Followers

Showing posts with label தமிழர்கள். Show all posts
Showing posts with label தமிழர்கள். Show all posts

Saturday, January 11, 2020

சாமி கும்பிட வந்தவரின் வாயில் மூத்திரத்தை கொடுத்த கொடூரம்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவனூர் கிராமத்தை சேர்நத தலித் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 20) வெல்டராக பெங்களூரில் பணி புரிந்து வந்தார். சென்ற மார்ச் 2 ந்தேதி தனது கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கருவனூர் வந்துள்ளார் அரவிந்தன். இது பற்றி அரவிந்தன் கூறியதாவது....

'எனது உறவினர் தினேஷை (வயது 20) அழைத்துக் கொண்டு திருவிழா நடக்கும் கோவிலுக்கு சென்றேன். சில உயர் சாதி இந்துக்கள் நாங்கள் கோவிலுக்குள் வந்ததை ஜீரணிக்க முடியவில்லை. உடன் அவர்கள் கும்பலாக எங்களை சூழ்ந்து கொண்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். எங்கள் இருவரையும் கழிவறை இருக்கும் இடம் வரை இழுத்தச் சென்றனர். அங்கும் எங்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர். அடி தாங்காமல் நான் கீழே வீழ்ந்தேன். அப்போது மிகுந்த தண்ணீர் தாகம் எடுத்தது. 'தண்ணீர்... தண்ணீர்' என்று பிதற்றினேன். உடனே உயர் சாதி இளைஞன் ஒருவன் எனது வாயில் மூத்திரத்தை பெய்தான். எனது உறவினர் தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான். பிறகு எனது உறவினர்கள் வந்து என்னை மீட்டனர்' என்கிறார் அரவிந்தன் என்ற தலித் இளைஞர்.

மறுநாள் அரசு ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்படுகிறார். அருகில் உள்ள கல்லாவி காவல் நிலையத்தில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி நீதி கேட்டுள்ளார். ஆனால் காவலர்களோ வன்கொடுமை சட்டத்தில் கேஸை புக் பண்ணாமல் சாதாரண அடிதடி கேஸில் வழக்கு பதிந்துள்ளனர்.

'தமிழ்நாடு குறவர்கள் பழங்குடியின மக்கள் சங்கத்தின்' தலைவர் ரவி சொல்கிறார் 'காவல் துறையைச் சார்ந்த சிலர் என்னிடம் வன் கொடுமை சட்டத்தில் கேஸ் புக் பண்ணாமல் இருப்பதற்காக மேல் சாதியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக சொல்கின்றனர். இதனை நாங்கள் விடப் போவதில்லை. நீதி மன்றத்துக்கு இந்த சம்பவத்தை எடுத்துச் செல்வோம்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
18-03-2015

தான் வணங்கும் சாமியை கும்பிட வந்தது அவ்வளவு பெரிய தவறா? மூத்திரத்தை அந்த இளைஞன் வாயில் ஊற்றும் அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன என்பதை இந்துத்வாவாதிகள் விளக்குவார்களா?

இந்து மதத்தில் உள்ள இது போன்ற தவறுகளை எல்லாம் களைந்தால் ஏன் மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்? இந்து மதத்தை காக்க NRC போன்ற சட்டங்களும் தேவையில்லையே? மோடியும் அமித்ஷாவும் சிந்திப்பார்களா? 
...

Tuesday, October 10, 2017

ஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு?



ஆரியர்கள் நம் நாட்டின் பூர்வ குடிகள் அல்ல என்பதை அவர்களின் தோற்றங்களையும் பேசும் முறைகளையும் வைத்தே நம்மால் ஊகித்து விட முடியும். இது பற்றிய பல செய்திகளை ஆதாரங்களோடு 'வழிப்போக்கன்' என்ற பதிவர் தனது தளத்தில் பதிவுகளாக பதிந்துள்ளார். அதனை இனி பார்போம்.

அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத்தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்"
என்றே "பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்" என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

Wednesday, September 27, 2017

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென...

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு

அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே -மாணிக்க வாசகர்,திருவாசகம்.


(ஆதி சிவனை தவிர்த்து மற்றும் ஒரு தெய்வம் உண்டு என்று நம்புபவர்கள் கண்டு நான் அஞ்சுகிறேன் )


ஆதி சிவன் என்று இந்துக்கள் சொல்கின்றனர். அல்லாஹ் என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர். மாணிக்க வாசகர் வணங்குவது ஏக இறைவனையே... அதையே தான் இஸ்லாமும் சொல்கிறது.

Thursday, March 16, 2017

தமிழக கிராம இளைஞர்கள் இவர்களைப் பின்பற்றுவார்களா?



கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி

-------------------------------------------------



புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.

------------------------------------------------


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.

சீமைக் கருவேல மரக்காடாக காணப்பட்ட புதுக்குறிச்சி ஏரி இன்று நீர்சூழ காட்சியளிப்பதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்கிற புதுக்குறிச்சி இளைஞர்களின் முயற்சிக்கு ஊக்க மளிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏரியை சீரமைத்துக்கொள்ள கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இளைஞர்களும், ஊர் மக்களும் சேர்ந்து உத்வேகத் துடன் ஏரியைச் சீரமைத்தனர். ஏரி முழுவதும் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஏரியின் ஒரு பகுதியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து ஊர் மக்கள் சிலர் விவசாயத்துக்குப் பயன்படுத்தினர். ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களைத் தூர்வாரி சீரமைத்தனர்.

வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் ஏரி நிறைந்துவிடும் என நினைத்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பருவ மழை பெய்யவில்லை. எனினும், ஏரியைச் சீரமைத்த இளைஞர்கள் கடமையை செய்துவிட்டு நம்பிக் கையுடன் இருந்தனர்.

இந்நிலையில், நீண்ட நாட் களுக்குப் பிறகு மார்ச் 10-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், புதுக் குறிச்சி ஏரியில் கணிசமான அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் தண்ணீரைப் பார்த்த அப்பகுதி முதியவர்கள், ஏரியைச் சீரமைத்த இளைஞர்களை வெகுவாகப் பாராட்டினர். புதுக்குறிச்சி ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள தகவல் அறிந்து பல்வேறு பகுதி மக்கள் அங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

“ஏரிக்கரையைப் பலப்படுத்தும் விதமாக கரை பகுதிகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பனை மரங்களை நடவு செய்துள்ளோம். வண்டல் மண் எடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தினால், மேலும் பல நீர்நிலைகளைச் சீரமைக்க மக்கள் தயாராக உள்ளனர்” என்கின்றனர் நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்.

புதுக்குறிச்சி ஏரியைச் சீரமைக் கும் பணியின் பின்னணியில் இருந்து வழிகாட்டிய சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ்

கருப்பையா கூறும்போது, “அனைவருக்கும் பொதுவான தண்ணீரைச் சேமிக்கவும், பயன்படுத்தவும் நமது முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றின் மகத்துவம் புரியாமல் நாம் நீர்நிலைகளைக் காப்பாற்றத் தவறியதால், தற் போது, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறோம்.

நாம் நமது கடமையை செய் தால் இயற்கை அதன் கடமையை சற்று காலம் தாழ்த்தியாவது செய்யும் என்பதை புதுக்குறிச்சி ஏரி புனரமைப்பு நிகழ்வு நிரூபித் துள்ளது. இளைஞர்களின் முயற் சிக்கு இயற்கை தனது கொடையை சற்று தாமதமாக மழையாகப் பொழிந்து அளித்துள்ளது. அரசு

நிர்வாகம் நீர்நிலைகளைத் தூர் வாரும், புனரமைக்கும் என எதிர் பார்த்துக் காத்திராமல், அவரவர் பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைக்க அந்தந்த பகுதி மக்கள் முன்வர வேண்டும். மக்களுக்கு தண்ணீரின் தேவையை கருத்தில் கொண்டு நீர்நிலைகளைத் தூர் வார, புனரமைக்க கூடுதல் நிதியை அரசு ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
16-03-2017

இறந்த முத்துக் கிருஷ்ணனின் முகநூல் பதிவுகள்!





தலைநகர் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கின்றன முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள்.

முத்துக்கிருஷ்ணனின் தந்தை பெயர் ஜீவானந்தம். இந்த பதிவில் 'ஜீவாவின் மகன்' என்று தன்னைப் பற்றி பேசியிருக்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பதிவு:

"அந்த ஆடிட்டோரியத்தின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் திரை ஸ்கிரீன் ஜீவாவின் மகனைச் சற்றுப் பின்னோக்கி நினைவலைகளை அசைபோடச் செய்தது. 70எம்.எம். பெருந்திரையில் பிதாமகன் தமிழ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்தவுடன் மீண்டும் திரையில் வெண்ணிறம். அது அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தைப் பார்த்து முடித்த ஜீவாவின் மகன் கிட்சிப்பாளையத்துக்குச் சென்றார்.. மானா (மாட்டிறைச்சி வாங்க). மானா சந்தையில் வாங்கிய மாட்டிறைச்சியைக் கறுப்பு கேரி பேகில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றார் ஜீவாவின் மகன். அங்கிருந்து வலப்புறம் திரும்பினால் ஓரியன்டல் சக்தி திரையரங்கு. அதற்கு பக்கத்திலேயே லட்சுமி ஐஸ்க்ரீம் கடை. அங்கிருந்த எல்லோரது கண்களும் அந்த கறுப்பு கேரிபேக் மீதுதான். அந்த காலகட்டத்தில் கறுப்பு கேரி பேகில் மானா மட்டுமே பொட்டலம் கட்டப்படுவது வழக்கம். கறுப்பு கேரி பேகை பார்த்தவுடன் அனைவரது கண்களும் சட்டென திரும்பிக்கொள்ளும்.

அசராத ஜீவாவின் மகன், 5 கிலோ மானா அடங்கிய பையுடன் சேலம் பழைய பேருந்து கிளாக் ஹவுஸூக்கு வந்து சேர, சத்திரம், லீ பஜார் வழியில் செல்லும் பஸ்ஸுக்கான காத்திருப்பு ஆரம்பித்தது. அப்போது ஜீவாவின் மகன் பள்ளி நண்பன் ரமணா அவ்வழியாக வர. ஜீவாவின் மகன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ரமணாவுடன் பேசிக்கொண்டு 4 ரோடு நிறுத்தம் செல்லும் பொழுதை போக்கலாம் என்று. ஆனால், ரமணாவோ ஜீவாவின் மகன் கையிலிருந்த மானா பையைப் பார்த்தவுடன் பக்கத்திலேயே வரவில்லை.

6-ஏ பஸ் வர ஜீவாவின் மகன் அதில் ஏறிக்கொள்கிறார். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சேலம் ஆட்சியர் அலுவலக நிறுத்தம் வந்தது. அங்கு வேலைபார்க்கும் அதிகாரி ஒருவர் பேருந்தில் ஏறினார். ஜீவா கையிலிருந்த மானா பை அவரது கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தபின் அவர் ஜீவா அருகே உட்காரவில்லை. இத்தனைக்கும் பஸ்ஸில் வேறு எங்கும் இடமில்லை. அடுத்ததாக கல்பனா தியேட்டர் நிறுத்தம். அங்கு ஒரு தம்பதி 3 வயது குழந்தையுடன் ஏறினர். உட்கார அவர்கள் இடம் தேடினர். ஜீவாவின் மகன் இருக்கையிலிருந்து எழுந்த நிற்க முடிவு செய்திருந்தார். காரணம், பஸ்ஸில் பயணித்த யாரும் ஜீவாவிடம் பேசத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே அந்த தம்பதி உட்கார இடம் தேடியபோது இருக்கையிலிருந்து எழுந்து சென்று ஜீவா இடம் கொடுத்தார். ஆனால், மானா பையை பார்த்த அவர்கள் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அதற்குள் மானா வாசனை பஸ் முழுதும் பரவியிருந்தது. 4 ரோடு வரும்வரை அந்த இருக்கையில் யாருமே அமரவில்லை.

4 ரோடு நிறுத்ததுக்குப் பின் ஜீவாவின் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டார். தம்மன்னன் செட்டி ரோடுவரை படிக்கட்டில் பயணம் நீடித்தது. ஆனால், உடன் நின்றிருந்த பயணிகளுக்கு அவ்வளவு கோபம். மானா பையிலிருந்து வந்த வாசனையால் வந்த கோபம் அது. சிலர் ஜீவாவின் காலை (வேண்டுமென்றே) மிதித்தனர். சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிய ஜீவா லீ பஜாரை நோக்கி நடையைக் கட்டினார். சிலர் மானா பையைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் விலகி நடந்தனர். சிலர் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்துக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் காலத்தில் மானாவுக்கு சமத்துவம் இல்லை. இப்போது மானாவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதும், எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது"

இப்படி அந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு கறுப்பு கேரி பேக் சாதிய அடையாளமாக இருப்பதை விவரித்திருக்கிறது.

'நான் இளவரசனாக விரும்பவில்லை'

இது முத்துக்கிருஷ்ணனின் முகநூலில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பகிரப்பட்ட நிலைத்தகவல். "தாஜ்மகால் முன்னால் காதலி இல்லாமல். கல்லூரியில் நான் கொண்ட ஒருதலை காதல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நானும் எல்லாவற்றையும் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில், நான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கருக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் காதல் கொண்ட பெண்ணைவிட சிறந்த பெண் இந்த உலகத்தில் எனக்குக் கிடைப்பாள்.

இப்போது என் எண்ணமெல்லாம் எனது ஆயா செல்லம்மாள் பற்றியே இருக்கிறது. செல்லம்மாள்தான் என் ஆயா" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கணிதமே வரலாறு'

எம்.ஃபில்., பி.எச்.டி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என யுஜிசி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தன. அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு நிலைத்தகவலை தனது ஃபேஸ்புக்கில் பதிந்தார்.

"எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்"

இவ்வாறாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து.. தமிழில்: பாரதி ஆனந்த்.

-----------------------------------------------------

மாட்டுக் கறி தின்பது ஏதோ மிகப் பெரிய குற்றம் என்பதை வர்ணாசிரம தர்மம் மிக ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. அதனை மாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றால் அது மிகையில்லை.

Sunday, March 12, 2017

திருக்குறளில் உள்ள முரண்கள்

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.

உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.


தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.

பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.

தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.

புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.

விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

Sunday, August 21, 2016

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு.

'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும்.

தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம்...


அந்த காலத்தில் சமண மதத்தையும் பவுத்த மதத்தையும் எவ்வாறு இந்து மதம் அழித்தது என்பதற்கு இந்த பாடலும் ஒரு சான்று!

Monday, March 14, 2016

ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!











ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!

ஒரு மதம் அதனை பின்பற்றும் மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் கருத்துக்களை குறைந்த பட்சம் நீக்கவாவது முயற்சிக்க வெண்டும். கவுரவக் கொலைகள் இனியும் நடைபெறாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

82 கவுரவக் கொலைகள் இதுவரை நடந்துள்ளது. ஜாதி தீண்டாமை என்பது 'இந்து மத அடிப்படைகளில்' கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து இந்து மதத்திலிருந்து தங்களை நிரந்திரமாக 'மத மாற்றத்தின்' மூலம் துண்டித்து கொள்வதே நமக்கு சிறந்த தீர்வு....

Sunday, March 13, 2016

உடுமலையில் சாதி வெறியில் மற்றொரு கொலை!



காதலித்து திருமணம் செய்தவர்களை உடுமலையில் பட்டப்பகலில் கூலிப்படையினர் வெட்டியதில் பொறியியல் மாணவரான காதலன் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குமரலிங்கத்தில் வசித்து வருகின்றனர். சின்னராஜின் மகள் தனியார் கடையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே பொதுமக்கள் கூடியதால் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

’பெண்ணின் உறவினரே திட்டம்’

கொலைக்கு பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரே திட்டம் தீட்டியது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். வாகனத்தில் தப்பிச் சென்ற மூவரையும் விரைவில் பிடிப்போம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-03-2016

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பட்ட பகலில் பொது மக்கள் முன்னிலையில் சராமாரியாக வெட்டி விட்டு போகின்றனர். பொது மக்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் சாதி வெறியை இந்த மக்களிடம் இருந்து அகற்ற முடியாது. எனவே சாதி மாறி திருமணம் புரிவதை தடை செய்ய சட்டம் இயற்றி இந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அல்லது மதம் விருப்பமுடைய மதத்துக்கு மாறி திருமணம் புரிய வேண்டும். அல்லது சொந்த பந்தங்கள் இல்லாத வெளி மபநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட வேண்டும். இதை செய்யாத பட்சத்தில் இந்த கவுர கொலைகள் நமது தமிழகத்தில் குறைய வாய்ப்பில்லை.

