Followers

Friday, March 16, 2012

இறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்!

குர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறார்' என்பது. இதற்கு அவர்கள் வைக்கும் வாதம் இறைத் தூதர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தமான வரலாறுகள் சில மூன்று வேதங்களிலும் ஒன்றாக வருவதை ஆதாரமாக காட்டுகின்றனர். பெயர்களும் இடங்களும் சில அத்தியாயங்களில் ஒத்து வந்தாலும் வரலாறுகளில் ஏகத்துக்கும் மாற்றம் இருக்கிறது. ஏசு நாதரின் இறப்பு, அவரின் போதனைகள், அதே போல் மோசே, ஆபிரஹாம் போன்ற இறைத் தூதர்களின் வரலாறுகளும் பல மாற்றங்களை குர்ஆனில் கொண்டுள்ளதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

'அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக ஆக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், பிர்அவுன், ஹாமான், மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்'.

-குர்ஆன் 28:5,6

'மூசாவை(மோசே) நமது சான்றுகளுடன், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவுன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். 'பெரும் பொய்யரான சூன்யக்காரர்' என்று அவர்கள் கூறினர்.

-குர்ஆன் 40:23,24

'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.' என்று ஃபிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு. அதன் மீது ஏறி மூசாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்' என்றான்.

-குர்ஆன் 28:38


இது போன்று பல இடங்களில் ஃபிர்அவுன் மற்றும் ஹாமானின் வரலாறுகள் குர்ஆனில் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இந்த ஹாமானைப் பற்றி பைபிளிலோ அல்லது தோராவிலோ எந்த தகவலும் காணப்படவில்லை. முன்பு சொல்லப்பட்டிருக்கலாம். பின்னால் வந்த மத குருமார்கள் அந்த வரலாறுகளை எல்லாம் அழித்திருக்கலாம். ஹாமான் என்ற அமைச்சரைப் பற்றி பைபிளில் வந்தாலும் அது எகிப்தை தொடர்பு படுத்தி வரவில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டில் மூஸா காலத்து எகிப்திய வரலாற்றில் ஹாமான் என்ற பெயரே எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. ஹாமான் என்பவன் எகிப்து அரசன் பாரவோவின்(ஃபிர்அவுன்) அதிகாரி அல்லது ஊழியன் என்கிறது குர்ஆன். இறைத்தூதர் மோசே காலத்தவனாக இந்த ஹாமான் அறியப்படுகிறான். ஆனால் பைபிளில் எஸ்தர் 3:1 அதிகாரத்தின் படி ஹாமான் என்பவன் பெர்சிய அரசனின் மந்திரியாவார். இறைத் தூதர் மோசேவுக்குப் பிறகு 1000 வருடங்கள் கழித்து வருகிறது பெர்சிய அரசனின் வரலாறு.
இந்த கதையை தவறாக விளங்கித்தான் முகமது நபி குர்ஆனில் ஹாமானின் பாத்திரத்தை உருவாக்கினார் என்று விமரிசிப்பவர்கள் சொல்கின்றனர். மோசே காலத்தில் ஹாமான் என்ற ஒருவனே இல்லை என்ற வாதம்தான் வைக்கப்பட்டது.

பண்டைய எகிப்தியர்களின் எழுத்து முறையானது சித்திரங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. இந்த எழுத்துக்கள் அகழ்வாராய்ச்சியில் முன்பு கிடைத்தாலும் அதன் அர்த்தம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளங்காமலே இருந்தனர். ஏனெனில் இந்த மொழி மக்களின் உபயோகத்திலிருந்து தூரமாக்கப்பட்டு வேறொரு புது மொழி அந்த மக்கள் பேச ஆரம்பித்திருந்தனர். எனவே சித்திரங்கள் கொண்ட இந்த மொழியானது வழக்கொழிந்து ஏறக்குறைய செத்த மொழியாகவே ஆகி விட்டது.கிபி 394ல் இந்த மொழி பற்றிய சில குறிப்புகள் கிடைக்கின்றது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இதே கால கட்டத்தில் எவருக்கும் இல்லாமல் இருந்தது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதாவது 1799 ஆம் அண்டு 'ரொஸிட்டா ஸ்டோன்' “rosetta stone” என்ற இந்த எழுத்து முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய கல் வெட்டுகள் கிடைக்கிறது. இந்த கல் வெட்டுகளில் உள்ள விபரங்கள் மூன்று பாகங்களாக பிரித்து எழுதியுள்ளார்கள். Hieroglyphics (எகிப்திய சித்திர எழுத்து முறை), demotic ( சமயம் சார்ந்த மொழி), கிரேக்கம் என்ற மூன்று பகுதிகளாக செய்திகள் தொகுக்கப்பட்டிருந்தது. இதில் கிரேக்க மொழியின் உதவி கொண்டு மற்ற இரண்டு மொழிகளின் விபரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் சுலபத்தில் கண்டு கொண்டனர். இதன் மூலமே சித்திர எழுத்துக்களின் உண்மையான விளக்கம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. இதன் மொழி பெயர்ப்பை ஜீன் பிரான்ஸிஸ் அழகிய முறையில் மொழியாக்கம் செய்து உலகுக்கு அளித்தார். இவ்வாறாக வழக்கொழிந்த ஒரு மொழிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பண்டைய எகிப்தின் கலை, பண்பாடு, மதம் பற்றிய புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றன.
ஆச்சரியமாக அந்த கல்வெட்டுகளில் மன்னன் பாரோவுடைய வரலாறும் அவனுக்கு உதவியாக இருந்த ஹாமானின் வரலாறும் பொறிக்கப்பட்டுள்ளது. வியன்னாவில் உள்ள ஹோஸ் அருங்காட்சியகத்தில் இந்த கல்வெட்டுகள் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் கிடைக்கும் மேலதிக விபரமாவது கற்களைக் கொண்டு பெரும் கட்டிடங்களை எழுப்பும் கூட்டத்தின் தலைவனின் பெயர் ஹாமான் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மன்னன் பாரோவுடைய ஆட்சியைப் பற்றியும் சில குறிப்புகள் கிடைக்கின்றன. கல் வெட்டு கூறும் இந்த கருத்து அப்படியே குர்ஆனோடு ஒத்துப் போவதை எண்ணி வியக்கிறோம். மன்னன் பிரவுன் சொன்ன அந்த மாளிகையை கட்ட உதவியவன் பெயர் ஹாமான் என்று குர்ஆன் கூறுகிறது.

