Followers

Saturday, May 07, 2011

குர்ஆன் வசனங்களை (வேண்டுமென்றே)தவறாக புரிந்து கொண்டோர்!

குர்ஆனின் சில வசனங்கள் வன்முறையை தூண்டுவதுபோல் உள்ளதே என்ற கேள்விக்கு ஆயிரம் முறை விளக்கம் சொன்னாலும் திரும்பவும் அதே கேள்வியே வைக்கப்படுகிறது. காரணம் வேறு விதங்களில் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க சரியான காரணம் கிடைக்கவில்லை. இது ஒன்றையே திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் பத்தோடு இந்த மதமும் ஒன்று என்ற முடிவுக்கு நடுநிலயாளர்கள் வந்து விடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம். இனி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளான வசனங்கள் எந்த நேரத்தில் இறங்கப்பட்டது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

'உங்களால் இயன்ற அளவு பலத்தையும் போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் இறைவனின் எதிரிகளையும் உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். இறைவனே அவர்களை அறிவான்.'

-குர்ஆன் 8:60

இது இஸ்லாமிய அரசுக்கு சொல்லப்பட்ட வசனம். முகமது நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய போது அருகில் உள்ள சிறு சிறு யூத, கிறித்தவ, சிலை வணக்கம் புரியும் அரசுகள் ஓயாது தொல்லை கொடுத்து வந்தன. இந்த நேரத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரையை இறைவன் வழங்குகிறான். நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமையால் பல தொல்லைகளை நமது அண்டை நாடு நமக்கு கொடுத்து வருகிறது. இதைக் கண்டு இந்தியர்களாகிய நாம் அந்நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் நமது படை பலத்தை அதிகப்படுத்த முயற்ச்சிப்பது தவறாகுமா? இதையேதான் அன்றைய முஸ்லிம்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். முஸ்லிம்களிலேயே சிலர் இது தனிப்பட்ட மனிதனுக்கு சொல்லப்பட்ட வசனம் என்று தவறாக விளங்கிக் கொள்வதாலேயே சமூகத்தில் சில தீவிரவாதங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது. இதற்கு ஒரே வழி இந்த வசனம் எந்த நேரத்தில் யாருக்கு இறங்கியது என்ற விபரத்தை விளங்காத மக்களுக்கு எடுத்துச் சொன்னால் பிரச்னை சுலபமாக தீரும்.

மதினாவில் சிறந்து ஆட்சி செய்யும் முகமது நபிக்கு மக்காவில் உள்ள பல தெய்வ வணக்கத்தை உடையவர்கள் பெரும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மக்காவில் முஸ்லிம்களாகிய சிறுபான்மையினரை மிகுந்த தொல்லை கொடுத்து வந்தனர் சிலை வணங்கிகள். பல முஸ்லிம்களை கோபத்தில் கொலையும் செய்தனர். மக்காவில் உள்ள எஞ்சிய முஸ்லிம்களை காப்பாற்றவே அன்று போர் கடமையாக்கப்பட்டு போரும் நடை பெறுகிறது. அப்பொழுது இறங்கிய வசனம்

'ஏக இறைவனை மறுப்போரைப் போர்களத்தில் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள். முடிவில் அவர்களை வென்றால் தனது ஆயுதங்களை கீழே போடும் வரை கட்டுக்களைப் பலப்படுத்துங்கள். அதன்பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம். இதுவே இறைக் கட்டளை. இறைவன் நாடி இருந்தால் அவர்களை அவனே தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.'

-குர்ஆன் 47:4

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும் யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு இருந்தனர். பல போர்கள் நடந்தது. முஸ்லிம்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கினர். பெண்களின் பிறப்புறுப்பில் ஈட்டியைப் பாய்த்து கொல்வது, இரண்டு ஒட்டகங்களில் முஸ்லிம்களை கட்டி இரு வேறு திசைகளில் அவைகளை ஓட விட்டு முஸ்லிம்களின் உடலை இரண்டாக கிழிப்பது, இவை எல்லாம் மக்காவில் நடந்த கொடுமைகள். காரணம் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றது. இந்த நேரத்தில் சில முஸ்லிம்களின் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் எதிரிகளுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்க்காகவே இவ்வாறு கட்டளை பிற்பிக்கப்பட்டது.

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

-குர்ஆன் 4:89

'கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் இறைவனுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக் கொல்வார்களானால் இறைவன் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்'

-குர்ஆன் 8:39

மனிதர்களுக்குள் அன்பையும் நல்லலொழுக்கத்தையும் போதிக்க வேண்டிய இறைவன் ஏன் இவ்வாறு கடுமையான நிலையை எடுக்க வேண்டும் என்ற கேள்வி வரலாம். சில போராட்டங்களை அடக்க அரசு சில நேரங்களில் காவல்துறை, ராணுவத்தின் துணை கொண்டு தனது மக்கள் மீதே பலத்தை பிரயோகிக்கும். இந்த நடவடிக்கை நாடு அமைதியாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடத்தப்படுகிறது. இதே அளவு கோலைத்தான் இறைவனும் இங்கு கையாள்கிறான். அப்படி போர் நடந்தாலும் சில விதிமுறைகளை முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அவைகள்:

'உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.'

-குர்ஆன் 2:190

அதாவது எதிரிகளாக போரை துவக்கும் போது நீங்களும் போர் புரியுங்கள். அதிலும் கூட வரம்பு மீறக் கூடாது என்கிறான் இறைவன்.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே!' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.

-குர்ஆன் 22:40

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக சொந்த வீடுகளை விட்டு விரட்டப்பட்டவர்களிடமே போர் செய்ய குர்ஆன் கட்டளையிடுகிறது.

இப்படி ஒரு பலப்பிரயோகம் இல்லாவிட்டால் பல மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்கிறான் இறைவன். இதன் மூலம் பிற நம்பிக்கையாளர்களின் புனித இடங்களை அழிப்பது குர்ஆனுக்கு எதிரானது என்று விளங்கலாம்.

'விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர மற்றவர்கள் மீது எந்த வரம்பு மீறுதலும் கூடாது.'

-குர்ஆன்

எதிரிகள் போரிலிருந்து விலகி சமாதானத்துக்கு வந்தால் அதனை ஏற்று போரை நிறுத்தி காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். எதிரி நாட்டு பொது மக்களை வரம்பு மீறி எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்கிறது குர்ஆன்.

'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'

-குர்ஆன் 2:256

'உங்கள் மார்க்கம் உங்களுக்கு: என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக!'

-குர்ஆன்

இந்த வசனங்களின் மூலம் மதத்தைப் பரப்புவதற்காக போர் புரிதல் கூடாது என்பதை விளங்கலாம். வாளினால் இஸ்லாம் பரவியது என்று கூறுபவர்கள் இந்த வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டவர்கள். வற்புறுத்தலினால் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால் உளப்பூர்வமான ஈடுபாடு அவரிடத்தில் எதிர்பார்க்க முடியாது.

குர்ஆனின் போர் வசனங்களுக்கு மாற்றாக இந்து மதத்தில் நடைபெற்ற ஆதிகால போர்கள், கிறித்தவ மதத்தில் நடைபெற்ற அனைத்து போர்களையும் அதன் கொடூரங்களையும் வரலாற்று ஆதாரங்களோடு என்னால் எடுத்து தர முடியும். குர்ஆனில் சொல்லப்பட்ட நியாயமான காரணங்கள் கூட அந்தப் போர்களுக்கு பொருந்தாது. எனினும் அதனை நான் எடுத்து எழுதவில்லை. போர்களை பற்றி குறை கூறும் அனைத்து பதிவர்களுக்கும் இந்த ஒரு பதிவே பதிலாகும்.

முடிவில் இந்து மதத்தில் கூறப்பட்ட ஏக இறை கோட்பாடுகள் சிலவற்றை சொல்லி இப்பதிவை முடிக்கிறேன்.

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சா த்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறியீர்

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!

--வள்ளலார்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை

காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே

இறைவனைக் காணுதல் பொருட்டு கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் கால்கள் நோவ நோவ சுற்றி வரினும் பயன் கிட்டாது, மனித உயிர்களிடத்தின் பால் கொள்ளும் அன்பின் மூலம் கடவுள் வசிக்கும் இடத்தை அறியலாம் என்கிறார் திருமூலர். மனித இனத்தைப் பிரித்துப் பார்க்காமல், அணைத்து ஜீவ ராசிகளிடத்தும் அன்பு புரிதலின் அவசியத்தையும் கூறுகிறார் திருமூலர்.

திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே

இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தயைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். அசைவற்ற நீர் போல் சிந்தனை தெளிந்தார்க்கு மாசு மறு அற்றவன் வெளிபட்டு அருள் செய்வான்.

உன்னத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவாரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே

மனத்தின் தன்மையை மாற்றுவதன் மூலமாகவே ஆன்மீக அனுபவத்தைப் பெற முடியும். உள்ளத்தினுள்ளேயே திருக்கோயில்களிலுள்ள இறைவனைச் சந்திக்கலாம். இந்த அனுபவத்தை உதறிவிட்டுப் பள்ளமும் மேடும் திரிந்து என்ன பயன்?

'இறைவனையும, இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். '

'அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. தன்னை அஞ்சுவோரை இறைவன் நன்கு அறிந்தவன்.'

-குர்ஆன் 3:114,115

28 comments:

Anonymous said...

Sura 5:51: “O you who believe! Take not the Jews and the Christians for your friends and protectors: they are but friends and protectors to each other. And he among you that turns to them for friendship is of them.” This friendship makes any Muslim a enemy of their own and deserving of the same fate as the unbeliever. This is because God does not guide an unjust people.

5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

இந்த குர்-ஆன் வசனங்களை நன்கு படித்துப் பாருங்கள், எந்தவொரு மதமும் நேரிடையாகக் கூட பிற மதங்களை வெறுக்கச் சொல்வதில்லை. ஆனால் - குர்-ஆனில் இந்த வசனம் கிருத்தவர்களையும், யூதர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என அப்பட்டமாக சொல்லுகின்றது. இதே போல பல இடங்களில் கிருத்தவர்களுக்கு எதிராகவும், யூதர்களுக்கு எதிராகவும் பகைமையைத் தூண்டும் வசனங்கள் ஏராளம் இருக்கின்றன. இப்போது கீழே வரும் வசனங்களை படித்துப் பாருங்கள் --

Sura 4:56 Lo! Those who disbelieve Our revelations, We shall expose them to the Fire. As often as their skins are consumed We shall exchange them for fresh skins that they may taste the torment. Lo! Allah is ever Mighty, Wise.

சுரா 4 : 56 - யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

இஸ்லாமிய வேதவசனங்களை நிராகரிப்பவர்கள் பாரம்பரிய கடவுளை வணங்குவோர் மட்டுமல்ல, கிருத்தவர்களும், யூதர்களும் ஆவார்கள். அவர்களின் தோலினை தீக்கிரையாக்கி கருக்கிவிடும் என்ற வசனம் எப்படியான வன்மத்தை சுமந்துவருகின்றன என்பதைப் பார்க்கும் போது இது அதிர்ச்சியளிக்கின்றன.

இல்லை இந்த குர்-ஆனில் மொழிப்பெயர்ப்பு தவறு நடந்திருக்கு என்றால் - தாராளமாக வரிக்கு வரி அரபுச் சொல்லைக் கொடுத்து விளக்கம் தரலாம் ................. !!!

இந்தக் குரானில் சொல்லப்பட்டவை படியே இன்றைய இஸ்லாமியத் தீவிரவாதம் நடந்துக் கொள்வதை ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் அதிர்ச்சித் தரும் விடயமாக இது இருக்கின்றது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,

முஹம்மத் நபி(ஸல்) அவர்களிடம், 1400 வருடங்களுக்கு முந்தைய அன்றைய அரபி மக்கள் கேட்ட அதே புராதன கேள்விகளையே... தூசி தட்டி மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். அதே பழைய விளக்கங்களை இன்னும் விரிவாக உவமை-உவமேயம் எல்லாம் சொல்லி பதில் அளிக்கிறோம்.

ஒருவர் ஓய்ந்தால் இன்னொரு புதியவர் வருகிறார். மீண்டும் அதே கேள்விகள்..! மீண்டும் அதே விளக்கங்கள்..! இவர் ஓய்ந்த பின் அப்புறம்... மீண்டும் வேறு ஒருவர்... என்று இப்படியே தொடர்கிறது.

