மாரிமுத்து என்ற நாவிதர் இன்று தொழுகையில் தலைவர்!'என் பெயர் மாரிமுத்து. அம்பட்டையன் என்று சொல்லக் கூடிய நாவிதர் சாதியில...
Posted by Nazeer Ahamed on Thursday, December 17, 2015
மாரிமுத்து என்ற நாவிதர் இன்று தொழுகையில் தலைவர்!
'என் பெயர் மாரிமுத்து. அம்பட்டையன் என்று சொல்லக் கூடிய நாவிதர் சாதியில் பிறந்தவன். எங்கள் சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட குடியிருப்புக்கும் போக முடியாது. மேல் சாதி குடியிருப்புக்கும் செல்ல முடியாது. அப்படியொரு இக்கட்டான நிலைதான் எங்களுடைய சாதிக்கு. பலமுறை பொதுவில் வைத்து அவமானப்படுத்தப்பட்டேன். அவமானத்தால் கூனி குருகி நின்றிருக்கிறேன். துக்கம் விசாரிக்க இறந்த வீட்டுக்கு சென்றாலும் வீட்டுக்கு வெளியில்தான் நாங்கள் நிற்க வேண்டும். இதை எல்லாம் அனுபவித்து வாழ்க்கையே வெறுத்த போது தான் இரண்டு இஸ்லாமிய தோழர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார்கள். பல உண்மைகள் எனக்கு தெரிய ஆரம்பித்தது. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியிலும் கேள்விகள் கேட்டேன். குர்ஆனையும் வாசித்தேன். தெளிவு கிடைத்தது. இன்று உங்கள் முன் இஸ்லாமியனாக நிற்கிறேன்.
முன்பு சாமி கும்பிட கோவிலுக்குள் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று நான் பள்ளிவாசலில் தொழுகைக்கு தலைவனாக நின்று தொழ வைக்கிறேன். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ளவர்களும், பட்டதாரிகளும் என்னை பின் பற்றி தொழுகின்றனர். எனது குடும்பத்திடம் இதை எல்லாம் எடுத்துச் சொன்னேன். எனது மனைவியும், எனது இரண்டு மகள்களும் எனது மகனும் எந்த மறுப்பும் சொல்லாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இன்று எனது மகளை ஒரு முஸ்லிமுக்கு திருமணம் முடித்துக் கொடுத்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். எனக்கு ஒரு செலவும் இல்லை. மாப்பிள்ளை மஹர் கொடுத்து எனது மகளை திருமணம் முடித்துக் கொண்டார். இன்று நான் மாவட்டப் பேச்சாளராக இருந்து வருகிறேன். மன நிம்மதியோடு எனது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
1 comment:
சுத்தப் பேத்தல். முஸ்லீம்களில் நாவிதா்கள் உள்ளாா்கள்.அவர்களின் சமூக நிலை எனக்கு நன்கு தொியும். முஸ்லீம் நாவிதா்களின் குடும்பங்கள் தங்களுக்குள்தான் திருமண உறவு வைத்துக் கொள்கின்றாா்கள். இந்துக்களுக்கு முறையான சமய கல்வி அளிக்கப்படவில்லை.அதனால் சில பிரச்சனைகளுக்கு தீா்வுகாணும் மன பக்குவம் இல்லாது ”இருப்பது தொடர வேண்டும்” என்ற மனநிலையில் சில குறைகள் நடந்து வருகின்றது.
ஒழுக்கத்தில் முஸ்லீம்கள்தான் உயா்ந்தவா்கள் என்ற கருத்தையா தங்களின் கட்டுரை வலியுறுத்துகின்றது.அப்படியானால் அது தவறுதான்.
Post a Comment