Followers

Thursday, March 22, 2018

இந்த பதினோரு வினாடி வீடியோ உணர்த்துவது என்ன?

இந்த பதினோரு வினாடி வீடியோ உணர்த்துவது என்ன?

*எத்தனை அடி உதைகள்
*எத்தனை அவமானங்கள்
*எத்தனை அவமதிப்புகள்
*எத்தனை அவமரியாதைகள்
*எத்தனை உதாசீனங்கள்
*எத்தனை நிராகரிப்புகள்
*எத்தனை வெட்டுகுத்துகள்
*எத்தனை எள்ளல்கள்
*எத்தனை ஏலனங்கள்

அத்தனையும் சகித்து கொண்டு எத்தனையோ அமைப்புகள் பட்டு கம்பளம் விரித்தும் அதை எல்லாம் தட்டி கழித்து இந்த தமிழ் மண்ணில் ஏகத்துவத்தை எடுத்து சொல்வதற்காக தங்கள் வியர்வையும் இரத்தத்தையும் சிந்தியவர்களின் தியாகத்தால் உருவான கோட்டை இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

பேருந்து செலவிற்கு கூட வழியில்லாமல் எத்தனையோ நாட்கள் பசியோடும் பட்டினியோடும் ஊர் ஊராக கிராமம் கிராமமாக சென்று உயிரையும் துட்சமாக மதித்து இந்த தவ்ஹீதை பரப்பியவர்களில் முதன்மையானவர் சகோதரர் பிஜே.

அவர் குவைத் வந்த போது என் நினைவில் நீங்கா இடம் பெற்ற ஒரு நிகழ்வு.

சகோதரர் பிஜே வின் கண்கள் கலங்கி உதிர்த்த வார்த்தைகள் அவை

குவைத்தில் ஒரு அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்று திடீரென நிகழ்ச்சி துவங்கும் நேரத்தில் ரத்தாகிறது.

ஏகத்துவ எதிரிகளின் சூழ்ச்சியால் நிகழ்ந்த விளைவு அது.

நிகழ்ச்சி ரத்தான 25 நிமிடத்தில் வேறு அரங்கம் ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பழைய அரங்கத்திற்கும் புதிய அரங்கத்திற்கும் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

இங்கே எப்படி கூட்டம் வரும் இடமாற்ற செய்தி எப்படி போய் சேரும்! சேர்ந்தாலும் எல்லோருக்கும் இங்கே வர வாகன வசதி இருக்குமா என்கிற சந்தேகம் பிஜே உட்பட எல்லோருக்கும்...

அதற்கு முன்பிலிருந்து இன்றைய தேதி வரை குவைத் வரலாறு காணாத கூட்டம் கூடி விட்டது அந்த புதிய அரங்கத்தில்..

அந்த அரங்கத்தின் வெளி சாலைகள் வாகன நெரிசலில் ஸ்தம்பித்தது.

வெற்றிகரமாக கூட்டம் நடந்து முடுந்தது.

சகோ பிஜேவை மக்கள் வெள்ளத்திலிருந்து மீட்டு வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருக்கிறோம் யாரும் எதுவும் பேசவில்லை. வாகனத்திற்குள் ஒரு நிசப்தம் அலை நிலவியது.

இது வெற்றி களிப்பிலா அல்லது எதிரிகளின் சூழ்ச்சியின் அதிருப்தியிலா இல்லை இரண்டும் கலந்த கலவையா உணர முடியவில்லை.

வாகனத்தை நிறுத்த சொல்கிறார் பிஜே. அது ஒரு கடலோரம். வாகனம் நின்றதும் கீழே இறங்கியவர்..

இலேசாக கண்கள் கலங்கிய படி..

"இது அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பதால் இந்த ஏகத்துவம் தமிழ் மக்களிடத்தில் மிகப்பெரிய அளவில் சென்றடையும் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை நான் வாழுகிற காலத்திலேயே பார்த்து விட்டு மரணிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இன்று அல்லாஹ் அதை எனக்கு உணர்தினான்."

(அரபு நாட்டில் 20 பேர் கூடுவது தமிழகத்தில் 2000 பேர் கூடுவதற்கு சமம். இன்று இரண்டாயிரம் பேர் கேட்கிறார்கள் என்றால்..

