Followers

Monday, May 16, 2011

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!


சவூதி ரியாத் தலை நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பெண்களுக்கான பல்கலைக் கழகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மன்னர் அப்துல்லாஹ் 20 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்ட இப்புதிய வளாகத்தை எளிமையாக திறந்து வைத்தார். இப்பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகமாகும். பெண்களுக்கான இந்த பல்கலைக் கழகம் உலகிலேயே பெரிதாகும். 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் காட்சியளிக்கிறது. 12000 மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள். மன்னர் அப்துல்லாவும் ரெயிலில் அமர்ந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.

40000 ஸ்கொயர் மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல்: கான்ஃபரன்ஸ் ஹால்: பரிசோதனைக் கூடம்: நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு: தகவல் தொழில் நுட்பம்: உயிரியியல் போன்றவற்றிற்க்கான தனித்தனி துறைகள் இயங்குகின்றன.

சவூதிக்கான பிரிட்டிஷ் தூதர் டாம் பிலிப்ஸ் பேசும்போது, 'இன்று ஒரு முக்கியமான நாள். சவூதி அரசு தனது மக்களை முழு கல்வி பெற்ற சமூகமாக மாற்றும் முயற்ச்சிக்கு எனது வழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் சவூதியும், இங்கிலாந்தும் கல்வி மேம்பாட்டில் இணைந்து செயல்படும். உலகின் மிகப் பெரும் பல்கலைக்கழகமான இதன் வளர்ச்சி மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.' என்றார்.

மன்னர் அப்துல்லாஹ் பேசும் போது 'நமது நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பல்கலைக் கழகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சரிவர பயன்படுத்தி அனைவரும் கல்வியாளர்களாக மாற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

பெண் கல்வியை இஸ்லாம் வரவேற்கிறது. அதே சமயம் பெண்மைக்கு பங்கம் வராமல் பெண்மையின் பாதுகாப்போடு அவர்களின் கல்வித் தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பல முயற்ச்சிகளில் ஒன்றாகத்தான் இந்த பெண்கள் பல்கலைக் கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்த உன்னத நோக்கத்தை இறைவன் மேலும் சிறப்புற செய்ய வேண்டும்.

'அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?' என்று முஹம்மதே கேட்பீராக! அறிவுடையோர்தாம் நல்லறிவு பெறுவார்கள்.

-குர்ஆன் 39:10

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!' என்று பிரார்த்திப்பீராக!'

-குர்ஆன் 20:114

2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். -புகாரி

7066. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். -புகாரி

JEDDAH: Saudi Arabia’s consistent effort to raise the status of women has impressed Indian parliamentarian Najma Heptullah.

“During my brief visit to the Kingdom, I interacted with women and their organizations in Riyadh and Jeddah, and am convinced about the manner in which the Kingdom is going ahead with tackling women’s issues, especially in further improving their position in society and creating employment opportunities,” she said in an interview with Arab News over the weekend.

Najma, who performed Umrah recently, said a major stride taken by the Kingdom is in appointing a woman as minister.

“I was pleasantly surprised when I heard that Nora bint Abdullah Al-Fayez, a well educated former teacher, was made deputy education minister in charge of a new department for female students. This is just one example to show that women can look forward to better opportunities in the future,” said Najma,

-Arab News

டிஸ்கி: உலகிலேயே மிகப் பெரும் பல்கலைக் கழகம் மிக எளிமையாக திறந்து வைக்கப்பட்டது. நம் தமிழகத்தில் ஜெயலலிதா தனது வறட்டு பிடிவாதத்தினால் 1000 கோடியில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய கட்டிடத்திலேயே இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார். பழைய கட்டிடத்தை புதுப்பிக்க பல கோடி செலவுகள். ஆடம்பரமான பதவி ஏற்பு விழாவால் பல கோடி வீண். எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட வந்து சென்னையில் ஒரு மணி நேரம் நேற்று டிராஃபிக் ஜாம், இனி ஐந்து வருடத்துக்கு விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் நடக்கும் ஈகோ போர் வேடிக்கைகளை தாராளமாக பார்த்து மகிழலாம்: சென்னை மெட்ரோ ரெயில் இனி கிடப்பில் போடப்படும், இவை எல்லாம் மாறிய ஜெயலலிதாவாக நமக்கு தெரியவில்லை.

வழக்கம் போல் தமிழனும் இதைப்பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் டாஸ் மார்க் கடையில் நன்றாக குடித்து விட்டு மானாட மயிலாட, மிட்நைட் மசாலாவையும் பார்த்து விட்டு ஹாய்யாக பொழுதை கழிப்பான்.

வாழ்க ஜனநாயகம்.

14 comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் சுவனப்பிரியன்,

அல்ஹம்துலில்லாஹ்..மிக மகிழ்ச்சியான செய்தி....பெண்களுக்கான மிகப்பெரிய பல்கலைகழகம்!!!!! சுப்ஹானல்லாஹ்..

சகோதரிகள் சிறப்பான முறையில் கல்வி பயின்று தங்கள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறப்பான பணியை செய்திட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக...ஆமீன்

----
நம் தமிழகத்தில் ஜெயலலிதா தனது வறட்டு பிடிவாதத்தினால் 1000கோடியில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய கட்டிடத்திலேயே இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்.
---

அம்மா ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்களா...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ.ஆஷிக்!

பாதுகாப்போடு கூடிய இந்த அரிய வாய்ப்பை உலக முஸ்லிம் பெண்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு குடும்பத்தவர்களும் ஒத்துழைக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக இந்த பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தார்களோ அதில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சவூதி அரேபியா பற்றி எதிர்மறையான செய்திகள் மட்டுமே இங்கே இந்திய ஊடகங்களில் செய்தியாகவும்,

நம் தமிழ்ப்பதிவுலகில் பதிவுகள் ஆகும் அந்தஸ்தையும் பெரும்..!

இந்நிலையில்... நல்ல தகவல்களை 'நச்' என்று பிறருக்கு அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

ஆனாலும்,
'ஹிஜாபுடன் படித்தால், கல்வி காதில் நுழைந்து மூளைக்கு செல்லாது' என்று சிலர் வழக்கம்போல அறிவியல்பூர்வமாய் சிந்தித்து பின்னூட்டத்தில் தெரிவிப்பார்கள்.

அவர்களை தயவு செய்து கண்டுகொள்ளாதீர்கள்..!

//டிஸ்கி//---விளையும் பயிர் முளையிலே தெரிகிறது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ.ஆஷிக்!

//சவூதி அரேபியா பற்றி எதிர்மறையான செய்திகள் மட்டுமே இங்கே இந்திய ஊடகங்களில் செய்தியாகவும்,//

சவூதியை எந்த வகையிலாவது குறை சொல்வது பலரின் வழக்கம். இஸ்லாத்தை முறையாக ஓரளவு கடைபிடித்து மாற்று மதத்தவர்களையும் எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்வது பலருக்கு சிறப்பான செய்தியாக இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரமாக பின்பற்றப் படுகின்ற நாடுகளில் பெண்களுக்கு கல்வி அளிப்பதில்லை
என்ற பொய் செய்திகளையேல்லாம் ஒரே பதிவில் அடித்து நொருக்கி விட்டீர்கள்

வாழ்த்துக்கள் சகோ நல்ல பதிவு

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஹைதர்!

பெண் கல்வி கொடுக்கப்படுவது இஸ்லாமிய நாடுகளில் நிரூபிக்கப்பட்டதால் இனி இஸ்லாத்தைக் குறை காணுவதற்கு வேறு ஏதாவது காரணத்தை தேடி அலைவார்கள். இது ஒரு தொடர்கதை....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

போளூர் தயாநிதி said...

nalla sinthanai paattukal

Unknown said...

மிக நல்ல செய்தி வாழ்த்துக்கள் .உங்கள் சேவை தொடர அல்லாஹ் அருள் புரிவானக ஆமின். anvar

suvanappiriyan said...

//nalla sinthanai paattukal//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி போளூர் தயாநிதி!

suvanappiriyan said...

//மிக நல்ல செய்தி வாழ்த்துக்கள் .உங்கள் சேவை தொடர அல்லாஹ் அருள் புரிவானக ஆமின்.//

உங்களைப் போன்றோரின் துவாக்கள்தான் என்னை மேன்மேலும் பதிவுகளை தர ஊக்கப்படுத்தகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு அன்வர்.

Unknown said...

நல்ல செய்தி.. பெண்களுக்கான மிகப்பெரிய பல்கலைகழகம் அல்ஹம்துலில்லாஹ்..

suvanappiriyan said...

//நல்ல செய்தி.. பெண்களுக்கான மிகப்பெரிய பல்கலைகழகம் அல்ஹம்துலில்லாஹ்..//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி.

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ. சுவனப்பிரியன்,

அருமையான பதிவு.
சிறப்பான தகவல்.
இஸ்லாம் பெண் அடிமைத்தனம் போன்றகூப்பாட்டுகளுக்கு சரியான பதிலடி.
டிஸ்கி// ஆட்டோ வரும். உஷாராக இருங்கள்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! திரு ஜபருல்லாஹ்!

//இஸ்லாம் பெண் அடிமைத்தனம் போன்றகூப்பாட்டுகளுக்கு சரியான பதிலடி//

இது போன்ற வாதங்களை வைப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவே!

//டிஸ்கி// ஆட்டோ வரும். உஷாராக இருங்கள். //

ஆட்டோ வந்தால் 'அம்மா வாழ்க!' என்றும் 'கலைஞர் ஒழிக' என்றும் சும்மா ஒரு கோஷம் போட்டால் வந்த ஆட்டோ திரும்பி விடும். :-)