Followers

Monday, February 26, 2007

பரம்பரை ஆட்சி பற்றி நீலகண்டன்களுக்கு!

பரம்பரை ஆட்சி பற்றி நீலகண்டன்களுக்கு!

உலகில் பலவிதமான ஆட்சி முறை இருக்கிறது. கம்யுனிஷம், கேபிடலிஸம், பரம்பரையில் வரும் அரசாட்சி, குடி மக்களால் நம் நாட்டு முறைப்படி ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுதல் என்று பலமுறைகளை நாம் பார்த்து வருகிறோம். ஒரு நாட்டில் எந்த ஆட்சி முறை நடைமுறையில் இருந்தாலும் அந்த முறையினால் அந்நாட்டு மக்கள் நன்மையடைகிறார்களா என்பதுதான் முக்கியம்.

இன்று சவுதியை எடுத்துக் கொள்வோம். அந்நாட்டு ஆட்சியாளர்கள் பெரும் பெரும் அரண்மனைகளில் வாழ்ந்தாலும் மக்களின் நலன்களில் அக்கரை உடையவர்களாகவே இருக்கின்றனர். நம் நாட்டைப்போல் 'எங்களை வாழ வைக்கும் தெய்வமே அம்மா! டாக்டர் ஐயா!' போன்ற தனி மனித வழிபாடுகளை சவுதியில் எந்த இடத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. மாநாடுகள் என்ற பெயரிலே ரோடுகள் முழுக்க பள்ளங்களை நோண்டி 50 அடி, 60 அடி கட்அவுட்கள் வைக்கும் கலாச்சாரத்தை சவுதியில் பார்க்க முடியாது. தன்னை விட வயதில் மூத்தவர்களையும் காலில் விழ வைத்து மனிதனை மடையனாக்கும் கலாச்சாரத்தை சவுதியில் காண முடியாது.

தலைவர்கள் இறந்தவுடன் அவர்களின் சமாதியை பல லட்சம் செலவு செய்து மெரீனா கடற்கரையை மயானத் திடலாக்கும் கொடுமை சவுதியில் கிடையாது. சமீபத்தில் தற்போதிருக்கும் ஆட்சியாளர் அப்துல்லாவுக்கு முன்பு ஆட்சி செய்த பஹத் இறந்ததை நாம் அறிவோம். 25 வருடம் சிறப்பாக ஆட்சி செய்த ஒரு ஆட்சியாளருக்காக சவுதியில் அரசு விடுமுறை விடவில்லை. எல்லோரும் அன்றும் பணிக்கு சென்றிருந்தோம். அவருடைய அடக்கஸ்தலம் வெறும் மண்ணாலும் கூழாங்கற்களாலும் மூடப்பட்டிருந்தது. ஒரு அடி கூட சிமெண்டால் அந்த அடக்கஸ்தலம் உயர்த்தப்படவில்லை. இந்த காட்சியை நேரடி ஒளி பரப்பில் பார்த்துக் கொண்டிருந்த இத்தாலி நாட்டைச் சார்ந்த போப்புக்கு நெருங்கிய கிறிஸ்தவ மத போதகர் 'இப்படி ஒரு எளிமையான வாழ்க்கையா?' என்று வியந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்வை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். உலக பணக்காரர்களில் ஒருவரான பஹதுக்குத்தான் இந்ந நிலைமை. இத்தகைய எளிமையை அந்த ஆட்சியாளர்களுக்கு போதித்தது இஸ்லாம் அல்லவா?

ஹஜ் பயணம் செய்யும் பல லட்சம் யாத்ரீகர்களுக்கு கோடிக்கணக்கான டாலர்களை வருடா வருடம் அரசு செலவில் செலவழிப்பதும் இந்த அரசுதானே! இது அல்லாமல் அரசரின் சொந்த பணத்தையும் கோடிக்கணக்கில் செலவழிப்பதை நாம் வருடா வருடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

இது அல்லாமல் அரசு செலவில் ஒவ்வொரு சிறு நகரத்திலும் குர்ஆன் விளக்க உரையும், முகமது நபியின் ஹதீஸ்களையும் கற்றுக் கொடுக்க பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்துள்ளது. இவையனைத்தும் வெளிநாட்டு பணியாளர்களுக்காக பிரத்யேகமாக உண்டாக்கப்பட்டுள்ளது. இதன் வேலை நேரம் மாலை ஆறுமணியிலிருந்து இரவு 11 மணிவரை. உங்கள் இருப்பிடத்திற்கே வாகனம் வந்து அழைத்துச் செல்லும். சாப்பாடு, புத்தகங்கள் அனைத்தும் இலவசம். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் நபர்களுக்கு இவை எல்லாம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்காகவும் தனித்தனி ஆசிரியர்கள் பல நாட்டவரையும் நியமித்திருப்பது மேலும் சிறப்பு.

உங்கள் முதலாளி சரியாக சம்பளம் கொடுப்பதில்லையா? இதை கவனிப்பதற்க்கென்றே அரசு செலவில் 'லேபர் கோர்ட்டுகள்' உள்ளன. இவையனைத்தும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசம். இதனால் பலனடைந்த தொழிலாளர்கள் அனேகர்.

இந்த ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை. எல்லோரையும் திருப்திபடுத்தும் வகையில் எந்த ஆட்சியாளரும் நடந்து கொள்ள முடியாது. உலகில் நடக்கும் ஆட்சிகளில் சவதியின் ஆட்சிமுறை சிறப்பாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். இனி நீலகண்டனின் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்

//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? குலப்பரம்பரையில் வரும் அரசருக்கு குடிமக்கள் குரான் சொல்லுவது போல கட்டுப்பட வேண்டும் என்று சொல்லுவது எத்துவாளித்தனமல்லவா?//-Aravindhan

'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.
-குர்ஆன் 4 : 59

மேலே றான் சுட்டிக்காட்டியிருக்கும் குர்ஆனின் வசனத்துக்கும் சவுதி அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அரசாணைக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டு விட்டார் அரவிந்தன்? அதிகாரத்தில் உள்ளோருக்கு கட்டுப்படுங்கள் என்று குர்ஆன் தெளிவாக விளக்குகிறதே! இது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக சொல்லப்பட்ட வசனம். இந்தியனான நான் தற்போதய ஆட்சியாளர் மன்மோகன் சிங்கிற்கு கட்டுப்பட வேண்டும். தமிழனாகவும் இருப்பதால் கருணாறிதிக்கும் ஆட்சி அதிகாரத்தில் கட்டுப்படுகிறேன். இப்படி ஒரு அதிகார வரம்பு இருந்தால்தான் நம் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அத்தகைய அதிகாரம் இல்லாத ஈராக் இன்று படும் அவஸ்தையையும் கண் கூடாக பார்க்கிறோமே!

//இந்த இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?//

இந்த அரசரை நீக்குவதும் வேறொரு நபரை அந்த பதவியில் அமர்த்துவதும் அரவிற்தனுக்கோ அல்லது சுவனப்பிரியனுக்கோ உள்ள வேலை அல்ல. இது அந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். அரசரின் செயல்பாடு சரியில்லை என்றால் அந்நாட்டு மக்களே தூக்கி எறிந்து விடுவார்கள். இன்று வரை எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் ஹஜ் பயணம் சென்று கொண்டிருக்கிறது. இப்படி சிக்கலில்லாமல் சென்று கொண்டிருப்பது அரவிந்தனுக்கு கஷ்டமாக இருக்கலாம். என்ன செய்வது?

அடுத்து ஒரு தலித் முஸ்லிமாக மாறினால் அடுத்த நிமிடமே உலக முஸ்லிம்களில் ஒரு சகோதரர் ஆகி விடுகிறார். இங்கும் 'தலித் முஸ்லிம்' என்ற இல்லாத பிரிவை உண்டாக்கி புரோகிதத்தை நுழைக்க வேண்டாம் அரவிந்தன். தலித் மக்களுக்கு செய்த கொடுமைகளெல்லாம் போதும். இனிமேலாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.

//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது தொடர்பாக அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன.//- dinakaran

இதை நான் மறுக்கவில்லையே! எல்லா நாடுகளிலும் எதையும் காமக் கண்ணோடு பார்க்கும் நபர்கள் இருந்துள்ளார்கள். இதற்கு அரபு நாடுகள் மட்டும் விதிவிலக்கல்ல. இதற்க்காக தனி நீதிமன்றங்களே அந்நாடுகளில் உள்ளது. நமது தூதரகங்கள் இதற்கான முழு முயற்ச்சியை எடுக்க வேண்டும். அல்லது வீட்டு வேலைக்கு பெண்களை அனுப்பும் முயற்சி கைவிட வேண்டும். கோடிக்கணக்கான அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் அப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க தூதரகங்கள் முன்வர வேண்டும். சில தூதரக அதிகாரிகள் அரபுகளிடம் பணம் வாங்கிக் கொண்டு நம் நாட்டவருக்கு துரோகம் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். எனவே பல முனையிலும் இதற்கு விடிவு காண வேண்டும்.

அடுத்து நம் நாடு குடிமக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறது என்று பெருமைபட்டுக் கொள்கிறோம். ஜவஹர்லால் நேருவிலிருந்து இன்றைய சோனியாகாந்தி நாளைய பிரியங்கா வரை நடைபெறும் பரம்பரை ஆட்சியையும் பார்க்கிறோம். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு இப்போதே பரிவட்டம் கட்டியாகி விட்டது. அன்பு மணியையும் அமைச்சராக்கி விட்டோம். வாசனையும் அமைச்சராக்கி விட்டோம். இதை நான் குறை சொல்லவில்லை. யார் வந்தாலும் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா!

இதை எழுதுவதால் அரபுகள் பத்தரை மாற்று தங்கங்கள் என்று சான்றிதழ் தருவதல்ல என் நோக்கம். காட்டுமிராண்டிகளாக இருந்த அரபுகளை இன்று ஓரளவு நாகரீக சமுதாயமாக மாற்றியது இஸ்லாமிய வரவால்தான். எனவே அரபுகள் செய்யும் தவறுக்கு இஸ்லாத்தை குறை காண வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

24 comments:

அப்துல் குத்தூஸ் said...

சுவனப்பிரியன்,

ஊதுரச் சங்கை ஊதிட்டீங்க. அவங்களுக்கு என்ன விளங்கவாப் போது, அடுத்தது எதை குற்றம்பிடிக்கலாம் என மண்டையை கொடைந்துக் கொண்டு அல்லவா இருப்பாங்க.

உங்களின் விளக்கங்கள் மிக அருமை. நன்றி.

சாதிக் said...

மிக நல்ல பதிவு.. வலை பூவில் இஸ்லாதிற்க்கு எதிராக பதிவிடுவோர், இஸ்லாமிய ஆட்சியலர்கள் செய்யும் தவறுகளையும், தனி இஸ்லாமியன் செய்யும் தவறையும். இஸ்லாதிற்கு எதிரான குற்றசாட்டாக காட்டுவது இயல்பாகிவிட்டது.

Jafar ali said...

அருமையான பதில்! நீலகண்டன்களுக்கு இந்த பதில் எடுபடுமா? பொருத்திருந்து பார்ப்போம்.

Unknown said...

