அடா
தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண தேவியார்
"நடுகல்
என்பது இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை ‘வீரக்
கற்கள்’ என்றும் கூறுவர். உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம்
இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள்
எடுக்கப்பட்டு வந்துள்ளன.
சதிக்கல் என்பது இறந்துவிட்ட கணவனோடு தீப்பாய்ந்து
(உடன்கட்டை ஏறுதல்) உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கும், அவரது
கணவனுக்கும் சேர்த்தே நடப்படும் நினைவுச் சின்னம் ஆகும். எனவே இங்கு காணப்படுவது
நடுகல்லுடன் கூடிய சதிக்கல்லாகும்.” என்று கூறினார்.
"’ஸ்ரீ வீரபாண்டிய தேவருக்கு யாண்டு 14வது
துலுக்கர் பூசலில் பட்டார் அடா தெல்லார் ராகுத்தர் இவருடைய தேவியார் மல்லண
தேவியார் இ ஊரிலே தீப்பாய்ந்தாள்’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த கல்வெட்டானது, 'அவிரியூர்
சிவன் கோவில் கற்களில் சேர்ந்தார் போல் சுமார் 5 அடி உயரம் கொண்ட தூணில் சிற்பங்களுடன்
கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.'" என்றார்.
"கல்வெட்டில்
பிற்கால பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 14-ஆவது (பொதுஆண்டு-1311) ஆட்சி ஆண்டில் துலுக்கர் (துருக்கியர்) சண்டையில் அடாதெல்லா
ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் இவருடைய மனைவி மல்லண தேவி என்பவர் இவ்வூரில்
தீப்பாய்ந்து இறந்தார் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.” என்று விளக்கினார்
பேராசிரியர் ரமேஷ்.
இந்த கல்வெட்டு நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?
மன்னர் ஆட்சிக் காலங்களில் இஸ்லாமியர் முக்கிய
பொறுப்புக்களில் இருந்ததையும் துருக்கிய முஸ்லிம்களை எதிர்த்து இங்குள்ள இஸ்லாமியர்
போரிட்டு மடிந்துள்ளனர் என்ற உண்மையும் வெளிப்படுகிறது... இங்கு மதம் குறுக்கே வரவில்லை என்பதையும் நோக்குங்கள்.
ஆனால் உடன்கட்டை ஏறுதல் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று.
மறுமணம் செய்து கொள்ளவே வலியுறுத்துகிறது. தமிழகத்தின் அந்த கால வழக்கத்தினபடி அவர்
உடன் கட்டை ஏறியுள்ளார் என்றே இதனை நாம் பார்க்க வேண்டும்.
மேலும் அடாதெல்லா ராவுத்தரின் மனைவி மல்லண்ண தேவி
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாத்தை ஏற்றாலும் இந்த பெண் தமிழ் பெயரிலேயே இருந்துள்ளார்.
இஸ்லாமும் இதனை தடுக்கவில்லை. பிற்காலத்தில் வர்ணாசிரமம் தலைவிரித்தாடிய போது தான்
முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபியில் வைக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று விளங்க முடிகிறது.
-பிபிசி தமிழ்

