ஒரு நண்பர் இன் பாக்ஸில் வந்து 'ஜேர், ஜபர் என்றுதான் நான் குர்ஆனை மத்ரஸாவில் படித்துள்ளேன். நீங்கள் 'ஃபதஹ, கஸர' என்று எழுதுகிறீர்களே? குழப்பமாக இருக்கிறது என்கிறார். நானும் சிறு வயதில் மதரஸாவில் 'ஜேர், ஜபர்' என்றுதான் படித்தேன். அந்த காலத்தில் உருது தெரிந்த முஸ்லிம்களே பெரும்பாலும் அரபு ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் அரபு மொழியை உருது மொழியின் அடிப்படையில் நமக்கு விளக்கி வந்தார்கள். இதில் தவறொன்றுமில்லை. ஏதோ ஒரு வழியில் நாம் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். மொழிப் பற்று இருக்கலாம்: மொழி வெறி இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. அரபு நாடுகளில் 'ஜேர், ஜபர்' என்றால் அரபுகளுக்கே விளங்காது. எனவே தான் உலகம் முழுவதும் அரபு எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதனடிப்படையில் 'ஃபதஹ, கஸர' என்று விளக்கினேன். பலருக்கும் இது போன்ற சந்தேகம் இருக்கும் என்பதாலேயே இந்த விளக்கம்.
--------------------------------------------------
இனி அடுத்த பாடத்துக்குள் நுழைவோம்.
ஆங்கில மொழியில் "THE" 'த' என்ற சொல் குறிப்பிட்ட ஒரு பொருளையோ மனிதனையோ குறிப்பது போல் அரபி மொழியில் 'ال' 'அல்' எனும் சொல்லை உபயோகிப்பதுண்டு. 'அல்' எனும் வார்த்தையை 'பொது சுட்டுச் சொல்' என்று அரபியில் சொல்வர். 'அல்' என்ற பொது சுட்டுச் சொல்லானது 1.பெயர்ச் சொல்லுக்கும் 2.பெயர் உரிச் சொல்லுக்கும் முன்னால் வரும்.
1.பெயர்ச் சொல்
كتاب - ஏதோ ஒரு புத்தகம்.
ال كتاب - குறிப்பிட்ட ஒரு புத்தகம்.
2.பெயர் உரிச் சொல்
'ولد طيب' - 'வலதுன் தய்யிபுன்' (ஏதோ ஒரு) நல்ல பையன்.
'الولد طيب' - 'அல் வலது தய்யிபுன்' (குறிப்பிட்ட) நல்ல பையன்
இவ்வாறு ஒரு பொருளை அல்லது பொருளின் தன்மையை குறிப்பிட்டுச் சொல்ல 'அல்' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். தற்போது 'அல்' என்ற வார்த்தையின் பயன்பாட்டை விளங்கியிருப்பீர்கள்.
அரபு மொழியில் எழுத்துக்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். 1. சூரிய எழுத்துக்கள் 2. சந்திர எழுத்துக்கள்.
1.சூரிய எழுத்துக்கள் எவை என்பதை பார்போம்:
ﺕ ﺙ ﺩ ﺫ ﺭ ﺯ ﺱ ﺵ ﺹ ﺽ ﻁ ﻅ ﻝ ﻥ
2.சந்திர எழுத்துக்கள் எவை என்பதையும் பார்போம்.
ء ﺏ ﺝ ﺡ ﺥ ﻉ ﻍ ﻑ ﻕ ﻙ ﻡ ﻭ ﻱ ه
இதை ஏன் இவ்வாறு பிரித்தார்கள் என்பதையும் பார்போம்.
بَيْتٌ 'பைத்' என்றால் வீடு என்ற பொருளைக் பொதுவாக குறிக்கும். الْبَيْتُ 'அல் பைத்து' என்றால் 'அந்த வீடு' என்று ஒரு வீட்டை குறிப்பிட்டு சொல்கிறோம். இப்போது 'அல்' என்ற வார்த்தை இங்கு அதிகமாக சேருவதை பார்த்தோம். சேர்ந்த இந்த வார்த்தையானது பின்னால் வரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு ஒட்டவில்லை என்றால் அது சந்திர எழுத்து எனப்படும்.
التُّفَّاحُ 'அத்துஃப்பாகுன்' 'அந்த ஆப்பிள்' என்ற வார்த்தையில் 'அல்' என்ற வார்த்தை மறைந்து 'அத்து' என்று முதல் வார்த்தையோடு சேர்ந்து விடுகிறதல்லவா? இதனையே 'சூரிய எழுத்துக்களின் அடையாளங்களாக பார்கிறோம்.
அல் என்ற வார்த்தை தொடரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு சேர்ந்தால் அது சூரிய எழுத்துக்கள் என்றும் அல் என்ற வார்த்தை தொடரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு சேராது தனித்து நின்றால் அதனை சந்திர எழுத்துக்கள் என்றும் கூறுகிறோம்.
உதாரணங்களை படித்துப் பார்த்தாலே உங்களுக்கு தானாகவே எது சூரிய எழுத்து எது சந்திர எழுத்து என்பது விளங்கி விடும்.
a book كتاب கிதாப் - ஒரு புத்தகம் - the book الـكتاب அல் கிதாப் - (குறிப்பிட்ட) புத்தகம்
இங்கு கிதாபோடு அல் ஒட்டவில்லை எனவே இது சந்திர எழுத்தை சார்ந்தது என்று முடிவெடுத்து விடுவோம்.
கீழே வரக் கூடிய அல் என்ற பதத்துக்கு அடுத்து வரும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் அனைத்தும் சூரிய எழுத்துக்கள். சூரிய எழுத்துக்களை தனியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
الحروف الشمسية - சூரிய எழுத்துக்கள்
the sun الـشّمس sun شّمس ش 'அஸ்ஸம்ஸ்' - சூரியன்
the man الـرّجـل man رّجـل ر 'அர்ரஜீல்' - மனிதன்
the fire الـنّــار fire نّــار ن 'அந்நார்' - நெருப்பு
the magic الـسّحـر magic سّحـر س 'அஸ்ஸிஹ்ர்' - சூனியம்
the weather الـطّـقس weather طّـقس ل 'அத்தக்ஸ்' - காலநிலை
the night الـلّـيـل night لّـيـل لّ 'அல் லைல்' - இரவு
the date (fruit) الـتّـمـر date (fruit) تّـمـر ت 'அத்தமர்' - பேரித்தம் பழம்
the hens الدّجاج hen دّجاج د 'அத்தஜாஜ்' - கோழி
the gold الذّهب gold ذّهب ذ 'அத்தஹப்' - பவுன்
the giraffe الزّرافة giraffe زّرافة ز 'அஜ்ஜூராஃபா' - ஒட்டகச் சிவிங்கி
the picture الصّورة picture صّورة ص 'அஸ்ஸூரா' - படம்
the mud الطّين mud طّين ط 'அத்தின்' - மண்
the back الظّهر back ظّهر ظ 'அத்தஹ்ர்' - பின் பக்கம்
இங்கு எழுதப்பட்டுள்ள அனைத்து உதாரணங்களையும் கவனமாக படித்துப் பாருங்கள். 'அல்' என்ற வார்த்தையானது அதற்கு அடுத்து வரும் வார்த்தையோடு இணைந்து விடுகிறது. அவ்வாறு இணைவதற்கு அடுத்து வரும் வார்த்தையின் முதல் எழுத்து சூரிய எழுத்தாக இருப்பதால் இரண்டு வார்த்தைகளும் ஒரு வார்த்தையாக உச்சரிப்பில் வந்து விடுகிறது.
-------------------------------------------------
முன்பே கூறியது போல் சந்திர எழுத்துக்களில் 'அல்' என்ற வார்த்தையானது அதற்கு அடுத்து வரும் வார்த்தையோடு ஒட்டாமல் தனித்து இருப்பதை கவனியுங்கள். அதன் உதாரணங்களை கீழே பார்போம்.
(الباب) /al-bab/ “the door”, 'அல் பாப்' - கதவு
(الجدار) /al-jadaar/ “the wall”, 'அல் ஜிதார்' - சுவர்
(الفارس) /al-faaris/ “the knight”, 'அல் ஃபாரிஸ்' - வீரன்
(المطر) /al-maTar/ “the rain”, 'அல் மதார்' - மழை
(الكلام) /al-kalaam/ “the speech”, 'அல் கலாம்' - பேச்சு
(الورد) /al-ward/ “the rose”, 'அல் வர்த்' - பூ
'அல்' என்ற வார்த்தையானது அடுத்து வரும் வார்த்தையின் முதல் எழுத்தில் ஒட்டாது பிரிந்திருப்பதை பார்க்கிறோம். இதனையே சந்திர எழுத்துக்கள் என்கிறோம்.
சில வார்த்தைகளை எழுதிப் பார்த்து எது சூரிய எழுத்து எது சந்திர எழுத்து என்று நீங்களே கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
கீழே உள்ள அட்டவணையில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் சூரிய எழுத்துக்கள். கருப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் சந்திர எழுத்துக்கள்.
இறைவன் நாடினால் மேலும் சில பாடங்களை அடுத்தடுத்த நாட்களில் பார்போம்.
1 comment:
Radical Islamism and Jihad
Preventing Further Radicalisation Is the Challenge Muslims Must Undertake: Some Concrete Suggestions
Sultan Shahin, Editor, New Age Islam
Preventing Further Radicalisation Is the Challenge Muslims Must Undertake: Some Concrete Suggestions.Sultan Shahin, Editor, New Age Islam
Now the question is, how do we go forward? If we really want to make a difference, we will have to start a substantive dialogue with the ulema and make sure that they agree to:1) open the gates of ijtihad, rethinking all tenets of Islam in the light of the situation prevailing today. As we have not done our homework for over a millennium, this will have to be pretty revolutionary.
2) declare that only constitutive and essential, not the contextual and allegorical verses of Quran, are meant to guide us today.
3) compile Qur'anic verses in the order in which they were revealed, thus restoring primacy to Meccan verses that mostly constitute the essential and universal teachings of Quran, as they can be understood without any need for knowing the context in which they were revealed.
4) declare that Ahadees cannot be considered any form of revelation from God. Islamic State’s millenarian thesis is almost entirely based on ahadees, though they use some allegorical verses of Quran as well. The claim of al-Baghdadi leading an end-time war, al-Malhama, just before the final Armageddon, has been a big draw. Some Muslims have come to think life on earth has no meaning left in the times of al-Malhama and so are rushing to join the war.
5) declare that Sharia (fiqh) is not divine. It was created over a century after the demise of the Prophet by ulema who tried to codify laws on the basis of Qur'anic postulates and Arab cultural practices.
6) declare clearly that Islam believes in co-existence with other religions, not dominion over the world.
7) re-define commonly used Islamic terms like Muslim, kafir, mushrik, ahl-e-kitab, jihad, qital, farz, sunnat, etc.
In a word, we must evolve a truly Islamic and a coherent theology of peace and co-existence, moderation and modernity, to counter the very coherent theology of violence and xenophobia, intolerance and supremacism that Jihadi ulema have created over centuries. All ulema say Islam is a religion of peace and co-existence. It's time for them to walk their talk. But if they refuse to consider change, we will need to directly reach the Muslim masses. ...
Finally, the larger Indian community too should introspect. As Daniel Pipes said in an international counter-terrorism conference in Jaipur recently, in this war of ideas, the world should not only encourage and support progressive, modern Muslims but also oppose and refrain from supporting the fundamentalists and extremists.
1) Our national leadership supported Khilafat in 1920s, considering it an essential part of Islamic theology. That was wrong. Now we must repudiate that stance and acknowledge our mistake.
2) Muslim Personal Law in India has not been reformed even to the extent it has been in Pakistan and Bangladesh. This must change. At least General Ayyub Khan’s reforms in Pakistan must be introduced and Ulema should be told to accept what their Pakistani and Bangladeshi counterparts did decades earlier. This is not a satisfactory solution but at least it will be a start and it is doable.
3) Madrasa education is a serious violation of the human rights of Muslim children. It destroys their lives and fills their minds with xenophobia and intolerance. Our government not only allows this but partly funds some madrasas. This must stop, unless, of course, madrasas actually change to become modern versions of what madrasas used to be like, in the Golden Age of Islam, and produce scientists and philosophers. A secular, democratic government should not be in the business of funding xenophobia and intolerance.
Post a Comment