நன்றாக எழுதியுள்ளீர்கள் சுவனப்பரியன்.
மரைக்காயரும் இதே கருத்தில் எழுதியுள்ளதை பார்வையிடுங்கள். http://maricair.blogspot.com/2007/02/blog-post_27.html
யாராவது ஒரு முஸ்லீம் தவறு செய்தால் இஸ்லாத்தை பழிக்கும் இவர்கள், தங்களுடைய விஷயங்களில் அவ்வாறு நடந்து கொள்வார்களா?. தங்களுடைய மதத்தில் ஒருவர் செய்யம் தவறை மதத்தின் தவறாக அடையாளப்படுத்துவார்களா? அவ்வாறு யாரும் அடையாளப் படுத்தினால் அதை ஏற்றுக் கொள்வார்களா?
யோசனை ஏதுமில்லாமல், தூற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் திருந்த துவா செய்வோம்.

suvanappiriyan said...

//அரேபியாவை விடுங்கள் நைனா. இங்கே இந்தியாவில் ஜும்மா மஸூதி இருக்கிறதே அங்கே இருக்கிற பெருந்தலையின் பதவியை நீங்களோ, சுவனப்பிரியன் அவர்களோ பெற முடியுமா? //-Aravindhan Neelagandan.

இந்த கேள்விக்கு நான் முன்பே பதில் சொல்லி விட்டேன். ஒரு பள்ளியின் நிர்வாகம் என்பது அந்த ஊர் மக்களும் நிர்வாகக் கமிட்டியும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒன்று. அடுத்து டெல்லியில் ஒரு பள்ளியின் இமாமாக இருக்க அந்த வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க முடியும். உருத தெரியாத நான் (பேச தெரியும்) எவ்வாறு டெல்லியில் பணியாற்ற முடியும்? அடுத்து ஒரு பள்ளியில் இந்த இனத்தவர்தான் பணியாற்ற வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. உலகில் பள்ளியை நிர்வகிக்க இறைவன் குர்ஆனில் கூறும் கட்டளையை இனி பார்ப்போம்.

'இணை கற்ப்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இறைவனின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பர்.' - 9 : 17

இறைவனின் இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஏழை வரியும் கொடுத்து இறைவனைத தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே இறைவனின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.- 9 : 18

மேலே சொன்ன இந்த தகுதிகள் தான் உலகில் எந்த பள்ளிக்கும் சட்டமாகும். இதில் நாடோ, குலமோ, மொழியோ, நிறமோ குறிப்பிடப்படவில்லை. பல தெய்வங்களை வணங்காமல், ஏக இறைவனை வணங்கி, தொழுது, ஏழை வரியையும் கணக்கிட்டு கொடுக்கும் முஸ்லிம் எந்த பள்ளியிலும் இமாமாக இருக்கலாம். பள்ளியையும் நிர்வகிக்கலாம். நான் சவுதி அரேபியாவில் பல நேரங்களில் பள்ளியில் இமாமாக நின்று தொழ வைத்திருக்கிறேன். பல நாட்டவரும் என்னைப் பின்பற்றி தொழுதும் இருக்கின்றனர்.

மனிதனை நான்கு வர்ணமாக பிரித்து அதில் பிராமணர் மட்டுமே கோயில் குருக்களாக முடியும் என்று சட்டத்தை இன்று வரை நியாயப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தை குறை கூறுவதுதான் ஆச்சரியமளிக்கிறது.

எனவே சட்டம் தெரியாமல் பொய்களைப் பரப்ப வேண்டாம் அரவிந்தரே!

suvanappiriyan said...

அப்துல் குத்தூஸ்!

//ஊதுரச் சங்கை ஊதிட்டீங்க. அவங்களுக்கு என்ன விளங்கவாப் போது, அடுத்தது எதை குற்றம்பிடிக்கலாம் என மண்டையை கொடைந்துக் கொண்டு அல்லவா இருப்பாங்க//

ஒன்று சொன்னீர்கள். ஒன்றும் நன்றே சொன்னீர்கள்.

வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

ஜாபர்அலி!

//அருமையான பதில்! நீலகண்டன்களுக்கு இந்த பதில் எடுபடுமா? பொருத்திருந்து பார்ப்போம்.//

'உண்மையை விளங்காத செவிடர்களும் ஊமைகளுமே இறைவனிடம் மிகவும் கெட்ட உயிரனமாவர்.'- குர்ஆன் 8 : 22

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சாதிக்!

//மிக நல்ல பதிவு.. வலை பூவில் இஸ்லாதிற்க்கு எதிராக பதிவிடுவோர், இஸ்லாமிய ஆட்சியலர்கள் செய்யும் தவறுகளையும், தனி இஸ்லாமியன் செய்யும் தவறையும். இஸ்லாதிற்கு எதிரான குற்றசாட்டாக காட்டுவது இயல்பாகிவிட்டது.//

அதே சமயம் தங்கள் மதத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதற்குள் மதம் நுழைந்து விடாமல் மிக சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள். அரேபியர்களை காமப்பித்தர்கள் என்போர் நொய்டாவில் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலை செய்து புதைத்தது எந்த வகை நியாயம் என்று அரவிந்தனும் கால்கரியும் விலக்குவார்களா? மத்திய பிரதேசத்திலும் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் தோண்ணடத் தோண்ட வந்து கொண்டே இருக்கிறதாம்.

அன்பே சிவம்! :-(

bala said...

சுவனப்பைரியன் அய்யா,

நீங்க என்ன தான் சப்பைக்கட்டு கட்டினாலும்,சவுதி/பாகிஸ்த்தான் சுன்னி தீவிரவாத செயல்கள் இஸ்லாத்துக்கு தீரா களங்கத்தை உண்டாக்கி வருகிறது.
உலகத்தை அச்சுறுத்தும் லெவலுக்கு அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது.இதை மறைப்பதற்க்கு பதிலாக,உங்களைப்போன்றவர்கள் இதை உள்ளிருந்தே எதிர்த்துக் களைவது தான் சிறந்தது.தயவு செய்து நம்ம புதுவை சுகுமாரன்/அருந்ததி ராய் செய்வது போல் சவுதி கும்பல் செய்யும் தீவிர வாத செயல்களுக்கு ஒரு போதும் ஜே போடாதீர்கள்.

