கூடைப் பந்து வீரர் ஸ்டீஃபன் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றார்!
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, January 31, 2021
கூடைப் பந்து வீரர் ஸ்டீஃபன் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றார்!
Friday, January 29, 2021
தமிழகத்தின் ஆகப்பெரும் கதைசொல்லி
தமிழகத்தின் ஆகப்பெரும் கதைசொல்லி அண்ணன் சீமான் அவர்கள் மிக ஆழ்ந்து, கவனித்து, படித்து, புரிந்து "வஹ்ஹாபிஸம் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டது." என்ற கருத்தைச் சமீபத்தில் உதிர்த்துள்ளார்.
தன்னுடைய உளறல்களை சீமானிஸம் என்று தம்பிகள் பரப்புவதைப் போல வஹ்ஹாப் என்பவரின் கருத்துக்கள் தான் வஹ்ஹாபிஸம் என்று அண்ணன் சீமான் கருதிக்கொண்டார் போலும்.
உலகில் பொதுவாக இசங்களின் பெயர்கள் அதன் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும். ஆனால், வஹ்ஹாபிஸம் என்ற பெயர் முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு எதிரானவர்களால் அவரை இழிவு படுத்த முன்வைக்கப்பட்டது.
அப்துல் வஹ்ஹாப் அவர்கள் சொன்ன கருத்துக்கள் அவரது சொந்த கருத்தோ அல்லது புதுமையான கருத்தோ அல்ல. அவரின் கருத்துக்களுக்கு நபிகள் நாயகம் தொடங்கி பல இஸ்லாமிய அறிஞர்களின் தொடர்ச்சி இருந்தது.
இன்றும் அப்துல் வஹ்ஹாப் அவர்களைப் போற்றக்கூடிய யாரும் வஹ்ஹாபிஸம் என்ற பெயரை ஏற்பதில்லை.
பொதுவாகத் தம்பிகள் தமிழ் நாட்டிற்குள் ரத்தப் பரிசோதனை செய்து சிலரை இனம் மாற்றுவார்கள். ஆனால் அண்ணன் சீமான் ஒரு படி மேலே சென்று அரேபியாவில் பிறந்த அப்துல் வஹ்ஹாபை ஈராக்கில் பிறந்தவர் என்கிறார். இதுதான் அண்ணன் சீமான் மிக ஆழ்ந்து, கவனித்து, படித்து, புரிந்து, தெரிந்துகொண்ட லட்சணம்.
இவர் இன்று யாரையெல்லாம் இலுமினாட்டி என்கிறாரோ அவர்களின் அடிப்படை வட்டியும் அதை மையப்படுத்திய வங்கி அமைப்பும் தான். இந்த இரண்டையும் மிகக் கடுமையாக எதிர்த்தவர் அப்துல் வஹ்ஹாப். அவரை இலுமினாட்டி என்று சொல்லும் அண்ணன் சீமான் வங்கிகள் குறித்து கருத்துச் சொல்லத் தயாரா..?
உண்மையில் அண்ணன் சீமான் மீது கூட எனக்கு வருத்தமில்லை. அவர் வழக்கம்போல எங்கோ படித்ததைச் சொல்கிறேன் என்ற பாணியில் பேசுகிறார். ஆனால் அவருடன் இருக்கும் இஸ்லாத்தை ஏற்ற தம்பிகளில் ஒருவருக்குக் கூடவா இஸ்லாமிய வரலாறு தெரியாது. அல்லது ஆமை கதைகளும் அரிசிக் கப்பலுமே நமக்கு போதும் எனச் சிந்திப்பதை நிறுத்தி விட்டீர்களா..?
-சே.ச.அனீஃப்
Wednesday, January 27, 2021
நாட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேறச் சொல்லும் சங்கிகளுக்கு
நாட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேறச் சொல்லும் சங்கிகளுக்கு இந்த படத்தில் வரும் காட்சியும் ஒரு பதிலை சொல்லிக் கொண்டுள்ளது.
Sunday, January 24, 2021
வஹ்ஹாபிகள் என்றால் யார்?
வஹ்ஹாபிகள் என்றால் யார்?
கேடுகெட்ட
துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா, மதீனா
நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன.