இந்த கொலை கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் அதனையும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=k8KQDbdK_6o

Sunday, January 24, 2016

பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!

பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்...

Posted by Nazeer Ahamed on Sunday, January 24, 2016

பொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்!

வெளியே தமிழ்த்துவம் உள்ளே இந்துத்துவம்

2009 ஜனவரி ‘த சண்டே இந்தியன்’ இதழில் ‘தைப்பொங்கல் அனைத்துத் தமிழர்களின் விழா கிடையாது, அதுவொரு இந்து மதப் பண்டிகையே’ என நான் ஒரு கட்டுரை எழுதியபோது பெரியளவில் எதிர்வினைகள் ஏதும் எழவில்லை. இம்முறை பொங்கலையொட்டி அதே கருத்தை நான் சமூக வலைத்தளங்களில் சொன்னபோது கன்னா பின்னாவென்று எதிர்வினைகள் கிளம்பலாயின. வழமைபோலவே ‘இது தமிழர்களைக் கூறுபோடும் முயற்சி’ என்றும் பல எதிர்வினையாளர்கள் சொல்லத் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் ஆங்காங்கே கிளம்பும் ‘முப்பாட்டன் முருகன்’ போன்ற தமிழ்த்துவ எழுச்சிகள் இந்த எதிர்வினைகள் எனப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இன்றைக்கு முப்பது வருடங்களிற்கு முன்புவரை இந்துகளைத் தவிர்ந்த ஏனைய மதத்தவர்கள் தைப் பொங்கல் கொண்டாடியதேயில்லை. முப்பது வருடங்களிற்கு உள்ளாக மிகச் சில கத்தோலிக்க ஆலயங்களில் மட்டுமே பொங்கலிடும் வழக்கம் நுழைந்திருக்கிறது. ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளின் ஆலயங்களில் பொங்கலிடும் வழக்கம் இன்றுமில்லை. மசூதிகளிலும் பொங்கிப் படைக்கும் வழக்கமில்லை. இந்துகளைத் தவிர்த்த ஏனைய தமிழ்பேசும் மதத்தவர்கள் இன்றுவரை தங்களது வீடுகளில் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. அவ்வாறானால் இதை எவ்வாறு தமிழர்களின் பொது விழா என அழைக்கமுடியும்?

இன்றைக்கு ஓர் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ்ச் சமூகத்தில் தலித்துகளின் உரிமைகளும் நிலமைகளும் எவ்வாறிருந்தன என்பது எல்லோரும் அறிந்ததே. கோயிலிற்குள் நுழைய முடியாது, கோயில்களில் தேங்காய் உடைக்க முடியாது, பொதுக் குளங்களில் குளிக்க முடியாது, தண்ணீர் அள்ள முடியாது, நிலம் வைத்திருக்க உரிமையில்லை, பொது வழிகளில் நடமாடக்கூடாது, மேற்சட்டை அணிய முடியாது, தாலி கட்ட உரிமையில்லை, அவ்வளவு ஏன் சில பிரிவினருக்கு வீட்டில் பாயாசம் சமைக்கக் கூட உரிமையில்லை. அவ்வாறெனில் இந்த மக்கள் உண்மையில் பொங்கலைக் கொண்டாட வாய்ப்புகள் இருந்தனவா? பிற சாதித் தமிழர்களோடு பொங்கலைப் பகிர்ந்துண்டு களித்தார்களா? இல்லையெனில், வரலாற்றுரீதியாக இதுவொரு சாதி இந்துகளின் பண்டிகையே தவிர ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்டிகை அல்ல.

எந்த நேரத்தில் வரலாறு என்ற பெயரை உச்சரித்தேனோ தெரியாது, பொங்கல் பிரியர்கள் பொங்கல் தமிழர்களின் ஆதி விழாவே என நிறுவுவதற்காக, சங்க காலம்வரை ஆதாரங்களைத் தேடிச் சென்றார்கள். அகநானூறில் ஆதாரம் இருக்கிறது என்றார்கள், புறநானூறில் ‘புரூவ்’ இருக்கிறது என்றார்கள். ஆனால் யாரும் இதுவரை உருப்படியாக ஓர் ஆதாரத்தைக் கூடக் காட்டியதில்லை. தை முதல் நாளில், தமிழர்கள் பொங்கல் விழா எடுத்தார்கள் என்பதற்கு எந்த இலக்கியத்திலிருந்தும் அவர்களால் ஆதாரங்களைக் காட்ட முடியவில்லை. எனவே, பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும், விவசாயத்திற்கு மழை அருளிய இந்திரனுக்கு புதியவற்றைப் பொங்கலிட்டு வழிபடும் ‘இந்திரவிழா’வின் எச்சமா இன்றைய பொங்கல் என நான் கேட்க வேண்டியிருந்தது.