'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.' என்று ஃபிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு. அதன் மீது ஏறி மூசாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்' என்றான்.

-குர்ஆன் 28:38


பாரோ மன்னன் ஹாமானிடம் நேர்த்தியான முறையில் கட்டிடம் கட்டுமாறு கட்டளையிடுகின்றான். நாம் கேட்பது இறைத் தூதர் மோசே காலத்தில் ஏறத்தாழ பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஹாமான் என்ற நபரைப் பற்றிய விபரம் குர்ஆனில் எவ்வாறு இடம் பெற்றது? பைபிளிலோ தோராவிலோ கட்டிடம் கட்டிய ஹாமானின் பெயர் இடம் பெறாத போது முகமது நபிக்கு இந்த வரலாறும் பெயரும் எவ்வாறு தெரிய வந்தது? கட்டிட வல்லுனனான ஹாமானின் பெயர் 200 வருடங்களுக்கு முன்புதான் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது நபி என்ற ஒரு தனி மனிதர் இந்த குர்ஆனை கற்பனையில் கொண்டு வந்திருக்க முடியாது என்பதற்கு இந்த வசனங்களும் ஒரு சான்று.

மனிதக் கரங்களால் திருத்தப்பட்ட பைபிளிலும், தோராவிலும் தவறிருக்கலாம். மனிதக்கரம் புகாத குர்ஆனில் அறிவியலுக்கோ வரலாறுகளுக்கோ எந்த முரணும் காண முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அடுத்து எகிப்தியர்களின் பூர்வீக மொழி அரபியன்று. கலாசார மாற்றங்களினால் அவர்களின் பூர்வீக மொழி மறைந்து போய் இன்று அரபி பொது மொழியாக ஆக்கப்பட்டது.

'ஒரு மனிதர்தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி.

-குர்ஆன் 16:103

40 comments:

VANJOOR said...

அல்ஹம்துலில்லாஹ்.

மற்றும் ஒரு முத்தான பதிவு.


18:109 قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا

18:109. (நபியே!) நீர் கூறுவீராக:

“என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும்,

என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்;

அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”

18:110 قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

18:110. (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே!

நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது;

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து,

தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”


.
.

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

//அல்ஹம்துலில்லாஹ்.

மற்றும் ஒரு முத்தான பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி!

Seeni said...

nalla thakaval!

suvanappiriyan said...

சலாம் சகோ சீனி!

//nalla thakaval!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Barari said...

. அல்லாஹ் சிறந்த கல்வி அறிவை தங்களுக்கு மென்மேலும் தந்தருள்வானாக ..மிக சிறந்த அறிவுபூர்வமான தகவல்களை அறிய தந்து கொண்டிருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

சகோ பராரி!

//. அல்லாஹ் சிறந்த கல்வி அறிவை தங்களுக்கு மென்மேலும் தந்தருள்வானாக ..மிக சிறந்த அறிவுபூர்வமான தகவல்களை அறிய தந்து கொண்டிருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்.//

உங்களைப் போன்றோர்களின் ஊக்கம்தான் இது போன்ற பதிவுகளை இட தூண்டு கோலாக இருக்கிறது.

வருகைக்கும், கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி!

eelatamilan said...

சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.

இலங்கையில் புலிகளும் மிக அதிகமான போர்க் குற்றங்களை
முஸ்லிம்களுக்கு எதிராக செய்துள்ளனர். அசல் பயங்கரவாத அமைப்பான அவர்களின் போர்க் குற்றங்களை சனல் 4 உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

பயங்கரவாத அமைப்பான புலிகள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.


இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) ‍ <<<< பார்வையிடவும்.
.
.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
வழக்கம்போலவே மீண்டும் ஒரு முத்தான பதிவு.
இந்த ஹாமான் பெயர் வேறு எந்த வேதப்புத்தகத்திலும் இல்லை என்ற தகவல் எனக்கு புதிது.

இதுபோல, அரிய விஷயங்களை தொடர்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறியத்தந்து கொண்டே உள்ளீர்கள். ஜசாக்க்லாஹு க்ஹைர்.

மென்மேலும் சிறந்த கல்வி அறிவை தங்களுக்கு அல்லாஹ் தந்தருளி, அதன்மூலம் பலரும் பயன்பெற துவா செய்கிறேன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்,
A humble request..!

'Post a Comment' தனி விண்டோ ஓபன் ஆவதால், comment follow up போட முடியவில்லை.

தங்கள் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்களும் சிறப்பானவை என்பதால், அவற்றை தவறவிடாமல் மெயிலில் பெற்றுக்கொண்டு படிக்கவும் பதிலளிக்கவும் வசதியாக, இதில் comment follow up வசதி சேர்க்கபடும் வரை.... comment embedded form க்கு மாற்றுங்களேன் சகோ.சுவனப்பிரியன்.