பாலா

நல்லடியார் said...

//நொய்டாவில் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலை செய்து புதைத்தது எந்த வகை நியாயம் என்று அரவிந்தனும் கால்கரியும் விலக்குவார்களா?//

நிச்சயம் வி"ல"க்குவார்கள் :-) ஏனென்றால் மொஹீந்தர் சிங் ஒரு சீக்கியர். தேவைப்படும்போது மட்டுமே சீக்கியர்களும், ஜைனர்களும், பவுத்தர்களும் இந்து(ஞான மரபு !)க்குள் அடங்குவர்.

மரைக்காயர் கேட்டிருந்தபடி, காஞ்சி மடத்திற்கு ஒரு தலித் சங்கராச்சாரியாக தேர்ந்தெடுக்க இந்துக்களே ஒன்றுபடுவீர்! என்று நீலகண்டன் ஒரு இந்து எழுச்சி மாநாட்டை நடத்த முன்வரவேண்டும். :-(

முத்துவாப்பா said...

சுவனப்பிரியன்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). நல்லொழுக்கம் என்பது நுழைவாயிலல்ல வாழ்நாள் முழுக்க பயணிக்கவேண்டிய பாதை என்று எங்கோ படித்த ஞாபகம். அதுபோல அரவிந்தன் போன்றவர்களுக்கு பதிலளிப்பதும் நீண்டபாதையாகவே இருக்கிறது.

உங்களின் நயமான விளக்கங்கள்கூட அவர்களிடம் வெறும் 'ஜல்லி'யாகவே போய் விழுகின்றன. விளக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் 'கழுத்தை வெட்றாங்க..கையை ஒடிக்கிறாங்க' என்று புலம்புகிறார்கள்.

சவூதியில் ஒரு தலித் மன்னராக முடியுமா என கேட்கும் அவர்களிடம் இஸ்ரேலில் ஒரு செட்டியார் பிரதமராக முடியுமா என நாம் கேட்க மாட்டோம். ஏனெனில் தத்தமது ஆட்சியாளர்களை ஏற்பதும் மறுப்பதும் அந்தந்த மக்களின் உள்விவகாரம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

அவருடைய பதிவில் 'முஸ்லிம்கள் செய்யும் உலகலாவிய சமயவிரோத செயல்களுக்கு முஸ்லிம்கள் முறையான எதிர்ப்பை தெரிவிப்பதில்லை என்பது உண்மைதான்' என்ற என் கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

வாழ்த்துக்கள்..தொடருங்கள்.

suvanappiriyan said...

அசலமோன்!

//நீலக்கண்ட அய்யாவுக்கு, அமைதியாக பதிலுரை கொடுத்து இருந்தாலும், அவர்கள் இதை "சுவனப்பிரியாரின் சல்லி அடித்து உள்ளார்கள் என்று அவர்கள் பதிவில் எழுதி உள்ளார்கள். நல்லது. தூற்றுவாரின் முகத்தைக்கண்டு தாங்கள் மனம் தளர வேண்டாம்.//

'அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. இறைவனும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'
-குர்ஆன் 2 : 10

//சில தூற்றுவார்களும் பன்றி என்றும் பட்டி என்றும் எழுதி அவர்களின் மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். இஸ்லாத்தில் நாளும் வந்து சேரும் இந்து தலித் நண்பர்களின் பட்டியல் இங்கு பெஹ்ரேனில் தினசரி கூடிக்கொண்டு இருக்கிறது. //

'எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம்.'- குர்ஆன் 11 : 27

தூதர்கள் பிரச்சாரத்தின் போது அச்சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களே முதலில் இஸ்லாத்தை ஏற்றனர். இதைக்குறித்துத்தான் அந்த மக்கள் 'தாழ்த்தப்பட்டவர்களே உங்களிடம் அதிகம் இருப்பதை பார்க்கிறோம்' என்றனர். அதைப்போல் இன்றும் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் உலகம் முழுக்க கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பால் வருவதைப் பார்க்கிறோம்.

இதைப் பொறுக்காத சிவா போன்றவர்கள் 'பன்றிகள்,நாய்கள்' என்று தூற்றத்தான் செய்வார்கள். அவர்களிடம் பதில் இல்லாததால் வரும் கோப வார்த்தைகளே அவை.

'பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக.'
-குர்ஆன் 7 : 199

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சுல்தான்!

//மரைக்காயரும் இதே கருத்தில் எழுதியுள்ளதை பார்வையிடுங்கள். http://maricair.blogspot.com/2007/02/blog-post_27.html
யாராவது ஒரு முஸ்லீம் தவறு செய்தால் இஸ்லாத்தை பழிக்கும் இவர்கள், தங்களுடைய விஷயங்களில் அவ்வாறு நடந்து கொள்வார்களா?. தங்களுடைய மதத்தில் ஒருவர் செய்யம் தவறை மதத்தின் தவறாக அடையாளப்படுத்துவார்களா? அவ்வாறு யாரும் அடையாளப் படுத்தினால் அதை ஏற்றுக் கொள்வார்களா?//

மரைக்காயரும் அழகாக பதில் கொடுத்துள்ளார். ஆனால் விளங்குபவர்களுக்கு விளங்க வேண்டுமே!

'முஹம்மதே! அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.'
-குர்ஆன் 36 : 76

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நல்லடியார்!

