Followers

Thursday, April 28, 2016

முதியோர் இல்லத்தில் திருமண விருந்தை நடத்திய மணமக்கள்!





25-04-2015 அன்று பிலால் உசேன் என்ற சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. வலங்கைமான் தில்லையாம்பூரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு சென்று சுமார் 120 பேர்களுடன் தங்களின் வலிமா என்ற திருமண விருந்தை தம்பதி சகிதமாக பகிர்ந்து கொண்டனர். மாப்பிள்ளை வீட்டார் செலவில் இந்த விருந்து நடைபெற்றது.

பெரும் பணக்காரர்களை மட்டுமே அழைத்து படாடோபமாக பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கி நடக்கும் விருந்துகளை விட தேவையுடையோரை தேடிச் சென்று உணவு வழங்கும் இந்த செயல் உண்மையில் பாராட்டத்தக்கது. இஸ்லாம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

நபி அவர்களின் காலத்துத் திருமண விருந்து மணமகன் வழங்கியதாகவே நடைமுறையில் இருந்துள்ளது. நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் திருமணம் முடித்தபோது ''ஓர் ஆட்டையாவது அறுத்து மண விருந்து அளியுங்கள்'' என்று நபி அவர்கள் கூறியதாக (புகாரி 5029, முஸ்லிம் 2790) ஆதாரப்பூர்வ அறிவிப்புகளில் காண்கிறோம்.

ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து கெட்ட உணவாகும். அழைப்பை ஏற்று விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816)

4 comments:

Dr.Anburaj said...

வலங்கைமான் முதியோா் இல்லத்தை நடத்தும் இந்து அன்பா்களை நான் நன்கு அறிவேன். வயதில் இளையவா் ஆன ஒரு பெண்ணை சோ்கக மறுத்துவிட்டாா்கள்.வேறு ஏற்பாட்டை நான் செய்தேன்.
ஒரு முதியோா் இல்லம் இலவசமாக நடத்துவது பொிய சாதனை.அதில் ஒரு நாள் ஒரு வேளை சாப்பாடு செலவை ஏற்பது இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சி. ஆக ஒரு முஸ்லீம் அன்பா் ஒரு வேளை சாப்பாடு செலவை ஏற்பது நன்றுதான். பாராட்ட வேண்டியவிசயம் . ஆனாலும் இதைப்போய் இவ்வளவு முக்கியமான சாதனை என்று எழுத வேண்டுமா ?

முஸ்லீம்களின் தியாகம் தொண்டு குறித்து இவ்வளவுசிறிய விசயங்கள்தான் உள்ளதா ?

ASHAK SJ said...

இந்திய சுதந்திரம் இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை - போட்டாச்சி போதுமா இஸ்லாமியர்களின் தொண்டு

A.Anburaj Anantha said...



ஆசிக் ஒரு முட்டாள்.வடிகட்டிய முட்டாள்.

Unknown said...

Dr.அன்புராஜ் உங்கள் பிள்ளைகள் அல்லது உங்கள் வீட்டு விசேசங்களை முதியோர் இல்லத்தில் வைத்து இதுபோல நடத்திவிட்டு பின்பு இதுபோன்ற ஒரு பதிவிடவும். அல்லது நீங்கள் மாதம் ஒருமுறை அங்கு சென்று இலவசமாக வைத்தியம் பார்க்கலாமே எந்தவித விளம்பரமில்லாமல்.