Followers

Monday, October 17, 2011

தமிழ் மணம்

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூறும் முகமனை கேலி செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று பலரும் சிந்தித்திருக்கலாம். ஒரு இந்துத்வவாதியோ அல்லது ஒரு நாத்திகரோ போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு திரட்டியை நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகிகளில் ஒருவர் தமிழ்மணத்தின் அடையாளத்தோடு வெளியிட்டதுதான் பிரச்னை இந்த அளவு சென்றதற்கு காரணமே!

இஸ்லாத்தின் மீது அவருக்கு வெறுப்பு இருந்திருந்தால் தனி பதிவாக அவரது சொந்த பெயரில் வெளியிட்டிருந்தால் அதற்கு தக்க பதிலை முஸ்லிம் பதிவர்களும் கொடுத்திருப்பார்க்ள்.

ஆனால் பலராலும் மதிக்கப்பட்ட பழைய திரட்டிகளில் ஒன்றான தமிழ் மணத்தின் அடையாளத்தோடு இத்தகைய வசைபாடல் வந்ததைத்தான் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிரச்னையை முடிப்பதே அந்த குறிப்பிட்ட நிர்வாகிக்கு அழகு. அதை செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

'முஹம்மதே! உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது'
-குரஆன் 6:10

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

12 comments:

ஆமினா said...

//
'முஹம்மதே! உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது'//

UNMAIKAL said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

சகோ. உண்மைகளின் பின்னூட்டம் சில திருத்தங்களுடன்......

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம்.! ………… ........

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டு விட்டிருக்கிறது.... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா... ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...
உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க... இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

suvanappiriyan said...

//அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.//

விளக்கம் அளித்து பிரச்னையை முடித்து வைத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. வழமைபோல் தொடரட்டும் உங்கள் பணி!

ஹுஸைனம்மா said...

இஸ்லாம் இதைவிட மேலான அவமதிப்பிற்கெல்லாம் ஆளாக்கபபட்டது; எனினும், வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது இன்றும். அல்ஹம்துலில்லாஹ்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

F.NIHAZA said...

ஹுஸைனம்மா said...
இஸ்லாம் இதைவிட மேலான அவமதிப்பிற்கெல்லாம் ஆளாக்கபபட்டது; எனினும், வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது இன்றும். அல்ஹம்துலில்லாஹ்.

இதைதான் நானும் சொல்லமுற்படுகிறேன்.....

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சகோ இரமணிதரன் அங்கே இந்த சொல்லாடல் வந்ததற்கு என்ன காரணம் என்றாவது சொல்லி இருக்கலாம்.

அதாவது டெரர் கும்மி பகுதியில் முஸ்லீம் பதிவர்கள் யாரும் இரமணிதரனை திட்டவில்லை, தரக்குறைவாக பின்னூட்டமிடவும் இல்லை. சற்றே சம்பந்தமில்லாத் முறையில் அந்த வார்த்தையை உபயோகித்தது எதற்கு என்று தான் கேட்கிறோம்.

இதற்கு மண்ணிப்பு கேட்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

suvanappiriyan said...

சகோ. ஹாஜாமைதீன்!

//இதற்கு மண்ணிப்பு கேட்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.//

சம்பந்தப்பட்ட நிர்வாகமே நடந்த தவறுக்கு வருந்துவதாக சொல்லியும் இது போன்ற சொல்லாடல் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் நம் போன்றவர்களுக்கு நல்லதா என்பதை தங்களின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ குலாம்!

//தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்.,//

ஆம் சகோதரரே! நமக்கு பிரியமானவர்கள் ஒரு தவறை செய்யும் போது உரிமையில் சற்று கடினமாகவே கண்டிக்கிறோம். அது தான் தமிழ் மணத்திலும் தற்போது நடந்துள்ளது. இனி இது போன்ற தவறுகள் நேறாத வண்ணம் தமிழ் மண நிர்வாகிகள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ. ஹுசைனம்மா!

//இஸ்லாம் இதைவிட மேலான அவமதிப்பிற்கெல்லாம் ஆளாக்கபபட்டது; எனினும், வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது இன்றும். அல்ஹம்துலில்லாஹ்.//

அதுதான் இஸ்லாத்தின் தனித் தன்மையே! எதிர்ப்பில் வளர்ந்ததல்லவா இஸ்லாம்!

suvanappiriyan said...

//இதைதான் நானும் சொல்லமுற்படுகிறேன்.....//

சகோதரி நிஹாஸா, சகோதரி ஆமினா இருவரின் வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!