தை முதல் நாளில் பொங்கலிடுவதின் காரணம், தாற்பரியம் மற்றும் வரலாறு குறித்து மிகத் தெளிவான குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. தேடுதலில் ஆர்வமுள்ளவர்களிற்காக இணையம் முழுவதும் கட்டுரைகளும் ஆதாரங்களும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றின் சாரங்களைத் தொகுத்துக்கொள்ளலாம்:

தை முதல் நாளில் சூரியனிற்கு பொங்கலிடும் வழக்கத்தின் அடிப்படை ‘மகர சங்கராந்தி’ ஆகும். புவி சூரியனைச் சுற்றி வந்தாலும், இந்துமத சாஸ்திரங்கள் பன்னிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதுகின்றன. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தை திருப்புகின்ற நாள் -மகர இராசியினுள் பிரவேசிக்கும் நாள் – மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘சங்கரமண’ எனில் நகரத் தொடங்கு எனப் பொருள். இதுவே இந்நாளில் இந்துகள் சூரியனிற்குப் படையலிட்டு எடுக்கும் விழா ‘சங்கராந்தி’ என அழைக்கப்பட காரணமாயிற்று. பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று தொடங்குகிறது. இந்த நாளில்தான் இன்றுவரை தைப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதனால்தான் இந்துப் பஞ்சாங்கக் கணிப்புக்கு ஏற்றவாறு பொங்கல் விழாவும் ஓர் ஆண்டில் சனவரி 15ம் நாளும் இன்னொரு ஆண்டில் சனவரி 14ம் நாளும் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் பொங்கல் 14ம் தேதியா அல்லது 15ம் தேதியா எனத் தீர்மானிப்பது இராசிபலனும் சோதிடர்களும்தானே தவிர தமிழரின் வரலாறு அதைத் தீர்மானிப்பதில்லை.

இல்லை, இந்தப் பஞ்சாங்கத்திற்கும் தமிழர்களின் பொங்கலிற்கும் தொடர்பில்லையெனில் ஏன் பொங்கல் விழா ஒரு நிலையான நாளில் அல்லாமல் 14 – 15 என மாறி மாறிக் கொண்டாடப்படுகின்றது என நான் கேட்பேனா மாட்டேனா? இன்றுவரை தமிழ் பஞ்சாங்கக் கலண்டர்கள் இந் நாட்களைச் ‘சங்கராந்திப் பொங்கல்’ என்றே குறிப்பிடுகின்றன.

இந்த நாளை ஏதோ தமிழர்கள் மட்டும்தான் கொண்டாடுவதாகவும் இது தமிழர்களிற்கே உரித்தான விழாவாகவும் நினைத்துவிட வேண்டியதில்லை. இதே நாளை மகர ஜோதி, லோரி , உத்தராயண், மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி என்று இந்தியா முழுவதிலுமுள்ள இந்துகள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள்.

மூடத்தனமான இராசிபலன் கணிதத்தை முன்வைத்துக் கொண்டாடப்படும் விழாவையும், அந்நாளில் சூரியனையும் நெருப்பையும் வணங்கிக் கற்கால வழமையைத் தொடர்வதையும், தமிழர்களின் விழாவென ஏந்தித் தாங்குவதையும் எவ்வாறு புரிந்துகொள்ளவது? வேறொரு சரியான காரணம் எனக்குச் சொல்லப்படாதவரை இதைத் தமிழ்த்துவ முகமூடிக்குள் உறைந்திருக்கும் இந்துத்துவம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது.

இந்துக்களின் கொண்டாட்டமாக இருந்துவந்த இந்த விழா எந்தக் கட்டத்தில் தமிழர்களின் விழாவென்ற குரலைப் பெறுகிறது? சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மறைமலையடிகள் போன்றவர்கள் இந்தக் குரலை ஒலித்தாலும் இதை ஓங்கி ஒலித்தவர் தந்தை பெரியார்.

அவர் விடுதலை இதழில் (30.01.1959) இவ்வாறு எழுதினார்:

“தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பதுஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன்.”

இங்கே பெரியார் பொங்கல் விழாவை தமிழ் மரபு , தொன்மை என்றெல்லாம் ஏதும் சொன்னாரில்லை. “ஏதாவது ஒன்று வேண்டுமே” என்பதற்காக தீபாவளியைக் காட்டிலும் சமயத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என அவர் மதிப்பிட்ட பொங்கல் பண்டிகையைத் தமிழர் விழாவாகப் பரிந்துரைக்கிறார்.

அதேவேளையில் “நான் சொல்கிறேன் என்பதால் நம்பாமல் உங்கள் பகுத்தறிவால் நான் சொல்வதை ஆராய்ச்சி செய்து நல்லதை ஏற்று அல்லாததைத் தள்ளிவிடுங்கள்” என எப்போதும் உரைத்தவரும் பெரியார்தான். இருபத்தோராம் நூற்றாண்டில், இந்து சமயக் காலக்கணிதத்திற்கு உட்பட்டு சமஸ்கிருதமொழியில் பயன்பாடுள்ள ஒரு மடத்தனமான சாஸ்திரத்தை தமிழர் விழாவென நாங்கள் தூக்கிப்பிடிக்கத்தான் வேண்டுமா? சூரியன் தனுவை விட்டு மகர ராசிக்கு நகர்ந்தால் நமக்கென்ன மக்களே! அதுக்கெல்லாமா நாங்கள் விழா எடுக்க முடியும்!

தமிழர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்து சமயக் காலக் கணித சாஸ்த்திரத்தின்படிக்குக் கொண்டாடும் ஒரு விழாவை ஒட்டுமொத்தத் தமிழர்களின் விழாவாக, ஏனைய மதத்தவர்கள் மீதும் எல்லாத் தமிழர்கள் மீதும் திணிக்கும் செயல் தமிழ்த்துவமா இல்லை இந்துத்துவமா?

சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தோடு இயங்கும் இந்துத்துவ சக்திகளை நம்மால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால் நசிந்து நசிந்து “யார் என்ன செய்தாலும் என்ன… எனக்குப் பொங்கல் தின்னக் கிடைத்தால் சரிதான்” என்று மறைமுகமாக முட்டுக்கொடுப்பவர்கள்தான் ஆபாசமானவர்கள். இது வெறுமனே பொங்குதல், தின்னுதல் என்றளவில் நிற்கமட்டும் நமக்கென்ன பிரச்சினை. ஆனால் இதையொரு தமிழ் பண்பாட்டுப் பொது அடையாளமாக வலியத் திணிக்க முற்படும்போதுதான் நாம் மறுத்துப் பேச வேண்டியிருக்கிறது.

