Followers

Monday, October 23, 2023

குடி குடியைக் கெடுக்கும்... -Cartoon

 குடி குடியைக் கெடுக்கும்...




 

'ஏய்.... குடிக்காதே...  குடிக்காதேன்னு எனக்கு அட்வைஸ் பண்றீயே... நான் குடிக்க குடுக்குற காசுலதான் உனக்கு மாசா மாசம் 1000 ரூபாய் ஸ்டாலின் ஐயா தர்றாரு... அத மறந்துடாதே'

 

https://www.youtube.com/shorts/uOp8TvjbYEY

 

குன்றத்தூரில் வாழும் கெளரிக்கு, மூன்று பெண் குழந்தைகள். வீட்டு வேலைகள் செய்து மகள்களை வளர்த்தெடுத்தார். 20 வயதான மூத்த மகள் ராஜேஸ்வரியை, மதுரவாயலைச் சேர்ந்த 26 வயதான பாஸ்கருக்கு மணமுடித்தார். மணமுடிக்கும் தருவாயிலேயே பாஸ்கருக்குத் தீராதக் குடிப்பழக்கம் இருந்தது.

20
வயதுடைய ஓர் இளம்பெண்ணுக்கு, திருமணம் பற்றி என்னென்னவோ கனவுகள் இருக்கும். ஆனால், தினசரி அடிகளும் உதைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், வசவுகளுமே வாழ்வனுபவமாகக் கிடைத்தன. `குடிக்கிறவன் அடிக்கத்தான் செய்வான். பொம்பள அதை எல்லாம் தாங்கிக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தணும்’ என்ற அறிவுரைகளுக்கிடையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. பகலும் இரவுமாகக் குடித்துக்கிடந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், பிள்ளைகளோடு அம்மா வீட்டுக்கு வருவதும், பிறகு மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. திருமணம் முடிந்த நான்காவது ஆண்டில் அதாவது, கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு, கொடுமையான தாக்குதலைத் தாங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார் ராஜேஸ்வரி.

70
சதவிகிதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கே நாள்களில் மகள் மரித்தபோது கௌரி வெடித்து அழுத அழுகை, சொற்களுக்குள் அடங்காத துயரம். `குடிகாரக் கணவனின் கொடுமைகளாலேயே தன் மகள் தீக்குளித்தாள்!' எனப் பதிவுசெய்ய, அவர் காவல்நிலையத்துக்கு அலைந்தார். ஆனால், `மருத்துவமனையில்தான் பதிவுசெய்ய வேண்டும்' எனச் சொல்லி, படிப்பறிவற்ற அவரைத் திசை திருப்பினார்கள். ராஜேஸ்வரியின் அநியாயச் சாவு, பதிவுசெய்யப் படாமலேயே முடிந்தது. ஆனால், கௌரியின் துயரம் முடியவில்லை. மகளைப் பறிகொடுத்த முப்பதாவது நாளில் மர்மமாக இறந்துகிடந்தார் மருமகன் பாஸ்கர். இந்த மரணமும் அதற்கான காரணமும் எதிலுமே பதிவுசெய்யப்படவில்லை. மனைவி இறந்த துக்கத்தில் பாஸ்கரன் குடித்தே இறந்துவிட்டதாக, பச்சாத்தாபத்தோடு சொல்லப்பட்டது. தாயையும் தந்தையையும் ஒரே நேரத்தில் இழந்து, மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதேயான குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றன.

 

 

 

No comments: