Followers

Tuesday, March 19, 2013

பரதேசி! -திரை விமரிசனம்

பரதேசி!

சினிமாக்கள் அதிகம் பார்ப்பதில்லை. இரண்டரை மணி நேரத்தை செலவிடும் அளவுக்கு அங்கு விஷயம் இருப்பதில்லை என்பதே சினிமாக்களை துறந்ததற்கு காரணம். தற்போது பலரின் விமரிசனங்களை பார்த்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாலாவின் பரதேசியை பார்த்தேன். மனம் கனத்தது. வெள்ளையர் ஆட்சியில் சொந்த மண்ணின் மைந்தர்கள் எந்த அளவு வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாக கொண்டு செல்லப் பட்டனர் என்பதை மிக அழகாக தனக்கே உரிய பாணியில் பாலா சொல்லியுள்ளார். தேயிலை தோட்டங்களில் எந்த அளவு கொடுமைகள் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

சினிமா என்ற வெகுஜன ஊடகத்தை இது போன்ற மறைக்கப்பட்ட செய்திகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போல் நமது தமிழகத்தில் மறைக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கின்றன. இது போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றால்தான் இன்னும் அதிகம் வெளி வரும். காதலை மையப்படுத்தி ஆபாசங்களை கடை விரிப்பதே தற்போதய சினிமாவாக மாறி விட்டது. அதனை பாலா, அமீர், பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் மாற்ற முன் வர வேண்டும்.

படத்தில் அந்த மக்களின் துயர் துடைக்க வந்த டாக்டரும் அவரது மனைவியும் அங்கும் தங்களின் மதமாற்ற வேலைகளை ஆரம்பித்து விடுவதை நகைச்சுவையாக சொல்லியுள்ளார் பாலா. சில ஊர்களில் மிஷினரிகளின் பெண்கள் பல வீடுகளுக்குள்ளும் அத்து மீறி நுழைந்து மத பிரசாரத்தை துவக்கி விடுவதைப் பார்க்கிறோம். ஒரு மனிதன் தனது பூர்வீக மதத்தில் வெறுப்புற்று இஸ்லாத்தையோ கிறித்தவத்தையோ பவுத்தத்தையோ பின் பற்ற முனைவதை குறை காண முடியாது. ஆனால் இங்கோ பால்பவுடரைக் காட்டியும், ரொட்டித் துண்டுகளைக் காட்டியும், பணத்தைக் காட்டியும் மத மாற்றம் நடைபெறுகிறது. இப்படி மதம் மாறுபவர்கள் அந்த மதத்தின் மேல் உண்மையான பற்றோடு இருக்க மாட்டார்கள். இதை விட அதிகமாக வேறு எங்கும் கிடைத்தால் அங்கு சென்று விடுவார்கள். மாற்றம் என்பது அவனது மனத்திலிருந்து உதயமாக வேண்டும். இதை ஏனோ கிறித்தவ மிஷினரிகள் உணருவதில்லை. எனவே தான் பெயரளவில் கிறித்தவர்களாக பலரை நாம் பார்க்க முடிகிறது. பெயர் மாத்திரமே மாறியிருக்கும். ஆனால் சாதி வேற்றுமை, தீண்டாமை, உருவ வழிபாடு என்று அனைத்தும் இன்று கிறித்துவத்திலும் பார்க்க முடிகிறதே அதற்கு காரணம் பணத்தை காட்டி மதத்தை வளர்த்ததுதான். இதனால் கிறிததவத்துக்கு என்ன நன்மை விளைந்து விடப் போகிறதோ தெரியவில்லை.

இங்கு சவுதியில் தமிழ் இந்து சகோதரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸலாத்தை தழுவுவதாக தனது எஜமானி அம்மாவிடம் சொல்லியுள்ளார். இவர் ஒரு வீட்டு டிரைவர். இதைக் கேட்ட அந்த பெண் 'எதை நினைத்து இஸ்லாத்தை தழுவ விரும்புகிறாய்?' என்று கேட்க 'எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்லியுள்ளார். அதற்கு அந்த பெண் 'முதலில் குர்ஆனை உனது தாய் மொழியில் படி. நபி மொழிகளையும் உனது தாய் மொழியில் படித்து உண்மையை தெரிந்து கொள். அதன் பிறகு பிடித்திருந்தால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று அந்த பெண் சொல்ல அதை என்னிடமும் அந்த நபர் சொல்லிக் கொண்டிருந்தார். 'உனது முதலாளியம்மா சொல்வது தான் சரி. அவர் சொல்வது போலவே முதலில் குர்ஆனை தெளிவாக படிக்கவும்' என்று அறிவுறுத்தினேன். தற்போது மிகத் தெளிவான சிந்தனைக்கு வந்து தனது குடும்பத்தையும் தமிழகம் சென்று இஸ்லாத்தில் ஐக்கியப்படுத்தியுள்ளார். இனி ஒரு பக்கம் நரேந்திர மோடியும் மறு பக்கம் அத்வானியும் நின்று கொண்டு தாய் மதம் திரும்புகிறாயா? இல்லையா? என்று கத்தியைக் காட்டி மிரட்டினாலும் தாய் மதம் அந்த சகோதரர் திரும்பப் போவதில்லை. அந்த அளவு இஸ்லாத்தோடு ஐக்கியமாகி விட்டார். உதாரணத்துக்கு நமது ஏ.ஆர்.ரஹ்மானையும், பெரியார்தாசனையும் கூட எடுத்துக் கொள்ளலாம். மன மாற்றம் என்பது இவ்வாறு வர வேண்டும். வெறும் பணத்துக்காகவும், பெண்ணுக்காகவும், உத்தியோகத்துக்காகவும் எடுக்கும் மதமாற்றம் விழலுக்கு இறைத்த நீராகவே சென்று விடும்.

அடுத்து வாழ்வில் சிரமப்படும் பலர் இறைவன் ஏன் எனக்கு இவ்வளவு சிரமத்தைக் கொடுக்கிறான் என்று புலம்புவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்களை மனதில் கொண்டு இவர்களை விட சிறப்பாகவே இறைவன் எங்களை வைத்திருக்கிறான் என்ற நிம்மதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போல் சம்பாத்தியத்தை குடியிலேயே அழித்து வரும் பல குடிமகன்கள் ஆடம்பர செலவு செய்து வரும் சுக போகிகள் தங்களுக்கு கிடைத்த சிறந்த வாழ்வை பாழாக்காமல் இது போன்ற படங்களைப் பார்த்து திருந்த முயற்சிக்க வேண்டும்.

பல முதல்வர்களை உருவாக்கியது இந்த சினிமா. அந்த அளவு அதனோடு ஒன்றிணைந்து பல தமிழர்கள் இருப்பதாலேயே சினிமாவைப் பார்ததாவது திருந்துங்கய்யா என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. :-(





17 comments:

Unknown said...

திரை விமர்சனம் நன்று ...

சுவனப்பிரியன் , படப்ப்ரியன் ஆகாமல் இருந்தால் நன்று ..
[சும்மா ஜோக்குக்கு ]

Anonymous said...

நான் தங்களது பதிவுகளை பார்த்தேன் எல்லாம் அருமை. இனஸால்லா உங்களது ஆயுளை நீட்டி மேலும் மேலும் பல தொண்டு செய்ய எல்லாம் வல்ல அல்லா கிருபை செய்யட்டும். ஆமீன்...
நிறைய எழுத ஆசைதான் ஆனால் தமிழில் டைப் செய்வது கடிணமாக இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்,
உங்கள் சகோதரன்.
ஷாஜஹான், தம்மாம்

சிராஜ் said...

அண்ணன்...

இந்த சாக்குல படம் பார்த்திட்டீங்க போல?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

suvanappiriyan said...

சகோ சுல்தான்!

//திரை விமர்சனம் நன்று ...

சுவனப்பிரியன் , படப்ப்ரியன் ஆகாமல் இருந்தால் நன்று ..
[சும்மா ஜோக்குக்கு ] //

ஹா..ஹா...

சுவனப்பிரியனாகவும், படப் பிரியனாகவும் ஒரே ஆள் இருக்க முடியாதல்லவா! அவ்வப்போது இது போன்ற சிறந்த படங்களை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வேன். தொடர்வது கிடையாது. அதற்கு நேரமும் கிடையாது. :-)

suvanappiriyan said...

சகோ ஷாஜஹான்!

//நான் தங்களது பதிவுகளை பார்த்தேன் எல்லாம் அருமை. இனஸால்லா உங்களது ஆயுளை நீட்டி மேலும் மேலும் பல தொண்டு செய்ய எல்லாம் வல்ல அல்லா கிருபை செய்யட்டும். ஆமீன்...
நிறைய எழுத ஆசைதான் ஆனால் தமிழில் டைப் செய்வது கடிணமாக இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்,
உங்கள் சகோதரன்.
ஷாஜஹான், தம்மாம்//

பிரார்த்தனைக்கு நன்றி!

தொடர்ந்து தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்.

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//இந்த சாக்குல படம் பார்த்திட்டீங்க போல?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... //

பதிவு எழுதுவதற்காகவே சில படங்ளைப் பார்ப்பதுண்டு. அந்த வகையில் இதுவும் ஒன்று. :-)

saleem said...

சகோதரரே,

உங்கள் எழுத்து தொண்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கும் உங்களை போன்று ஒரு நல்ல தொண்டு புரிய வேண்டுமென்று விருப்பம் உள்ளது.
ஆனால் நீங்கள் பதில் அளிப்பது போன்று என்னால் உடனடியாக சரியான பதில் அளிக்க முடியாது என்ற பயம் இருக்கிறது. என்னிடம் பலர் கேள்விகள் கேட்டாலும் நான் மற்ற விளக்கம் அறிந்த நபர்களின் உதவியுடன் தான் பதில் அளிப்பேன்.

அன்புடன்,
saleem

suvanappiriyan said...

சகோ சலீம்!

//உங்கள் எழுத்து தொண்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கும் உங்களை போன்று ஒரு நல்ல தொண்டு புரிய வேண்டுமென்று விருப்பம் உள்ளது.
ஆனால் நீங்கள் பதில் அளிப்பது போன்று என்னால் உடனடியாக சரியான பதில் அளிக்க முடியாது என்ற பயம் இருக்கிறது. என்னிடம் பலர் கேள்விகள் கேட்டாலும் நான் மற்ற விளக்கம் அறிந்த நபர்களின் உதவியுடன் தான் பதில் அளிப்பேன்.//

எனக்கும் ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. துணிந்தால்தான் எதனையும் சாதிக்க முடியும். களத்தில் இறங்குங்கள். பதில் தானாக வரும்.

Unknown said...

சந்தடி சாக்கில் திரு. சுவனப்பிரியர் , கிறிஸ்தவங்க மத மாற்றம் செய்றாங்க, அவிங்க ரொம்ப கெட்டவங்க, நாங்க ரொம்ப நல்லவங்க என்று புழுங்கி இருக்கிறார். பாலா கிறிஸ்தவ மத மாற்றத்தை தன்னுடைய படத்தில் காட்டியதால் சுவனப்பிரியருக்கு பதிவு எழுதுவதற்கு குதூகலமான ஒரு விசயம் கிடைத்தது. தன்னுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார் ஆனால் பாலா இஸ்லாமியர்களின் மத மாற்ற கேவலங்களை தன்னுடைய படத்தில் காட்டி இருந்தால், பொங்கி எழுந்து பலர் பதிவு எழுதி இருப்பார்கள், மூலைக்கு மூலை கொடி பிடித்து கொண்டு கோஷம் போட்டிருப்பார்கள். கிறிஸ்தவர்களின் மத மாற்றத்தை பற்றி எழுதும்போது இவரது கூட்டத்தினர் நடத்தும் தாவா கூத்துக்களை அப்படியே மறந்து விட்டார் போல் இருக்கிறது.

//படத்தில் அந்த மக்களின் துயர் துடைக்க வந்த டாக்டரும் அவரது மனைவியும் அங்கும் தங்களின் மதமாற்ற வேலைகளை ஆரம்பித்து விடுவதை நகைச்சுவையாக சொல்லியுள்ளார் பாலா. சில ஊர்களில் மிஷினரிகளின் பெண்கள் பல வீடுகளுக்குள்ளும் அத்து மீறி நுழைந்து மத பிரசாரத்தை துவக்கி விடுவதைப் பார்க்கிறோம்.//
அப்படியா ! உங்க அண்ணாச்சிமார் இதெல்லாம் செய்வதில்லையா? படிக்க போகும் இடத்தில சக இஸ்லாமிய மாணவர்களால், பணிக்கு போகும் இடத்தில சக இஸ்லாமிய நபர்களால் மத மாற்ற வேலைகள் நடக்கவில்லையா, உங்கள் தாவா கூட்டத்தினர் வீடு வீட்டுக்கு புகுந்து மத பிரச்சாரம் செய்வதில்லையா, உமது வஹாபி கூட்டம் எங்கள் ஊர்களில் வந்து 'உங்கள் மதம் தவறு எங்கள் மதம் யோக்கியம் " என்று துண்டு நோட்டீஸ் கொடுப்பதையும் பிரச்சாரம் செய்வதையும் , பார்க்கிறேனே அதெல்லாம் பிரியாணி வியாபாரத்திற்காக செய்கிறார்களா? அதெல்லாம் உங்கள் பார்வையில் படுவதில்லை என்றால் உமது பார்வையினை முதலில் சரி செய்யவும்.

//ஒரு மனிதன் தனது பூர்வீக மதத்தில் வெறுப்புற்று இஸ்லாத்தையோ கிறித்தவத்தையோ பவுத்தத்தையோ பின் பற்ற முனைவதை குறை காண முடியாது. ஆனால் இங்கோ பால்பவுடரைக் காட்டியும், ரொட்டித் துண்டுகளைக் காட்டியும், பணத்தைக் காட்டியும் மத மாற்றம் நடைபெறுகிறது. இப்படி மதம் மாறுபவர்கள் அந்த மதத்தின் மேல் உண்மையான பற்றோடு இருக்க மாட்டார்கள்.//

அப்படிங்களா அண்ணே. உங்க வஹாபி கூட்டம் செய்யிற கேவல தாவா பற்றி சொல்லட்டுமா, அல்லாவ ஏத்துக்கிட்டா உனக்கு அழகான பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறோம், அரபு நாடுகளில் வேலை வாங்கி தருகிறோம், வீடு கட்டி தருகிறோம், வசதியான வாழ்க்கை தருகிறோம் என்று இதே தமிழ் நாட்டில் உமது கூட்டம் தாவா செய்து வருவது உமது குருட்டு கண்ணுக்கு தெரியவில்லையா சுவனரே, உமது கூட்டம் செய்வதால் மட்டும் அது சரியானதாகி விடுமோ.

Unknown said...

//எனவே தான் பெயரளவில் கிறித்தவர்களாக பலரை நாம் பார்க்க முடிகிறது. பெயர் மாத்திரமே மாறியிருக்கும். ஆனால் சாதி வேற்றுமை, தீண்டாமை, உருவ வழிபாடு என்று அனைத்தும் இன்று கிறித்துவத்திலும் பார்க்க முடிகிறதே அதற்கு காரணம் பணத்தை காட்டி மதத்தை வளர்த்ததுதான். //

என்னவோ கிறிஸ்தவத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறதே என்று ரொம்ப வருத்த பட்டு பிலிம் எல்லாம் காட்டி இருக்கிறீர்களே அண்ணாச்சி, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அளுத கதை சொல்வார்கள் தெரியுமா, அது தான் நினைவு வருகிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, உருவ வழிபாடு எல்லாம் இருக்கிறது, மறுக்கவில்லை. சாதி வேறுபாடும், தீண்டாமையும் கிறிஸ்தவமா சொல்லி கொடுத்தது, உமது கூட்டத்தினர் தீவிரவாதிகள் என்று சொன்னால், 'இஸ்லாம் தீவிரவாதம் போதிக்கவில்லை, அது யோக்கிய மார்க்கம் உத்தம மார்க்கம், என்று முழங்கி தள்ளுகிரீரே, தீண்டாமையையும் சாதி வேற்றுமையையும் கிறிஸ்தவமா போதித்தது. எங்களை சொல்கிறீரே அண்ணாச்சி எங்க ஊரு பக்கம் ஒரு பள்ளிவாசலில் "பெண்களுக்கும் பிற மதத்தவருக்கு இங்கே அனுமதி இல்லைன்னு " பெரிய போர்டு தொங்குது தெரியுமா?
அதுக்கு பேரு என்னங்க? தீண்டாமை இல்லையோ, சாதி வேறுபாடு பார்ப்பது தீண்டாமை என்றால் மத வேறுபாடு பார்ப்பது தீண்டாமை தான். முதலில் உமது துருத்தியை சரி செய்யும். சொரணை இல்லாமல் அடுத்தவனை குறை கூறாதீர்.
யார் உருவ வழிபாடு செய்தால் உமது கூட்டத்திற்கு என்னய்யா வந்தது? பிற மதத்தவன் சிலை வைத்து வணங்கினால் என்ன படம் வைத்து வணங்கினால் என்ன? உங்க சோலிய பார்த்துட்டு போக வேண்டியது தானே? சிலை வைத்து வணங்குபவன் எல்லாம் பிச்சை எடுத்து கொண்டா இருக்கிறான். அல்லது உமது கூட்டம் இருக்கும் நாடுகள் எல்லாம் மக்கள் பட்டு மெத்தையில் படுத்து கொண்டு சுற்றி ஐந்தாறு மனைவிகளை வைத்து கொண்டு, சொர்க்க ஹூருல் ஈன்களை நினைத்து கனவு கண்டு கொண்டிருப்பதாகவா கூறுகிறீர்? இல்லை அண்ணாச்சி, உலகில் தரித்திரம் பிடித்த நாடுகள் எல்லாம் அல்லாவின் பிள்ளைகளின் நாடுகள் தான். ஏதோ ஓன்று இரண்டு நாடுகள் எண்ணை வளத்தால் பணக்காரர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களால் ஏழை முஸ்லிம் நாடுகளுக்கு என்ன செய்து கிழித்து விட்டார்கள். என்னவோ இஸ்லாம் தான் பெரிய இது என்று புலம்பி தள்ளுகிறீர்கள்? உமது கூட்டம் நுழைந்த எந்த நாடு அமைதியாக இருக்கிறது. உமது தரித்திர துலுக்க கூட்ட்டம் எங்கே நுழைகிறதோ அங்கே பீடை பிடித்து கொள்கிறது. ஒரு காலத்தில் சீரோடும் சிறப்போடும் இருந்த இங்கிலாந்து, உமது பாலைவன தரித்திர கூட்டத்தை பெரும் அளவில் அனுமதித்த நாளில் இருந்து அங்கே கிரகம் பிடித்தது, அதே நிலை தான் அமெரிக்கவிற்கும்

//இதனால் கிறிததவத்துக்கு என்ன நன்மை விளைந்து விடப் போகிறதோ தெரியவில்லை. ////

கிறிஸ்தவத்திற்கு நன்மை விளைவது இருக்கட்டும், உமது கூட்டத்தால் உலகிற்கு என்ன நன்மை விளைந்தது, என்ன நன்மையை உலகிற்கு செய்து கிழித்து விட்டீர்கள், என்ன சாதனையை செய்து விட்டீர்கள் நன்றாக மூளை சலவை செய்து உலகம் எங்கும் ஒரு பெரும் முட்டாள் இனத்தை பெருக்கியதை தவிர, எந்த நன்மை உமது கூட்டத்தால் உலகிற்கு ஏற்பட்டது. பன்றி கூட்டம் பெற்று தள்ளுவதை போல் பெற்று தள்ளிவிட்டு "இஸ்லாம் வளருகிறது, உலகம் இஸ்லாமிய மயம் ஆகிறது" என்று சங்கு ஊதா வேண்டியது. இந்த பன்றி கூட்டம் பிழைக்க போகும் இடத்தையும் நாறடிக்கிறது, சொந்த நாட்டையும் காபிர் நாடு என்கிறது, சோறு போடுபவனையும் காபிர் என்கிறது. இந்த கூட்டம் தான் எப்போதும் பிறரையும் குறை சொல்கிறது. வெட்கம் கெட்ட ஈன பிறவிகள்.