பொங்கல் விழாவால் தமிழர்களை ஒன்றிணைப்பதை, நான் கேள்விகேட்டுக் குழப்பிவிடுகிறேன் என்றுகூட ஒரு பொங்கல் பிரியர் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அய்யா! நீங்கள் சொல்வது போல தமிழர்கள் பல்லாயிரம் வருடங்களாகப் பொங்கலைச் சேர்ந்து கொண்டாடிவருகிறார்களென்றால் என்ன மயிருக்கு இந்தக் கணம்வரை சாதியாகப் பிரிந்துகிடக்கிறார்கள் எனக் கேட்கிறேன். தமிழர்களை வெறுமனே புக்கை, சுண்டல் கொடுத்து இணைக்கலாமென்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல திருப்பித் திருப்பிச் சொன்னால், இப்போது தமிழர் ஆண்டென அழைக்கப்படும் பிரபவ-விபவ என்னும் அறுபது ஆண்டுகள் வட்டம் இந்துக் காலக் கணித முறையை (சக சம்வாட் ) அடிப்படையாகக்கொண்ட ஆண்டுவட்டம். இந்தக் காலக் கணித முறையில் இராசி சக்கரத்தில் தனு இராசியிலிருந்து மகர இராசிக்குள் சூரியன்நுழையும் நாளே தை மாதத்தின் முதல்நாள் ஆகிறது. இந்த நாள் நிலையானதல்ல. இராசிபலன் கணிப்பிற்கேற்ப முன்னும்பின்னுமாக மாறும். இந்த நாட்களில்தான், சோதிடர்கள் குறிக்கும் பஞ்சாங்க தினங்களில்தான் நீங்கள் சூரியனிற்குப் பொங்கல் இடுவீர்களானால் இது இந்து சாஸ்திர வகைப்பட்டதே ஒழிய இது ஒருபோதும் தமிழ்த்துவ விழாவாகாது.

சாஸ்திரங்களென்று சொன்னேன். “அதனால் இப்ப என்ன வந்தது?” என்று ஒரு சிறங்கைப் பொங்கல் உண்ட மிதப்பில் கேட்காதீர்கள். கீழே அண்ணல் அம்பேத்கர் சொல்வதைக் கவனியுங்கள்:

“நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி!”

-ஷோபா சக்தி
பிரபல எழுத்தாளர்

Saturday, January 23, 2016

மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை!







கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் தனியார் இயற்கை மற்றும் யோக மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. ஏற்கெனவே, இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருத்துவர்கள் இல்லை என விழுப்புரம் ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் மனு அளித்தனர். சிலர் தீக்குளிக்க முயற்சித்ததை தொடர்ந்து உண்மை நிலை அறிய ஒரு குழுவை விழுப்புரம் ஆட்சியர் லட்சுமி அமைத்தார்.

கள்ளக்குறிச்சி கோட்டாச்சியர் மாலதி தலைமையிலான அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், ‘கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை’ என கூறி இருந்தார். இந்த நிலையில், அந்த கல்லூரியில் படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய 3 மாணவிகளும் கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு கிணற்றில் குதித்து நேற்று மாலை தற்கொலை செய்தனர். தகவலறிந்த சின்ன சேலம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை பற்றிய முழு தகவல்களும் உடனடியாக தெரியவில்லை. வெளி நபர்களின் பாலியல் தொந்தரவால் மாணவிகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-01-2016

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

Tuesday, January 19, 2016

இறைவனிடம் பரிந்துரைக்க யாரையும் அணுகலாமா?





1985 தஞ்சாவூரில் வலிமார்கள் மாநாட்டில் பேசிய ஒரு அறிவுஜீவி, அல்லாஹ் நெருப்பு போன்றவன், நம் பிரார்த்தனைகள் மாவு போன்றது, அவ்லியாக்கள் சட்டி போன்றவர்கள்.,எனவே பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்க முடியுமா? மாவை நேரடியாக அடுப்பில் ஊற்றினால் நெருப்பு அணைந்து விடாதா என்று கேட்க, அன்றைக்குத்தான் அந்த இடத்திலிருந்து ஏகத்துவ சிந்தனையின் ஊற்றுக் கண் துவக்கி வைக்கப்பட்டது.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' என்று கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)


நபிகள் நாயகம் காலத்தில் அன்றைய அரபுகள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களை இறை நிராகரிப்பாளர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

Monday, January 18, 2016

இந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு!



பரங்கிப் பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரதாப், தியாகராஜன், மணிகண்டன், குப்புசாமி ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகளும் சென்ற ஜனவரி ஏழாம் தேதி தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஏழைகளான இவர்கள் நால்வரும் வீட்டை புணரமைக்க முடியாமல் திகைத்து நின்றனர். இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரங்கிப் பட்டை கிளை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்தது. 60 ஆயிரம் செலவு செய்து அந்த ஏழை மக்களின் கூரை வீடுகளை செப்பனிட்டுக் கொடுத்தது.

