Followers

Saturday, December 29, 2018

பாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர்

உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும் எஞ்சினீரிங்க் தொழில்நுட்பம் தான் "மார்வெல் –காரகோரம் ஹைவே" ஆகும்!
கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,
இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….
பாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )
இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி ) பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.
இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….
இந்தப் பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
1959-ல் துவங்கிய பணி இருபது ஆண்டுகள் கழித்து
1979-ல் முடிவடைந்து இருக்கிறது.
அதன் பின்னர் பல சமயம் பாதை பல இடங்களில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு,
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருந்து இருக்கிறது.
இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே – 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….
உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்….
இதிலிருந்து நெருங்க முடியும்…
இனி – உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான (Thrilling) பாதையில் பயணம் போகலாம் வாருங்கள்...
மீண்டும் ஒரு முறை பாருங்கள்...
அப்போது தான் அதன் அருமையை உங்களால் உணர முடியும்!
மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்தும்,
இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை.
எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…?
அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!
அங்கு செல்ல முடியாவிட்டாலும்.. இந்த காணொளியை கண்டு ரசிக்கலாம் அல்லவா?
(யாரோ அடிக்கல் நாட்டி யார் யாராலோ தொடரப்பட்டு இன்று மோடியால் திறக்கப்பட்டிருக்கும் பாலத்துக்கு பிஜேபியினர் கொடுத்த பில்டப்பையும் இங்கு எண்ணிப் பார்தேன்.)


2 comments:

vara vijay said...

I too think about suvanapriyan praising kaffir china

Dr.Anburaj said...

இந்திய அரசு இந்த பாலம் அமைந்துள்ள வழித்தடம் குறித்து கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளது. ஒரு இந்தியனாக அதை கவனிக்கத் தவறிவிட்டீர்கள். பிரதமா் என்ற முறையில் அந்த பாலத்தை திறந்து வைக்கின்றாா்இ அவ்வளவுதான். பாக்கிஸ்தானை பெருமைபடுத்த முன் வரும் ஆர்வம் இந்தியாவை புகழ்வதில் இல்லை. இந்திய முஸ்லீம்கள் பாக்கிஸ்தானின் கள்ள காதலா்கள்.