சுவன அண்ணாச்சி - மற்ற மதத்தவர்கள் எல்லாம் ஒழுங்காக தான் இருக்கிறார்கள், நீர் முதலில் உமது தீவிரவாத கூட்டத்தை திருத்தி விட்டு பிறருக்கு அறிவுரைசொல்லி பதிவு எழுதும்.
எப்பவும் அடுத்தவன் வீட்டு கழிப்பிடத்தை எட்டி பார்த்து 'அய்யே அசிங்கமா இருக்கு என்று எழுதாதீர், முதலில் உமது வீட்டு கழிப்பிடத்தை சுத்தம் செய்யும், பிறகு அடுத்தவரை பார்க்கலாம்.
வந்துட்டாரு பெரிய யோக்கிய சிகாமணி

suvanappiriyan said...

//அப்படிங்களா அண்ணே. உங்க வஹாபி கூட்டம் செய்யிற கேவல தாவா பற்றி சொல்லட்டுமா, அல்லாவ ஏத்துக்கிட்டா உனக்கு அழகான பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறோம், அரபு நாடுகளில் வேலை வாங்கி தருகிறோம், வீடு கட்டி தருகிறோம், வசதியான வாழ்க்கை தருகிறோம் என்று இதே தமிழ் நாட்டில் உமது கூட்டம் தாவா செய்து வருவது உமது குருட்டு கண்ணுக்கு தெரியவில்லையா சுவனரே, உமது கூட்டம் செய்வதால் மட்டும் அது சரியானதாகி விடுமோ.//

தவறான தகவல். முஸ்லிம்கள் பிரசாரம் செய்வது அனைத்தும் குர்ஆனின் அடிப்படையில்தான். கிறித்தவ பிரசாரம் பைபிளை அடிப்படையாக வைத்து அல்ல எனபது உங்களுக்கும் தெரியும்.

//யார் உருவ வழிபாடு செய்தால் உமது கூட்டத்திற்கு என்னய்யா வந்தது? பிற மதத்தவன் சிலை வைத்து வணங்கினால் என்ன படம் வைத்து வணங்கினால் என்ன? உங்க சோலிய பார்த்துட்டு போக வேண்டியது தானே? //

அந்த உருவ வழிபாட்டை ஏசுவை மையமாக வைத்து சொல்வதால்தான் நாங்களும் கேள்வி கேட்கிறோம். ஏசு சொல்லாத ஒரு செயலை அவர் பெயரை உபயோகப்படுத்தி பிரசாரம் செய்வது தவறுதானே!

//இல்லை அண்ணாச்சி, உலகில் தரித்திரம் பிடித்த நாடுகள் எல்லாம் அல்லாவின் பிள்ளைகளின் நாடுகள் தான். ஏதோ ஓன்று இரண்டு நாடுகள் எண்ணை வளத்தால் பணக்காரர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களால் ஏழை முஸ்லிம் நாடுகளுக்கு என்ன செய்து கிழித்து விட்டார்கள். என்னவோ இஸ்லாம் தான் பெரிய இது என்று புலம்பி தள்ளுகிறீர்கள்? உமது கூட்டம் நுழைந்த எந்த நாடு அமைதியாக இருக்கிறது. //

அமைதியாக இருந்த அந்த நாடுகளில் அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும் என்று புகுந்ததோ அன்று ஆரம்பித்ததுதான் பிரச்னை. எனவே இந்த பிரச்னைகளின் சூத்திரதாரிகள் கிறித்தவர்களே என்பதை மறுக்க முடியுமா?



Anonymous said...

poovannan on March 21, 2013 at 11:11 pm

கிருத்துவத்தை திட்டுவதை யாரும் குறை கூறவில்லை.அதில் உள்ள மூட நம்பிக்கைகள்,கிருத்துவர்கள் செய்த கொடுமைகளை யாரும் மறைக்க சொல்லவில்லை.கிருத்துவத்தில் இருக்கும் சாதி வித்தியாசங்களை பார்த்து காரி உமிழ்வதை நான் எதிர்க்கவில்லை

கிருத்துவத்தையும்,அதன் நம்பிக்கைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும்,விமர்சியுங்கள்,படம் எடுங்கள் ,புத்தகம் எழுதுங்கள்.ஆனால் தைரியமான மக்களால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவான எந்த தொழில் செய்ய வேண்டும்,எங்கு வசிக்க வேண்டும்,என்ன படிக்க வேண்டும் ,பிறக்கும் குழந்தைக்கு போலயோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டுமா இல்லை மாட்டு மூத்திரம் கொடுக்க வேண்டுமா என்பதை சீர்தூக்கி பார்த்து தன முன்னோர்கள்,தலைவர்கள் மாட்டு மூத்திரம் தான் கொடுத்தார்கள்,கொடுக்கிறார்கள் என்பதால் அதை தான் கொடுக்க வேண்டும் என்றவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தனக்கு சரி என்று பட்டதை கொடுத்தவர்களை,எந்த கடவுளை கும்பிட வேண்டும் என்று உதவாத கடவுள்களை தூக்கி போட்டு விட்டு சென்றவர்களை அப்படி செய்ய தைரியம் இல்லாமல் பிறப்பால் வந்த சாதி,மதம்,சாமி,சடங்குகளை பிடித்து தொங்கி கொண்டிருப்பவர்கள் வன்மத்தால் நக்கல் செய்வது சரியா

உலக வரலாற்றில் மத மாற்றத்திற்கு ஆதரவானவர்,அதற்காக போராடியவர்,அதை பலரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர்கள் யார் யார் என்று பார்த்தால் உலகத்தில் உள்ள பல மதமாற்ற ஆதரவாளர்களை விட பல மடங்கு உயரத்தில் நிற்பவர் அம்பேத்கர் தான்.அவரை மதமாற்ற எதிர்ப்புக்கு பயன்படுத்தி கொள்ள நினைப்பது சரியா
மதம் மாறியே தீருவேன் என்று உறுதி கொண்டு வாழ்ந்தவர்.அதனால் பல கோடி மக்களின் வாழ்வில் தைரியத்தை,முடிவு எடுக்கும் உரிமையை கொண்டு வந்தவர் அவர்.அவருக்கு பிடித்த மதத்திற்கு அவர் மாறினார்,இழிவாக கருதிய பிறப்பால் திணிக்கப்பட்ட மதத்தை உதறி விட்டு
அதை தானே மதம் மாறும் ஒவ்வொருவரும் செய்கின்றனர்

Anonymous said...

R Balaji on March 22, 2013 at 11:18 am

மதமாற்றங்கள் சரியா, தவறா என்ற விவாதத்தினுள் நான் இங்கு உட்புக
விரும்பவில்லை. மனித உளவியலின்படி இதை புரிந்து கொள்ள முயற்சிப்பவன்
நான். சில கருத்துகளைக் கொண்டும் உள்ளேன்.

(1) Placebo Effect என்ற ஒன்றைப் பற்றி கூறிவிட்டு இதற்கு வருகிறேன். நவீன
மருத்துவத்தில் எந்த ஒரு புதிய மருந்தையும், விலங்குகளுக்குப் பின்
மனிதர்களில் ஒரு சிலருக்கு பரிட்சை செய்து பார்ப்பார்கள். 100 பேருக்கு ஒரு புதிய
மருந்தை கொடுக்கையில், 10 பேருக்கு Placebo, அதாவது போலி (அரிசி மாவு என்று
வைத்துக் கொள்ளலாம்) மாத்திரையைக் கொடுப்பார்கள். உண்மையான மருந்து
கொடுக்கப்பட்ட 90 பேரில் 80 பேருக்கு நோயிலிருந்து நிவாரணமும், போலியான
மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு நிலையில் மாற்றமில்லாமையும்
இருந்தால் மருந்து சந்தைக்கு வந்து விடும்.

இதில், உண்மையான மருந்தில் குணமாகாத 10 பேருக்கு வீரியம் அதிகமுள்ள
அல்லது வேறு மருந்தை கொடுத்தால் குணமாகும் என்று வைத்துக்கொண்டு
விடலாம். ஆனால் போலியான மருந்தை உட்கொண்ட 2 பேர் குணமடைந்ததாக
கூறுவார்கள். அதில்தான் அறிவியலால் இதுவரை தீர்க்கமுடியாத, முழுமையாக
புரிந்து கொள்ள முடியாத “மனித உளவியல்” அடங்கியுள்ளது. அரிசி மாவை தின்று
விட்டு நோய் குணமடைந்து விட்டது என்று கூறுபவர்களை நம்பி, சமூகத்தில்
அனைவர்க்கும் அரிசி மாவை அளித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

இந்த “மனித உளவியல்தான்” இந்த மதமாற்றத்திற்கு காரணம் என்பது என் கருத்து.

(2) பழங்காலத்திய மனிதன், இயற்கை பேரிடர், தொற்று நோய்கள், விலங்குகள்
என்று பல்வேறு இடர்களை தினப்படி வாழ்வில் சந்தித்துக் கொண்டே
இருந்தான். இயற்கையின் நியதிகளைக் குறித்து நவீன அறிவியல் அளித்துள்ள
விளக்கங்கள் அவன்வசம் இல்லாததால், ஏதோ ஒரு “பெரும் சக்தி” தன்னை
ஆளுகின்றது என்று திடமாக நம்பினான். அந்த இடர்களை அப்பெரும் சக்தியின்
துணை இருந்தால் மீண்டு வாழ முடியும் என்றும் நம்பத் தொடங்கினான். சில
நேரங்களில் அதிர்ஷ்டவசமாக நடக்கும் நிகழ்வுகளை அற்புதம் என்று அழைக்கத்
தொடங்கினான். பழங்காலத்திய மத, கலாச்சார கூறுகளில் இந்த அற்புதம் என்ற
கூறுதான் ஆணிவேராக இருக்கும்.

(3)ஏழாம் அறிவு திரைப்படத்தில் “போதி வர்மன்” சீனாவிற்கு சென்றவுடன் பிரசித்தி
அடைந்தது இதைக் கொண்டுதான். மரண படுக்கையில் உள்ள ஒரு குழந்தையின்
நோயை தீர்த்தவுடன் அவர் “பெரும் சக்தி”யின் வெளிப்பாடாக ஏற்றுக்
கொள்ளப்படுகிறார்.

