Followers

Thursday, October 27, 2011

ஆயுள் கூடுவது இறை மறுப்புக்கு ஆதாரமாகுமா? கி. வீரமணிக்கு!



மெல்பர்ன், அக்.26: ஆயுளை நிர்ண யிப்பவன் ஆண்டவன்; பிண்டம் பிடிக்கும் போதே இத்தனை ஆண்டுகள் ஆயுள் என்று ஆண்டவன் தலையில் எழுதி விடு கிறான். அதை யாரே மாற்ற முடியும்! என்று உளறிக் கொண்டிருந்த நம்பிக் கைக்கு மரண அடி கொடுப்பதுபோல ஆஸ்திரேயா வில் மாத்திரை ஒன்றின் மூலம் 150 ஆண்டு கள் மனிதன் வாழலாம் என்பதைக் கண்டுபிடித்து நிரூபித்தும் உள்ளனர்.

மருத்துவ துறை வளர்ச்சியின் காரண மாக, மனிதனின் சராசரி வயது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தி யர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உடல்நலத் துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ் வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற் கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடு பட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இது மட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.

ஜீன்களே காரணம்!

ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிக ரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றார்.

-விடுதலை 27-10-2011


அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் மனிதனை நோய் வாய்படுத்தக் கூடிய செல்களை ஆராய்ந்து அதனை சில மருந்துகளை மனிதனின் உடலுக்குள் செலுத்துவதன் மூலம் மனிதனின் ஆயுளை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் கண்டபிடித்திருக்கிறார்கள். இது புதிய கண்டு பிடிப்பும் அல்ல. பல ஆண்டுகளாக மனிதன் ஆயுளை நீட்டிக்க முயற்ச்சித்தவண்ணமே உள்ளான். யாருக்குத்தான் நீண்ட நாள் உயிர் வாழ ஆசையில்லை?

திரு வீரமணிக்கு உடல்நலக் குறைவால் மருத்துவரை அணுகுகிறார். 'தற்போது வந்திருக்கா விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும்' என்று கூறி மருத்துவர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கிறார். உடன் வீரமணி அவர்கள் மருத்துவரை கடவுள் என்று கூறுவாரா? அந்த மருத்துவரை பாராட்டவே செய்வார். அதுபோல் மனிதர்கள் 150 வருடம் வாழும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது மருத்துவர்களின் ஆராய்ச்சியின் பலனை நாம் அனுபவிக்கிறோம் என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். இத்தகைய திறமையை அந்த மருத்துவர்களுக்கு கொடுத்தது அந்த இறைவன் அல்லவா? இனி வரும் காலங்களில் மனிதனின் ஆயுளை 150 வருடம் என்று நீட்டிக்க இறைவன் முடிவெடுத்து விட்டால் அதை தடுக்கும் சக்தி உலகில் வேறு ஏது?

'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது விட்டு வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது'
-குர்ஆன் 13:39

இந்த வசனத்தின் மூலம் விதியை எழுதிய இறைவன் சில நேரங்களின் மனிதர்களின் பிரார்த்தனையை ஏற்று மாற்றவும் செய்வதாக கூறுகிறான்.

அடுத்து வீரமணி அவர்கள் மனிதனின் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் அது எங்கு செல்கிறது? போன்ற கேள்விகளுக்கு அதே மருத்துவர்களின் துணையோடு பதிலளிப்பாரா?

4 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
இருக்கட்டுமே....
ஆயிரம் வருஷம் வாழ மாத்திரையே கண்டு பிடிக்கட்டுமே..!

அப்டீன்னா... ஆயிரத்து ஒண்ணாவது வருஷம் சாவுதானே..? நித்திய ஜீவி என்று யாரும் இல்லையே..?

சரி, அப்படியே ஒரு சிரஞ்சீவி இருந்தாலும், இந்த உலகமே... பிரபஞ்சமே அழிந்து போயின் அவர் என்னவாவார்..? நீரின்றி ஆக்சிஜனின்றி எங்கே வாழ்வார்..?

என்னத்தே சிந்திக்கிறார்களோ..!

நல்லதொரு விழிப்புணர்வூட்டல் சகோ. நன்றி.

தருமி said...

//விதியை எழுதிய இறைவன் சில நேரங்களின் மனிதர்களின் பிரார்த்தனையை ஏற்று மாற்றவும் செய்வதாக கூறுகிறான்.//

:)

நல்லதொரு விழிப்புணர்வூட்டல்!!

suvanappiriyan said...

சலாம் சகோ. ஆசிக்!

//என்னத்தே சிந்திக்கிறார்களோ..!//

பகுத்தறிவாதிகள் அல்லவா? அப்படித்தான் சிந்திப்பார்கள். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ. தருமி!

//நல்லதொரு விழிப்புணர்வூட்டல்!!//

:-(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!