//நிச்சயம் வி"ல"க்குவார்கள்//

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! பலருக்கும் பதில் எழுதும் போது இது போன்ற இலக்கணப் பிழைகள் வந்து விடுகிறது.

//மரைக்காயர் கேட்டிருந்தபடி, காஞ்சி மடத்திற்கு ஒரு தலித் சங்கராச்சாரியாக தேர்ந்தெடுக்க இந்துக்களே ஒன்றுபடுவீர்! என்று நீலகண்டன் ஒரு இந்து எழுச்சி மாநாட்டை நடத்த முன்வரவேண்டும். :-(//

இதைப் படிக்கும் நீலகண்டன் உடனே நம் தலித் மக்களையும் பிராமணர்களையும் இணைத்து ஒரு மாநாடு அல்லது போராட்டம் நடத்த முன்வர வேண்டும். துணைக்கு கால்கரி சிவாவையும் அழைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தலித்கள் மதம் மாறுவதை தடுத்தும் விடலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

முத்து வாப்பா!

//அவருடைய பதிவில் 'முஸ்லிம்கள் செய்யும் உலகலாவிய சமயவிரோத செயல்களுக்கு முஸ்லிம்கள் முறையான எதிர்ப்பை தெரிவிப்பதில்லை என்பது உண்மைதான்' என்ற என் கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.//

'நம்பிக்கைக் கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம. நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.' -குர்ஆன் 5 : 8

குர்ஆன் இவ்வாறு கட்டளையிட்டிருக்க இதற்கு மாற்றமாக முஸ்லிம்களில் சிலர் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தவறாக நடப்பதை கண்டும் காணாமல் இருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை சரியாக விளங்காததே இதற்கு காரணம். அனைத்து மதத்தினரையும் அன்போடு நடத்தவே குர்ஆன் எமக்கு கட்டளையிடுகிறது.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

பாலா!

//தயவு செய்து நம்ம புதுவை சுகுமாரன்/அருந்ததி ராய் செய்வது போல் சவுதி கும்பல் செய்யும் தீவிர வாத செயல்களுக்கு ஒரு போதும் ஜே போடாதீர்கள்.//

சுகுமாரனுக்கும் அருந்ததிராய்க்கும் சவுதியை புகழ்வதில் என்ன லாபத்தை அடைந்து விட முடியும்? உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் அருந்ததிராயின் கருத்துக்களை நாம் உதாசீனப் படுத்த முடியாது. சவுதி நம் நாட்டுக்கோ அல்லது உலக நாடடுக்கோ என்றாவது பிரச்னை தந்திருக்கிறதா! அவர்களின் வழியில் நிதானமாக சென்று கொண்டிருக்கும் போது அவர்களை வம்புக்கு இழுப்பது யார்?

இந்து தீவிரவாதிகள், முஸ்லிம் தீவிரவாதிகள் என்று எந்த பக்கத்தில் இருந்து தீவிரவாதம் தலை எடுத்தாலும் எதிர்ப்பதில் அனைவரும் தோளோடு தோள் நிற்க வேண்டும். அன்றுதான் மனித நேயமும் மலரும்.

suvanappiriyan said...

நண்பர் இறை நேசனின் பின்னூட்டம் சில திருத்தங்களுடன்....

At 1:35 AM, இறை நேசன் said...

நன்று. மிக அருமையாக பொறுமையாக விளக்கியுள்ளீர்கள்.

சகோதரரே உங்கள் பணி தொடரட்டும்.

புரிந்து கொள்ள சத்தியத்தை தேடிப்பயணிப்பவர்களுக்கு உங்களின் விளக்கங்கள் மிக்க தெளிவை தரும்.

ஆனால் அன்றிலிருந்து சத்தியத்தை நன்றாக உணர்ந்திருந்தாலும் அபூ ஜஹ்லின் வழியில் இஸ்லாத்தைப் பழிப்பதை மட்டுமே தங்களது முழுநேர குலத்தொழிலாக கொண்டு இயங்கும் ஹிந்துத்துவ இரத்த வெறி ஆர்.எஸ்.எஸ் நீலகண்ட கூட்டங்களுக்கு உங்களின் இந்த விளக்கங்கள் நிச்சயம் ஜல்லிகளாகத் தான் தோன்றும்.

தாங்கள் தளர வேண்டாம். தொடருங்கள் உங்கள் விளக்கங்களை.

என்ன செய்வது? இந்தியாவிற்கு வந்து வாய்த்த சாபக்கேடுகள்!

அன்புடன்
இறை நேசன்.

suvanappiriyan said...

இணை வைப்பவன்!

//அனைத்து மசூதிகளுக்கும் ஒரே தேவபாடை அரபிதான்.இதில் வட்டார மொழிக்கெல்லாம் இடமே இல்லை. உலகில் உள்ள எல்லா மசூதியின் மொழியும் அரபிதான்.//

நம் நாட்டு தேசிய கீதம் வங்காள மொழியில் இருப்பது தெரியுமுங்களா? தமிழனான நீங்கள் வேற்று மொழி பாடலுக்கு ஏன் மதிப்பு கொடுக்கிறீர்கள்? பல மொழிகளைக் கொண்ட நம் நாட்டுக்கு ஏதாவது ஒரு மொழியில்தான் தேசிய கீதத்தை வைக்க முடியும். இதனால் மற்ற மொழிகள் தாழ்ந்தவை என்று யாராவது சொன்னால் அவரை என்ன செய்வது? அதே போல்தான் ஒரு யுனிபார்ம்க்காக உலகமனைத்தும் ஒரே மொழியில் அரபியில் தொழுகை நடத்தப்படுகிறது. அதே சமயம் நீங்கள் இறைவனிடம் பிரார்த்திப்பது அவரவர் சொந்த மொழியில்தான் என்பதும் அனைவரும் அறிந்ததே!

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்' - குர்ஆன் 14 : 4

'ஒவ்வெnரு சமுதாயத்துக்கும் ஒரு தூதர் உள்ளார்.'- குர்ஆன் 10 : 47

//சுவனம், ஜல்லியை பார்த்து அடியுமய்யா.அரவிந்தரின் பதிவு விஷயம் தெரிந்தவர்கள் வந்துபோகும் இடம்.//

அப்படிங்களா! அதாவது மனிதர்களை நான்கு வர்ணமாகப் பிரித்து அதில் ஒரு பகுதி வசதியாக வாழ்ந்து கொண்டு மற்றவர்களை இழிபிறவிகள் என்று இன்று வரை கூறி அதை நியாயப்படுத்தி ஜல்லியடித்துக் கொள்ளும் விஷய ஞானமா!

'எதையும் படைக்காதவற்றையா அவர்கள் இறைவனுக்கு இணை கற்ப்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர்.' - குர்ஆன் 7 : 191

இணை வைப்பவரே கொஞ்சம் சிந்தியும்.

ஐயன் காளி said...

http://sivacalgary.blogspot.com/2007/02/blog-post_27.html

சுவனத்தில் ஜாதிகள்
சவூதியில் ஜாதி இல்லை. சட்டம் ஒழுங்கு நேர்மை. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் தவறமால் சம்பளம். வேலைக்கு செல்லும் இந்திய சகோதரிகளை யாரும் கற்பழிக்கவே இல்லை என்ற முழு ஆட்டை பிரியாணியில் மறைக்கப் பார்க்கும் சுவனப்பிரியர்களுக்கு :

பார்க்க http://www.country-studies.com/saudi-arabia/diversity-and-social-stratification.html

Diversity and Social Stratification
The Saudi population is characterized by a high degree of cultural homogeneity and by an equally high degree of social stratification. The territory that in 1992 constituted the Kingdom of Saudi Arabia consisted of four distinct regions and diverse populations.

Each region has sustained some measure of nomadic and seminomadic population: as recently as 1950, at least one-half the total population of the kingdom was estimated to be nomadic. Tribal identities were paramount among the nomadic population and among those in towns and villages who recognized a tribal affiliation.

The Eastern Province had a substantial Shia population with cultural links to Iran, Bahrain, and other places in the gulf region, as well as an Indian, Yemeni, and black African component. Asir was more closely linked to Yemen than to Saudi Arabia both by population and geography. Najd was geographically divided into three regions, with town centers that functioned almost as independent city-states until the early twentieth century. Until the era of development began in the 1960s, Najd remained relatively isolated, located as it was in the center of the peninsula in the midst of three deserts and a mountain chain, but its towns, too, had populations linked to the gulf, the Hijaz, and Africa.
By contrast, the Hijaz, being home to the holy sites of Islam and host to pilgrimage traffic, was directly tied historically into the Ottoman bureaucratic system. The populations of Mecca, Medina, and Jiddah have been infused for centuries by descendants of foreign Muslims who had come for the pilgrimage and stayed. Mecca had substantial Indian and Indonesian communities, and Jiddah had descendants of Persians and Hadramis (from Hadramaut, or Aden), as well as Africans and people from other parts of the Arabic-speaking world. The cities of the Hijaz benefited by donations from pious Muslims throughout the world and became major centers of Islamic scholarship and learning. Jiddah was virtually without peer as the commercial center in the kingdom until the 1960s, and in all the Hijaz towns, mercantile families comprised a powerful elite.
Social stratification was linked to this population diversity. Tribal affiliation constituted a major status category based on bloodline. At the top of the tribal status category were the qabila, families that could claim purity of descent from one of two eponymous Arab ancestors, Adnan or Qahtan, and could therefore claim to possess asl, the honor that stemmed from nobility of origin. To some extent, tribal status could be correlated to occupation, yet manual labor in general, but particularly tanning hides and metal work, was considered demeaning for individuals of qabila status.

Qabila families considered themselves distinct from and distinctly superior to khadira, nontribal families, who could not claim qabila descent.

Khadira include most tradesmen, artisans, merchants, and scholars, and constituted the bulk of the urban productive population of pre-oil Arabia. Marriage between individuals of qabila and khadira status was not normally considered.

The claim to qabila status was maintained by patrilineal descent; therefore, qabila families were concerned to observe strict rules of endogamy (marriage back into the paternal line) so that status might be maintained and children, who were considered to belong to the family of the father, not the mother, would not suffer the taint of mixed blood.

Within the qabila status group, however, there were status differentials, some groups being considered inferior precisely because they had once intermarried with khadira or an abd (slave) and were unable to claim purity of descent.

The abd was at the bottom of the tribal-linked status hierarchy in the past.

Black Africans were imported into the peninsula in large numbers to be sold as slaves until the late nineteenth century. Although slavery was not formally abolished until 1962, intermarriage between khadira and the black population has been extensive and has blurred social distinctions between the two.

In contemporary Saudi Arabia, new status categories based on education and economic advantage began to undermine the importance of tribal affiliation to status and were having an homogenizing effect on this barrier to social integration.
An additional status category based on bloodline was that of ashraf, those who claimed descent from the Prophet Muhammad. The ashraf (sing., sharif) were significant in the Hijaz but far less so in Najd.

These status categories based on blood have at times in the past and were in the 1990s being transcended by status groups based on religion, commerce, professions, and political power. Religious authority, for example, constituted an additional category of status.

The ulama historically have represented a powerful intellectual elite of judges, scholars, imams, notaries, and preachers. Prestige still strongly adhered to religious scholarship and especially to the groups of scholars whose religious authority was recognized by the rulers and who were employed in the government bureaucracy.

To some extent, as secular education became more valued and greater economic rewards accrued to those with technical and administrative skills, the status of the ulama declined.
Merchants constituted an additional elite status category based on wealth. Many of the traditional merchant class, especially merchants from the Hijaz and the Eastern Province, lost influence as Saudi rulers ceased borrowing from them and began to compete with them, using oil resources to create a new merchant class favoring Najdis.

The rulers also used preferential recruitment for administrative personnel from Najdi tribes, who in turn used their position to favor other Najdis and Najdi businesses. The result has been the creation of powerful administrative and commercial classes supplanting older elite groups based outside Najd.

The interest and status of these groups may overlap others. In the Hijaz, members of an elite group known as the awaali (first families) claimed group solidarity based on past family connections; their association was actually distinguished by wealth and life-style, and the circle of families was constantly in flux.
Families who belonged to the group came from diverse backgrounds and included descendants of religious scholars, merchants, and pilgrimage guides.

The Shia of the Eastern Province were near the low end of the social ladder in relation to the fruits of development and access to sources of power.

According to literature produced outside Saudi Arabia, Shia opposition groups were active inside the kingdom and constituted the majority of the political prisoners in Saudi jails.

Shia were generally disparaged in society by the Wahhabi antipathy in which their rituals were held. The status of Shia, however, was in flux: they began to be drawn into positions of responsibility in government service and since the 1980s have received an increased share of government funding for development.

பி.கு. ஆங்கிலம் படிக்க தெரியாது என ஜல்லியடிகள் வரும்

அசுரன் said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

சகோதரர் அசுரனின் பின்னூட்டம் ஒரு திருத்தத்துடன்....

At 5:00 AM, அசுரன் said...

//காட்டுமிராண்டிகளாக இருந்த அரபுகளை இன்று ஓரளவு நாகரீக சமுதாயமாக மாற்றியது இஸ்லாமிய வரவால்தான். எனவே அரபுகள் செய்யும் தவறுக்கு இஸ்லாத்தை குறை காண வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம்//

சுவனப்பிரியனின் இந்த வரிகளின் பின்னால்தான் இஸ்லாத்தின் அத்தனை தனிமனித ஒழுக்க நெறிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் இஸ்லாத்தில் எமக்கு பல மாற்று கருத்துக்கள் கொள்ளவும் காரணாம்கிறது. அதனை இங்கு விவரிக்கவோ விவாதிக்கவ்வொ எந்த தேவையும் எழவில்லை. இந்த வரலாற்று பார்வையிலலாத RSS தான் தமது அடக்குமுறை வர்ணாஸ்ரம தத்துவத்தையே ஏதோ சாலவும் சிறந்த சமூக அமைப்பாக சொல்லி வருகிறார்கள்.

பரம்பரை ஆட்சி குறித்தும், அரசு, மதம் என பல விசயங்களில் சுவனப்பிரியன் அவர்களுடன் எனக்கு பல முரன்பாடுகள் இருக்கலாம். ஆயினும் இவை எல்லாம் மக்களுக்கு விடுதலை தேடும் எமது லட்சிய நோக்குக்கு பெரும்(பெரும்) இடைஞ்சலாக இந்த நிமிடத்தில் இல்லை.

ஆனால், மக்களின் அடிமைத்தனத்தையே தத்துவமாக கொண்டுள்ள பார்ப்ப்னிய வர்ணாஸ்ரமத்தை சிறந்ததொரு சமூக அமைப்பாக சொல்லும் மனித பதர்களை எதிர்க்க எல்லா இடத்திலும் கன்னி வெடி வைக்க வேண்டியுள்ளது. இதோ இங்கு சகோதரர் சுவனப்பிரியன் தளத்திலும் RSS டவுசருக்கு ஒரு கன்னி வெடி வைத்தாகிவிட்டது.

அய்யா அரவிந்த நீலகண்டன், சவுதி அரசு வடிவத்துக்கு மாற்றாக நீங்கள் முன் வைக்கும் அரசு எது? அது வர்ணாஸ்ரம தர்மத்தை சமூக அலகாக கொண்டது என்று எமக்கு தெரியும்.

அது எந்த வகையில் இதனைவிட சிறந்தது என்று விளக்கிக் கூற, ஒரு முதுகெலும்புள்ள பிராணியாக உங்களுக்கு கடமை உள்ளது.

சொல்வீர்களா? முதுகெலும்பு உள்ளது என்று நிரூபிப்பீர்களா?

suvanappiriyan said...

வாங்க அசுரன்!

உங்களின் பல பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவன். உங்களின் வாதத் திறமையைப் பார்த்து சில நேரம் ஆச்சரியப் படுவதுண்டு.

//பரம்பரை ஆட்சி குறித்தும், அரசு, மதம் என பல விசயங்களில் சுவனப்பிரியன் அவர்களுடன் எனக்கு பல முரன்பாடுகள் இருக்கலாம். ஆயினும் இவை எல்லாம் மக்களுக்கு விடுதலை தேடும் எமது லட்சிய நோக்குக்கு பெரும்(பெரும்) இடைஞ்சலாக இந்த நிமிடத்தில் இல்லை//

இஸ்லாமும் கம்யுனிஸமும் பல வகைகளில் ஒத்து வருவதைப் பார்ககிறோம். நீங்கள் உபயோகிக்கும் தோழர் என்ற வார்த்தையை கம்யுனிஸ்டுகளுக்கு முன்பே உபயோகப்படுத்தியவர் முகமது நபி. கம்யுனிஸ சித்தாந்தங்கள் பலவும் ஆங்காங்கே குர்ஆனில் காணக்கிடைக்கிறது. குர்ஆன் இறங்கியதன் நோக்கமே ஏக இறைவனை வணங்கி சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே! இது பற்றி உங்களிடம் விரிவாக பேச வேண்டும். இனி விஷயத்துக்கு வருவோம்.