எனக்கும் முன்பே இந்த பதிவுலகில் "இந்த பணியில்" இருப்பவர் நீங்கள்..!

வெறும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே பின்னூட்டங்கள் இடும் எனக்கே ரொம்பவும் அலுப்பாக இருக்கிறதே... இவர்களுக்கு விளக்கம் சொல்லி சொல்லி..!

நம், நபி(ஸல்) அவர்கள் 23 வருடங்கள்... என்ன கஷ்டப்பட்டு இருப்பார்களோ..!

அன்னாரின் பொறுமைக்கு அல்லாஹ் மென்மேலும் மறுமையில் சிறப்பை தந்தருள்வானாக..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

குர்ஆனில்...
பொதுவாக உலக மக்களை அழைத்து சில வசனங்கள்...
இறை நம்பிக்கையாளர்களை மட்டும் அழைத்து சில வசனங்கள்...
'...(இப்படி)... கேட்கிறார்களே... அவர்களிடம் சொல்லுங்கள்' என்று இறைநிராகரிப்பாளர்களுக்காக சில வசனங்கள்...
நபியே என்று அழைத்து, முஸ்லிம்களிடம் சொல்லுங்கள்...என்றும்,
நபியே... அப்படி செயுங்கள்... நபியே இப்படி செய்யுங்கள்... என்றும்...

இப்படி நிறைய வசனங்கள் நிறைய பிரிவினருக்காக... நிறைய அவசியங்களுக்காக...

மக்காவில்
நபி தனி மனிதராய் இருக்கும்போது, நபி ஒரு வியாபாரியாக உழைக்கும்போது, நபி ஒரு கணவனாய் இருக்கும்போது, நபி ஒரு தந்தையாக இருக்கும்போது, நபி எதிரிகளிடம் இருந்து தப்ப வேண்டி இருக்கும் போது, நபி ஹிஜ்ரத் செய்து பிரயாணிக்கும்போது,

மதினாவில்,
நபி ஒரு சொற்பொழிவாளராக மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது,நபி ஒரு குழுவிற்கு தலைவராக ஆகும்போது, தம்மை எதிர்த்து அழிக்க நினைப்போருடன் நபி வாழ நேரும்போது, தம்முடம் போரிட வரும் எதிரிகளிடம் நபி ஒரு போர்வீரராய் போரிடும் போது, நபி ஒரு மன்னராய் நாட்டை நிர்வாகம் புரியும் போது, நபி ஒரு நீதிபதியாய் இஸ்லாமிய சட்டங்களை அமல் படுத்தும் போது... இப்படியாக சுமார் 23 வருடங்கள் இறைவனிடம் இருந்து...

அறிவுரைகள், கட்டளைகள், எச்சரிக்கைகள், போதனைகள், சட்டங்கள் என நபி(ஸல்) அவர்களுக்கு வெவ்வேறு சூழலில் குர்ஆன் சிறுக சிறுக இறங்கி பூர்த்தியாகி இருக்க இருக்க...

இதெல்லாம் ஒன்றுமே அறியாமல்...
இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு போடுவது எதற்காக..?

தமக்கு தோன்றுவதை எல்லாம் சும்மா ஹிட்சுக்காகவும்,
அதிக பின்னூட்ட கும்மிகளுக்காகவும், ஒட்டுக்களுக்ககவும்,
பரபரபுக்காகவும்,
திரட்டிகளில் புதுவரவிலிருந்து விரைவாக பிரபலமாகவும்,
பதிவு முகப்பில் பிரசுரிக்கப்படுவதற்காகவும்,
அதிக வாசகர் பரிந்துரைக்காகவும்,
மகுடத்திற்காகவும்,
சூடான இடுகையில் இடம்பெறுவதற்காகவும் தான்...

இப்படி 'இஸ்லாமிய எதிர்ப்பு' பதிவு போடுகிறார்களோ ---என்று ஐயுற வேண்டி வருகிறது... சகோ.சுவனப்பிரியன்.

ஏனெனில், என்னதான் ஆதாரங்களுடன் விளக்கினாலும் வீம்புக்காக விளங்குவார்களாக இல்லையே இவர்கள்..?

தம் தவறை திருத்திக்கொள்பவர்களாகவும் இல்லையே இவர்கள்..?

புரிந்து கொண்டாலும் வேண்டுமென்றே புரியாதது போல அல்லவா சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்..?

சகோ.சுவனப்பிரியன், இனி நாம் என்ன செய்வது..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நம் இந்திய நாட்டு பிரதமர்,

"பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுட்டு பொசுக்குங்கள்..." ---என்று சொல்வார்.

எப்போது?

கார்கிலில் பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..!

அதே பிரதமர்,

"பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள், இதோ கராச்சிக்கு பஸ்...லாகூருக்கு ரயில்..." என்பார்,

எப்போது?

பொதுமக்களிடம், பொதுமேடையில்..!

இரண்டும் வெவ்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டவை என்றும்...

இரண்டுமே மிக மிக சரியானவை என்பதையும்,

ஒருத்தருக்கு சொல்லப்பட்டது மற்றவருக்கு பொருந்தாது என்பதையும்...

ஏன் இந்த குதர்க்கவாத பதிவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்..?

குர்ஆனை காபி பேஸ்ட் பண்ணி குதர்க்கமாக பதிவு போடும் இந்த குதர்க்க வாதிகள் இதை அறிந்துகொண்டால்...
நம் நாட்டில் அமைதி ஆறாய் பெருக்கெடுத்து அல்லவா ஓடும்..?

மாறாக... இதை நன்கு அறிந்தே... ராணுவத்தினருக்கு சொன்னதை மக்களுக்கு சொன்னதாய் பொய்யாக மக்களை மூளைச்சலவை செய்வது எதற்காக..? நாட்டின் அமைதியை குலைக்கத்தானோ..?

அப்படியெனில் இவர்கள் பயங்கரவாதிகளை உருவாக்குகிறார்களோ..? அப்படித்தானே சில பாகிஸ்தானிய முல்லாக்கள் அப்பாவி இளைய முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகலாய் ஆக்கியதாக இவர்களே குற்றம் சாட்டுகிறார்களே..!

அப்படியெனில்... அப்படியெனில்... 'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்... எனக்கென்னவோ... இவர்கள் முஸ்லிம்கள் அல்லாத பிற சமயத்தவரை எல்லாம்

"இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதி"களாய்...

ஆக்க திட்டமிட்டுத்தான் இப்படி தொடர்ந்து ஜிஹாத் பதிவு வெளியிடுகிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது..!

இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக தெரியவில்லையே..!

இந்திய-தமிழக அரசுகள்... இனி இந்த பதிவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் நம்நாட்டில் சமய நல்லிணக்கத்துக்கு எதிராக மூளைச்சலவை செய்யும் இந்த குதர்க்க பதிவர்களை 'தேசிய பாதுகாப்பு சட்டம்' மூலம் கைது கூட செய்யலாம்... நாட்டு நன்மைக்காக.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.//

இந்த வசனங்கள் அன்றைய சூழலுக்கு இறக்கப்பட்டதை விளக்கியுள்ளேன். இன்றும் கூட இந்த வசனம் பொருந்தி வருகிறது. இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க யூதர்களும் கிறித்தவர்களும் ஒன்றானார்களா இல்லையா? அத்துமீறி சொந்த நாட்டு மக்களை வீடுகளை இடிப்பதும், பாவப்பட்டு தங்க அனுமதித்த பாலஸ்தீனர்களை குழந்தைகள் முதற்கொண்டு இஸ்ரேல் கொல்கிறதா இல்லையா? அதற்கு தனது வீட்டோ பவரை பயன்படுத்தி தனது கள்ளக் குழந்தையை ஒவ்வொரு முறையும் கிறித்தவர்களான அமெரிக்கா காப்பாற்றுகிறதா இல்லையா? சாதாம் ஹூசைனையும், அங்குள்ள அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க 'ரசாயன ஆயுதங்கள் உண்டு' என்ற பொய்க்காரணத்தை பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இன்னும் பல கிறித்தவ நாடுகள் கூட்டுக் கொலை நடத்தியது உங்களுக்கு தெரியாதா? இன்று லிபியாவில் மக்கள் ஆதரவு இருந்தும் கடாஃபியை நீக்க அனைத்து கிறித்தவர்களும் ஒன்றுபடவில்லையா? எங்கோ இருக்கும் லிபியாவின் மீது இவர்களுக்கு என்ன அக்கறை? அமெரிக்காவின் பக்கத்தில் உள்ள எத்தனையோ நாடுகள் அராஜக ஆட்சி நடத்தி வரும் போது அங்கு செல்லாத கூட்டுப் படைகள் இங்கு ஏன் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன? என்று சிந்தித்து பாருங்கள். விடை தானாக தெரியும்.

இன்னும் இருக்கிறது. வேலை முடிந்து வருகிறேன்.....

தமிழன் said...

என்னா மூளைப்பா இந்த முஸ்லீம்களுக்கு !!!!!!.

ஒரு அரசன், பக்கத்து நாட்டு மனிதர்களை கொல்லச்சொல்வது சரியானது தான். ஆனால் ,இந்த அல்லா , தான் படைத்த மனிதர்களையே ( யூதர்களையும் ,கிறிஸ்தவர்களையும் படைத்தது வேற கடவுளா?) முகமதுகூட கூட்டு சேர்ந்துகொண்டு, க்ழுத்துல வெட்டு, விரல துண்டாக்கு. அவர்களை கொன்று (அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்ததிலும், அடிமையாக பிடிக்கபட்ட பெண்களிலும் [ஐந்திலொரு பங்கு அல்லாவுக்கும், முகமதுக்கும் :) great - நல்ல தொழில் - நானும் ஆரம்பிக்கபபோகிறேன்]

திரும்பவரேன். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.

suvanappiriyan said...

//ஒரு அரசன், பக்கத்து நாட்டு மனிதர்களை கொல்லச்சொல்வது சரியானது தான். ஆனால் ,இந்த அல்லா , தான் படைத்த மனிதர்களையே….//

புத்தி பிறழ்ந்த தமிழனே! அந்த மக்கள் இறைவன் கொடுத்த வேதத்தையும் பிரசாரத்துக்கு வந்த இறைத்தூதர்களையும் கொடுமைபடுத்தி கொல்கிறார்கள். எனவே தான் வேறொரு வேதமும், வேறொரு தூதரும் வர அவசியமாகிறது. அவர்களை இறைவனே தண்டிக்க முடியாதா? என்று கேட்கலாம். அதற்கு இறைவனே பதில் சொல்வதை பார்ப்போம்.

இறைவன் நாடி இருந்தால் அவர்களை அவனே தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.'
-குர்ஆன் 47:4

தமிழன்(மெய்யாலுமே திராவிடனா அல்லது....) என்ற பதிவரை இறைவனே தண்டித்து விடலாம். அவன் விட்டுபிடிப்பது தமிழனின் சுய ரூபம் என்னவென்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! முஸ்லிம்களை அழிக்க வரும் நபர்களோடுதான் போர் செய்ய குர்ஆன் கட்டளையிடுகிறது. போரில் கூட தர்மத்தை கடைபிடிக்க அதே குர்ஆன் கட்டளையிடுகிறது. இதை அடுத்த பின்னூட்டத்தில் அளிக்கிறேன்.

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே!' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.
-குர்ஆன் 22:40

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ சுவனப்பிரியன்..

தங்களின் முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கப்போதுமானவன்..

எத்தனை எடுத்துச் சொன்னாலும்,,இவர்கள் விளங்குவதில்லை..

கீதாஉபச்சாரத்தை சரியாக புரிந்துகொள்ளதெரிந்த இவர்களுக்கு இவ்வசனங்கள் புரியவில்லை என்றால்..பிரழ்வு அவர்களின் மூளையில்தான்...

நாம் சொல்வதை தொடர்ந்து சொல்வோம்..நடுநிலையாளர்கள் விளங்கிக்கொள்ள...

அன்புடன்
ரஜின்

suvanappiriyan said...