வந்தவர்களில் பிஜெ வை பார்க்க வேண்டும் என வந்தவர்களையும் இந்தாளு என்ன சொல்கிறார் என பார்ப்போம் என வந்தவர்களையும் உளவு பார்க்க வந்த எதிரிகளையும் கழித்து பார்த்தால் கூட அதுவும் ஒரு பிரம்மிக்க வைக்கும் கூட்டம் தான்.)

இப்படி சொல்லி விட்டு சில நிமிடங்கள் அவரால் பேச முடியவில்லை. அங்கே இருந்த அனைவரும் கலங்கிப்போய் தான் நின்றோம்.

இப்படி பெருமிதம் கொண்ட சகோ பிஜே அவர்களின் அந்திம காலம் நெருங்குவதை அவரது உடல் உணர்த்த..

தனது வாழ்நாள் முழுவதும் தவ்ஹீத் வளர்ச்சிக்காகவே உழைத்து விட்டு தன் பணி முடிந்து விட்டது இனி எகத்துவம் பேச பலநூறு இளைஞர்கள் உருவாகி விட்டார்கள் இனி தனது அந்திம காலத்தின் கடைசி நாட்களையாவது குடும்பத்தோடு கழிக்கலாம் என முடிவு செய்தவரின் எண்ணத்தில் விழுந்த பேரிடி தான் அல்தாஃபி உருவத்தில் வந்த சூழ்ச்சி

தன்னை வளர்த்த தானும் சேர்ந்து வளர்த்த இயக்கத்திற்கும் அதன் நிறுவனருக்கும் செஞ்சோற்று கடன் தீர்க்க அல்தாஃபி எடுத்துள்ள அவதாரம் தான் ஏகத்துவ கோட்டையை உலுக்க நினைக்கும் சூழ்ச்சி.

இதை அவர் உணர்ந்து செய்கிறாரா அல்லது உணராதவர் போல் செய்கிறாரொ தெரியவில்லை.

எப்படி செய்தாலும் ஏகத்துவம் எனும் பழுத்த மரத்தில் அவர் எறிவது கல் அல்ல கடப்பாரை என்பதை அவர் உணர்கிறாரோ இல்லையோ  நீங்களாவது உணர வேண்டும்.

கண்ணால் பார்ப்பதும்  காதால் கேட்பதும் மட்டும் பொய் அல்ல முகநூலில் வீராவசனம் பேசுவதிலும் நிறைய பொய்கள் இருக்கும்..

ஒரு வாதத்திற்கு அல்தாஃபியின் பக்கமே நியாயம் இருந்தாலும் அந்த நியாயத்தை நிலை நாட்ட ஒரு அழகிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு கூட பொறுமை காக்கும் பக்குவமும் ஒரு சிறிய இடைவெளி விடும் தியாகமும் கூட இல்லாதவரா அல்தாஃபி..

ஏகத்துவத்திற்காக இந்த தியாகத்தை கூட செய்ய மனமில்லாத அல்தாஃபிக்காக நம் சகோதரர்கள் சிலர் குரல் கொடுப்பதும் கொடி பிடிப்பது வெளியே புலம்பி திரிவதும் நம் மனதை காயப்படுத்துகிறது சகோதரர்களே..

ஹாஜா நூஹ் அப்துல் ரஜாக் அல்தாஃபி இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பின்னால் எந்த சூழ்ச்சியோ பழிவாங்குதலோ இல்லை மாறாக ஒரு மாபெரும் இயக்கத்தின் கண்ணியமும் பாதுகப்பு தன்மையும் இருப்பதை மற்றவர்களால் தான் உணர முடியவில்லை உங்களாலுமா?

பிஜே என்பது பட்ட மரம் அல்ல பழுத்த மரம் அந்த மரத்தில் உண்டு சுவைத்து கொழுத்து போன  எதிரிகள் கல் எறிகிறார்கள், துரோகிகள் கடப்பாரையை வீசுகிறார்கள். அதை புரிந்து கொள்ளாத நம் சகோதரர்கள் அதன் மீது அமிலத்தை ஊற்ற முற்படுகிறார்கள்.

கடந்த வாரம் கடலூர் தர்பியாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பாருங்கள்...

இதை யாராவது கவனித்தீர்களா சகோ பிஜே அவர்களின் நெஞ்சு வெடிக்கும் வலியை புரிந்து கொள்ள முடிகிறதா உங்களால்?

இதை எழுதும் போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை சகோதரர்களே..

இதை நம் எதிரிகளால் தான் உணர முடியாது என்றால் உங்களுக்கு கூடவா?

கூத்தாநல்லூர் ஜின்னா


No comments: