Followers

Thursday, January 10, 2013

ரிசானா நபீக்கின் தண்டனை நிறைவேற்றப்பட்டது!


ரிசானா ரபீக் சவுதி அரசால் தண்டனை நிறைவேற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ஏன்? அந்த பெண்ணை ஏன் மன்னித்து விடக் கூடாது? இஸ்லாமிய சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்ற வாதம் இன்று பலராலும் வைக்கப்படுகிறது. அது பற்றி சகோதரர்கள் எழுதிய ஆக்கத்தையும் அதோடு எனது கருத்தையும் சேர்த்து மாற்று மதத்தவர் விளங்கிக் கொள்வதற்காக இந்த பதிவை தருகிறேன்.


ரிசானா நபீக் விஷயமாக மாற்று மத அன்பர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள், அரசியல் கட்சிகள் ஏன் இந்த விஷயத்தை இவ்வளவு பெரிதாக்க வேண்டும்? முஸ்லீம்கள் இந்த விஷயத்தில் எத்தகைய நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய செய்திகளை ஆராய்வதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மூதூர் என்ற முஸ்லீம்கள் செறிந்து வாழும் ஊரைச் சேர்ந்தவர் சகோதரி ரிசானா நபீக்.

இவர் கடந்த 2005ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்பிற்காக சென்றார். அவர் வேலை செய்த இடத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரிசானாவிற்கு ஆதரவாக பல அமைப்புக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.


(மூதூரில் உள்ள ரிசானாவின் எளிய வீடு)

நடந்தது என்ன?

கடந்த 2005ம் ஆண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவுதிக்கு சென்ற ரிசானா தனது எஜமானரின் குழந்தையை கொலை செய்தார் என்பதே ரிசானா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டாகும். இந்தக் குற்றச் சாட்டு விசாரிக்கப்பட்டு ரிசானா குறிப்பிட்ட குழந்தையை கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து சவுதி தவாமி நீதி மன்றம் ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்து 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தவாமி நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம், ஹாங்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன் ரியாத் உயர் நீதி மன்றத்தில் ரிசானாவுக்கு ஆதரவாக வழக்குத் தாக்கல் செய்தது.

இந்த மேல் முறையீட்டின் விசாரனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரியாத் உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்துல்லாஹ் அல் ரவ்சாமி தலைமையிலான மூன்று பேர்களை கொண்ட நீதிபதிகள் குழு ரிசானா நபீக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு உண்மையானதும், நிரூபிக்கப்பட்டதுமாகும் என்று தீர்ப்பு வழங்கி, ரிசானாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்கள்.

இதன் பின்னர்…………………

இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், ரவுப் ஹக்கீம் போன்றவர்கள் ரிசானா நபீக் விஷயத்தில் சவுதி அரசு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று சவுதியை கேட்டுக் கொண்டார்கள்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ரிசானாவை விடுவிக்கும்படி கோரிக்கை வைத்து சவுதி அரேபிய மன்னருக்கு கடிதம் எழுதினார்.

ஆசிய மனித உரிமைகள் அமைப்பு முதல் இலங்கை எதிர்க்கட்சிகள் வரை ரிசானாவை விடுதலை செய்யும்படி அறிக்கை வெளியிடுவதும், போராட்டங்கள் நடத்துவதுமாக ரிசானாவின் விஷயத்தை பல தரப்பாலும் அரசியலாக்கிவிட்டார்கள்.

கட்சிகளின் அரசியல் நோக்கம் என்ன?

இன்று பல கட்சியினரும் ரிசானா நபீக் தொடர்பான தங்கள் கருத்துக்களை வெளியிட்ட வண்ணமே உள்ளார்கள். அவ்வப்போது சிலர் போராட்டங்களையும் நடத்துகிறார்கள்.

ரிசானாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அனைவரும் ரிசானாவை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லும் காரணங்கள் என்ன தெரியுமா?

இளம் வயதுப் பெண்.

அவருடைய குடும்பம் வறுமையில் உள்ளது.

தங்குவதற்கு ஒரு சரியான வீடு கூட இல்லை.

இது போன்ற காரணங்கள் கூறப்பட்டு ரிசானா நபீக் மீது நாடளாவிய ரீதியில் ஒரு அனுதாப அலையை உருவாக்கியுள்ளார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

ரிசானா மீது ஏற்படுத்தப்படும் அனுதாப அலைகள் ரிசானாவை நிரபராதி என்று சொல்வதற்குறிய ஆதாரங்கள் இல்லை. ரிசானா தவறு செய்யவில்லை என்றால் அதனை அவர் நிரூபிக்கக் கடமைப் பட்டுள்ளார்.

ஆசிய மனித உரிமைக் கழகம் மற்றும் சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து ரிசானாவுக்காக நடத்திய வழக்கில் ரிசானா தரப்பின் கருத்தை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. குறிப்பிட்ட குழந்தை கொலை செய்யப்பட்டுத்தான் இறந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க இல்லை ரிசானா மீது இஸ்லாமிய குற்றவியல் சட்டம் புகுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் கொடூரமானது என்றெல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் சில முஸ்லீம் பெயர் தாங்கிகளும் கூக்குரலிடுவது இஸ்லாமிய சட்டத்தை கேவலப்படுத்துவதாகும்.


நேரடியாக இஸ்லாத்தைக் குறை சொன்னால் பெயர் கெட்டுவிடும் என்று, இதற்காக வருந்துவது போல் மரண தண்டனை அடைந்த ரிசானாவிற்கு பரிதாபம் காட்டுவது போல் இஸ்லாத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த பலர் முயல்கின்றனர். எத்தனையோ இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுகையில் மவுனியாக இருப்பவர்கள் தங்களின் குள்ளநரித் தனத்தை ரிசானாவின் மரண தண்டனை மூலம் காட்டத் துடிக்கின்றனர் .

மேலோட்டமாக பார்க்கும் போது அனைவருமே கருணை உள்ளவர்கள் தான்.பிறரால் தனக்குத் துன்பம் நேரும் போது கருணை என்ற எண்ணம் எவருக்கும் வருவதில்லை. கற்பழிப்பு விஷயத்தில் பெண்களின் ஆடைக் குறிப்புக் கூட நம் கண்களை மறைத்து கற்பழித்துக் கொன்றவர்களை தூக்கில் ஏற்றத் துடிக்கிறோம்.

இலங்கை மக்கள் துன்புறுத்தப்படும் போதெல்லாம் நம்மால் கருணைக் காட்ட முடியவில்லை.கண்ணிவெடிகள் மூலம் எதிரிகள் கொல்லப்படுகையில் ஆனந்தம் அடைந்தோம். பள்ளி செல்லும் குழந்தைகள் வாகனத்தில் வெடி குண்டு வைத்து பாலகர்கள் கொல்லப்படுகையில் கூட நம் கருணை உள்ளம் வேலை செய்யவில்லை. பெண்களின் கற்பை சூறையாடிய இந்திய ராணுவம் ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்டது என்று ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்து அப்படுகொலையை நியாயம் கற்பித்த போது கருணை உள்ளம் வேலை செய்யவில்லை.கொலைக்கு கொலை தான் தண்டனை என்பதை நம் விஷயங்களில் நியாயப்படுத்தும் நாம் அடுத்தவர்களுக்கு அதேப் பிரச்னை வருகையில் கருணையுடன் ஏன் நடந்திருக்கக் கூடாது என்று சுலபமாக கூறிவிடுகிறோம்.

நமக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் என்பது தான் கருணையா? தம் குழந்தை கொல்லப்பட்டதை அறிந்த பெற்றோர் குற்றவாளிக்குத் தண்டனையை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அரசும் இஸ்லாமிய முறைப்படி தண்டனையைக் கொடுத்துள்ளது.யாரோ பெற்றக் குழந்தை கொலை செய்யப்படும் போது, யாரோ ஒருவரின் குழந்தைதானே என்று அரசாங்கம் கருணை காட்டினால் குடிமக்கள் மீது அந்த அரசாங்கத்தினால் பாதுகாப்பு இல்லை என்பது அர்த்தமாகி விடும்.ஆனால், குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் மன்னித்தால் மட்டுமே அரசும் குற்றவாளியை விடுதலை செய்து இருக்கும்.


இலங்கை முஸ்லீம் உரிமைகள் அமைப்பின் போராட்டமும், ரஞ்சன் ராமநாயக்கவும்.

ரிசானா நபீக்குக்கு வழங்கப்பட்ட தண்டனை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று இலங்கையில் கருத்து வெளியிடுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர்கள் இலங்கை முஸ்லீம் உரிமைகளுக்கான அமைப்பினர்.

இவர்கள் ரிசானாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தவறானது எனக் கூறி ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய குற்றவியல் தொடர்பான அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை நிர்வாகிகளாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, கூடவே சில அரசியல் வாதிகளையும் தம் தரப்புக்கு ஊது குழலாக்கியுள்ளது.

எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்க, கொழும்பு மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் தாம் தற்போது ரிசானாவின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ள நினைப்பவர்கள்.

இவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் ஷரீஆ சட்டத்தை இவர்கள் விமர்சித்தமை இங்கு கண்டிக்கத் தக்கதாகும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி யார் குற்றம் செய்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் கண்டிக்கபட வேண்டியவர்களே.

ரஞ்சனுக்கும், முஜிபுர் ரஹ்மானுக்கும் முஸ்லீம்களிடம் தங்களுக்கு இல்லாமல் போன அரசியல் மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக தற்போது கிடைத்திருக்கும் செய்திதான் இந்த ரிசானா நபீக் விவகாரம்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சவுதி மன்னருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த சவுதி மன்னர் ரிசானா நபீகை மன்னிக்கும் அதிகாரம் தனக்கில்லை என்றும் அந்த அதிகாரம் பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்க மாத்திமே உள்ளதாகவும், அவர்கள் மன்னித்தால் ரிசானா விடுவிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளமை இங்கு கவணிக்கத் தக்கதாகம்.

ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முஜீபுர் ரஹ்மான் போன்றவர்கள் சவுதி மன்னரின் இந்த பதிலை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் ரிசானாவின் அனுதாப அலையைச் சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் இந்தப் போராட்டங்களினால் எந்தப் பிரயொஜனமும் ரிசானாவுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை ரிசானாவை சிறையில் சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக சந்தித்த இலங்கை மத்திய மாகாணம் கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் கிபாயா அவர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.

இலங்கையின் “நிவ் லங்கா டுடே” இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாவது.

நான் தன்னிச்சையாகவே ரிஸானாவின் விடயத்தில் ஈடுபட்டிருக்கிறேன். ரிஸானா அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை நான் தொழில் செய்யும் ரியாத்திலிருந்து 470 கிலோ மீட்டருக்கப்பால் இருக்கிறது. நான் ரிஸானாவை சுமார் 15 தடவைகள் சிறையில் சந்தித்திருக்கிறேன்.

ஷரீஆ சட்டத்தைப் பற்றி சரியாகப் பரிந்து கொள்ளாதவர்களே சவூதி அரேபியாவின் சட்டம் கடினமானது என விமர்சிக்கிறார்கள். நான் ரிஸானாவை சந்திக்க அனுமதி கோரிய போதெல்லாம் சவூதி அதிகாரிகள் எனக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.

சிறைச்சாலை என்றதும் எமது நாட்டிலுள்ள இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சங்கிலிகளையும் கற்பனை செய்து கொண்டே இங்குள்ளவர்கள் சவூதியை விமர்சிக்கிறார்கள். ஆனால் ரிஸானா சிறை வைக்கப்பட்டுள்ள இடம் வீட்டுச் சூழலை ஒத்ததாகும்.

நான் ரிஸானாவைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவள் மிகவும் தெளிந்த மன நிலையில் காணப்படுகின்றாள். என்னை நோனா என்று அழைப்பாள். நான் அவளிடத்தில் நெருக்கமாகப் பேசும்போது என்னுடன் சாச்சி (சிறிய தாயார்) என்று உரிமையுடன் பேசுவாள். உம்மாவுடன் டெலிபோனில் பேச வேண்டுமா? என்று கேட்டால் உங்களுக்கு பணம் செலவாகுமே என்று என்னிடத்தில்

கேள்வி எழுப்புவாள். மூதூரிலுள்ள தாயாருடன் பேச தொலைபேசி தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தால் உறவினர்களும் பேசுவார்கள்.

சிறைச்சாலையில் தொழுவதற்கும் நோன்பு நோற்பதற்கும் அவளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ரிஸானாவின் தண்டனை விடயத்தில் சவூதி ஊடகங்களும் சமூகமும் 80முதல் 90 வீதமான அபிப்பிராயங்கள் அவளது விடுதலையையே ஆதரிக்கின்றன.

ரிஸானா சிறு வயதுக்காரி அவளுக்கு இத்தண்டனை கூடாது என்று போராடுகிறார்கள். ஆனால் சவூதி பதிவுகளும் கடவுச்சீட்டு விபரங்களும் அப்படி இல்லை. எனவே அவள் சிறுமி என்ற வாதத்திற்கே இடமில்லை.

விரும்பியோ, விரும்பாமலோ இந்தப் பொறுப்பை இலங்கை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தத் தவறு இன்னும்நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ரிஸானாவின் விடுதலை தொடர்பாக நடாத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கைகள் ஒரு போதும் அவரது விடுதலைக்கு உதவமாட்டாது. மாறாக இது ஆபத்தையே உண்டு பண்ணும்.

சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ரிஸானா விடயத்தில் தலையிட்டி ருக்கும்போது அரசும் சர்வதேசமும் ஒன்றும் செய்யவில்லை என்று கூறும் வாதம் அரசியல் மேடைகளுக்கும் கோஷங்களுக்கும் உதவுமே தவிர ரிஸானாவின் விடுதலைக்கு அவை ஒரு போதும் உதவமாட்டாது.

ஜனாதிபதி சவூதி மன்னருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் சவூதி மன்னரின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன் என்றாலும் மன்னருக்கு கூட மன்னிப்பு வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து அவர்களிடத்தில் மன்னிப்பு தொடர்பான வேண்டுகோளை மாத்திரம் மன்னரினால் முன்வைக்க முடியும். இந்த விடயம் மாத்திரமே நடைபெற வேண்டி இருக்கிறது.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கொடூரமானவையா?

“இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை”என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள்,நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ,சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது;ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.

சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் “நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்?ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே” என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.

சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.

மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா?என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் “ஆறு மாதம் சோறு போடலாம்” எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் “பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது” என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.

முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

“இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.

“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.

கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும்,உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா?என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

(மேலதிக தகவல்களுக்கு திருமறைக் குர்ஆனின் இந்த வசனங்களையும் பார்த்துக கொள்ளலாம் : 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)

(பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கம்.)

பெண்களிடம் ஓர் வேண்டுகோள்.

அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! சகோதரி ரிசானா நபீக் இன்று ஒரு கொலையாளியாக நம் முன் நிற்பதற்கான காரணம் உழைப்பிற்கான தனது வெளிநாட்டுப் பயணம் தான்.

மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்பைத் தேடிச் செல்வது இலங்கையில் தான் அதிகமாக உள்ளது.

இஸ்லாத்தை சரியான முறையில் நாம் புரிந்து கொண்டால் இந்த பிரச்சினை நமக்கு ஏற்படவே மாட்டாது என்பதுதான் உண்மையாகும். இஸ்லாமிய சட்டத்தில் பெண்கள் உழைக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டமே கிடையாது உழைப்பதை ஆண்களுக்குத்தான் இஸ்லாம் கடைமையாக்கியுள்ளதே தவிர பெண்களுக்கு அல்ல.

தந்தையர்களே! கணவர்களே!

உழைப்பது உங்கள் மீது கடமை என்று இஸ்லாம் தெளிவாக தெரிவித்துள்ள போது அதனை மீறி உங்கள் மனைவியரை, பிள்ளைகளை நீங்கள் வேலை வாய்பைத் தேடி வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயமானது. உங்கள் மனம் உறுத்தவில்லையா? நீங்கள் செய்யும் இந்த கேவலமான செயல்பாட்டினால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமே விமர்சிக்கப்படுகிறதே இதை நீங்கள உணர வேண்டாமா?

நன்றி: றஸ்மின் MISc, அன்புச் செல்வன்

------------------------------------------------

சகோதரியின் தண்டனை நிறைவேற்றப்பட்டது நமக்கும் மனது வருத்தமாகவே உள்ளது. இவ்வளவு சிறிய வயதில் பொய்யான வயது சான்றிதழ்களை அரசுக்கு சமர்பித்து அவரை சவுதி அனுப்பிய அந்த கயவர்களை முதலில் தக்க தண்டனை கொடுக்க போராட வேண்டும். குடும்ப வறுமையின் காரணமாக இந்த பெண் 15 வயதிலேயே வீட்டு வேலைக்காக சவுதி சென்றது இந்த சமூகத்தின் குற்றமில்லையா? வரதட்சணை என்ற கொடுமை இல்லாமல் இருந்திருந்தால் இந்த பெண் இத்தனை சிறு வயதில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது அல்லவா? இதுபோல் குழந்தைகளை இதற்கு முன்னும் ஒரு பணிப்பெண் கொன்ற சம்பவம் நாம் படித்திருப்போம்.

சமூகத்தின் மேல் உள்ள வெறுப்பு. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் இவ்வாறு ஒரு வீட்டில் அடை பட்டு கடுமையான வேலைகளை செய்கிறோமே என்ற மன அழுத்தம் பலரை இவ்வாறு தங்களுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை கொல்லும் வரை இட்டுச் செல்கிறது.

அந்த பெண் குழந்தையை கொல்லவில்லை. பால் இறங்காமல் வாந்தி எடுத்ததால் அந்த குழந்தையின் கழுத்தில் கையை வைத்து பாலை இறக்க முயற்சித்திருக்கிறார். அது அந்த குழந்தை இறக்க காரணமாகி விட்டது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவரும் அந்தக் குழந்தையும்தான் அந்த இடத்தில் இருந்துள்ளார்கள். உண்மையை அறிந்தது அந்த பணிப்பெண்ணும் இறைவனும மாத்திரமே. கைரேகைகள் அந்த குழந்தையின் கழுத்தில் இருந்ததும் அந்த பெண் சம்பத்தன்று குற்றத்தை ஒப்புக் கொண்டதும் மிகப் பெரிய பின்னடைவாக ஆகி விட்டது. மன்னரும் அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் இறந்த குழந்தையின் பெற்றோர் அந்த பெண்ணை மன்னிக்க தயாரில்லை. எனவே மன்னரின் பரிந்துரையும் அங்கு எடுபடவில்லை.

தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப் பால் கொடுத்தது கூட அந்த குழந்தை செரிமானம் ஆகாமல் இறந்திருக்க வாய்ப்புண்டு. பெற்ற தாயும் கூட ஒரு வகையில் இந்த இறப்புக்கு காரணமாக உள்ளார். இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த சம்பவத்துக்கு பிறகாவது சிறு வயது பெண்களை வீட்டு வேலைகளுக்கு அரபு நாடுகளுக்கு அனுப்பும் வழக்கத்தை விட்டொழிப்போம். வரதட்சணை கொடுமையை சமூகத்தில் இருந்து அகற்ற நம்மால் ஆன முயற்சிகளை எடுப்போம். செல்வந்தர்கள் ஏழைகளை அரவணைத்து அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கலில் சிறிய பங்கினையாவது அளித்து பிரச்னைகளிலிருந்து விடுவிக்க முயற்சிப்போம்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முயற்சிப்போம்.

உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டு இருக்கக்கூடாது. (குர்ஆன்-59:7)

52 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும் சுவனப்பிரியன்,

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், ஷரியா சட்டங்களை எதிர்க்கவில்லை. அவரை விசாரித்த விதம், ஆதாரங்கள், சான்றுகள்வரை transparency இல்லை. இதைத் தான் கடுமையாக எதிர்க்கின்றனர்.

சகோதரிக்கு தமிழைத் தவிர, வேறெந்த மொழியும் தெரியாது. படித்தவரும் இல்லை. அரபி மொழியில் உள்ள பத்திரங்களில் கையொப்பமிட்டிருக்கிறார். அவை என்னவென்று அந்த அபலைக்கும் தெரியாது.

கையொப்பமிட்டதால், சவூதி நீதிமன்றமும் சகோதரி ரிஸானா குற்றம் இழைத்தார் என்று நிரூபணம் ஆக்கி இருக்கிறது. இதைத்தான் இலங்கை மக்கள் எதிர்க்கிறார்கள்.

துனியாவில் இப்பொழுது சகோதரி இல்லை. எம்மால் துவாச் செய்யத்தான் முடியும்.

///எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்க, கொழும்பு மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் தாம் தற்போது ரிசானாவின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக் கொள்ள நினைப்பவர்கள்.///

ரஞ்சன் ராமநாயக்க என்பவரை, எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். பின்னால் சிங்கள சினிமாக்களில் நடித்துப் புகழ் அடைந்த ஒரு கூத்தாடி. வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களின் நலத்தில் அக்கறை செலுத்துபவர். ஷரியா சட்டத்தை காட்டுமிராண்டித்தனமானது என்று விமர்சித்து, முஸ்லிம் அமைப்புகளிடம் வாங்கிக் கட்டியவர். 2010 இல் என்று நினைக்கிறேன். சகோதரி ரிஸானா வீட்டிற்கும் போய், அவர்களின் குடும்பத்தைப் பார்த்து வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். எல்லாம் அரசியல்தான்.

முஸ்லிம்களின் எந்தவொரு போராட்டங்களிலும் முன்னாள் நின்று, போராடுபவர் முஜிபுர் ரஹ்மான்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு, அரசியலில் ஈடுபடுவதற்கு மார்க்க அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்ததுதானே. அதனால், தெருவில் நின்று எதையும் கத்தி, ஏதாவது சமூகத்திற்கு செய்தால் நல்லது என்று எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள்.

சகோதரி டாக்டர் கிபாயா அவர்கள் என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவர்.

சகோதரி ரிசானாவிற்கு ரஹ்மான் ஈடேற்றத்தை அளிப்பானாக.

Riyas said...

//சமூகத்தின் மேல் உள்ள வெறுப்பு. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் இவ்வாறு ஒரு வீட்டில் அடை பட்டு கடுமையான வேலைகளை செய்கிறோமே என்ற மன அழுத்தம் பலரை இவ்வாறு தங்களுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை கொல்லும் வரை இட்டுச் செல்கிறது.//

சுவனப்பிரியன் நேரில் பார்த்ததைப்போல் இப்படி அப்பட்டமாக கொலை செய்தார் என சொல்லாதீர்க்ள்..! இஸ்லாமிய நாடு, ஷரியா சட்டம் என்பதற்காக இப்படியான கண்மூடித்தனமான தண்டனைகளை அனுமதிக்க முடியாது!

Riyas said...
This comment has been removed by the author.
Riyas said...

//அந்த பெண் சம்பத்தன்று குற்றத்தை ஒப்புக் கொண்டதும் மிகப் பெரிய பின்னடைவாக ஆகி விட்டது.//

வீட்டு எஜமானியுடையதும் போலிசாரினதும் அடிதாங்காமல்தான் குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொண்டிருக்கிறார் இதுவும் அவர் கடிதத்தில் சொன்னதுதான்..

எண்ணெய்காசில் கொழுத்த பணக்கார திமிர் பிடித்த அரபிப்பெண்களுக்கு ஒரு ஏழைப்பெண்ணின் உணர்வுகளை எங்கே புரிந்து கொள்ள முடியும்.

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

பதிவு கொஞ்சம் லென்த்தா இருந்தாலும் கருத்தாழமிக்க பதிவு...உலகம் எங்கும் அரசியல் ஒரே மாதிரியே உள்ளது..சவூதி அரசை கண்டித்து போராட்டம் , கடிதம் போன்றவை செய்த நேரத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சந்தித்து மன்னிப்பு கோரியிருக்கலாம்...இங்கு இளம்பெண்ணின் விடுதலையை விட அவர்களின் அரசியல் விளையாட்டுதான் நன்கு தெரிகிறது... மன்னிப்பு கோரும் உரிமை அனைவருக்கும் இருந்தாலும் மன்னிக்கிற உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லவா இருக்கிறது.இதை அறியாமல் காட்டு கத்தல் கத்தியும் என்ன பயன்.!

காலங்கள் கடந்த நிலையிலும் அப்பெற்றோர்கள் மன்னித்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று இருக்கலாம்..ம்ம்ம்..அவர்களின் வலி என்ன என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்..! அவர்களை குறைகூற முடியாது..அது அவர்களின் உரிமை..இதற்க்கு ஏன் இஸ்லாமை விமர்சிக்கின்றனர் ? எல்லா நாடுகளிலும் மரணதண்டனை நிகழ்ந்துள்ளதே..! அப்போதெல்லாம் அந்தந்த நாடுகளின் மதங்களையா விமர்சிக்கின்றனர்..அல்லது சட்டங்களை விமர்சின்றனரா..? எங்கு எவனுக்கு வாந்தியும் பேதியும் போனாலும் இஸ்லாம்தான் இவர்களுக்கு காரணம்..மறுமையில் அவர்களுக்குரியதை நன்கு அறுவடை செய்வார்கள்..விமர்சிப்போரை தூரவிடுவோம்.!

தவிர அப்பெண்ணின் சார்பாக யாரேனும் வாதாடினார்களா..? தாய்மொழி மட்டுமே தெரிந்த பெண் எப்படி தனக்காக வழக்காடியிருப்பார்..? இதை பற்றி கொஞ்சம் தெரிந்தால் கூறுங்கள் சகோ.

T.Thenmathuran said...

முதலாவது கட்டுரையை எழுதியர் ஆரம்பம் முதலே கொலை, கொலை என திணிப்பதிலிருந்து எக் காரணம் கொண்டும் இஸ்லாமியச் சட்டம் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு விடக் கூடாது என்ற அவரின் உள் நோக்கம் புரிகிறது. பாஸ்போடில் குறிப்பிடப்பட்டு விட்டதால் அவளைச் சிறுவயதுப் பெண் என்று பேசுவது விதண்டா வாதம் என்று குறிப்பிடும் அந்த நபர், ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தைக்கு 18 (அல்லது 14 ?) வயது என்று பாஸ்போர்ட் எடுத்து அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தால், பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டு விட்டதால் வயது குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவாரா...? அவரது கட்டுரை முழுமைக்குமே உள்நோக்கம் ஊடுருவி இருப்பதால் அது பற்றிக் கதைப்பதற்கு எதுவுமில்லை.... உங்களது கட்டுரை நேர்மையாகவே இருக்கிறது.... ///தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப் பால் கொடுத்தது கூட அந்த குழந்தை செரிமானம் ஆகாமல் இறந்திருக்க வாய்ப்புண்டு. பெற்ற தாயும் கூட ஒரு வகையில் இந்த இறப்புக்கு காரணமாக உள்ளார்./// இது மத வேறுபாடின்றி ஆதரிக்கப்படவேண்டிய ஒரு கருத்து..... இங்கே பிரச்சனைகுரியது இத்தனை வருடம் கழித்தும் ரிசானா மீது வெறுப்பைக் காட்டிய பெற்றோரின் மனநிலையே... அவர்கள் அங்கு நடந்தது 100% கொலையே என்று நம்பினார்களானால் அவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று எண்ணியதில் தவறில்லை... ஆனால் இந்த இடத்தில் 18 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை தொடர்பில் இத்தகைய ஒரு முடிவை எடுக்கும் உரிமையை அந்தப் பெற்றோருக்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கியிருக்கக் கூடாது என்ற விதத்திலேயே நான் இச் சட்டத்துடன் முரண்படுகிறேன்... சட்டங்கள் காலத்துக்குக் காலம் மாற்றப்பட வேண்டியவை... ஐநூறு வருடங்களுக்கு முந்திய சட்டத்தையே இப்போதும் வைத்துக் கொண்டிருக்க முடியாது...

Unknown said...

சுவனம்,
உங்களுக்குத்தான் ஆன்மீகம் நல்ல தெரியுதே. அதை மட்டும் எழுத வேண்டியது தானே. ஏன் நமக்கு அரசியல்?

இந்த தண்டனை பற்றி கருத்து சொல்ல ஏதும் இல்லை. அது அந்த நாட்டின் சட்டம். அவ்ளோதான்

faizeejamali said...

Salam Sago excellent article oru sandhegam angu irandhavargalai postmodern seyyamattargala. Narco test undaa

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ யூசுஃப் இஸ்மத்!

//இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், ஷரியா சட்டங்களை எதிர்க்கவில்லை. அவரை விசாரித்த விதம், ஆதாரங்கள், சான்றுகள்வரை transparency இல்லை. இதைத் தான் கடுமையாக எதிர்க்கின்றனர்.//

நான் அரசு தரப்பில் தவறுகள் இல்லை என்று சொல்ல வரவில்லை. இவரை விசாரித்த விதம். குழந்தையின் பாஸ்ட் மார்டம் ரிபோர்ட் போன்றவற்றை சரி பார்க்காமை, மொழி பெயர்ப்புக்காக ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தரப்பிலிருந்து ஆட்களை கொண்டு செல்லாமை என்று பல கேள்விகள் எழுகிறது. இனி வருங்காலங்களிலாவது சவுதி அரசு இந்த குறைகளை நீக்க முயல வேண்டும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டனை அனுபவித்தால் மறமையிலும் அதற்கான தண்டனை உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

இறந்த அந்த சகோதரிக்கு இறைவன் சொர்க்கத்தை தர பிரார்த்திப்போமாக!

suvanappiriyan said...

சகோ ரியாஸ்!

//சுவனப்பிரியன் நேரில் பார்த்ததைப்போல் இப்படி அப்பட்டமாக கொலை செய்தார் என சொல்லாதீர்க்ள்..! இஸ்லாமிய நாடு, ஷரியா சட்டம் என்பதற்காக இப்படியான கண்மூடித்தனமான தண்டனைகளை அனுமதிக்க முடியாது!//

நான் இந்த பெண்ணை மையப்படுத்தி இதை நான் சொல்லவில்லை. இதற்கு முன்னால் ஒரு பிலிப்பைன் பெண்ணும் இதே போன்று குழந்தையை கொன்றதற்காக தண்டனை பெற்றார். குழந்தைகளை பயங்கரமாக அடித்த பணிப்பெண்களின் வழக்கும் வந்துள்ளது. இதை எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகத்தான் அந்த வார்த்தையை சொன்னேன். உண்மையை இறைவனே அறிவான் என்று நான் குறிப்பிட்டுள்ளேனே!

//வீட்டு எஜமானியுடையதும் போலிசாரினதும் அடிதாங்காமல்தான் குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொண்டிருக்கிறார் இதுவும் அவர் கடிதத்தில் சொன்னதுதான்..

எண்ணெய்காசில் கொழுத்த பணக்கார திமிர் பிடித்த அரபிப்பெண்களுக்கு ஒரு ஏழைப்பெண்ணின் உணர்வுகளை எங்கே புரிந்து கொள்ள முடியும்.//

ரிசானாவிடம் தவறு இல்லை என்றால் இதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள்.

அந்த பெண்ணின் மறுமை வாழ்வு சுகமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//காலங்கள் கடந்த நிலையிலும் அப்பெற்றோர்கள் மன்னித்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று இருக்கலாம்..ம்ம்ம்.//

அவ்வாறு மன்னித்திருந்தால் உலகம் அந்த குடும்பத்தை வாழ்த்தியிருக்கும். இறைவனும் பொருந்திக் கொண்டிருப்பான். மன்னரும் அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த பெற்றோர்களிடமும் பேசிப் பார்த்தார். இதனால்தான் ஏழு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்தது இந்த வழக்கு.

suvanappiriyan said...

சகோ தேன் மதுரன்!

//ஆனால் இந்த இடத்தில் 18 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை தொடர்பில் இத்தகைய ஒரு முடிவை எடுக்கும் உரிமையை அந்தப் பெற்றோருக்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கியிருக்கக் கூடாது என்ற விதத்திலேயே நான் இச் சட்டத்துடன் முரண்படுகிறேன்... சட்டங்கள் காலத்துக்குக் காலம் மாற்றப்பட வேண்டியவை... ஐநூறு வருடங்களுக்கு முந்திய சட்டத்தையே இப்போதும் வைத்துக் கொண்டிருக்க முடியாது...//

நம் நாட்டில் ஜனாதிபதிக்கு மன்னிக்கும் உரிமை கொடுத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள. ஒரு குழந்தையின் இழப்பை அதன் பெற்றோர்தான் உண்மையாக உணர முடியும். இது போன்ற சம்பவத்தில் அதை மன்னிக்கும் அதிகாரம் பெற்றோரிடம் செல்வதுதான் நியாயமானது. இத்தனை வருடங்கள் கடந்தும் அந்த பெண்ணை மன்னிக்காமல் விட்டது அந்த பெற்றோரின் தவறாக பார்க்கிறேன். அந் கொலை செய்திருப்பாள் என்று முழுமையாக நம்பியதால்தான் கடைசி வரை அவர்கள் மன்னிப்புக்கு செவி சாய்க்கவில்லை.

அவரை விசாரிதத வகையிலும் சில விமரிசனங்கள் உள்ளதையும் நான் மறுக்கவில்லை. உண்மை நிகழ்வை இறைவனும் அந்த பெண்ணுமே அறிவர்.

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//உங்களுக்குத்தான் ஆன்மீகம் நல்ல தெரியுதே. அதை மட்டும் எழுத வேண்டியது தானே. ஏன் நமக்கு அரசியல்?//

அன்மீகமும் அரசியலும் கலந்துததானே இஸ்லாம். ஹிந்து மதத்திலும பகவத் கீதையும், மஹாபாரதமும் அரசியல் பேசவில்லையா?

//இந்த தண்டனை பற்றி கருத்து சொல்ல ஏதும் இல்லை. அது அந்த நாட்டின் சட்டம். அவ்ளோதான்//

அதனால்தான் பக்குவப்படாத இது போன்ற சிறுமிகளை வேலைக்கு அனுப்பும் கயவர்களை முதலில சிறையில் அடைக்க வேண்டும் என்கிறேன். வீட்டு வேலைக்கு வருவதையே முடிந்த வரை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

suvanappiriyan said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//Salam Sago excellent article oru sandhegam angu irandhavargalai postmodern seyyamattargala. Narco test undaa //

சந்தேகம் என்று வந்து விட்டால் போஸ்ட் மார்டம் செய்வதற்கு இஸ்லாம் தடை சொல்லவில்லை. இந்த வழக்கில் உண்மையை இறைவனும் அந்த பெண்ணுமே அறிவர்.

அந்த சிறுமையை இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்.

Unknown said...

ரியாஸ்,

///வீட்டு எஜமானியுடையதும் போலிசாரினதும் அடிதாங்காமல்தான் குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொண்டிருக்கிறார் இதுவும் அவர் கடிதத்தில் சொன்னதுதான்..///


இந்தியாவில் அப்பாவி முஸ்லிம்களின்மேல் இந்திய ரவுடிப் பொலிசார் அபாண்டமாகப் பழி சுமத்தி வருடக்கணக்காக சிறையில் வாட்டி எடுக்கிறார்களே, அதைப்போலத்தான் சகோதரி ரிசானா தனது குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொண்டிருக்கிறார், வீடு எஜமானியினதும் பொலிசாரினதும் அடிதாங்காமல்.

suvanappiriyan said...

//இந்தியாவில் அப்பாவி முஸ்லிம்களின்மேல் இந்திய ரவுடிப் பொலிசார் அபாண்டமாகப் பழி சுமத்தி வருடக்கணக்காக சிறையில் வாட்டி எடுக்கிறார்களே, அதைப்போலத்தான் சகோதரி ரிசானா தனது குற்றத்தை பொய்யாக ஒப்புக்கொண்டிருக்கிறார், வீடு எஜமானியினதும் பொலிசாரினதும் அடிதாங்காமல்.//

இது உண்மையானால் மறுமையில் அந்த எஜமானியும் அந்த போலீஸ்காரர்களும் ரிசானாவால் பழி தீர்க்கப்டுவர். இந்த உலகில் ரிசானாவுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது உண்மையானால் இறைவனின் முன்னிலையில் கண்டிப்பாக கிடைத்து விடும்.

Kannadi said...

நண்பர் சுவனப்பிரியன் சலாம்.
விசாரணையில் வெளிப்படைத்தன்மை யற்ற நிலை, அவரை விசாரித்த விதம், ஆதாரங்கள், சான்றுகள்வரை இல்லாமை,
மொழிப்பிரச்சினை..
துன்புறுத்தி அரபி மொழியில் உள்ள பத்திரங்களில், வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியமை,
பால் இறங்காமல் வாந்தி எடுத்ததால் அந்த குழந்தையின் கழுத்தில் கையை வைத்து பாலை இறக்க முயற்சித்திருக்கிறார்.அதானால் கழுத்தில் ஏற்பட்ட கைரேகை. குழந்தையின் பாஸ்ட் மார்டம் ரிபோர்ட் போன்றவற்றை சரி பார்க்காமை, மொழி பெயர்ப்புக்காக ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தரப்பிலிருந்து ஆட்களை கொண்டு செல்லாமை.
அந்த சகொததரியின் தரப்பில் இவ்வளவு பாதகங்கள் இருந்தும் ஏன் நீதிமரால் சந்தேகத்தின் பலனை ( benefit of doubt) அந்த சகோதரிக்கு வழங்க இயலவில்லை. இஸ்லாமிய சட்டவியல் இதுபற்றி என்ன சொல்கிறது.?

suvanappiriyan said...

திரு சாரங்க்!

//களிமன்னிளிறேது மனிதன் பிறந்தான் என்பதற்கு எந்த ஆதாரம் நீங்கள் சமர்பிக்கிரர்கள் ?//

மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.

எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:

1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத் தக்கது.

suvanappiriyan said...

சகோ கண்ணாடி!

//பால் இறங்காமல் வாந்தி எடுத்ததால் அந்த குழந்தையின் கழுத்தில் கையை வைத்து பாலை இறக்க முயற்சித்திருக்கிறார்.அதானால் கழுத்தில் ஏற்பட்ட கைரேகை. குழந்தையின் பாஸ்ட் மார்டம் ரிபோர்ட் போன்றவற்றை சரி பார்க்காமை, மொழி பெயர்ப்புக்காக ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா தரப்பிலிருந்து ஆட்களை கொண்டு செல்லாமை.//

இது கொலையா அல்லது தற்செயலான இறப்பா என்பதை அந்த பெண்ணும் இறைவனுமே அறிந்தவர்கள். வேறு சாட்சிகள் கிடையாது. இந்த நிலையில் அந்த பெண்ணை மன்னிக்கும் அதிகாரம் அந்த குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அவர்கள் மன்னிக்க தயாராகவில்லை என்றபோது மன்னரோ சவுதி அரசாங்கமோ எதுவம் செய்ய இயலாமு. மன்னித்து அந்த பெண்ணை விடுதலை செய்திருந்தால் பலராலும் அந்த பெற்றோர் பாராட்டப்பட்டடிருப்பர். ஆனால் அந்த பெற்றோருக்கு கல் மனது. என்ன செய்ய? மனிதர்களில் பல நிறங்கள். இதில் நாம் ஒன்றும் செய்ய இயலாது.

இஸ்லாமிய சட்டங்கள் சரியாகவே உள்ளன. அதை நடைமுறைபடுத்தியதில்தான் சிக்கலே. அந்த பெண் நிரபராதியானால் இதற்கு காரணமான அனைவருமே மறுமையில் இறைவனால் தண்டிக்கப்படுவர். இதுதான் இஸ்லாம் கூறும் கடைசி வழி.

Anonymous said...

கருணையின் தூது நம் வாசல் வரை வந்திருந்தால் நான் ஏன் தூது பிறந்த மண்ணிலேயே தூக்கு மேடை வரை செல்ல வேண்டும்!

எனக்காக வாடும் அன்பின் உடன் பிறப்புக்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாது{ஹ,

அல்லாஹ்வுடைய நாட்டப் படி நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பலநூறு சமூக அநீதிகளுக்கு ஆட்படும் என்போன்ற ஆயிரமாயிரம் சகோதரிகளில் ஒருத்தியாக நானும் அறியாப் பருவத்தில் கடல் கடந்து பிழைப்புக்காய் புறப்பட்டு வந்தேன்.

எனது தந்தை காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு வந்து விற்று எங்களை வாழ்விக்க நடாத்திய போராட்டம். பசியால் வாடும் தம்பி தங்கைகளின் அவலம் எங்களை எல்லாம் படிப்பித்து ஆளாக்க வேண்டும் என்ற உம்மாவின் ஏக்கம். இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவாக என்னையும் வெளி நாட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று நான் தான் ஒற்றைக் காலில் நின்று வெளிநாடு வந்தேன்.

வயது குறைந்த என்னை ஏன்? எப்படி? யார்? வெளி நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் என்றெல்லாம் ஆராய்வதை விட எனது மரணம் உரத்துச் சொல்லும் செய்தியை உள்வாங்கி இன்னும் பல நூறு ரிசானாக்கள் உருவாகுவதை தடுத்து நிறுத்துங்கள்.

எனது தாய் தந்தையறை நீங்கள் குறை சொல்லாதீர்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள், அதேவேளை அவர்களைப் போல் அநாதரவான நிலையில் உள்ள பல நூறு தாய் தந்தையர்களுக்கு நீங்கள் கை கொடுத்து உதவுங்கள்.

முஸ்லிம் பெண்கள் மஹ்ரம் இல்லது வெளிநாடு செல்லக் கூடாது என்று என் போன்ற சகோதரிகளுக்கு நல்லுபதேசம் செய்ய பலநூறு அறிஞர் பெருமக்கள் இருந்தார்கள். அமைப்புக்கள் இருந்தன. அனால் ஆண்கள் பெண்களை « கவ்வாமூன் » களாக இருந்து எவ்வாறு வாழ வைத்திருக்க வேண்டும் என்று உரத்துச் சொல்லவும் அமுல் படுத்தவும் அவர்கள் முன் வந்திருந்தால் திரைமறைவில் பல ஆயிரம் சமூக அநீதிகளுக்கு என் போன்றவர்கள் அட்பட்டிருக்க மாட்டார்கள்.

மனித குலத்துக்கே கருணையின் வடிவமாக வந்த ரஸ_லுல்லாஹ் தூதை சுமந்து அதற்காக உழைக்கும் நல்லவர்கள் எம் போன்ற ஏழைகளின் வாசலுக்கு கருணையின் தூதை சுமந்து வந்திருந்தால் தூது பிறந்த மண்ணிலேயே நான் தூக்குக் கயிறை முத்தமிட்டிருப்பேனா!

இஸ்லாத்தின் தூதை பகுதி பகுதியாக அறிமுகப்படுத்தும் நல்லவர்கள் எங்கள் போன்ற ஏழை எளியவர் வாசலுக்கு அதனை ஏன் முழுமையாக கொண்டு வரவில்லை.

எனக்காக கவலைப் படுபவர்களுக்கு எனது விடுதலைக்காக உழைத்தவர்களைப் பார்த்து ‘நீங்கள் ஏன் இஸ்லாமிய ஷரீஅத்து சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றீர்கள்’ என்றெல்லாம் கேட்டது எனது காதுகளில் விழுந்த போது ஷரீஅத் நீதிமன்றில் எனது பக்க நியாயங்களை முவைத்து எனக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்த பாரிய நிதியுதவி தேவைப்பட்ட போது ,அதற்கான சட்ட ஏற்பாடுகளும், நிதி ஒதுக்கீடுகளும் இல்லையென தெரிவிக்கப்பட்டப் போது இந்த ஷரீஅத்தின் வழி காட்டல்கள் தெரிந்த சிலராவது குரல் கொடுக்காமை என் போன்ற நாதியற்றவர்களின் துரதிஷ்டமே.

எனது உண்மையான வயதை நிரூபிக்கக் கூடிய எந்த ஆவணமும் ஷரீஅத் நீதிமன்றம் முன் கடைசி நிமிடம் வரை எனது கடவுச்சீட்டும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் போலியானவை என்பதை நிரூபிக்கும் சட்ட வலுவுள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப் படவில்லை.

அடிக்கடி எனது பெயரால் சவாரி செய்தவர்களால் முன்வைக்கப் படவில்லையே. அந்நிய நாட்டில் அபலைப் பெண் நான் ஆபத்தில் மாட்டியிருக்க எனக்காக கைகொடுக்க ஒரு முஹ்தசம் பில்லாஹ் கூட இருக்க வில்லையே. இருந்திருந்தால் நீங்கள் சொல்லும் அதே ஷரீஅத் சட்டப் படி நான் விடுதலை ஆயிருப்பேனே!

-மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ்

Anonymous said...

அரபு மொழி தெரியாத என்னை தமிழ் மொழி நன்கு தெரியாத மலையாளி மொழிபெயர்ப்பாளர் பொலிசாரினதும் எஜமாட்டியினதும் அடி உதைகளுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பொழுது, எனக்காக வாதிட குரல் கொடுக்க நன்கு இஸ்லாமிய ஷரீஆ கற்ற ஒருசில நல்லவர்களாவது ஏன் முன்வரவில்லை.

ஏனென்றால் சுகயீன்முற்றிகும் வாப்பவிற்கும் வாடி துவண்டு போயிருக்கும் உம்மாவுக்கும் ஷரீஅத் சட்டம் பேசுமளவு கல்வியோ, அல்லது கற்றவர்களின் சேவைகளை காசு கொடுத்துப் பெரும் தகுதியோ செல்வாக்கோ இல்லாமை தானே?

எனக்காக வாதாட ஒரு சட்டத்தரணியை அமர்த்த உங்களால் முடியாமல் போயிருக்கலாம் அதற்காக நான் கவலைப் படவில்லை. அனால் இந்த நிலை இனிவரும் காலங்களில் எவருக்கும் ஏற்படாதிருக்க கடல் கடந்து உழைப்போருக்கான ஒரு சட்ட நிதியத்தையும், சட்ட உதவி பொறிமுறை ஒன்றையும் இனியாவது என் போன்றவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுங்கள்.

இஸ்லாத்தின் நிழலில் பெண்கள் கண்களாக மதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் வழங்கப்படும் அந்தஸ்து இது தான். மஹரம் இன்றி கடல் கடந்தென்ன கதவு கடந்தும் செல்ல வேண்டிய நிலை ஏற்படமாட்டாதென்று உலகிற்கும் நாட்டிற்கும் பறை சாற்றுங்கள். அன்றுதான் இஸ்லாமிய தூது முழுமை பெறும். அழைப்புப் பணி அர்த்தம் பெறும்.

-மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ்

Anonymous said...

நபிலான ஹஜ்ஜுக்காகவும் நபிலான உம்ராவிற்காகவும் பல நூறு இலட்ச்சங்களை வருடா வருடம் செலவிடும் நமது சமூகம், அதற்காக பல இலட்சங்களை அள்ளி வீசி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், உலமாக்கள் எங்கள் தம்பி தங்கையின் கல்விக்காக கை கொடுத்திருந்தால் சிறுமி எனது கரத்தில் குழந்தையொன்று மூச்சுத் திணறி மரணிக்கும் நிலை வந்திருக்குமா?

இன்று நாட்டில் நமது உடன் பிறப்புக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் எனது மையித்து செய்தி வந்து சேருகிறது. சமுதாயம் உள்வீட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், எங்களை நாங்களே ஒழுங்கு படுத்திக் கொள்ளாமல் எவ்வாறு அடுத்த சமூகங்களுக்கு முகம் கொடுப்பது. எனது வாழ்விலும் மரணத்திலும் எதாவது படிப்பினைகள் இருந்தால் அவற்றை தலைமேல் கொண்டு என் போன்ற பலநூறு சிறுவர் சிறுமியரது, ஏழை எழியவரது வாழ்விற்கு வழி சொல்லுங்கள்.

இன்று பேசப்படும் ரிசானா நாபிக்குடைய செய்தியை ஒரு எதேச்சையான நிகழ்வாக பார்க்காதீர்கள். எனது பிறப்புக்கு முன்னரே அதற்கொரு பின்புலம் இருந்துள்ளது. பலநூறு சமூகக் கொடுமைகள் அநீதிகள் இருந்திருக்கின்றன. கசப்பான நீண்ட வராலாறு ஒன்று இருக்கிறது, அந்த இருண்ட வரலாற்றுக்குள் ஆயிரமாயிரம் சகோதரிகளின் வாழ்வு, தாய்மார்களின் சோகக் கதைகள் புதைந்து கிடக்கின்றன.

இந்த கண்ணீர் நிறைந்த வரலாறு இன்று நேற்று எழுதப் பட்டதல்ல. இதை மாற்றி எழுத நமது தேசத்து நல்லவர்களால் இலட்சிய புருஷர்களால் இதுவரை முடியாமல் போய் விட்டது. இந்த மனிதப் பேரவலத்துக்கு இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது என்று துணிந்து சொல்ல நம் முஸ்லிம் சமூகம் அருகதை இழந்து நிற்கிறது.

இந்த நிலை இனியும் தொடருமென்றால் தயவு செய்து எனது சோகக் கதை கேட்டு கண்ணீர் வடிக்காதீர்கள். இது ஒரு திரைக் கதை போல் வந்து போகும் நிகழ்வாக இருந்து விடட்டும்! இல்லை இதய சுத்தியுடன் நீங்கள் என் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தால் உங்கள் உடன் பிறப்பாக கருதியிருந்தால் எனது கதை நீங்கள் படைக்கப் போகும் ஒரு வரலாற்றின் முதல் அத்தியாயமாக இருக்கட்டும்.

இதுவே நான் உங்களிடம் மன்றாட்டமாய் விட்டுச் செல்லும் செய்தியாகும்..!

இவ்வண்ணம்
உங்களை பிரிந்து செல்லும் சகோதரி
ரிஸானா நாபிக்
சவூதி அறேபியா
09.01.2013

-மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ்

T.Thenmathuran said...

///ஆனால் இந்த இடத்தில் 18 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை தொடர்பில் இத்தகைய ஒரு முடிவை எடுக்கும் உரிமையை அந்தப் பெற்றோருக்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கியிருக்கக் கூடாது என்ற விதத்திலேயே நான் இச் சட்டத்துடன் முரண்படுகிறேன்.../// இதன் மூலம் நான் குறிப்பிட விரும்பியது 18 வயதிற்குக் குறைந்த ஒருவர் தவறு செய்யும் போது (அதைத் தெரிந்தே செய்தாலும் கூட) அவரைச் சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அனுமதிப்பது தொடர்பாக.... 18 வயதுக்கு மேற்பட்டவரெனின் பெற்றோரின்/ பாதிக்கப்பட்டவரின் முடிவுக்கே விட்டு விடலாம்.....

சிராஜ் said...

//
முஸ்லிம் பெண்கள் மஹ்ரம் இல்லது வெளிநாடு செல்லக் கூடாது என்று என் போன்ற சகோதரிகளுக்கு நல்லுபதேசம் செய்ய பலநூறு அறிஞர் பெருமக்கள் இருந்தார்கள். அமைப்புக்கள் இருந்தன. அனால் ஆண்கள் பெண்களை « கவ்வாமூன் » களாக இருந்து எவ்வாறு வாழ வைத்திருக்க வேண்டும் என்று உரத்துச் சொல்லவும் அமுல் படுத்தவும் அவர்கள் முன் வந்திருந்தால் திரைமறைவில் பல ஆயிரம் சமூக அநீதிகளுக்கு என் போன்றவர்கள் அட்பட்டிருக்க மாட்டார்கள். //

இந்த வரிகள் ஒவ்வொரு முஸ்லிம் பெயர் தாங்கிகளின் முகத்திலும் செருப்பால் அடிக்கிறது..

கையில் இஸ்லாம் என்னும் மாணிக்கத்தை வைத்துக்கொண்டு பிச்சைக்காரர்கள் போல் பெண்ணிடும் கையேந்தும் பிச்சைக்காரர்களே?? திருந்துங்கள்..அல்லது இந்த சமூகத்தை அழித்துவிட்டு மீண்டும் ஒரு சமூகத்தை இறைவன் கொண்டு வருவான்...

முட்டாப்பையன் said...

காட்டுமிராண்டிகளின்,உச்சகட்ட காட்டுமிராண்டித்தனம் இந்த கொலை.
மார்க்க பந்துக்களே சற்றே சிந்தியுங்கள்.உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த மாதிரி ஆகி இருந்தால் நீங்களே கொன்றுவிடுவீர்கள் இல்ல?


இந்த காட்டுமிரான்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்ததற்கு வெக்கபடுகிறேன்.
உங்கள் so called ___________ இதற்கும் நீதி வழங்குவார்.(இருந்தால்)

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//இந்த வரிகள் ஒவ்வொரு முஸ்லிம் பெயர் தாங்கிகளின் முகத்திலும் செருப்பால் அடிக்கிறது..

கையில் இஸ்லாம் என்னும் மாணிக்கத்தை வைத்துக்கொண்டு பிச்சைக்காரர்கள் போல் பெண்ணிடும் கையேந்தும் பிச்சைக்காரர்களே?? திருந்துங்கள்..அல்லது இந்த சமூகத்தை அழித்துவிட்டு மீண்டும் ஒரு சமூகத்தை இறைவன் கொண்டு வருவான்...//

சரியாக சொன்னீர்கள். திருந்த வேண்டியவர்கள் திருந்தவில்லை என்றால் இறைவனின் கோபப் பார்வையை எதிர்பார்த்திருங்கள்.

suvanappiriyan said...

சகோ தேன் மதுரன்!

//இதன் மூலம் நான் குறிப்பிட விரும்பியது 18 வயதிற்குக் குறைந்த ஒருவர் தவறு செய்யும் போது (அதைத் தெரிந்தே செய்தாலும் கூட) அவரைச் சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அனுமதிப்பது தொடர்பாக.... 18 வயதுக்கு மேற்பட்டவரெனின் பெற்றோரின்/ பாதிக்கப்பட்டவரின் முடிவுக்கே விட்டு விடலாம்..... //

நீங்கள் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து ஏனோ சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். 18 வயதுக்குட்பட்டவர்கள் தெரிந்தே தவறு செய்தாலும் மன்னிக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்த வரையறையை கொண்டு வந்தது யார்? இலஙகையில் 15 வயது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக ஒரு வீட்டிலிருந்து போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் அவர்கள். இவர்களுக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்தது. இவர்களைப் போன்றவர்களின் எதிர்காலம் மிக கொடூரமாக இருக்கும். சமூகத்துக்கும் கேடு. பெற்றோர்களுக்கும் பிரச்னை இவர்களால்.

சிறு தவறுகளை நீங்கள் சொல்வது போல் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைத்து சரியாக்கலாம். கொலை அளவுக்கு செல்லும் பெரும் தவறுகளை இரண்டு பேரின் தலையை எடுத்தால் அந்த சமூகம் அடுத்த நாளே அமைதியை நோக்கி செல்லும். இதற்கு பாரபட்சமற்ற அரசின் செயல்பாடும் முக்கியம்.

அ. ஹாஜாமைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ சுவனப்பிரியன் அவர்களுக்கு,
தங்களது பதிவுகளை மிக நீண்ட காலமாக படித்து வரும் வாசகன் என்ற முறையில் எனது முதல் பின்னூட்டத்தை பதிவு செய்கிறேன்.

ரிசானா நபீக் குறித்த உண்மை விடயம் என்ன என்பது பற்றிய சரியான தெளிவில்லை, உண்மையில் அவர் கொலை செய்தாரா? அல்லது குழந்தை பராமரிப்பில் போதிய அனுபவமின்றி தவறுதலாக நடந்த விபத்தா என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

மரணம் நிகழ்ந்த அந்த நேரத்தில் கோபமும், பழியுணர்ச்சியும் ஏற்படுவது மனித இயல்பே, ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னும் அவர்களது பிடிவாதம் குறையாமல், மன்னர் அப்துல்லாஹ்வின் கோரிக்கையைக் கூட அந்த பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பது பெரும் வியப்பாக உள்ளது.

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். (அல் குர்ஆன்: 5:45 )

மேற்கண்ட வசனத்திற்கேற்ப அந்த பெற்றோர்கள் பழிக்கு பழி என்பதை தவிர்த்து மன்னித்திருந்தால் உலகில் உள்ள எத்தனையோ நல்ல உள்ளங்கள் இவர்களின் பொறுமைக்காக துஆ செய்திருப்பார்கள், மறுமையில் இறைவனின் மன்னிப்பிற்கும் கருனைக்கும் உரியவர்களாகியிருப்பார்கள், ஆனால் இந்த இஸ்லாமிய பெற்றோர்கள் இவ் உலக வாழ்க்கையே நிரந்தரம் என நினைத்துவிட்டார்களோ.!

சகோதரி ரிசானா நபீக் செய்யாத குற்றத்திற்காக மரணத்தை தழுவியிருந்தால்... யா அல்லாஹ் அவரது மறுமை வாழ்க்கையை நன்மையானதாக ஆக்கிவைப்பாயாக.

என்றும் அன்புடன்,
அ. ஹாஜாமைதீன்.
11.01.2013

suvanappiriyan said...

சகோ முட்டாபையன்!

//காட்டுமிராண்டிகளின்,உச்சகட்ட காட்டுமிராண்டித்தனம் இந்த கொலை.
மார்க்க பந்துக்களே சற்றே சிந்தியுங்கள்.உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த மாதிரி ஆகி இருந்தால் நீங்களே கொன்றுவிடுவீர்கள் இல்ல?//

எங்கள் வீட்டுப் பெண் இவ்வாறு ஒரு குழந்தையை கொன்றிருந்தால் அதற்கான இஸ்லாமிய தண்டனையை நான் வாங்கிக் கொடுத்திருப்பேன். அந்த குழந்தையின் பெற்றோர் மன்னித்திருந்தால் பலராலும் பாராட்டப்பட்டிருப்பார். அந்த பெண் அந்த குழந்தையை கொன்றிருக்கவில்லை என்றால் அதற்கு காரணமான அனைவரும் பிற்காலங்களில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள். எவரையும இறைவன் விடப் போவதில்லை.

//இந்த காட்டுமிரான்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்ததற்கு வெக்கபடுகிறேன்.
உங்கள் so called ___________ இதற்கும் நீதி வழங்குவார்.(இருந்தால்)//

கண்டிப்பாக....

அதே போல் இந்தியாவில் தினமும் போலி எண்கவுண்டரால் சுட்டுக் கொல்லும் காவல் துறைகள், மற்றும் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையையும் வெளியே இழுத்து போட்டு கொன்ற குஜராத் மாநிலம் நம் நாட்டில் உள்ளதை நினைத்து அந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே என்று இன்றும் வெட்கப்படுகிறேன்.

Anonymous said...

பொதுவாக சவூதி அரேபியாவை பொறுத்த வரை கொலைக்கு கொலை என்ற சட்டத்தை கடுமையாக கொண்ட நாடு, நாம் அந்த நாட்டின் உள்ளே நுழைய வேண்டுமென்றால் அந்த நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தான் உள்ளே நுழைய வேண்டும்,

சட்டம் கடுமையாக இருக்கிறது என்று அஞ்சுவோர் அந்த நாட்டின் உள்ளே நுழைய வேண்டிய அவசியமே இல்லை, மேலும் சவூதியில் நடைபெறும் குற்றங்களுக்கு 3 மாதத்திலேயே மரண தண்டனையை வழங்கிவிடுவார்கள்,

ஆனால் இந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகாலம் தீரவிசாரிக்கப்பட்டு, கொலையுண்ட பெற்றோரின் மனதிலும் எந்தவித மனமாற்றமும் ஏற்படவில்லை என்பதை தீர ஆராய்ந்த பிறகே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது

Rasmy Rasik

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//மேற்கண்ட வசனத்திற்கேற்ப அந்த பெற்றோர்கள் பழிக்கு பழி என்பதை தவிர்த்து மன்னித்திருந்தால் உலகில் உள்ள எத்தனையோ நல்ல உள்ளங்கள் இவர்களின் பொறுமைக்காக துஆ செய்திருப்பார்கள், மறுமையில் இறைவனின் மன்னிப்பிற்கும் கருனைக்கும் உரியவர்களாகியிருப்பார்கள், ஆனால் இந்த இஸ்லாமிய பெற்றோர்கள் இவ் உலக வாழ்க்கையே நிரந்தரம் என நினைத்துவிட்டார்களோ.!