ராவணன் said...

எத்தனை கற்பனைக் கதைகளை எழுதினாலும் அவை கற்பனையே. தமிழில் அனைத்து விதமான நீதி நூல்களும், மார்க்க நூல்கள் மட்டுமல்ல..அறிவியல் நூல்களும் உள்ளன.பிராமணர்களும், முஹமதியர்களும் எத்தனை கூவினாலும் தமிழர்கள் மாறப்போவதில்லை. தமிழ் நாட்டில் தமிழைத் தாண்டி எதுவும் பெரிதாக வரப்போவதில்லை.அஞ்சுக்கும் பத்துக்கும் விலைபோகும் மாக்கள் கூவுவதைக் கேட்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை. தமிழ் உலகைப் படைத்த மொழி.அதில் எந்த கற்பனைக் கதைகளுக்கும் இடமில்லை.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ....சகோஸ்,
மற்றுமோர் ஆதாரபூர்வமான சான்று .....
தங்களுக்கு சிறந்த கல்வி அறிவை அல்லாஹ் தந்தருளவேண்டுமென,
தூவா செய்கிறேன் .....ஆமின்

Unknown said...

//தமிழர்கள் மாறப்போவதில்லை//

ராவணனுக்கு உலக வரலாறுதான் தெரியாது என்று நினைத்தேன், இப்போ தமிழர் வரலாறும் தெரியாதுன்னு அவரே நிரூபிச்சுட்டாரு.

ராவணன் அண்ணா உங்களுக்கு கதை ஒன்னு சொல்றேன். நல்லா கேளுங்க..

ஒரு காலத்துல ஒசந்த சாதிக்காரங்க குளத்துலயோ இல்லை கிணத்துலயோ தண்ணி எடுக்க முடியாது, அப்புறமா உசந்த சாதிக்காரவுங்க தெருவுக்குல்ல செருப்புப் போட்டுட்டு போவக்கூடாது, அவங்க முன்னாடி தோள்ல துண்டு போட்டுட்டு போவக்கூடாது, அப்புடியே போட்டுருந்தாலும் அவங்க எதிர்ல வர்த பாத்தா தோள்ல உள்ளத எடுத்துட்டு ரெண்டு கையையும் கூப்பி தலை வணங்கி "வணக்கம் சாமி" கூலை கும்முடு போடனும், அப்புறமா எங்களுக்குன்னு உள்ள நாட்டார் தெய்வத்தான்ன வணங்கனும், மீறிக்கூட ஒசந்தவங்க வணங்குற கோயிலுக்குள்ள போயிடக்கூடாது, அவங்க வேதம் ஓதுனா அதக் கேக்கக்கூடாது, இப்புடியெல்லாம் அடங்கிக் கிடந்த திராவிடன், அப்புறமா "இஸ்லாம்ன்னு" ஒன்னு எல்லாரையும் சமாம நடத்துதுன்னும், அவுங்க கோவிலுக்கு நாமல்லாம் போகலாம்னு கேள்விப்பட்ட எங்களின் பாட்டன், முப்பாட்டன் அதுக்கும் முந்துனவங்க எல்லோரும் வெகுண்டு அடிச்சு ஓடிப்போயி சேர்ந்ததுதான்னே இஸ்லாம், உங்க பாஷையில சொல்றதுன்னா "நாங்களும் திராவிடப் பெத்தடின் + இஸ்லாமிய பெத்தடின்" போட்டுக்கிட்டவுங்கதான். உங்க வகுப்பறைகளில் போதிப்பது போல் அரேபிய நாட்டு விமானத்துல வந்து இறக்குமதியாக்கப்பட்டவங்க கிடையாது. என்ன?

அப்புறம் மிச்ச சொச்சம் இருந்தவுங்களையும் "வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்" வந்து அலேக்காத் தூக்கிட்டுப் போய்ட்டாரு. இஸ்லாமும், பெரியாரும் வரலைன்னு வச்சுங்க எங்க திராவிடர் கதி அதோ கதிதான்ங்கன்னா, இப்போ புரியுதா?

இதுனாலதான் நீங்க சொன்ன பிராமணர்களுக்கு இந்த ரெண்டையுமே புடிக்காது.

//பிராமணர்களும், முஹமதியர்களும் எத்தனை கூவினாலும் தமிழர்கள் மாறப்போவதில்லை.//

இன்னாது பிராமணர்கள் மறுபடியும் வந்து கூவுறாங்களா? நல்லாத்தான் காமெடி பண்றீங்க போங்க!!!

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ நல்ல பகிர்வு.
"நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன்.அவர்கள் எந்தச் சான்றை கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள்.நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாக கொள்ளமாட்டார்கள்.வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள்.அவர்கள் நமது வசனங்களை பொய்யென கருதியதும்,அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்".(அல் குர்ஆன் 7:136)

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

ராபின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

@ராவணன்//////தமிழ் உலகைப் படைத்த மொழி.அதில் எந்த கற்பனைக் கதைகளுக்கும் இடமில்லை./////
தமிழ் பழமையான மொழி என்பதும் அருமையான மொழியென்பதும் மறுப்பதற்க்கில்லை காரணம் அதை கற்றுணர்ந்தவர்களுக்கு நன்றாக புரியும் இதை நான் சொல்லி புரியவைக்கவேண்டிய அவசியமும் கிடையாது.விஷயத்துக்கு வருவோம் தமிழ் மொழியில் கற்பனைக்கதைகளுக்கு இடமில்லை என்பது தங்களின் தவறான வாதம்.
"முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" முல்லை படர்வதற்கு ஒரு கழியோ (அ) ஒரு பந்தலோ அமைத்துகொடுத்திருக்கலாம் தேரை கொடுத்தார் என்றால் எப்படி நம்புவது.இது கற்பனை இல்லையா?சரி இதுகூட ஒருவகையில் ஏற்றுகொள்ளலாம் சாதாரண முல்லைக்காக தன்னுடைய தேரை கொடுத்த அந்த மன்னனின் வள்ளல் குணத்தை பரைசாற்ற எடுத்துகொள்ளலாம்.
பின்வருபவை கற்பனையா?நிஜமா?
"குளிரில் நடுங்கிய பறவைக்கு போர்வை தந்தான் பேகன்" பறவைகள் குளிரை ஏற்றுகொள்ளக்கூடிய வகையில்தான் இறகுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.அப்படியிருக்க பறவைக்கு எவ்வாறு குளிர் அடிக்கும்.அப்படியே குளிரடித்தாலும் அதை தாங்கும் சக்தி அதற்கு உண்டு.போர்வை கொடுத்தான் பேகன் என்பது கற்பனை இல்லையா?
"கன்றை கொன்ற மகனை கொன்று தன்னுடைய நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழன்" தன்னுடைய குட்டியை கொன்றதுக்காக மன்னரிடம் நீதியை கேட்க மணி அடிக்க‌ ஒரு ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படி தெரியும்?இது கற்பனைக்கதை இல்லையா?
"அம்பெய்தவனின் ஆற்றலை பரைசாற்ற ஒரு கற்பனை கதை" இதனுடைய கதாநாயகன் பெயர் நினைவில் இல்லை.அந்த கற்பனைக் கதைநாயகன் ஒரு அம்பெய்துவானாம் அது யானையை துளைத்து வெளியேறி அதன் பிறகு வேறு ஒரு மிருகத்தினையும் துளைத்து இப்படியே மொத்தம் நான்கு மிருகங்களை துளைத்து வெளியேறுமாம்.இது கற்பனை கதை இல்லையா?(இது மகாபாரதமோ இராமாயண‌ம் என்றோ சொல்லி தப்பிக்கமுடியாது இது அதில் நடக்கும் செய்தியும் கிடையாது).
இது மட்டுமே நினைவில் வந்த கதைகள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றது.
/////அஞ்சுக்கும் பத்துக்கும் விலைபோகும் மாக்கள் கூவுவதைக் கேட்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை. /////
இங்கே யாரும் அஞ்சுக்கும் பத்துக்கும் கூவவுமில்லை அஞ்சுக்காகவும் பத்துக்காகவும் மாறவுமில்லை.

UNMAIKAL said...

//ராவணன் said...

எத்தனை கற்பனைக் கதைகளை எழுதினாலும் அவை கற்பனையே. தமிழில் அனைத்து விதமான நீதி நூல்களும், மார்க்க நூல்கள் மட்டுமல்ல..அறிவியல் நூல்களும் உள்ளன.பிராமணர்களும், முஹமதியர்களும் எத்தனை கூவினாலும் தமிழர்கள் மாறப்போவதில்லை. தமிழ் நாட்டில் தமிழைத் தாண்டி எதுவும் பெரிதாக வரப்போவதில்லை.அஞ்சுக்கும் பத்துக்கும் விலைபோகும் மாக்கள் கூவுவதைக் கேட்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை. தமிழ் உலகைப் படைத்த மொழி.அதில் எந்த கற்பனைக் கதைகளுக்கும் இடமில்லை. //

ஆங்கில அறிவைக்கொண்ட கணினி மூலம் கருத்திட்டிருக்கும் ராவணன்,

ஆங்கில அறிவைக்கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டு வாழ்ந்து வரும் ராவணன்,

தன்னுடைய பதிவில் http://anjjamvakuppu.blogspot.com/2012/03/blog-post.html

“தான் பிடித்த முயலுக்கு ஒண்ணேமுக்கால் கால் என்று பிதற்றுவார்கள்.

அவர்களுக்கு முயலையும் தெரியாது...

அதற்கு எத்தனை கால்கள் என்றும் தெரியாது."


என்று (தன்னை பற்றி!!! )

தனது பத்து தலைகளில் ஒன்றின் வாயிலாக திருவாய் மலர்ந்திருப்பதை அவருக்கே சமர்ப்பிப்போம்.

ராவணனுடைய மீதி ஒன்பது தலைகள் தலைக்கொன்றாக் திருவாய் மலர்வதையும் கேட்டுக்கலாம்.

பேராசிரியர் மஹா “லிங்கம்”, தத்துவ ஞானி தர்ம “லிங்கம்” எல்லாம் ராவணன் கிட்டே தூள் தூளாகிவிடுவார்கள்
.
.

Anonymous said...

நிச்சயம் இஸ்லாம் வேறு எந்த மதத்தின் COPY - PASTE கிடையாது என்று உறுதியாக நம்பலாம். அது தனித்துவம் மிக்கதே. அவர்கள் எங்கு சென்றாலும் மத(பயங்கர)வாதத்தையும் கூடவே எடுத்து செல்கிறார்கள். சவூதிக்கு சென்ற எந்த கிறிஸ்தவர்களும் - அந்நாட்டு சட்டத்தை பின்பற்றாமல் "இது கிறிஸ்துக்கு எதிரானது" என்று வாதாடுவதில்லை. முஸ்லீம்கள் பெருவாரியாக எங்கு வசித்தாலும் - பிற சமயத்தவர்களின் நம்பிக்கையை கொல்பவர்களாக இருக்கிறார்கள். அமைதி மார்க்கம் என்று சொல்லி கொண்டே - உலகில் அமைதியை கெடுக்கும் வேறு மார்க்கம் ஏதேனும் உண்டா சொல்லுங்கள். இஸ்லாம் அளவுக்கு, தம் மத மக்களையே கொன்று குவித்த மதமோ, மார்க்கமோ வேறில்லை. அனைத்து மதங்களை ஒப்பிட்டு பார்த்தப்பிறகு, நீங்கள் சொல்வதை ஒப்பு கொள்ள தான் வேண்டும், அது தனித்துவமானதே என்று.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இதுபோல, அரிய விஷயங்களை தொடர்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறியத்தந்து கொண்டே உள்ளீர்கள். ஜசாக்க்லாஹு க்ஹைர்.

மென்மேலும் சிறந்த கல்வி அறிவை தங்களுக்கு அல்லாஹ் தந்தருளி, அதன்மூலம் பலரும் பயன்பெற துவா செய்கிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி! இது போன்று பதிவுகள் எழுத நேரத்தையும் வாய்ப்பையும் தந்து கொண்டிருக்கிற அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

//தங்கள் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்களும் சிறப்பானவை என்பதால், அவற்றை தவறவிடாமல் மெயிலில் பெற்றுக்கொண்டு படிக்கவும் பதிலளிக்கவும் வசதியாக, இதில் comment follow up வசதி சேர்க்கபடும் வரை.... comment embedded form க்கு மாற்றுங்களேன் சகோ.சுவனப்பிரியன்.//

இன்ஷா அல்லாஹ் மாற்ற முயற்ச்சிக்கிறேன்..

suvanappiriyan said...

சகோ ஈழத் தமிழன்!

//இலங்கையில் புலிகளும் மிக அதிகமான போர்க் குற்றங்களை
முஸ்லிம்களுக்கு எதிராக செய்துள்ளனர். அசல் பயங்கரவாத அமைப்பான அவர்களின் போர்க் குற்றங்களை சனல் 4 உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

பயங்கரவாத அமைப்பான புலிகள் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!//

பதிவை படித்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது. 'அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது.

எப்படியோ இனியாவது இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பௌத்தர்களும் பகையை மறந்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டி எழுப்ப முன் வர வேண்டும்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

சகோ ராவணன்!

//பிராமணர்களும், முஹமதியர்களும் எத்தனை கூவினாலும் தமிழர்கள் மாறப்போவதில்லை//.

தமிழர்கள் எல்லாம் இனிமேல்தான் மாறனுமா? ஜோக் அடிக்காதீங்க ராவணன்!

சொந்த நாட்டையும் கடவுளையும் கோவில்களையும் எங்கிருந்தோ வந்த ஆரியர்களிடம் தாரை வார்த்து கொடுத்து விட்டு சூத்திரன் என்ற பட்டத்தையும் சுமந்து கொண்டு இன்று வரை இந்து மதத்துக்குள்ளேதானே இருந்து வருகிறீர்கள். நான் நாத்திகன்: நான் இந்துவல்ல என்று கோபுரத்தில் நின்று கூவினாலும் உலக அளவில் இந்திய அளவில் தமிழக அளவில் நீங்கள் ஒரு இந்துதான். ஆரியத்தின் பிடி அவ்வளவு இறுக்கமானது.

கோவில்களில் மூலஸ்தானம் வரை அவர்களை செல்லவிட்டு நீங்கள் வெளியில் பயபக்தியோடு நிற்கிறீர்களே! அதை வேத நூல்களை கொண்டே உங்களை ஒத்துக் கொள்ள வைத்திருக்கிறதே ஆரியம்.
உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் நமது சகோதரர்களான திராவிட இந்துக்களே!

//தமிழ் உலகைப் படைத்த மொழி.அதில் எந்த கற்பனைக் கதைகளுக்கும் இடமில்லை.//

சையது இப்றாம்சா, அப்துல் அஜீஸ் சஃபி, உண்மைகள் ஆகிய சகோதரர்கள் அனுப்பியுள்ள ஆதாரங்களை படித்துப் பாருங்கள். இன்னும் கூட தேவைப்பட்டால் தருகிறேன். நீங்கள் எப்படி பிராமணர்களுக்கு அடிமையானீர்கள் என்று சகோ ஓசூர் ராஜன் ஒவ்வொரு பதிவாக இட்டு வருகிறார். படித்து தெளிவுறுங்கள்.

http://generationneeds.blogspot.com/2012/03/blog-post_16.html

suvanappiriyan said...

சலாம் சகோ நாஸர்!

//அஸ்ஸலாம் அலைக்கும் ....சகோஸ்,

மற்றுமோர் ஆதாரபூர்வமான சான்று .....
தங்களுக்கு சிறந்த கல்வி அறிவை அல்லாஹ் தந்தருளவேண்டுமென,
தூவா செய்கிறேன் .....ஆமின்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ இப்றாம்சா!

//அப்புறம் மிச்ச சொச்சம் இருந்தவுங்களையும் "வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்" வந்து அலேக்காத் தூக்கிட்டுப் போய்ட்டாரு. இஸ்லாமும், பெரியாரும் வரலைன்னு வச்சுங்க எங்க திராவிடர் கதி அதோ கதிதான்ங்கன்னா, இப்போ புரியுதா?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஷஃபி அப்துல் அஜீஸ்!

//இங்கே யாரும் அஞ்சுக்கும் பத்துக்கும் கூவவுமில்லை அஞ்சுக்காகவும் பத்துக்காகவும் மாறவுமில்லை.//

வருகைக்கும் ராவணனுக்கு அழகிய முறையில் பதில் அளித்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//ராவணனுடைய மீதி ஒன்பது தலைகள் தலைக்கொன்றாக் திருவாய் மலர்வதையும் கேட்டுக்கலாம்.

பேராசிரியர் மஹா “லிங்கம்”, தத்துவ ஞானி தர்ம “லிங்கம்” எல்லாம் ராவணன் கிட்டே தூள் தூளாகிவிடுவார்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

//Anonymous said...
இஸ்லாம் அளவுக்கு, தம் மத மக்களையே கொன்று குவித்த மதமோ, மார்க்கமோ வேறில்லை. அனைத்து மதங்களை ஒப்பிட்டு பார்த்தப்பிறகு, நீங்கள் சொல்வதை ஒப்பு கொள்ள தான் வேண்டும், அது தனித்துவமானதே என்று. //

கொலை மற்றும் கொள்ளைக்கு பைபிளின் வழிகாட்டல்: PART 1

படையெடுத்து செல்லும் இடங்கள் கைப்பற்றப்பட்டால் சிறை பிடிக்கப்பட்ட ஆண்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமாம்!

ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்நாடு வெற்றி கொள்ளப்பட்டால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் வெட்டிப் படுகொலை செய்ய வேணடும் என்றும் பைபிள் உபதேசம் செய்கிறது.

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி.... (உபாகமம் - 20:13)

ஒரு நாட்டின் மீது அத்து மீறி படையெடுத்துச் சென்றால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஆண்களையும் வெட்டி சாய்க்க வேண்டும்.

இதுவே இறைகட்டளை என்றல்லவா மேற்கண்ட பைபிள் வசனம் குறிப்பிடுகிறது?

மேற்கண்ட பைபிளின் வரிகளையும் சிலுவை யுத்தங்களில் நடைபெற்ற வன் கொடுமைகளையும் சற்று நினைவு கூறுங்கள்.

அது ஒரு புறம். ஈராக் மற்றும் ஆப்கானில் நடைபெற்ற ஈவு இரக்கமற்ற படு கொலைகளையும்

சமீபத்தில் இஸ்ரேலில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும்


மேற்கண்ட பைபிளின் வசனத்தையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்?

இதைச் செய்தது யார்? அதே பைபிளை வேதமாகப் பின்பற்றும் பைபிளின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுக்கும் அமெரிக்க, இஸ்ரேல் ஆதிக்க சக்திகள் தானே?

இப்போது சொல்லுங்கள் பயங்கரவாதம் எங்கிருந்து உபதேசிக்கப்படுகிறது?


கொள்ளையடிக்க வேண்டும்

ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றால் அந்நாட்டு மக்களின் உடைமைகளை கொள்ளையிட வேண்டும் என்றும் அவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்களை அனுபவிக்க வேண்டும் என்றும் பைபிள் உபதேசம் செய்கிறது.

பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக (உபாகமம் - 20:14)

ஃபலஸ்தீன் மண்ணை அக்கிரமமாக ஆக்கிரமித்ததுடன் இருக்கும் மிச்சம் மீதி இடங்களையும் ஆக்கிரமிக்கும் கொடுமையான எண்ணத்துடன் அம்மக்களை அடக்கி யுத்தம் செய்து,

மக்களின் அடிப்படை தேவைகளான மின்சாரம், குடிநீர் போன்றவற்றைக் கூட அவர்களுக்குச் செல்ல விடாமல் தடைவிதித்து,

பலஸ்தீனையே சிறைசாலையாக உருமாற்றி இனப்படுகொலைகள் நடத்தும் இஸ்ரேலின் ஈனச் செயலும்

“பயங்கர ஆயுதங்கள் உள்ளன” என்ற பொய்க் காரணம் கூறி ஈராக்கை ஆக்கிரமித்து

இப்போது இரானையும் சீண்டி

முஸ்லிம் நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட நினைக்கும் ஆதிக்க சக்திகளின் செயலையும்
பைபிளின் மேற்கண்ட உபதேசத்தையும் சற்று நினைத்துப் பாருங்கள்.
அந்தப் பைபிளின் மீது கை வைத்து தானே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்?சொடுக்கி >>>>>
கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா? பிடிப‌ட்ட‌ கன்னிப்பெண்க‌ளிலும் அப‌கரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் கால்ந‌டைக‌ளிலும் கர்த்த‌ர் ஆணைப்படி க‌ர்த்தருக்குள்ள பங்கு.-
<<<<<< படியுங்கள்


இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து

தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5. 19:26)

சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34. 12:39. யோவான் 8:44)

முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17. மத்தேயு 21:19)

திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11)

அறிமுகப்படுத்துகின்றது.

Continued…….

UNMAIKAL said...

கொலை மற்றும் கொள்ளைக்கு பைபிளின் வழிகாட்டல்: PART 2

பைபிள் படுகொலைகள்.

1492 இல் வெள்ளையினவாதிகள் உருவாக்கிய பைபிளின் துணை கொண்டு,

பைபிள்வாதிகள் தமது காலனியாதிக்க நோக்கத்துக்காக,

அமெரிக்காவை தற்செயலாக (பைபிள் உருவாக்கிய கடவுளுக்கு அமெரிக்கா இருந்தது தெரியாது) பைபிள் வாதியான கொலம்பஸ் கண்டுபிடித்தன்.

பைபிளுக்கு வெளியில் இருந்த ஐரோப்பிய அறிவியல் வரைபடங்களில் அமெரிக்கா உள்ளிட்ட உலக வரைபடம் இருந்தும், பைபிளின் ஆசி பெற்ற படுகொலை காலனிய செய்திதான், அமெரிக்க வரலாறும் நினைவுகளுமாகியது.

இதற்கு முன்பே, அங்கு மக்கள் இருந்த வரலாற்றையே இவர்கள் மறுத்தனர். அவர்களை காட்டு விலங்குகள் என்ற சித்தரித்தனர். பைபிள் இந்த மக்கள் கூட்டத்தைப் பற்றி என்றும் பேசியதில்லை.

அவர்களை மனிதர்களாக கூட எற்றுக் கொள்ளவில்லை.


ஒரு கையில் பைபிளும் மறு கையில் ஆயுதமாக அந்த மக்களை வேட்டையாடிய பைபிளின் விசுவாதிகள், அங்கு துப்பாக்கியின் அதிகாரத்தில் சபைகளை உருவாக்கியதுடன், 340 தூக்கு மேடைகளை நிறுவி 50000 பேரை கழுவேற்றி படு கொலையும் செய்தானர்.

துப்பாக்கியின் பாதுகாப்புடன் பைபிளை தூக்கியபடி 1492 இல் இறங்கிய ஹெத்தி மற்றும் டொமினிகள் தீவில் வாழ்ந்த 30 லட்சம் பேரை, 40 வருடங்களின் பின்பு அதாவது 1532 இல் வெறும் 300 மக்களைத் தான் உயிர் வாழ விட்டுவைத்தனர் பைபிள் சபையினர்.

மிகுதி அனைவரையும் வலுக்கட்டயமாக படுகொலை செய்து கத்தாரிடம் அனுப்பி வைத்தனர்.

இன்று அமெரிக்கா என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் அன்று வாழ்ந்த இரண்டு கோடிப் பேரை, இன்று வெறும் 16 லட்சமாக்கினர் பைபிள்வாதிகளும் பைபிள் சபையினரும்.

மெக்சிக்கோவில் பைபிள் வாதிகள் பைபிளுடன் புகுந்த போது வாழ்ந்த 2.5 கோடி மக்களில் இன்று எஞ்சியிருப்போர் வெறும் 20 லட்சம்தான்.

கொன்று பரலோகம் அனுப்பிவைத்தது போக 4000 பேராக மட்டும் எஞ்சியிருந்த "சேயன்" இனமக்களை காயடித்தனர் பைபிளின் சபையைச் சேர்ந்த பைபிள்வாதிகள்.

வேர்ஜினிய பழங்குடி மக்களின் குழந்தைகளை பைபிளின் பெயரில் கட்டயமாக பறித்துச் சென்றனர். பைபிளின் ஆசிபெற்று போர்வையைக் கொடுத்தே, அம்மக்களின் நிலங்களை ஏமாற்றி ஏழுதி வாங்கிக் கொண்டனர்.

இதை எல்லாம் செய்த பைபிள் சபையைச் சேர்ந்த அதன் பாதுகாவலனான கொலம்பஸ் சொன்னான் ".. புதிய ஜானுக்கு இறைவன் கூறிய புதிய உலகம், புதிய சொர்க்கம் ஆகியவற்றுக்கு என்னையே துதனாக்கியிருக்றார். அதை கண்டுபிடிக்கவும் அவரே எனக்கு வழி காட்டினர்." என்றான்.

அற்புதங்களையும், அதிசயங்களையும் ஈவு இரக்கமின்றி உருவாக்கி பைபிள் செய்தியை உலக முழுக்க காலனியாதிக்கத்துடன் விரிவாக்கி, சாட்சியங்களைக் கூட கொலம்பாஸ் மூலம் கடவுள் வெளியிட்டுள்ளார். இதுவே கொலம்பஸ் படு கொலை வரலாறும் செய்தியுமாகும்.

இன்று உலக முழுக்க பைபிளைக் கொண்டு சென்று பரப்பிய வரலாறுகள் எங்கும், துப்பாக்கியின் முனையில் உருவான காலனிய வரலாற்றின் அடக்குமுறையிலான அதிகாரத்தில் தான, பைபிள் உலகச் செய்தியானது.

உலகம் முழுக்க ஒரு கையிலும் பைபிளும், மறு கையில் ஆயுதத்துடன் புகுந்த பைபிள்வாதிகள் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை படுகொலை செய்தனர்.

அடக்கியாள படுகொலை மூலம் உருவாக்கிய இரத்ததையும் உயிருள்ள சதையையும் உரமாக்கி, அதில் வறுமையை விதைத்து உலகைச் சூறையாடி மூலம், வெள்ளையினத்தவனின் நாடுகளை செல்வங் கொழிக்கவைத்தனர்.

பைபிள் வசனங்களை உலகச் சட்டமாக கொண்டு, அதற்கு கட்டுப்பட மறுத்த மக்களை மிருகத்தனமாக வேட்டையாடினர்.

தொடர்ச்சியாக வன்முறை அல்லாத வகையிலும் பொருளாசை காட்டியும், வேலை கொடுத்து மக்களை ஏமாற்றியும், பைளின் செய்தியை சபைகள் மூலம் கொண்டு சென்று காலனியாதிக்கத்தின் எடுபிடிகளை உருவாக்கினர்.

இன்றும் பைபிள் வாதிகள் விசுவாசத்துடன் அதன் பின் தான் தமது உலகமயமாதலை விரிவாக்கின்றனர்.

மக்களை மந்தையாக்குவதன் மூலம், மூலதனத்தின் விரிவாக்கம் மக்களை தாழ்த்தி அடிமையாக்கின்றது.
தாழ்வுக்காக, எந்தளவுக்கு மக்கள் தங்களைத் தாங்கள் அடிமையாக்கி தாழ்த்துகின்றார்களோ, இதுவே கடவுளின் செய்தியாக ஆசியாக்கி விட, மேய்போர் இதை உலகமயமாதலின் செய்தியாக்கின்றனர்?