மத நல்லிணக்கம் என்பதற்கு பெயர் இதுதான். ஒரு மதத்தவரின் பழக்கங்களை மற்ற மதத்தவர் பின் பற்றுவதன் மூலம் மத நல்லிணக்கம் வளராது. குழப்பமே மிஞ்சும். ஏகத்துவவாதிகளை பொறுத்த வரை மார்க்க விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதே நேரம் மனிதாபிமான உதவிகள் செய்வதில் மத வேறுபாடுகளைக் கடந்து முன்னணியில் இருப்பார்கள். சென்னை மழை வெள்ளத்திலும் அந்த மனிதாபிமானத்தைப் பார்த்தோம். இன்று பரங்கிப் பேட்டையிலும் அதே மனிதாபிமானத்தைப் பார்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!...

Sunday, January 17, 2016

‘டத்தோ’ பட்டம் பெற்ற ராமநாதபுரம் இளைஞர்



ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட இளைஞருக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட் டுள்ளது.

‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களுக்கும் டத்தோ விருதை வழங்குகின்றனர். 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

மலேசியர்கள் மட்டுமே பெறக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர். இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான டத்தோ விருதுகள் 12 பேருக்கு மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப்(35) என்பவரும் விருது பெற்றுள்ளார். இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016

Saturday, January 16, 2016

அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் !



அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் :-)

20 வருடங்களுக்கு முன்பெல்லாம் எங்கள் வீட்டில் பெரிய அண்டாவில் கூழ் கிண்டுவார்கள். அப்பளம், படையான் போன்றவைகள் வீட்டிலேயே செய்வதற்காக காலை 5 மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் ஒன்றாக கூடி அப்பளம், படையான், கொத்தரவத்தல், மோர் மிளகாய் போன்றவைகளை இட வந்து விடுவார்கள். காலையிலேயே வீடு பெருநாள் போல ஜே ஜே என்று இருக்கும். வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் என்று அமர்க்களப்படும். சிறுவர் சிறுமிகளுக்கோ ஏக கொண்டாட்டம். எங்கள் வீட்டின் வாசல் பெரிதாகையால் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களும் எங்கள் வீட்டில்தான் அப்பளம் மற்றும் படையான்களை காய வைப்பார்கள். அதெல்லாம் ஒரு காலம்....

தற்போது எல்லாம் கடைகளில் பாக்கெட் போட்டு கிடைப்பதால் அப்பளம் மற்றும் படையான் போடும் பழக்கமும் நின்று விட்டது. சவுதியிலும் கடைகளில் அப்பளம் பல டிசைன்களில் கிடைக்கிறது. அப்பளத்திற்கு சவுதிகள் வைத்துள்ள பெயர் 'ஹூப்ஸ் அல் ஹிந்த்' அதாவது 'இந்திய ரொட்டி' என்று பெயரிட்டுள்ளார்கள். :-) புரோட்டாவைப் போல வட்டமாக இருப்பதனால் இதனை ரொட்டி என்று நினைத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.

சாம்பார், ரசம், மீன் குழம்பு என்று எந்த குழம்புக்கும் தொட்டுக் கொள்ள இந்த அப்பளமானது ஏற்றதாக மாறி விடும். பாகிஸ்தானிகள் இதே அப்பளத்தை சற்று டிசைன் மாற்றி செய்கிறார்கள். கேரளாவில் அப்பளம் பிரியாணிக்கும் இருக்கும். எப்படியோ இந்தியர்களின் உணவு பழக்கத்தில் என்றுமே இடம் பிடித்த அப்பளத்தைப் பற்றியும் ஒரு பதிவு தேற்றியாகி விட்டது. :-)

Thursday, January 14, 2016

தர்ஹா கலாசாரம் இந்து சகோதரர்களையும் வழிகெடுக்கிறது!

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: ...

Posted by Nazeer Ahamed on Thursday, January 14, 2016

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: சாமி சிலைக்கு புடவை கட்டி விடுவது போல சமாதிக்கு சால்வை போர்த்துவது: அங்கு பால் ஊற்றினால் இங்கு சந்தனம் பூசுவது: அங்கு தேர் இழுத்தால் இங்கு சந்தனக் கூடு இழுத்தல்: அங்கு மந்திரம் ஓதி திண் பண்டங்கள் கொடுப்பது: இங்கு ஃபாத்திஹா ஓதி தின்பண்டங்கள் வழங்குவது:

அத்தனையும் பார்பனிய கலாசாரம்: அதனை அப்படியே சில பெயர் மாற்றங்களோடு தர்ஹாக்களில் அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.

முன்பு யூதர்கள் நபிகள் காலத்தில் இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமியராக மாறி பல கட்டுக்கதைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றியதை நாம் அறிவோம். அந்த நபி மொழிகளை எல்லாம் தரம் பிரித்து தற்போது அறிஞர்கள் உண்மையை கண்டறிந்துள்ளனர்.

அதே போல்தான் இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க பலர் இஸ்லாமியராக மாறி இது போன்ற பழக்கங்களை புகுத்தி விட்டனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு அன்று அந்த மக்களிடம் இல்லாததால் தர்ஹா கலாசாரத்தை அன்றைய மக்கள் அவ்வளவாக எதிர்க்கவில்லை.. அது இன்று இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவே இந்தியாவில் மட்டும் மாறி விட்டது.

தர்ஹாக்களின் செயல்பாடுகளை வைத்து இன்று வரை எந்த இந்துவாவது இஸ்லாத்தை ஏற்றிருக்கிறாரா? பல வருடங்கள் தர்ஹாவுக்கு வரும் இந்துக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது. தர்ஹாவுக்கும் போவார்: காளி கோவிலுக்கும் போவார்: மாதா கோவிலுக்கும் போவார்: அவரைப் பொருத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. இது மத ஒற்றுமையை கொடுக்காது. மேலும் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும்.

சன் டிவியின் இந்த சீரியலையும் பாருங்கள். இதனை எடுத்த டைரக்டரும் கதாசியரியரும் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? இன்றைய அறிவியலுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆன் எங்கே? மயிலிறகால் வருடி ஊதி விடும் இந்த மூடன் எங்கே? வர்ணாசிரமத்தையும், புரோகிதத்தையும், மூடப்பழக்கத்தையும் ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் இந்த கொடூரங்கள் பரவலாக அரங்கேற்றப்படுகிறது.

ஏகத்துவ வாதிகள் கடந்த 30 வருடங்களாக செய்த தொடர் பிரச்சாரத்தின் காரணமாக இன்று இறைவனின் உதவியால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைய தலைமுறையினர் தர்ஹா மாயையிலிருந்து விடுபட்டுள்ளனர். விலகி நிற்கும் மற்ற இஸ்லாமியர்களும் ஏகத்துவவாதிகளோடு கைகோர்த்து தர்ஹா வழிபாட்டை இல்லாதொழிப்பார்களாக!

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18


ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு சமாதியையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

Wednesday, January 13, 2016

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தானா?



தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தானா? இதர எத்தனையோ வீர விளையாட்டுகள் வழக்கொழிந்தது பற்றி யாரும் ஏன் வாய் திறப்பதில்லை? ‘இடைக்காலத் தடை’ என்ற தீர்ப்பு கேட்டு எத்தனை வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு உறங்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாமலா இருக்கும்? படித்துப் பட்டம் பெற்று, நல்ல வேலையில் உள்ள, நடுத்தரவர்க்க, பணக்காரர்கள், தொழிலதிபர்கள், உயர் சாதியினர் ஏன் மாடு பிடித்தலில் ஈடுபடுவதில்லை? ஜல்லிக்கட்டில் ஈடுபடும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள்தான் வீரம் செறிந்த தமிழர்களா? மனிதன் விலங்குகளோடு சண்டையிடுவது எத்தகைய அறிவுடைமை? சமதிறன் உள்ள இருவர் மத்தியில் நடைபெறுவதுதானே வீர விளையாட்டு? ஜல்லிக்கட்டை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்து ரசிக்கும் மக்களுக்கு, மாடு பிடிக்கும் வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் மன அவஸ்தை தெரியுமா? ஜல்லிக்கட்டு காலம் கடந்து வாழ்வதற்கு தமிழர்களின் வீரம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றோடு முடிச்சுப் போட வேண்டியதில்லை.

சமூக பொருளாதாரக் காரணிகளே ஜல்லிக்கட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் காரணி. இதனை ஆய்வு செய்ய வேண்டும். இதற்குக் கலாச்சார முலாம் பூசிக் கொம்பு சீவி விடுகிறோம். காங்கேயம் காளைகளை வெறும் ஜல்லிக்கட்டை வைத்து மட்டுமே காப்பாற்ற முடியாது.

பால் மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்காக எருமைகள் வளர்க்கப்படுவதால் 1997-ம் ஆண்டுமுதல் மட்டும் இதன் எண்ணிக்கை 21 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே 1997 முதல் கால்நடைகளை உழவு உள்ளிட்ட பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது 28 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. கலாச்சாரம் என்பது தனித்து இயங்குவது அல்ல. வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது.

- என்.மணி, ஈரோடு.

***

‘அது இருக்கட்டும், முதல்ல கக்கூஸ் கட்டுங்க’ கட்டுரை இன்றைய ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம். கோடிகளைக் கொட்டி கோயில்களும், தேவாலயங்களும், மசூதிகளும் கட்டுவதை விடுத்து, ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்தினால், இந்தியா வல்லரசாவதை நாம் காணலாம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அந்தக் கடவுள் மக்களின் மனங்களில்தான் வாழப் பிரியப்படுகிறார், அவர்கள் கட்டுகின்ற கட்டிடங்களில் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

- டென்னி அருள் தாமஸ், மானாமதுரை.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-01-2016

பெரியார்தாசன் இஸ்லாத்தை சொல்லும் அழகைப் பாருங்கள்!

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்த...

Posted by Nazeer Ahamed on Wednesday, January 13, 2016

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!

'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்து என்றுதான் சொல்றாங்க: எங்கள தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லி கோவிலுக்குள்ள வர வேண்டாங்கறாங்க... நாங்க செஞ்ச செருப்பை அவங்க போடறாங்க: ஆனா.. எங்கள போடக் கூடாதுங்கறாங்க: எங்க எருமை மாடு குளிக்குதுங்க குளத்துல... எங்கள குளிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே... இதெல்லாம் இஸ்லாத்துல சேர்ந்துட்டா போயுடுமா... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க... '

அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!





அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!...

திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!

அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!

இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
—————————-

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…

”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.

”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
—————————

மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.

மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.

”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”

தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.

”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. ‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், ‘ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!” என்கிறார் ஆறுமுகச் சாமி.

மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி :ஆனந்த விகடன்

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100456

Monday, January 11, 2016

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது - இடிந்தகரை





என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது...

இடிந்தகரை முதல் மணப்பாடு வரைஎன்னமோ நடக்குது, மர்மமா இருக்குது...

இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. அணுஉலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது.

பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்!

கூடங்குளம் அணுஉலைத் தலைவர் சுந்தர் அய்யா அவர்களே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமே, தமிழ் நாட்டின் மாநில அரசே, இந்திய ஒன்றிய அரசே எப்போது பேசுவீர்கள்? நாங்களும் செத்த பிறகா?

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை
(படங்கள்: செந்தூர்குமார்)

s.p. உதய குமார்.கூடங்குளம்.