//அய்யா அரவிந்த நீலகண்டன், சவுதி அரசு வடிவத்துக்கு மாற்றாக நீங்கள் முன் வைக்கும் அரசு எது?//

இதைத்தான் நானும் பல முறை கேட்டு விட்டேன். இதற்கு அரவிந்தர் எத்தகைய பதிலை அளிக்கிறார் என்று பார்ப்போம்.

//அது எந்த வகையில் இதனைவிட சிறந்தது என்று விளக்கிக் கூற, ஒரு முதுகெலும்புள்ள பிராணியாக உங்களுக்கு கடமை உள்ளது.

சொல்வீர்களா? முதுகெலும்பு உள்ளது என்று நிரூபிப்பீர்களா?//

கண்டிப்பாக வந்து அசுரன் அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார் அரவிந்தன் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

இணையத்தில் இஸ்லாத்துக்கு எதிராக கல் வீசப்படும் போது முஸ்லிம்களை விட முனைப்பாக அதை எதிர்ப்பதில் கம்யுனிஸ்டுகளும், பகுத்தறிவாளர்களும் பதிலளிப்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இது போன்ற நல்ல உள்ளங்களின் சேவையைப் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி திரு அசுரன் அவர்களே!

suvanappiriyan said...

அன்பு இறைநேசன்!

//ஆனால் அன்றிலிருந்து சத்தியத்தை நன்றாக உணர்ந்திருந்தாலும் அபூ ஜஹ்லின் வழியில் இஸ்லாத்தைப் பழிப்பதை மட்டுமே தங்களது முழுநேர குலத்தொழிலாக கொண்டு இயங்கும் ஹிந்துத்துவ இரத்த வெறி ஆர்.எஸ்.எஸ் நீலகண்ட கூட்டங்களுக்கு உங்களின் இந்த விளக்கங்கள் நிச்சயம் ஜல்லிகளாகத் தான் தோன்றும்.//

கருத்துக்கு நன்றி இறை நேசன். மாற்றாரை விமரிசிக்கும் போதும் கடுஞ் சொற்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதைத்தான் முகமது நபியும் நமக்கு போதித்திருக்கிறார்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஐயன் காளி!

இங்கு எந்த ஒரு விஷயத்தையும் பிரியாணியிலோ அல்லது தயிர்சாதத்திலோயோ மறைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. குலத்துக்கும் நம் நாட்டில் பின்பற்றப்படும் சாதீய முறைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. முன்பு ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் தனித்து இயங்குபவர்கள். இஸ்லாம் அரபுலகை ஆட்கொண்ட போது அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டு சமதர்ம சமுதாயம் முகமது நபியின் காலத்திலேயே கொண்டுவரப் பட்டு விட்டது. இப்படி மொழியாலும் கலாச்சாரத்தாலும் வேறுபட்டவர்கள் சவுதியின் ஆதிகால மக்களோடு சேராமலே இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இஸ்லாத்ததை ஏற்றுக் கொண்டாலும் படித்து முன்னேறுவதில் பின் தங்கிய சமூகமாகவே இருக்கின்றனர். இவர்கள் முன்னேற்றத்துக்காக சவுதி அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த கறுப்பின மக்கள் பெயரளவில்தான் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். தொழுகை மற்றும் இன்ன பிற குர்ஆனின் கட்டளைகளை சரிவர பின்பற்ற ஆரம்பித்து விட்டால் மற்ற சமூகத்தைப் போல உயர்வடையலாம்.

அடுத்து ஏமனிலிருந்தும்,சிரியா பாலஸ்தீனத்திலிருந்தும் இங்கு குடியேறிய அரபுகள் பேச்சு வழக்கில் சற்று மாறுபட்டவர்களாகவே இருப்பர். அதே போல் இந்திய பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்வர் தனி குழுமமாக செயல்படுகினற்னர்.

ஷியாக்களைப் பொறுத்தவரை சில விஷயங்களில் முகமது நபியின் சொல் செயலுக்கு முற்றிலும் மாறுபட்டு நடப்பதால் அவர்களின் வணக்கங்களை வெளிப்படையாக செய்வதற்கு (மார்புகளில் அடித்துக் கொண்டு ரத்தத்தோடு தெருக்களில் செல்வது) போன்ற காரியங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. சில நேரங்களில் இது போன்ற கண்டிப்பும் அவசியமாகிறது. இப்படி பல நாட்டவராகவும் பல மொழி பேசுபவரையும் ஒன்றிணைப்பது குர்ஆன். அவைருக்கும் ஒரே இறைவன். ஓர் குர்ஆன். அனைவருக்கும் ஐந்து வேளைத் தொழுகை. அனைவருக்கும் ஒரே இறைத் தூதர். போன்ற வட்டத்துக்குள் வந்து விடுவோம். ஆங்காங்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் இஸ்லாத்தை சரியாக புரியாததால் வருபவையே!

//பி.கு. ஆங்கிலம் படிக்க தெரியாது என ஜல்லியடிகள் வரும்//-Iyan kali

மொழிகளில் ஏற்றத் தாழ்வு கிடையாது. ஆங்கிலம் பேசுவதாலேயே ஒருவரின் அறிவுத்திறமை வளர்ந்து விட்டதாக நீங்கள் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடன் கலந்துறவாட ஒரு மொழி அவசியம். அது தமிழாக இருக்கலாம், ஆங்கிலமாக இருக்கலாம், அரபியாக இருக்கலாம், சமஸ்கிரதமாகவும் இருக்கலாம். இத்தனைக் காலத்துக்குப் பிறகாவது வெள்ளைக்காரனுக்கு காவடி தூக்குவதை நிறுத்திக் கொள்ளுங்களேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!