(துருக்கியர்கள்
உலக முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை வகித்ததால் நம்மையும் துருக்கர் எனச் சொல்லி
பின்னர் துலுக்கர் என்று ஆனது.)
இவர்கள்
ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும், அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு
அல்லாஹ்வுக்கு இணைவைத்தலும், கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின.
பத்ருப்போர்
நடந்த இடத்திலும், உஹதுப் போர்
நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன்னபவியில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின்
அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும், டூம்களிலும்
அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.
எந்த அளவுக்கு
மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு
முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாஃபி, ஹனபி,
மாலிகி,
ஹன்பலி என
நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நடத்துவார்கள்.
1902 ஆம் ஆண்டு முதல் துருக்கிக்கு எதிராக களத்தில் போராடிய அப்துல் அஸீஸ் பின்
சவூது என்பார் ரியாத்தைக் கைப்பற்றி அரசமைத்தார். இவரது தந்தையின் பெயரால் இது
சவூதி அரசு என்று அழைக்கப்படுகிறது.
ரியாத பகுதி
மட்டுமே இவரது சவூதி அரசாக இருந்தது. தற்போதையை சவூதி அரசின் பல பகுதிகள் தனித்தனி
ராஜ்ஜியங்களாக இயங்கி வந்தன. இவரது மரணத்திற்குப் பின் இவரது மகன் முஹம்மத் பின்
அப்துல் அஸீஸ் ஆட்சிக்கு வந்தார்.
இந்தக் காலகட்டத்தில்
தான் (1703-1792) முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அல்லாஹ்வுக்கு
இணை கற்பிக்கும் செயல்களையும், அனாச்சாரங்களையும் கண்டித்து பிரச்சாரம்
செய்து வந்தார். மத்ஹபை விட்டு விலகி குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டுமே செயல்பட
வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தார். இவரது பிரச்சாரத்தால் மன்னர் முஹம்மது
ஈர்க்கப்பட்டார். இருவரும் சந்தித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதாவது மார்க்க
விஷயத்தில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுக்கு மன்னர் ஒத்துழைப்பாக இருப்பது, சிதறிக்
கிடக்கும் ராஜ்ஜியங்களை ஒருங்கிணைக்க மன்னருக்கு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்
உறுதுணையாக இருப்பது என்பது தான் அந்த ஒப்பந்தம்.
வீரியமிக்க
இளைஞர்களைத் திரட்டி வைத்திருந்த முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபும் மன்னரின்
படையினரும் சேர்ந்து இன்றைய சவூதியாக இருக்கும் எல்லாப் பகுதிகளையும் ஒரு
ராஜ்ஜியத்ய்தின் கீழ் கொண்டு வந்தனர்.
எல்லா
தர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்காரர்கள் சிறையில்
தள்ளப்பட்டனர்.
லாயிலாஹ
இல்லல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம்
செய்யப்பட்டது.
கஅபாவைச் சுற்றி
இருந்த நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்பட்டு ஒரே முஸல்லாவாக
ஆக்கப்பட்டது.
ஹஜ் உம்ராவுக்கு
விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் நடந்து வந்த பல அநாச்சாரங்கள் தடைசெய்யப்பட்டன.
இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன.
தர்காக்களை
உடைத்து எறிந்ததாலும், புரோகிதர்களை
ஒழித்துக் கட்டியதாலும், அல்லாஹ்வை
மட்டுமே வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும்
இந்தக் கொள்கையைச் சொல்பவர்கள் வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
ஆனால் இவரது
பெயர் வஹ்ஹாப் அல்ல. அப்துல் வஹ்ஹாபும் அல்ல. இவரது தந்தையின் பெயர் தான் அப்துல்
வஹ்ஹாப்.
இவரது பெயர்
முஹம்மத் ஆகும். இவரது கொள்கையைப் பின்பற்றுவோருக்குப் பெயர் சூட்டுவதாக இருந்தால்
முஹம்மதீ என்று தான் சொல்ல வேண்டும். (முஹம்மத் என்பவரைப் பின்பற்றுவோர்) இப்படிச்
சொன்னால் அது நபிகள் நாயகத்தைக் குறித்து விடும் என்று அஞ்சிய கப்ரு வணங்கிக்
கூட்டம் அவரது தந்தையின் பெயரால் வஹ்ஹாபிகள் எனக் கூறி வருகின்றனர்.
ஆனால் அவரது
தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் தானே தவிர வஹ்ஹாப் அல்ல.
வஹ்ஹாப் என்பது
அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும்.
முஹம்மதிகள்
என்று சொன்னால் நபிவழி நடப்பவர்கள் என்று பெயர் வாங்கி விடுவார்கள் என்று அஞ்சி
வஹ்ஹாபிகள் என்று அதை விட அழகான பெயரை அவர்கள் வாயாலேயே அல்லாஹ் சொல்லவைத்து
விட்டான்.
வஹ்ஹாப் என்றால்
அல்லாஹ்.
வஹ்ஹாபி என்றால்
அல்லாஹ்வின் கட்சியைச் சேர்ந்தவர் என்று பொருள்.
நாங்கள் கப்ரு
வணங்கிகள் அல்ல என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
இணைவைப்பை
எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மிகப் பெரும் தியாகம் செய்த மாவீரர்
முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப். அவர் சந்தித்தது போன்ற அடக்குமுறைகளையும், எதிர்ப்புகளையும்
நாம் சந்தித்து இருந்தால் நம்மில் எத்தனை பேர் கடைசி வரை தாக்கு பிடித்திருப்போம்
என்று சொல்ல முடியாது.
இன்றைய சவூதி
ஆட்சியாளர்கள் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் முஹம்மத் பின் அப்துல் அஸீஸையும், முஹம்மத் இப்னு
அப்துல் வஹ்ஹாபையும் ஏகத்துவவாதிகள் வெறுக்க முடியாது.
அவர் அன்று துணிச்சலுடன்
கப்ரு வணக்கத்தின் தீமைகளை எதிர்த்தது தான் நமக்கெல்லாம் உத்வேகத்தை அளித்தது
என்பதையும் மறந்து விட முடியாது. நாம் பெரிதும் மதிக்கும் நல்லறிஞர்களில் ஒருவர்
தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்.
ஆனால் அவர்
சொன்ன அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பது இதற்கு அர்த்தமில்லை. அவரது சில
போதனைகள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளன. அதை நாம் சுட்டிக்காட்டி
நிராகரித்துள்ளோம்.
இணையத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.
Saturday, January 23, 2021
பார்பனர் பார்வையில் ஒட்டு மொத்த இந்துக்களும் சூத்திரர்கள்தானே!
ஆந்திர பிரதேசம் கோதாவரி மாவட்டத்தில் இரு தலித் இளைஞர்களை 12 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். சாவர்ணா சாதியை சேர்ந்த இளைஞர்களே தலித்களை இவ்வாறு அடித்து துன்புறுத்தியது.
தலித்களை எப்படி கீழ் சாதியாக பிற்படுத்தப்பட்ட சாதிகள் பார்க்கிறதோ அதே பார்வையில்தான் பார்பனர்கள் ஒட்டு மொத்த பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பார்க்கிறார்கள். இதில் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து எதை சாதிக்கப் போகிறார்கள்? பார்பனர் பார்வையில் ஒட்டு மொத்த இந்துக்களும் சூத்திரர்கள்தானே!
பிஜேபி அதிகாரத்தில் வந்ததிலிருந்து தலித்கள் கொடுமைபடுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்து மதத்தை காக்க வந்துள்ளதாக பாஜக போடுவது பகல் வேஷம் என்பதை என்று இந்துக்கள் உணர்கிறார்களோ அன்று தான் இந்தியா பழைய பெருமையை பெறும்.
Wednesday, January 20, 2021
'ஜெய்ஸ்ரீராம்' என்ற கோஷத்தோடு இடித்து தள்ளியுள்ளனர்.