(4)இயேசு கிறிஸ்து, தனது 32ம் வயதில், ஜெருசேலம் நகரினுள் வந்தவுடன்
செய்யும் முதல் காரியமே “Excorcism”தான். சாதா ஜுரத்திலிருந்து தீர்க்க
முடியாத அனைத்து நோய்களையும் “சாத்தானின் வேலை” என்று கூறி தீர்க்க
முயற்சித்தார். நான் முதலில் எழுதிய “மனித உளவியலின்” படி, ஒரு 5 பேருக்கு
நோய் சரியாகியிருக்கும். அவர்களின் சத்தம் அச்சமூகத்தில் அலையென பரவி,
அனைவரும் இயேசுவின் சீடர்களாக மாறியிருப்பார்கள். 100 நோயாளிகளை
சோதனை செய்திருந்தால், Success Percentage வெறும் 5ஓ 10ஓ என்று
வெளிப்பட்டிருக்கும். ஆனால் பழங்கால சமூகத்தில் இதற்கு சாத்தியம்
இருந்திருக்காது.

இது ஏதோ கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமான விஷயமல்ல. உலகின் அனைத்து
பகுதிகளிலும் இதுதான் நடந்திருக்கும். ஒருவர் வந்தால் மழை பெய்யும், அவர்
தீண்டினால் நோய் குணமாகும் என்று சில co-incidences அற்புதம் என்றபடி
விளங்கப்பெறும்.

(5)நான் இதை சரி, தவறு என்று விளக்கப்புகவில்லை. வேறு Alternatives இல்லாத
பழங்காலத்திய சமூகத்தில் இது அற்புதமான “உளவியல் சாதனமாக”
இருந்திருக்கும்.

(5)சரி, நான் மதமாற்றத்தைப் பற்றி கூற வருகிறேன். நவீன சமூகத்தில், இது
போன்ற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மதங்களுக்கு
ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. இதை நான் விளக்க வேண்டிய
அவசியமில்லை.

(6)ஆனால், சமூகத்தில் சிலருக்கு இந்த “அற்புதம்” என்ற “மனித உளவியல்”
இன்றும், என்றென்றும் தேவைப்படுகிறது.

உதாரணமாக, இத்திரைப்படத்தில் வரும் தலித்துகள் மிக மோசமான சுரண்டலுக்கு
உட்படுத்தப்படுகிறார்கள். தங்களுக்கு “ஒரு விடிவு” வராதா என்ற ஏக்கத்துடனேயே
இருப்பார்கள். ஏற்கெனவே அவர்கள் அனுசரிக்கும் மதத்தின் மேல்ஜாதிக்காரர்களே
சுரண்டுகையில், வேறு ஒரு பரிசுத்த கூட்டம் “அற்புதம்” என்ற கொள்கையை
முன்வைத்து, “இயேசு உனக்காக மரித்தார்”, “உனக்காக உயிர்த்தெழுந்தார்”, “உன்
பாவங்களை தீர்க்கும் சக்தி மிக்கவர்” என்று “மனித உளவியலின்” சில
தேவைகளை கொடுக்கும் போதே, இக வாழ்க்கைக்கு தேவையான சில அதிகாரம்,
பண வசதி போன்றவையும் அளிக்கப்படும்போது எந்த ஒரு சாதாரண மனிதனும்
மதம் மாறுவான் என்பதே என் கருத்து.

Anonymous said...

(7)அதைப் போன்றே மீனவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்திற்கு
மாறுவதையும் இப்படியே விளங்கிக்கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும்
“மரணத்தை” சந்திக்கும் மக்களில் இவர்கள் முக்கியமானவர்கள். இயற்கை
சீற்றத்தின் அனைத்து பரிமாணங்களையும் தினப்படி சந்திக்க வேண்டி
இருப்பதாலும், ஒவ்வொரு மீனவனும் ஒரு முறையேனும் மரணத்தின் எல்லை
வரை போய்விட்டு திரும்பிய அனுபவத்தை கொண்டிருப்பதாலும், “அற்புதம்” என்ற
கூற்றை அடிப்படையாகவே கொண்ட கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வது
என்னைப் பொறுத்தவரை இயற்கையான ஒரு நிகழ்வுதான்.

(8)தலித்துகளையாவது மதமாற்றத்திலிருந்து தடுக்க மேல்ஜாதி ஹிந்துக்கள்
திருந்தவேண்டும் என்று கூறலாம். அடுத்த சில தலைமுறைகளில் அது
நடக்கவும் செய்யலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, மரணத்தோடே
போராடும் மக்கள் தொகுதியினரான மீனவர் போன்றவர்களை கிறிஸ்தவ
மதமாற்றத்திலிருந்து தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டுமென்றால்,
கிறிஸ்தவத்துக்கு இணையான “அற்புத” ஹிந்து விளக்கங்களை நாம் பரப்ப
வேண்டி வரும்.

(9)இப்படியே, மிக மோசமான நோய்வாய்ப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்திற்கு
மாறுவது நடந்து கொண்டேதான் இருக்கும்.

(10) மதமாற்றம் என்னும் பெயரில் சமூகத்தை கெடுக்கும் பாதிரியார்களை நான்
ஆதரிக்கவில்லை. ஆதரிப்பதாக இருந்தால் நான் இந்த தளத்தினுள் வந்திருக்க
மாட்டேன். நான் “மனித உளவியலின்” படி இந்நிகழ்வை புரிந்து கொள்ள
முயற்சித்தேன். அவ்வளவே!

abu abdhullah said...