சகோதரி ரிசானா நபீக் செய்யாத குற்றத்திற்காக மரணத்தை தழுவியிருந்தால்... யா அல்லாஹ் அவரது மறுமை வாழ்க்கையை நன்மையானதாக ஆக்கிவைப்பாயாக.//

ஆமோதிக்கிறேன் சகோதரரே! அந்த குழந்தையின் பெற்றோர் மன்னர் சொல்லியும் மசியாத கல் நெஞ்சக் காரர்களாக இருந்துள்ளனர். அந்த பெண் குற்றம் ஏதும் செய்யாதவராக இருந்திருந்தால் இறைவனிடம் அதற்குரிய வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

Unknown said...

Brother Suvanappiriyan,

///இது கொலையா அல்லது தற்செயலான இறப்பா என்பதை அந்த பெண்ணும் இறைவனுமே அறிந்தவர்கள். வேறு சாட்சிகள் கிடையாது///

சாட்சிகளே கிடையாது என்னும்போது, எப்படி அந்த அபலையை 7 வருடமாக சிறையிலும் பின்னாளில் சிரச்சேதமும்.

ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கிய நீதிமான், சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய கங்காரு கோர்ட் நீதிமானாக இருப்பார்போல.

kannadi said...

\\இதுதான் இஸ்லாம் கூறும் கடைசி வழி//.
நீங்கள் சொல்வது முஸ்லிம்களிடத்திலும் மாற்றுமத நண்பர்களிடத்திலும் எந்த அளவுக்கு விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பது தெரியவில்லை. விபசார வழக்கில் நான்கு சாட்சிகளுக்கும் குறைவாக கொண்டுவருபவர்களுக்கே தண்டனை எனும்போது, முழுதும் சந்தேகத்திற்கிடமான ஒரு கொலை வழக்கில் அந்த பெண்ணை மன்னிக்கும் அதிகாரம் அந்த குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அவர்கள் மன்னிக்க தயாராகவில்லை என்றபோது மன்னரோ சவுதி அரசாங்கமோ எதுவம் செய்ய இயலாது என்று பூசி மெழுகுவது ஏற்புடயதாக தெரியவில்லை.பொறுப்பற்ற சவுதி அரசாங்கம் புனிதமிக்க இஸ்லாமிய சட்டங்களின் நம்பகத்தன்மையை நகைப்புக்கிடமாக்கி உள்ளதாகவே உணர்கிறோம். ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது மூச்சு திணறி இறந்தாலும் கூட கொலைகுற்றமாகுமா? நடந்தது கொலைதானா என்பதை 100% சந்தேகத்திற்கிடமின்றி உறுதி படுத்தாத நிலையில் மரண தண்டனை தந்தது ஷரிஆ சட்டவியலில் எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. மற்ற எந்த சட்டங்களைவிடவும் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படை தன்மையான பாரபட்சமற்ற நீதியை நிலைநாட்டுதல் என்பதற்கு முற்றிலும் மாற்றமாகும். நடந்தது 100% கொலையாக இருக்கும் பட்சத்திலேயே பெற்றோர்களுக்கு மன்னிபதற்குரிய அதிகாரம் இருக்க முடியும். அதைவிடுத்து உலகிலேய நாங்கள்தான் 100% இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துகிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் சவுதி அரசும் நீதிமண்றமும் நடந்து கொண்டவிதம் நீதியையும் தர்மத்தையும் நிலைநாட்ட வந்த ஷரீஆ சட்டத்தின் பேரால் அநீதிக்கு துணை போன முன்மாதிரி வெட்கக்கேடானது.

Unknown said...

///அரபு மொழி தெரியாத என்னை தமிழ் மொழி நன்கு தெரியாத மலையாளி மொழிபெயர்ப்பாளர் பொலிசாரினதும் எஜமாட்டியினதும் அடி உதைகளுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பொழுது, எனக்காக வாதிட குரல் கொடுக்க நன்கு இஸ்லாமிய ஷரீஆ கற்ற ஒருசில நல்லவர்களாவது ஏன் முன்வரவில்லை.///


இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை முறியடிக்க இஸ்லாமிய ஷரியாவில் தேர்ச்சி பெற்றவர்களால் அரபு நாட்டுத் தலைவர்களை சிறப்பாக அணுக முடிந்திருக்கிறது.

சிறையிலிருக்கும் ரிசானாவை யாருக்கும் நினைவில் இல்லை. எப்போதோ மறக்கடிக்கப்பட்டிருக்கிறார். யூசுப் நபி அவர்களை, அவர்களின் சிறை நண்பர்கள் மறந்ததுபோல்.

ரிசானாவுக்கும் 7 வருட சிறை. யூசுப் (அலை) அவர்களுக்கும் 7 வருட சிறை.

யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று ஆயத்கள் இறங்கியபோது, நபி (ஸல்) அவர்கள், யூசுப் நபி அவர்கள் பட்ட கஷ்டங்களை நினைத்து அவர்கள் அதிர்ந்தேவிட்டார்கள்.

சகோதரி ரிஸானா சிறையில் பட்ட கஷ்டங்கள், உள்ளக் குமுறல்கள், மனவேதனைகள் இனி இந்த உலகத்தில் தெரிய வாய்ப்பில்லை.
Unknown said...

கண்ணாடி அவர்களே,

///நீங்கள் சொல்வது முஸ்லிம்களிடத்திலும் மாற்றுமத நண்பர்களிடத்திலும் எந்த அளவுக்கு விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பது தெரியவில்லை. விபசார வழக்கில் நான்கு சாட்சிகளுக்கும் குறைவாக கொண்டுவருபவர்களுக்கே தண்டனை எனும்போது, முழுதும் சந்தேகத்திற்கிடமான ஒரு கொலை வழக்கில் அந்த பெண்ணை மன்னிக்கும் அதிகாரம் அந்த குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அவர்கள் மன்னிக்க தயாராகவில்லை என்றபோது மன்னரோ சவுதி அரசாங்கமோ எதுவம் செய்ய இயலாது என்று பூசி மெழுகுவது ஏற்புடயதாக தெரியவில்லை.பொறுப்பற்ற சவுதி அரசாங்கம் புனிதமிக்க இஸ்லாமிய சட்டங்களின் நம்பகத்தன்மையை நகைப்புக்கிடமாக்கி உள்ளதாகவே உணர்கிறோம். ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது மூச்சு திணறி இறந்தாலும் கூட கொலைகுற்றமாகுமா? நடந்தது கொலைதானா என்பதை 100% சந்தேகத்திற்கிடமின்றி உறுதி படுத்தாத நிலையில் மரண தண்டனை தந்தது ஷரிஆ சட்டவியலில் எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. மற்ற எந்த சட்டங்களைவிடவும் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படை தன்மையான பாரபட்சமற்ற நீதியை நிலைநாட்டுதல் என்பதற்கு முற்றிலும் மாற்றமாகும். நடந்தது 100% கொலையாக இருக்கும் பட்சத்திலேயே பெற்றோர்களுக்கு மன்னிபதற்குரிய அதிகாரம் இருக்க முடியும். அதைவிடுத்து உலகிலேய நாங்கள்தான் 100% இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துகிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் சவுதி அரசும் நீதிமண்றமும் நடந்து கொண்டவிதம் நீதியையும் தர்மத்தையும் நிலைநாட்ட வந்த ஷரீஆ சட்டத்தின் பேரால் அநீதிக்கு துணை போன முன்மாதிரி வெட்கக்கேடானது.///


உங்கள் பின்னூட்டத்தை முழுவதுமாக ஆமோதிக்கிறேன்.

மரண தண்டனை விதிப்பதென்பதை சவூதி நீதிமன்றங்கள் பாரதூரமாகக் கருதாமல், மிக இலகுவாகத் தீர்ப்பளிக்கின்றனர்.

நமது ஆரம்ப கால மனிதர்கள், இமாம்களின் நடைமுறையில் இந்த விடயங்கள் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டே தீர்ப்புக்கள் வழங்கப்பட்டு வந்தன.

தீர்ப்புக்கள் வழங்குவதில், வெளிப்படையற்ற தன்மையினால் வரும் விளைவுகளை நமது சமூகம், இஸ்லாம் அப்படியல்ல, ஷரியா அப்படியல்ல என்று தூக்கிப் பிடித்து, அக்கு வேறு ஆணி வேறாக நிறுவ வேண்டி இருக்கிறது.

Anonymous said...

முடிவாக என்ன தான் சொல்ல வருகின்றீர்கள் ... !

றிசானாவின் மரண தண்டனை சரி/ தவறு நறுக்காக சொல்லி விடலாமே.. ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் .. !

ஷரியாவின் படி றிசானாவின் மரணம் மிகச் சரி, ஆனால் இதே வேற்று சட்டத்தின் படி இப் பெண் இன்று மரணித்து இருந்தால் உலகமே ரணகளமாகி இருக்கும் அப்படித் தானே ... !

சுருக்கமாகச் சொன்னால், மனிதத்தின் முன் எச்சட்டமும் உயர்ந்தது அல்ல.. இங்கு சட்டம் காக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் மனிதம் செத்துவிட்டது. அப் பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .. போன உயிர் திரும்பி வரவாப் போகின்றது ... ! உங்களைப் போன்றோரின் பூசி மெழுகல் தொடரட்டும் ... !

சற்றே சிரியாவில் செத்து மடியும் லட்சக் கணக்கான மக்களுக்காகவது உங்களின் அல்லாவை வரச் சொல்லுங்கள் .. அல்லது உங்களது சஊதி மன்னரையாவது கேட்டுக் கொள்ளுங்கள்.

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரிசானா நபீக் விடயத்தில் நாம் ஷரியத்தை குறைக் கூறவில்லை. ஆனால் அதனை கையாளப்பட்ட விதத்தினைதான் நாம் குறை கூரை கூறுகிறோம்.
அவர் பக்க நியாயத்தை வைத்து போராட அவருக்கு எந்த ஒரு சட்ட உதவியும் கிடைக்கவில்லை . மேலும் அது கொலைதான் என்பதற்கும் எந்த சாட்சியும் இல்லை. மேலும் அவர் கொடுத்ததாக கூறப்படும் வாக்குமூலம் சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளது. நிச்சயமாக ரிசானா நபீக் விஷயத்தில் ஷரியாவின் அடிப்படைகள் சரியாக பேணப்படவில்லை. இது சவூதி அரசின் தீர்ப்பே தவிர சரியா வழியில் அமைந்த தீர்ப்பே அல்ல.

kannadi said...

@ இக்பால் செல்வன்.
\\முடிவாக என்ன தான் சொல்ல வருகின்றீர்கள்... !
றிசானாவின் மரண தண்டனை சரி/ தவறு நறுக்காக சொல்லி விடலாமே.. ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் .. !
ஷரியாவின் படி றிசானாவின் மரணம் மிகச் சரி,\\

அது எப்படி செல்வன் உங்களாலும் உங்கள் நண்பர்களாலும் இஸ்லாமியர்கள் சம்பந்தமான விடயங்களில் மாத்திரம் புரிந்தும் புரியாமல், தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல் இப்படி விதண்டாவாதம் செய்ய முடிகிறது?

Anonymous said...

ada mutta payagala ungalukulam sonthama mandaila ethumey kedaiyatha kaattuvasi payagalada

Unknown said...

அன்புள்ள இக்பால் செல்வன் அவர்களே,

மேலே சகோதரர் அதிரை இக்பால் எழுதிய பின்னூட்டம்தான் உண்மையில் நடந்த சாராம்சம்.

எதையும் பூசி மெழுகுவதால், எங்களுக்கு சவூதிக்காரன் பணத்தைக் கொட்டப் போகிறானா?

அந்த அபலைச் சகோதரிக்கு நடந்ததை உங்களுடன் சேர்ந்து அனுதாபப்படத்தான் முடிகிறது.

வேண்டுமானால், இலங்கை முஸ்லிம்களின் (நான் உள்பட) கையாலாகாத தனம், என்று குற்றம் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Unknown said...

அன்புள்ள இக்பால் செல்வன் அவர்களே,

மேலே சகோதரர் அதிரை இக்பால் எழுதிய பின்னூட்டம்தான் உண்மையில் நடந்த சாராம்சம்.

எதையும் பூசி மெழுகுவதால், எங்களுக்கு சவூதிக்காரன் பணத்தைக் கொட்டப் போகிறானா?

அந்த அபலைச் சகோதரிக்கு நடந்ததை உங்களுடன் சேர்ந்து அனுதாபப்படத்தான் முடிகிறது.

வேண்டுமானால், இலங்கை முஸ்லிம்களின் (நான் உள்பட) கையாலாகாத தனம், என்று குற்றம் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

suvanappiriyan said...

//ada mutta payagala ungalukulam sonthama mandaila ethumey kedaiyatha kaattuvasi payagalada//

குஜராத் கலவரம், மும்பை என்கவுண்டர், மாலேகான் குண்டு வெடிப்பு இதப்பத்தி சொல்றீங்களா....சரிதான்.

suvanappiriyan said...

அன்பு சகோதரர்களே!

ஒரு பதிவை எழுதி அதில் எனது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது இந்த பதிவுக்குத்தான். அந்த அளவு அந்த சகோதரியின் மீது எனக்கு இரக்கம் வந்தது. ஆனால் ஒரு நாட்டின் சட்டத்தின் முன் நமது குரல்களோ நமது எண்ணங்களோ சபை ஏறப் போவதில்லை.

கொலைக் குற்றங்களுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாளில தீரப்பு வழங்கி விடும் சவுதி ஷரீயா கோர்ட் இந்த பெண்ணுக்காக 7 வருடம் வரை இழுத்தடித்தது. எப்படியாவது இந்த பெண்ணைக் காப்பாற்றி விடலாம் என்று தான் அமைச்சர்கள் முதற்கொண்டு மன்னரும் விரும்பினார். எனவே தான் தனிப்பட்ட முறையில் மன்னரும் அந்த பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

அந்த பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தை பிறந்து அதற்கு சுகவீனம் அதிகமானது. அந்த செலவுகளை முழுவதும் அரசே எடுத்து வெளி நாடுகளில் சிகிச்சை அளிப்பதாகவும் சொல்லிப் பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த பெற்றோர்களோ எவர பேச்சையும் கேட்க தயாரில்லை.

கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்பந்தப்பட்டோர் மன்னித்தால் அவர்களுக்கு அதற்காக நன்மையை எழுதுவதாக இறைவன் கூறுகிறான். அந்த நன்மையை பெற்றுக் கொள்ள இந்த பெற்றோர் விரும்பவில்லை. எனவே நடந்தது நடந்து விட்டது. இனிமேலாவது பெண்களை சிறுமிகளை இது போன்ற வீட்டு வேலைகளுக்கு தனியாக அனுப்ப வேண்டாம். அந்த மக்களின் வறுமையை போக்க நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.

இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.

suvanappiriyan said...

சகோ இக்பால் செல்வன்!

//சற்றே சிரியாவில் செத்து மடியும் லட்சக் கணக்கான மக்களுக்காகவது உங்களின் அல்லாவை வரச் சொல்லுங்கள் .. அல்லது உங்களது சஊதி மன்னரையாவது கேட்டுக் கொள்ளுங்கள். //

சிரியாவில் நடப்பது உள் நாட்டு கலவரம். அதை அந்த மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இதில் சவுதி மன்னர் ஏன் தலையிட வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.?

naadodi said...

http://naadodimanithan.blogspot.com/

சிலுக்குவார்பேட்டை சிங்காரி said...

ரிசானாவுக்கு அழுவது இருக்கட்டும்.

4 மாதக் கைக்குழந்தையை ஒரு 17 வயது(தாய்மை என்றாலோ, குழந்தை வளர்ப்பு என்றாலோ என்னவென்று அறியாத) சிறுமியிடம் ஒப்படைக்கும் அரபிகளின் முட்டாள்தனத்தை, விட்டேத்தியான குணத்தை யாரும் கண்டிக்காமல் இருப்பதை என்னவென்பது?

Unknown said...

பாலி தீவில் 2002 இல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை என் அறிவிக்கப்பட்ட போது அவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்...ஆம் ,உயிர்களை கொல்ல வேண்டிய அவனின் திருப்பணி இனிதே அவன் உயிருடன் முடிவுக்கு வர போவதை இட்டு அவன் உவகை அடைந்தான்..அப்போதும் கூட அவனை இன்பம் அடைய விடாமல் குண்டு வெடிப்பில் இறந்த ஒருவரின் உறவினர்களே அவனை காப்பாற்ற போராடினர்...அவனை தூக்கில் இட விடாமல் காப்பாற்ற உழைத்தனர்...

ஆனால் அரபிய மக்களோ இரத்தத்துக்கு இரத்தம் என மட்டுமே அலைகின்றனர்...இந்த வழக்கை நோக்கும் எவருமே அறிவர் ரிசானா வேண்டும் என்றே கொலை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை ...இதனை அந்த பெற்றோரும் அறிவர்...இதுவே வெறித்தனமான கற்பழிப்பு ,கொலை குற்றம் எனில் அப்பெற்றோரே தண்டனை அளித்திருக்கலாம் ..மன்னிக்கும் மனப்பாங்கு இல்லாமை மனிதம் செத்து கொண்டு இருப்பதையே காட்டுகிறது...... கொன்றவளை குத்தம் சொல்வதையும் ,பெண்களின் ஆடைகளையும் குற்றம் சொல்லும் கூட்டம் ....17 வயது சிறுமி இடம் பச்ச்சிளம் குழந்தையை தந்து விட்டு ஊர் சுற்ற போனதன் நியாயத்தை சற்று விளக்கினால் நன்று

Anonymous said...

சவுதி உயர் ஸ்தானிகர் ரிசானாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் உதவி அளித்துள்ளது...சவுதி அரசால் மரண தண்டனை நிறைவேற்ற பட்ட அனைவருக்கும் இவ்வாறு சவுதி உதவி அளிக்குமா ???? தன் பக்கம் தவறு இருப்பதால் தானே அதனை மூடி மறைக்க 10 லட்சம் லஞ்சம் வழங்கி உள்ளது...

இரத்த பணம் வழங்க தாம் தயாராக இருந்த போதும் அந்த தாய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறி சவுதி தப்பிக்க முற்படுகிறது...அவருக்கு தேவையான இரத்த பணத்தை இலங்கையர் நாமே வழங்கி இருப்போம்...சேர்த்து வைத்த அந்த இரத்த பணத்தில் சவுதி அரசு மக்களக்கு மனிதம் என்றால் என்ன...மன்னிப்பு என்றால் என்ன ....வகுப்பு எடுத்தால் தேவலை

by மண்டகலப்பை

Anisha Yunus said...

ஸலாம் சகோ.

ரிஸானாவின் இறுதி நிமிடங்களில் கூடவே இருந்த, தம்மையே ஆறுதல் செய்ய இயல நேரத்திலும், சகோதரிக்கு ஆறுதல் தர முயன்ற மௌலவி.மக்தூம் அவர்கள் நேரடியாகக் கண்டதையும், கேட்டதையும் மடலாக எழுதியுள்ளார். இந்தப் பதிவின் முடிவாக அதை சமர்ப்பிக்கிறேன்.

http://mydeartamilnadu.blogspot.com/2013/01/blog-post_15.html

Sathish Murugan . said...

//ரிசானாவிடம் தவறு இல்லை என்றால் இதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள்.// இல்லாத ஒருவர் தரும் தண்டனை தருவாரா? சரி, அது வரை இந்த உலக இன்பங்களை அந்த கயவர்கள் அனுபவிக்கலாம்? த்தூ... நீர் இறந்து போகலாமே, அவர் உங்களுக்கு சுவர்க்கம் தருவாரல்லவா?

Anonymous said...

படித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஏழை வாட்ச்மேனின் மகள் வினோதினியின் முகத்தை அமிலம் ஊற்றிச் சிதைத்து, கண்களைப் பறித்து, அவளை நிர்மூலமாக்கிய காமுகனையும் அரசாங்கம் நினைத்தால் மன்னித்து விடலாம் என்ற இந்தியச் சட்டம் சவூதியில் இல்லை தான்.

Tamil said...

/இஸ்லாமிய சட்டங்கள் சரியாகவே உள்ளன. அதை நடைமுறைபடுத்தியதில்தான் சிக்கலே./

Nadamurai paduthinal sikkalthan