உபியின் சஹரான்பூரில் கோவிலுக்கு அருகில் ஒரு பொது கழிப்பிடம் உள்ளது. கோவிலுக்கும் கழிப்பிடத்திற்கும் இடையில் ஒரு சுவரும் உள்ளது. சுற்று வட்டார மக்கள் அந்த கழிப்பறையைத்தான் இது நாள் வரை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் குண்டர்கள் இது கோவிலின் புனிதத்தை கெடுக்கிறது என்று சொல்லி 'ஜெய்ஸ்ரீராம்' என்ற கோஷத்தோடு இடித்து தள்ளியுள்ளனர். அந்த ஏழைகள் 'இனி நாங்கள் எங்கே செல்வோம்' என்று கேட்கின்றனர். இடித்தவர்களின் வீடுகளுக்குத்தான் செல்ல வேண்டும். மோடியும், அமித்ஷாவும் உருவாக்கிய கூட்டம் எந்த அளவு மூளை வறண்டவர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
உலகில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் ஒரு பக்கம் கழிவறை கட்டாயமாக இருக்கும். கழிவறைக்கும் இறைவனை வழிபடுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
Monday, January 18, 2021
தைரியமாக உண்மையை பேசுகிறார் திருப்பதியின் தலைமை அர்ச்சகர்!
மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி தைரியமாக உண்மையை பேசுகிறார் திருப்பதியின் தலைமை அர்ச்சகர்!
எப்படி பேசினாலும் வேறு வழியின்றி இங்குதான் வருவார்கள் என்ற தெனாவட்டில் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாமா?
Saturday, January 16, 2021
அர்னாப் கோஸ்வாமியின் தேச விரோத செயல்கள்!
மும்பை: டி.ஆர்.பி. மோசடி வழக்கில் பார்க் (BARC) மாஜி சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவுடன் ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்த 500 பக்க உரையாடலை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். டி.ஆர்.பி. ரேட்டிங் விவகாரத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்களில் இடைத்தரகரைப் போல அர்னாப் கோஸ்வாமி செயல்பட்டதும் இந்த வாட்ஸ் அப் உரையாடல்களில் அம்பலமாகி உள்ளது.
டைம்ஸ் நவ் டிவி சேனல் காலத்தில் இருந்தே அர்னாப் கோஸ்வாமி தீவிர வலதுசாரியாக சர்ச்சைகளில் சிக்கியவர். ஒருகட்டத்தில் ரிபப்ளிக் டிவி என சொந்தமாகவே டிவி சேனல் நடத்தினார்.
அர்னாப் கோஸ்வாமி, தமது டிவி சேனலின் ரேட்டிங்கை முறைகேடாக அதிகரித்தது மகாராஷ்டிரா போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் ரிபப்ளிக் டிவி சிஇஓ விகாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்
வாட்ஸ் அப் உரையாடல்
இந்த நிலையில் டிவி சேனல்கள் ரேட்டிங் தொடர்பான நிறுவனமான பார்க் அமைப்பின் முன்னாள் சி.இ.ஓ. பார்த்தோ தாஸ் குப்தாவும் அர்னாப் கோஸ்வாமியும் வாட்ஸ் அப்பில் உரையாடியதன் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. மும்பை போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் இந்த உரையாடல்கள் ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன. 500 பக்கங்களை கொண்ட இந்த உரையாடல் தொகுப்பை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் நாட்டையே அதிரவைக்கும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
புல்வாமா தாக்குதல்
ஒரு டிவி சேனலின் செய்தி ஆசிரியர் அல்லது உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி, மத்திய அரசின் பல முக்கிய முடிவுகளில் இடைத்தரகர் போல செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்படுவது முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்திருக்கிறது. அதேபோல் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாகவும் பார்த்தோ தாஸ் குப்தாவுடன் வாட்ஸ் அப்பில் அர்னாப் கோஸ்வாமி உரையாடியது தெரியவந்துள்ளது.
அதிகார தரகராக.. பிரசாந்த் பூஷண்
மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதையும் இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டியுள்ள பிரசாந்த் பூஷண், ஊடகத்தை பயன்படுத்தி அதிகார தரகராக அர்னாப் கோஸ்வாமி செயல்பட்டிருப்பதையே இந்த உரையாடல்கள் அம்பலப்படுத்துகின்றன; இந்த நாட்டில் சட்டம் என ஒன்று இருந்தால் அர்னாப் கோஸ்வாமி நீண்டகாலம் சிறையில் தள்ளப்பட வேண்டியவர் என கொந்தளித்திருக்கிறார்.