// உதாரணத்துக்கு நமது ஏ.ஆர்.ரஹ்மானையும், பெரியார்தாசனையும் கூட எடுத்துக் கொள்ளலாம். மன மாற்றம் என்பது இவ்வாறு வர வேண்டும். வெறும் பணத்துக்காகவும், பெண்ணுக்காகவும், உத்தியோகத்துக்காகவும் எடுக்கும் மதமாற்றம் விழலுக்கு இறைத்த நீராகவே சென்று விடும்//.

அ்ஸ்ஸலாமு அலைக்கும்
பெரியார்தாஸன் ஏஆர்ரஹ்மான் இவர்கள் இஸலாத்தை ஏற்றுக் கொண்ட மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள் ஏஆர்ரஹ்மான் கப்ரு வணங்கி பெரியார்தாஸன் எதில்இருக்கிரார் என்பதில் ஐயம்....

Unknown said...

//தவறான தகவல். முஸ்லிம்கள் பிரசாரம் செய்வது அனைத்தும் குர்ஆனின் அடிப்படையில்தான். கிறித்தவ பிரசாரம் பைபிளை அடிப்படையாக வைத்து அல்ல எனபது உங்களுக்கும் தெரியும்.//

நீங்கள் சொன்னால் சரியான தகவல், மற்றவர்கள் சொன்னால் தவறான தகவலா? எல்லாம் கற்பனையில் சொல்லவில்லை அண்ணாச்சி, எங்களை சுற்றி நடப்பதை தான் சொல்கிறோம். உங்கள் யோக்கிய மர்க்கதவரின் தாவாவை நேரில் பார்த்து தெரிந்த பிறகு தான் சொல்கிறோம்.
கிறிஸ்தவகள் பைபிளை அல்லாமல் வேறு எதை கையில் வைத்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள் கொஞ்சம் விளக்குங்களேன்.

//அந்த உருவ வழிபாட்டை ஏசுவை மையமாக வைத்து சொல்வதால்தான் நாங்களும் கேள்வி கேட்கிறோம். ஏசு சொல்லாத ஒரு செயலை அவர் பெயரை உபயோகப்படுத்தி பிரசாரம் செய்வது தவறுதானே!//

இயேசுவை மையமாக வைத்து செய்வதால் உங்களுக்கு என்ன என்று தான் நாங்களும் கேட்கிறோம், பிறருடைய மத உரிமையில் நம்பிக்கையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை? இயேசு என்ன உங்கள் கூட்டத்தை உலக மக்களுக்கு அத்தாரிட்டியாக நியமித்து இருக்கிறாரா ? அண்ணாச்சி ஒன்றை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள், குரான் ஒரு திருட்டு வேதம் என்றும், பைபிளில் இருந்தும் வேறு புத்தகங்களில் இருந்தும் முகமது காப்பி அடித்து உருவாக்கியதே குரான் என்பதும் தான் எங்கள் நம்பிக்கை, முகமது என்பவர் உங்களுக்கு வேண்டுமென்றால் பெரிய இவராக, உயிருக்கு சமமாக இருக்கலாம், எங்களை பொறுத்தவரை அவர் எந்த வகையிலும் பெரிய இவர்.கிடையாது . அவரு சொன்னாரு, குரான்ல அல்லா சொன்னாரு என்று எங்கள் நம்பிக்கையை குறை சொல்லும் உரிமை உங்களுக்கு கிடையாது.

//அமைதியாக இருந்த அந்த நாடுகளில் அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும் என்று புகுந்ததோ அன்று ஆரம்பித்ததுதான் பிரச்னை. எனவே இந்த பிரச்னைகளின் சூத்திரதாரிகள் கிறித்தவர்களே என்பதை மறுக்க முடியுமா?//

ஓ, அப்படியா நீங்கள் குண்டு வைப்பீர்கள், புனித போர் என்ற பெயரில் அராஜகம் செய்வீர்கள், அதை எல்லாம் பொருத்து கொண்டு இருக்க வேண்டும், நல்லா இருக்கே நியாயம், உங்கள் சோலிய பார்த்துக்கொண்டு நீங்கள் இருந்தால் அவன் ஏன் உங்களிடம் வர போகிறான்.

suvanappiriyan said...

//குரான் ஒரு திருட்டு வேதம் என்றும், பைபிளில் இருந்தும் வேறு புத்தகங்களில் இருந்தும் முகமது காப்பி அடித்து உருவாக்கியதே குரான் என்பதும் தான் எங்கள் நம்பிக்கை//

http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_03.html

http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_25.html

குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

http://suvanappiriyan.blogspot.com/2011/04/blog-post_07.html

இந்த சுட்டிகள் அனைத்தையும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

//ஓ, அப்படியா நீங்கள் குண்டு வைப்பீர்கள், புனித போர் என்ற பெயரில் அராஜகம் செய்வீர்கள், அதை எல்லாம் பொருத்து கொண்டு இருக்க வேண்டும், நல்லா இருக்கே நியாயம், உங்கள் சோலிய பார்த்துக்கொண்டு நீங்கள் இருந்தால் அவன் ஏன் உங்களிடம் வர போகிறான்.//

ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் என்று எந்த நாட்டை விட்டீர்கள்? அந்த பாவமெல்லாம் உங்கள் கூட்டத்தை சும்மா விடாது. பொருத்திருந்து பாருங்கள்.