Followers

Saturday, February 06, 2016

நாளை என்பது இல்லாது போனால்?

நாளை என்பது இல்லாது போனால்?------------------------------------------------------'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..''வஅலைக...

Posted by Nazeer Ahamed on Saturday, February 6, 2016


நாளை என்பது இல்லாது போனால்?
------------------------------------------------------
'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்..'

'வஅலைக்கும் சலாம். சௌக்கியமா?'

'ஆம... நல்லாயிருக்கேன் பாய்...'

'எங்கே போயிட்டு வர்றே...'

'அப்படியே நண்பர்களோடு டைம் பாஸூக்காக வெளியில் சுற்றி விட்டு வருகிறேன்'

'ஓ... கவனமா பாத்து ஓட்டு'

'அல்லாஹூ அக்பர்' 'அல்லாஹூ அக்பர்' பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்பொலி கேட்கிறது....

'பாங்கு சொல்லப்படுகிறதே... வா தொழுது விட்டு போகலாம்'

'இல்ல பாய்... நீங்க போங்க. நாளைக்கு கண்டிப்பா தொழுகைக்கு உங்களோடு வருகிறேன்.'

'என்னப்பா இது.... நான் எப்போ தொழுக கூப்பிட்டாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பிச்சுக்கிறே... இறைவனை வணங்கத்தானே கூப்பிடுகிறேன். நாளை வருகிறேன்... நாளை வருகிறேன் என்கிறாயே.. நாளை என்பது நமக்கு இல்லாமல் போனால்?'

'சாரி பாய்.... முக்கியமான வேலை... இப்போ நீங்க போங்க... நாளைக்கு கண்டிப்பாக தொழுக வந்து விடுகிறேன். மா சலாமா'

என்று சொல்லிக் கொண்டே இரு சக்கர வாகனத்தை வேகமாக அழுத்தினான் அந்த இளைஞன். 10 நிமிடம் கழித்து எதிரே வேகமாக ஒரு மகிழூந்து நேராக வந்து அந்த இளைஞனின் இரு சக்கர வாகனத்தில் மோதுகிறது. அந்தோ பரிதாபம் அந்த இடத்திலேயே முளை சிதறி அந்த இளைஞன் இறக்கிறான்.

வேலை, நண்பர்கள், ஜாலியான ட்ரிப் என்று நேரத்தை செலவழித்து விட்டு இறைவனை வணங்க நாளை நாளை என்று நாட்களை கடத்தினான் அந்த இளைஞன். இன்று அந்த இளைஞனுக்கு நாளை என்பதே இல்லாது போய் விட்டது.

'படைத்த இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் நாம்' இதனை மறக்காது தொழுகையில் நாம் அலட்சியமாக இல்லாதிருப்போமாக!

---------------------------------------------

'இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116

'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

No comments: