Followers

Showing posts with label இந்துத்வா. Show all posts
Showing posts with label இந்துத்வா. Show all posts

Saturday, January 11, 2020

சாமி கும்பிட வந்தவரின் வாயில் மூத்திரத்தை கொடுத்த கொடூரம்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கருவனூர் கிராமத்தை சேர்நத தலித் சமுதாயத்தை சேர்ந்த அரவிந்தன் (வயது 20) வெல்டராக பெங்களூரில் பணி புரிந்து வந்தார். சென்ற மார்ச் 2 ந்தேதி தனது கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கருவனூர் வந்துள்ளார் அரவிந்தன். இது பற்றி அரவிந்தன் கூறியதாவது....

'எனது உறவினர் தினேஷை (வயது 20) அழைத்துக் கொண்டு திருவிழா நடக்கும் கோவிலுக்கு சென்றேன். சில உயர் சாதி இந்துக்கள் நாங்கள் கோவிலுக்குள் வந்ததை ஜீரணிக்க முடியவில்லை. உடன் அவர்கள் கும்பலாக எங்களை சூழ்ந்து கொண்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். எங்கள் இருவரையும் கழிவறை இருக்கும் இடம் வரை இழுத்தச் சென்றனர். அங்கும் எங்கள் இருவரையும் தாக்க ஆரம்பித்தனர். அடி தாங்காமல் நான் கீழே வீழ்ந்தேன். அப்போது மிகுந்த தண்ணீர் தாகம் எடுத்தது. 'தண்ணீர்... தண்ணீர்' என்று பிதற்றினேன். உடனே உயர் சாதி இளைஞன் ஒருவன் எனது வாயில் மூத்திரத்தை பெய்தான். எனது உறவினர் தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி எனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தான். பிறகு எனது உறவினர்கள் வந்து என்னை மீட்டனர்' என்கிறார் அரவிந்தன் என்ற தலித் இளைஞர்.

மறுநாள் அரசு ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்படுகிறார். அருகில் உள்ள கல்லாவி காவல் நிலையத்தில் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி நீதி கேட்டுள்ளார். ஆனால் காவலர்களோ வன்கொடுமை சட்டத்தில் கேஸை புக் பண்ணாமல் சாதாரண அடிதடி கேஸில் வழக்கு பதிந்துள்ளனர்.

'தமிழ்நாடு குறவர்கள் பழங்குடியின மக்கள் சங்கத்தின்' தலைவர் ரவி சொல்கிறார் 'காவல் துறையைச் சார்ந்த சிலர் என்னிடம் வன் கொடுமை சட்டத்தில் கேஸ் புக் பண்ணாமல் இருப்பதற்காக மேல் சாதியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளதாக சொல்கின்றனர். இதனை நாங்கள் விடப் போவதில்லை. நீதி மன்றத்துக்கு இந்த சம்பவத்தை எடுத்துச் செல்வோம்' என்கிறார்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
18-03-2015

தான் வணங்கும் சாமியை கும்பிட வந்தது அவ்வளவு பெரிய தவறா? மூத்திரத்தை அந்த இளைஞன் வாயில் ஊற்றும் அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன என்பதை இந்துத்வாவாதிகள் விளக்குவார்களா?

இந்து மதத்தில் உள்ள இது போன்ற தவறுகளை எல்லாம் களைந்தால் ஏன் மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்? இந்து மதத்தை காக்க NRC போன்ற சட்டங்களும் தேவையில்லையே? மோடியும் அமித்ஷாவும் சிந்திப்பார்களா? 
...

Tuesday, October 10, 2017

ஆரியர்கள் தமிழகத்தில் காலூன்றியது எவ்வாறு?



ஆரியர்கள் நம் நாட்டின் பூர்வ குடிகள் அல்ல என்பதை அவர்களின் தோற்றங்களையும் பேசும் முறைகளையும் வைத்தே நம்மால் ஊகித்து விட முடியும். இது பற்றிய பல செய்திகளை ஆதாரங்களோடு 'வழிப்போக்கன்' என்ற பதிவர் தனது தளத்தில் பதிவுகளாக பதிந்துள்ளார். அதனை இனி பார்போம்.

அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத்தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்"
என்றே "பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்" என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

Monday, September 11, 2017

உச்ச நீதி மன்றமா? உச்சு குடுமி மன்றமா?

உச்ச நீதி மன்றமா? உச்சு குடுமி மன்றமா?

புதுடில்லி: வாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் கார் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநில தலைவர் கவுகாத்தியில், செப்., 5ம் தேதி வடகிழக்கு தனித்துவ மக்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவுகாத்தி வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரை, தலைமை நீதிபதி அஜித் சிங் வரவேற்றார். மேலும், விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை, ரவிசங்கருக்கு அவரே கார் ஓட்டிச் சென்றார். இது தொடர்பான படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின. 

தலைமை நீதிபதிக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற விதிகளை அவர் மீறி விட்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. மேலும், இது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்படும் என்றும் பார் கவுன்சில் கூறியுள்ளது.

தினமலர்

11-09-2017

உச்ச நீதி மன்ற நீதிபதியானாலும் பார்பனனுக்கு ஒரு சூத்திரன் காரோட்டுகிறார். இதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. :-)


Wednesday, August 16, 2017

பூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிடிப்பு!

பூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிடிப்பு!

போபால்(03 ஆகஸ்ட் 2017): மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவலிங்க பூஜை செய்ய மறுத்த முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்குள் பூட்டிவைத்து கைதிகள் போல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போபால் கமலா நேரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிவலிங்க பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மாணவிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளி முதல்வர் நிஷா கமரானி கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அங்கு பயிலும் சுமார் 100 முஸ்லிம் மாணவிகள் இதுபோன்ற பூஜை செய்வது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது என்பதால் அதை செய்யமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இதனால் முஸ்லிம் மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத பள்ளி ஆசிரியை தெரிவிக்கையில், "மத்திய பிரதேசத்தில் சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால் அனைத்து மதத்தினரும் பயிலும் அரசு பள்ளிகளில் இதுபோன்ற ஒரு சார்பு மத பூஜைகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்" என்றார்.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க காவிகள் இந்துத்வாவை அனைத்து மட்டத்திலும் புகுத்த பல வழிகளிலும் முயல்கிறார்கள். பெரும்பான்மை இந்து மக்களாலேயே சனாதன தர்மம் ஒதுக்கி வைக்கப்பட்டு நாத்திகர்களாக வாழ்கின்றனர். உண்மை இவ்வாறு இருக்க இந்த உலுத்துப் போன பார்பனீய பழக்கங்களை முஸ்லிம் மாணவிகள் மேல் திணித்து எதனை சாதிக்கப் பொகிறது பிஜேபி. இதனால் இந்தியாவின் வறுமை ஒழிந்து விடுமா? இவ்வாறு கட்டாயப்படுத்துவதால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெகுண்டெழும் நாள் வெகு தொலைவில் இல்லை.



Muslim girl students were locked up in a classroom after they denied participating in the ‘religious Shivlings aka Shiva Lingams making workshop’.




Friday, August 11, 2017

உபியில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30 குழந்தைகள் இறந்துள்ளன!


உபியில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30 குழந்தைகள் இறந்துள்ளன!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உபியின் கோரக்பூரில் 30 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக் குறையால் இறந்துள்ளன. அரசு நிர்வாகம் ஆக்சிஜன் நிறுவனத்துக்கு நிலுவை தொகை செலுத்தாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. வட நாடு முழுக்க நிலைமை இதுதான். இந்த அழகில் தமிழகத்தையும் பிஜேபி வளைத்து போட முயல்கிறது.

மாட்டுக்கு செலவழிக்கும் பொருளாதாரத்தை மனிதனுக்கு செலவழித்திருந்தால் 30 குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். இதனை யோகி ஆதித்யனாத்துக்கும் மோடிக்கும் புரிய வைப்பது யார்?  

Saturday, July 22, 2017

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

காக்கிநாடா: ஆந்திராவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்ட, 46 பசுக்கள், நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு, பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில், ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கும் அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, 480 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.


மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள பசுக்களில் சில, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பற்றாக்குறையால், பல பசுக்கள், பசியால் வாடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த சில நாட்களாக, நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட, 46 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.


