Followers

Tuesday, March 13, 2018

நாங்கள் ஏகத்துவவாதி.!


நாங்கள் ஏகத்துவவாதி.!

இணை வைப்பை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு இணை வைப்பு காரியங்களிலிருந்து விடுப்பட்டதுமின்றி இணை வைப்பின் சாயல்கூட இருக்க கூடாது என்று மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கிறோம்.!

பில்லி, சூனியம், தாயத்து, தகடு, மந்திரம், கத்தம், பாத்தியா, கப்ரு வழிப்பாடு என இஸ்லாத்தில் இல்லாத அனைத்து அனாச்சாரங்களையும் தொலைத்த கடைசி முறை நாம் தான் என கூறும் அளவிற்கு வந்துவிட்டோம்.!

எங்கள் குழந்தைகளுக்கு உலக கல்வியை விட மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதின் விளைவாக எங்கள் பிள்ளைகளை ஒரளவு உலக கல்வி பயின்ற பின் தாயியாகவும், ஆலிமாவாகவும் மாற்றுகிறோம்.!

மது குடிப்பவனை அருவருப்பாக பார்க்கும் அளவிற்கு வரதட்சணை வாங்குபவனையும் அருவருப்பாக பார்க்கும் அளவிற்கு வரதட்சணை பற்றிய விழிப்புணர்வு அடைந்து விட்டோம்.!

சத்திய வேதமும், நபிகளாரின் வாழ்வியலை வைத்து பிறை, சூனியம் நிலைப்பாடு, வஹி மட்டுமே மார்க்கம் என கொள்கை சார்ந்த விசயங்களை பிற கொள்கை சகோதரர்கள் மற்றும் பிற மத சகோதரர்களுடன் அழகிய விவாதம் செய்து சத்திய கொள்கையை எத்தி வைக்கிறோம்.!

மொத்தத்தில் திருமறை கூறுவது போன்று மனிதர்களில் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நன்மையை ஏவி தீமை தடுப்பதில் இருக்கிறோம்.! அல்ஹம்துலில்லாஹ்.!

நான் மேலே கூறிய அனைத்தும் இன்று எந்த கடின உழைப்புமின்றி, பெரியளவிற்கு எதிர்ப்புமின்றி மிக எளிதாக தாவா பணிகளை எங்களால் செய்யமுடிகிறது.

இது எதனால்.?

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன் இணைவைப்பின் முழு கேந்திரமாக திகழ்ந்த தமிழகத்தில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே, அவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற ஏகத்துவ சிந்தனை எழுச்சி பெற மிக முக்கியமானவர்களின் சத்திய பிரச்சாரம் மூலம் அல்லாஹ் என்னையும் என்னை போன்ற பல லட்சம் சகோதர/ சகோதரிகளுக்கு நேர்வழி காட்டினான்.

அல்லாஹ்வின் மார்க்கத்தை தெளிவாக மக்கள் கொண்டு செல்ல பாடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த அறிஞர்களான சகோதரர்கள் பி. ஜைனுல் ஆபிதீன், சம்சுலுஹாஜீ, M.S சுலைமான், M.I. சுலைமான், அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி போன்ற இன்னும் பிற அறிஞர்களும் மக்கள் மத்தியில் சத்திய பிரச்சரத்தை கொண்டு சென்ற கொள்கை சகோதர்களும் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டத்தை யாரும் மறந்தும், மறைத்தும் விட முடியாது.

அன்று..
* மெஹா போண் வசதியில்லை,
*
வாகன வசதியில்லை,
*
இன்டர்நெட் வசதியில்லை,
*
கம்பியூட்டர், மொபைல் வசதியில்லை,
*
தாவாகென பொருளாதார வசதியில்லை,
*
விரைவாக பயணம் செய்ய வாகன வசதியில்லை,
*
பெரும் எண்ணிக்கையான நபர்கள் இல்லை,
*
ஆதரவாக அமைப்போ, ஜமாஅத்தோ இல்லை,
*
சத்தியத்தை கூற ஆலிம்கள் பெரியளவில் இல்லை,
*
தமக்கென மர்கஸ் இல்லை,
*
திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு இல்லை,
*
ஹதீஸ் கிரகந்தங்கள் தமிழ் மொழியில் இல்லை,
*
ஏகத்துவத்தை கூற சமூகவலைதளமோ, பத்திரிக்கையோ இல்லை,
*
இன்றைக்கு நாம் தாவாவிற்கு பயன்படுத்தும் பல நவீன வசதிகள் அன்று இல்லை.

அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் சத்தியத்தை கூறியதற்காக இன்று நாம் பெரியளவில் எதிர்ப்புகளை சந்திக்கவில்லை. ஆனால் சத்தியக் கொள்கையை எடுத்துரைத்த ஒரே காரணத்தினால் இவர்களோ...

