'நாங்கள் அப்போ இந்து இல்லையா' - அப்பாவியாக கேட்கும் தலித் இளைஞர்
இந்தியாவில் இஸ்லாம்
வளர்கிறது என்றால் அதற்கு உண்மையான காரணம் இதுதான்.
இந்த ஆண்டு மே மாதம்,
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான தலித் இளைஞர் விஷ்ணு பாலாய், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS)
தலைவர் மோகன் பகவத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.
தனது கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகப் பணியாற்றுவதைத் தடுக்க, தலித் விரோத நபர்களும் RSS உடன் தொடர்புடையவர்களும் முயற்சிப்பதாக பாலாய் கூறியிருந்தார்.
இதுகுறித்து பகவத்தின் உதவியை அவர் கோரியிருந்தார்.
"நீங்கள் ஒட்டுமொத்த
இந்து சமூகத்தைப் பற்றியும் நல்லிணக்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். நீங்கள் சாதிப்
பாகுபாட்டிற்கு எதிரானவர். மேலும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக்
சங்கம் 'ஒரே கிணறு, ஒரே சுடுகாடு, ஒரே கோவில்' என்ற பிரச்சாரத்தை
நடத்தி வருகிறது. ஆனால், சங்கத்தின் ஸ்வயம்சேவக்குகள்,
ஒரு தலித் பூசாரியான என்னிடமிருந்து எனது கோவிலை
அபகரித்துவிட்டனர்..." என்று பாலாய் தனது கடிதத்தில் பகவத்திடம் எழுதியிருந்தார்.
"...இப்போது அவர்கள் என்
மீதும் என் குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகளைச் சுமத்தி, எங்களைச் சிறைக்கு அனுப்பவும், எங்களைக் கொல்லவும் கூட விரும்புகிறார்கள். உங்கள் சுயம்சேவகர்கள்
நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராக நடந்துகொள்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
'தாழ்ந்த சாதியைச்
சேர்ந்தவனே, உனக்கு அசுத்தமான
சிறுநீரைக் குடிக்க வைப்போம்'
ஜூலை 16 அன்று, ககுல் தேவ் கோவிலுக்கு அருகில் பிரார்த்தனைகளை நடத்தத் தயாராகிக்
கொண்டிருந்தபோது, பாலாய் ஓராண்டுக்குள்
இரண்டாவது முறையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"...ஆயுதங்கள்,
இரும்புக் கம்பிகள், இரும்புக் குழாய்கள், மூங்கில் குச்சிகளுடன் வந்து சட்டவிரோதமாக ககுல் தேவ் கோவிலுக்குள்
நுழைந்தனர். அவர்கள் என் கணவரிடம், 'தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனே, உனக்கு அசுத்தமான
சிறுநீரைக் குடிக்க வைத்து, கோவிலிலிருந்து வெளியே
தூக்கி எறிவோம்' என்று கூறினர்,"
என பாலாயின் மனைவி சீதா தேவி அளித்த புகாரின் அடிப்படையில்
ஜூலை 16 அன்று அசிந்த் காவல் நிலையத்தில்
பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் உதவி
The Wire
19-07-2026