இது குறித்து, தகவல் அறிந்த, மாநில கால்நடைத் துறை அதிகாரிகள், மாடுகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பசுக்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மிகச் சிறிய இடத்தில், அதிகப்படியான பசுக்கள் பராமரிக்கப்படுவதே, அவற்றின் நோய் தாக்கத்திற்கு காரணம். 150 பசுக்கள் மட்டுமே பராமரிக்க கூடிய இடத்தில், இந்த அமைப்பினர், 480 பசுக்களை பராமரித்து வருகின்றனர். மழைக் காலம் என்பதால், பசுக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


அனைத்து பசுக்களுக்கும் போதிய உணவளிக்க முடியாததால், அவற்றில் சில, பட்டினியால் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நிமோனியா நோய் பாதிப்பாலும், சில பசுக்கள் பலியாகியுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தின மலர்
23-07-2017


இந்த பசுக்கள் விவசாயிகளிடம் இருந்திருந்தால் நல்ல விலைக்கு விற்று அதனை காசாக்கியிருப்பார்கள். உழைக்கும் மக்களுக்கு உணவாகவும் சென்றிருக்கும். அதை விடுத்து 'கோமாதா எங்கள் தெய்வம்: அதனை இறைச்சிக்காக அறுக்கக் கூடாது: அதனை நாங்களே பராமரிக்கிறோம்' என்று கோமாளித்தனமான முடிவை எடுத்ததனால் இன்று 64 பசுக்கள் இறந்துள்ளன. சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன. இந்த கோமாளிகளான இந்துத்வா ஆட்சியாளர்கள் இதனை என்றுதான் உணருவார்களோ!


Thursday, June 22, 2017

இந்துத்வாவாதிகளின் தேச பக்தி என்பது இதுதான்.

கேரளா திருச்சூரைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் ராஜேஸ் இருவரும் சகோதரர்கள். ராகேஷ் யுவ மோர்சாவின் முக்கிய மெம்பர். ராஜீவ் பிஜேபியில் உறுப்பினராகவும் இருந்து தீவிர பணியாற்றி வருபவர். இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் 2000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு அடித்து அதனை புழக்கத்தில் விடும்  போது வகையாக மாட்டிக் கொண்டு தற்போது சிறையில் உள்ளனர்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
22-06-2017

இந்துத்வாவாதிகளின் தேச பக்தி என்பது இதுதான்.


Sunday, June 18, 2017

பார்பனர்கள் இந்தியர்கள் அல்ல - ஆய்வு முடிவு சொல்கிறது

பார்பனர்கள் இந்தியர்கள் அல்ல - ஆய்வு முடிவு சொல்கிறது

ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்து ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும் பெயர்கள் . . . 

.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்

.
அதேசமயத்தில் இப்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும் பெயர்கள் . . . 

.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

.
Professor Richard Martin
மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .

.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . .
.
.
நேற்று முன்தினம் இவருடைய குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . .
.
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? 

.
ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . . இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர் 

.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்

.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது

.
அப்படி என்ன விஷயம் ??

.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும் 

.
அப்படி சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்

.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்

.
அவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்

.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது

.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்

.
ஏனென்றால் அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள் 
.
அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள் அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும் ??

.
இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் . .

.
ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது 

.
அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு

.
மேலும் இப்போது தான் நமக்கு புரிகிறது . . 

.
மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கிறார்கள் . .

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி பல கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் விடை சொல்கின்றன

.
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும்

.
கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . . 

.
இந்த மண்ணில் திராவிடர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும் 

.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருப்பார்கள் என்றும்

இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது

.
இனிமேல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம் இது எங்கள் மண் . . . வந்தேரிகள் வாலாட்டினால் குரல் உயர்த்துவோம் . . . தமிழன் என்பதில் மட்டற்ற பெருமை கொண்டு மார் தட்டுவோம்

.
Marutha Muthu.
*********************************************************
How genetics is settling the Aryan migration debate




Wednesday, June 07, 2017

2989 கோடியை பாழாக்கும் இந்துத்வா அரசு!



2989 கோடியை பாழாக்கும் இந்துத்வா அரசு!

குஜராத்தில் நர்மதை ஆற்றுக்கு பக்கத்தில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவுகிறது மோடி அரசு. மத்திய பெட்ரோலிய துறை (PSU) 200 கோடி இனாமாக தருகிறது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC) 50 கோடி தருகிறது. இந்த சுமைகளெல்லாம் வருங்காலங்களில் ஏழை மக்களின் மீது மறைமுகமாக திணிக்கப்படும்.

20000 ஸ்கொயர் மீட்டர் பரப்பளவுள்ள புழக்கத்தில் உள்ள ஏரியை தூர் வாரி படேலின் சிலையை நிறுவுகிறார்களாம். விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு ஏழ்மையான நாட்டுக்கு சிலைக்கு 2989 கோடியை எந்த சிறந்த ஆட்சியாளராவது ஒதுக்குவாரா? இப்போது இந்த சிலைக்கு என்ன அவசியம் வந்து விட்டது? இதை எல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் தேச துரோகி :-) போராட்டம் பண்ணிய மத்திய பிரதேச விவசாயிகளின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி ஐந்து விவசாயிகளை கொன்று போட்ட மோடிக்கு அதன் வலி தெரியுமா? டெல்லியில் நிர்வாண போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் வலி தெரிந்தால் சிலைக்கு இத்தனை கோடி சென்றிருக்குமா? தெரிந்திருந்தால் ஒன்றுக்கும் உதவாத சிலைக்கு 2989 கோடியை ஒதுக்குவாரா?

மாட்டுக் கறி தடையால் ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் நமது நாட்டை கார்பரேட் முதலாளிகளுக்கு மோடி தாரை வார்த்து விடுவார். காவிகளின் ஆட்சியில் இதுதான் சாதனையாக பேசப்படும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்

06-06-2017


http://indianexpress.com/article/india/for-sardar-patel-statue-oil-psus-are-directed-to-pay-rs-200-crore-4690888/

Saturday, March 18, 2017

பசு வதைக்கு இனி ஆயுள் தண்டனையாம்!

பசு வதைக்கு இனி ஆயுள் தண்டனையாம்!

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இங்கு, பசு வதை தடுப்புச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.

நரேந்திர மோடி, 2011ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பசுவை கொல்பவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டது.

தற்போதைய இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பசு வதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும்.

-தினமலர்
19-03-2017

முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.: 3000 அப்பாவி முஸ்லிம்கள் கொல்வதற்கு காரணமாயிருந்த மோடியும் அமீத்ஷாவும் முறையே பிரதமர் மற்றும் அமைச்சர். இறந்த மனிதர்களின் உடலை சுட்டு தின்று கொழிக்கும் அகோரி சாமியார்கள் புனிதர்கள். இனி இந்த நாடு என்னவெல்லாம் கொடுமைகளை சந்திக்கப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

அமீத்ஷா தனது வேலையை ஆரம்பித்து வைத்துள்ளார்!



The Times of India .... dtd 16/03/2017 ........... Page No - 12

--------------------------------------

UP பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கும் போஸ்டர்கள் காணப்பட்டதால் இஸ்லாமியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அந்த போஸ்டர்களில் , அமெரிக்காவில் டிரம்ப் என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம் என்றும் முஸ்லிம்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஊரை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பயமுறுத்தும் விதமாக எழுதப்பட்டிருந்தது. இதுவரை இந்தக்கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை என்றும், ஹோலிப்பண்டிகையை கூட அனைவரும் சேர்ந்துதான் கொண்டாடினோம் என்றும் கிராம மக்கள் கூறினர்.

இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் காவிகளின் சூழ்ச்சிகளிலிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.



Tuesday, March 14, 2017

அசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா? நீதிமன்றமா?



காவி பயங்கரவாதம் மிக மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் தங்களுடைய அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமிய, தலித், கிருஸ்தவ மக்களுக்கு எதிராக அது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்கள், காவி பயங்கரவாதிகளை விமர்சனம் செய்த எழுத்தாளர்களைக் கொலை செய்தது, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்தது, செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணித்தது எனத் தொடங்கிய அதன் பயங்கரவாதம் இப்போது பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய கேடி சாமியார் அசீமானந்தா விடுதலையில் வந்து நிற்கின்றது. யார் இந்த அசீமானந்தா? ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, ஐந்து குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன், 119 பேர் உடல் சிதறி உயிரிழக்கக் காரணமான இந்து பயங்கரவாதி. அப்படி குண்டுவைத்துப் பல பேரை கொன்றதைப் பெருமையாக ஒப்புக்கொண்டவன். அப்படிப்பட்டவனைத்தான் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்திருக்கின்றது.


2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் மூன்று பேரை பத்துவருடங்களாக தேடிக்கொண்டே இருக்கின்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் சுனில் ஜோசியும் ஒருவர் ஆவர். இவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். செத்துப்போனவனை குற்றவாளி என்றும், உயிரோடு இருப்பவனை குற்றமற்றவன் என்றும் நீதி மன்றம் விடுவித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அசீமானந்தா விடுதலை தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் ஏன் மோடி அரசால் திட்டமிட்டு அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காரவான் இதழில் வெளிவந்த அசீமானந்தாவின் பேட்டியைப் பார்த்தோம் என்றால், இதை ஒரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் சிறையில் பத்திரிக்கையாளர் லீனா அவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், குண்டுவெடிப்புக்கும் உள்ள பல்வேறு திடுக்கிடும் பின்னணியை விளக்கியிருந்தார். மேற்குவங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த அசீமானந்தாவின் இயற்பெயர் நவகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடுகொண்ட அசீமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த அசீமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சன்யாசியானர். அன்று முதல் தன்னுடைய நவகுமார் சர்க்கார் என்ற பெயரை அசீமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

‘அசீமானந்தம்’ என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியினப் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது, அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.

இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அசீமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் செய்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதன்படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டுவைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதைத் தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார். இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது அம்மா வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கியில் சுடப்பட்டு உரியிழந்து கிடந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நடத்திவந்த மும்பை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் நவம்பர் 26 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் மர்மமான பல சம்பவங்கள் நடந்துள்ளன. எப்படி மோடி, குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத வாக்குமூலங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போல இந்த அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி நூற்றுக்கணக்கான பேரை படுகொலை செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி ஒரு கோழையைப் போல ஹரித்வார் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த போது சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டான். மறைந்திருந்து தனக்குப் பிடிக்காதவர்களைக் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யும் இந்தப் பயங்கரவாதக் கும்பல் கோழைகளைப் போல ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள். தயிர் சோத்தையும், வெண்பொங்கலையும் தின்றுவிட்டு வீரம் பேசும் பொறுக்கிகளின் உண்மையான வீரம் இதுதான். மோகன் பகவத்துக்கு மட்டுமின்றி மோடி போன்றவர்களுக்கும் அசீமானந்தாவின் குண்டுவைப்புச் சதிகள் தெரிந்தே இருந்தன. 2005 டிசம்பரில் அசீமானந்தாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விருது, கோல்வாக்கார் நூற்றாண்டையொட்டி கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் முரளி மனோகர் ஜோஷியும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல இப்போது ஆர்.எஸ்.எஸ் காலிகள் அசீமானந்தாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இந்திய நீதிமன்றங்களைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும் எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கு ஒரு சட்டப் புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்டப் புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டது. அசீமாந்தா மீது குற்றம் இல்லை என என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இப்போது விடுவித்துவிட்டது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்றவற்றிற்கு ஆதாரமே இல்லாமல் ஒருவனை சிக்கவைத்து அவன் கதையை முடிக்கவும் தெரியும், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் ஒருவனை அப்பாவி என தப்புவிக்கவும் தெரியும். அதன் வேலையே ஆளும் அரசுக்கு வாலாட்டி வேலை பார்ப்பதுதான். இனிமேல் என்ன நடக்கும், மோடி தன்னுடைய ராஜகுருவுக்கு எதாவது பதவிகள் தந்து அவரை கெளரவப்படுத்தலாம். இல்லை சுனில்ஜோஷி போன்றவர்களுக்கு நிகழ்ந்தது போன்ற நிலைமையை தன்னுடைய கூலிப்படையை பயன்படுத்தி அசீமானந்தாவிற்கும் செய்து முடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும்.

இது எல்லாம் இந்தியா இனி ஜனநாயக நாடு என்ற கிழிந்து போன முகமூடியையும் கிழித்து எறிந்துவிட்டு அம்மணமாக பார்ப்பன சனாதன தர்மத்தைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட நாடு என்ற நிலையை எட்டுவதற்கான முன்னோட்டங்கள் ஆகும். இனிமேல் நீதிமன்றங்கள் மூலம் வழக்காடி தங்களுடைய காவிப்படையினரை வெளியே எடுப்பதைவிட நேரடியாக சிறையைத் தகர்த்து, சினிமா படத்தில் வருவது போன்று வெளியே எடுக்கும் நிலை தொலைவில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இனி யாரை எல்லாம் நாங்கள் கொல்லப் போகின்றோம் என்பதை மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போட்டுத்தள்ளும் காலம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. வலதுசாரிப் பாசிசம் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி சித்தாந்தம் தங்களுக்குள் நூற்றுக்கணக்கில் பிளவுபட்டுச் சண்டையிட்டுக்கொண்டு, மறைமுகமாக பாசிச சித்தாந்தத்தின் வெற்றிக்கு துணை செய்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் அசீமானந்தாக்கள் சட்டத்தின் துணையுடன் அடுத்த குண்டுவெடிப்பை நிகழ்த்தத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Sunday, August 21, 2016

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு.

'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும்.

தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம்...


அந்த காலத்தில் சமண மதத்தையும் பவுத்த மதத்தையும் எவ்வாறு இந்து மதம் அழித்தது என்பதற்கு இந்த பாடலும் ஒரு சான்று!

Wednesday, April 06, 2016

எச். ராஜாவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!



எச். ராஜாவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக தலைவர் ராஜா இஸ்லாமிய இயக்கங்களை 'தீவிரவாதிகள்' என்று சொல்லியுள்ளார்.

உண்மைதான்.. சென்னை வெள்ளத்தில் ராணுவமே உள்ளே நுழைய அச்சப்பட்ட இடங்களிலெல்லாம் தன் உயிரையும் பொருட்படுத்தாது பல இந்து மக்களை காப்பாற்றினானே அது தீவிர பற்றுதானே...

சென்னை வெள்ளத்தில் கர்பிணி பெண்ணை காப்பாற்றினாரே யூனுஸ் அவரது பெயரையும் தனது குழந்தைக்கு வைத்தாரே அந்த சகோதரியிடம் கேட்டுப் பார் யார் தீவிரவாதி என்று!

ரத்த தானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னிலை வைக்கிறது தவ்ஹீத் ஜமாத். பலன் பெறுவது அதிகம் இந்துக்களே! நம்பிக்கையில்லை என்றால் தமிழக அரசிடம் சென்று உண்மையை அறிந்து கொள்.

தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி பல தமிழர்களின் உயிர்களை காத்து வருவதும் இதே இஸ்லாமிய அமைப்புகள்தான்.

தனது கட்சியை யாரும் கண்டு கொள்ளாமல் அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற வயிற்றெரிச்சலில் ஏதேதோ உளறி வருகிறார் ராஜா!

'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்லாதவர்களை தலையை வெட்டுவோம் என்று சொல்லும் கயவர்கள் நிறைந்த கூட்டம்தானே உனது கூட்டம் ராஜா!

ஆட்சியை பிடிக்க இந்துக்களை முஸ்லிம்களையும் மோத விட்டு ஓட்டு அறுவடை செய்யும் கேடு கெட்ட கட்சி நடத்தும் ராஜாவே! உனது வார்த்தைகளை இந்துக்களே ஏற்க மாட்டார்கள்.

சொந்த மக்களான தலித்களை முதலில் மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொள். கவுரவ கொலைகளை தடுத்து நிறுத்தப் பார். தலித்களையும் ஆலய பிரவேசம் செய்ய வை. அதன் பிறகு இஸ்லாமியர்களுக்கு உபதேசம் செய்ய வா!

Monday, March 14, 2016

ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!











ஒரு உயிர் பிரிந்ததில் இந்த சாதி வெறியர்களுக்கு என்ன சந்தோஷம்!

ஒரு மதம் அதனை பின்பற்றும் மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். இதற்கு எதிராக இருக்கும் கருத்துக்களை குறைந்த பட்சம் நீக்கவாவது முயற்சிக்க வெண்டும். கவுரவக் கொலைகள் இனியும் நடைபெறாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

82 கவுரவக் கொலைகள் இதுவரை நடந்துள்ளது. ஜாதி தீண்டாமை என்பது 'இந்து மத அடிப்படைகளில்' கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து இந்து மதத்திலிருந்து தங்களை நிரந்திரமாக 'மத மாற்றத்தின்' மூலம் துண்டித்து கொள்வதே நமக்கு சிறந்த தீர்வு....

Sunday, March 13, 2016

உடுமலையில் சாதி வெறியில் மற்றொரு கொலை!



காதலித்து திருமணம் செய்தவர்களை உடுமலையில் பட்டப்பகலில் கூலிப்படையினர் வெட்டியதில் பொறியியல் மாணவரான காதலன் இறந்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் குமரலிங்கத்தில் வசித்து வருகின்றனர். சின்னராஜின் மகள் தனியார் கடையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.

இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே பொதுமக்கள் கூடியதால் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.

இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

’பெண்ணின் உறவினரே திட்டம்’

கொலைக்கு பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரே திட்டம் தீட்டியது போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். வாகனத்தில் தப்பிச் சென்ற மூவரையும் விரைவில் பிடிப்போம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-03-2016

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பட்ட பகலில் பொது மக்கள் முன்னிலையில் சராமாரியாக வெட்டி விட்டு போகின்றனர். பொது மக்களும் வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் சாதி வெறியை இந்த மக்களிடம் இருந்து அகற்ற முடியாது. எனவே சாதி மாறி திருமணம் புரிவதை தடை செய்ய சட்டம் இயற்றி இந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அல்லது மதம் விருப்பமுடைய மதத்துக்கு மாறி திருமணம் புரிய வேண்டும். அல்லது சொந்த பந்தங்கள் இல்லாத வெளி மபநிலத்துக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட வேண்டும். இதை செய்யாத பட்சத்தில் இந்த கவுர கொலைகள் நமது தமிழகத்தில் குறைய வாய்ப்பில்லை.

இந்த கொலை கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் அதனையும் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=k8KQDbdK_6o

Monday, March 07, 2016

இந்திய பெண்களின் மார்புக்கும் வரி வசூலித்த நம்பூதிரிகள்!



புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும் கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட நம்பூதிரிகள் ஆட்களை நியமித்திருந்தனர். வரி கட்டாத பெண்களின் மார்புகள் அறுத்தெறியப்பட்டன. இதற்கு பயந்து கொண்டு தங்கள் உழைப்பில் பெரும் பகுதியை அக்கிரமக்கார நம்பூதிரிகளுக்கு கொடுத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட பெண்கள். உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நமது தமிழகத்திலும் கேரளாவிலும் தான் நடந்துள்ளது.

நாஞ்செலி என்ற அழகிய தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு முலை வரி பாக்கி இருந்தது. இதனால் அந்த பணத்தை வசூலிக்க மானங்கெட்ட அதிகாரிகள் நாஞ்செலியின் வீட்டின் கதவை தட்டினர். 'முலை வரி' கட்ட அந்த பெண்ணிடம் பணம் இல்லை. உடனே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து வந்து தரையில் பரப்பினார். தனது இறைவனை நெஞ்சுறுக வணங்கி விட்டு உடன் தனது இரு மார்பகங்களையும் அறுத்து அந்த இலையின் மீது வைத்து அந்த அதிகாரிகளுக்கு காணிக்கையாக்கினார். இந்த தகவல்களை கண்ணூரைச் சேர்ந்த ஓவியர் முரளி பத்திரிக்கையாளர்களிடம் விவரித்தார்.

கேரளாவில் உள்ள செர்தாலா என்ற இடத்தில் இந்த கொடுமை அரங்கேறியது. இது நடந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த இடம் 'முலச்சிபுரம்' என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது.

ஓவியர் முரளி மேலும் தொடர்கிறார் 'செர்தாலா என்ற இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நாஞ்செலியின் சோக வரலாறை அறிவர். இந்த காட்சிகளை ஓவியமாக வடித்துள்ளேன்' என்கிறார்.

இதே கிராமத்தைச் சேர்ந்த அசிஸ்டன்ட் புரபஸர் தாமஸ் புலிக்கல் (53) கூறும் போது 'சிறு வயதிலிருந்தே இந்த கொடுமைகளை எனது குடும்பம் பார்த்து வந்துள்ளது. நெஞ்செலி போன்ற வீர மிக்க பெண்களை பெற்றது இந்த மண்' என்று நினைவு கூறுகிறார்.

பார்பன நம்பூதிரிகளின் கொடுமை திருவிதாங்கூர் மன்னனின் கொடுமை இவற்றை எல்லாம் தாங்காமல் பெரும்பாலான நாடார் சாதி மக்கள் கிருத்துவத்தை தழுவினர். இதனால்தான் இன்றும் கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களில் கிருத்தவ மக்கள் அதிகமிருப்பதை காணலாம்.

மார்புகள் திறந்த அந்த பெண்களின் புகைப்படத்தை நான் பதிய விரும்பவில்லை. எனக்கே இந்த உணர்வு இருக்கும் போது அந்த பெண்களின் கூச்ச உணர்வை நினைத்து பார்கிறேன்.

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம் இந்திய நாட்டு மக்களை அடிமை படுத்தி அவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு இந்த சம்பவங்களெல்லாம் இன்றும் நமக்கு சாட்சி பகர்ந்து கொண்டுள்ளன.