Followers

Sunday, July 12, 2015

அமெரிக்காவில் சர்ச் கட்ட நிதியுதவி செய்த முஸ்லிம்கள்!




கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வெள்ளையின மக்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இன மோதல் வெடித்ததை நாம் படித்திருக்கலாம். பல உயிர்கள் இதில் பலியாயின. அதோடு வெள்ளையின குண்டர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவருக்கு சொந்தமான சர்ச்களை எரித்து விட்டனர். இன்று வரை அது சரி செய்யப்படாமல் இருந்தது.

இதனை கண்ணுற்ற மூன்று இஸ்லாமிய அமைப்பகள் சர்ச்களை கட்டித்தர முடிவு செய்தன. அந்த அமைப்பின் பெயர்கள் முறையே Ummah Wide, Muslim Anti-Racism Collaborative and Arab American Association of New York: இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து ஜூலை இரண்டிலிருந்து ஜூலை 18 வரை நன்கொடைகளை வசூலிக்கத் திட்டமிட்டன. இது வரை இந்த தன்னார்வ அமைப்புகள் 28953 யுஎஸ் டாலரை 600 நபர்களிடமிருந்து நன்கொடையாக வசூலித்துள்ளன. 30000 அமெரிக்க டாலரை இலக்காக வைத்துள்ளனர்.

இந்த அமைப்பினர் கூறும் போது 'ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் இறை வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். இந்த கருப்பின மக்கள் உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடைந்துள்ளனர். அந்த மக்களின் சோர்வை போக்க எங்களால் ஆன சிறிய முயற்சியே இது' என்று கூறுகின்றனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
10-07-2015

இஸ்லாம் இதைத்தான் போதிக்கிறது. மாற்று மத நண்பர்களை சகோதரர்களாக பாவிக்கச் சொல்கிறது. அவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளச் சொல்கிறது. கலீபா உமர் அவரது ஆட்சிக் காலத்தில் கிருத்தவ பயணக் கூட்டத்தை பள்ளி வாசலில் தங்க வைத்தார்கள். அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதி தந்தார்கள்.

ஆனால் நம் நாட்டில் பாரம்பரிய சின்னமான பாபரி மசூதியை கற்பனை பாத்திரமான ராமன் அங்குதான் அவதரித்தான் என்று பொய் கூறி இடித்து விட்டு அங்கு ராமர் கோவில் கட்டப் போகிறோம் என்று கிளம்பியுள்ளது ஒரு சிறு கூட்டம்.

எரிந்த சர்ச்களை கட்டித் தர பண வசூல் செய்யும் முஸ்லிம்கள் எங்கே? பாபரி மசூதியை இடித்து விட்டு அங்கு ராம ஜென்ம பூமி கட்டப் போகிறோம் என்று கூக்குரலிடும் இந்துத்வாவாதிகள் எங்கே?

No comments: