Followers

Monday, January 26, 2015

அமீர்கானின் ஹஜ் பயணம் விமரிசிக்கப்படுகிறது.



தற்போது வட இந்தியாவில் இந்த போஸ்டரை வெளியிட்டு அமீர்கானுக்கு சிக்கலை உண்டு பண்ண இந்துத்வா அமைப்பினர் முயற்சிக்கின்றனர். அமீர் தனது தாயோரோடு ஹஜ் பயணம் மேற்கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

இங்கு அமீர்கான் 21 கற்களை பொறுக்குகிறார். இந்த கற்களை மூன்று இடங்களில் ஏழு ஏழாக எறிய வேண்டும் என்பது கட்டளை. இவ்வாறு ஏன் எறிய வேண்டும்?

நபி ஆப்ரஹாம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற புறப்படும் போது சாத்தான் இந்த மூன்று இடங்களில் நின்று அந்த இறைக் கட்டளையை நிறைவேற்ற விடாது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தினான். இதனால் கோபமுற்ற நபி ஆப்ரஹாம் சிறிய கற்களை கொண்டு 'தூரப் போ' சாத்தானே' என்று விரட்டுகிறார். இவரின் மன உறுதியை கண்டு சாத்தான் அவரிடமிருந்து விரண்டோடி விட்டதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

இதனை நினைவு கூறி அவரைப் போலவே எங்கள் மனதில் இது போன்ற சாத்தானின் ஊசலாட்டங்கள் ஏற்பட்டால் தூர விரட்டுவேன் என்பதை சிம்பாலிக்காக உணர்த்துவதற்காக இந்த செயல் ஏற்பட்டது. விபசாரம், வட்டி, பொய், திருட்டு, கொலை போன்ற பெரும் பாவங்களை சாத்தான் எனக்கு நல்லதாக்கி காட்டினால் அவனை இதனைப் போல் விரட்டுவேன் என்று உலக மக்கள் உறுதி எடுத்துக் கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது.

இனி பிகே படத்துக்கு வருவோம்.



அமீர்கான் ஒரு கல்லை வழியிலிருந்து எடுக்கிறார். அந்த கல்லின் மேல் ஒரு பொட்டை வைக்கிறார். சிகப்பு சாயத்தை அதன் மேல் பூசி ஒரு ஆலமரத்தின் கீழ் வைக்கிறார். சிறிது நேரத்தில் நமது வியாபாரம் ஆரம்பமாகும் என்கிறார். அது போலவே அந்த வழியே வரும் கல்லூரி மாணவர் முதல் வயதான கிழவர்கள் வரை விழுந்து கும்பிட்டு விட்டு அங்கு தங்கள் பணத்தையும் போடுகிறார்கள். முதல் இல்லாத வியாபாரம் என்று மக்களின் அறியாமையை படம் பிடித்து காட்டுகிறார். இதற்கும் ஹஜ்ஜில் கற்களை எறிவதற்கும் என்ன சம்பந்தம்?

சைத்தானிய எண்ணங்களை விரட்ட கற்களை அமீர்கான் பயன்படுத்துகிறார். அதே கல்லை மற்றவர் வணங்குவதற்கு பயன்படுத்துகின்றனர். இரண்டும் எதிரெதிர் பாதையில் பயணிப்பதை ஏன் இந்துத்வாவாதிகள் உணரவில்லை?



The Best scene of Amir Khan Movie PK by JahazVId

http://www.dailymotion.com/video/x2dq0kb_the-best-scene-of-amir-khan-movie-pk_news


Best Scene Of PK Bhagwan kahan hai ? by Alertstvcom

http://www.dailymotion.com/video/x2drlo0_best-scene-of-pk-bhagwan-kahan-hai_news

http://www.downvids.net/-pk-this-is-my-best-scene-of-movie-love-it--583516.html#AddBlog

No comments: