பார்கள் என்று நம்பி அவர்களிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர் தமது அடிமைகளின் உடல் நலக்குறைவு பற்றியும் அவர்களின் மரணம் பற்றியும் தமது மனவேதனையை வெளிப்படுத்தவில்லை.

(பிளினியின்) குடும்ப வீடு அடிமைகளின் குடியரசு. பிளினி தமது அடிமைகளை நடத்திய விதம் பற்றிக் கூறியிருப்பது சில சமயங்களில்
பொதுவான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறியதாக உள்ளதால் அதைச் சான்றாக மதிக்க முடியாது என்று கருதப்படுகிறது. இவ்வாறு கருதுவது சரியல்ல.

பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும் உண்மையான இலக்கிய ஆர்வத்தினாலும் செல்வம் மிக்க குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இலக்கியத்திலும் கலைகளிலும் பயிற்சி பெற்ற அடிமைகளை வைத்திருந்தார்கள். கிளாவிஸிஸெஸ் சேபினஸ், தம்மிடம் ஹோமர், ஹெஸியாயிட், மற்றும் ஒன்பது கவிஞர்களின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கப் பயிற்சி பெற்ற பதினொரு அடிமைகளை வைத்திருந்ததாக ஸெனெடா கூறுகிறார். ‘புத்தக அலமாரி வைத்துக் கொள்வது செலவு குறைவாயிருக்கும்’ என்று முரட்டுத்தனமாகப் பேசும் நண்பர் ஒருவர் கூறினார். “அப்படியில்லை” என்று அவருக்குப் பதில் கூறப்பட்டது. இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், அச்சுக்கலை தோன்றாத அந்தக் காலத்தில் கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும்….வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். இருபது வயதில் இறந்து போகும் ஒரு ‘புத்தக மனிதன்’ தாம் கிரேக்கமும் லத்தீனும் அறிந்தவர் ’என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார், சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர்….பேரரசில் சுருக்கெழுத்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். வாக்கு வன்மை பெற்ற பேச்சாளர்கள், இலக்கண அறிஞர்கள் ஆகியோரின் உரைகள் பலவற்றை ஸ்னெட்டோனியஸ் ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். வெரியஸ் ஃப்ளாக்கஸ் என்பவர் ஆஸ்டஸின் பேரர்களுக்கு ஆசிரியராயிருந்தார். அவர் இறந்தபின் அவருக்குச் சிலை வைத்துக் கௌரவித்தார்கள். ஸெரிபோனியஸ் அபியொடிசியஸ் என்பவர் ஆர்பிலியஸின் அடிமையாகவும் மாணவராகவும் இருந்தார்; பின்பு அவர் ஸெரிபேனியாவால் விடுதலை செய்யப்பட்டார், ஹைகின்ஸ் என்பவர் அவருக்குப்பின், அவரிடம் அடிமையாயிருந்து விடுதலைபெற்ற ஜுலியஸ் மாடெஸ்டஸ் அந்தப் பதவிக்கு வந்தார். அடிமையான தத்துவ அறிஞர் ஒருவரின் வரலாற்றை எழுதிய சுதந்திர மனிதர்கள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். இந்த அடிமை அறிஞர், தமது எஜமானருடனும் அடிமைகளின் நண்பர்களுடனும் வாதங்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற அடிமைகள் மருத்துவர்களாகப் பணிபுரிந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் உள்ளன. இவர்களில் சிலர் குறிப்பிட்ட மருத்துவத் துறைகளில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள்.

இத்தகையவர்கள் பெரிய வீடுகளில் அடிமைகளாக இருந்தபோது பயிற்சி பெற்றவர்கள் என்று சில உதாரணங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் விடுதலை பெற்றபின் தங்கள் துறைகளில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, மிக அதிகமாகக் கட்டணம் வாங்குபவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.”

சமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர். [2.ரோமானிய பேரரசின் அடிமைத்தனம் ப,63]

ஆகஸ்டஸின் காலம் வர்த்தகமும் தொழில்களும் விரிவடையத் தொடங்கிய காலம்….அடிமைகள் (கலைகளிலும் கைத் தொழில்களிலும்) முன்பும் ஈடுபடுத்தப்பட்டனர்; ஆனால் திடீரென்று வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் அவர்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது, ரோமானியர்கள் பல்வேறு வர்த்தக, தொழில் முயற்சிகளில் மிகத் தாராளமாகவும் திறந்த முறையிலும் ஈடுபட்டார்கள். ஆயினும் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்ததால் அவர்களுக்கு முகவர்கள் தேவைப்பட்டார்கள். இத்தகைய முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர்….(இவ்வாறு இருந்ததற்கு) காரணம் என்னவென்றால், அடிமைத் தளைகள் (தளர்த்தக் கூடியனவாக உள்ளன). (இவற்றை) அடிமையாயிருப்பவர் செல்வத்தையும் சுதந்திரத்தையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் தளர்த்தவும், அடிமையின் தவறான செயலால் எஜமானருக்கு இழப்பு ஏற்படாமல் உத்தரவாதம் செய்யும் வகையில் இறுக்கமாக்கவும் முடியும்.

வர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. இவ்வாறாகச் செய்யப்பட்ட வேலையும், ஈட்டப்பட்ட லாபமும் கணிசமாக இருந்தன……அடிமைக்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது…. தொழில்களிலும் இதே முறை பல்வேறு வடிவங்களில் வழக்கத்தில் இருந்தது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். இதற்கு ஈடாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படலாம் அல்லது அடிமைக்கு விகித அடிப்படையிலான தொகை கொடுக்கப்படலாம் 2

அடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். பலர் இதை உணவுப் பொருள்களுக்கும் உல்லாசத்திற்கும் செலவிட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தத் தனிப்பணம் ஏதோ கொஞ்சம் கையில் சேர்ந்தது, கரைந்து போயிற்று என்று சொல்லும் படியாக இருக்கவில்லை. எஜமானருடைய வர்த்தகத்தில் அவருக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கத் தெரிந்த அடிமை தன்னுடைய பொருளையும் எப்படி லாபமான முறையில் பயம்படுத்தலாம் என்பதை அறிவான். பல சமயங்களில் அவன் தன் எஜமானரின் வர்த்தகத்தில் அல்லது முற்றிலும் வேறான தொழில் முயற்சியில் முதலீடு செய்தான். அவன் தன் எஜமானருடனேயே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்போது அவன் எஜமானரிடமிருந்து முற்றிலும் தனிப்பட்ட மனிதனாகக் கருதப்பட்டான். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அவன் தன்னுடைய சொத்துக்களையும் நலன்களையும் மேலாண்மை செய்வதற்கு முகவர்களை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக அடிமையின் தனிப்பணத்துடன் சம்பந்தப்பட்டவையாக நிலம், வீடுகள், கடைகள் ஆகியவை மட்டுமின்றி உரிமைகளும் பாத்தியதைகளும் காணப்பட்டன.

வர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்: பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.

ரோம் நகரில் இவர்கள் தங்கள் தொழில்களை மேமிமஸ் வட்டம், ட்ரைஜெமிமஸ் வாசல், எஸ்க்விலைன் மார்க்கெட், (காவோலியன் குன்றின்மேல் உள்ள) பெரிய அங்காடி, முதலான இடங்களில் நடத்தினார்கள்3

அடிமைகளான செயலாளர்களும் முகவர்களும் தங்களுடைய எஜமானர்கள் சார்பில் எந்த அளவுக்குச் செயல்பட்டார்கள் என்பதை பாம்பேயில் ஸீஸிலியஸ் ஜகண்டஸ் என்பவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரசீதுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 4

அரசு தனக்குச் சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தது என்பது ஆச்சரியமல்ல; ஏனென்றால், போர், அரசு சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால், போரில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அரசின் உடைமையாகவே இருக்கலாம். ஆனால் அரசின் அடிமைகள் எத்தகைய குறிப்பிடத்தக்க முறையில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட சமூக அந்தஸ்தும் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன….
”பொது அடிமை’ என்றால் பேரரசின் கருத்தில் அரசு தன்னுடைய பல பணிகளில் ஈடுபடுத்துகின்ற அடிமைகள் என்று பொருள்பட்டது. அவ்வாறு அழைக்கப்படுபவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசுப்பணி இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள். பல சமயங்களில் ஒரு சமூக அந்தஸ்து இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள், ஸீஸரின் அடிமைகள் ஆகியோர் செய்த பணிகளில், இப்போது அரசு நிர்வாகப் பணித்துறையின் மேற் பிரிவின் ஒரு பகுதியினரும் கீழ்ப்பிரிவினர் அனைவரும், நகரசபைகளின் பணியாளர்களும் செய்கின்ற மூளை உழைப்பு, உடல் உழைப்பு ஆகிய எல்லாப் பணிகளும் அடங்கியிருந்தன…(கருவூலத்தின்) சார்நிலைப் பணிகளில் எழுத்தர்களாகவும் நிதி அதிகாரிகளாகவும் பணிபுரிந்த பலர் அடிமைகளும், விடுதலை பெற்ற அடிமைகளும் ஆவார்கள். இவர்கள் செய்த பணிகள் மிகப் பலவகையாக இருந்திருக்க வேண்டும்… நாணய சாலை….இதன் தலைவராக ‘நைட்’ எனப்பட்ட உயர்நிலைப் போர்வீரர் இருந்தார்; நாணயம் அச்சிடும் செயல் முறையின் பொறுப்பாளராக…. விடுதலைபெற்ற அடிமை ஒருவர் இருந்தார்; அவருக்குக் கீழே விடுதலை பெற்ற அடிமைகளும், அடிமைகளும் பணி செய்தார்கள்…. ஆயினும் அரசுப் பணியின் ஒரு பிரிவிலிருந்து, மிக நெருக்கடியான ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் தவிர, அடிமைகள் கண்டிப்பாக விலக்கப்பட்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை; அவர்கள் கௌரவத்துக்குத் தகுந்தவரகளாகக் கருதப்படாததே இதற்குக் காரணம். வேறு காரணங்களும் இருந்தன என்பதில் சந்தேகமில்லை. பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகிவிடும். அடிமைகள் போர்முனையில் அரிதாயிருந்த போதிலும், போர்முனையின் பின்னணியில் வேலைக்காரர்களாகவும், உணவு வழங்குதல் போக்குவரத்து ஆகியபிரிவுகளில் பணியாளர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் எப்போதும் காணப்பட்டனர். கடற்படைக் கப்பல்களில் அடிமைகள் பணி செய்வது சாதாரணமாயிருந்தது.”


இப்போது அமெரிக்காவில் நீக்ரோக்கள் சட்டத்தின் பார்வையில் அடிமைகளாயிருந்த காலத்தில் அவர்களின் நடைமுறை நிலைமை எவ்வாறு இருந்தது என்று பார்க்கலாம். நீக்ரோக்களின் நிலைமை பற்றி நன்றாக விளக்கும் சில விவரங்கள் கீழே தரப்படுகின்றன: [6.சார்லஸ் சி.ஜான்சன் அமெரிக்க நாகரிகத்தில் நீக்ரோக்கள்]

“புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர் என்று லஃபாயத் கூறியிருக்கிறார். வட கரோலனாவின் கிரான்வில் கவுண்ட்டியில், அசல் நீக்ரோவான ஜான் சேவிஸ் என்பவர் வெள்ளை மாணவர்களுக்குத் தனியான பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். பிரின்ஸ்டன் பக்கலைக் கழகத்தில் கல்விகற்ற அவர் உள்ளூர் மதகுருக்கள் சபையின் உரிமப்பட்டயம் பெற்று, அம்மாநிலத்தில் வெள்ளையர்களைக் கொண்ட திருச்சபையில் உபதேச உரைகள் நிகழ்த்தி வந்தார். அவருடைய மாணவர்களில் ஒருவர், வட கரோலினாவின் ஆளுநர் ஆனார்; மற்றொருவர், மாநிலத்தின் மிகப் பிரபலமான விக் கட்சி செனட் உறுப்பினர் ஆனார். அவருடைய மாணவர்களில் இருவர், வட கரோலினாவின் தலைமை நீதிபதியின் மகன்கள். மாநிலத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சிக் கழகத்தை நிறுவியவரின் தந்தை அவரது பள்ளியில் படித்து அவரது வீட்டில் உணவு உண்டு வந்தார்…. அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்கள் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களின் உரிமையாளர்களாயிருந்தனர். இந்த முறை மேலும் வளர்ச்சி பெற்ற போது, சில தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைத் தொழிலாளர்களின் கீழ் வேலை செய்வதற்கு வேறு அடிமைகளை அமர்த்தினார்கள். பல அடிமைத் தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.”
“ஓடிப்போன அடிமைகள் பற்றியும் அடிமை விற்பனை பற்றியும் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அவர்களின் திறமைக்குச் சான்று கூறுகின்றன. அவர்கள், ஏழை வெள்ளைத் தொழிலாளருக்குச் சமமாக அல்லது கூடுதலாக ஊதியம் பெற்றார்கள். தங்களுடைய உடைமையாளரின் செல்வாக்கினால் மிக நல்ல வேலைகளைப் பெற்றார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதென்ஸில் கொத்து வேலைக்கும் தச்சு வேலைக்கும் ஒப்பந்தம் எடுப்பவர்கள் நீக்ரோ தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று 1838 – இல் அவர்களிடம் மனுக் கொடுக்கப்பட்டது. ”வெள்ளையர்கள் தான் இந்த நாட்டின், இந்த மாநிலத்தின், உண்மையான, சட்டபூர்வமான, அறநெறிப்படியான சொந்தக்காரார்கள். இந்த உரிமை அவர்களுக்கு உலகம் உருண்டையானது என்ற உண்மையைக் கண்டறிந்து கூறிய கோபர்னிகஸ், கலீலியோ ஆகிய வெள்ளையர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது; இந்த உண்மையின் அடிப்படையில் மற்றொரு வெள்ளையர் கொலம்பஸ், உலகில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்கு மேற்கு நோக்கிக் கடற்பயணம் செய்யலாம் என்று உணர்ந்தார். எனவே இந்தக் கண்டம் வெள்ளையர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இந்த வெள்ளையர்களுக்குத்தான் நீங்கள் வேலை கொடுக்க மறுத்து அவர்களுடைய பசியினால் வாடும் குடும்பங்களுக்கு உணவும் உடையும் கிடைக்காமல் செய்கிறீர்கள். அதுமட்டுமின்றி நீக்ரோக்களுக்கே நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.”

அட்லாண்டாவில் 1858-இல் இரண்டு வெள்ளையந்திரப் பணியாளர்கள் கொடுத்த ஒரு மனுவில் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தலைமைத் தொழிலாளர்களின் கருப்பு அடிமைத் தொழிலாளர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அடுத்த ஆண்டிலேயே சில வெள்ளையர்கள் தங்கள் மத்தியில் ஒரு நீக்ரோ பல்வைத்தியர் இருப்பதையும் தொழில் செய்வதையும் நகர சபை சகித்துக் கொள்கிறது என்று புகார் கூறினார்கள். ‘எங்களுக்கும் சமுதாயத்திற்கும் நியாயம் செய்வதற்கு இதை நிறுத்தியாகவேண்டும். அட்லாண்டா நகரவாசிகளான நாங்கள் உங்களிடம் நீதி கேட்கிறோம்.’ ஜார்ஜியா மாநிலம் ரிச்மண்ட் கவுண்ட்டியில் 1819-இல் சுதந்திரமான நீக்ரோக்கள் பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அவர்கள் தச்சுவேலை, முடிதிருத்தல், படகு பழுது பார்த்தல், குதிரைச் சேணய் செய்தல், நூல் நூற்றல், இயந்திரங்களில் மாவரைத்தல், துப்பாக்கி உறைகள் தைத்தல், நெசவு, மரம் அறுத்தல், நீராவிப் படகுக்கு வழிகாட்டிச் செலுத்துதல் போன்ற வேலைகளைச் செய்வதாகத் தெரியவந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மன்ரோ பதவி ஏற்றபோது அணிந்திருந்த காலணிகளை நீக்ரோ காலணித் தொழிலாளர் ஒருவர் கையினால் செய்து கொடுத்திருந்தார். மாண்டிஸெலோவில், தாமஸ் ஜெபர்ஸனின் வீட்டில் ஓடு பாவிய தரையை நேர்த்தியாக உருவாக்கிய அடிமையின் தொழில் திறமையை ஹாரியட் மார்ட்டினோ வியந்துரைத்தார். பழைய பருத்தித் தோட்டத்தின் அந்தப் பெரிய வீட்டில் நீக்ரோ கைவினைஞர்களின் கைத்திறனின் அடையாளங்கள் இன்னமும் காணப்படுகின்றன. தோட்டம் அமைப்பதற்கு முன் அங்கு நின்ற ஓக் மரங்களை வெட்டியெடுத்து அவற்றின் கட்டைகளை இணைத்து அமைக்கப்பட்ட வலுவான மாளிகைகள் இன்றும் நிற்கின்றன. நூல் நூற்பதிலும் நெசவிலும் தேர்ச்சி பெற்ற நீக்ரோ பெண்கள் ஆலைகளில் வேலை செய்தார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதன்ஸில் அவர்கள் வெள்ளை இனப் பெண்களுடன் வேலை செய்வதையும், அதைப்பற்றி ஆட்சேபமோ வெறுப்போ காட்டப்படவில்லை என்பதையும் பக்கிங்ஹாம் 1839-இல் பார்த்தார். தென்பகுதியில் உள்ள நீக்ரோ கைத்தொழிலாளர்கள் – அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகிய இருசாராருமே – வட பகுதியில் உள்ள தங்கள் சகோதரர்களைவிட நல்ல நிலையில் இருந்தார்கள். 1856-இல் பிலடெல்பியாவில் இருந்த 1637 நீக்ரோ கைத்தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சம் காரணமாக அவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவானவர்களே தங்கள் தொழில்களைச் செய்ய முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுக்குப் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த ஐரிஷ் மக்கள், நீக்ரோ அடிமைத்தனத்திற்கு அடிப்படையாகக் கொடுத்துப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சாதகமாக இவ்வாறு கூறப்பட்டது: ‘ஐரிஷ் கத்தோலிக்கர் ஒருவர் தாம் எந்த நிலையில் வைக்கப்படுகிறாரோ அதைவிட மேலே உயர்வதற்கு முயலமாட்டார்; ஆனால், நீக்ரோ, பல சமயங்களில் முயற்சி செய்து வெற்றி பெற்றுவிடுகிறார்.’ பியூரிட்டனான ஆலிவர் க்ராம்வெல், கருப்பு அடிமைகள் வர்த்தகம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ட்ரோகேடா படுகொலையில் கொல்லப்படாத ஐரிஷ் மக்கள் அனைவரையும் பார்படாஸில் உள்ளவர்களுக்கு விற்றுவிடவில்லையா? நியூயார்க்கிலும் பென்சில்வேனியாவிலும் உள்ள சுதந்திரமானவர்களும் ஓடிவந்த அடிமைகளுமான நீக்ரோக்கள் இந்த மக்களுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்தார்கள். நியூயார்க்கில் நடந்த கட்டாய ராணுவ சேவைக் கழகங்களில் இந்தப் பகைமை, மிகுந்த வன்முறையாக வெளிப்பட்டது. இந்த ஐரிஷ் மக்கள் சிற்றாள் வேலை முதலான சாதாரண வேலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த வேலைகளில் நீக்ரோக்கள் இடம் பெறும் முயற்சி ஒவ்வொன்றையும் அவர்கள் எதிர்த்தார்கள். இந்த முயற்சிகள் அமெரிக்காமீது தங்களுக்கிருந்த லேசான பிடிப்புக்கும், வாழ்க்கை ஆதாரமான தொழிலுக்கும் அபாயமானவை என்று அவர்கள் கருதினார்கள்.
ரோமானிய அடிமை, அமெரிக்க நீக்ரோ அடிமை ஆகியோரின் நடைமுறை நிலைமை இவ்வாறு இருந்தது.

இந்தியாவில் உள்ள தீண்டாதோரின் நிலைமையில், ரோமானிய அடிமையின் நிலைமையுடனும் அமெரிக்க நீக்ரோ அடிமையின் நிலைமையுடனும் ஒப்பிடக் கூடியதாக ஏதேனும் இருக்கிறதா? தீண்டாதோரின் நிலைமையையும் ரோமப் பேரரசில் அடிமையின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அதே காலகட்டத்தை எடுத்துக்கொள்வது தவறாகாது. ஆயினும் ரோமப் பேரரசில் இருந்த அடிமைகளின் நிலைமையுடன் இப்போது உள்ள தீண்டாதோரின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க நான் இணங்குகிறேன். இது ஒரு புறம் மிக மோசமானதையும் மறுபுறம் மிகச் சிறந்ததையும் எடுத்து ஒப்பிடுவதாகும். ஏனென்றால் இப்போதைய காலம் தீண்டாதோரின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. தீண்டாதோரின் நடைமுறை நிலைமை அடிமைகளின் நிலைமையுடன் ஒப்பிடும் போது எவ்வாறு உள்ளது? ரோமானிய அடிமைகளைப் போல எத்தனைத் தீண்டாதோர் நூலகர்களாகவும், சொல்லுவதை எழுதுவோராகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும் வேலையில் உள்ளனர்? ரோம் நகரில் அடிமைகள், பேச்சாளர்கள், இலக்கண ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் போன்ற அறிவுத் துறைப் பணிகளில் அமர்த்தப்பட்டது போல எத்தனைத் தீண்டாதவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்? ரோமில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டது போன்ற பணிகளில் தீண்டாதவர்கள் எத்தனைப் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? எந்த இந்துவும் இவற்றில் எந்தக் கேள்விக்காவது உடன்பாடான பதில் கூற முடியுமா? அடிமைகள் மிகப் பெருமளவில் இடம்பெற்றிருந்த இந்தப் பணிகள் எல்லாவற்றிலுமிருந்து தீண்டாதோர் முற்றிலுமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர். தீண்டாமையை நியாயப்படுத்துவதற்கு இந்துக்கள் சொல்லும் வாதங்கள் எவ்வளவு பலனற்றவை என்பதை இது நிரூபிக்கிறது. இதில் இரங்கத்தக்கது என்னவென்றால், பெரும்பாலானவர்கள், ஒரு மனிதன் அல்லது ஒரு வகுப்பினர் மற்றொரு மனிதனின் வாழ்வு அல்லது மரணத்திற்கான அதிகாரத்தைச் சட்டப்படி பெற்றிருப்பது தவறு என்று கூறி, அடிமை முறையைக் கண்டனம் செய்வதாகும். ஆனால் அடிமைத்தனம் இல்லாத போதும் கூட மிகக் கொடுமையான ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் துன்புறுத்தலும் இவற்றின் விளைவான துன்பங்களும் ஏமாற்றமும் மனத்தளர்ச்சியும் இருக்கமுடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அடிமைகளின் நடைமுறை நிலைமை பற்றி மேலே கூறப்பட்ட விவரங்களைக் கவனிப்பவர்கள், அடிமையின் சட்டப்படியான நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டு அடிமை முறையை அவசரப்பட்டுக் கண்டனம் செய்வது சரியல்ல என்று ஒப்புக் கொள்வார்கள். சட்டம் அனுமதிக்கிறது என்பது, அந்த நடைமுறைகள் சமூகத்தில் உள்ளன என்பதற்குச் சான்றாகிவிடாது. தாங்கள் பெற்றுள்ள் எல்லாம் அடிமை முறையினால் கிடைத்தவையே என்று பல அடிமைகள் ஒப்புக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒப்புக் கொண்டாளும் இல்லாவிட்டாலும் பல அடிமைகள் தாங்கள் பெற்றவற்றையெல்லாம் அடிமைமுறை காரணமாகவே அடைந்திருந்தனர்.

