Followers

Thursday, March 03, 2022

ரியாத்தில் இறந்த சகோதரரின் நல்லடக்கம்..

 

ரியாத்தில் இறந்த சகோதரரின் நல்லடக்கம்...

 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

 

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச்  சேர்ந்த சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் மாரடைப்பால் கடந்த திங்கட்கிழமையன்று இறந்து விட்டார். இன்று 03-03-2022  அல்ராஜ்ஹி பள்ளியில் தொழ வைக்கப்பட்டு நஸீம் மையவாடியில் அவரது நல்லடக்கம் நடந்தது. இவரைப் போலவே பத்து இறந்த உடல்கள் வரிசையாக கொண்டு வரப்பட்டன. இந்தியன், பாகிஸ்தானி, சவுதி, எகிப்து என்று வரிசையாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பெருமளவு நன்மை இருப்பதால் சவுதிகளும் நம் கூடவே வேலை செய்வது நெகிழ்ச்சியாக இருந்தது. ஏழை, பணக்காரன், கருப்பன், சிகப்பன் அரபியன் அரபியன் அல்லாதவன் என்ற எந்த பாகுபாடும் காட்டப்படாமல் ஒன்றாக தொழுக வைக்கப்பட்டு வரிசையாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இறந்த அந்த உடலோடு நானும் ஆம்புலன்ஸில் மையவாடி வரை பயணித்தேன். இது ஒரு பயம் கலந்த புதிய அனுபவம்..

 

இறந்த சகோதரர் ஹாஜா மைதீன் ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டட்டாக பணி புரிந்து வந்துள்ளார். திருமணத்துக்காக பெண்ணும் நிச்சயம் செய்து வைத்துள்ளார்கள். இறைவனின் அழைப்பு எந்த வயதிலும் வரலாம்: அதற்காக நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இது போன்ற இறப்புகளின் மூலம் நாம் படிப்பினை பெறுவோமாக.... 

 

ஜனாஸா தொழுகை:

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.


 அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்)

 


 

 

 

3 comments:

Dr.Anburaj said...

சிரியாவிலும் யேமனிலும் கலகத்திற்கு காரணம் சவுதிதான். ஆனாலும் சில விஷயங்களில் அவர்களது நடவடிக்கை பாராட்டும் படி உள்ளது. இந்தியாவில் சவ அடக்கமும் விசயாயத்தைச் சார்ந்து இருப்பதால். . .மாலை மரியாதைகள் செய்யப்படுகின்றன. திருமணம் இறப்பு போன்ற விசயங்களில் ஆடம்பரங்கள் அதிகம்உ ள்ளது. இந்துக்களும் அதைள உணா்ந்து வருகின்றார்கள். இந்துக்களுக்கு பெரியாரை காட்டுவதை விட ஸ்ரீநாராயணகுருவை காட்டினால் இந்துக்கள் உருப்படுவார்கள்.

A.M.ibrahim said...

ஏன் சுவனப்பிரியன் ஒரு மாதகாலம் இடைவெளி இட்டு பிறகு பதிவிடுகிறீர்கள்.எதிர்ப்பார்த்து ஏமாறுவது போல் இருக்கிறது...

suvanappiriyan said...

ஒரு மாதம் தமிழகம் விடுப்பில் சென்றிருந்தேன். ஊரில் தொடர் வேலை காரணமாக இணையத்தின் பக்கம் வரவில்லை