தகவல் உதவி
Tamil.oneIndia
16-01-2021
Wednesday, January 13, 2021
தொழுகையை தொழ வரிசையில் நிற்கும் ரஷ்ய முஸ்லிம்கள்!
கடுங்குளிரிலும் தங்களின் காலை நேர (ஃபஜ்ர்) தொழுகையை தொழ வரிசையில் நிற்கும் ரஷ்ய முஸ்லிம்கள்!
சாப்பிட்ட பொருளுக்கு பணம் கேட்டால் மதக் கலவரம் பண்ணுவானாம்!
சாப்பிட்ட பொருளுக்கு பணம் கேட்டால் மதக் கலவரம் பண்ணுவானாம்!
'நான் பாஜக நிர்வாகி. என்னிடமே பணம் கேட்கிறாயா? அமித்ஷா உதவியாளருக்கு போன் போட்டால் ஆயிரம் பேர் இங்கு கூடி விடுவார்கள். மதக் கலவரம் உண்டு பண்ணுவேன்' என்று மிரட்டுகிறான். மோடியும், அமித்ஷாவும் அவர்களது கட்சிக் காரர்களை எப்படி உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்று போதும். இது போல் லட்சக்கணக்கில் குடிகாரர்களைம், கொள்ளைக் காரர்களையும் உருவாக்கியுள்ளது பாஜக. இவர்களை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால் இந்த நாடு மதக் கலவரத்தால் அழிந்து போகும்.
Tuesday, January 12, 2021
கடல் கடந்தும் மார்க்கப் பணியில் டிஎன்டிஜே!
கடல் கடந்தும் மார்க்கப் பணியில் டிஎன்டிஜே!
Monday, January 11, 2021
ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).
கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.
இந்தியாவை நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே தொலைத்துவிட்டோம்.
கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வளர்ச்சியடையாத இந்தியாவில் இருந்தோம். ஏதேனும் ஒர் நெட்வொர்க்கில் தொடர்புகொண்டால் அழகான ரிங்டோனோ, ஏதேனும் கொடூர பாடலோ ஒலிக்கும்.
20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள்.
20 லட்சத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள்.
Sunday, January 10, 2021
Saturday, January 09, 2021
இந்து சமூகம் தன்னை தகவமைத்துக் கொண்டு விட்டது.
அர்ஜுன் சம்பத்தை அவரது குல தொழில் ஆன முடி வெட்டும் தொழிலை செய்ய சொன்ன விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் RBVS மணியன்....
இவ்வளவு திமிராக பொது மேடையில் விசத்தை கக்குகிறார். எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பார்பனியத்துக்கு அந்த அளவு இந்து சமூகம் தன்னை தகவமைத்துக் கொண்டு விட்டது.
Wednesday, January 06, 2021
கண்கொள்ளா காட்சி!
கண்கொள்ளா காட்சி!
Tuesday, January 05, 2021
பொருளாதாரம் எனக்கு எப்போது மகிழ்ச்சியை தரும்?
'என்னுடைய பொருளாதாரம் எனக்கு எப்போது மகிழ்ச்சியை தரும்? அதனை வறியவர்களுக்கு கொடுத்து அவர்கள் சந்தோஷமடையும் போது அப்போது அந்த பொருளாதாரமானது எனக்கு மகிழ்வை தரும்.'
'மகிழ்ச்சி கொண்டு வரும் வழிகளில் ஒன்று நாம் பிறருக்கு உதவுவது. உங்களின் அக்கம் பக்த்தவர்களுக்கு உதவுங்கள். உங்கள் சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். நம்முடைய இஸ்லாமிய மார்க்கமானது வறியவர்களுக்கு கொடுக்கச் சொல்லி வலியுறுத்துகிறது. மனிதனுக்கு மகிழ்வை தரக் கூடிய வழி இது. முயற்சியுங்கள். உங்களின் பெருந்தன்மையை உலகுக்கு பறை சாற்றுங்கள்.'
Monday, January 04, 2021
தெற்கு சவுதி அரேபியாவின் அபஹா மலைகளிலிருந்து ...
தெற்கு சவுதி அரேபியாவின் அபஹா மலைகளிலிருந்து ஒரு அருமையான காட்சி.