அடிமை முறை, சுதந்திரமான சமூக அமைப்பு அல்ல என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தீண்டாமை சுதந்திரமான சமூக அமைப்பு என்று கூற முடியுமா? தீண்டாமையை ஆதரிக்கும் இந்துக்கள், இது சுதந்திரமான சமூக அமைப்புதான் என்று கூறலாம். ஆனால் தீண்டாமைக்கும் அடிமை முறைக்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகள் தீண்டாமையை அடிமை முறையைவிட மோசமான சுதந்திரமற்ற சமூக அமைப்பு ஆக்கிவிடுவதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அடிமைமுறை ஒருபோதும் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் தீண்டாமை கட்டாயமானது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை அடிமையாக வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அடிமையாக வைத்திருக்க விரும்பவில்லையென்றால் அவர்மீது கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தீண்டாதவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. தீண்டாதவராகப் பிறந்துவிட்டால் தீண்டாதவருக்கு உள்ள எல்லாத் துன்பங்களையும் அவர் அனுபவித்தேயாக வேண்டும். அடிமை முறைச் சட்டம் அடிமையை விடுதலை செய்வதை அனுமதித்தது. ஒரு முறை அடிமையாகிவிட்டால் எப்போதுமே அடிமைதான் என்ற நிலை கிடையாது.

தீண்டாமையிலிருந்து தப்பிக்க வழியே கிடையாது. தீண்டாதவர் என்றால் எப்போதுமே தீண்டாதவர்தான். மற்றொரு வேறுபாடு என்னவென்றால், தீண்டாமை மறைமுகமான அடிமை முறையாகும்; எனவே அது மிக மோசமான அடிமை முறையாகும். ஒரு மனிதனின் சுதந்திரத்தைத் திறந்த முறையில் நேரடியாகப் பறித்துக்கொள்வது அதைவிட மேலானது. அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல் படியாகும். ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான். தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும். தீண்டாதவரிடம் ‘நீ சுதந்திரமானவன், நீ ஒரு குடிமகன், குடிமகனின் எல்லா உரிமைகளும் உனக்கு உண்டு’ என்று கூறிக்கொண்டு, அவர் இந்த இலட்சியம் எதையும் அடைய வாய்ப்புப் பெறமுடியாத வகையில் கயிற்றை இறுக்குவது கொடுமையான ஏமாற்று வேலையாகும். இது தீண்டாதோர் தங்களுடைய அடிமைத்தனத்தை உணராமலே அவர்களை அடிமையாக்குவதாகும். இது, தீண்டாமை என்றாலும் இது அடிமைத்தனமே. இது, மறைமுகமானது என்றாலும் உண்மையானது. இது, உணரப்படாமலே இருப்பதால், இது, நீடித்து நிற்கிறது. தீண்டாமை, அடிமை முறை ஆகிய இரண்டில் சந்தேகமில்லாமல் தீண்டாமைதான் மோசமானது.

அடிமை முறை, தீண்டாமை ஆகிய இரண்டுமே சுதந்திரமான சமூக அமைப்புகள் அல்ல. ஆனால், இந்த இரண்டுக்குமிடையே வேறுபாடு கூறவேண்டுமானால் – வேறுபாடு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை – கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றைப் பெறுவது அடிமை முறையில் சாத்தியமா, தீண்டாமையில் சாத்தியமா என்று பார்க்கவேண்டும். அடிமை முறையில் கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கு இடம் இருக்கிறது. தீண்டாமையில் இதற்கெல்லாம் இடமே இல்லை. அடிமை முறையும் சுதந்திரமில்லாத சமூக அமைப்புதான் என்றாலும், அதில் உள்ள அனுகூலங்களில் எதுவுமே தீண்டாமையில் இல்லை. அதே சமயம் சுதந்திரமான சமூக அமைப்பில் உள்ள பிரதிகூலங்கள் அனைத்தும் தீண்டாமையில் உள்ளன. அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில், வர்த்தகம், கைத்தொழில், கலை ஆகியவற்றில் பயிற்சி பெறுவதற்கு அல்லது பேராசிரியர் ம்யூர்ஸ் கூறுவதுபோல ‘மேலான ஒரு பண்பாட்டில் அடி எடுத்து வைப்பதற்கு’ வாய்ப்பு இருக்கிறது. தீண்டாமையின் அழுத்தும் பாரமோ, தனிமனித வளர்ச்சிக்கு உள்ள தடையோ அடிமை முறையின் அம்சங்களாக இல்லை. எனவே, அடிமை முறையைவிடத் தீண்டாமை நல்லது என்று கூறுவது அவசரப்பட்ட கூற்றாகும்.
இந்தப் பயிற்சியும் பண்பாட்டின் அறிமுகம் பெறுதலும் அடிமை முறையின் பெரிய நன்மை என்பதில் சந்தேகமில்லை. அடிமைக்குப் பயிற்சி அளிப்பதற்கும் பண்பாட்டின் அறிமுகம் செய்துவைப்பதற்கும் எஜமானுக்குக் கணிசமான செலவு பிடித்தது. அடிமையாவதற்கு முன்பே கல்வியோ பயிற்சியோ பெற்ற அடிமைகள், இளம் அடிமைகளாயிருக்கும்போது வீட்டு வேலையில் அல்லது கைத்தொழிலில் பயிற்சி அளிப்பதேயாகும். பேரரசு உருவாவதற்கு முன் ஓரளவுக்கு இவ்வாறுதான் செய்யப்பட்டது. உதாரணமாக, மூத்த கேட்டோ இவ்வாறுதான் செய்தார். அடிமையின் உடைமையாளரும், ஏற்கெனவே உள்ள பணியாளர்களும் இந்தப் பயிற்சியை அளித்தார்கள்… உண்மையில், செல்வர்களின் வீடுகளில் இதற்கெனத் தனி ஆசிரியர்களே இருந்தார்கள். இந்தப் பயிற்சி, தொழில், வர்த்தகம், கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் அளிக்கப்பட்டது.

அடிமைக்கு இவ்வாறு உயர்வான உழைப்புகளிலும் பண்பாட்டிலும் பயிற்சி அளிப்பதற்கு உடைமையாளர் முயற்சி எடுத்தற்குக் காரணம் சந்தேகமில்லாமல் லாபநோக்கம் தான். பயிற்சி பெறாத அடிமையை விட, பயிற்சி பெற்ற அடிமைக்கு ஒரு வர்த்தகப் பொருள் என்ற முறையில், மதிப்பு அதிகம். அவனை விற்றால் அதிக விலை கிடைக்கும்; மற்றவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டால், அவன் அதிக ஊதியம் ஈட்டி வருவான். எனவே உடைமையாளர் தனது அடிமைக்குப் பயிற்சி அளிப்பது அவருக்கு முதலீடாகும்.

அடிமை முறை போன்ற சுதந்திரமில்லாத சமூக அமைப்பில் அடிமையின் உயிரையும் உடம்பையும் பராமரிக்கும் பொருப்பு உடைமையாளரைச் சார்ந்தது. அடிமை தன்னுடைய உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தேடும் பொறுப்புகள் எல்லாவற்றிலுமிருந்து விடுதலை பெற்றான். இவையெல்லாவற்றையும் அளிக்கவேண்டியது உடைமையாளரின் பொறுப்பாயிற்று. அடிமை, தனக்கு ஆகும் செலவை விட அதிகமாகவே ஈட்டியதால் உடைமையாளருக்கு, இது சுமையாக இருக்கவில்லை. ஆனால், சுதந்திர மனிதர் ஒவ்வொருவரும் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் உத்தரவாதம் பெறுவது எப்போதும் சாத்தியமில்லை என்பதை ஊதியத்துக்கு உழைப்பவர்கள் தங்கள் அனுபவத்தில் அறிந்துள்ளனர், உழைக்கத் தயாராயிருப்பவர்கள் எல்லோருக்கும் வேலை எப்போதும் கிடைத்துவிடுவதில்லை. வேலை இல்லை என்றால் உணவு இல்லை என்ற விதியிலிருந்து உழைப்பாளர் தப்பிக்க முடியாது. வேலை இல்லை என்றால் உணர்வு இல்லை என்னும் விதி – அடிமைக்குப் பொருந்தாது. அவனுக்கு உணவு தேடித்தருவதும், வேலை தேடித்தருவதும் உடைமையாளரின் கடமை. உடைமையாளர் வேலை தேடித்தரத் தவறினால், அடிமை, தனக்கு உணவு பெறும் உரிமையை இழந்துவிடுவதில்லை. வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள், வளர்ச்சிகள், தளர்ச்சிகள் ஆகியவற்றின் விளைவுகளை சுதந்திரமான ஊதியத் தொழிலாளர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இவையெல்லாம் அடிமையை பாதிப்பதில்லை. இவை அடிமையின் எஜமானரை பாதிக்கலாம்; ஆனால், அடிமை இவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறான். அவனுக்கு உணவு, அநேகமாக அதே உணவு, கிடைத்துவிடும். வர்த்தகம் வளர்ந்தாலும் தளர்ந்தாலும் அடிமைக்கு உணவு கிடைத்துவிடும்.

அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில் எஜமான் தன்னுடைய அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவனம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறான். அடிமை, தன்னுடைய எஜமானின் உடைமையாவான். இந்தப் பிரதிகூலமான நிலையே அவனுக்குச் சுதந்திர மனிதனைவிட அனுகூலமாக அமைந்துவிடுகிறது. அடிமை தம்முடைய உடைமை என்பதாலும், எனவே மதிப்புள்ள பொருள் போன்றவன் என்பதாலும், உடைமையாளர் தமது சுயநலத்துக்காகவேனும் அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவனம் செலுத்தினார். ரோம் நகரில் அடிமைகள் ஒருபோதும் சதுப்பு நிலங்களிலோ மலேரியா வரக்கூடிய நிலத்திலோ வேலையில் அமர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலங்களில் சுதந்திர மனிதர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அடிமைகளை ஒருபோதும் சதுப்பு நிலத்தில் அல்லது மலேரியா வரக்கூடிய நிலத்தில் பயன்படுத்த வேண்டாம் என்ற ரோமானிய விவசாயிகளுக்குக் கேட்டோ என்பவர் அறிவுரை கூறுகிறார். இது விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆயினும், சற்று யோசித்துப் பார்த்தால் இது மிகவும் இயல்பானது என்று தெரியும். அடிமை, மதிப்பு மிக்க உடைமையாவான்; எனவே தன்னுடைய நலனை உணர்ந்திருக்கும் விவேகமுள்ள மனிதன், தனது மதிப்புமிக்க உடைமையை மலேரியாவின் சீர்கேடுகளுக்கு உட்படுத்த மாட்டான். சுதந்திர மனிதன் விஷயத்தில் இதேபோன்ற கவனம் செலுத்த வேண்டியதில்லை; ஏனென்றால், அவன் மதிப்புள்ள உடைமை அல்ல. உடைமையாளரின் இந்தக் கருத்து அடிமைக்குப் பெரிய அனுகூலத்தைத் தந்தது. யாருக்கும் அளிக்கப்படாத கவனிப்பு அடிமைக்கு அளிக்கப்பட்டது.

சுதந்திரமற்ற சமூக அமைப்பில் காணப்பட்ட இந்த மூன்று அனுகூலங்களில் ஒன்றுகூடத் தீண்டாமையில் இல்லை.
தீண்டாதவருக்கு நாகரிகத்தின் உயர்கலைகளில் பிரவேசிக்க அனுமதி இல்லை. பண்பாடான வாழ்க்கைக்கு எந்த வழியும் அவருக்குத் திறந்திருக்கவில்லை. அவர் குப்பை கூட்ட வேண்டும்; அதைத்தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. தீண்டாதவரின் வாழ்க்கைக்கு எந்தப் பாதுகாப்பையும் தீண்டாமை உறுதி செய்யவில்லை. தீண்டாதவரின் உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் இந்துக்களில் எவரும் பொறுப்பானவர் அல்லர். தீண்டாதவரின் ஆரோக்கியம் யாருக்கும் அக்கறையுள்ள விஷயம் அல்ல. உண்மையில், ஒரு தீண்டாதவர் இறந்தால், வேண்டாதது ஒழிந்ததாகவே கருதப்பட்டது. ஓர் இந்துப் பழமொழி ‘தீண்டாதவன் செத்தான், தீட்டுப் பயம் ஒழிந்தது’ என்று கூறுகிறது.
மறு புறத்தில், சுதந்திரமான சமூக அமைப்பின் எல்லாப் பிரதிகூலங்களும் தீண்டாமையில் உள்ளன. சுதந்திரமான சமூக அமைப்பில் வாழ்க்கைப் போராட்டத்தில் வென்று உயிர் வாழ்வது அந்தந்த மனிதரின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு சுதந்திரமான சமூக அமைப்பின் மிகப் பெரிய பிரதிகூலங்களில் ஒன்றாகும். ஒரு தனி மனிதன் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடிகிறதா என்பது வாழ்க்கையில் நியாயமான ஆரம்பம், சம வாய்ப்பு, நியாயமாக நடத்தப்படுவது ஆகியவற்றைப் பொறுத்தது. தீண்டாதவர் சுதந்திரமான மனிதராக இருந்தாலும் அவருக்கு வாழ்க்கையில் நியாயமான ஆரம்பமோ சம வாய்ப்போ, நியாயமாக நடத்தப்படுவதோ கிடைப்பதில்லை. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தீண்டாமை, அடிமை முறையை விட மோசமானது மட்டுமின்றி, அடிமை முறையுடன் ஒப்பிடும்போது உண்மையிலேயே கொடுமையானதுமாகும். அடிமை முறையில், அடிமைக்கு வேலை கிடைக்கச் செய்யும் பொறுப்பு எஜமானுக்கு இருக்கிறது. சுதந்திரமான தொழிலாளர்களைக் கொண்ட முறைமையில் வேலை பெறுவதற்குத் தொழிலாளர்கள், தொழிலாளர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இந்தப் போட்டிப் போராட்டத்தில் தீண்டாதவர் நியாயமாக நடத்தப்படுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? சுருக்கமாகச் சொன்னால், சமூக இழிவு முத்திரை காரணமாக வாழ்க்கையின் துலைக்கோல் தமக்கெதிராகவே சாய்ந்திருக்கும் நிலையில் தீண்டாதவர் வேலை அளிக்கப்படுவதில் கடைசி இடத்தையும், வேலையிலிருந்து நீக்கப்படுவதில் முதல் இடத்தையும் பெறுகிறார். அடிமை முறையுடன் ஒப்பிடும்போது தீண்டாமை கொடுமையானது; ஏனென்றால், உயிர்வாழ்வதற்கு வேண்டிய பொருள் ஈட்டுவதற்கு எல்லா வழிகளையும் தீண்டாதவருக்கு முழுமையாகத், திறந்துவிடாமல் தம்மைப் பராமரித்துக் கொள்ளும் பொறுப்பைத் தீண்டாமை அவர் மீது சுமத்துகிறது.

மொத்தத்தில், அடிமைகளைப் போலன்றி, தீண்டாதோர் இந்துக்களின் நலன்களுக்குத் தேவையான விஷயங்களில் அவர்களின் உடைமையாகவும், தீண்டாதோர் இந்துக்களின் உடைமையாக இருந்தால் இந்துக்களுக்குப் பொறுப்பு ஏற்படும் விஷயங்களில் அவர்களால் சொந்தமில்லை என்று கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர். தீண்டாதோர் சுதந்திரமற்ற சமூக அமைப்பின் நன்மைகள் எதையும் பெறமுடியாமலும் சுதந்திரமான சமூக அமைப்பின் தீமைகள் எல்லாவற்றையும் சுமக்கவேண்டியும் உள்ள நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ரோமானிய பேரரசில் அடிமைத்தனம், பக் 47-49 ↩
உரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக்கம் 101-102 ↩
மேலது, ப. 105. ↩
உரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 101-102 ↩

http://www.ambedkarcollections.com/2015/04/slaves_untouchables/

Thursday, May 14, 2015

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

அகோரிகள் என்றால் யார்? - சென்னி மலை

//இஸ்லாமிய குடியிருப்பு சுத்தமாக இருக்குனு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா???!
வந்தவாசி கோட்டை எப்படி இருக்குன்னு தெரியுமா???? //

இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு அரசு உதவி முறையாக சென்று சேராததும் ஒரு காரணம்.

மற்றபடி இந்தியாவை பொருத்த வரை இந்து , முஸ்லிம், கிருத்தவர்கள் என்று எல்லா குடியிருப்புகளும் அசுத்தமாகத்தான் உள்ளன. ஆனால் கங்கையின் அசுத்தம் என்பது புனிதம் என்ற பெயரில் நாமாக வரவழைத்துக் கொள்வது. அதற்கு மாற்று ஏற்பாடு இருக்கும் போது அதனை செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இதற்காக மக்களின் வரிப் பணம் 20000 கோடி செலவழிப்பதால் எந்த பலனும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொன்ன பின்பும் ஏன் இந்த முயற்சி? முதலில் கங்கை அசுத்தமாவதற்கு காரணங்களை கண்டு பிடித்து அதனை நிறுத்தி விட்டல்லவா தூய்மைப் பணியை தொடங்க வேண்டும்?

//அகோரிகள் அப்படினா யார்????
எந்த அகேரியேட ஆசிரமத்து வீடியோவாவது உங்களிடம் இருக்கா????//

https://www.youtube.com/watch?v=g9YepUqlR44

https://www.youtube.com/watch?v=wl4O2dg3txQ

https://www.youtube.com/watch?v=T2RhDq7-_Ec

https://www.youtube.com/watch?v=Qf3NLel3Tl4

https://www.youtube.com/watch?v=IqSelBNHRqU

சன் டிவியில் வந்த 'காசியின் மறுமுகம்' என்ற இந்த ஐந்து தொடரையும் தமிழில் பார்த்து விட்டு இந்த அகோரிகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர்களின் பின்னால் இந்து இளைஞர்கள் சென்றால் அவர்களின் வாழ்வு 'நான் கடவுள்' படத்தில் உள்ள ஆர்யாவின் வாழ்வு போல்தான் மாறிப் போகும். இந்து மறுமலர்ச்சி என்று இதைத்தான் சொல்கிறீர்களா?

//செத்த பிணத்தை தின்பதாக சொல்லும் நீங்க உயிரோட மனுசனை அறுத்து தின்னும் காட்டுமிராட்டிகளை பற்றி ஏன் பதிவு போடவில்லை, //

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், அல்சபாப் போன்ற தீவிரவாத குழுக்கள் செய்யும் எந்த செயலும் இஸ்லாம் கூறும் செயல் அல்ல. அவர்களைப் பற்றி கடுமையாக விமரிசித்து பல பதிவுகள் முன்பு எழுதியுள்ளேன்.அப்பாவிகளை பெண்களை சிறுவர்களை மத குருமார்களை போர்களில் கூட கொல்லக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிட அதற்கு மாற்றமாக நடக்கும் இந்த தீவிரவாதிகள் இஸ்லாமியர்களா? மனிதனை வெட்டி அவனது கறியை சாப்பிட்டு அதனை வீடியோவாக்கி வெளியிடும் இவர்கள் இஸ்லாமியர்களா? கண்டிப்பாக இல்லை. உலக அளவில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய அரசுகளால் உருவாக்கப்பட்ட கூலிப் படைகள் இவர்கள்.

வெளி நாடுகளுக்கு ஏன் போகிறீர்கள்? உங்களோடு அண்ணன் தம்பிகளாக பழகி வரும் தமிழக இஸ்லாமியரிகளிடம் இது பொன்ற தீவிரவாத எண்ணம் கொஞ்சமாவது இருக்கிறதா? ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் யார் என்பது விளங்கும்.

//கங்கை மூலமாக லச்சம் கோடிகணக்கில் சம்பாதிக்கும் அரசு ஏன் சில ஆயிரம் கோடிகள் அதை சுத்தம் செய்ய உபயோகிக்க கூடாது???? //

தாராளமாக செய்யட்டும். 'நோய் முதல் நாடி' என்ற சொல்லுக்கேற்ப கங்கை அசுத்தமாவதற்கான காரணத்தை முதலில் சரி செய்து விட்டு பிறகு தூய்மைப் பணியை துவங்கட்டும் என்பதுதான் எனது வாதம்.

Monday, May 11, 2015

நடைபாதையில் சிறு நீர் கழிப்பதை தடுக்க.....




நமது பக்கத்து நாடான பங்களாதேஷில் ஒரு முக்கியமான மார்க்கெட் பகுதியின் சுவற்றில் சிறு நீர் கழிப்பதை வழக்கமாக சிலர் கொண்டிருந்தனர். மார்க்கெட் நிர்வாகம் பல முறை எச்சரிக்கை போர்டுகளை வைத்தும் ஒரு பலனுமில்லை. இது போன்ற பிரச்னை பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை. அப்போது மத விவகாரங்களைக் கவனித்து வரும் ஒரு அதிகாரி சிறந்த யோசனை ஒன்றை சொன்னார். அதாவது 'இங்கு சிறுநீர் கழிப்பது தடை செய்யப்பட்டள்ளது' என்ற வாசகத்தை அந்த சுவற்றில் அரபி மொழியில் எழுதி வைத்து விடுவது என்ற யோசனையே அது.

உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியதால் அந்த மொழிக்கு தன்னையறியாமல் ஒரு மரியாதையை கொடுப்பர்.(ஆனால் இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று ஒன்று இல்லை. உலக மொழிகள் அனைத்தையும் இறைவனே படைத்ததாக குர்ஆன் கூறுகிறது) இதனை விளங்கிய அதிகாரி இவ்வாறு வாசகங்களை மக்கள் சிறுநீர் கழிக்கும் இடங்களில் எழுதி வைத்து விடச் சொன்னார். அன்வர் ஹீசைன் என்ற அரசு அதிகாரி இது பற்றி கூறும் போது 'அரபு மொழியில் எழுதி வைத்தவுடன் அது சிறந்த பலனை எங்களுக்குக் கொடுத்தது. அந்த இடங்கள் தற்போது மிகவும் தூய்மையாக உள்ளன. பல நாட்களாக எங்களுக்கு இருந்த பிரச்னையும் தீர்ந்தது' என்கிறார். :-)

நம் நாட்டில் பெரும் பஸ் நிறுத்தங்களில் நுழையும் போதே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நுழைகிறோம். குளிர் சாதனங்களோடு அமைந்த நிழற்குடைகளை வைக்கும் அரசாங்கம் சிறந்த கழிப்பிடங்களை கட்டி வைப்பதில்லை. சிறுநீர் கழிக்கும் இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்கான வசதிகளையும் செய்து தருவதில்லை. அந்த இடங்கள் உப்பு படிந்து பார்க்கவே அறுவறுப்பாக உள்ளது. நாற்றமும் சகிக்கவில்லை. ஆண்களாவது பரவாயில்லை. பெண்கள் பாடு இன்னும் திண்டாட்டம். சிலர் சுத்தம் கருதி வெளியூர் சென்றால் கழிவறைகளை உபயோகிக்காமல் வீட்டில் வந்தே தங்களின் இயற்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

தற்போது பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது சிறுநீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றி சிறந்த விளைச்சலை பெற்றதாக கூறியுள்ளார். எனவே அரசு இது போன்ற சிறுநீர்கள் வீணாகாமல் சேமித்து வைக்க ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். அல்லது பங்களாதேஷைப் போன்று மக்கள் புனிதமாகக் கருதுபவர்களின் படங்களை பொது இடங்களில் வைத்து விட்டால் பொது இடங்களில் சிறு நீர் கழிப்பதாவது குறையும்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
07-04-2015

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150507242953

Thursday, March 12, 2015

தெரு விளக்குகளை உடைத்த கேரள பெண்கள்!



கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி முதல்வராக இருந்த சமயம் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.

இந்த சம்பவத்திலிருந்து நமக்கு தெரிவது இந்த நாட்டுக்கு தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் தேவையில்லை. நம் நாட்டு பெண்களுக்கு முறையான கழிப்பிட வசதிதான் முதல் தேவை. . இந்து மத காவலராக தன்னைக் காட்டிக் கொள்ளும் நரேந்திர மோடி முதலில் கழிவறைகள் நாடு முழுக்க இலவசமாக கட்டிக் கொடுக்க முன் வரட்டும். பெண்களின் பிரச்னையை புரிந்து கொள்ளட்டும்.

Wednesday, March 04, 2015

ஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்!

ஹீரோ என்றால் இந்த இளைஞனைச் சொல்லலாம்!





இரவு நேர நைட் கிளப்பில் அதிக நேரம் நண்பர்களோடு செலவழித்த ஒரு இள மங்கை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். கிளாஸ்கோவில் உள்ள கெல்வின்குரோ பூங்கா அருகில் இந்த பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த பெண் தனியாக செல்வதைப் பார்த்த ஒரு முரடன் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளான். இனி அந்த பெண் சொல்வதைக் கேட்போம்....

'நான் அந்த முரடனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. எனது வாயை அவனது கைகளைக் கொண்டு மூடினான். திமிறிக் கொண்டு 'உதவி' என்று வேகமாக கத்தினேன். உடனே சிறிது தூரத்தில் இருந்து ஒரு இளைஞன் தனது நாய்க் குட்டியோடு ஓடி வந்தான். பலம் கொண்ட மட்டும் அந்த முரடனை இந்த இளைஞன் எட்டி உதைத்தான். இளைஞனின் வீரத்துக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத அந்த முரடன் என்னை விட்டு விட்டு ஓடி விட்டான். எனது உடை பாதிக்கு மேல் கிழிந்து விட்டது. அந்த இளைஞன் தனது கோட்டை எனக்கு கொடுத்து 'பத்திரமாக வீடு போய் சேருங்கள்' என்று அனுப்பி வைத்தான். "போலீஸில் புகார் செய்யலாம்" என்று அந்த இளைஞன் சொன்னான். ஆனால் எனது வீட்டுக்கு தெரிந்தால் பெரும் பிரச்னையாகி விடும் என்று இத்தோடு இதனை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டேன். அப்துல்லா ஓன் என்ற இந்த இளைஞனை என் வாழ் நாளில் மறக்க முடியாது. என்னை பொருத்த வரை இவன் ஒரு ஹீரோ' என்கிறாள் அந்த பெண்.

இது பற்றி அப்துல்லா ஓனிடம் கேட்ட பொழுது 'நான் ஒரு ஹீரோவாக வேண்டும் என்ற நினைப்பில் இந்த காரியத்தை செய்யவில்லை. ஒரு மனிதன் ஆபத்தான நேரத்தில் இன்னொரு மனிதனுக்கு செய்த ஒரு உதவியாகவே பார்க்கிறேன். இது எனது கடமை. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருக்கா விட்டால் அந்த பெண் பெரிதும் பாதிப்படைந்திருப்பாள். சில நேரம் இறந்து கூட போயிருக்கலாம். அது போன்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் வலிய நான் சென்றேன்.' என்கிறார்.

அப்துல்லா ஓன் பிறந்தது லிபியாவின் திரிபோலி நகரில். கடந்த 13 வருடங்களாக கிளாஸ்கோவில் வசித்து வருகிறார்.

http://www.dailyrecord.co.uk/news/scottish-news/brave-jogger-dubbed-hero-after-3822487

பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!



பலரையும் சிந்திக்க வைத்த விவேகானந்தர்!

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக்கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார்.

அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து “உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?” என்று கேட்டார் விவேகானந்தர்.

“நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று பதில் சொன்னார்.

“மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது?” என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

“பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!”

“பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக்கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே” என்று மடக்கினார் விவேகானந்தர்.

“ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே” என்றார் பிரச்சாரகர்.

அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் “ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்?” என்று கேலியாகச் சொன்னார்.

"விடுதலை” தலையங்கம் 21-1-2012



Sunday, March 01, 2015

பர்கிட் மாநகர இளைஞர்களின் பொது நலப் பணி!







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பர்கிட் கிளை சார்பாக 22-02-2015 அன்று தெருக்களை சுத்தமாக்கும் பணி தொடங்கியது. பல இளைஞர்களும் முன் வந்து தெருக்களை சுத்தம் செய்தனர். தேவையற்ற புற்களும், குப்பைகளும் அகற்றப்பட்டன.

எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறிக் கொண்டு இருக்காமல் இளைஞர்கள் செயலில் இறங்கியது பாராட்டப்பட வேண்டியது. ஊர்களில் கழிவு நீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் உற்பத்தி ஆவதால் பாதிப்பு நமக்குதானே! அரசியல்வாதிகள் யாரும் மக்கள் பணி ஆற்றுவதற்காக வருவதில்லை. தேர்தலில் போட்ட முதலை வட்டியும் முதலுமாக எப்படி சேர்பது என்றுதான் சிந்திப்பார்கள். எனவே அரசு செய்யும் என்று இனியும் தாமதிக்காமல் பர்கிட் மாநகரக் கிளை செய்தது போல் ஒவ்வொரு தமிழக கிராமமும் செயலில் இறங்க வேண்டும்.

மூடப் பழக்கத்தை எதிர்ப்பது மட்டும் ஏகத்துவ வாதிகளின் பணியல்ல. சுத்தத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்வதும் ஒரு ஏகத்துவவாதியின் பணி என்பதை நிரூபித்த இளைஞர்களுக்கு ஒரு சலாம்! கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து நேரத்தை ஓட்டிய இளைஞர்கள் இன்று பொது நலப் பணியில் ஆர்வம் காட்டுவதற்கு மற்றொரு சலாம்!

Tuesday, February 24, 2015

2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்!



ஷோலே ஹிந்தி படத்தில் வரும் அம்ஜத்கான் போல் இருக்கும் இந்த பாகிஸ்தானிய சிறுவனுக்கு வயது 15 தான். பாகிஸ்தானின் ஹாங்கு மாவட்டத்தில் உள்ள இப்றாகிம்ஜாய் நகரில் வசித்து வந்தான். இந்த சிறுவனின் பெயர் அய்த்ஜாக் ஹஸன். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற இந்த சிறுவன் பள்ளியின் காம்பவுண்டுக்கு வெளியே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் பள்ளியை நோக்கி வேகமாக வருகிறார். அந்த நபர் கையில் உள்ள ரிமோட் கண்ட்ரோலையும், வயிற்றின் பகுதி சற்று உப்பியிருப்பதையும் நோட்டமிட்ட ஹஸன் இவன் தற்கொலை குண்டுதாரி என்பதை யூகித்துக் கொண்டார். அந்த நேரத்தில் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தன.

அவனை தடுத்து நிறுத்தி பள்ளி குழந்தைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று சக நண்பர்களோடு கூறுகிறான் ஹஸன். ஆனால் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று ஹஸனை தடுக்கின்றனர் அவனது நண்பர்கள். எனது உயிரை விட எனது நண்பர்களின் உயிரே முக்கியம் என்று கூறி தற்கொலை குண்டுதாரியை நோக்கி ஹஸன் வேகமாக ஓடுகிறான். இவன் வருவதைப் பார்த்து அவனும் ஓட எத்தனிக்கவே நிலை தடுமாறி பள்ளி வளாகத்தின் காம்பவுண்ட் சமீபமாக அந்த சக்தி வாய்ந்த டைம் பாம் வெடித்து சிதறுகிறது. தற்கொலை குண்டுதாரியும் இளைஞன் ஹஸனும் அதே இடத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். இருவருமே அந்த இடத்திலேயே இறந்து விடுகின்றார்கள். ஹஸன் அந்த கொலைகாரனை தடுத்திருக்கா விட்டால் பள்ளி குழந்தைகளில் பல நூறு பேர் இறந்திருப்பார்கள். இந்த இளைஞனின் சமயோஜித வியூகத்தால் பெரும் குண்டு வெடிப்பு தடுக்கப்பட்டது.

'எனது மகன் எனது மனைவியை அவனது தாயை அழ வைத்து விட்டு சென்றது வருத்தமாக இருந்தாலும் ஓராயிரம் குழந்தைகளின் தாய்களின் அழுகுரலை தனது உயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்தியிருக்கிறான். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்கிறார் ஹஸனின் தந்தை முஜாஹிர் அலி.

பாகிஸ்தான் அரசு இந்த சிறுவனின் வீர செயலை பாராட்டி பட்டமளித்து கௌரவித்தது. ஹஸன் செய்த இந்த வீர செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். இந்த செயலுக்கு ஹஸனுக்கு கண்டிப்பாக இறைவனிடத்தில் வெகுமதி உண்டு. இறைவன் இந்த இளைஞனின் உயிர் தியாகத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு சொர்க்கத்தில் நிரந்தர இடத்தை தர நாமும் பிரார்திப்போம். பழைய செய்தியாக இருந்தாலும் ஜிஹாத் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த செய்தியை பகிர்கிறேன்.

முகமூடி போட்டுக் கொண்டு கிருத்தவர்களையும், குர்துகளையும், ஷியாக்களையும் தலையை அறுத்து படமாக வெளியிடும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இந்த சிறுவன் ஹஸனின் தீர செயலை நினைத்துப் பார்க்கட்டும். இஸ்லாம் காட்டும் வழி இதுதான் என்று இனியாவது உணரட்டும். யூதர்களின் கைப்பாவையாக இஸ்ரேலின் ஏவலாளனாக இனியும் இருக்காமல் செய்த பாவங்களுக்குக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு தூய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளட்டும்.

தகவல் உதவி
பிபிசி
09-01-2014

http://www.bbc.com/news/world-asia-25663992

Thursday, January 22, 2015

'நான் நேசிப்பதால் ஜெத்தாவை தூய்மையாக வைப்பேன்'



பொது மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை உணர்த்தி நகரத்தை சுத்தமாக வைத்திருக்க 50 பேர் அடங்கிய தன்னார்வ குழு தனது பங்களிப்பை அளித்தது. 'சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்: ஏனெனில் நாம் இந்த மண்ணை நேசிக்கிறோம்' என்ற எழுதிய பலகைகளை சுமந்த வண்ணம் சிறுவர்கள் மக்களுக்கு மத்தியில் தூய்மையின் அவசியத்தை பிரசாரம் செய்தனர். குப்பைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஜெத்தாவானது எப்போதும் பிஸியாக உள்ள இடம். மக்கா மதினா வரும் வெளிநாட்டவர் அனைவரும் முதலில் ஜெத்தாவிலேயே இறக்கப்படுவர். அங்கிருந்துதான் உம்ரா, ஹஜ் போன்ற காரியங்களுக்காக பிரித்து விடப்படுவர். எப்போதும் வெளி நாட்டவரின் ஆதிக்கம் உள்ள ஊராக இருப்பதால் குப்பைகளும் மலை போல் குவிந்து விடுகிறது.

இந்த செய்தி பிஜேபியின் சவுண்ட் சரோஜாவுக்கு தெரிந்தால் "மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே ஜெத்தாவிலும் தூய்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று சொன்னாலும் சொல்வார். :-) எனவே நாம் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
22-01-2014

Thursday, January 01, 2015

சூரிய குளியல் புற்று நோயை வரவழைக்கும்! ஆஸ்திரேலியாவில் தடை!



ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.

புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்தது.

இது குறித்து ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் அந்த ஆணையத்தின் இயக்குனர் பால் க்ரோகன் கூறுகையில், "சூரிய குளியல் முறையால் புற ஊதாகதிர்களின் தாக்கம் அதிகமாக உடலில் பாய்கிறது. இதனால் மெலனோமா அளவு அதிகரித்து தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயமான நோய்கள் ஏற்படுகிறது.

கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை விட ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது எங்கள் அரசை கவலையடைய செய்துள்ளது" என்றார்.

கடந்த 2011-ல் ஆஸ்திரேலியாவில் 2000-த்துக்கும் அதிகமானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு அனைத்துக்குமே மெலனோமா அளவு அதிகரித்ததே காரணமாக கண்டறியப்பட்டது. இதற்கு அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையும் காரணமாக உள்ளது.

இதனால் அந்த அரசு பொதுமக்கள் அனைவரும் சன்ஸ்க்ரீன், தொப்பிகள் மற்றும் கருப்பு கண்ணாடிகளை அணிய அறிவுறித்தி வருகிறது. அதோடு அந்த நாட்டில் மிகப் பெரிய பொருளாதார வரவேற்பை பெற்ற சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014

பொது இடங்களில் பெண்கள் மேலாடை எதுவும் இன்றி வெட்கமில்லாமல் சூரிய குளியல் நடத்தும் இந்த முறைக்கு தடை விதித்ததை வரவேற்போம். புற்று நோய் வருவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.

யோகா என்ற பெயரில் சூரிய நமஸ்காரம் செய்யும் நம் ஊர் பழக்கத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தி அதன் தீமையை உணர வைக்க வேண்டும். யோகாவில் சொல்லப்படும் மற்ற பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரலாம். ஆனால் சூரிய வணக்கத்தை அதில் சேர்க்க முடியாது. பல பள்ளிகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரத்தால் கண் பார்வையில் பலருக்கு பிரச்னையை உண்டு பண்ணியுள்ளது. உடல் ஆரோக்கியத்தை பெறுகிறேன் என்று உடலுக்கு தீங்கை வரவழைக்கும் சூரிய குளியல், சூரிய நமஸ்காரம் போன்றவற்றை அரசுகள் கவனத்தில் எடுத்து மக்களின் அறியாமையை போக்க முன் வர வேண்டும்.