* மன உளச்சலுக்கு ஆளானார்கள்,
*
அடி, உதை வாங்கினார்கள்,
*
வெட்டு பட்டார்கள்,
*
ஊர் நீக்கம் செய்யப்பட்டார்கள்,
*
ஊரை விட்டு விரட்டினார்கள்,
*
குடும்பங்களை இழந்தார்கள்,
*
கேலி கிண்டலுக்கு ஆளாகினார்கள்,
*
காவல் துறை மூலம் பொய் வழக்கு போட்டார்கள்,
*
மனைவி, மக்களுடன் சந்தோஷமாக கழிக்கும் பொண்னான நாட்களை இழந்தார்கள்.

இப்படி எல்லாவற்றையும் இழந்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஏகத்துவ தென்றலை அல்லாவின் உதவியை கொண்டு தமிழகம் தாண்டி பல நாடுகளுக்கு பரவ மிக முக்கிய காரணிகளாக திகழ்ந்தார்கள். அதிலும் சகோதரர் பிஜேவின் பங்களிப்பு மிக அதிகம். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் இவர்களின் கொள்கை உறுதியை மேலும் பலப்படுத்தியுள்ளான்.

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.
திருக்குர்ஆன் 2:269

நேற்றைய மைசூர் தர்பியாவில் மௌலவி பி.ஜைனுன் ஆபிதீன் அவர்கள் தலைமை பொறுப்பிலிருந்து விடைபெறுகிறேன் என்று அறிவிப்பை கேட்டதும் ஏதோ ஒரு கவலை நம்மை சூழ்கிறது. விதையிட்டு ஆலமரம் போல வளர்த்த இந்த ஜமாஅத்தை இளைய சமுதாயத்திடம் ஜமாஅத்தை ஒப்படைக்க விரும்புகிறார். (தற்போது சகோதரர் பிஜே வின் ராஜினாமா கடிதம் ரமலான் வரை நீடிப்பு என தகவல் வருகிறது.)

எந்த தனிநபர் மோகம் இல்லாமல் கொள்கை உறுதியாக இருக்கும் வரை இந்த ஜமாஅத்தை யார் வழிநடத்தினாலும் அது பிரகாசமாக சிறந்து விளங்கும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டாலும், நிர்வாகத்தில் பிஜே இல்லையென்றாலும் இனி வரும் நிர்வாகத்திற்கு மூத்த அறிஞர்களில் ஒருவர் என்கிற அடிப்படையிலும், அனுபவமிக்கவர் என்ற அடிப்படையிலும் தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் இதை அனைவரும் ஏற்று கொள்கிறோம்.

சகோதரர் பிஜேவின் தியாகத்தை மட்டுமே நம் கண்ணுக்கு தெரிந்தது அவரது குடும்பத்தின் தியாகம் இதை விட சிறப்பானது என்பதனை நேற்றைய சகோதரர் பிஜே வின் உரையில் உணரமுடிகிறது. இளமையில் தொலைத்த சந்தோஷங்களை முதுமையில் குடும்பத்தினருடன் அனுபவிக்க புறப்பட தயராக இருக்கும் இந்த அறிஞரை சந்தோஷமாக நாமும் வழியனுப்புவோம்.

இவரின் அனைத்து இன்பதுன்பங்களுக்கும் உறுதுணையாக நின்று ஏகத்துவ பிரச்சரத்திற்கு ஆர்வமூட்டிய இவர் மனைவியான அந்த அம்மையாருக்கு உடல் ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும், அல்லாஹ் இவர்களின் தியாகத்தை பொருந்தி கொள்ளவும் இவர்களுக்கு இம்மையில் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மறுமையில் சொர்க்க சோலையில் உயர்ந்த இடத்தையும் தந்தருள அனைவரும் பிரார்த்திப்போம்.





2 comments:

Dr.Anburaj said...

இவரது இந்து விரோத கொள்கைகளுக்கும் இந்திய பண்பாட்டு விரோத போக்கிற்கும் நரகத்தில் மிக மோசமான பிரிவில் போடுவார் அல்லா.

ஒரு வீடியோ இவரைப் பற்றி பதிவேற்றப்பட்டுள்ளதே.

பிறமனை நோக்கா பேராண்மை இவரிடம் இருக்கின்றதா ?

இல்லை என்று குற்றச்சாட்டு.

அதிக புகழ் பெற்ற பின் இவர் மேல் வருகின்றது.அல்டாபிக்கும் அதுதானே களங்கம்.

Dr.Anburaj said...


ஒரு அரேபிய அடிமையை எப்படி வாழ்த்தினாலும்
இந்துக்களுக்கு இவா் விஷம்தான்.