மக்கள் தங்களைத் தாங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்த்துகின்றனரோ, அந்தளவுக்கு சொத்துகள் சிலரின் கையில் குவிந்து செல்ல அதுவே அவர்களின் பைபிளின் ஆசியாகின்றது.

இதன் விளைவாக மக்கள், பைபிளின் ஆசி பெற்ற பரதேசியாகின்றனர்.

இதுதான் பைபிள் வாதிகளின் அடிப்படையானதும் கிறிஸ்துவின் நவீன ஆசிர்வாதமாகும்.

SOURCE: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3735:2008-09-08-17-42-35&catid=70:9600

தொடரும்....

UNMAIKAL said...

REPLY TO ANONYMOUS

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படுவதை விட‌ கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். PART 1.

இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?

நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பொன்னின் ஆகும் பொருபடை யப்படை
தன்னில் ஆகுந் தரணி தரணியிற்
பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)

பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)

என்று பாடியுள்ளார்.

இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன்
என்பதனை,

"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.


பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).


CONTINUED…..

UNMAIKAL said...

PART 2.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படுவதை விட‌ கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.


ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.

முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).


முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான்.

சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048 இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது.

மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.


1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

CONTINUED……

UNMAIKAL said...

PART 3.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படுவதை விட‌ கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.

1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.

3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.


திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:

கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.

கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.

தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.

பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.

சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்
(சாஸ்திரி, மேலது, 579).

பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.

சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான்.

தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.

"திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.

இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120).

பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.

தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.

இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)

ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு
யாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்தி
ஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்
கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக்

கொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும் விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,

CONTINUED….

UNMAIKAL said...

PART 4.


இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படுவதை விட‌ கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி
நிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர
சமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடி
இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு

பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்
சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்று
தேவன் திருவுளமாய் ஏவ,

விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,

சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்
இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்
இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்
வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,

பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமா
நல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .
வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,
திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,

சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்
களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்

சேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக
தேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்
ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியை
எழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது உ"

சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம்.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.

கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான்.

அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.

நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).


இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)

ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது).

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது.

பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.

60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.

CONTINUED…….

UNMAIKAL said...

PART 5.

பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.

அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).

தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:

அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) .

ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்ததாக கூறப்படுவதை விட‌ கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?

படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்.


முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.

அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான்.

இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.

தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.

பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.

இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்.


சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர்.

உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.

அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,

அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,

அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும்,


படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.

இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.


SOURCE: (மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.)

UNMAIKAL said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931) நன்றி: http://www.keetru.com/rebel/periyar/10.php

suvanappiriyan said...

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.
நன்றி: http://www.keetru.com/rebel/periyar/12.php

enrenrum16 said...

நல்ல தகவல் மட்டுமல்ல எதிர்ப்பு சொல்ல முடியாத ஆதாரங்களும் கொண்ட அருமையான பதிவு. பகிர்ந்ததற்கு நன்றி.

UNMAIKAL said...

மேலே UNMAIKAL என்று என் பெயரால்

1. UNMAIKAL said...
தந்தை பெரியார் பார்வையில் முஸ்லீம்களுக்கும், பார்ப்பணியத்துக்கும் மிக பெரிய வித்தியாசம் இல்லை. முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு என்று தொடங்கி

சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.
12:29 AM என்று முடியும்

2. UNMAIKAL said...
ஜோசியத்தில் வல்லவரான ஒரு மேதாவியானவன் என்று தொடங்கி

(06-03-1962- இல் "விடுதலை" நாளிதழில் பெரியார் ஈ.வெ. ரா. தலையங்கம்.)
12:30 AM என்று முடியும்

2 பின்னூட்டங்கள் யாரோ கருத்திட்டிருக்கிறார்கள்.

இதை நான் வன்மையாக கண்டிப்பதுடன் அவை இரண்டையும் உடனடியாக நீக்கும்படி சுவனபிரியன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

"UNMAIKAL" க்கு முன்னால் பிளாக்கர் லோகோ (BLOGGER LOGO)தோன்றியிருக்கும் அதுதான் என்னுடையது .

.

UNMAIKAL said...
This comment has been removed by a blog administrator.
truth said...

நண்பரே, UNMAIKAL என்கிற பெயரில் நான் அனுப்பிய பின்னூட்டத்தை எடுத்து விட்டீர்கள். இரண்டு பேர், ஒரே பெயரில் UNMAIKAL பேசக் கூடாதா?

suvanappiriyan said...

mr truth!

//நண்பரே, UNMAIKAL என்கிற பெயரில் நான் அனுப்பிய பின்னூட்டத்தை எடுத்து விட்டீர்கள். இரண்டு பேர், ஒரே பெயரில் UNMAIKAL பேசக் கூடாதா?//

நீங்கள் பேசியது உண்மையல்ல எனபது உங்களுக்கே தெரியுமே! அந்த பெயரில் வேறொரு பதிவர் இருக்கும் போது இந்த வேலை தேவையில்லாததுதானே! பெரியார் இஸ்லாத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பதை எனது பின்னூட்டத்தில் படித்து விட்டீர்களா?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

மாஷா அல்லாஹ் மற்றும் ஒரு அருமையான ஆக்கத்தை எங்களுக்கு அறியதந்த சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமின் இம்மையிலும் மறுமையிலும் மிக சிறந்த நற்கூலியைவழங்குவானாக ஆமீன்.

உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்