Followers

Saturday, October 22, 2011

சவுதி இளவரசர் சுல்தானின் அகால மரணம்!



மன்னர் அப்துல்லாவுக்கு அரசை கொண்டு செல்வதில் மிகவும் உறுதுணையாக இருந்த இளவரசர் சுல்தான் இன்று மரணம் அடைந்த செய்தி பலரையும் வருத்தத்திற்குள்ளர்கியது. பாதுகாப்பு அமைச்சராகவும் விமானத்துறையையும் கவனித்து வந்த இளவரசர் சுல்தான் சில காலமாகவே நோய்வாய்பட்டிருந்தார். தனது சகோதரனின் இழப்பு தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மன்னர் அப்துல்லா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரை இழந்து துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சவுதி மன்னருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் சுல்தானின் மரணம் சவுதியின் இயல்பு வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தொலைக்காட்சியில் செய்தியில் சொன்னதோடு சரி. கடைகள் அடைக்கப்படவில்லை. திறந்திருக்கும் கடையை மூடச் சொல்லி நிர்பந்திக்கவில்லை. நம் நாட்டில் மெரீனா பீச்சில் ஆட்சியாளர்களுக்கு தனியாக சமாதி எழுப்புவதுபோல் இங்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எல்லோரையும் அடக்கக் கூடிய பொது மைய வாடிக்குத்தான் அவரது உடலும் கொண்டு வரப்படும். அடக்கம் செய்தவுடன் சிமெண்டால் சமாதி கட்டப்படாது. வெறும் மண்ணால்தான் இவரது உடல் மூடி அடக்கம் செய்யப்படும்.

சொல்லி வைத்தாற்போல் சவுதியின் ஆட்சியாளர்கள் ஓரளவு குர்ஆனின் வழியிலேயே ஆட்சியை கொண்டு செல்கிறார்கள். மிகப் பரந்த நாடு. அதிலும் பல வெளிநாட்டவர்களை கொண்டு வேலை வாங்கி செயல்படும்நாடு. எனவே ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம் இந்த ஆட்சியாளர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

சவுதி ஆட்சியாளர்களை பின்பற்றி மற்ற இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஆட்சி முறையை மாற்றி அமைத்துக் கொண்டால் வன்முறை குறையும். அமைதி தவழும்.

ஒருமுறை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இளவரசர் தலாலின் சகோதரரோடு அழைப்பு வழிகாட்டல் மையம் நடத்திய ஒரு விழாவில் சந்திக்க நேரிட்டது. எங்கள் அனைவரிடமும் கைகுலுக்கி குசலம் விசாரித்து எங்களோடு ஒன்றாக தரையில் அமர்ந்து அளாவளாவினார். தனியாக அவருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தும் அதை மறுத்து எங்களுடனேயே சேர்ந்து அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிட்டது மறக்க முடியாதது.

இது போன்ற ஆடம்பரமற்ற ஆட்சியாளர்களை அனைத்து நாடுகளும் பெற்று சவுதியை போல் செல்வத்திலும் கொழிக்க அந்த ஏக இறையை இறைஞ்சுகிறேன்.

முந்தய மன்னர் பஹத் இறந்தபோது அவரது உடலை சாதாரண மண் தரையில் அடக்கம் செய்தததைத்தான் பார்க்கிறோம்.



2748. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். -ஆதாரம் புகாரி

16 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,
க்ரவுன் பிரின்ஸ் சுல்தான் இறந்தது வருத்தமான செய்தி. (இன்னாலில்லாஹி...)

நேற்று நான் நைட் ஷிப்ட். காலை முதல் தூங்கி இன்று பகல் எழுந்து குளித்து சாப்பிட்டு பின்னர் அசர் முடித்து ஜுபைல் டவுன் சென்று ஷாப்பிங், பேங்கிங், பீச், ஹோட்டல் என்று அனைத்தும் முடித்து இப்போது வீடு திரும்பி மெயில் பார்த்து சிலருக்கு பதில்கள் கொடுத்துவிட்டு,

பின்னர் பிளாக்கர் ஓபன் பண்ணினால்...
உங்களின் இந்த வலைப்பதிவு செய்தி பார்த்தபோதுதான் மரணச்செய்தி தெரியும்.

நானும் சவூதியில்தான் இருக்கிறேன். அதுவும் மாலை முழுதும் வெளியில்தான் இருந்தேன். எவரும் இது பற்றி பேச வில்லை. பகிரவும் இல்லை. எந்த வித்தியாசமான அறிகுறியும் ஜன சந்தடி மிக்க இந்நகரில் இல்லை.

சவூதியை பொறுத்தமட்டில் அரசகுடும்பத்து மரணம் பொதுமக்களை அவர்களின் மாமூல் வாழ்வினை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை இப்போது இரண்டாவது முறையாக நேரில் பார்க்கிறேன்.

மதுரை சரவணன் said...

ilavarasar aanmaa santhi ataiya piraarththikkirom... avarin udal adakkaththai kuuri.. nam naattu thalaivarkalukku savukku adi koduththulleerkal...!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

//நானும் சவூதியில்தான் இருக்கிறேன். அதுவும் மாலை முழுதும் வெளியில்தான் இருந்தேன். எவரும் இது பற்றி பேச வில்லை. பகிரவும் இல்லை. எந்த வித்தியாசமான அறிகுறியும் ஜன சந்தடி மிக்க இந்நகரில் இல்லை.

சவூதியை பொறுத்தமட்டில் அரசகுடும்பத்து மரணம் பொதுமக்களை அவர்களின் மாமூல் வாழ்வினை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை இப்போது இரண்டாவது முறையாக நேரில் பார்க்கிறேன்.//

உண்மைதான்! இங்கு ரியாத்திலும் இதே நிலைதான். அரச குடும்பம் நினைத்திருந்தால் இந்த நிகழ்வை பெரிதுபடுத்தியிருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இஸ்லாம் இது போன்ற ஆடம்பரங்களை தடை செய்கிறது.

இதே நேரம் நம் நாட்டில் அண்ணா இறந்த போதும் எம்.ஜி.ஆர் இறந்த போதும் நடந்த நிகழ்வுகளை படித்தால் தலையே சுற்றும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு சரவணன்!

//ilavarasar aanmaa santhi ataiya piraarththikkirom... avarin udal adakkaththai kuuri.. nam naattu thalaivarkalukku savukku adi koduththulleerkal...!//

இறந்தவர்களுக்கு மணி மண்டபம் என்ன? அவர்களின் சமாதியை பெரிதாக்கி அழகிய மெரீனா கடற்கரையை புதை குழியாக மாற்றிய கோரம் என்ன? இன்னும் பலருக்கும் இடம் இப்பொழுதே புக் செய்யப்பட்டிருக்கிறதாம். அதிலும் ஜனநாயக நாட்டில் இத்தனை கூத்துகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

//இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மரணத்திலும் கூட முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு அழகிய முன்மாதிரி!

Anonymous said...

அகால மரணம் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?

Anonymous said...

எளிமையாக சௌதி அரச குடும்பத்தினர் இருப்பதால் தான் ஆட்சியாளர்களாக தாக்கு பிடிக்க முடிகிறது. இல்லை சதாம், கடாபி நிலை தான் அங்குள்ளவர்களுக்கும் நேரும். அமெரிக்காவுக்கு அடங்கி இருப்பதால், அமெரிக்காவும் அவர்களை பாதுகாக்கிறது. இல்லை, ஏனைய முஸ்லீம் நாடுகளில் நிகழ்பவையே அங்கும் நிகழும்.

ஹுஸைனம்மா said...

இன்னா லில்லாஹி...

மரணச்செய்திகளில் அவரைப் பற்றி எழுதியிருந்தபோதுதான் அவரின் உயரிய பொறுப்பும், பதவியும் அறிந்தேன்.

இப்போது ஹஜ்ஜின் காலம், மில்லியன் கணக்கில் மக்கள் வருவார்கள். எனினும் இவர் மரணத்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது.

என் பதிவொன்றில் நான் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது:

இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, இன்னிக்கு இருக்கிற வயசான/ வயசாகாத அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!

:-(((((

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ.மு.ஜபருல்லாஹ்!

//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மரணத்திலும் கூட முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு அழகிய முன்மாதிரி!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ. ஹூசைனம்மா!

//இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, இன்னிக்கு இருக்கிற வயசான/ வயசாகாத அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!//

உண்மைதான் சகோதரி.... அந்த அளவு நமது ஊர் அரசியல்வாதிகளின் அராஜகமும், மக்களின் அறியாமையும் ஒன்று சேர்ந்து கொள்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//அகால மரணம் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?//

காலத்துக்கு எதிர்பதம் அகாலம் என்று நினைக்கின்றேன். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே எதிர்பாராத விதமாக இறப்பவர்களுக்கு இந்த வார்த்தையை உபயோகிக்கிறோம் என்பது என் கணிப்பு. தமிழ் அறிஞர்கள் யாரும் மேலதிக விளக்கம் கொடுக்கலாம்.

//அமெரிக்காவுக்கு அடங்கி இருப்பதால், அமெரிக்காவும் அவர்களை பாதுகாக்கிறது. இல்லை, ஏனைய முஸ்லீம் நாடுகளில் நிகழ்பவையே அங்கும் நிகழும்.//

'அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக'
-குர்ஆன் 2:125

கஃபா மக்கள் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாக்கப்பட்ட பூமியாகவும் அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் பாதுகாக்கப்பட்ட பூமியாகவே இருக்கிறது. 14 நூற்றாண்டுகளாக எந்த தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் அது இன்றளவும் இருந்து வருகிறது. எனவே கஃபா அமைந்திருக்கும் மெக்காவையும் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சவுதி அரசையும் அமெரிக்க என்ன, நேட்டோ படைகளும், நமது நாட்டு இந்துத்வா வாதிகளும் ஒன்று சேர்ந்து முயற்ச்சித்தாலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அம்பாளடியாள் said...

இறந்தவரின் ஆன்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

/அகால மரணம் என்ற பொருள் குறிப்பது ..//

இயல்பாக நோய்வாய்ப்பட்டு இறக்காமால் ஏதோ ஒரு விபத்தில் சிக்கி
உயிர் இழத்தலைக் குறிக்கும் .இதை அவலச் சாவு என்றும் குறிப்பர் .

அம்பாளடியாள் said...

உங்களுக்கும் உங்கள் உறவுகளிற்கும்
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ......

suvanappiriyan said...

சகோதரி அம்பாளடியாள்!

//உங்களுக்கும் உங்கள் உறவுகளிற்கும்
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ......//

உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் வலையுலக இந்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.