Followers

Thursday, October 08, 2015

முகமது நபி அவர்களின் கண் கலங்க வைக்கும் எளிய வாழ்கை!


ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். முகமது நபி அவர்களின் வீட்டில் பதனிடப்பட்ட மூன்று தோல் துண்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி பார்லி அரிசியும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேறு பொருட்கள் எதுவும் தென்படவில்லை. உமர் அழத் தொடங்கினார். 'உமரே ஏன் அழுகிறீர்கள்?' என்று முகமது நபி கேட்டார். அதற்கு உமர் 'இறைவனின் தூதரே! நான் ஏன் அழக் கூடாது? அழாமல் வேறென்ன செய்வது? தங்கள் திரு மேனியில் பாயின் அச்சு பதிந்திருப்பதைப் பார்க்கின்றேன். மேலும் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களையும் பார்க்கின்றேன். இறைவனின் தூதரே! வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை நமக்கு அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்தியுங்கள். பாரசிகர்களும், ரோமானியரும் இறைவனை வணங்குவதில்லை. அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையும் கிடையாது. என்றாலும் ரோமானியப் பேரரசர்களும் பாரசீகப் பேரரசர்களும் அற்புதமான நீரோடைகளுக்கிடையே அமைந்துள்ள அழகிய வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் இறைவனின் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள், இறைவனின் அடிமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தாங்கள் வறுமையில் வாழ்கிறீர்கள்.' என்று முகமது நபியைப் பார்த்துக் கூறினார்.

அதுவரை தலையணையில் சாய்ந்திருந்த முகமது நபி அவர்கள் சட்டென எழுந்து அமர்ந்து பின் வருமாறு கூறினார்: 'உமரே! தாங்கள் இந்த விஷயம் குறித்து இன்னுமா சந்தேகம் கொள்கிறீர்கள்? இந்த உலகில் கிடைக்கும் அமைதியான வசதியான வாழ்க்கையை விட மறு உலகில் கிடைக்கக் கூடிய அமைதியும் வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையே சிறந்தது.'

-திர்மதி, ரியாளுஸ் ஸாலிஹீன்
486- ஹதீது எண்.

----------------------------------------

பிலால் அவர்கள் அறிவிக்கிறார்கள் : முகமது நபி அவர்கள் தமக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருட்களைத் தமக்கு எதிர்காலத்தில் பயன்படட்டும் என்று எந்தப் பொருளையும் தமக்கென்று வைத்துக் கொண்டதில்லை. தமக்குக் கிடைத்தவற்றை எல்லாம் ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்கி விடுவார். ஒருமுறை முகமது நபி அவர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் நிறைய பொருட்கள் கிடைத்தன. ஆனால் அவர் அவற்றில் தமக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பொருட்கள் அனைத்தையும் தேவைப் படுவோருக்கு வழங்காமல் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.'

-ரியாளுஸ்ஸாலிஹீன்
465,466- ஹதீது எண்

------------------------------------------

முகமது நபி அவர்கள் தம் வாழ்நாளில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்தவர். ஆனால் அவர் மரணத் தருவாயில் கடனாளியாக இருந்தார். அவரது கேடயம் மதீனாவில் உள்ள ஒரு யூதக் குடி மகனிடம் அவர் பெற்றக் கடனுக்குப் பகரமாக வைக்கப்பட்டிருந்தது.
-ரியாளுஸ் ஸாலிஹீன்
504 - ஹதீது எண்.

'முகமது நபி அவர்கள் நன்கு அரைக்கப்பட்ட மாவை ரொட்டியாகச் சமைத்து சாப்பிட்டதுண்டா? என ஸஹ்ல் பின் ஸஃத் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'முகமது நபி அவர்கள் மரணிக்கும் வரை அந்த மாவைப் பார்த்ததே இல்லை' எனக் கூறினார்கள். 'அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடை இருந்ததா?' என்று கேட்டதற்கு 'சல்லடை இருந்ததில்லை' என்று கூறினார். பிறகு 'அப்படியாயின் கோதுமையை எப்படி மாவாக்கினீர்கள்?' எனக் கேட்கப்பட்டதும் 'அதை இடித்த பின் அதில் ஊதுவோம். பறக்கக் கூடிய உமி போன்றவை பறந்ததும் அதில் நீரைச் சேர்த்து குழைத்துக் கொள்வோம்'
ஆதாரம் : புகாரி, அஹ்மத், இப்னுமாஜா

------------------------------------------------

இப்படிப்பட்ட உத்தம தலைவரை நாம் பெற்றதற்காக இறைவனுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்தக் கொள்வோம். மத வெறி, மொழி வெறி, வறுமை, நோய் போன்றவற்றால் நாம் பாதிக்கப்படும் போது இறைவனை நொந்து கொள்கிறோம். வணங்குவதில் இஸ்லாத்தை பேணுவதில் நான் எந்த குறையையும் வைக்கவில்லையே! பிறகு ஏன் என்னை இறைவன் சோதிக்கிறான் என்று கேட்பவர்களுக்கு இந்த வரலாறுகள் தக்க பாடத்தைப் புகட்டும்.

7 comments:

Dr.Anburaj said...

(நபி கூறுகிறார், குரைஷிகள் என்னை நம்பவில்லை, நான் அல் ஹிஜ்ர் (கஅபாவின் கூரையிடப்படாத பகுதி) முன் நின்று கொண்டிருந்தேன். அல்லாஹ் பைத்துல் முகத்தஸ் என் முன்னே காண்பித்தான். நான் பார்த்த அடையாளங்களை அவர்களுக்கு கூறினேன்)



முஸ்லீம் ஹதீஸ் எண்: 251அத்தியாயம்: 1, பாடம்: 1.75,

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)

“(கஅபாவின்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் வைத்து (எனது இரவுப் பயணத்தைப் பற்றிக்) குறைஷிகள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு நினைவில் இல்லாத, பைத்தில் மக்திஸ் பள்ளி சார்ந்த (அடையாளங்கள்) சிலவற்றை என்னிடம் அவர்கள் கேட்டபோது முன்னெப்போதும் நான் வருந்தியிராத அளவுக்கு எனக்கு வருத்தம் மேலிட்டது. அப்போது பைத்துல் மக்திஸை அல்லாஹ் எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக் கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றைப் பற்றியும் விபரம் தெரிவித்தேன்”.

“(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருக்கக் கண்டேன். அங்கு மூஸா (அலை) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்து ஆண்களைப் போன்று வாளிப்பான தோற்றத்துடன் இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா(அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களுள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களைத் தோற்றத்தில் மிக நெருக்கமாக ஒத்திருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களை, சாயலில் மிகவும் ஒத்திருப்பவர் உங்கள் தோழர்(ஆகிய நான்)தான்”.

“அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைத்தூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக் கொண்டு எனக்கு ஸலாம் சொல்லி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.Ishaq:183
“Upon hearing this many became renegades who had prayed and joined Islam. Many Muslims gave up their faith. Some went to Abu Bakr and said, ‘What do you think of your friend now? He alleges that he went to Jerusalem last night and prayed there and came back to Mecca.’

Dr.Anburaj said...

(இஸ்லாமை ஏற்றுக் கொண்டிருந்தவர்கள், இதை கேட்டவுடன் நம்பிக்கையிழந்தனர். சிலர் அபூபக்கரிடம் சென்று, “கடந்த இரவில் ஜெருசலேம் சென்று அங்கு தொழுகை நடத்தி மெக்காவிற்கு திரும்பியதாக உறுதியாக கூறும், உங்களது நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்)

அவர் (முஹம்மது நபி) இதைக் கூறியிருந்தால் நம்புகிறேன், ஆம் அவர் கூறியது அனைத்தையும் நம்புகிறேன் உண்மையே என்றார். அபூபக்கர், இதன் பிறகே சித்தீக் (உண்மையே கூறுபவர்) என்ற அடைமொழியுடன் அபூபக்கர் சித்தீக் என்று அழைக்கப்படலானார். ஆயினும் இந்த நிகழ்வை ஏற்க மறுத்து சிலர் இஸ்லாமை விட்டு விலகினர். இச்சம்பவத்தின் பொழுது 70 – 80 பேர்களே இஸ்லாமை ஏற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மஸ்ஜித்” என்பது முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகை நடத்தும் வழிபாட்டு இடத்தைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் ஹராம்” என்பது சவூதி அரேபியாவின் மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். “அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்பது ஃபலஸ்தீனின் ஜெருசேலத்தில் உள்ள பைத்துல் மக்தஸைக் குறிக்கும்.

இந்த விண்வெளிப் பயணம் தொடர்பான செய்திகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுக்கு எதிரானவைகள். தாவூது நபி மற்றும் சுலைமான் நபியால் கிமு 958-951 கட்டப்பட்ட ஆலயம், கிமு 1004 -ல் கட்டி முடிக்கப்பட்டது. கிமு 586-ல் நெபுகத்நெஸ்ஸார் என்ற பாபிலோனிய மன்னரின் படையெடுப்பில் அந்த ஆலயம் முற்றிலும் தகர்கப்பட்டது. இரண்டாவது கட்டப்பட்ட ஜெருசலேம் ஆலயம், கிபி 70 ஆண்டு டைட்டஸ் என்ற ரோமானிய மன்னரின் படையெடுப்பில் அதாவது நபி பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்கள் அந்த யூதக் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அந்த யூதக் கோவிலை இருந்த இடம் தெரியாதவாறு செய்து விட்டனர். இப்பொழுது நீங்கள் பார்க்கும் எண்கோண (Octagon) வடிவ பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா (Dome of Rock) கலீபா அப்து அல்-மாலிக் இப்ன் மர்வான் என்பவரால் கிபி 691-ல் கட்டப்பட்டது அதாவது நபியின் மரணத்திற்கு பின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்டது. கிபி 1016 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முற்றிலும் அழிந்த கட்டிடத்தை Zaher Li-l’zaz என்பவரால் கிபி 1022 ல் மீண்டும் கட்டப்பட்டது. அதற்கு கிப்லா இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கிபி 691வரை மஸ்ஜிதுல் அக்ஸா இல்லை. குர்ஆன் 17:1 வசனம் குறிப்பிடும் மஸ்ஜிதுல் அக்ஸா நபி உயிருடன் இருந்த பொழுது இல்லவே இல்லை.

366,

Dr.Anburaj said...

இதில் இன்னொரு தவறும் உள்ளது. கஅபா, இப்ராஹிம் நபியால் கிமு 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. (இன்னும் சில ஆதாரங்கள் கஅபா, ஆதம் நபியால் கட்டப்பட்டது என்கிறது.) தாவூது நபி காலத்தல் துவங்கி சுலைமான் நபி, Temple of Solomon (மஸ்ஜிதுல் அக்ஸா / பைத்துல் முக்அதிஸ்) கிமு 958-1004 ல் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறுகள் தெளிவாக கூறுகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 1040 ஆண்டுகள். முஹம்மது நபி கூறியதில் ஆயிரம் ஆண்டுகள் பிழையுள்ளது.

நாம் விண்வெளி பயணத்தை தொடர்வோம். முஹம்மது நபி அவர்களின் விண்ணுலகப் பயணத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.

புகாரி ஹதீஸ் : 7517

…”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…

Readislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…

…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார். அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.

யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்? கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.

அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.

போலந்துக்காரர் கோபர் நிகஸ் (1473-1543) பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்? இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட கியார்டனோ புரூனோ (1548-1600) என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். டைகோ பிராகே (1546-1601) என்பவர் தனது 20 வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம்


தஜ்ஜால்

Dr.Anburaj said...



காபாவில்Hajr-e-Aswad என்பது என்ன என்று சுவனப்பாியன் அவர்களைக் கேட்டேன். இதுவரை பதிலளிக்கவில்லை. அளியுங்கள்.ஒரு பெண் தேவதையின் இனவிருத்தி புழை என்று நண்பா் சொன்னாா் உண்மையா ?

சிறப்பு சிறப்பு. அருமையான வரிகள் அருமையான வரி said...

தெய்வீக சேவை சொல்வதற்கு இல்லை வார்த்தைகள்

சிறப்பு சிறப்பு. அருமையான வரிகள் அருமையான வரி said...

இறைவனுக்கே date 07_dec_21புகழும் எல்லா 🛑 *VERY EMER🛑GENCY 🛑NEED BLOOD*🛑🛑🛑🛑🛑 patient name:- Venkates 26y. Male.
reason :- CANCER Blood group :- O+ possitive 3 units
APPOLO CANCER HOSPITAL , TENAMPET CHENNAI.
attender sudhir , CELL 957384365. verified by srinivas 9551517700

சிறப்பு சிறப்பு. அருமையான வரிகள் அருமையான வரி said...

தவ்ஹீத் ஜமாத் போன் ண் வேண்டும்