Followers

Monday, January 02, 2012

கஃபா சுத்தம் செய்யப்படும் காட்சிகள் யுடியூபில்!

எந்த நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் கஃபாவை சுத்தம் பண்ணுவது மிகவும் சிரமமான காரியம். நடுநிசி இரண்டு மணிக்கு நீங்கள் கஃபாவுக்குள் போனாலும் அப்பொழுதும் மக்கள் வலம் வந்து கொண்டும் தொழுது கொண்டும் இருப்பர். கிடைக்கும் சிறிய இடைவெளியில் அவர்கள் தூய்மையாக்கும் பணியை முடிக்க வேண்டும். இதற்காக ஷிப்ட் முறையில் அந்த சகோதரர்கள் செய்து வரும் பணி அளப்பரியது.

'நான் உம்ராவுக்கு வந்த போது எனது கண்களாலேயே இந்த அரிய காட்சியை பார்ததேன். அவர்களோடு சேர்ந்து நானும் கஃபாவை சுத்தம் செய்தேன்.'
யுடியூபில் வந்த கமெண்ட்களில் ஒன்று. யுடியூபில் உலக மக்களால் அதிகம் பார்வையிடப்பட்ட கிளிப்களில் இதுவும் ஒன்று.

மற்றொரு நபரின் கமெண்ட்

I strongly wish and pray to be a cleaner of Haramain Sharifain one day InshaAllah,this cleaning work is greatest honor for any one because it is a Sunnah of Prophet Ibrahim and Ismael (Peace be Upon them) as said in Quran Surah Al-Baqrah Verse 125 :

" And when We made the House (at Makka) a resort for mankind and sanctuary, (saying): Take as your place of worship the place where Abraham stood (to pray). And We imposed a duty upon Abraham and Ishmael, (saying): Purify My house for those who go around and those who meditate therein and those who bow down and prostrate themselves (in worship).
(Translation: MUHD M.W.PICKTHALL)



இதே போல் வருடம் ஒரு முறை கஃபாவின் உட்புறத்தையும் சுத்தம் செய்வார்கள். மன்னர் அப்துல்லா அவரது அமைச்சர்கள், மற்றும் உலக தலைவர்கள் இந்த சுத்தம் செய்யும் பணியை செய்வார்கள். இறைத்தூதர் ஆப்ரஹாமும் அவரது மகன் இஸ்மாயீலும்(இஸமவேல்) செய்த அந்த அளப்பரிய தூய்மைபடுத்தும் பணியை இவர்களும் ஆர்வத்துடன் செய்கின்றனர்.

'காஃபாவை அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.'

-குர்ஆன் 22:25

குர்ஆன் இந்த இடத்தில் காஃபாவை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஆக்குகிறது. அருகில் உள்ள சவுதி நாட்டவனுக்கு என்ன உரிமையோ அதே உரிமை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியனுக்கும் உள்ளது. குறிப்பிட்ட சாதியினர்தான் வழிபாட்டுத் தலத்துக்குள் நுழையலாம் என்று அன்றும் இருந்தது. இன்றும் கூட நம் நாட்டிலும் உள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. இறைவன் புறத்திலிருந்து இப்படி ஒரு கட்டளை வந்ததால் அந்த மக்கள் கட்டளைக்கு அடி பணிந்தனர். அது இன்று வரை தொடர்கிறது.



மேலே உள்ள காணொளி முகமது நபியின் காலத்துக்குப் பிறகு ஜனாபதிபதி உமருடைய காலத்திலிருந்து இன்றைய ஆட்சியாளர் அப்துல்லாவின் காலம் வரை எவ்வாறு சிறுக சிறுக பெரிதாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. 30 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் விதமாக இதன் கட்டுமாணப் பணிகள் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கழிப்பிட வசதிகளும் ஒலு (தண்ணீரால் தொழுகைக்கு சுத்தம் செய்து கொள்வது) செய்வதற்கான வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டுள்ளன.



மன்னர் அப்துல்லாஹ் மதினாவுக்கு வருகை தந்து மாலை நேரத் தொழுகையில் கலந்து கொள்கிறார். அவர் நாட்டின் மன்னர் என்பதால் தனியாக நிற்கவில்லை. மக்களோடு மக்களாக சேர்ந்து இறை தியானத்தில் ஈடுபடுகிறார். நின்று தொழுவதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் உட்கார்ந்து தொழலாம் என்ற சலுகை அனைவருக்கும் உள்ளது. அதன் அடிப்படையில்தான் உட்கார்ந்து இறைவனை தொழுகிறார் மன்னர். தொழுகை முடிந்து அருகில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் முகமது நபியின் அடக்கத் தலம் வந்து முகமது நபிக்கு சலாம் சொல்கிறார். முகமது நபியிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. தொழுகையில் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனையோடு சென்று விடுகிறார்.

ஏனெனில் தனது அடக்கஸ்தலததில் யாரும் வந்து பிரார்த்திக்கக் கூடாது என்று முகமது நபி தடுத்து விட்டார். ஏசுவைப் போல் தன்னையும் மக்கள் கடவுளாக்கி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அதற்கு காரணம். அது இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் நமது நாட்டிலோ நாகூர் என்றும் ஏர்வாடி என்றும் யார் யாரையோ மகானாக கருதிக் கொண்டு அவர்களது சமாதியை உயர்த்தி தர்ஹா எழுப்பி வருகின்றனர். அங்கு இஸ்லாம் சொல்லாத அனைத்து காரியங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. இது போன்ற காணொளிகளைப் பார்த்தாவது நம மக்கள் திருந்த வேண்டும். முகமது நபியை விட நாகூரில் அடங்கியிருப்பவர் இறைவனிடம் சிறந்த அந்தஸ்தை பெற மாட்டார். முகமது நபிக்கே அவரது சமாதி வெறும் மண்ணால் கட்டப்படடிருக்க நாகூரிலும் ஏர்வாடியிலும் மற்றும் அஜ்மீரிலும் வானுயர தர்ஹாக்களை கட்டி உரூஸ் எடுப்பது சரிதானா என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

3 comments:

Unknown said...

ஸலாம்

தர்காவாதிகள் மனம் போன போக்கில் செல்கிறார்கள் ...

எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 8:53)

"எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்''

(அல்குர்ஆன் 27:11)

நம் விஷயத்தில் முயற்சி செய்வோருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 29:69)

இது தான் தர்கவாதிகளுக்கு என்னுடைய அறிவுரை ...

suvanappiriyan said...

சலாம்! சகோ சிந்தனை!

குர்ஆனும் நபி மொழிகளும் தர்ஹா வணக்கத்தை நேரிடையாகவே கண்டித்திருக்க அதில் ஏதோ நன்மை இருக்கிறது என்ற தவறான புரிதலில் பாவத்தை சுமந்து கொள்கிறார்கள். இதை அன்போடு அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமை!

மேலும் இந்த பதிவுக்கு ஓட்டளித்து தமிழ்மணம் மகுடத்தில் ஏற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கிறேன்.

VANJOOR said...

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும்

பேசுவதைத் தடைசெய்பவனும்

தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும்

இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

******
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
**********
…….



2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.