சமாதானத்தை வலியுறுத்தும் மற்ற வசனங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனின் புனிதச் சின்னங்கள், புனித மாதம், பலிப்பிராணி, மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும் திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவங்களிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். இறைவனை அஞ்சுங்கள். இறைவன் கடுமையாக தண்டிப்பவன்.'
-குர்ஆன் 5:2

மாற்று மதத்தவரின் புனிதத் தலங்களை அழிக்க முஸ்லிம்கள் முயற்ச்சிக்கக் கூடாது என்பதை இந்த வசனத்தின் மூலம் விளங்குகிறோம். கஃபாவிற்குள் நுழைவதற்கே அந்த மக்கள் முஸ்லிம்களை தடுத்தனர். கொலைகளையும் செய்தனர். இப்பொழுது ஆட்சி முஸ்லிம்கள் கையில் இருப்பதால் பழைய பகையை மனதில் வைத்து அந்த மக்களை துன்புறுத்த வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது குர்ஆன். இதனை மீறுவோரை தான் தண்டிப்பேன் என்றும் இறைவன் கண்டிக்கிறான்.

'இணை கற்ப்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் இறைவனின் வார்த்தையை செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்கு காரணம்.'
-குர்ஆன் 9:6

இஸ்லாத்தை வெறுக்கும் தமிழன் போன்ற நபர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தால் முஸ்லிம்கள் அவருக்கு அடைக்கலம் தர வேண்டும். இது போன்ற நபர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பிக்க வேண்டும். தமிழன் போன்றவர்கள் இப்படி கிறுக்குத் தனமாக பின்னூட்டம் இடுவது உண்மையை அறியாத காரணத்தினால்தான். அவர்கள் மேல் நாம் பரிதாபம்தான் பட வேண்டும். ஏனெனில் இது போன்ற நபர்கள் உண்மையை அறியாத கூட்டமாக இருப்பதே!

'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:8

இணையத்தில் ஒரு சில இந்து கிறித்தவ பதிவர்களைத் தவிர மற்ற அனைவரும் முஸ்லிம்களிடம் சகோதர வாஞ்சையோடே பழகுகின்றனர். அவர்கள் அனைவரிடமும் முஸ்லிம்களும் அன்போடு பழக வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் போன்ற நல்லோர்களை இன்றும் நாம் மதிக்கிறோம்.

அதே நேரம் நரேந்திர மோடி, அத்வானி, சோ, ராமகோபாலன் போன்றோர் நம்மை அழிக்க முற்பட்டால் அவர்களை எதிர்ப்பதில் இயன்றவரை முனைப்பு காட்ட வேண்டும். அவர்களை நாம் மதிப்பதும் இல்லை. இரு வேறுபட்ட நபர்களையும் நாம் சரிவர புரிந்து கொண்டால் குழப்பமற்ற தெளிவு நமக்கு கிடைக்கும்.

Anonymous said...

இறைவனின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
முஹமத் இக்பால்,
சகோதரர் தமிழன் அவர்களுக்கு, இங்கு தங்களுடைய கேள்வியை பார்த்தல் இந்த பதிவை படித்தீர்களா என்ற சந்தேகம் வருகிறது.இவ்வளவு தெளிவாக சகோதரர் சுவனப்பிரியன் அவர்கள் ஒரு பதிவை போட்ட பின்பும் அதே கேள்வியை கேட்டுள்ளீர்கள்.இந்த மாதிரியான கேள்விகளுக்கு எங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் பதில் தந்தும் மறுபடியும் அதே கேள்வியை கேட்டுள்ளீர்கள்.இந்த வசனங்கள் அனைத்துமே இறைவன் மனிதர்களுக்கு எவ்வாறு போர் புரிய வேண்டும் என்றும்,எந்த காரணத்திற்காக போர் புரிய வேண்டும் என்றும் தெளிவாக கூறுகிறான்.
போருக்கு வருவோருடன் மட்டும்தான் இறைவன் போர் செய்ய சொல்கிறானே தவிர அப்பாவி மக்களுடன் அல்ல என்று தெளிவாக சொன்ன பின்பும் அதே கேள்வி.உன்னை கொள்ள வருகிறவனை நீயே சமாளித்துகொல் என்று சொன்னால் ஏன் இறைவன் கொள்ள சொல்றார் என்கிறீர்கள்.

//உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.'

-குர்ஆன் 2:190 //

இவ்வளவு தெளிவாக சொன்ன பின்புமா அதே கேள்வி.

யா அல்லாஹ் எங்களுக்கு பொறுமையும் சகிப்பு தன்மையும் தந்தருள்வாயாக.நீ நாடினால் எங்களை பொருமையாளர்களாக காண்பாய் அல்லாஹ்.

Anonymous said...

இறைவனின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
முஹமத் இக்பால்,
சகோதரர் தமிழன் அவர்களுக்கு, இங்கு தங்களுடைய கேள்வியை பார்த்தல் இந்த பதிவை படித்தீர்களா என்ற சந்தேகம் வருகிறது.இவ்வளவு தெளிவாக சகோதரர் சுவனப்பிரியன் அவர்கள் ஒரு பதிவை போட்ட பின்பும் அதே கேள்வியை கேட்டுள்ளீர்கள்.இந்த மாதிரியான கேள்விகளுக்கு எங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் பதில் தந்தும் மறுபடியும் அதே கேள்வியை கேட்டுள்ளீர்கள்.இந்த வசனங்கள் அனைத்துமே இறைவன் மனிதர்களுக்கு எவ்வாறு போர் புரிய வேண்டும் என்றும்,எந்த காரணத்திற்காக போர் புரிய வேண்டும் என்றும் தெளிவாக கூறுகிறான்.
போருக்கு வருவோருடன் மட்டும்தான் இறைவன் போர் செய்ய சொல்கிறானே தவிர அப்பாவி மக்களுடன் அல்ல என்று தெளிவாக சொன்ன பின்பும் அதே கேள்வி.உன்னை கொள்ள வருகிறவனை நீயே சமாளித்துகொல் என்று சொன்னால் ஏன் இறைவன் கொள்ள சொல்றார் என்கிறீர்கள்.

//உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.'

-குர்ஆன் 2:190 //

இவ்வளவு தெளிவாக சொன்ன பின்புமா அதே கேள்வி.

யா அல்லாஹ் எங்களுக்கு பொறுமையும் சகிப்பு தன்மையும் தந்தருள்வாயாக.நீ நாடினால் எங்களை பொருமையாளர்களாக காண்பாய் அல்லாஹ்.

தமிழன் said...

@சுவனப்பிரியன்

//மாற்று மதத்தவரின் புனிதத் தலங்களை அழிக்க முஸ்லிம்கள் முயற்ச்சிக்கக் கூடாது என்பதை இந்த வசனத்தின் மூலம் விளங்குகிறோம்//

அப்ப இது என்ன..

http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-94.html


”நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள் சிலைகளை அகற்றுகிறார்கள்”

http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-95.html

”பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்”

நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்மா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு அல் அஸ்வத், 7, 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா’ எனும் அடிமை.

இந்த கொடுங்காஃபிர்கள் செய்தது என்ன என்று தெரியும????

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//ஏனெனில், என்னதான் ஆதாரங்களுடன் விளக்கினாலும் வீம்புக்காக விளங்குவார்களாக இல்லையே இவர்கள்..?

தம் தவறை திருத்திக்கொள்பவர்களாகவும் இல்லையே இவர்கள்..?

புரிந்து கொண்டாலும் வேண்டுமென்றே புரியாதது போல அல்லவா சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்..?//

நாம் இவ்வாறு விளக்கமளிப்பது அவர்களை சென்றடைகிறதோ இல்லையோ புதிதாக இணையத்தக்கு வருபவர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக சிறப்பாக சென்றடையும். எனவே நாம் அவர்களுக்காக எழுதுவோம். எனவே தான் திரு தருமி அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது.

//சகோ.சுவனப்பிரியன், இனி நாம் என்ன செய்வது..?//

நம்மிடம் இருக்கும் ஒரே வழி பிரார்த்திப்பதுதான். இன்றில்லா விட்டாலும் என்றாவது இவர்கள் உண்மையை உணருவார்கள் இல்லையா! சத்தியம் அழிந்ததாக எங்காவது சரித்திரம் உண்டா?

//எனக்கென்னவோ... இவர்கள் முஸ்லிம்கள் அல்லாத பிற சமயத்தவரை எல்லாம்

"இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதி"களாய்...

ஆக்க திட்டமிட்டுத்தான் இப்படி தொடர்ந்து ஜிஹாத் பதிவு வெளியிடுகிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது..!//

இதற்கு இறைவன் மிகச்சிறந்த வழியைக் காண்பிக்கிறான்.

'நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறை மறுப்போராக மாற்றி விட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்கு தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். இறைவன் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள். அனைத்துப் பொருட்களின் மீதும் இறைவன் ஆற்றலுடையவன்'
-குர்ஆன் 2:109

அன்றைய மக்களுக்கு இறங்கிய வசனம் இன்றைய உங்களின் கேள்விக்கும் பதிலாக அமைகிறது. அவர்களை நாம் அலட்சியப்படுத்தி விடுவது ஒன்றுதான் நம்முன் உள்ள குர்ஆன் காட்டும் வழி.

நீண்ட பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம்! ரெஜின் அப்துல் ரஹ்மான்!

//கீதாஉபச்சாரத்தை சரியாக புரிந்துகொள்ளதெரிந்த இவர்களுக்கு இவ்வசனங்கள் புரியவில்லை என்றால்..பிரழ்வு அவர்களின் மூளையில்தான்...

நாம் சொல்வதை தொடர்ந்து சொல்வோம்..நடுநிலையாளர்கள் விளங்கிக்கொள்ள... //

சரியாக சொன்னீர்கள். நாம் மற்றவர்களுக்காக சொல்வோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.!

தமிழன் உங்களின் மற்ற கேள்விகளுக்கும் பதில் தருகிறேன்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! சகோ முஹமத் இக்பால்,

//இங்கு தங்களுடைய கேள்வியை பார்த்தல் இந்த பதிவை படித்தீர்களா என்ற சந்தேகம் வருகிறது.//

'நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறை மறுப்போராக மாற்றி விட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்கு தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். இறைவன் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள். அனைத்துப் பொருட்களின் மீதும் இறைவன் ஆற்றலுடையவன்'
-குர்ஆன் 2:109

தமிழனுக்கு இந்த வசனத்தையே பதிலாக கொடுத்து விடுவோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//அப்ப இது என்ன..

http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-94.html

//”நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள் சிலைகளை அகற்றுகிறார்கள்”//

முன்பு ஆபிரஹாம் புனர் நிர்மாணம் செய்த பிறகு கஃபா எவ்வாறு இருந்தது? ஏக இறைவனை வணங்கும் ஆலயமாக இருந்தது. ஆபிரஹாம் காலத்துக்கு பிறகு சில ஆண்டுகளில் அங்கு சிலைகளை வைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர். முஸ்லிம்களிடமிருந்து அந்த பள்ளி சிலை வணக்கம் புரிபவர்களிடம் செல்கிறது. (பாபர் மசூதியில் சிலைகளை கொண்டு வைத்து அநியாயம் செய்தது போல்.) கஃபா முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளி. எனவே அங்குள்ள சிலைகளை அகற்றி அந்த இடத்தை திரும்பவும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர்.

அதே போல் முன்பு மக்காவில் முஸ்லிம்களை இஸ்லாத்தை ஏற்ற ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு சிலை வணங்கிகளும் யூதர்களும் வெளியேற்றுகின்றனர். மதினா வரை வந்து பலரை கொலையும் செய்கின்றனர். எனவேதான் அவர்களை நோக்கி இஸ்லாமிய படை சென்றது. அக்கிரமத்துக்கு எதிராகத்தான் இங்கும் போர்.

தமிழன் said...

காபாவில் முகமது பிறப்பதற்கு முன்பே , அரேபியர்கள் நிறைய கடவுள்களை கும்பிட்டார்கள். அங்க முதலில் ஆதம் தான் கோவில் கட்டினான் அதனால் அது முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று சொல்லி இடித்து இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது முகமதுதான்.

http://en.wikipedia.org/wiki/Arabian_mythology

http://en.wikipedia.org/wiki/Conversion_of_non-Muslim_places_of_worship_into_mosques

suvanappiriyan said...

//காபாவில் முகமது பிறப்பதற்கு முன்பே , அரேபியர்கள் நிறைய கடவுள்களை கும்பிட்டார்கள்.//

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
'இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.
திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
'ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் தருகாபன் மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்துரை செய்யும்.'
-ரிக் வேதம்: 10:155:3

நலந்த விஷால் ஷப்த்சாகர் அகராதியானது தருகாபன் என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணியஸ்தலம் என்று பொருள் கூறுகிறது. பாலைவனத்திலுள்ள இறை இல்லம் கஃபாவைத்தான் இங்கு குறிப்பிடப்படுகிறது. பவிஸ்ய புராணமும் இதே கருத்தையே கொடுக்கிறது. இந்து மத வேதங்களும் ஏக இறைவனையே வழிபட சொல்கிறது.

Anonymous said...

vera vela vetti kedaiyatha...

Anonymous said...

புரிகின்றது தேவைக்காக அக்காலத்தில் போரிட்டார்கள் இஸ்லாமியர்கள் -- இக்காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் வஞ்சிக்கப்படும் சிறுபான்மையருக்கு என்ன பதில் சகோ. பாகிஸ்தான் முதல் இந்தோனேசியா, இரான், பகரைன் - ஏன் நேற்று எகிப்து வரை சிறுபான்மையினரை இஸ்லாமியர் விரட்டுவதும், வழிப்பாட்டுத் தலங்களைத் தாக்குவதும் இதற்கு தங்களின் பதில் என்ன ?? பழையக் காலத்தை விடுங்கள் அதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம் - இன்று நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடக்கும் இதனை ஏன் தடுக்கவில்லை.

எப்படி இந்தியாவில் குஜராத்தில் இஸ்லாமியரை காவி தீவிரவாதம் தாக்கியதை நாம் எதிர்க்கின்றோமோ அதே அளவுக்கு பிறைத் தீவிரவாதம் மத்தியக் கிழக்கிலும் இந்தோனேசியாப் போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் சிறுபான்மையினரை வஞ்சிப்பதை எதிர்க்கின்றோம். ஆனால் இஸ்லாமியர்கள் இதனைத் தடுக்கவோ நிறுத்தவோ என்ன செய்துள்ளார்கள் என்பதே கேள்வி ...

பலர் நினைப்பது போல ஹிட்ஸுக்காகவும், வேண்டும் என்றே பதிவுகளைப் போடவில்லை. எனது சந்தேகம் மெய்யானது. ஆனால் நியாயமான, ஆதாரப் பூர்வமான விளக்கங்கள் சரிவர வருவதில்லை.

நான் எனது தனிப்பட்டக் கருத்தை இடவில்லை. குரானில் இருப்பவையை அப்படியே இடுவதால் பாதுகாப்புச் சட்டத்தை என்மீது பாவிக்க வேண்டும் என்று ஒரு சிலர் விரும்புகின்றனர். நான் என்ன அந்தளவுக்கு பெரும்புள்ளியா? போங்க காமெடிப் பண்ணாதீங்க சகோ..ஸ்

Shab said...

Assalamu Alaikkum brother..
Iqbal Selvan looks to be very knowledgeable. There is no point in arguing with him. That best solution is to avoid further discussion about anything with this . Islam is easy way to increase your hits :) He never reads our replies. and he comes up with a new questions.
He already did enough research and he is sure of what he knows. We can wish him all the best :)

suvanappiriyan said...

//பழய காலத்தில் எழுதபட்ட குரானில் அனைத்திற்க்கும் தீர்வு தருகிறது என்று நம்புபவர்கள். மற்றவர்களையும் நம்ப சொல்லி பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் பெற்றோல் தவிர்ந்த இஸ்லாம் நாடுகளில் வறுமையும் பெண்ணடிமைதனமும், குற்ற செயல்களும் பெருக்கெடுத்து ஓடுகிறது.//

நமது நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது. மனிதனை மிருகங்களை விட கேவலமாகவல்லவா இந்து மதத்தில் நடத்துகிறீர்கள்? ஆப்ரிக்க நாடுகளில் பாதிக்கு மேல் கிறித்தவ நாடுகள். எனவே வறுமை செல்வம் என்பது சுழற்சி முறையில் வரக் கூடியது.

//ஏனைய சமயங்கள் எது செய்தாலும் அது இஸ்லாத்தை அழித்துவிடுமோ என்ற ஒரு அச்ச உணர்வில் பீடிக்கப்பட்டுள்ளதையும் தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது ................//

தவறு. ஏனைய மதங்களையும் மார்க்கங்களையும் இஸ்லாம் விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில் எழுபவைதான் ஒருமுகமாக இஸ்லாத்தை அனைவரும் தாக்க முற்படுவது.

//ஆனால் இலங்கையில் ஒரே மொழி பேசும் பிற தமிழர்கள் கொல்லப்படும் போது மவுனமாகவே இருந்தார்கள். இதே நிலை பல இடங்களில் இடம் பெறுகின்றன.//

அதே நாட்டில் சொந்த வீடுகளை விட்டு பெரும் செல்வந்தர்களையும் நாடு கடத்திய தொழும்போது கோழைத்தனமாக முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற விடுதலைப் புலிகளை, பிரபாகரனை எவரும் கண்டிக்கவில்லையே. ஒரே மொழி பேசக் கூடிய எந்த இந்துவும் அன்று வாய் திறக்கவில்லையே!

//ஆனால் பலவற்றை இயேசு மாற்றி புதிய சிந்தனையைக் கொடுத்துள்ளாரே.. அதுவும் காட்டுமிராண்டித்தனமான மக்கள் வாழ்ந்த மத்தியக் கிழக்கில் இருந்து எனும் போது ஆச்சர்யப்படுகின்றேன் ....//

ஏசு மாற்றவில்லை. பவுல் தனது கருத்துகளை ஏசுவின் பெயரால் பைபிளில் ஏற்றி விட்டார். எனவேதான் 80 சதவீதமான கிறித்தவர்கள் பைபிளை தொடுவதில்லை. அதன்படி வாழ்வதும் இல்லை. கவலைப்படாதீர்கள் இஸ்லாத்திற்கு அந்த நிலை வராது.

//சர்வாகன் - தங்களின் தொடுப்புக்கு மிக்க நன்றிகள் . இஸ்லாம் மதமாக மட்டுமே இருக்கும் போது பிரச்சனைகள் எழுவதில்லை. அது அரசியலிலும், அரசாகவும் மாறும் போது கலகங்களில் முடிகின்றன ............. !!!

சுவனப்பிரியன் இதனை ஏற்க மாட்டார் பாருங்க ???//

சவுதியில் குர்ஆனின் சட்டம் அமுல்பத்தப்படுகிறது. இதனால் நமது இந்து சகோதரர்களும், கிறித்தவ சகோதரர்களும் எந்த வகையில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.? குடும்பம் சகிதமாக பல வருடங்கள் சவுதியில் சந்தோஷமாக இல்லையா? சவுதியின் ஆட்சி அமைதியாகவும் எல்லா மக்களுக்கும் பாதுகாப்பாகவும் பல வருடங்கள் செல்லவில்லையா?

Ganesan said...

//'ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் தருகாபன் மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்துரை செய்யும்.'
-ரிக் வேதம்: 10:155:3//

தவறு. ரிக் 10:155:3 சொல்வது.

Yon log that floats without a man to guide it on the river's edge,Seize it, thou thing with hideous jaws, and go thou far away thereon.

உங்கள் குறிப்புக்கான ஆதாரம் என்னவோ? வழக்கம் போல் தர மாட்டீர்கள் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

suvanappiriyan said...

அலைக்கும் சலாம்! சகோ. ஷாப்!

//Assalamu Alaikkum brother..
Iqbal Selvan looks to be very knowledgeable. There is no point in arguing with him. That best solution is to avoid further discussion about anything with this . Islam is easy way to increase your hits :) He never reads our replies. and he comes up with a new questions.
He already did enough research and he is sure of what he knows. We can wish him all the best :)//

நாம் பதில் அளிப்பது தனிப்பட்ட ஒருவருக்காக அல்ல. இதில் நாமும் சில விபரங்களைத் தெரிந்து கொள்கிறோம். புதிதாக இணையத்தின் பக்கம் வரும் பலருக்கும் ஓரளவு உண்மையும் விளங்கும். இறைவன் நாடினால் இன்றில்லா விட்டாலும் சில காலம் பிறகாவது இவர்கள் உண்மையை உணரலாம் இல்லையா?

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

//vera vela vetti kedaiyatha...//

வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் ஒரு மணி நேரம் இது போன்ற பணிகளில் ஈடுபடுகிறேன். இங்கு வரவில்லை என்றால் சினிமாவில் வெட்டியாக பொழுதை போக்க வேண்டி வரும். ஆன்மீகத்தில் சற்று ஆழமாக செல்வதால் மனம் அமைதியுறுகிறது. ஆரேர்கியமான விவாதங்கள் அறிவுக்கு வேலை அல்லவா?

suvanappiriyan said...

//Yon log that floats without a man to guide it on the river's edge,Seize it, thou thing with hideous jaws, and go thou far away thereon.

உங்கள் குறிப்புக்கான ஆதாரம் என்னவோ? வழக்கம் போல் தர மாட்டீர்கள் என்று தோன்றுகிறது. பார்ப்போம்.//

தரு காபன்:

சமஸ்கிரதத்தில் 'தர்' என்பதற்கு 'வனாந்திரம்' என்று பொருள் வரும். அரபு பாலைவனத்தை 'வனாந்திரம்' என்றே கூறுவர். அரபுலகை பைபிளும் வனாந்திரம் என்றே கூறுகிறது. 'காபன்' என்பது தெளிவாக கஃபாவைக் குறிக்கும் சொல்லாகும். 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள கஃபா என்ற பொருளாகிறது.

நலந்த விஷால் ஷப்த் ஷாகர் என்ற அகராதியானது 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம் என்ற பொருளைத் தருகிறது.

இது தவறென்றால் 'தருகாபன்' என்ற சமஸ்கிரத சொல்லுக்கு என்ன பொருள் என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

suvanappiriyan said...

//இக்காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் வஞ்சிக்கப்படும் சிறுபான்மையருக்கு என்ன பதில் சகோ. பாகிஸ்தான் முதல் இந்தோனேசியா, இரான், பகரைன் - ஏன் நேற்று எகிப்து வரை சிறுபான்மையினரை இஸ்லாமியர் விரட்டுவதும், வழிப்பாட்டுத் தலங்களைத் தாக்குவதும் இதற்கு தங்களின் பதில் என்ன ??//

இதை சரியென்று யார் வாதிட்டது? மோடி முஸ்லிம்களை கொன்றதற்கு இந்து மத கொள்கைதான் காரணம் என்று நான் சொன்னால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா?

சிறுபான்மையினரை பாதுகாப்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்று. அந்த மக்கள் இஸ்லாத்தை விளங்காததே முதற்காரணம்.

//ஆனால் இஸ்லாமியர்கள் இதனைத் தடுக்கவோ நிறுத்தவோ என்ன செய்துள்ளார்கள் என்பதே கேள்வி ...//

கண்டித்து பதிவு எழுதலாம். போராட்டமும் அமைதியான முறையில் செய்யலாம். இதை அனைவரும் செய்து வருகிறோம். எகிப்தில் நடக்கும் கலவரத்தில் மொசாதின் பங்கு எந்த அளவு என்பது இன்னும் வெளிவரவில்லை. ஏனெனில் அந்த மக்கள் இஸ்லாமிய ஆட்சியை விரும்புகிறார்கள். அதற்கு ஏதாவது தடையை அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்தாக வேண்டும். மாலேகான், பிரக்யாசிங் ஞாபகம் வருகிறதா? :-(

Pradeep said...

வள்ளாலார் சொன்ன அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை இறைவன் என்பது முஸ்லிம்களால் குறிப்பிடப்படும் அல்லாஹ் அல்ல.வள்ளாலார் சொல்கிறார், "வர்ணம்,ஆசிரமம் , குலம்,கோத்திரம், சொர்க்கம்,நரகம் ஆகியன பிள்ளை விளையாட்டுகளே அன்றி வேறில்லை". சமரச சுத்த சன்மார்க்க படி இஸ்லாமும் பிள்ளை விளையாட்டே.
"சைவம்,வைணவம்,சமணம்,கிருத்துவம், மகமதியம் இம்மதங்கள் காட்டும் இறைவனல்ல தனிபெரும்பதியாகிய இறைவன்".